புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 6 of 84 Previous  1 ... 5, 6, 7 ... 45 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 12, 2013 10:33 pm

34. ஆறாம் வேற்றுமை
என்னது புத்தி - தற்கிழமை
என்னது மூளை - பிறிதின் கிழமை

சரிதானே ஐயா?

[You must be registered and logged in to see this image.]
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Feb 12, 2013 11:23 pm

ஐயா தொல்காப்பியத்தில் இறை வழிபாடு பற்றி கூறப்பட்டதை எழுதுங்களேன் ?

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 13, 2013 10:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (35)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவியாக்கம் 34)

அஃதாவது , இல்லாத பொருளைத் தெரிவிக்கும்போது , ‘உம்’மை சேர்த்துக் கொள்ளவேண்டும் !

‘மன்னா’ –இல்லாத ; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .

1. ‘மாட்டைத் தேடினேன் ; எங்கு இல்லை’ ×
‘மாட்டைத் தேடினேன்; எங்கும் இல்லை’ √

2. ‘அறை திறந்துதான் இருந்தது ; யார் வரவில்லை’ ×
‘அறை திறந்துதான் இருந்தது ; யாரும் வரவில்லை’ √

3. ‘திருட்டு நடந்துள்ளது ; ஒருவர் பார்க்கவில்லை’ ×
‘திருட்டு நடந்துள்ளது ; ஒருவரும் பார்க்கவில்லை’ √

மேல் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் ‘இல்லை’ப் பொருளில் ‘உம்’மை வந்து பொருளைத் தெளிவுபடுத்தல் காணலாம் .

இதே அமைப்பில் ,வேற்றுமை பற்றியும் நம் ஐயத்தைப் போக்க ஒரு நூற்பா வரைந்துள்ளார் தொல்காப்பியர்.

“எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே ” (வேற்றுமை மயங்கியல் 46)

அஃதாவது ,

‘மரத்தை அறுத்தான் ’-இரண்டாம் வேற்றுமைத் தொடர்.

‘மரத்தை அறுக்கவில்லை’ –இதுவும் இரண்டாம் வேற்றுமைத் தொடர்தான் !
(அறுப்பதும் அறுக்காததும் அவன்விருப்பம்;
நமக்கு என்ன வந்தது?)

‘வாளால் வெட்டினான்’ – மூன்றாம் வேற்றுமைத் தொடர் .
‘வாளால் வெட்டவில்லை’- இதுவும் மூன்றாம் வேற்றுமைத் தொடர்தான் !

மேலே நாம் பார்த்த இரு நூற்பாக்களிலும் மிக நுட்பமான ஐயங்களைக் கூடத் தொல்கப்பியர் போக்கியுள்ளாரே ,அஃது எப்படி முடிந்தது ?

அதன் பின்னணி என்ன ?

தொல்காப்பியர் மாணவர்களுக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர்! அதுதான் பின்னணி !
தன் மாணவர்களின் ஐயத்தைப் போக்க முயன்றுள்ளார் தொல்காப்பியர் !

சில ஓலைச் சுவடிகளில் , “இது அண்ணாசாமி உபாத்தியாயர் எழுதியது” என்று எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன் !

நான் சொல்லும் ஓலைச் சுவடியின் காலம் கி.பி. 17,18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது!

ஆனால் தொல்காப்பியரின் கைச்சுவடி கி.மு. 3000க்கும் முற்பட்டது !

அதனுடைய வழிவழிப் படிகளே (copies) இப்போது நம்மிடம் இருக்கின்றன !
…………………

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 13, 2013 10:44 pm

ச. சந்திரசேகரன் ,கிருபானந்தன் பழனிவேலுச்சா ஆகியோர்க்கு நன்றி! ஈகரை நல்ல சமுதாயத்தை வளர்த்துவருகிறது !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 14, 2013 9:11 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (36)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான” (கற்பியல் 53)

கணவன் வேற்றூர் சென்றான் ; போன வேலை முடிந்தது ; திரும்புகிறான் ! அப்படித் திரும்பும்போது எங்குமே தங்கமாட்டானாம் ! (தவிர்தல் - தங்குதல்)

ஏனாம் ?

அவனது உள்ளம் முழுவதும் எப்போது மனைவியைப் பார்ப்போம் என்ற ஆசை உள்ளதுதான் !

அந்த நேரத்தில் அவனுக்கு உற்ற நண்பனாக அவனை இல்லாளிடத்தே கொண்டு சேர்ப்பது அவனது குதிரை !

அக் குதிரையை வருணிக்க இரண்டு வரிகளைச் செலவிடுகிறார் தொல்காப்பியர் ! :-

“உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான” !

அக் குதிரை , ‘சும்மா சிட்டய்ப் பறக்கு’மாம்!

புள் இயல் – பறவை போலப் பறக்கும் இயல்புள்ள அவனது உள்ளம் அவனுக்கு எவ்வாறு உதவுமோ அதைப் போல அக் குதிரையும் உதவுமாம் !

இந்த உவமை நம் சிந்தனைக் குதிரையைத் தட்டி எழுப்புகிறது !

‘காற்று வேகம் மனோ வேகம்’ - என்றொரு சொல் உண்டு !

மனமானது எங்கும் நொடிப் பொழுதில் பறந்து வரும் !

இது நமக்குத் தெரிந்ததுதான் !

ஆனால் , தொல்காப்பியர் இப் பொருளில் கூறியதாகத் தெரியவில்லை !

‘உள்ளம் போல உற்றுழி உதவும் ’ –என்றல்லவா கூறுகிறார் ! ‘உள்ளம் போலப் பறக்கும் ’ என்று கூறவில்லையே ?

ஒரு மனிதன் தொய்ந்துபோகும் போது அவனுக்குப் புத்துயிர் கொடுப்பது அவனது உள்ளம்தான் ! இதைத்தான் தொல்காப்பியர் ‘உற்றுழி உதவுதல்’என்றார் !

ஒரு போர் வீரன் குதிரை மீது அமர்ந்திருந்தான் ! அப்போது எதிரிகளின் பலம் காரணமாக அவன் கால் நடுங்கியதாம் ! அப்போது அவன் என்ன சொன்னான் ? “ஏய் , காலே ! என்ன நடுங்குகிறாய்? நீ நடுங்குவதால் நான் ஒன்றும் பின்வாங்கப் போவதில்லை ! நான் சென்று தொடர்ந்து போரிடத்தான் போகிறேன் !” என்றானாம் !

அவனது உள்ளம்தான் ‘உற்றுழி உதவும்’ உள்ளம் !

…………………

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 15, 2013 10:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (37)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘இளங்கோ என்று ஒருவர் இருந்தார்’ – எழுதலாம் .

‘சுமதி என்று ஒருவர் இருந்தார் ’ – எழுதுகிறோம் .

அஃதெப்படி ? ஆணுக்கும் ‘ஒருவர்’ , பெண்ணுக்கும் ‘ஒருவ’ரா?

ஆம் ! அது சரிதான் என்கிறது தொல்காப்பியம் ! :-

“ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” (பெயரியல் 37)

அஃதாவது ,

‘சுனிதா விண்வெளி சென்றார்’ √

‘டெண்டுல்கர் மட்டைப் பந்து விளையாடினார்’ √

சரி ! ‘ஒருவர்’ என்று ஒற்றை ஆளைக் குறிப்பிட்டுப் பேசும்போது , இப் பெயர்ச்சொல்லானது கொண்டு முடியும் வினை , ஒருமை வினையாக இருக்கவேண்டுமா ?

அடுத்த ஐயம் !

தொல்காப்பியர் விடை ! :-

“தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும் ” ! (பெயரியல் 38)

இங்கே ‘தன்மை’ என்றது , இடத்தைக் (person) குறிக்காது ; ‘ஒருவர்’ என்னும் பெயர்ச் சொல்லின் இயல்பைக் (Behavior of noun) குறிக்கும் !

‘கமலம் என்ற ஒருவர் வந்தாள்’ ×
‘கமலம் என்ற ஒருவர் வந்தார் ’ √

‘அழகப்பன் என்ற ஒருவர் வந்தான் ’ ×
'அழகப்பன் என்ற ஒருவர் வந்தார் ’ √

தொல்காப்பியர் பேசும் தொடரிலக்கணம் (Syntax) இது!

எண் (Number) (ஒருமை , பன்மை) , பால் (Gender)(ஆண்பால், பெண்பால்) ‘ இடம் (Person) (தன்மை ,முன்னிலை , படர்க்கை) ஆகியன எவ்வாறு ஒரு தொடரில் இயைய வேண்டும் என்ற தொல்காப்பியர் விதிப்பே நாம் மேலே கண்டது !

மொழியியலில் இதனை ‘Coherence of Number, Gender and Person’ என்பர் !

............

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 16, 2013 2:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (38)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப ” (செய்யுளியல் 176)

‘மந்திரம் ’ என்பதற்கு இலக்கணத்தை இங்கு தெளிவாக்குகிறார் தொல்காப்பியர்!

மந்திரம் = மறைமொழி !

‘மறைமொழி’ என்றதும் ‘மறைவான மொழி ; பிறர் அறியக் கூடாத மொழி ’ என்று பலரும் தவறாகவே பொருள் கொண்டுள்ளனர் !

மறை = மறைப்பு ×
மறை = வழிவழியாக வந்த √

‘பேனா மறை தேய்ந்துவிட்டது’ – அந்தக் காலத்தில் சொல்வோம் !

இங்கே ‘மறை’ - புரி (thread)

மேலிருந்து கீழாக – வழிவழியாக – இறங்க உதவுவதால் அது ‘மறை’(புரி)!

இதே பொருள்தான் மந்திரத்திற்கும் !

அஃதாவது , வழிவழியாகச் , சான்றோர்களால் கூறப்பட்ட நன்மொழிகளே ‘மறை’ ! அதுதான் ‘மந்திரம்’!

‘மறைக்க வேண்டியது மறை’ என்றால் ,அதை ஏன் கூறவேண்டும் ?

மறைவாகன கருத்துகளை உள்ளே வைத்துக் கூறப்பட்டவையே ‘மறை’ எனில் , நல்ல கருத்துகளை மறைவாக , இரகசியமாக , வைக்கவேண்டும் ?

‘வழிவழியாக வந்த சான்றோர் கருத்துகள்’ என்று குறித்தோமல்லவா ? அதனைத்தான் ‘நிறைமொழி மாந்தர் ஆணை’ என்கிறார் !

அஃதாவது , சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய ,அப்பழுக்கற்ற ,ஐயம் சிறிதுமற்ற ( beyond all doubts) உறுதிக் கருத்துகளே ‘நிறைமொழி’! அப்படிப்பட்ட சிறந்த மொழிகளைச் சொல்பவர்களே ‘நிறைமொழி மாந்தர்’! அவர்கள் கூறும் அந்தச் சிறந்த மொழி அவர்களுக்கு முன்பே கூறப்பட்டுச், செம்மைப்படுத்தப்பட்டுக், காலத்தால் சோதிக்கப்பட்டுத் (Time-tested) தேறி வந்தவை ! அதனால்தான் ‘மந்திரம்’ சிறப்புக்கு உரியதாகப் போற்றப்பட்டது !

சரியான , தெளிவான மொழிகளைக் கூறும் சபை – ‘மந்திரக் கோட்டி’ !

அரசனுக்குச் சரியான , தெளிவான அறிவுரைகளைக் கூறும் சபை - ‘ மந்திரச் சுற்றம் ’!

இந்த இரண்டும் , “...சுவாகா” என்று சுலோகம் ஓதும் இடங்ளல்ல !

‘மந்திரம் ’ – என்பது தமிழ்ச் சொல் !

நீளமாக இறங்கிய வாலை உடையதால், அது மந்தி (குரங்கு) !

மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்பட்ட நீளமான மலை - மந்திரமலை !

எனவே , ‘வழிவழியாக’ என்ற பொருளை ‘மந்திரம்’ என்ற சொல் தருவதைக் காண்கிறோம் !

இதே அடிப்படையில்தான் ,வழிவழியாகக் கூறப்பட்ட சிறந்த கருத்துகள் ‘மந்திரம்’ எனத்தமிழர்களால் கூறப்பட்டது !

‘மந்திரம்’ என்ற தமிழ்ச் சொல் இருந்ததால்தான் ‘திருமந்திரம்’ என்ற நூல் தமிழில் எழுந்தது !

‘மந்திரம்’ என்ற தமிழ்ச் சொல்லைத்தான் ‘மந்த்ரம்’ (Manthram) என வடசொல்லாக ஆக்கினர் !

இப்போது புரிகிறதா ‘மூடுமந்திரம்’ ?
- - - - - - - - -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 16, 2013 11:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (39)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

இலக்குமி வந்தது ’ – இங்கே ‘இலக்குமி’ என்று பசுவுக்குப் பெயரிட்டுள்ளனர் என்று உணர்ந்துகொள்கிறோம் !

‘இலக்குமி வந்தாள் ’ – இங்கே ‘இலக்குமி’ , ஒரு பெண்ணைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது !

இங்கு உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான சொல் – ‘இலக்குமி’ !

‘பல்லவன் மரத்தில் மோதியது’ – இங்கே ‘பல்லவன்’ , அஃறிணையாக நின்று , ‘மோதியது’ என்ற வினை முடிபு கொண்டது !

‘பல்லவன் சிற்பக்கலை வளர்த்தான்’ – இங்கே ‘பல்லவன்’ , உயர் திணையாக நின்று , ‘வளர்த்தான்’ என்ற வினை முடிபு கொண்டது !

இங்கு உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான சொல் – ‘பல்லவன்’ !

இவ்வாறு உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக நிற்கும் பெயர்களை ‘விரவுப் பெயர்’ என்பர் !

அப்படிப்பட்ட விரவுப் பெயர் தொடரில் வரும்போது , உயர் திணையா அஃறிணையா என்று எப்படிக் கண்டுகொள்வது ?

‘வினையை வைத்துத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்கிறார் தொல்காப்பியர் ! :-

“இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்
திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே” (பெயரியல் 18)

மேல் நூற்பாவில் ‘தெரிபிலவே’ என்ற தொடரால் ஆண்பால் , பெண்பால் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளலாம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ; உயர்திணை உயர் திணை அஃறிணையைத் தெரிந்துகொள்ளலாம் என்று எங்கே கூறினார் ?” – கேட்கலாம் !

நல்ல கேள்வி !

இந் நூற்பாவில் ‘பால்’ என்பது ஆண்பால் , பெண்பால் முதலிய ‘பால்’களைக் குறிக்காது !

பால் - பகுப்பு

எந்தப் பகுப்பு ?

திணைப் பகுப்பு !

இதனை எப்படிக் கூற முடிகிறது ?

இதற்கு முந்தைய 10 நூற்பாக்களில் தொல்காப்பியர் உயர் திணை, அஃறிணை என்று திணைகளைப் பற்றித்தான் பேசியுள்ளார் ! எனவே ‘திணை’யின் தொடர்ச்சியாகவே , “அந்தப் பகுப்பைத் – திணைப் பகுப்பை – வினையை வைத்துத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று இங்கே முடித்தார் !

மேல் நூற்பாவில் வந்த ‘திரிபு’ என்ற சொல்லுக்கு விகாரத்தோடு நிகர்த்த ‘‘ ‘சொல் திரிபு’ எனப் பொருள்கொள்ளக் கூடாது !

திரிபு = பிரிவு ; பிரிந்து

உயர் திணைக்கும் அஃறிணைக்குமாகப் பிரிந்து மேலே ‘இலக்குமி’ , ‘பல்லவன்’ ஆகிய விரவுப் பெயர்கள் இருவகைகளாகத் தொடர்களில் வந்தன அல்லவா? அப்படி ‘இருவகை’ என்ற பிரிவையே ‘திரிபு’என்ற சொல் சுட்டுகிறது !

தொல்காப்பிய நுணுக்கம் – சுவையானததுதான் !

......................

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 17, 2013 12:02 am

36. ஒரு மனிதன் தொய்ந்துபோகும் போது அவனுக்குப் புத்துயிர் கொடுப்பது அவனது உள்ளம்தான் !
37. சுனிதா விண்வெளி சென்றார்’ √
‘டெண்டுல்கர் மட்டைப் பந்து விளையாடினார்’
38. மறைக்க வேண்டியது மறை’ என்றால் ,அதை ஏன் கூறவேண்டும் ?
39. இவ்வாறு உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக நிற்கும் பெயர்களை ‘விரவுப் பெயர்’ என்பர்
கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கடைசியில் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா.

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 10:43 am

பயனுள்ள இலக்கணப் பதிவு. நன்றி முனைவர். செளந்திர பாண்டியன் அவர்களே

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 6 of 84 Previous  1 ... 5, 6, 7 ... 45 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக