புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 46 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 46 of 84 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 65 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 09, 2015 8:14 pm

நன்றி சதாசிவம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 09, 2015 8:26 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (350)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் இப்போது –

“அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்
உளவென மொழிப விசையொடு சிவணிய
நரம்பின் மறைய வென்மனார் புலவர்” (நூன் . 330)

‘அளபிறந்து உயிர்த்தலும்’ – உயிரெழுத்துகள் தம் மாத்திரை அளவு கூடி ஒலித்தலும்,
‘ஒற்றிசை நீடலும்’ – மெய்களும் தம் மாத்திரை அளபு கூடி ஒலித்தலும்,
‘உளவென மொழிப’ – உண்டு என்பார்கள் ,
‘இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்’ – இசை வல்ல யாழ் நூலோர்!

நூன்மரபில் உயிரின் மாத்திரை , மெய்யின் மாத்திரை பற்றியெல்லாம் கூறினாரல்லவா? கூறிய அந்த அளபிலிருந்து கூடும் இடங்களும் உண்டு என்று இங்கே கூறுகிறார் தொல்காப்பியர் ! அவ்வளவுதான் !

இந் நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –

1. வயங்கிழாஅய் (கலி.11)
இதில் ‘ழா’, பக்கத்து  ‘அ’வின் ஒரு மாத்திரையையும் சேர்த்துக்கொண்டு   இரண்டு மாத்திரை என்ற அளபிலிருந்து  மொத்தம் மூன்று மாத்திரையாக ஒலிக்கிறது !

2. கேஎளினி (கலி.11)
இதில் ‘கே’, பக்கத்து  ‘எ’யின் ஒரு மாத்திரையையும் சேர்த்துக்கொண்டு   இரண்டு மாத்திரை என்ற அளபிலிருந்து  மொத்தம் மூன்று மாத்திரையாக ஒலிக்கிறது !

 3.பின்னுண்ணுங்ங் (கலி.11)

இதில் ‘ங்’, தனது அரை மாத்திரையைக் கூட்டுவதற்காக இன்னொரு ‘ங்’கையும் சேர்த்துக்கொள்கிறது ! சேர்த்துக்கொண்டு   அரை  மாத்திரை என்ற அளபிலிருந்து  கூடி மொத்தம் ஒரு மாத்திரையாக ஒலிக்கிறது !

இத்துடன் எழுத்து மரபு என்ற நூன் மரபு முடிவுறுகிறது !

அடுத்தது – நாம் பர்க்கப் போவது – மொழிமரபு !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 09, 2015 8:45 pm

நன்றி விமந்தனி அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 10, 2015 4:31 am

நல்ல பதிவு ........அன்பரே.......

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 14, 2015 9:10 pm

நன்றி திரு சதாசிவம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 14, 2015 9:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (351)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன் மரபில் தனி எழுத்துகளுக்கான மரபுகளைக் கூறினார் தொல்காப்பியர் !

மொழிமரபில் , அத் தனி எழுத்துகள் சொற்களில் எவ்வாறு பயில்கின்றன என்று கூறுகின்றார் !

மொழி மரபு என்றால் தமிழ்மொழியின் வரலாற்றைக் கூறுவது அல்ல!

மொழிமரபில்  முதல்  நூற்பா :-
“குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
கவயின் வரூஉ  மகர மூர்ந்தே”  (மொழி . 1)

‘குற்றியல்  இகரம்  நிற்றல் வேண்டும்’ – குற்றியல் இகரமாக நிற்க வேண்டும் !
‘யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு’ ’ – ‘யா’ எனும் உரை அசைச் சொல் அருகே உள்ள ,
‘ஆவயின் வரும் மகரம் மீது வரும் உகரம் ஊர்ந்தே’ –    ‘மி’ மீது வரக்கூடிய ‘உ’வானது !

1. கேண்ம் + யா = கேண்மியா ( ‘மி’ மீது நிற்கும் உகரம் குற்றியல் இகரம் !)

2. சென்ம் + யா = சென்மியா  ( ‘மி’ மீது நிற்கும் உகரம் குற்றியல் இகரம் !)

இங்கே ‘யா’ உரை அசைச்  சொல் ! ‘கேண்ம்’முன்னிலை வினை !
(கேண்ம் - கேட்பாயாக)

நுணுக்கமான மொழியியல் கருத்து இங்கே உள்ளது !

 ‘இ’ , குறுகுவதற்கு ‘இடம்’   – ‘மியா’  

 ‘இ’ , குறுகுவதற்குப் ‘பற்றுக்கோடு’   – ‘ம’  ( ‘ம’வைப் பற்றி ஏறி நிற்பதால்)

 ‘இ’ , குறுகுவதற்குச் ‘சார்பு’   – ‘யா’
( சார்பு  - துணை)

‘யா’வானது ஓரு துணையாகக் குற்றியலிகரம் தோன்றுவதற்கு உள்ளது என்பதே மொழியியல் நுட்பம் !

இதனால்தான் தொல்காப்பியரை உலகின் முதல் மொழியியல் அறிஞர் என்று நம்மால் கூறமுடிகிறது !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 15, 2015 6:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (352)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சென்ற நூற்பாவில் ஒரு சொல்லுக்குள் இருந்த குற்றியலிகரத்தை காட்டினார் தொல்காப்பியர் !
‘கேண்மியா’ என்பதை ஒருசொல்லாக இளம்பூரணர் காட்டினார் !

அடுத்த நூற்பாவில் இரு சொற்கள் புணர்வதால் உருவாகும் குற்றியலிகரத்தைக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! –
“புணரிய  னிலையிடைக்  குறுகலு முரித்தே
உணரக் கூறின்  முன்னர்த் தோன்றும்”  (மொழி. 2)

‘புணரியல்  நிலையிடைக்  குறுகலும்  உரித்தே’ -  இரு சொற்கள் புணரும் தறுவாயில் குற்றியலிகரம் தோன்றுவதும் உண்டு !
‘உணரக் கூறின்  முன்னர்த் தோன்றும்’ – இதனை  உணருமாறு பின் வரும் இயலில் கூறப்படும் !
‘முன்னர்த் தோன்றும்’ –  பின்னே வரும் குற்றியலுகரப் புணரியல் நூற்பா 5இல் தோன்றும் !

அந்த நூற்பா – “யகரம்  வரும்வழி  யிகரங் குறுகும்
                உகரக் கிளவி துவரத் தோன்றாது”  (குற்றியலுகர . 5)

மேல் மொழிமரபு நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! –

1. நாகு + யாது = நாகியாது  (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு ‘கி’யில் இருக்கும் ‘இ’க்கு மாத்திரை  அரை; இதனால் இந்த இகரம் ‘குற்றியலிகரம்’!

2. வரகு + யாது = வரகியாது  (அல்வழிப் புணர்ச்சி)

3. தெள்கு + யாது = தெள்கியாது  (அல்வழிப் புணர்ச்சி)

4. எஃகு + யாது = எஃகியாது  (அல்வழிப் புணர்ச்சி)

5. கொக்கு + யாது = கொக்கியாது  (அல்வழிப் புணர்ச்சி)

6. குரங்கு + யாது = குரங்கியாது  (அல்வழிப் புணர்ச்சி)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 21, 2015 3:12 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (344)
- முனைவர் சு. சௌந்தரபாண்டியன்

மொழிமரபில்  அடுத்தாக –

“நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” (மொழி . 3)

‘நெட்டெழுத்து  இம்பரும்’ – நெடில் எழுத்திற்கு அருகிலும் ,
‘தொடர்மொழி  ஈற்றும்’ – குறில்கள் தொடரும்போது அவற்றின் இறுதியிலும் ,
‘குற்றியல்  உகரம் வல்லாறு  ஊர்ந்தே’ – வரக்கூடிய  கு, சு, டு, து , பு , று என்றவாறு, ஆறு வல்லினங்களின் மீது   ஏறிய உகரமானது , ‘குற்றியல் உகரம்’ எனப்படும் !

இளம்பூரணர் தந்துள்ள காட்டுகளை வருமாறு காட்டலாம் !-
1. நாகு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இது நெடில் தொடர்க் குற்றியலுகரம் !

2. வரகு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இஃது உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் !

இனி , இதே நூற்பாவிற்கு (மொழி.3) நச்சர் தந்துள்ள எடுத்துக்காட்டுகளை
வருமாறு தரலாம் !-

3. தெள்கு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இஃது இடைத் தொடர்க் குற்றியலுகரம் !

4. எஃகு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இஃது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் !

5. கொக்கு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இது வன்தொடர்க் குற்றியலுகரம் ! (வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதும் இதுவே)

6. குரங்கு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இது மென்தொடர்க் குற்றியலுகரம் ! (மென்றொடர்க் குற்றியலுகரம் என்பதும் இதுவே)

7. பெருமுரசு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இஃது உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் !

8. திருமுரசு
ஈற்று உகரம் குற்றியலுகரம் ; இஃதும்  உயிர்த் தொடர்க் குற்றியலுகரமே !

நச்சர் தன் உரையில் ஓர் இலக்கண நுணுக்கத்தைத் தருகிறார்!
என்ன நுணுக்கம் ?

முன்னிலை வினையாக இருந்தால் , ஈற்றிலே  , நமது குற்றியலுகர இலக்கணப்படிக் , குற்றியலுகரமாக இருந்தாலும் ,  அது குற்றியலுகரம் ஆகாது !  

 ‘துணியை முறுக்கு’ – இதிலுள்ள ‘முறுக்கு’ , ‘முன்னிலை வினை’ .
ஆகவே ‘முறுக்கு’ என்ற சொல்லின் ஈற்றில் உள்ள உகரம் குற்றியலுகரம் அன்று ; முற்றியலுகரமே !

இதனை நாம் உச்சரித்துச் சரிபார்த்துக்கொள்ளலாம் !

‘முறுக்கு’ என்று ஈற்று உகரத்தை முழுதுமாக உச்சரித்தால்தான் , அவன் துணியை முறுக்குவான் !
‘முறுக்கெ’ என்று ஈற்று உகரத்தைக் குற்றியலுகரமாக உச்சரித்துப்பாருங்கள்! அவன் துணியை முறுக்கமாட்டான் !
இலக்கணம் என்பது வாழ்க்கைக்குத்தானே தவிர இலக்கணப் புலவர்களுக்காக அல்ல !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 24, 2015 7:05 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (354)
- முனைவர் சு. சௌந்தரபாண்டியன்

முன்னை ஆய்வில் , ‘நாகு’ , ‘வரகு’ ஆகிய குற்றியலுகர எடுத்துக்காட்டுகளில், குற்றியல் உகரமானது சொல்லின் ஈற்றில் வந்ததைப் பார்த்தோம் !

இங்கே ஒரு கேள்வி எழுகிறது !

என்ன அது ?

அப்படியானால் இருசொற்கள்  புணரும் நிலையில் , புணர்ச்சி நடந்த பின்னர் , சொல்லின் ஈற்றிலே நின்ற குற்றியலுகரம் நிற்குமா நிற்காதா?

நிற்கும் இடங்களும் உண்டு – தொல்காப்பியர் விடை ! –
“இடைப்படிற் குறுகு மிடனு மாருண்டே
 கடப்பா டறிந்த புணரியி லான”  (மொழி. 4)

‘இடைப்படின்  குறுகும் இடனுமார் உண்டே’ – இருசொற் புணர்ச்சி நடந்த பின்னர் , நிலைமொழி ஈற்றுக் குற்றியலுகரம் , குற்றியலுகரமாகவே நிற்பதும் உண்டு !
‘கடப்பாடு  அறிந்த புணரியில்  ஆன’ – புணரியல் விதிகளை அறிந்தவாறு கூறுவதானால் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகள் – எக்குக் கணை ; சுக்குக் கோடு

இவற்றை விளக்கலாம் ! –
1. செக்குக் கணை
’செக்கு’ – இதன் ஈற்றில் உள்ள உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம்.
செக்கு + கணை = செக்குக் கணை; இந்த நிலையிலும் இடை உகரம் ( ‘கு’ மீது உள்ள உகரம் ;ஈற்று உகரம் அல்ல !) குற்றியலுகரமே ! மாத்திரை , அரைதான் !

2.சுக்குக் கோடு
’சுக்கு’ – இதன் ஈற்றில் உள்ள உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம்.
சுக்கு + கோடு = சுக்குக் கோடு; இந்த நிலையிலும் இடை உகரம் ( ‘கு’ மீதூ உள்ள உகரம் ;ஈற்று உகரம் அல்ல !) குற்றியலுகரமே ! மாத்திரை , அரைதான் !

இதே நூற்பாவிற்குச் (மொழி.4) ச. பாலசுந்தரம் தந்துள்ள எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகப்  பார்க்கலாம் !-

3. கொக்கு + குறிது =கொக்குக் குறிது ; ’கொக்குக் குறிது’ என  ஆன  இரு சொற்களில், ‘கொக்கு’ என்பதன் ஈற்றிலுள்ள ‘உ’ , குற்றியல் உகரமே !
இங்கே நிலை மொழி ஈற்றுக் ‘கு’ வும் , வருமொழி முதல் ‘கு’வும் ஒன்றாகவே இருப்பதைக் கவனிக்க !

4. கச்சு + சுருக்கம் =கச்சுச்  சுருக்கம் ; ’கச்சுச் சுருக்கம்’ என  ஆன  இரு சொற்களில், ‘கச்சு’ என்பதன் ஈற்றிலுள்ள ‘உ’ , குற்றியல் உகரமே !
இங்கேயும் நிலை மொழி ஈற்றுக் ‘சு’ வும் , வருமொழி முதல் ‘சு’வும் ஒன்றாகவே இருப்பதைக் கவனிக்க !

5. பத்து + துடி =பத்துத்  துடி ; ’பத்துத்  துடி’ என  ஆன  இரு சொற்களில், ‘பத்து’ என்பதன் ஈற்றிலுள்ள ‘உ’ , குற்றியல் உகரமே !
இங்கேயும் நிலை மொழி ஈற்றுத் ‘து’ வும் , வருமொழி முதல் ‘து’வும் ஒன்றாகவே இருப்பதைக் கவனிக்க !

6. செப்பு + புதிது = செப்புப் புதிது ; ’செப்புப் புதிது’ என  ஆன  இரு சொற்களில், ‘செப்பு’ என்பதன் ஈற்றிலுள்ள ‘உ’ , குற்றியல் உகரமே !
இங்கேயும் நிலை மொழி ஈற்றுப் ‘பு’ வும் , வருமொழி முதல் ‘பு’வும் ஒன்றாகவே இருப்பதைக் கவனிக்க !

தொல்காப்பிய நூற்பாவின் நடை நமக்குக் கூறுவது என்ன ?-

புணர்ச்சி ஏற்பட்ட பிறகு , நிலைமொழி ஈற்றுக் குற்றியலுகரம் ,பெரும்பாலும் முற்றுகரமாக  ஆகும் என்பதே  !

இதற்குச் ச. பாலசுந்தரம் தந்துள்ள எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகக் காண்போம் !-

1.நாகு +கால் = நாகு கால் √
         நாகு +கால் = நாகுக் கால் ×
  ‘நாகு’ – இதன் ஈற்று உகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ‘நாகு கால்’ ஆனபிறகு ‘கு’விலுள்ள உகரம் முற்றியலுகரமே !

2. பரிசு +பொருள் = பரிசுப் பொருள் √
         பரிசு +பொருள் = பரிசு பொருள் ×
  ‘பரிசு’ – இதன் ஈற்று உகரம் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ‘பரிசுப் பொருள்’ ஆனபிறகு ‘சு’விலுள்ள உகரம் முற்றியலுகரமே !

3. எஃகு + சிறிது = எஃகு சிறிது √
      எஃகு + சிறிது = எஃகுச் சிறிது ×
  ‘எஃகு’ – இதன் ஈற்று உகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ‘எஃகு சிறிது’ ஆனபிறகு ‘கு’விலுள்ள உகரம் முற்றியலுகரமே !

4. உல்கு + பொருள் = உல்கு பொருள் √
      உல்கு + பொருள் = உல்குப் பொருள் ×
  ‘உல்கு’ – இதன் ஈற்று உகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ‘உல்கு பொருள்’ ஆனபிறகு ‘கு’விலுள்ள உகரம் முற்றியலுகரமே !

5. அன்பு + சொல் = அன்புச் சொல் √
     அன்பு + சொல் = அன்பு சொல் ×
  ‘அன்பு’ – இதன் ஈற்று உகரம் மென் தொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ‘அன்புச் சொல்’ என்பதிலுள்ள  ‘பு’வின்  உகரம் முற்றியலுகரமே !

6. அன்பு + சொல் = அன்புச் சொல் √
     அன்பு + சொல் = அன்பு சொல் ×
  ‘அன்பு’ – இதன் ஈற்று உகரம் மென் தொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ‘அன்புச் சொல்’ என்பதிலுள்ள  ‘பு’வின்  உகரம் முற்றியலுகரமே !

ச.பாலசுந்தரம் , இங்கு மேலும் ஒரு நுணுக்கத்தைத் தருகிறார் ! –
நிலைமொழி ஈறும் வருமொழி முதல் எழுத்தும் வேறு வேறாக இருப்பின் , புணர்ந்த பின் வரக்கூடிய சொல் இடையே நிற்கும் ‘உ’ , முற்றுகரமே !

இதற்குச் ச. பாலசுந்தரம் தந்துள்ள எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகத் தரலாம் !-

1. கொக்கு + பெரிது = கொக்குப் பெரிது
‘கொக்கு’ – இதன் ஈற்றில் உள்ள ‘உ’ , வன்றொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ,   ‘கொக்குப் பெரிது’ என்பதிலுள்ள  ‘கு’வின் உகரம் முற்றியலுகரமே!
இதில், நிலை மொழி ‘கு’வும் , வருமொழி ‘பெ’ என்பதும் வேறு வேறான எழுத்துகள் என்பதைக் கவனிக்க !

2. கச்சு + குறிது = கச்சுக் குறிது
‘கச்சு’ – இதன் ஈற்றில் உள்ள ‘உ’ , வன்றொடர்க் குற்றியலுகரம்; ஆனால் ,   ‘கச்சுக் குறிது’ என்பதிலுள்ள  ‘சு’வின் உகரம் முற்றியலுகரமே!
இதில், நிலை மொழி ‘சு’வும் , வருமொழி ‘கு’ என்பதும் வேறு வேறான எழுத்துகள் என்பதைக் கவனிக்க !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 24, 2015 7:06 pm

Sponsored content

PostSponsored content

Page 46 of 84 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 65 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக