புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
107 Posts - 49%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
7 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
234 Posts - 52%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 43 of 84 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 63 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 4:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 43 103459460

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 15, 2015 9:39 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 15, 2015 9:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (333)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை ; உயிர் எழுத்திற்கு ஒரு மாத்திரை ; அப்படியானால் இரண்டும் சேர்ந்து உருவாகிய உயிர்மெய்யெழுத்திற்கு ?  பொது அறிவுப்படி ஒன்றரை மாத்திரைதானே ?

அதுதான் இல்லை !

என்ன சொல்கிறார் தொல்காப்பியர் ? –
“மெய்யோ டியையினு முயிரிய றிரியா ” (நூன். 10)
உயிரெழுத்தானது மெய் மீது ஏறி , உயிர்மெய்யை உருவாக்கினாலும் , உயிர் மெய்யின் மாத்திரை  ஒன்றுதான் !

குறில், மெய் மீது ஏறி உயிர்மெய்யை உருவாக்கினால் , அந்த உயிர்மெய்யின்
மாத்திரை – 1
நெடில், மெய் மீது ஏறி உயிர்மெய்யை உருவாக்கினால் , அந்த உயிர்மெய்யின்
மாத்திரை – 2

மெய்க்கு அரை மாத்திரம் என்று குறித்தோமல்லவா? தொல்காப்பியர் அப்படி எங்கே சொன்னார் என்று யாராவது கேட்பார்கள் என்று அதற்கு , அடுத்த நூற்பாவில் விடை கூறுகிறார் !-
“மெய்ய தளபே யரையென மொழிப” (நூன். 11)

உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் ‘காக்கை’ , ‘கோங்கு’ ஆகியவற்றில் வரக்கூடிய ‘க்’ , ‘ங்’ ஆகிய மெய்களை ஒலித்துப்பாருங்கள் !இப்படிச் சொன்னவர் இளம்பூரணர்!-

“காக்கை கோங்கு எனக் கண்டுகொள்க”
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 17, 2015 12:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (334)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிரெழுத்து , மெய்யெழுத்து , உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றுக்கு மாத்திரை பார்த்தோம் !

சார்பெழுத்துக்கு எத்தனை மாத்திரை ? –
“அவ்விய னிலையு மேனை மூன்றே” (நூன். 12)

‘அவ்வியல்’ என்றால்  எவ்வியல் ?
மேலே (நூன். 11) மெய்யெழுத்து அரை மாத்திரை பெறும் என்று தொல்காப்பியர் கூறினாரல்லவா? அந்த இயல் ! அஃதாவது அரை மாத்திரை !

‘ஏனை மூன்று’ – குற்றியலுகரம் , குற்றியலிகரம் , ஆய்தம் ஆகிய சார்பெழுத்துகள் மூன்று !!
சார்பெழுத்துக்கு மாத்திரை = ½

இளம்பூரணரின் சான்றுகளுக்கு விளக்கம்-
1. கேண்மியா – இங்கே வந்துள்ள குற்றியலிகரமான ‘இ’க்கு மாத்திரை, அரை !
2. நாகு – இங்கே வந்துள்ள குற்றியலுகரமான ‘உ’க்கு மாத்திரை, அரை !
3. எஃகு – இங்கே வந்துள்ள சார்பெழுத்து  ‘ஃ’ ; இதற்கு மாத்திரை, அரை !

‘கேண்மியா’ – இதிலுள்ள ‘மி’க்கு ?
‘மி’க்கும் மாத்திரை அரைதான் ! (விதி: நூன்.10)

‘நாகு’- இதிலுள்ள ‘கு’விற்கு ?  
‘கு’விற்கும் மாத்திரை அரைதான் ! (விதி: நூன்.10)

  ‘ண்’ணை உச்சரித்துப் பாருங்கள் ! அதற்கு அடுத்த எழுத்து ஒலியை அமுக்கிவிடும் ! அதனால்தான் ‘மி’யை முழுதுமாக உச்சரிக்க இயலவில்லை ! முழுதுமாக உச்சரித்தால் ஒரு மாத்திரை ஆகும் ! முழுதுமக உச்சரிக்க இயாதுபோகவே ,’மி’க்கு அரை மாத்திரை !

 இதைப் போலவே ‘நா’வையும் உச்சரித்துப் பாருங்கள் ! அதற்கு அடுத்த எழுத்தான ‘கு’வை அமுக்குகிறது ! இவ்வாறு ‘கு’ அமுக்கப்படுவதால்தான் இங்கே ‘கு’ அரை மாத்திரை பெறுகிறது !

இவ்வாறு தொல்காப்பிய இலக்கணங்கள் யாவுமே அறிவியல் முறைக்கு (Scientific method)  ஒத்து வருபவை எனக் காண்கிறோம் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 17, 2015 1:00 pm

PostDr.S.Soundarapandian Mon Jan 19, 2015 6:45 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (335)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியப்படி ‘ம்’முக்கு அரை மாத்திரை ! இல்லையா?

ஆனால் சில இடங்களில் ‘ம்’ கால் மாத்திரை அளவு ஒலிக்கும் என்கிறார் தொல்காப்பியர் !-
“அரையளபு குறுகன் மகர முடைத்தே
 இசையிட  னருகுந் தெரியுங் காலை” (நூன் . 13)

‘கால் மாத்திரை’ , என்று நூற்பாவில் எங்கே உள்ளது ?

இப்படி நாம் கேட்போம் என்று இளம்பூரணருக்குத் தெரியும் !

அதனால்தான் எழுதுகிறார் –
“கான் மாத்திரையென்பது உரையிற் கோடல்”.

தொல்காப்பியம் படிக்கும் போது இந்த ‘உரையிற் கோடல்’ என்ற உத்தி (technique) பல இடங்களில் பயன்படுகிறது !

 ‘ம்’ , கால் மாத்திரை பெறும் இடங்களாக இளம்பூரணர் சுட்டியன !-
1. போன்ம்
முன் ஆய்வில் விளக்கியபடி , ‘ன்’னின் ஒலியானது ‘ம்’மை அமுக்குகிறது ! அதனால் ‘ம்’முக்கு இருக்கவேண்டிய அரை மாத்திரை குறைந்து ,கால் மாத்திரை ஆகிறது !
‘போன்ம்’ , என உச்சரித்துப் பார்த்தால் உண்மை விளங்கும் !

2. வரும் வண்ணக்கன்
‘வ’ ஒலி தொடர்வதால் , ‘ம்’முக்கு இருக்கவேண்டிய அரை அளவு குறைந்து கால் மாத்திரை ஆகிறது !

இதே முறையில் ‘மருண்ம்’ என்ற சொல்லிலும், ‘ம்’முக்குக் கால மாத்திரையே எனக் குறித்துளர் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 19, 2015 6:46 pm

PostDr.S.Soundarapandian Sat Jan 24, 2015 3:16 pm

                                  தொடத் தொடத் தொல்காப்பியம் (336)                                    
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
பழங்கால எழுத்துமுறையில்  ‘ம’, ‘ம்’ எழுத்துகள் , இப்போது நாம் எழுதுவது போல இல்லை !
எப்படி இருந்தன என்பதைக் கீழ்வரும் நூற்பா ஓரளவிற்கு நமக்குக் காட்டுகிறது ! –
 “உட்பெறு புள்ளி  யுருவா கும்மே” (நூன். 14)
 இளம்பூரணர் உரை – “புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம் !”
என்ன பொருள் ?
[You must be registered and logged in to see this image.]
அடுத்த நூற்பாவில் , மெய்யெழுத்துகள் எல்லாமே புள்ளியோடு வரும் என்கிறார் –
 “மெய்யி  னியற்கை புள்ளியொடு நிலையல்” (நூன். 15)
அஃதாவது –
க்  ங்  ச்  ஞ்  ட்  ண்  த்  ந்  ப்  ம்  ய்  ர்  ல்  வ்  ழ்  ள்  ற்  ன் = 18 மெய்கள்
தொடர்ந்து  வரும் நூற்பா –
 “எகர ஒகரத் தியற்கையு மற்றே” (நூன். 16)
என்ன பொருள் ?
(பழைய )  எ   =  ஏ  (இப்போதைய)
(பழைய )  ஒ   =  ஓ  (இப்போதைய)

[You must be registered and logged in to see this image.]

                                                     ஓலைச் சுவடிகளில்  ‘ஓ’வுக்கு ‘ஒ’ மட்டுமே இட்டு எழுதப்பட்ட முறையை இன்றும்   நாம் காணலாம் !
இன்னொரு சான்று-
பண்டைய தமிழ் எழுத்தாகிய பிராமி (Brahmi) எழுத்தில் (கி.பி. 200) , U – வின் உட்புறம் ஒரு கோடிட்டு எழுதினால் அது ‘ம’ !-

[You must be registered and logged in to see this image.]
 
இந்தக் குறிப்புகளால் தொல்காப்பியர் கூறியதில் எள்ளளவும் பிசகில்லை என அறிகிறோம் !
 
                                      ***     

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 26, 2015 1:19 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (337)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன் மரபில் அடுத்த நூற்பா –

“புள்ளி யில்லா வெல்லா மெய்யும்
உருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும்
ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல வுயிர்த்த லாறே”                            (நூன் . 17)

‘புள்ளி இல்லா எல்லா மெய்யும்’- க , ங ,ச  முதலிய எல்லா உயிர்மெய்களும்,
‘உருஉரு ஆகி அகரமோடு உயிர்த்தலும்’ – க், ங், ச் முதலிய மெய்களோடு ‘அ’ சேர்ந்து ஒலித்தலும்,
‘ஏனை உயிரோடு  உருவுதிரிந்து உயிர்த்தலும்’ – ‘ஆ’, ‘இ’ முதலிய உயிர்களோடு சேர்ந்து
, உருவம் மாறி வரலும்,
‘ஆ ஈர் இயல உயிர்த்தல் ஆறே’ – அப்படிப்பட்ட இரு வகைகளாகும் , உயிரோடு மெய்
சேரும் முறை !

‘உருவு உருவாகி உயிர்த்தல் ’ – என்ற தொடருக்கு இளம்பூரணர் உரை –
“உருவு உருவாகி உயிர்த்தல் க , ங  எனக் கண்டுகொள்க”

உருவு = க், ங் முதலியன.

உருவாகி உயிர்த்தல் = க் + அ = க ; ங் + அ = ங

இளம்பூரணரின் உரையில் அரிய தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் நமக்குக் கிட்டுகின்றன !

அந்த இளம்பூரணர் உரை !-

“உருவு திரிந்து மேலும் கீழும் விலங்கு பெறுவன , விலங்கு பெற்று உயிர்த்தலும் ; கோடு பெறுவன, கோடு பெற்று உயிர்த்தலும்; புள்ளி பெறுவன, புள்ளி பெற்று உயிர்த்தலும்; புள்ளியும் கோடும் உடன் பெறுவன புள்ளியும் கோடும் உடன் பெற்று உயிர்த்தலும் எனக் கொள்க ! ”

அஃதாவது –

1. விலங்கு பெற்று உயிர்த்தல் :
மேல் விலங்கு பெறுவன- கி , கீ , தி , தீ முதலியன .
(மேல் விலங்கு – மேற் சுழி)

கீழ் விலங்கு பெறுவன- கு , மு  முதலியன
(கீழ் விலங்கு – கீழ்ச் சுழி)

2. கோடு பெற்று உயிர்த்தல் : கெ , கே , செ, சே என்று வருவன.
(கோடு - கொம்பெழுத்து)

3. புள்ளி பெற்று உயிர்த்தல் :
க.  ,     ங.   – முதலியன.

நச்சினார்க்கினியர் கருத்துப்படி  , பக்கத்தில் இடப்பட்ட புள்ளியானது , பிற்றை நாளில் கால் எழுத்தாக மாறியது !( க.  = கா ; ங. = ஙா )

4. புள்ளியும் கோடும் பெற்று உயிர்த்தலும் :
கெ. ,  ஙெ. – முதலியன .
மேற்கண்ட நச்சர் கருத்துப்படி, இக்காலத்தில் எழுத்து முறையில் – கொ , ஙொ  முதலியன.

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 28, 2015 8:05 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (338)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

க -  இது உயிர்மெய் எழுத்து !

இதில் , முதலில் நிற்பது எது?

க் – கின் மீது ‘அ’ ஏறியதா? இல்லை ‘அ’வின் மீது ‘க்’ ஏறியதா? எது முதலில்?

இப்படியொரு சிந்தனை அந்தக்காலத்தில் ஏற்பட்டுள்ளது !

ஒலி நுட்ப அறிவு ஏனோ பிற்காலத்தில் மழுங்கிவிட்டது ! தமிழிசை நம்மைவிட்டுப் போனது இப்படித்தான் !

நமது ஐயத்திற்குத் தொல்காப்பியர் விடை கூறுகிறார் –
 “மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே” (நூன். 18)

அஃதாவது , ‘க்’குத்தான் முதலில் தோன்றியது ! பிறகு ‘அ’ , அதன்மீது  ஏறியது !

இவ்வாறு இரண்டு ஒலிகள் கலப்பதை இளம்பூரணர் உவமை காட்டி அழகாக விளக்குகிறார் !-

“மெய்யு முயிரும் முன்னும் பின்னும்பெற நிற்கு மென்றமையால் , அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி , விரல் நுனிகள் தலைப்பெய்தாற் போல வேறுநின்று கலந்தனவல்ல என்பது பெறுதும் !”

ஒரு விரலும் இன்னொரு விரலும் சேர்ந்தால் , இரண்டும் தனித்தனியே தூக்கலாகத் தெரியும் ! ஆனால் பாலில் நீர் கலந்தால் , அந்தக் கலவையில் நீரைத் தனியே பார்க்க முடியாது ; பாலையும் தனியே பார்க்க முடியாது !

இப்படித்தான் ‘க்’கும் ‘அ’வும் சேர்ந்து , ‘க’ உண்டாகிறது என்பது இளம்பூரணர் விளக்கம் ! ‘க’ ,தோன்றிய பிறகு , ‘க்’ ஒலிப்பு எங்கே போனது ? ‘அ’எனும் உயிர் ஒலி எங்கே போனது ? என்றெல்லாம் கேட்கக் கூடது !

இந்த இலக்கணத்தின்உடனடிப்  பயன்பாடு ஒன்றைக் கூறுகிறேன் !

‘அக்கம்’ , ‘அகம்’ என்று இரு சொற்கள் உள்ளன ! அகராதியில் , அல்லது அகர வரிசையில் இவற்றை அடுக்கச் சொல்லுகிறார்கள் உங்களை ; முதலில் ‘அக்கம்’ எழுதி , அதற்குகீழ் ‘அகம்’ என்று எழுதுவீர்களா? இல்லை ‘அகம்’ என்பதை முதலில் நிறுத்தி அதன் கீழ் ‘அக்கம்’ என்ற சொல்லை எழுதுவீர்களா?

தொல்காப்பியர் என்ன சொன்னார்?

‘மெய்யின் வழியது உயிதோன்றும்’ என்றாரல்லவா?

ஆகவே ‘க்’ வந்தபின்தான் ‘க’ வரும் !

அஃதாவது – அக்கம்
                         அகம்
- என்பதுதான் அகர வரிசை !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 43 of 84 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 63 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக