புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
5 Posts - 2%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
2 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
443 Posts - 47%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
30 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 72 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 72 of 84 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 78 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 12, 2019 10:00 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (468)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘தடுமாறு தொழிற்பெயர்’ - இப்படி ஒரு இலக்கணக் கலைச்சொல் (Grammatical Technical Term) இருந்துகொண்டு பலரைத் தடுமாற வைக்கிறது !

இதுதா அந்தத் தடுமாறு தொழிற்பெயர்!-
‘புலிகொல் யானை’.

இத் தொடரின்படி,
புலி யானையைக் கொன்றதா? யானை புலியைக் கொன்றதா?
தடுமாற்றம் !
இப்படிப்பட்ட தடுமாறு தொழிற்பெயர்களில் , இரு வகைகளிலும் பொருள் ஏற்படுவது இயல்புதான் என்கிறார் தொல்காப்பியர் ! :-
”தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றும்
கடிநிலை யிலவே பொருள்வயி னான” (வேற்.மயங். 12)

‘இரண்டும்’ – இரண்டாம் வேற்றுமை உருபும்,
‘மூன்றும்’ – மூன்றாம் வேற்றுமை உருபும்
கடிநிலை இலவே – வருவதை நீக்க இயலாது!
அஃதாவது –

1 . புலியைக் கொன்ற யானை – ஒரு பொருள்; இதில், ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!
இங்கு , செயப்படுபொருள் (Object) - புலி.
2 . புலியால் கொல்லப்பட்ட யானை – இன்னொரு பொருள்; இதில், ‘ஆல்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!
இங்கு , செயப்படுபொருள் - யானை.

‘புலிகொல் யானை’ – இதில் , தொழிற்பெயர் , ‘கொல்’ என்பதே!
கொல்- முதனிலைத் தொழிற்பெயர்.
இத் தொழிற்பெயர் சேர்ந்த பெயர்ச்சொல் – புலி.

‘புலியை’ என ‘ஐ’ சேர்ந்து ஒருமுறையும், ‘புலியால்’ என ‘ஆல்’ சேர்ந்து இன்னொரு முறையும் வந்துள்ளதைக் காண்க!

சரி!
இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி சொல்லவில்லையா தொல்காப்பியர்?
சொல்லியுள்ளார்!
அடுத்து இதுபற்றிப் பார்ப்போம்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

PostDr.S.Soundarapandian Wed Sep 09, 2020 12:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (469)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘புலிகொல் யானை’ எனில், புலி யானையைக் கொன்றதா? யானை புலியைக் கொன்றதா?
இந்த ஐயம் பற்றி மேலே பார்த்தோம் !
இதனைப் போக்க , ஒரு குறிப்பைத் (clue) தருகிறார் தொல்காப்பியர்!:-
“ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே” (வேற்.மயங்.13)

‘புலிகொல் யானை’ – இதில், ஈற்றுப் பெயர் யாது?
‘யானை ’!

இந்த ஈற்றுப் பெயருக்கு முன்னே வரும் சொல்லைப் பிடித்துக்கொள்ளச் சொல்கிறார் தொல்காப்பியர்!
முன்னே வரும் சொல்லைக் கண்டுபிடிக்கத் , தொடரைப் பார் என்கிறார்!

தொடர் – ‘புலிகொல் யானை ஓடியது’

இங்கே , ஈற்றுப்பெயருக்கு முன்னே வரும் சொல் , ‘ஓடியது’!
‘யானை ஓடியது’ என்றால் , யானை இறக்கவில்ல; இறந்தது புலியாகத்தான் இருக்கவேண்டும் என்ற தெளிவு ஏற்படுகிறதல்லவா?

இதுதான் தொல்காப்பியர் தந்த குறிப்பு !

சரி!
தொடர் வேறுமாதிரியாக இருந்தால் ?
‘புலிகொல் யானைக் கொம்பு வந்தது’ –என்று தொடர் இருந்தால்?

அப்போதும் ஈற்றுப் பெயருக்கு முன்னே உள்ள சொல்லைத்தான் பார்க்கவேண்டும்!
‘கொம்பு வந்தது’ என்பதே அச் சொல்! ( இங்கே ’சொல்’ என்பது மொழியைக் குறிக்கும்!)

கொம்பின் வருகை – தந்தத்தின் வருகை, என்று வரும்போது இறந்தது யானைதான் என்ற குறிப்புக் கிட்டுகிறதல்லவா? யானை இறக்கவில்லை யென்றால். கொம்புமட்டும் எப்படித் தனியாகக் கழன்றுவரும்?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 11, 2020 11:58 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (470)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நின்று மயக்கம்தீர்ந்து வருகிறோம்!

‘பரணன் போற்றி வாழ்’ – இது தொடர்.

இதில், பரணனை இவன் போற்றவேண்டுமா? இல்லை , பரணன் இவனைப் போற்றுவாரா? – என்ற குழப்பம் வருகிறதல்லவா?

இது பற்றித் தொல்காப்பியர் ஒரு நூற்பா யாத்துள்ளார்! :-

“ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும்
தாம்பிரி விலவே தொகைவரு காலை” (வேற்றுமை மயங்.14)

தொகைவரு காலை – தொகைச் சொல்லாக (elliptical construction)வரும்போது,
ஓம்படைக் கிளவிக்கு – பாதுகாத்தல் எனும் பொருளில் வருங்காலை,
ஐயும் – ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபும்,
ஆனும் – ‘ஆன்’ என்ற மூன்றாம் வேற்றுமை உருபும்,
தாம் பிரிவிலவே – ஒத்த நிலையில் நின்று பொருள் தரும்!

ஓம்படுத்தல் - பாதுகாத்தல் ; போற்றுதல்

‘பரணன் போற்றிவா’ என்ற தொடரில், ‘போற்றி’ என்பதுதான் ‘ஓம்படைக் கிளவி’

மேல் நூற்பாவிற்குச் (வே.மய. 14) சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டு –
‘புலி போற்றிவா’ என்ற தொடராகும்.

இத் தொடரைப் , ‘புலியைப் போற்றிவா’ எனவும், ‘புலியால் போற்றப்பட்டு வா’ எனவும் பொருள் கொள்ளலாம் (ஆன் ,ஆல் இரண்டுமே மூன்றாம் வேற்றுமை உருபுகள்தாம்).
இவ்வழியில் உள்ளது சேனாவரையர் உரை.

தெய்வச்சிலையார் , வேறொரு எடுத்துக்காட்டுத் தருகிறார் ! –
‘அறம் போற்றி வாழ்மின்’

இது , ‘அறத்தைப் போற்றி வாழ்’ என்றொரு பொருளும், ‘அறத்தால் போற்றப்பட்டு வாழ்’ என்ற இன்னொரு பொருளும் உள்ளது.

இங்கே தொல்காப்பியம் தரும் தீர்வு என்ன?
தீர்வு இதற்கு முந்தைய நூற்பாவில் (வே.மய.13) உள்ளதுதான் !
அஃதாவது-
அடுத்து வரும் சொற்களைக் கொண்டு பொருளைத் தெளிந்துகொள்ளவேண்டும்!

நாம் பார்த்த முதல் தொடரை எடுத்துக்கொள்வோம்!
‘பரணன் போற்றி வாழ்’
- இத் தொடரை , ‘பரணன் போற்றி வாழ்ந்ததால் இன்று அவனுக்குப் பரணனின் உற்றார் உதவுகின்றனர்’ என்ற தொடரிடையே கண்டோமேயானால் , இரண்டாம் வேற்றுமை உருபு பயிலக் காணலாம்! போற்றப்பட்டவன் - பரணன் ; போற்றியவன் – அவன்.

இதே தொடரை , ‘பரணன் போற்றி வாழ்ந்ததால் இன்று அவனுக்கு எந்தத் துன்பமும் இல்லை.’ என்ற தொடரிடையே கண்டோமேயானால் , மூன்றாம் வேற்றுமை உருபு பயிலக் காணலாம்!
போற்றப்பட்டவன் - அவன் ; போற்றியவன் – பரணன்.

வந்ததா தெளிவு?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 11, 2020 8:45 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (471)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்
கேழு மாகு முறைநிலத் தான (வேற்றுமை மயங். 15)

- இதுவே வேற்றுமை மயங்கியலில் நாம் அடுத்துப் பார்க்கப்போகும் ‘மயக்கம்’.

‘ஆறன் மருங்கின்’ - ஆறாம் வேற்றுமை உருபு வரும் இடத்தில்,
‘வாழ்ச்சிக் கிழமைக்கு’ – வாழும் இடம் குறிக்கும் தொடராயின்,
‘ஏழும் ஆகும்’ - ஏழாம் வேற்றுமை உருபும் பயிலும் !

இளம்பூரணரின் உரையைப் பார்ப்போம் !-
“ ஆறாவதனோடு எடுத்தோதப்பட்ட வாழ்ச்சிப் பொருட்கு ஏழாவதும் ஆம் உறையும் நிலம் ஆகலான்”.

ஆறாவது – ஆறாம் வேற்றுமை உருபு
ஏழாவது – ஏழாம் வேற்றுமை உருபு
வாழ்ச்சிப் பொருள் – வாழ்தல் பொருள் ; சி – தொழிற்பெயர் விகுதி
உறையும் நிலம் – வாழும் இடம்

இளம்பூரணரின் மேலை உரைக்கு அவர் தரும் எடுத்துக்காட்டு விளக்கம்-
“ ‘காட்டது யானை’ என்புழிக் ‘காட்டுள் யானை’ என்றுமாக என்பது.”

அஃதாவது , ‘காட்டது யானை’ என்றால் ஆறாம் வேற்றுமை உருபு வருகிறது . பொருள் – காட்டில் வாழும் யானை.

இதே பொருளில் ,அஃதாவது , இதே வாழ்ச்சிப் பொருளில் , ‘காட்டின்கண் யானை’ என்ற தொடரும் வரலாம்! கண் – ஏழாம் வேற்றுமை உருபு. ‘காட்டுள் யானை’ என்பதும் ‘காட்டின்கண் யானை’ என்பதும் ஒரே பொருள்தரும் தொடர்களே. ‘உள்’ என்பதும் ஏழாம் வேற்றுமை உருபுதான்.

சரி!
வேலன் ஊர் காரைக்குடி – என்றால் , வேலனது ஊர் காரைக்குடி என்று அறிகிறோம். இதே தொடரில், ஏழாம் வேற்றுமை உருபைச் சேர்த்து ‘வேலன்கண் ஊர்’ என்றோ , ‘வேலனுள் ஊர்’ என்றோ எழுதமுடியுமா?
முடியாது என்கிறார் சேனாவரையர்!

மேலை ‘யானை’ எடுத்துக்காட்டில் , வாழும் இடமாம் காடு , தொடரின் முற்பகுதியில் வந்ததைக் கவனியுங்கள்!

‘காட்டது யானை’ – இதில் முதற்சொல் ‘காடு’ ; இதனால் உறைநிலப் பெயர் ,தொடரின் ‘முற்பகுதி’. ஆனால் எழுதும்போது , ‘காட்டது’ என்பதை எழுதிவிட்டுப் பிறகு , அது பின்தங்கும் வகையில் , அதற்கு முன் ‘யானை’ எழுதப்படுவதால், உரையாசிரியர்கள் காலத்தில் , ‘காடு’ ‘பிற்பகுதிச் சொல்’ . இதுவே ‘உறை நிலப்பெயர் பின்மொழியாய வழியது ’ என்ற சேனாவரையரின் உரைக்கு விளக்கமாம். ‘பிற்பகுதிச் சொல்’ என்பதே . ‘பின்மொழி’.

‘வேலன் ஊர்’ – என்ற நமது எடுத்துக்காட்டுத் தொடரில் , அவன் வாழும் இடம் முற்பகுதியில் வரவில்லை; சேனாவரையர் நடையில், ‘பின்மொழி’ அல்ல. இந்தக் காரணத்தால்தான் , ’வேலன் ஊர்’ என்பதை , ‘வேலன்கண் ஊர்’ என்றோ , ‘வேலனுள் ஊர்’ என்றோ நாம் கூறமுடியாது!

‘நம்பியூர்’ என்று சேனாவரையர் காட்டிய எடுத்துக்காட்டைத்தான் , சற்றே மென்மை செய்து, ‘வேலன் ஊர்’ நான் மாற்றி , விளக்கியுள்ளேன்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 15, 2020 1:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (472)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சேனாவரையரின் எடுத்துக்காட்டிலிருந்து தொடங்கலாம்!-
‘நாகர்பலி’
- இதுதான் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டு.

இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன?

நாகர் என்ற தெய்வத்திற்குக் கொடுத்த பலி – எனபதுதானே?

இதில் ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை வந்துள்ளதைக் கவனியுங்கள் ! ‘நாகர்பலி’ என்பதில், இந்த உருபு மறைந்து (மறைவதைத்தான் ‘தொக்கு’ என்கின்றனர்) நிற்கிறது.
அஃதாவது-
நாகர்பலி = நாகர்க்குப் பலி √

தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் , ’அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபையும் பயன்படுத்தி நாம் தொடரை விரிக்கலாம் என்கிறார்!
நாகர்பலி = நாகரது பலி √

இதோ தொல்காப்பியம் :-
குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி
அப்பொருள் ஆறற்கு உரித்து மாகும் (வேற்றுமை மயங். 16)

குத்தொக வரூஉம் – குவ்வுருபு மறைந்துவரும்,
கொடையெதிர் கிளவி – பலியை விரும்பிப் படைப்பதைக் குறிக்கும் சொல்லாயின்,
அப் பொருள் – அதே பொருளைத் தரவல்லது,
ஆறற்கு உரித்தும் ஆகும் – ஆறாம் வேற்றுமை உருபும்தான்!

நச்சினார்க்கினியர், நமக்கு மேலும் ஒரு விளக்கத்தைத் தருகிறார் !

அவரது கருத்துப்படி, சாத்தன் என்ற ஒரு மனிதனைக் குறித்து,’சாத்தன் பலி’ என்றால் , குவ்வுருபு வரும்! ஆனால் ‘அது’ உருபு வராது!

சாத்தன் பலி = சாத்தற்குப் பலி √
சாத்தன் பலி = சாத்தரது பலி ×

நச்சர் கருத்துப்படி, தெய்வம், சிறந்தோர் ஆகிய இருவர்க்கு மட்டுமே , கொடையெதிர் கிளவியில் குவ்வுருபும் , ஆறாம் வேற்றுமை உருபும், தொடரை விரிக்கப் பயனாகும் !

நச்சர் கருத்துப்படி,
பாரிவள்ளல் பலி= பாரிவள்ளலுக்குப் பலி√ (கு- உருபு)
பாரிவள்ளல் பலி= பாரிவள்ளலது பலி√ (அது- உருபு)

ஆதித்தர், தன் உரையில் மேலும் இரு எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்!

ஆதித்தர் எடுத்துகாட்டுகளின்படி,
1. கோயில் மாடு = கோயிலுக்குக் கொடுத்த மாடு √ (கு- உருபு)
கோயில் மாடு = கோயிலது மாடு √ (அது - உருபு)

2. அம்மன் காணிக்கை = அம்மனுக்குக் காணிக்கை √ (கு- உருபு)
அம்மன் காணிக்கை = அம்மனது காணிக்கை √ (அது - உருபு)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 22, 2020 12:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (473)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘வாழ்ச்சிக் கிழமை’ , ‘கொடையெதிர் கிளவி’ முதலிய கிளவிகளில் வந்த மயக்கங்கள் பற்றிப் பார்த்தோம்!

இப்போது, ‘அச்சக் கிளவி’ !

‘அச்சக் கிளவி’ என்றதும் அச்சப்பட வேண்டாம் !

‘அச்சக் கிளவி’ எனில், ‘அஞ்சினான்’ என்றோ , ‘அஞ்சுவான்’ எனவோ தொடரில் வரலாம்; அச்சம் பற்றித் தொடர் ஓதவேண்டும்; அவ்வளவுதான் !

இப்போது நூற்பா:
அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும்
எச்ச மிலவே பொருள்வயி னான (வேற்றுமை மயங்.17)

அச்சக் கிளவிக்கு - தொடரில் அச்சம் பற்றிய சொல் வரின்,
ஐந்தும் இரண்டும் - ஐந்தாம் வேற்றுமை உருபும், இரண்டாம் வேற்றுமை உருபும்,
எச்சம் இலவே – ஒன்றுக்கொன்று வேறுபடாமல் ஒத்த வகையில் ,
பொருள்வயின் ஆன – பொருளைத் தெரிவிக்கும்!

சேனாவரையரின் உரைப்படி,
பழியஞ்சும் = பழியினஞ்சும் √ (இன் -உருபு)
பழியஞ்சும் = பழியையஞ்சும் √ (ஐ -உருபு)

இளம்பூரண்ரின் உரைப்படி,
புலியஞ்சும் = புலியினஞ்சும் √ (இன் -உருபு)
புலியஞ்சும் = புலியையஞ்சும் √ (ஐ -உருபு)

இளம்பூரணர் மேலும் ஒரு விளக்கத்தைத் தருகிறார்! :
“புலியின் அஞ்சும் , புலியை அஞ்சும் என்புழிப் புலி காரணமாக அஞ்சும் என மாறு கொள்க”.
மாறு – காரணம்

இளம்பூரணரின் விளக்கப்படி-
பழியினஞ்சும் – பழி காரணமாக அஞ்சும் √
பழியையஞ்சும் – பழி காரணமாக அஞ்சும் √

புலியினஞ்சும் – புலி காரணமாக அஞ்சும் √
புலியையஞ்சும் – புலி காரணமாக அஞ்சும் √

நச்சினார்க்கினியர் இன்னொரு விளக்கம் காட்டுகிறார் !
நச்சர் கருத்துப்படி-
கள்ளரின் அஞ்சும் = கள்ளரைவிட அஞ்சும் × ( இன் – உருபிற்கு ‘விட’ என்று பொருள்
உள்ளதை நினைக்க)
கள்ளரின் அஞ்சும் = கள்ளரால் அஞ்சும் √

ஆதித்தர் ஒரு விளக்கம் காட்டுகிறார்!
“உலக வழக்கில் அச்சக் கிளவிக்கு நான்காம் வேற்றுமையே உரித்தாகிறது” என்று கூறிப், ‘பகைவர்க்கு அஞ்சற்க’ என்ற சான்றையும் தருகிறார்.

ஆதித்தர் கருத்துச் சரியானதே!
ஆனால் , இதைத் தொல்காப்பியரும் உரைக்கிறார் !
நாம் பார்க்கும் இந்த நூற்பாவில் (வே.ம. 17) அல்ல; இதற்கு முன் நூற்பாவில் (வே.ம. 16)!

‘குத் தொகவரூம்’ என்றாரல்லவா?

அதே குகரத்தை இங்கும் ஒட்டிக்கொள்ளத் தடையில்லை!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 11, 2020 11:47 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (474)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இதுவரை சில வேற்றுமை மயக்கங்களைத் தொல்காப்பியர் காட்டினார்!

இப்படிப்பட்ட மயக்கங்கள் இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா?

‘இன்னும் இருக்கிறது’ என்பது தொல்காப்பியர் விடை!

சரி! அப்படியானால் அந்த மயக்கங்களை எப்படித் தீர்ப்பது?

‘நமது தமிழின் பழைய மரபு எதுவோ அந்த அடிப்படையில் நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்!’ – இதுவே தொல்காப்பியரின் விடையாக உள்ளது !:-

அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய்தடு மாறி
இருவயின் நிலையும் வேற்றுமை யெல்லாம்
திரிபிட னிலவே தெரியு மோர்க்கே (வேற்றுமை மயக். 18)

அன்ன பிறவும் – முன்னே நாம் பார்த்த வேற்றுமை போன்ற பிற மயக்கங்கள் வரின்,
தொல் நெறி பிழையாது – நம் தமிழின் பழைய வழக்கம் கெடாவாறு,
உருபினும் பொருளினும் – வேற்றுமை உருபிலோ, பொருளிலோ,
மெய்தடு மாறி - ஒன்று செல்லும் இடத்தில் இன்னொன்று நின்றால்,
இருவயின் நிலையும் வேற்றுமை யெல்லாம் – ஒரு வேற்றுமை தன் பொருளைச்
சுட்டுதல் , இன்னொரு வேற்றுமையின் பொருளைச் சுட்டுதல் ஆகிய இரண்டு இடங்களிலும் ,
திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே - முரண்படுபவை அல்ல , தமிழ் மரபு
தெரிந்தவர்களுக்கு.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுப்படி,
1.சாத்தனை வெகுண்டான் = சாத்தன் என்பவனைச் சினந்தான் √ ( ஐ - வேற்றுமை உருபு)
சாத்தனொடு வெகுண்டான் = சாத்தன் என்பவனோடு சினந்தான் √ ( ஒடு - வேற்றுமை உருபு)

2.நோயின் நீங்கினான் = நோயிலிருந்து நீங்கினான் √ ( இன் - வேற்றுமை உருபு)
நோயை நீங்கினான் = நோயிலிருந்து நீங்கினான் √ ( ஐ - வேற்றுமை உருபு)

நச்சர் எடுத்துக்காட்டின்படி,
தந்தையைச் சூளுற்றான் = தந்தைமுன் சூள் உரைத்தான் √ ( ஐ - வேற்றுமை உருபு)
தந்தையொடு சூளுற்றான் = தந்தைமுன் சூள் உரைத்தான் √ ( ஒடு - வேற்றுமை உருபு)

மேலை எடுத்துக்காட்டுகளால் வேற்றுமை உருபானது , ஒன்று வரவேண்டிய இடத்தில் இன்னொன்று வந்தாலும் , தமிழ் மரபின்படிப் பொருளில் மாற்றம் இல்லை என்பதை அறிகிறோம் !

இப்போது, தொல்காப்பியர் உரைத்த ‘உருபினும் பொருளினும்’ என்பதற்கு நான் விளக்கம் கூறவேண்டும் !

‘சாத்தனை வெகுண்டான்’, ‘சாத்தனொடு வெகுண்டான்’ என்ற இரு தொடர்களிலும் வெவ்வேறு வேற்றுமை உருபுகள் வந்தாலும் பொருளில் மாற்றமில்லை என்பது ‘உருபு மெய்தடுமாறி’ என்ற தொல்காப்பியரின் வாக்குக்குச் சான்று!

‘சாத்தனை வெகுண்டான்’ என்றால் , வெகுளப்பட்டவன் சத்தன் என்பது தெளிவாகத் தெரிகிறது; ஆனால் ‘சாத்தனொடு வெகுண்டான்’ என்பதில் , ’சாத்தனோடு இவனும் சேர்ந்துகொண்டு வேறு யாரையோ வெகுண்டுள்ளனர்’ என்ற பொருள் மயக்கம் சிறிது ஏற்படுகிறது ! இந்த நேரத்தில்தான் , நம் தமிழ் மரபின்படி பொருளை நீ எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்! அப்படி எடுத்துக்கொண்டால், இங்கும் வெகுளப்பட்டவன் சாத்தனே என்பது உனக்குத் தெளிவாகும் என்கிறார் தொல்காப்பியர்!

பார்த்தீர்களா?

தொல்காப்பியர், தம் காலத்துத் தமிழுக்கு மட்டும் இலக்கணம் உரைக்கவில்லை!இனி வருங்காலங்களிலும், எப்படியெல்லாம் குழப்பம் வரும் எனச் சிந்தித்து அவற்றுக்கெல்லாம் தீர்வு சொல்லிச் சென்றிருக்கிறரே!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 11, 2020 6:23 pm

ஐயா !

ஓர் ஐயம் . தெளிவுபடுத்த வேண்டுகிறேன் .

மோர் குடித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை .

மோரைக் குடித்தான் - இரண்டாம் வேற்றுமை விரி

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகவில்லை ; ஆனால் விரியில் ஒற்று மிகுந்து வந்துள்ளது .

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ர்ப் பொறுத்தல் தலை .

என்ற திருக்குறளில்

இகழ்வார்ப் பொறுத்தல் - என்பது இரண்டன் தொகை

இங்கு ஒற்று மிகுவதேன் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 12, 2020 7:58 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (475)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை உருபுகளின் மயக்கத்தைப் பார்த்தோம்!

இப்போது, அந்த உருபுகளின் இயல்புகளைக் கூறுகிறார் தொல்காப்பியர் :

உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே (வேற்றுமை மயங்.20)

உருபுதொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி – வேற்றுமை உருபுகளைப் பெற்ற
வேற்றுமைச் சொற்கள்,
ஒருசொல் நடைய - ஒரு சொல்லால் முற்றுப்பெறும்,
பொருள்செல் மருங்கே - அந்தச் சொல்லால் பொருள் திருளுமானால்.

வீட்டை |
காட்டுக்கு |
பிரம்பால் | - இவை எல்லாமே வேற்றுமைக் கிளவிகள்தாம்! இந்த நான்கு
அடிக்கண் | சொற்களிலும் ஒவ்வொரு வேற்றுமை உருபுகள் ஈற்றில் நிற்பதைக்
கவனிக்க.

வீட்டில் வாசற்கண் அமர்ந்தாள் - இந்தத் தொடரில் , ‘அமர்ந்தாள்’ என்ற ஒருசொல்லால் வேற்றுமை பெற்ற இரண்டு சொற்கள் ( ‘வீட்டில்’ , ‘வாசற்கண்’) , பொருள் பிசகாது முற்றுப் பெறுவதைக் காணலம்!

இந்த நமது எடுத்துக்காட்டில், இரண்டு வெவ்வேறு உருபுகள் (இல், கண்) அடுக்கி வந்துள்ளன.

ஆனால் இந்த எடுத்துக்காடைத் தவறு என்பது சேனாவரையரின் வாதம் !
சேனாவரையர் என்ன சொன்னார்?

எல்லாச் சொற்களிலுமே ஒரே வேற்றுமை உருபுதான் வரவேண்டும்; அதுதான் ‘அடுக்கு’ என்கிறார்!
சேனாவரையர் கருத்துப்படி, ‘வீட்டில் வாசலில் அமர்ந்தாள்’ என்று தொடர் இருந்தால்தான் தொல்கப்பியர் நூற்பாவிற்குப் பொருந்தும்!

சிக்கல்!

சிக்கலைத் தீர்த்துவைக்கிறார் நச்சினார்க்கினியர்!

நச்சரின் கருத்துப்படி, ’ வீட்டில் வாசற்கண் அமர்ந்தாள்’ என்றாலும் , ‘வீட்டில் வாசலில் அமர்ந்தாள்’ என்றாலும் இரண்டு தொடர்களுமே தொல்காப்பியரின் மேலை (வே.ம. 20) நூற்பாவின் கருத்துக்கு இயைந்தவைதான்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 72 of 84 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 78 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக