புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
296 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 54 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 53 of 84 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 3:33 pm

Dr.S.Soundarapandian wrote:எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !
[You must be registered and logged in to see this link.]

நன்றி முனைவர் அவர்களே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2015 8:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)

‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும்  அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது  இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக  இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’

அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

இவணை = இவண் + ஐ

இவண் – சுட்டுப் பெயர்

ஐ – அசை (Expletive)

இவணை - இவ்விடத்து

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2015 8:42 pm

PostDr.S.Soundarapandian Sat Oct 03, 2015 2:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (391)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“வகரக் கிளவி நான்மொழி யீற்றது” (மொழி. 48)

‘வகரக் கிளவி’ – ‘வ்’ எனும் சொல்,
‘நான்மொழி  ஈற்றது’ – நான்கு சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !

‘வகரக் கிளவி’ -  இப்படித் தமிழ் இலக்கணங்களில் வந்தால் , இடத்தைப் பொறுத்து , ‘வ்’ அல்லது ‘வ’ எனக் கொள்ள வேண்டும் !

‘நான் மொழி’ என்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –

1 . அவ்

2 . இவ்

3 . உவ்

4 . தெவ்
இவை நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns) !

‘வ்’ ஈறு  தொடர்பாக , முன்பே நாம் புள்ளிமயங்கியல் நூற்பாக்கள் 83 , 87 ஆகியவற்றில் விரிவாகப் பார்த்துள்ளோம்! ஆகவே அவற்றை மீண்டும் இங்கே இணைக்கவில்லை !

இறுதியாக மொழிமரபின் கடைசி நூற்பா ! –

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரக் கிளந்த வஃறிணை யான ”               (மொழி 49)

‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த , னகரத் தொடர்மொழி ஒன்பஃது  என்ப’ -  இரண்டு எழுத்துகளைக் கொண்ட சொற்களின் ஈறு ‘ன்’ ஆக இருந்தால் , அந்த ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வருவது ஒன்பது சொற்களில் மட்டும் நடவாது என்பார்கள்!
‘புகரக் கிளந்த அஃறிணை யான’ -  குற்றம் அற்ற அப்படிப்பட்ட ஒன்பது சொற்களும் அஃறிணைச் சொற்களாம் !

அந்த ஒன்பது சொற்கள் யாவை ?

இளம்பூரணர் எழுதுகிறார் !-
1 . எகின்
2 . செகின்
3 . விழன்
4 . பயின்
5. அழன்
6 . புழன்
7 . குயின்
8 . கடான்
9 . வயான்

இச் சொற்களின் பொருளைப் பற்றி நமக்கு முன்பு  கவலைப் பட்டவர் நச்சினார்க்கினியர்! அவர் ,
1. எகின் = புளி
2. பயின் = பிசின்
3. குயின் = மேகம்
4. அழன் = பிணம்
5. வயான் = காரிப் பறவை
- என்று பொருள்கள் எழுதிவிட்டு , “செகின் முதலிய பிறவற்றுக்குப் பொருள் புலப்பட்டில”
எனக் குறித்துளார் !

ஒன்பது சொற்களுக்கு மட்டும்தானே தடைபோட்டது தொல்காப்பியம் ?
அப்படியானால் மீதி ‘ன்’ ஈற்றுச் சொற்களின் ஈற்றில் , ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வரும் என்பதுதானே பொருள் ?
ஆமாம் என்ற இளம்பூரணர் , அப்படி வரக்கூடிய ‘ன்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றை எழுதுகிறார் !-

1 . நிலன்
இது ‘நிலம்’ என்ற பொருளையே தரும் !

2 . பிலன்
இது ‘பிலம்’ என்ற பொருளையே தரும்!

‘வயான்’ எனும் காரிப் பறவையைப் பார்க்க ஆசையா?

இதோ -
1 .
[You must be registered and logged in to see this image.] Courtesy – blog.chaukhat.com

2.
[You must be registered and logged in to see this image.] Courtesy – orientalbirdimages.org

3.
[You must be registered and logged in to see this image.] Courtesy – tulaoer.org

இதன் விலங்கியல் பெயர் - Dicrurus மச்ரோசெர்கிஸ்

இதன் வேறு பெயர் - கரிக் குருவி

இதன் தாயகம் – இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள்

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 17, 2015 3:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (392)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எழுத்ததிகாரத்தில் நாம் இதுவரை நூற்பாவாரியாக ஆய்ந்தவை :-

1.நூன் மரபு
2.மொழி மரபு
3.புணரியல்
4.தொகை மரபு
5.உருபியல்
6. உயிர் மயங்கியல்
7. புள்ளி மயங்கியல்
8.குற்றியலுகரப் புணரியல்

இப்போது மீதி இருப்பது ‘பிறப்பியல்’ ஒன்று மட்டுமே !

‘பிறப்பியல்’ , எழுத்ததிகாரத்தின் மூன்றாவது இயல்.

இதனை இப்போது பார்ப்போம் !

முதல் நூற்பா ! –

“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான”  (பிறப்.1)

தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறைகளைத் தொகுத்துச் சுருக்கமாக ஒரு நூற்பாவில் கூறிவிட்டார் தொல்காபியர் !

‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ – வயிற்றின் தொப்புள் பகுதியிலிருந்து காற்றானது கிளம்பி,
‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ – தலை , தொண்டை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் நிலைபெற்று ,
‘பல்லும்  இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான
உறுப்புற்று அமைய’ – பல் , இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளில் சேர,
‘எல்லா வெழுத்தும் சொல்லுங் காலைப்,பிறப்பின்  ஆக்கம் வேறுவேறு  இயல
திறப்படத் தெரியும் காட்சி ஆன’ – தமிழ் எழுத்து ஒலிப்புகள் எல்லாம் , ஆராய்ந்து பார்க்குமிடத்து ,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாகப் பிறக்கும் !

இவ்வாறு தொல்காப்பியர் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் (Linguists)  ஆங்கிலத்தில் ஓதுகின்றனர் !  ‘பிறப்பியல்’ என்பதை Articulation of letters என்கின்றனர்; ‘மிடறு ’ என்பதை அவர்கள் Larynx என்கின்றனர் .

தலை – இது மூளையைக் குறிக்கும் என்று ச.பாலசுந்தரம் எழுதியுள்ளார்!அவரே , மொழியியலார் மூக்குத் துளையின் அடிப்பாகத்தைக் குறிக்கும் என மொழிநூலார் கருதுவர் என்ற குறிப்பையும் தருகிறார் !

தலை , நெஞ்சு ஆகியவை கூடத் தமிழ் எழுத்து உச்சரிப்பில் பங்கு வகிக்கின்றன என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் கூறியுள்ளது நமக்கு வியப்பை அளிக்கிறது !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 17, 2015 9:53 pm

தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பில் தலையின் பங்கு என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 21, 2015 11:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (393)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறையைப் பொதுவாகச் சொன்னார் தொல்காப்பியர் மேலே !

இப்போது , உயிர் எழுத்துகள் எப்படிப் பிறக்கும் எனக் குறிப்பாகக் கூறுகிறார் ! :-
“அவ்வழிப்
 பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்”  (பிறப் . 2)

அஃதாவது ,  ‘அ’ முதல் ‘ஔ’ வரையான 12 உயிர் எழுத்துகளும் , தொண்டையிலிருந்து தோன்றும் காற்றால் வெளிப்படுகின்றன !

இங்கே நச்சினார்க்கினியர் ஒரு நுணுக்கம் காட்டுகிறார் !

அஃதாவது, நச்சர் உரையை விளக்கிக் கூறுவதானால் , ‘அ’ வுக்கு ஒரு மாத்திரை என்றால், அந்த அளவுக்கே காற்றும் வெளிவரும் ! ‘ஆ’வுக்கு இரண்டு மாத்திரைகள் என்றால் , அந்த அளவிக்குக் கூடுதலாகக் காற்றும் வெளிவிடப்பட்டு ஒலியானது பிறக்கும் !  

அடுத்து , ‘அ’ , ‘ஆ’  இரண்டு உயிர்களும் பிறக்கும் வகையைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! –
”அவற்றுள்
அஆ  வாயிரண் டங்காந் தியலும்” (பிறப் . 3)

இதன்படி , ‘அ’ , ‘ஆ’ என்ற இரண்டு உயிர்களுமே வாயைத் திறத்தலால் உண்டாகும் !

அங்காத்தல் – திறத்தல் ; பிளத்தல்

அஃதாவது , ‘அ’ , ‘ஆ’ இரண்டின் பிறப்பின்போது நாக்கு அண்ணத்தைத் தொடுவதோ , மேற்பல்லைத் தொடுவதோ இல்லை  என்பது பொருள் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 21, 2015 11:27 pm

நன்றி எம். ஜகதீசன் அவர்களே !

மிடற்றுக்கு மேலே உள்ள உறுப்புகள் தலையைச் சேர்ந்தவை ; இந்தப் பொருளில் ‘தலை’ என்று கூறியிருக்கலாம் ; ‘ட்’ , ‘ண’ ஆகிய ஒலிகளை Cerebral consonants என்றுதான் வடமொழிக்காரர்கள் குறிப்பிடுகிறார்கள் ! தொல்காப்பிய ஆய்வாளர்கள் சிலர் ‘தலை’ என்பதற்கு ‘மூளை’ என்றே பொருள் எழுதியுள்ளமை அறியத்தக்கது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 4:50 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !

இதோ நான்காவது நூற்பா!-

“இஈ  எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)

‘இஈ  எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும்  அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே  அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல்  முதல்  நா விளிம்புறல்  உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !

இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!

இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை  ஒத்தே செல்கின்றன !

ஐ யை,  ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !

தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு,  ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?

மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !

இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 4:52 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !

இதோ நான்காவது நூற்பா!-

“இஈ  எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)

‘இஈ  எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும்  அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே  அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல்  முதல்  நா விளிம்புறல்  உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !

இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!

இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை  ஒத்தே செல்கின்றன !

ஐ யை,  ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !

தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு,  ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?

மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !

இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 53 of 84 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக