புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
115 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
7 Posts - 3%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
3 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
25 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 42 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 42 of 84 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 63 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 23, 2014 10:14 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (326)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

   ‘ஓ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !

எந்த ‘ஓ’ ஈற்றுச் சொல்?

கோ- இதுதான் நாம் பார்க்கப் போகும் ‘ஓ’ஈற்றுச் சொல் !

இது வருமாறு புணரும்-

“இல்லொடு கிளப்பி  னியற்கை யாகும்” (உயிர்மயங். 91)

கோ + இல் = கோவில் (வேற்றுமைப் புணர்ச்சி)

சில இளம்பூரணர் உரைப் பதிப்புகளில் ‘கோவில்’ என்றும் , நச்சர் உரைப் பதிப்புகளில் ‘கோயில்’ என்றும் காணப்படுகிறது !
சரசுவதிமகால் பதிப்பில் (2009) , இளம்பூரணர் உரையாகவும் ‘கோவில்’ என்பதே தரப்பட்டுள்ளது !
ஆனால் , உடம்படுமெய் விதிப்படி , ‘கோவில்’ என்பதே சரியானது ! இதுவே இங்கு கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இப்போது ஈடுபட்டுவரும் செம்பதிப்பு (Critical edition) முறையில் ஆய்வுசெய்த பிறகே இந்த ஆய்வு முழுமை அடையும் ! செம்பதிப்பின் தேவையும் (Necessity for Critical Edition) இதனால் உணரப்படும் !

நாம் மேலே பார்த்த ‘கோ’ என்ற சொல் உயர்திணையா ? அஃறிணையா ?

கோ - உயர்திணைப் பொருளில் வந்துள்ள அஃறிணைப் பெயர்ச் சொல் !

‘வேந்து’ என்பது உயர்திணைப் பொருளில் வந்துள்ள இன்னொரு அஃறிணைப் பெயர்ச் சொல் !

‘ஒற்று’ என்பதும்  உயர்திணைப் பொருளில் வந்துள்ள அஃறிணைப் பெயர்ச் சொல்தான் !

தமிழ்தான் எத்தனை அதிசயங்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 29, 2014 1:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (327)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘கோ’ எனும் ‘ஓ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது ! -

“உருபிய னிலையு மொழியுமா ருளவே
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 92)

‘உருபியல் நிலை’ -  உருபியல் நூற்பா 8இல் , ‘கோ + ஐ = கோ+ஒன் + ஐ = கோஒனை’ என்று ‘ஒன்’சாரியை பெற்ற புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா ? அந்த நிலை !

அந்த நிலையில் நின்று , ‘ஒன்’சாரியை பெற்று , வல்லெழுத்து மிகாது , ‘இயற்கையாக’ நின்று புணர்தலை இந்த நூற்பாவில் உரைக்கிறார் தொல்காப்பியர் !

1. கோ + கை = கோ + ஒன் + கை = கோஒன்கை (வேற்றுமைப் புணர்ச்சி)
(கோஒன்கை – அரசனின் கை)

2. கோ + செவி = கோ + ஒன் + செவி = கோஒன்செவி (வேற்றுமைப் புணர்ச்சி)
(கோஒன்செவி – அரசனின் செவி)

3. கோ + தலை = கோ + ஒன் + தலை = கோஒன்தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
(கோஒன்தலை – அரசனின் தலை)

4. கோ + புறம் = கோ + ஒன் + புறம் = கோஒன்புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)
(கோஒன்புறம் – அரசனின் பின்பக்கம்)

இங்கே இளம்பூரணர் – “இதனானும் பெற்றாம் சாரியைப் பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை” என்ற ஓர் இலக்கண நுட்பத்தை எழுதுகிறார் !

என்ன பொருள்?

சாரியை இடையே வந்தாலும் ,வருமொழி முதல் எழுத்து, வல்லெழுத்தாக இருக்கலாம் !

இதுவே இளம்பூரணர் தந்த நுட்பம் ! மேல் புணர்ச்சிகளில் , வருமொழிகள் யாவும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைக் கவனிக்க !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 06, 2014 7:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (328)                                                                      
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
இப்போது உயிர்மயங்கியலின் கடைசி நூற்பா ! –
 
 “ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
  அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
 வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே
 அவ்விரு வீற்றும் உகரம் வருதல்
 செவ்வி தென்ப சிறந்திசி னோரே” (உயிர்மயங்.93)
 
 ‘ ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர் ’ – ஔகாரத்தை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்கள் முன்பாக,
 
‘அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்’ – அல்வழிப் புணர்ச்சியானாலும் வேற்றுமைப் புணர்ச்சியானாலும்,

 ‘வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே’ – வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்கள் வந்து புணரும்போது,

 ‘அவ்விரு வீற்றும் உகரம் வருதல்’- சந்தியாக உகரம் சாரியையாக வருதலைச் ,

 ‘செவ்வி தென்ப சிறந்திசி னோரே’ – செம்மையானது என்பார்கள் இலக்கணத்தில் சிறந்தவர்கள் !
   
1.கௌ + கடிது = கௌ + உ + கடிது = கௌவுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
(கௌவுக் கடிது – கொள்ளானது கடுமையானது ; கௌ - கொள்ளு)
 
2.   கௌ + சிறிது = கௌ + உ + சிறிது = கௌவுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
(கௌவுச் சிறிது – கொள்ளானது சிறியது )
 
3.   கௌ + தீது = கௌ + உ + தீது = கௌவுத் தீது (அல்வழிப் புணர்ச்சி)
(கௌவுத் தீது – கொள்ளானது தீயது)

4.   கௌ + பெரிது = கௌ + உ + பெரிது = கௌவுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
(கௌவுப் பெரிது – கொள்ளானது பெரியது )

5.   கௌ + கடுமை = கௌ + உ + கடுமை = கௌவுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(கௌவுக் கடுமை – கொள்ளின் கடுமை)

6.   கௌ + சிறுமை = கௌ + உ + சிறுமை = கௌவுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(கௌவுச் சிறுமை – கொள்ளின் சிறுமை)

7.   கௌ + தீமை = கௌ + உ + தீமை = கௌவுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(கௌவுத் தீமை – கொள்ளின் தீமை)

8.   கௌ + பெருமை = கௌ + உ + பெருமை = கௌவுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(கௌவுப் பெருமை – கொள்ளின் பெருமை)
 
இங்கே இளம்பூரணர் சில இலக்கண நுணுக்கங்களை காட்டுகிறார் !-
 
1.   கௌ + ஞான்றது = கௌவு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
(கௌவு ஞான்றது – கொள்ளு தொங்கியது)

2    . கௌ + ஞாற்சி = கௌவு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(கௌவு ஞாற்சி – கொள்ளின்  தொங்கல்)
 
3.கௌ + வலிது = கௌவு வலிது (அல்வழிப் புணர்ச்சி)
(கௌவு வலிது – கொள் வலியது)

4.கௌ + வலிமை = கௌவு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)
                        (கௌவு வலிமை – கொள்ளின் வலிமை)
 
 5.கௌ + கடுமை = கௌவின் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் சாரியை வேற்றுமைப் பொருள் தந்தது)

                             ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 06, 2014 7:25 pm

PostDr.S.Soundarapandian Sat Dec 13, 2014 6:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (329)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இத் தொடரின் தொடக்கத்தில், நூன்மரபின் முதலாம் நூற்பாவை ஆய்ந்தோம் !

இப்போது நூன்மரபை இரண்டாம் நூற்பாவிலிருந்து தொடங்குவோம் !:-

“அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்த மென்ற
முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன” (நூன். 2)

‘குற்றியலிகரம்’ – அரை மாத்திரை அளவு ஒலிக்கும் இகரம்,

‘குற்றியலுகரம்’ - அரை மாத்திரை அளவு ஒலிக்கும் உகரம்,

‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’-  ஆய்த எழுத்து எனும் மூன்று புள்ளி எழுத்து,

‘எழுத்தோரன்ன’ – ஆகிய மூன்று எழுத்துகள் குறைந்து ஒலித்தாலும்,  இவற்றையும் பிற எழுத்துகளைப் போலவே கருதவேண்டும் !

நாகு + யாது= நாகியாது

இங்கே , ‘கி’யில் உள்ள இகரம் அரை மாத்திரை கொண்டது ! சற்றுக் குறைந்து ஒலிப்பது ! இதுதான் ‘குற்றியலிகரம்’! இந்தக் குற்றியல் ஓசை கொண்ட எழுத்து தனியாக எங்கும் வராது ! சொற்களில்   பிற எழுத்துகளைச் சார்ந்துதான் வரும் ! எனவேதான் இது சார்பெழுத்து!

வாக்கு – இதன் ஈற்றில் உள்ள  ‘உ’ ,  வன்றொடர்க் குற்றியலுகரம் !அரை மாத்திரை கொண்டு ‘க்’கைச் சார்ந்து ஒலிப்பது ! ஆகவே இது சார்பெழுத்து !  

குற்றியலுகரப் புணரியல் ஆய்வில் நாம் குற்றியலுகரம் பற்றி விவாக ஆய்ந்ததை இங்கு நினைவுக்குக் கொணர்க !

எஃகு – நடுவே உள்ள ‘ஃ’ எழுத்தை உச்சரித்துப் பாருங்கள் ! இது தனியாக ஒலிக்காது ! அடுத்து நிற்கும் ‘க்’கைச் சார்ந்துதான் ஒலிக்கும் ! இதனால் இது சார்பெழுத்து !

எழுத்துகளை ,வரிவடிவை மட்டுமல்லாது ஒலி அமைப்பையும் கருத்திற்கொண்டு விதி அமைத்துள்ளதைக் கவனிக்க !

தொட்ட இடமெல்லாம் தொல்காப்பியம் நமக்கு இனிக்கும் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 14, 2014 9:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (330)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன் மரபில் , அடுத்ததாக , தமிழில் குறில் உயிர்கள் (Short vowels) -5
                                                                         நெடில் உயிர்கள்    (Long vowels)- 7
- என்பதைத் தெரிவிக்கிறார் தொல்காப்பியர் –

1.“அவற்றுள்
  அ இஉ
  எஒ  வென்னு மப்பா லைந்தும்
 ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப ” (நூன். 3)

2. “ஆஈஊ  ஏஐ
ஓஔ வென்னு மப்பா லேழும்
ஈரள பிசைக்கு  நெட்டெழுத் தென்ப” (நூன். 4)

மேல் நூற்பாக்களின்படி , 5 குறில்கள் – அ , இ, உ, எ, ஒ
                                                     7 நெடில்கள் – ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ ஔ

                                                  குறிலுக்கு மாத்திரை – 1
                                                 நெயிலுக்கு மாத்திரை – 2

‘மாத்திரை’ – இது தமிழ்ச் சொல்தான் ! ‘மாத்ரா’ என்ற சொல்லிலிருந்து வந்ததல்ல !
 
‘மாத்திரை’ என்றால்  தமிழில் ‘சிறிய அளவு’ என்பது பொருள் !

மருந்தை உருட்டிச் சிறிய அளவாக்கி வைத்திருப்பதால் அதற்குப் பெயர் – ‘மாத்திரை’ (tablet)

குறத்தி கையில் வைத்திருக்கும் கோல் சிறியதாக உள்ளதால் அதற்குப் பெயர் – ‘மாத்திரைக் கோல்’!

‘ஆ’என்ற நெடிலுக்குக் குறில் எழுத்து உள்ளது; அது – ‘அ’!

‘ஐ’ என்ற நெடிலுக்குக் குறில் எழுத்து எது?

‘ஔ’ என்ற நெடிலுக்குக் குறில் எழுத்து எது?

இளம்பூரணர் விடை கூறுகிறார் –
“ஐகார ஔகாரங்களுக்கு இனம் இல்லை யெனினும்,
மாத்திரை யொப்புமையான் அவை நெட்டெழுத்து எனப்பட்டன”!

அஃதாவது , ‘ஐ’, ‘ஔ’ ஆகியன நெடிலோசை கொண்டன ! இதனால் இவை ‘நெடில்கள்’ ! சரிதானே ?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 23, 2014 8:05 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (331)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த நூற்பா –
“மூவள பிசைத்த லோரெழுத் தின்றே” (நூன்.5)

அஃதாவது-
மூன்று மாத்திரையில் ஒலிக்கக் கூடிய தனி எழுத்து எதுவும் இல்லை !

இளம்பூரணர் இங்கே , “இது உயிரளபெடை யெழுத்திற்கு மாத்திரை கூறுதல் நுதலிற்று” என்று ஒரு விளக்கத்தைத் தருகிறார் !

இதன்படி-
ஆஅ – மொத்தம் 3 மாத்திரை.
(ஆ- 2 மாத்திரை ; அ- 1 மாத்திரை)

இளம்பூரணர் இந்த உரையை எப்படிக் கூறினார் ?

அடுத்த நூற்பாவைப் பார்த்தால் புரியும் !-
“நீட்டம் வேண்டி னவ்வள புடைய
கூட்டி யெழூஉத லென்மனார் புலவர்” (நூன்.6)

இதன்படி-
நமக்கு ஓசை கூடுதலாக வேண்டுமென்றால் , அந்த அளவுக்கு ஏற்ற மாத்திரை உடைய உயிர் எழுத்தை கூட்டிக்கொள்ளவேண்டும் !

மூன்றுமாத்திரை ஓசை தேவை எனில் – ஈஇ – என ஒரே ஒரு உயிரெழுத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் !

நான்கு மாத்திரை அளவுள்ள ஓசை தேவை எனில் – ஆஅஅ – என இரண்டு உயிர்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் !

அது சரி !

“மாத்திரை” என்றால் என்ன?

வரும் நூற்பா விளக்குகிறது ! –
“கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை
நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறே ” (நூன்.7)

அஃதாவது-
1.கண்ணை இமைக்கும் நேரேம் எவ்வளவு ?
 அந்த அளவு நேரம்தான் – ‘மாத்திரை’

2.இரண்டு விரல்களால் சொட்டுக்குப் போடும் நேரம் எவ்வளவு?
அந்த அளவு நேரம்தான் – ‘மாத்திரை’

இங்கே இளம்பூரணர் 7 வகை அளவை முறைகளைத் தெரிவிக்கிறார் ! இவற்றை நமது எடுத்துக்காட்டுகளுடன் வருமாறு குறிக்கலாம் !-

1. ‘நிறுத்தளத்தல்’ – புளி போன்றவற்றை நிறுத்து அளத்தல்.

2. ‘பெய்தளத்தல்’ – எண்ணெய் போன்றவற்றை ஊற்றி அளத்தல்.

3. ‘நீட்டியளத்தல்’ – துணி போன்றவற்றை அளவுகோலால் அளத்தல்.

4. ‘நெறித்தளத்தல்’ – தானியத்தைக் கையால் அள்ளிப்போடல்; கைக்குள் தானியம் நெறிபடுகிறதல்லவா?
‘தெறித்தளத்தல்’எனப் பாடம் கொண்டு ‘வீணை நரம்பு முதலியவற்றைச் சுண்டிவிட்டு அளத்தல் ‘ எனவும் கூறுவர்!

5. ‘தேங்கமுகத் தளத்தல்’ – அரிசி  போன்றவற்றைப் படியில் நிறைத்து  அளத்தல்.

6. ‘சார்த்தியளத்தல்’ –  ஒப்பிட்டு அளத்தல் ; ‘கண்ணிமை’போல.

7. ‘எண்ணியளத்தல்’ – தேங்காய் போன்றவற்றை எண்ணி அளத்தல்.
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 23, 2014 8:06 pm

PostDr.S.Soundarapandian Thu Dec 25, 2014 2:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (332)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குறிலையும் நெடிலையும் சேர்த்து உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை ?

தொல்காப்பியர் விடை –

“ஔகார விறுவாய்ப்
பன்னீ ரெழுத்து முயிரென மொழிப” (நூன். 8)

அஃதாவது-

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ – 12 உயிரெழுத்துகள்.

தொல்காப்பியர் ‘ஔகார இறுவாய்’ என்றுதான் இந்த நூற்பாவில் கூறியுள்ளார் ! அ , ஆ … வரிசையைக் கூறவில்லை ! நாம்தான்  நூன்மரபு நூற்பாக்கள்  3, 4 ஆகியவற்றால் உணர்ந்துகொள்ளவேண்டும் !

இங்கே இன்னொரு செய்தி !

பள்ளிகளில் , ஆனா , ஆவன்னா .. எனக் கூறி ,  ‘அக்கன்னா ’என்று முடிப்பார்கள் ! ஆனால் தொல்காப்பியப்படி ‘ஃ’ உயிரெழுத்து அல்ல! அது சார்பெழுத்து !

ஆய்தம் , ‘அஃகேனம்’ என்றும் கூறப்படும் ! ‘அஃகேனம்’ என்பதே ‘அக்கன்னா’ஆனது !

வடமொழியில் ‘அஹ’ என முடிவுறுவது , இத் தமிழ் ‘அஃகேனம்’தான் !

தமிழ் அஃகேனத்திற்கு மூன்று புள்ளிகள் (ஃ) ; வடமொழி ‘அஹ’வுக்கு இரு புள்ளிகள் (புன்னகை !இவ்வளவுதான் வேறுபாடு !

வடமொழி தமிழிலிருந்து பிரிந்தது என்று பல நூற்களில் நான் எழுதியுள்ளதற்கு இந்த இடமும் ஒரு சான்றே!

மொழியியலில் (Linguistics)-
அ, இ, உ , எ,ஒ – Semi vowels
ஆ, ஈ , ஊ , ஏ ,ஓ – Long vowels
ஐ , ஔ – Diphthongs

‘Diphthong ’ – என்பது கூட்டுயிர்; இரு உயிர்கள் சேர்ந்து ஒலிப்பது ! இதனை  ‘gliding vowel’ என்றும் கூறுவர் !

அடுத்துத் தொல்காப்பியர் மெய்யெழுத்துகள் 18 என்ற கணக்கைத் தெரிவிக்கிறார் !-

  “னகர விறுவாய்ப்
  பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப” (நூன் . 9)

க் ,ங், ச்,ஞ், ட்,ண், த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் – 18 மெய்கள் .

மெய்யெழுத்தானது , ‘ஒற்றெழுத்து’ , ‘புள்ளியெழுத்து’ , ‘காத்திர எழுத்து’ , ‘உடல் எழுத்து’ , ‘ஊமை எழுத்து’ எனவும் அறியப்படும் !

மெய்யெழுத்தானது , ஆங்கிலத்தில் ‘Consonants’ எனப்படும்!

18 மெய்களைத் தொல்காப்பியர் வரிசையாக இந் நூற்பாவில் கூறவில்லை !
இளம்பூரணரின் உரையால் *(நூன். 1)   க் ,ங், ச்,ஞ், ட்,ண், த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் –  என்ற வரிசையை அறிய வருகிறோம் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 25, 2014 2:39 pm

Sponsored content

PostSponsored content

Page 42 of 84 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 63 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக