புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 66 of 84 •
Page 66 of 84 • 1 ... 34 ... 65, 66, 67 ... 75 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

தொடத் தொடத் தொல்காப்பியம் (436)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
இப்போது இரட்டைக் கிளவி !
இரட்டைக் கிளவிக்குத் தொல்காப்பியர் விதி ! –
“இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா” (கிளவி. 48)
‘செய்தி கேட்டு அவள் படபடத்தாள் !’
- இதில் வந்துள்ள ‘படபட ’ , இரட்டைக் கிளவி !
ஏனெனில் , ‘செய்தி கேட்டு அவள் படத்தாள் !’ எனக் கூறமுடியாது !
எனவே , இவ்வாறு இரண்டாக வந்து , தனியாகப் பிரிய இயலாது உள்ளதல்லவா? இதுதான் ‘இரட்டைகிளவி’ க்கு இலக்கணம் ! ‘இரட்டிற்பிரிந் திசையா” எனத் தொல்காப்பியர் சொன்னது இதைத்தான் !
இதற்குமேல் தொல்காப்பியர் இலக்கணம் சொல்லவில்லை !
ஆனால் , சேனாவரையர் , மேலும் இலக்கணம் வரைகிறார் !
இசை பற்றியும் , குறிப்பு பற்றியும் , பண்பு பற்றியும் இரட்டித்து வருவதே ‘இரட்டைக் கிளவி’ என்பது சேனாவரையர் இலக்கணம் !
சேனாவரையர் காட்டிய எடுத்துக்காட்டுகளின்படி –
இசை பற்றி வந்த இரட்டைக்கிளவி –
1 . மொடுமொடுத்தது ( ‘மொடுமொடு’ன்னு ஏதோ உடையும் ஓசை கேட்கிறதா? இதுதான் ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)
குறிப்புப் பற்றி வந்த இரட்டைக்கிளவி –
2 . மொறுமொறுத்தார் ( ‘மொறுமொறு’ என்பதில் அவரின் சினக் குறிப்புத் தெரிகிறதல்லவா? இதுதான் ‘குறிப்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)
பண்பு பற்றி வந்த இரட்டைக்கிளவி –
3 . கறுகறுத்தது ( ‘கறுகறுத்தது’ என்பதில் மேகம் போன்ற ஒன்றின் கரிய பண்பு புலனாகிறதல்லவா? இதுதான் ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)
‘கடகட’ - இஃது இரட்டைக் கிளவிதான் !
ஆனால் , இஃது ஏதாவது ஒரு தொடரில் வரவேண்டும் !
‘கடகட என்று பேசினான்’ ! – இங்கு தொடரில் வந்துள்ளது ! இபோதுதான் ‘கடகட’ என்பதை இரட்டைக் கிளவி எனக் கூறமுடியும் !
ஏதாவது சொற்கள் இரட்டித்து வந்தால் அது இரட்டைக் கிளவி ஆகாது ! -
1. துன்துன் ×
2 . சூள்சூள் ×
3 . பணபண ×
மேலு சில எடுத்துக்காட்டுகளை இரட்டைக்கிளவியை விளக்கத் தரலாம் ! –
1 . மிதிவண்டி கடகடக்கிறது √ (இங்கே ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி
பயின்றுள்ளது !)
2. ஓலை சலசலக்கிறது √ (இங்கேயும் ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி
பயின்றுள்ளது !)
3 . மாலதி சிடுசிடுத்தாள் √ (இங்கே ‘குறிப்பு’ப் பற்றி வந்த இரட்டைக் கிளவி
பயின்றுள்ளது !)
4 . பூங்கொடிக்கு சில்லுச் சில்லுன்னு கோபம் வருது √ (இங்கேயும் ‘குறிப்பு’ப் பற்றி
வந்த இரட்டைக் கிளவி பயின்றுள்ளது !)
5 . மனசு அவளுக்குக் குறுகுறுக்கிறது √ (இங்கே ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி
பயின்றுள்ளது !)
6 . கருகரு என்று கூந்தல் அவளுக்கு √ (இங்கேயும் ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக்
கிளவி பயின்றுள்ளது !)
ச.பாலசுந்தரனார் இரு எடுத்துக்காட்டுகளைத் தந்தார் அவரது ஆய்வில் !
1 . வரிவரியாக எழுதினான்
2 . படிப்படியாக முன்னேறினான்
ஆனால் இவற்றில் இசையோ , குறிப்போ, பண்போ இல்லை என்பது அவரது வாதம் !
‘வரிவரி’ – இதை ஏன் இரட்டைக் கிளவி என்கிறோம் ?
‘வரியாக எழுதினான் ’ எனக் கூறமுடியாது ! ‘வரிவரியாக எழுதினான் ’ எனக் கூறமுடியும் ! – இதுதான் அளவுகோல் !
‘படியாக முன்னேறினான்’ – கூற முடியாது !
‘படிப்படியாக முன்னேறினான்’ – கூற முடியும் !
எனவே,
படிப்படி – இரட்டைக் கிளவி !
ச.பாலசுந்தரனாரின் இந்த ஆய்வைக் கொண்டு , பிற்கால இரட்டைக் கிளவிகளில் , ‘இசை , குறிப்பு, பண்பு ஆகியவற்றின் அடிப்படையிலேதான் இரட்டைக் கிளவி வரமுடியும்’ என்ற வரையறையைக் கொள்ளமுடியாது என மதிப்பிடுகின்றனர் !
இரட்டைக் கிளவி பற்றி மேலும் சில சிந்திக்கலாம் !
‘விழுந்து விழுந்து படித்தான்’ - இங்கே இரட்டைக் கிளவி வந்துள்ளதா?
ஆம் ! வந்துள்ளது !
‘விழுந்து படித்தான்’ என வர முடியாதல்லவா?
‘கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்’ - இங்கே இரட்டைக் கிளவி வந்துள்ளதா?
இல்லை ! வரவில்லை !
‘கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள் ’ என வர முடியுமல்லவா?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்கிறது தொல்காப்பியம்.
• மள மளன்னு வேகமாக வேலையை முடி.
• இதில் மள மள என்பது இரட்டைக்கிளவி ஆகும்.
• மள என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் பொருள் தராது.
நீர் சலசலவென்று ஓடியது.
இதில் " சலசல " என்பது இரட்டைக்கிளவி . "சலசல " என்பதைப் பிரித்தால் " சல " , " சல " என்று பிரியும்.
" சல " என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை .
ஆனால்
வரிவரியாக எழுதினான் என்ற தொடரில் " வரிவரி " என்பது இரட்டைக்கிளவி என்கிறார் ச. பாலசுந்தரனார் .
" வரிவரி " என்பதை " வரி ", " வரி " என்று பிரிக்கலாம் . இதில் " வரி " என்ற சொல் தனித்துநின்று பொருள் தருகிறது.எனவே இது இரட்டைக்கிளவி ஆகுமா ?
இதேபோல
" படிப்படி " என்ற சொல்லைப் பிரித்தாலும் " படி " என்ற சொல் தனித்து நின்று பொருள் தருகிறது .எனவே இது இரட்டைக்கிளவி ஆகுமா ?
"விழுந்து விழுந்து படித்தான் " என்பது கொச்சையான வழக்கு . பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது . அதற்கு இலக்கணம் பார்க்க முடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ஜெகதீசன் அவர்களே !
‘வரி’ என்பது தனித்து நின்று பொருள் தரும்தான் : ஆனால் ‘வரியாகப் படித்தான்’ என்று தனித்து வராதே? இதுதான் நான் விளக்கியது ! ‘படி’க்கும் இதே விளக்கம் கொள்க. பேச்சு வழக்குத் தமிழும் இலக்கணத்திற்கு உட்பட்டதுதான் ! ‘எழுத்தும் வழக்கும் நாடி’ இலக்கணம் செல்வது நல்லதுதானே?
‘வரி’ என்பது தனித்து நின்று பொருள் தரும்தான் : ஆனால் ‘வரியாகப் படித்தான்’ என்று தனித்து வராதே? இதுதான் நான் விளக்கியது ! ‘படி’க்கும் இதே விளக்கம் கொள்க. பேச்சு வழக்குத் தமிழும் இலக்கணத்திற்கு உட்பட்டதுதான் ! ‘எழுத்தும் வழக்கும் நாடி’ இலக்கணம் செல்வது நல்லதுதானே?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
நீங்கள் "வரி " என்ற சொல்லை வாக்கியத்தில் வைத்துப் பார்த்து ( வரியாகப் படித்தான் ) பொருள் தரவில்லை என்று சொல்கிறீர்கள் .இரட்டைக்கிளவி இலக்கணம் அப்படிச் சொல்லவில்லையே !
" இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்பதுதானே இலக்கணம் . " வரி " என்று தனியாகப் பிரித்தால் பொருள் தருவதால் அது இரட்டைக்கிளவி அல்ல என்பது என் கருத்து.
அடிஅடியென்று அடித்தான்.
பிட்டுபிட்டு வைத்தான் .
இவையெல்லாம் இரட்டைக்கிளவி ஆகுமா ?
" விழுந்து விழுந்து " படித்தான் என்பதும் இரட்டைக்கிளவி ஆகாது என்பதே என் கருத்து. ஏனெனில்
" விழுந்து " என்ற சொல் தனித்துப் பொருள் தருவது காண்க .
நீங்கள் "வரி " என்ற சொல்லை வாக்கியத்தில் வைத்துப் பார்த்து ( வரியாகப் படித்தான் ) பொருள் தரவில்லை என்று சொல்கிறீர்கள் .இரட்டைக்கிளவி இலக்கணம் அப்படிச் சொல்லவில்லையே !
" இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்பதுதானே இலக்கணம் . " வரி " என்று தனியாகப் பிரித்தால் பொருள் தருவதால் அது இரட்டைக்கிளவி அல்ல என்பது என் கருத்து.
அடிஅடியென்று அடித்தான்.
பிட்டுபிட்டு வைத்தான் .
இவையெல்லாம் இரட்டைக்கிளவி ஆகுமா ?
" விழுந்து விழுந்து " படித்தான் என்பதும் இரட்டைக்கிளவி ஆகாது என்பதே என் கருத்து. ஏனெனில்
" விழுந்து " என்ற சொல் தனித்துப் பொருள் தருவது காண்க .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தொடத் தொடத் தொல்காப்பியம் (437)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரு தோப்பில் தென்னை மரங்கள் நிறைய உள்ளன ; ஆனால் இடையிடையே வேறு சில மரங்களும் இருக்கின்றன !
- இப்போது , அத் தோப்பை எப்படி அழைப்பது ?
‘தென்னந் தோப்பு’ என அழைக்கலாமா?
‘தென்னந் தோப்பு’ என்றுதான் சுட்டவேண்டும் என்கிகிறார் தொல்காப்பியர் !
இடையிடையே வேறு சில மரங்கள் இருந்தால் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள் ! – இது தொல்காப்பியர் வாதம் !
ஆம் ! ‘பெரும்பான்மை’ (Majority) என்ற தத்துவத்தை முதலில் தந்தது அரசியல் அல்ல ! மொழிதான் !
இதற்குத் தொல்காப்பியத்தின் இந்த இடமே சான்று!
ஆகவே , இலக்கண ஆய்வு என்பது சமுதாயத்தைவிட்டு விலகி நிற்பது என்று எவரும் எண்ணவேண்டாம் ! இலக்கண ஆய்வும் சமுதாய ஆய்வே !
சென்னையியில் ஒரு வட்டாரத்தில் அதிகாரிகள் வீடுகள் நிறைய உள்ளன ; அந்தப் பகுதியைத் தானிக்காரர்கள் (Automen ) , ‘ இது விஐபி ஏரியாங்க !’ என்கிறார்கள் ! அப்
பகுதியில் ஏழை எளிய மக்களும் வாழ்கிறார்கள் ! இது அவர்களுக்கும் தெரியும் ! ஆனாலும் ‘ இது விஐபி ஏரியாங்க !’ என்கிறார்கள் !
தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபைத்தான் அவர்கள் பின்பற்றியுள்ளனர் !
இங்கே , அதிகாரிகள் வீடுகள் எண்ணிக்கையில் மற்ற வீடுகளைவிடக் குறைவாகக்கூட இருக்கலாம் ! ஆனாலும் அப்பகுதி ‘விஐபி ஏரியா’தான் !
ஏன்?
மக்களில் தலைமையானவர்கள் அதிகாரிகள் ! (இது சரியா தவறா என்பது வேறு வாதம் !)
ஆகவே , ‘தலைமைப் பண்பு’ பற்றிப் பார்க்கும்போது ‘விஐபி ஏரியா’ எனக் குறிப்பதுதான் , தொல்காப்பியர் இலக்கணப்படி சரியாகும் !
தாவரங்களாலும் மக்களானாலும் ஒரு வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மை அல்லது தலைமைப் பண்பு பற்றித்தான் அப் பகுதி அழைக்கப்பட வேண்டும் !
இதுதான் தொல்காப்பியர் ஆணை !-
“ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்” (கிளவி. 49)
‘உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்’ - உயர்திணையாக இருந்தாலும் அஃறிணையாக இருந்தாலும் ,
‘தலைமையும் பன்மையும்’ – தலைமைப் பண்பையும் பெரும்பான்மைப் பண்பையும் நோக்கி,
‘உள்பொருள் ஒழிய’ - இடையே வேறு வகையின இருப்பினும், அவற்றைக் கருத்திற் கொள்ளாது,
‘ஒருபெயர்ப் பொதுச்சொல் ’ – ஒரு சொல்லைக் கொண்டு,
‘கிளத்தல்’ – சொல்லுக!
இங்கு சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டுகளையும் பார்க்கலாம் ! –
1 . ‘பிறரும் வாழ்வா ருளரேனும் பார்ப்பனச் சேரி யென்றல் உயர்திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு!’
சேனாவரையர் உரைப்படி , பார்ப்பன மக்கள் , பிற இனத்தவரைவிடத் தலைமையானர்கள் அந்நாளில் !
2. ‘எயினர் நாடென்பது அத் திணைக்கண் பன்மைபற்றிய வழக்கு’ !
3. ‘பிற புல்லும் மரனும் உளவேனும் கமுகந் தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு’ !
(மரன் - மரம்)

நன்றி ஜெகதீசன் அவர்களே!
அடிஅடியென்று அடித்தான்.
பிட்டுபிட்டு வைத்தான் .
இவையெல்லாம் இரட்டைக்கிளவி ஆகுமா ?- சரியான கேள்வி !
இவை இரட்டைக் கிளவி ஆகா!
ஏனெனில் , ‘அடி அடித்தான்’ - கூற முடியும் !
‘பிட்டு வைத்தான்’ ‘ - கூறமுடியும்!’
தொல்காப்பியரின், ‘இரட்டிற் பிரிந்திசையா’ என்பதிலுள்ள ‘இசையா’ என்பதைக் கவனிக்கவேண்டும் !
தொடரோடு இசைந்து வரவேண்டும் என்ற கருத்து அதிலுள்ளது !

தொடத் தொடத் தொல்காப்பியம் (438)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘தொடியோர் வந்தார்’ - என்றதும் என்ன நினைக்கிறோம் ?
யாரோ ஒரு பெண் வந்தார் என நினைக்கிறோம் ! இல்லையா?
-
இது சரிதான் !
ஆனால் சிந்தித்துப் பார்த்தால் , ‘தொடி’ என்பது , பெண் மட்டுமே அணியும் வளையலையும் குறிக்கும்; அத்துடன் ஆண்கள் அணியும் காப்பு , தோள் வளையமாகிய கடகத்தையும் குறிக்கும் !
இப்படி இருந்தும் ஏன் பெண்ணை மட்டும் நினைத்தோம் ?
- இதுதான் ‘மரபு ’ என்பது !
மேலே , ‘தொடியோர்’ என்பது பெயர்ச் சொல் ; சரியாகச் சொன்னால் , ‘வினையாலணையும் பெயர்’; உயர்திணைச் சொல்; இது , பொதுமையிலிருந்து பிரிந்து , பெண்மைக்குரியதாய் வந்தது !
சேனாவரையர் நடையில் சொல்வதானால் , ‘உயர்திணைக்கண் , பெயரிற் பிரிந்த , ஆணொழி மிகு சொல் ’!
இதைப் போன்றே , ‘கட்டிலேறினார்’ என்றால் , வீட்டுக்கட்டிலில் தூங்குவதற்கு ஏறியதையெல்லாம் குறிக்காது ! அரசன் ஆட்சி அரியணையில் ஏறியதையே குறிக்கும் !
‘கட்டிலேறிதல்’ ஒரு தொழில்தானே? எனவே , சேனாவரையர் நடையில் , இதனை ( ‘கட்டிலேறினார்’என்பதை) , ‘தொழிலில் பிரிந்த பெண்ணொழி மிகு சொல்’ எனல் வேண்டும் !
இவற்றுக்குத் தொல்காப்பிய விதி –
“பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன” (கிளவி. 50)
மேலும் ஒரு சேனாவரையர் எடுத்துக்காட்டுக்கு விளக்கம் ! –
1 . ‘வாழ்க்கைப் பட்டார்’ ! ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே வாக்கையில் நுழைகிறார்கள்? ஆனால் ‘வாழ்க்கைப் பட்டார்’ என்றதும் நாம் பெண்ணைத்தானே நினைக்கிறோம் ?
இது , ‘தொழில் பிரிந்த ஆணொழி மிகு சொல்!’

தொடத் தொடத் தொல்காப்பியம் (439)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
“குமணன் வள்ளி அருணன்
மான் மீன் இவை ஐந்தும் “ - என்று ஒரு பாடலில் வந்தால் ,
இது சரியா ? தவறா?
குமணன், வள்ளி, அருணன் – உயர்திணைப் பெயர்கள்
மான், மீன் – அஃறிணைப் பெயர்கள்
உயர்திணைச்சொற்களும் அஃறிணைச் சொற்களும் கலந்து வந்து , ‘இவை’ என அஃறிணை முடிவு கொள்ளலாமா?
‘கொள்ளலாம்’ என்கிறார் தொல்காப்பியர் !
‘ஆனால் இது பாட்டுக்கு மட்டும் , பெயர்களை அடுக்கி வரும்போதுமட்டும்தான் பொருந்தும் ‘ என்று அவர் கூறுகிறார் !
தொல்காப்பியர் விதி இதுதான் ! :-
“பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே ”
‘பலவயினானும்’ – பல வகைப் பெயர்களும்,
‘திணை விரவு’ – உயர்திணையும் அஃறிணையும் கலந்து,
‘எண்ணுப் பெயர் ’ – எண்ணிவரும் எண்ணுப் பெயர்களாக வந்தால் ,
‘அஃறிணை முடிபின செய்யுள் உள்ளே’ – பாடலில் , அஃறிணை முடிவைக் கொள்ளலாம் !
இதற்குச் சேனாவரையர் எடுத்துக்காட்டு –
1 . “வடுகர் அருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங்
குறுகா ரறிவுடையார்”
(இப் பாடலில் , வடுகர் , அருவாளர் , கருநாடர் ஆகியன உயர்திணைப் பெயர்ச் சொற்கள் ; சுடுகாடு , பேய் , எருமை ஆகியன அஃறிணைப் பெயர்ச்சொற்கள் ; ஆனால் இந்த ஆறும் , இறுதியில் ‘என்று இவை’ என அஃறிணை முடிவு கொள்வதைக் கவனியுங்கள் !)
ஆனால் , சிலப்பதிகாரத்தில் , உயர்திணை , அஃறிணை கலந்து (விரவி) வந்து உயர்திணை முடிவே கொள்கிறதே?
இந்த ஐயத்தைப் போக்குகிறார் சேனாவரையர் !-
‘சிறுபான்மை உயர்திணைச் சொற்கொண்டு முடியவும் பெறும்’ என்று கூறி , அச் சிலப்பதிகார அடிகளைக் காட்டுகிறார் சேனாவரையர் ! -
“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு” (சிலம்பு- வஞ்சினம்)

ஐயா ! ஓர் ஐயம்.
காலையில் இராமன் ,ஆடுகளையும் , மாடுகளையும் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றான் .
மாலையில்
இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பினர் என்பது சரியா ?
அல்லது
இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பின என்பது சரியா ?
காலையில் இராமன் ,ஆடுகளையும் , மாடுகளையும் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றான் .
மாலையில்
இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பினர் என்பது சரியா ?
அல்லது
இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பின என்பது சரியா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி நண்பர் ஜெகதீசன் அவர்களே !
இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பினர் என்பது சரியா ?-
இதுதான் சரி!
மேலே தொல்காப்பியர் சொன்னது செய்யுளில் , அதுவும் அடுக்கி வரும்போதுதான் பொருந்தும் !
இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பினர் என்பது சரியா ?-
இதுதான் சரி!
மேலே தொல்காப்பியர் சொன்னது செய்யுளில் , அதுவும் அடுக்கி வரும்போதுதான் பொருந்தும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 66 of 84 • 1 ... 34 ... 65, 66, 67 ... 75 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 84