புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 73 of 84 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 78 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 13, 2020 3:30 pm

ஐயா !

செய்யும் என்னும் வாய்ப்பாட்டின் இலக்கணம் கூறக்கூடிய பின்வரும் நூற்பா பொருள் விளங்கவில்லை .

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா ..

இந்நூற்பாவின் பொருளைத் தக்க உதாரணங்களோடு தெளிவுபடுத்த வேண்டுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 16, 2020 11:22 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (476)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ஒரு வேற்றுமைத் தொடரில் , வேற்றுமை உருபானது நிற்கும் இடங்கள் பற்றி உரைக்கிறார் தொல்காப்பியர் !

சேனாவரையரின் எடுத்துக்கட்டுத் தொடர்களிலிருந்து பேசலாம்!-
1. கடந்தான் நிலத்தை
2. வந்தான் சாத்தனொடு
3. கொடுத்தான் சாத்தற்கு

மேல் மூன்று வேற்றுமைத் தொடர்களிலும், வேற்றுமை உருபுகள் (ஐ , ஒடு , கு) தொடரின் ஈற்றில் நிற்கக் காணலாம்.
1. நிலத்தைக் கடந்தான்
2. சாத்தனொடு வந்தான்
3. சாத்தற்குக் கொடுத்தான்

இந்த மூன்று வேற்றுமைத் தொடர்களிலும், வேற்றுமை உருபுகள் (ஐ , ஒடு , கு) தொடரின் இடையில் நிற்கக் காணலாம்.

ஆனால் , மேல் ஆறு தொடர்களிலுமே பொருளானது தமிழ் மரபுக்கு ஏற்பவே அமைந்துள்ளதைக் காண்கிறோம் !

இவ்வாறு வரலாம் என்பதே தொல்காப்பியம் !-
இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் (வேற்றுமை மயங்.20)

(முன் கட்டுரையில் வேற்றுமை மயங். 19 என வரவேண்டியது, 20 என வந்துவிட்டது; திருத்திக்கொள்ளவும்)

இறுதியும் இடையும் – வேற்றுமைத் தொடரின் இறுதியிலும் இடையிலும்,
எல்லா உருபும் - எல்லா வேற்றுமை உருபுகளும்,
நெறிபடு பொருள்வயின் – தமிழ் மரபுப் பொருளின்படி,
நிலவுதல் வரையார் – நிற்பதைத் தவிர்க்கமாட்டார்கள்!

மேல் ஆறு எடுத்துக்காட்டுகளுக்கும் இந்த நூற்பாவிற்கும் (வே.ம. 20) பொருள் பொருந்தித்தானே வருகிறது? உங்களுக்கு ஐயமில்லையே?

ஆனால் தெய்வச்சிலையாருக்கு வந்தது ஐயம் !
தெய்வச்சிலையார் என்ன சொன்னார் ?
‘குயவன் குடத்தைத் திகிரியால் அரங்கின்கண் வனைந்தான்’ – என்றொரு தொடரை வரைந்தார்!
இத் தொடரிலிருந்து தெய்வச்சிலையாரின் உட்கருத்தை நாம் நம் நடையில் வருமாறு விளக்கலாம்! -
வேற்றுமை பெற்ற முதலாவது சொல் – குடத்தை (ஐ உருபு)
வேற்றுமை பெற்ற இடைநின்ற சொல் – திகிரியால் (ஆல் உருபு)
வேற்றுமை பெற்ற கடைச் சொல் – அரங்கின்கண் (கண் உருபு)
என்று வகுத்துக் கொண்டார். இப்போது, முதல் , இடை, கடை மூன்று சொற்களுமே ‘வனைந்தான்’ என்ற ஒரு வினைச்சொல்லால் அருமையாக முடிகிறது பாருங்கள் என்று காட்டுகிறார்! அஃதாவது-

‘குடத்தை வனைந்தான்’ , ‘திகிரியால் வனைந்தான்’ , ‘அரங்கின்கண் வனைந்தான்’ என்று பொருள் மூன்றுவகையிலும் பொருந்துவதைத்தான் தொல்காப்பியர் சொன்னார் என அவர் காட்டுவதாகத் தெரிகிறது!

மேல் தொல்காப்பிய நூற்பாவை மீண்டும் பாருங்கள்!

அதில் ‘முதல்’ என்ற சொல்லே இல்லையே? ‘இறுதியும் இடையும்’ என்றுதானே உள்ளது?

ஆகவே , தெய்வச்சிலையார் கருத்து அவ்வளவாகப் பொருந்தாமை தெளிவாகிறது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 16, 2020 1:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (477)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரு சொல்லானது, ஒரு வேற்றுமை உருபை ஏற்றபின் இன்னொரு வேற்றுமை உருபை ஏற்க முடியுமா?
சுவையான வினா!
இதற்கு விடைதான் நாம் அடுத்துப் பார்க்கப்போகும் நூற்பா!:

பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப (வேற்றுமை மயங். 21)

பிறிது - ஆறாம் வேற்றுமை உருபானது,
பிறிது ஏற்றலும் – வேறொரு வேற்றுமை உருபை ஏற்பதும்,
உருபுதொக வருதலும் – ஆறு உருபுகளுமே மறைந்துவருதலும்,
நெறிபட வழங்கிய - ஏற்றுக்கொள்ளப்பட்ட , மரபுவழிப்பட்ட,
வழிமருங்கு என்ப - வழக்காற்றைச் சார்ந்ததே என்பர்.

இதில், ‘பிறிது’ என்றுதானே நூற்பாவில் உள்ளது? அதற்கு ‘ஆறாம் வேற்றுமை உருபு’ எனப் பொருள்கொள்ளமுடியுமா?
வினா எழலாம் !
நல்ல வினா!
சேனாவரையரே இப் பொருளைக் கூறியவர்!
அவர் கருத்து-
“ஏற்புழிக் கோடல் என்பதனால், பிறிதோருருபு ஆறாவதேயாம்”
ஆனால் இதனை மறுக்கிறார் ஆதித்தர்!

ஆதித்தர் , ‘தலைக்குமேல்’ என்பதில், ‘கு’ , ‘மேல்’ என அடுத்தடுத்து இரு உருபுகள் வரவில்லையா? எனக் கேட்கிறார்!
நல்ல கேள்வி!
ஆதித்தர் காட்டும் எடுத்துக்காட்டுகள் யாவுமே , தொல்காப்பியம் தரும் எட்டு அடிப்படை வேற்றுமைகள் அல்லாதவை!
தொல்காப்பியம் காட்டும் எட்டு அடிப்படை வேற்றுமை உருபுகளில் ‘அது’ ஒன்றுதான் வேறொரு வேற்றுமை உருபை ஏற்கும் !

இவ்வகையில் சேனாவரையர் கருத்து சரியானதே!

இப்போது சேனாவரையர், ‘பிறிது பிறிதேற்ற’லுக்குத் தந்த எடுத்துக்காட்டுகளை எடுத்துக்கொள்வோம் !:
1. சாத்தனதனை ( சாத்தன்+ அது +அன் + ஐ ; ‘அது’ , அன் சாரியை பெற்று, ‘ஐ’யை ஏற்றுள்ளது)
2. சாத்தனதனொடு ( சாத்தன்+ அது +அன் + ஒடு ; ‘அது’ , அன் சாரியை பெற்று, ‘ஒடு’வை ஏற்றுள்ளது)
3. சாத்தனதற்கு ( சாத்தன்+ அது +அன் +கு ; ‘அது’ , அன் சாரியை பெற்றுக், ‘கு’வை ஏற்றுள்ளது)
4. சாத்தனதனின் ( சாத்தன்+ அது +அன் + இன் ; ‘அது’ , அன் சாரியை பெற்று, ‘இன்’னை ஏற்றுள்ளது)
5. சாத்தனதன்கண் ( சாத்தன்+ அது +அன் + கண் ; ‘அது’ , அன் சாரியை பெற்றுக், ‘கண்’ணை ஏற்றுள்ளது)

அடுத்துச் சேனாவரையர் ‘ஆறுருபும் தொகவருதல்’ என்பதற்குத் தந்த எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் !:
1. நிலங்கடந்தான் ( = நிலத்தைக் கடந்தான்; ‘ஐ’ மறைந்து வந்துள்ளது.)
2. தாய்மூவர் ( = தாயொடு மூவர்; ‘ஒடு’ மறைந்து வந்துள்ளது.)
3. கருப்பு வேலி ( = கரும்புக்கு வேலி; ‘கு’ மறைந்து வந்துள்ளது.)
4. வரைவீழருவி ( = மலையினின்று விழும் அருவி; ‘இன்’ மறைந்து வந்துள்ளது.)
5. சாத்தன்கை ( = சாத்தனது கை; ‘அது’ மறைந்து வந்துள்ளது.)
6. குன்றக் கூகை ( = குன்றின்கண் உள்ள ஆந்தை; ‘கண்’ மறைந்து வந்துள்ளது.)

இவை தவிர வேறு இரண்டு நுணுக்கமான எடுத்துக்காட்டுகளையும் தருகிறார் சேனாவரையர் !:
“கடந்தானிலம், இருந்தான் குன்றத்து எனவும் உருபு தொக்கு நின்றவாறும் கண்டுகொள்க”.

என்ன சொல்ல வருகிறார் சேனாவரையர்?
1. கடந்தானிலம் (= கடந்தான் நிலத்தை; ‘ஐ’ சொல்லின் ஈற்றில் வந்ததைக் கவனிக்க.)
2. இருந்தான் குன்றத்து (= இருந்தான் குன்றத்தின்கண்; ‘கண்’ சொல்லின் ஈற்றில் வந்ததைக் கவனிக்க.)
இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் , வேற்றுமை உருபானது தொடரின் இறுதியில் வந்ததையே சேனாவரையர் கூறுகிறார்! இதுவும் தொல்காப்பியத்திற்கு உட்பட்டதே என்பது அவர் விளக்கம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 16, 2020 2:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (478)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் அடுத்த நூற்பா:

யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும் (வேற்றுமை மயங்.23)

யாதன் உருபில் – எந்த ஒரு வேற்றுமை உருபைப் பயன்படுத்தி,
கூறிற்று ஆயினும் – ஒரு தொடரைக் கூறினாலும்,
பொருள் செல் மருங்கின் – அவ்வுருபானது, தொடரில் தெளிவான பொருளைத்தரும் வழியில் சென்று,
வேற்றுமை சாரும் – வேற்றுமைப் பொருளையே தரும் !

அஃதாவது,
ஒரு வேற்றுமை உருபானது, தனக்குரிய பொருளைப் பற்றிக் கவலை கொள்ளாது, வேறொரு வேற்றுமை உருபிற்குரிய பொருளிலும் நிற்கும் ! இதுவே சேனாவரையர் தரும் உரை.

சேனாவரையரின் இரு எடுத்துக்காட்டுகள்:
1. அரசர்கட் சார்ந்தான்
2. மணற் கீன்ற

இவற்றை விளக்கலாம்!
1. அரசர்கண் சார்ந்தான்
கண் – ஏழாம் வேற்றுமை உருபு; இதன் பொருள் ,இடப்பொருளாகும் ; ‘அரசரிடத்துச் சார்ந்தான்’ என்பதே நேர்ப் பொருள்! ஆனால், ‘அரசரைச் சார்ந்தான்’ என்பதே கூற வந்தானின் சரியான பொருள்!
இங்கு ‘ஐ’ உருபு வரவேண்டிய இடத்தில், ‘கண்’ உருபு வந்து தொடர்ப் பொருளைத் தந்துள்ளது!
2. மணற்கு ஈன்ற
கு – நான்காம் வேற்றுமை உருபு; இதன் பொருள் ,பொருளை ஏற்றுநிற்றல் ; ‘மணலுக்கு ஈன்ற’ என்பதே நேர்ப் பொருள்! ஆனால், ‘மணற்கண் ஈன்ற’ என்பதே கூற வந்தானின் சரியான பொருள்!
இங்கு ‘கண்’ உருபு வரவேண்டிய இடத்தில், ‘கு’ உருபு வந்து தொடர்ப் பொருளைத் தந்துள்ளது!

வேறு இரு எடுத்துக்காட்டுகளுக்கான விளக்கத்தைக் காணலாம்!
1. நோய்க்கு மருந்து
இத் தொடரின்படி, நோயைப் பிடித்து வைத்துக்கொண்டு, அதன் வாயில் மருந்தை ஊற்றுவது என்ற நேர்ப் பொருள்தானே உள்ளது?
ஆனால் உண்மையில், மனிதன்தானே மருந்தை உட்கொள்கிறான்?

இங்கு என்ன நடந்துள்ளது தெரியுமா?
‘நோய்’ என்ற சொல் ஆகுபெயராய், மனிதனைக் குறிக்கிறது! அதனால்தான், ‘நோய்க்கு மருந்து’ என்பது பொருத்தமாக வருகிறது!
இங்கு, ‘கு’ உருபு, பொருள் செல்லக்கூடிய வகையில் சென்றுள்ளதைக் காண்க!

2. ஏரின் உழாஅர் உழவர்
இத் தொடர் திருக்குறளில் உள்ளது.
இது எப்படி இருந்திருக்க வேண்டும்?
‘ஏரால் உழாஅர் உழவர்’ என்றுதானே இருந்திருக்கவேண்டும்? ஏர்க் கலப்பையால்தானே உழுதல் நடக்கும்?

அஃதாவது, ‘ஆல்’ உருபு வரவேண்டிய இடத்தில், ‘இன்’ உருபு வந்துள்ளது! வந்தாலும் பொருள் தெளிவாகவே உள்ளது! இதைத்தான் சொன்னார் தொல்காப்பியர்!

தொல்காப்பியர் இப்படிப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது (பழைய நடையில் ‘பாடம் சொல்லிக்கொண்டிருந்த போது’), ஒரு மாணவன் கேட்டான்! என்ன கேட்டான்?

‘’ஐயா! மரத்தை வெட்டினான், அதைக் குறைத்தான், இதைக் குறைத்தான் என்றெல்லாம் உதாரணம் சொல்கிறீர்களே, இங்கு பயன்படுத்தியுள்ள இதே ‘ஐ’ உருபைக் கொண்டு, ‘மரத்தை வெட்டவில்லை , அதைக் குறைக்கவில்லை, இதைக்குறைக்கவில்லை’ என்று எதிர்மறைத் தொடர்களை எழுதலாமா?

அதற்கு என்ன சொன்னார் தொல்காப்பியர்?
அதுதான் அடுத்த நுற்பா! –

எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே (வேற்றுமை மயங்.24)

‘எதிமறைத் தொடர்களாக இருந்தாலும், வேற்றுமை உருபுகள் தத்தமக்குரிய பொருளையே தரும் ! இதில் ஐயம் வேண்டாம்!’ என்பதே தொல்காப்பியரின் விடை!

தொல்காப்பியத்தின் இந்த நூற்பா (வேற்றுமை மயங்.24),
தொல்காப்பியர் காலத்தில் இருந்த ஆசிரியர் மாணாக்கர் கொண்ட பள்ளிக்கூட
முறையை நமக்குக் காட்டுவதைக் கவனிக்க!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 16, 2020 2:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 103459460 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 73 3838410834



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 17, 2020 12:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (479)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் சில நெருடலான சொற்களைக் காண்கிறோம்! இவற்றை ஏடெழுதியோர் தவறாக எழுதிவிட்டனரோ என்ற வினா நம்முள் எழுகிறது !

இந்த ஐயத்தைப் போக்குவது இந்த நூற்பா!:

குஐ ஆனென வரூஉ மிறுதி
அவ்வொடு சிவணுஞ் செய்யுளுள்ளே (வேற்றுமை மயங். 25)

கு ஐ ஆன் என வரும் இறுதி – வேற்றுமை உருபுகளான கு, ஐ, ஆன் எனும் மூன்றும் தொடரின் இறுதியிலே வந்தால்,
அ ஒடு சிவணும் செய்யுள் உள்ளே – செய்யுளில், அகரத்தோடு சேர்ந்து வரும் !

இதற்குச் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகளைச் சற்றே விளக்கலாம்! –

1. கடிநிலை யின்றே யாசிரி யற்க
இது தொல்காப்பியரின் (புள்.49) தொடர்!
இதன் ஈற்றுச் சொற்களைக் கவனிக்க!
‘ஆசிரியற்கு’ என வரவேண்டியது, ‘ஆசிரியற்க’ என வந்துள்ளது!
அஃதாவது, செய்யுளாதலால், ‘கு’ உருபின் உகரம் கெட்டு , அகரம் சேர்ந்துள்ளது!

2. காவலோனக் களிறஞ் சும்மே
இதில், ‘காவலோனை’ என்றுதான் வரவேண்டும்! ஆனால், ‘காவலோன’ என வந்துள்ளது!
அஃதாவது, செய்யுளாதலால், ‘காவலோனை’ என்பதிலுள்ள ‘ஐ’ உருபு கெட்டு, அகரம் சேர்ந்துள்ளது!

3. புரைதீர் கேள்விப் புலவ ரான
இதில், ‘புலவரான்’ என்றுதான் வரவேண்டும்! ஆனால், ‘புலவரான’ என வந்துள்ளது!
அஃதாவது, செய்யுளாதலால், ‘புலவரான்’ என்பதிலுள்ள ‘ஆன்’ உருபு கெட்டு, அகரம் சேர்ந்துள்ளது (ஆன்+ அ= ஆன)!

செய்யுளில் ‘கு’, ‘ஐ’ என்ற இரு உருபுகளும், அகரம் சேர்ந்து, புணர்ச்சி விதிப்படி வரும் என மேலே பார்த்தோம்!

இந்த இடத்தில் ஒரு மாணவன் கேட்டான்!
என்ன?
‘எடுத்துக்காட்டுகளில், கு, ஐ இரண்டும் உயர்திணைச் சொற்களோடுதானே வந்துள்ளது? அஃறிணைச் சொற்களோடு வந்தாலும் அகரம் சேர்ந்து வருமா?’ – கேட்டான்!

அதற்குத் தொல்காப்பியர் விடை சொன்னார்! –
அஎனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல்லென மொழிப (வேற்றுமை மயங். 26)

அஃதாவது, உயர்திணைச் சொற்களாக இருந்தால்தான், செய்யுளில் ‘கு’ ‘ஐ’ ஆகிய இரு உருபுகளோடும் அகரம் சேரும் என்பது தொல்காப்பியரின் விடை!

1.புல் மாட்டிற்கு √
புல் மாட்டிற்க×

2.வேலைக் களிறஞ்சும் √
வேலக் களிறஞ்சும் ×

’கு’, ‘ஐ’ ஆகிய இரு உருபுகள் அஃறிணையோடு சேர்ந்து வருவது பற்றியதுதான் மேல் நூற்பாவின்(வேற். ம. 26) கருத்து!

‘ஆன்’ உருபு அஃறிணையோடு சேர்ந்து வருவது பற்றியது மேல் நூற்பாவின் கருத்தல்ல!

ஆகவே, செய்யுளில்,
3.பயன்ஆடுகளான் √
பயன் ஆடுகளான √
எனவும் வரலாம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 17, 2020 8:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (480)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலின் அடுத்த நூற்பாவில், ‘கு’ உருபின் சிறப்பைக் கூறுகிறார்!

இந்த வகையில் பல புது ஆய்வேடுகளுக்கு (Research theses) வழி கண்டு முன்னோடியாக இருக்கிறார் தொல்காப்பியர்!

இதோ அந்த நூற்பா! –
இதன திதுவிற் றென்னுங் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும்
அதனாற் செயற்படற் கொத்த கிளவியும்
முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும்
காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நான்க னுருபில்
தொன்னெறி மரபின் தோன்ற லாறே (வேற்றுமை மயங். 27)

அஃதாவது,ஒன்பது வகையான தொடர்களை (9 types of syntaxes) எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர்!

இந்த ஒன்பது தொடர்களிலும் பயிலும் வெவ்வேறு வேற்றுமை உருபுகள் நிற்குமிடத்தில், அவற்றுக்கு ஈடாகக் ‘கு’ நிற்கும் அற்புதத்தைக் காட்டுகிறார்!
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

1. ‘இதனது இது இற்று என்னும் கிளவி’ (இற்று - இத்தன்மையது)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘யானையது கோடு கூரிது’ (கோடு – கொம்பு; கூரிது – கூர்மையானது; ‘அது’ உருபு வந்துள்ளது)
‘அது’உருபை எடுத்துவிட்டுக், ‘கு’ உருபைப் போட்டால்?
‘யானைக்குக் கோடு கூரிது’ என ஆகும்!
பொருள் மாறவில்லை!

2. ‘அதனைக் கொள்ளும் பொருள்வயினான்’ (கொள்ளும் – வாங்கும் ; பொருள்வயினான் - பொருளின்கண்ணே)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘காணத்தால் கொண்ட அரிசி’ (காணம் – பொற்காசு; ‘ஆல்’ உருபு வந்துள்ளது)
‘ஆல்’உருபை எடுத்துவிட்டுக், ‘கு’ உருபைப் பெய்தால்?
‘காணத்திற்குக் கொண்ட அரிசி’ என ஆகும்!
பொருள் மாறவில்லை!
3. ‘ அதனால் செயற்படற்கு ஒத்த கிளவியும் ’ (= அவனால் செயற்படும் என்ற பொருளில் வரும் தொடர்)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ அவனான் முடியும் ’ (‘ஆன்’ உருபு வந்துள்ளது)
‘ஆன்’உருபை எடுத்துவிட்டுக், ‘கு’ உருபை எழுதினால்?
‘ அவற்கு முடியும் ’ என ஆகும்! (அவற்கு = அவனுக்கு)
பொருள் மாறவில்ல!
4. ‘ முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவி ’ (முறை - உறவுமுறை)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ ஆவினது கன்று ’ ( ‘அது’ உருபு வந்துள்ளது)
‘அது’உருபை எடுத்துவிட்டுக், ‘கு’ உருபைச் சேர்த்தால் ?
‘ ஆவிற்குக் கன்று ’ என ஆகும்!
பொருள் மாறவில்ல!

5.‘பால்வரை கிளவி’ (பால் – பக்கம்)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ கருவூரின் கிழக்கு ’ (‘இன்’ உருபு வந்துள்ளது)
‘இன்’உருபிற்குப் பதிலாகக் ‘கு’ உருபை வரைந்தால் ?
‘ கருவூர்க்குக் கிழக்கு ’ என்று ஆகும்!
பொருள் மாறவில்ல!

6 . ‘பண்பின் ஆக்கம்’ (= பண்பினால் ஆகும் சொல்)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ இதனின் நெடிது ’ (= இதனைவிட நெட்டையானது; ‘இன்’ உருபு வந்துள்ளது)
‘இன்’உருபிற்கு ஈடாகக் ‘கு’ உருபை நிறுத்தினால் ?
‘ இதற்கு நெடிது ’ என வரும்!
பொருள் மாறவில்ல!

7 . ‘காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி’ (= காலத்தால் உணரும் சொல்)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ காலைக்கண் வரும் ’ (‘கண்’ உருபு வந்துள்ளது)
‘கண்’உருபினை நீக்கிக் ‘கு’ உருபை நாட்டினால் ?
‘காலைக்கு வரும்’ என்று வரும்!
பொருள் மாறவில்ல!

8 . ‘பற்றுவிடு கிளவி’ (பற்றுவிடுதல் = பாசத்தை விடுதல்)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ வாழ்க்கையிற் பற்றுவிட்டான் ’ (‘இன்’ உருபு வந்துள்ளது)
‘இன்’உருபின் இடத்தில் ‘கு’ உருபை வைத்தால் ?
‘ வாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் ’ என்றே வரும்!
பொருள் மாறவில்ல!

9 . ‘தீர்த்து மொழிக் கிளவி’ (தீர்தல்= குணமாதல்; சரியாதல்)

இதற்கு எடுத்துக்காட்டுத் தொடர்- ‘ மருந்தில் தீர்ந்தது ’ (‘இல்’ உருபு வந்துள்ளது)
‘இல் ’உருபு உள்ள இடத்தில் ‘கு’ உருபை வைத்தால் ?
‘மருந்துக்குத் தீர்ந்தது’ என்றுதானே வரும்?
பொருள் மாறவில்ல!

அவ்வளவுதானா? ஒன்பதே வகைகள்தாமா தொடர்கள்?
இல்லை!
அதற்குத்தான் , நூற்பா இறுதியில் ‘இதுபோன்ற வேறு தொடர்களும்’ என்று எழுதுகிறார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 18, 2020 9:50 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (481)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘கு’ உருபின் விளையாட்டை ஒன்பது வகையான தொடர்களில் நாட்டிக் காட்டினார் தொல்காப்பியர்!

அப்படியானால் வேறு உருபுகள்?
நாம் கேட்போம்!

அதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்!:

ஏனை யுருபும் அன்ன மரபின
மான மிலவே சொன்முறை யான (வேற்றுமை மயங். 28)

“மற்ற வேற்றுமை உருபுகளும் ஒன்றுக்கு ஈடாக மற்றொன்று வரும் ! ஆனால் பழந்தமிழ் மரபு மாறக்கூடாது!” – இதுவே தொல்காப்பியர் கூறவந்தது!

மானமிலவே – குற்றமிலவே
சொன்முறை யான - தமிழ் வழக்கில் வழங்கும் முறைப்படி

இந்த நூற்பாவிற்குச் சேனாவரையர் எழுதியுள்ள எடுத்துக்காட்டுகளைக் காண்போம்!

1. ‘நூலது குற்றம் கூறினான்’
இங்கு, ‘அது’ உருபு பயின்றுள்ளது.
‘அது’வை நீக்கி, ‘ஐ’யைப் பெய்தால்?
‘நூலைக் குற்றம் கூறினான்’ என ஆகும்!
பொருளில் மாற்றமில்லை!

2 . ‘அவட்குக் குற்றேவல் செய்யும்’ (அவட்கு = அவளுக்கு)
இங்கு, ‘கு’ உருபு ஆளப்பட்டுள்ளது.
‘கு’வை நீக்கி, ‘அது’வை எழுதினால்?
‘அவளது குற்றேவல் செய்யும்’ என வரும்!
பொருளில் மாற்றமில்லை!

இந்த இரு எடுத்துக்காட்டுகளையும் வரைந்த சேனாவரையர் , ‘மற்றவையும் இப்படியே!’ என்று முடிக்கிறார்!

தமிழ்த் தொடர்களில் வேற்றுமை உருபுகள் இடம் மாறி வந்தாலும் ஒரே பொருள் தரும் என்ற மொழித் தத்துவம் (Language Concept) , தமிழர் தொன்மையையும் அவர்தம் செயற்பாட்டு விரிவையும் (Spread of Tamils’ Functions ) காட்டுவதாகும்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 18, 2020 3:41 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (482)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் அடுத்தது ஒரு சுவையான நூற்பாவைப் பார்க்கப் போகிறோம்!

வேற்றுமைகளைப் பேசிவந்த தொல்காப்பியர் , வேற்றுமை தோன்றுவதற்கான காரணங்களக் கூறப்போகிறார்!

மொத்தம் எட்டுவகைக் காரணங்களைப் பட்டியலிடுகிறார்! இந்த எட்டுவகைக் காரணங்களால்தாம் வேற்றுமைகள் தோன்றுகின்றன என்கிறார்! ‘காரணம்’ என நான் எழுதுவதைப் பழைய இலக்கணிகள் ‘ஏது’ என்பர்! தொல்காப்பியர், ‘தொழில் முதல் நிலை’ என நூற்பாவில் குறித்ததும் இதனையே! பிறர் ‘காரகம்’ என்று எழுதுவதும் இதனையே! ‘காரணம்’தான் காரகம் !

இதோ அந்த நூற்பா!:

வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி யென்றா
இன்னதற் கிதுபய னாக வென்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழின்முதல் நிலையே (வேற்றுமை மயங். 29)

இந் நூற்பாவில் தொல்காப்பியர் நவின்ற அந்த எட்டுவகைத் ‘தொழில் முதல்நிலை’களை வருமாறு விளக்கலாம்!-

1 . ‘வினையே’
வினை = செயல் = செயற்பாடு = தொழில்
‘வனைந்தான்’ என்ற வினைமுற்றுச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள்!
இதில், ‘வனைதல்’ எனும் தொழில் குறிக்கப்படுகிறதன்றோ?

2 .‘செய்வது’
வனைதல் வேலை அதுவாக நடக்குமா?
அப்படியானால் , செய்வது யார்?
குயவன்!
இலக்கண நடையில் , ‘குயவன்’தான் ‘கருத்தா’!

3 . ‘செயப்படு பொருளே’
’வனைந்தான்’ அல்லவா?
அவன் எதை வனைந்தான்?
குடத்தை!
‘குடம்’தான் செயப்படுபொருள்!

4 . ‘நிலனே’
வனைதல் வேலை ஏதாவது ஓர் இடத்தில்தானே நடக்கும்?
அந்த இடம்தான் ‘நிலன்’!
நிலம்தான் ‘நிலன்’ எனப்படுகிறது!

5 . ‘காலம்’
வனைதல் தொழில் ஏதாவது ஒரு நேரத்தில்தானே நடக்கும்?
காலை, பகல், மாலை என்று ஏதாவது ஒரு பொழுதில்தானே வனைவார்?
இதுதான் ‘காலம்’!

6 . ‘கருவி’
குடத்தை வனைவதற்குச் சக்கரம், கோல் இவை தேவைதானே?
இவையே ‘கருவி’!

7 . ‘இன்னதற்கு’
குடத்தை வனைவது எதற்காக?
யாருக்காவது கொடுப்பதற்கு அல்லது விற்பதற்குத்தானே?
இதுதான் ‘இன்னதற்கு’ என்று நூற்பாவில் சுட்டப்படுகிறது!

8 . ‘இது பயனாக’
வனைந்தவன் ஒருவனிடம் குடத்தைக் கொடுத்தாயிற்று!
வனைந்தவனுக்குப் பணமோ வேறு எதுவோ கிடைக்குமல்லவா?
அதுதான் ‘பயன்’!

இதுவரை பார்த்த எட்டும் வேற்றுமை தோன்றுவதற்கான காரணங்கள்!
அஃதாவது இந்த எட்டுமே வேற்றுமை தோன்றும் ‘இடங்கள்’!

இப்போது , வேற்றுமை தோன்றுவதற்கு ‘வினை’ எவ்வளவு இன்றியமையாதது என்பது விளங்குகிறது !

இதைக் கூறவேண்டிய தேவை என்ன?

‘வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது’ என்பது இலக்கண அரிச்சுவடி!
வேற்றுமையை வினையானது நேரடியாக ஏற்காதே தவிர, வேற்றுமைகளை ஏற்படுத்துவதே ‘வினை’தான் ! இதைத்தான் மேலே பார்த்தோம்!
அஃதாவது , ‘குடத்தை வனைந்தான்’ என்பதில் வேற்றுமை உருபான ‘ஐ’ உள்ளதை நோக்குக.
‘மாலையில் வனைந்தான்’ என்பதில் , வேற்றுமை உருபான ‘இல்’ உள்ளதைக் கவனிக்க!
இவ்வாறே 1 முதல் 8 ஐயும் விளங்கிக் கொள்ளலாம்!

சரி!
அப்படியானால் எல்லா வினைகளிலுமே இந்த எட்டும் இருக்குமா?

இருக்காது !

சில வினைகளில் இருக்கும், சில வினைகளில் இரா!

ஆய்வு மாணவர்கள் இது பற்றிய ஓர் ஆய்வை நடத்துவது பயன்மிக்கது !

சேனாவரையர், இளம்பூரணர் உரைகளின்படி,கீழ்வரும் எடுத்தகாட்டை நோக்கலாம்!
1 . ‘கொடி ஆடிற்று’
இங்கே , ‘கொடி எதை ஆடிற்று ?’ என்று கேட்கமுடியாது!
ஆகவே , இதில், ‘செயப்படுபொருள்’ இல்லை!
‘கொடி யார்க்கு ஆடிற்று?’ என்றும் கேட்க இயலாது!
எனவே , ‘இன்னதற்கு’ என்பதும் இலது!

இவ்வாறே நாம் ஒவ்வொரு வினையாக ஆய்ந்தால் வேற்றுமைகள் தோன்றும் முறையை நன்கு தெளியலாம் !

இதைக் கூற எழுந்ததுதான் வேற்றுமை மயங்கியலின் அடுத்த நூற்பா!:

அவைதாம்
வழங்கியன் மருங்கின் குன்றுவ குன்றும் (வேற்றுமை மயங். 30)

வழங்கியல் மருங்கின் – வழக்கின்கண் (எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு இரண்டிலும்தான்)
குன்றும் – குறையும்
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 19, 2020 7:17 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (483)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நிற்கிறோம்!

இதுவரை, ஒரு வேற்றுமை நிற்கவேண்டிய இடத்தில் , இன்னொரு வேற்றுமை உருபு மாறி நின்று (மயங்கி நின்று) பொருள்தரும் நெறியினைப் பார்த்தோம்!

அதனைப் போன்றே, ஒரு சொல் நின்று, அதற்குரிய நேர்ப் பொருளைக் குறிக்காது வேறு பொருளைச் சுட்டுவதும் ஒரு ‘மயக்கம்’தான் !

அதனால்தான் வேற்றுமை மயங்கியலின் இறுதியில் ஆகுபெயர் (Metonymy) பற்றி வரைகிறார் தொல்காப்பியர்!

அந்த நூற்பா!:
முதலிற் கூறும் சினையறி கிளவியும்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்கும் கிளவியொடு தொகைஇ
அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி (வேற்றுமை மயங்.31)

ஆகுபெயரின் இலக்கணமாக இங்கு ஏழு அடிப்படைகளைக் கூறுகிறார்!
அவற்றை வருமாறு காண்போம்!:

1 . ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’

தெங்கு தின்றான் – எனும் இத் தொடரில் , ‘தெங்கு’ எதைக் குறிக்கிறது?
தேங்காயை!
அவன் தின்றது தேங்காயைத்தான் ! தென்னை மரத்தை அல்ல! (தெங்கு – தென்னை மரம்)
‘தெங்கு’ – முதல்
தேங்காய் – சினை
சினை – உறுப்பு; தென்னை மரத்தின் உறுப்புத்தானே தேங்காய்?
‘தெங்கு தின்றான்’ எனும் தொடரில் என்ன நடக்கிறது?
முதலைச் சொல்லி, உறுப்பு சுட்டப்பட்டுள்ளது !
கூறுவது, முதலை ; அறிவது சினையை!

2 . ‘சினையிற் கூறும் முதலறி கிளவி’
இலை நட்டு வாழும் – இத் தொடரில் , இலை= வெற்றிலை
வெற்றிலையைப் பயிர்செய்து ஒருவன் வாழ்கிறான் ! இதுதான் தொடர்ப் பொருள்!
ஆனால், அவன் நட்டுவைத்தது , வெறும் இலையையா?
வெற்றிலைக் கொடியைத்தானே நட்டான்?
இலை – சினை
கொடி – முதல்
‘சினை’யைச் சொல்லி, முதலை விளங்க வைத்துள்ளதை நோக்குவீர்!

3 . ‘பிறந்தவழிக் கூறல்’
மணப்பாறை சுவையானது – இதில் , ‘மணப்பாறை’ , முறுக்கைக் குறிக்கிறது.
ஆனால், மணப்பாறை ஊரா சுவையாக இருப்பது?
அந்த இடத்தில் செய்யப்பட்ட பொருள்தானே?
முறுக்குப் பிறந்த இடத்தைச் சொல்லி, முறுக்கை அறிய வைத்துள்ளது தொடர்!
இதுவே பிறந்தவழிக் கூறல் என்ற ஆகுபெயர்!

4 . ’பண்புகொள் பெயர்’
இவள் விரலில் போட்டுள்ள நீலம் அழகு- இத் தொடரில் ‘நீலம்’ என்ற நிறச் சொல்லானது, நீலமணியைக் குறிப்பதைப் பார்க்கலாம்!
நீலம் – நிறப் பண்பு
சொன்னது பண்பை ; சுட்டியது பொருளை!
இதுவே ‘பண்புகொள் பெயர்’!

5 . ‘இயன்றது மொழிதல்’
இக் குடம் பொன் – இந்தத் தொடரில், ‘குடம், பொன்’ என்ற இரு பெயர்ச் சொற்கள் மட்டுமே அடுத்தடுத்து நிற்கின்றன! ஆனாலும் நமக்குப் பொருள் விளங்குகிறது ! (பொன் = தங்கம்)
அதுதான் ஆகுபெயர் என்பது!
‘பொன்’ என்ற சொல், ‘பொன்னால் ஆகிய’ என்ற பொருளைத் தந்துவிடுகிறது!
பொன்னால் ஆகிய = பொன்னால் இயன்ற
பொன் – காரணப் பெயர்
காரணத்தின் பெயரானது, அதனால் செய்யப்பட்ட காரியத்தைக் குறிக்கிறது!

6 . ‘இருபெயரொட்டு’
பாறைமூஞ்சியை விரட்டிவிட்டனர் – இத் தொடரில், ‘ பாறைமூஞ்சி’ , இருபெயர் ஒட்டு. பாறை , மூஞ்சி என்ற இரு பெயர்களைக் காண்க.
பாறை போன்ற முகம் கொண்ட ஒரு ஆளை எதற்காகவோ விரட்டிவிட்டனர்- இதுதான் தொடர்ப்பொருள்.
சொன்னது – ‘பாறைமூஞ்சி’
ஆனால், இந்த இருபெயர் ஒட்டானது, ஒரு ஆளைக் குறிக்கக் காண்கிறோம் !
அதனால் இஃது ஆகுபெயர்.

7 . ‘வினைமுதல் உரைக்கும்’
வினை முதல் – பொருளைச் செய்தவன்; ‘கர்த்தா’ என்பவனும் இவனே.
பல தரப்பினர் செய்த ஆடை வரிசையினைச் சுட்டிக், ‘கோலிகன் கொண்டுவா’ என்றால் , ‘கோலிகன்’ என்ற இனத்தார் செய்த ஆடையினை என்று பொருள்!
கொண்டுவரச் சொன்னது கோலிகனைத்தானே என்று கோலிகன் வீட்டுக்குப் போக மாட்டார்கள்!
கோலிகன் = கோளன்= கைக்கோளன்
இவர்களே ‘கைக்கோள முதலிகள்’ !
கர்த்தாவாகிய கோலிகனைச் சுட்டிய மாத்திரத்தில் அவன் நெய்த ஆடை சுட்டப்படுவதால் இஃது ஆகுபெயர்!

இந்த ஏழும், இதுபோன்ற பிறவும் ‘ஆகுபெயர்’ என்பதே மேலை சூத்திரத்தின் பொருள்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 73 of 84 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 78 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக