புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 27 of 84 •
Page 27 of 84 • 1 ... 15 ... 26, 27, 28 ... 55 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

தொடத் தொடத் தொல்காப்பியம் (203)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அளவுப் பெயர்களுடன் ‘குறை’ என்ற சொல் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும்
எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை” (தொகை . 24)
இதன்படி –
1 . உரி + குறை = உரிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
2 . கலம் + குறை = கலக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
3. தொடி + குறை = தொடிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
4 . கொள் + குறை = கொட் குறை (அல்வழிப் புணர்ச்சி)
5. காணி + குறை = காணிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
6 . கால் + குறை = காற் குறை (அல்வழிப் புணர்ச்சி)
‘குறை’ வந்து புணர்வதற்குத்தானே இலக்கணம் சொன்னார் தொல்காப்பியர் ?
இளம்பூரணர் . ‘அதனால் என்ன ? ஏதாவது ஒரு பொருளின் பெயரைக்
கொண்டுவந்து அளவுப் பெயர்களுடன் புணர்த்தினாலும் இதே விதிதான் !’ என்கிறார் !
இதன்படி –
கலம் + பயறு = கலப் பயறு (அல்வழிப் புணர்ச்சி)
‘கூறு’ என்ற சொல் வந்து புணர்ந்தாலும் இதுதான் விதி என்கிறார் இளம்பூரணர் ! –
நாழி + கூறு = நாழிக் கூறு (அல்வழிப் புணர்ச்சி)
(நாழிக் கூறு – நாழியின் பகுதி)
இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் உரை நமக்கு விளக்கம் தருவதாக உள்ளது ! : -
“உரிக் குறை : உரி நெல்லும் குறை நெல்லும் என்க ! ‘வேற்றுமை இயற்கை’ எனவே இவை வேற்றுமை அல்ல ஆயின . ஆகவே , உரிக்குறை என்பதற்கு உரியும் உழக்கும் எனப் பொருளாயிற்று !”
ஐயம் தீர்ந்ததா ?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (204)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘குறை’ என்ற சொல் , அளவுப் பெயர்களுடன் சேரும்போது எப்படிப் புணரும் என்று இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !
அதே ‘குறை’ ,குற்றியலுகரச் சொற்களுடன் புணரும்போது என்ன விதி என்று அடுத்துக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“குற்றிய லுகரக் கின்னே சாரியை” (தொகை . 25)
குற்றியலுகரக்கு – குற்றியலுகரச் சொற்களுக்கு
‘அளவுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாக இருந்தால் , ‘இன்’ சாரியை
சேரும் ’ – இதுதான் கருத்து !
இதன்படி –
1 . உழக்கு + குறை = உழக்குக் குறை ×
உழக்கு + குறை = உழக்கிற் குறை ×
உழக்கு + குறை = உழக்கின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(உழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; உழக்கின் குறை – ‘உழக்கும் குறையும்’ என்பது பொருள் !
உழக்கிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘உழக்கில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
2 . கழஞ்சு + குறை = கழஞ்சுக் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சிற் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(கழஞ்சு – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; கழஞ்சின் குறை – ‘கழஞ்சும் குறையும் ’என்பது பொருள் !
கழஞ்சிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்குக் ‘கழஞ்சில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
3 . ஒன்று + குறை = ஒன்றுக் குறை ×
ஒன்று + குறை = ஒன்றிற் குறை ×
ஒன்று + குறை = ஒன்றின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(ஒன்று – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; ஒன்றின் குறை – ‘ஒன்றும் குறையும் ’என்பது பொருள் !
ஒன்றிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘ஒன்றில் குறை’ என்பது பொருள் !இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
இங்கு வந்துள்ள புணர்ச்சி நுட்பங்கள் தமிழ் இலக்கண உலகில் குறிப்பிடத் தக்கவை !
இந்த நுணுக்கங்கள் நச்சினார்க்கினியரை அடியொற்றியவையாம் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (205)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் ‘குறை’ என்ற சொல் அளவுப் பெயர்களுடன் எப்படிப் புணரும் என்று காட்டிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது –
“அத்திடை வரூஉம் கலமென் னளவே” (தொகை . 26)
அத்து – சாரியையாகிய ‘அத்து’ .
‘கலம்’ என்னும் சொல் அளவுப் பெயர்களுடன் புணரும்போது அத்துச் சாரியை வரும் என்பது தொல்காப்பியம் !
கலம் + குறை = கலத்துக் குறை (அத்து – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)
கலத்துக் குறை – ‘கலமும் குறையும் ’ என்று பொருள்படுவதால் ‘அல்வழிப் புணர்ச்சி’ ! வேறு ஒன்றுமில்லை !
தொல்காப்பியத்தில் ‘கலம்’ என்ற சொல்தான் வந்துள்ளது ! இங்கே இளம்பூரணர் என்ன எழுதுகிறாரென்றால் , ‘கலன்’ என்றசொல் வந்திருந்தாலும் ‘அத்தே வற்றே’ என்ற நூற்பாப்படி [புணரியல் 31] ‘கலத்துக் குறை’ என்றுதான் வரும் என்கிறார் !
அப்படியானால் , நூற்பாவில் ‘கலனென் னளவே’ என்று போட்டிருக்கலாமே ?
இதற்கு இளம்பூரணரின் விடை – செய்யுள் இன்பம் நோக்கி அவ்வாறு ‘கலம்’ என்ற சொல்லை ஆண்டிருக்கவேண்டும் !
நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் செய்யுள் இன்பம் வேண்டும் என்ற இளம்பூரணர் காட்டும் செய்யுள் கோட்பாடு நமக்கு விளங்குகிறது !

தொடத் தொடத் தொல்காப்பியம் (206)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் நாம் காணவேண்டிய அடுத்த நூற்பா ! :-
“பனையெ னளவுங் காவெ னிறையும்
நினையுங் காலை யின்னொடு சிவணும்” (தொகை . 27)
‘பனை’ , ‘ கா’ – இரு அளவுப் பெயர்ச் சொற்களும் (Nouns denoting measurements) ‘குறை’ எனும் சொல்லோடு புணரவேண்டுமானால் , ‘இன்’ சாரியை இடையே வரும் ! – இதுதான் தொல்காப்பியக் கருத்து !
இதன்படி –
1 . பனை + குறை = பனையின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பனையின் குறை – ‘பனையும் குறையும்’ ; இப்பொருள் உள்ளதால்தான் நம்மால் ‘அல்வழிப் புணர்ச்சி’ எனக் கூற முடிகிறது !
2 . கா + குறை = காவின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
காவின் குறை – ‘காவும் குறையும்’ ; உம்மைத் தொகை .
‘பனை’யை அளவுப் பெயர் என்றும் , ‘கா’வை நிறைப் பெயர் என்றும் இளம்பூரணர் தெரிவிக்கிறார் !
இந்த நூற்பாவுக்கும் விதிவிலக்குக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-
“ ‘நினையுங் காலை ’ என்றதனான் , வல்லெழுத்துப் பேறும் சிறுபான்மை கொள்க ! ‘பனைக் குறை’ , ‘காக் குறை’ என வரும் !” .
இளம்பூரணரின் இவ் விதி விலக்குப் படி –
1 . பனை + குறை = பனைக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
பனைக் குறை – உம்மைத் தொகை .
2 . கா + குறை = காக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
காக் குறை – உம்மைத் தொகை .
அது சரி ! ‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ என முன்னே (தொகை . 25) கூறினாரே , அங்கேயே பனை , கா இரண்டும்கூட இன் சாரியை பெறும் எனச் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே ?
நல்ல கேள்வி !
விடை – மனப்பாடத்திற்காக அவ்வாறு செய்தார் !
‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ – என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட மாணவன் ஒப்பிக்கவேண்டும் ! அதில் வேறொன்றைச் சேர்க்கக் கூடாது !
தொல்காப்பியக் கட்டமைப்பே (Structure of Tholkappiyam) இப்படித்தான் செல்கிறது !அஃதாவது பழந்தமிழ்க் கல்விமுறையை (Education System of Ancient Tamils) ஒட்டிச் செல்கிறது !
பனை- ‘தினை ’ என்பதற்கு எதிர்நிலையாக இச் சொல் வந்துள்ளது என்பர் !
1கா = 100 பலம் = 3500 கிராம் .

தொடத் தொடத் தொல்காப்பியம் (207)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அளவு , நிறைப் பெயர் சொற்கள் தொடர்பாக எல்லாவற்றையும் தொல்காப்பியர் கூறிவிட்டார் என நாம் நினைக்கும் நேரத்தில் ‘இருங்கள் !இருங்கள்! கடைசியாக ஒன்று சொல்லவேண்டியுள்ளது ! ’ என்று கூறுவதுபோல இந்த நூற்பாவைத் தருகிறார் ! :-
“அளவிற்கு நிரையிற்கு மொழிமுத லாகி
உளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே
அவைதாம்
கசதப வென்றா நமவ வென்றா
அகர உகரமோ டவையென மொழிப” (தொகை . 28)
அளவு , நிறைப் பெயர்ச் சொற்கள் இன்னின்ன முதல் எழுத்துகளைக் கொண்டுதான் எழுதப்படும் என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் !
அந்த முதல் எழுத்துகள் – க , ச , த , ப , ந , ம , வ , அ , உ (9)
க – முதலாகச் சொல்லியிருந்தாலும் இவற்றின் வரிசை எழுத்துகளையும் நாம் கொள்ளவேண்டும் !
எடுத்துக்காட்டாக - ‘க’ முதல் எழுத்தாக வரலாம் என்று சொல்லியுள்ளதால் , ‘கா’ , ‘கீ’ என்று தொடங்கும் எழுத்துகளும் வரலாம் என்பதே பொருளாம் !
எடுத்துக்காட்டுகள் –
1 . கலம் ; கழஞ்சு
2 . சாடி ; சீரகம்
3 . தூத ; தொடி
4 . பானை ; பலம்
5 . நாழி ; நிறை
6 . மண்டை ; மா
7 . வட்டில் ; வரை
8 . அகல் ; அந்தை
9 . உழக்கு
- இவற்றில் 1 . முகத்தல் அளவைப் பெயர்கள் : கலம் , சாடி , தூதை , பானை , நாழி , மண்டை , வட்டி , அகல் , உழக்கு .
2 . நிறுத்தல் அளவைப் பெயர்கள் : கழஞ்சு , சீரகம் , தொடி , பலம் ,
நிறை , மா , வரை , அந்தை .
மேலே சொல்லப்பட்ட எழுத்துகள் தவிர வேறு சில எழுத்துகளையும் கொண்டு அளவைப் பெயர்கள் வரும் என்கிறார் இளம்பூரணர் ! – இம்மி , ஓரடை , ஓராடை .
மேலே வந்துள்ள ‘அந்தை’ என்பதும் ‘ஐந்தை’ என்பதும் ஒன்றுதான் என்றும் இவை ‘சிறுவெண்கடு’கைக் குறிக்கும் என்றும் குறித்துளர் !
இளம்பூரணர் குறித்த ‘இம்மி’, வழக்கிலும் உள்ளதை நோக்கலாம் ! ‘என்ன ,
இம்மிக் கணக்குப் பார்க்கிறியே ?’ என்று கூறக் கேட்கலாம் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (208)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபின் இறுதிக்கட்டத்தில் நிற்கிறோம் !
‘சரி! நூற்பாக்களில் பல புணர்ச்சி விதிகளைச் சொன்னீர்கள் ! இந்த விதிகளின்படி வராவிட்டால் ? அப்போ என்ன செய்வது ?’ – ஒரு மாணவன் தொல்காப்பியரைக் கேட்டிருக்கிறான் !
அப்போது தொல்காப்பியர் எழுதியது ! :-
“ஈரியல் மருங்கி னிவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே” ! (தொகை . 29)
‘ஈரியல் மருங்கின் ’ – உயிரெழுத்தை ஈற்றிலே கொண்ட சொல்லானாலும் , மெய்யெழுத்தை ஈற்றிலே கொண்ட சொல்லானாலும் ,
‘வழக்கொடு சிவணி ஒத்தவை உரிய’ - சொல்லப்பட்ட புணர்ச்சி இலக்கணங்களுக்கு ஏற்ப வராவிடில் , வழக்கைப் பாருங்கள் ! வழக்கு எப்படியோ அப்படியே கொள்ளுங்கள் !
இந் நூற்பா உரையில் இளம்பூரணரும் ,நச்சினார்க்கினியரும் இன்னின்ன நூற்பாக்களிலிருந்து , இந்த இந்தப் புணர்ச்சிகளை எடுத்துக்கொள்க என்று ஒரு பட்டியல் தருகின்றனர் ! :-
1 . ‘விள ஞான்றது’ – இங்கே நிலைமொழி – பெயர்ச் சொல் ! இப்புணர்ச்சி , தொகை மரபு நூற்பா இரண்டின்படி வந்தது !
ஆனால் ‘ஞான்ற ஞான்றது’ என்று புறநானூற்று வழக்கில் உள்ளதே ? இங்கே ‘ஞான்ற’ என்பது பெயர்ச்ச்சொல் இல்லையே? வினை ஆயிற்றே ?– நம் வினா!
‘ அப்படி இருந்தாலும் , வழக்கில் உள்ளதால், இதே நுற்பாவின் (தொகை . 2) நீட்சியாகக் கொள்க!’ – இளம்பூரணர் விடை !
2 . மண் + கொற்றா = மண்ணு கொற்றா √
மண் + கொற்றா = மண்ணுக் கொற்றா √
மன் + கொற்றா = மன்னு கொற்றா √
மன் + கொற்றா = மன்னுக் கொற்றா √
உள் + கொற்றா = உள்ளு கொற்றா √
உள் + கொற்றா = உள்ளுக் கொற்றா √
கொல் + கொற்றா = கொல்லு கொற்றா √
கொல் + கொற்றா = கொல்லுக் கொற்றா √
- இந்தப் புணர்ச்சிகளையெல்லாம் தொகை மரபு 10இன்படிக் ( ‘ஔவென வரூஉம் ...’)கொள்க என்பவர் நச்சினார்க்கினியர் !
3 . ‘காவிக்கண் ’ , ‘குவளைக் கண்’ – இரண்டுமே வேற்றுமைப் புணர்ச்சிகளாக இருந்தாலும் , அல்வழிப் புணர்ச்சிக்கு ஓதிய ( ‘வேற்றுமை அல்வழி ....’ தொகை . 16) நூற்பாவிலிருந்து இதற்கு இலக்கணம் கொள்க என்பவர் இளம்பூரணர் !
நச்சினார்க்கினியர் சில வழக்குகளைச் சொல்லி , ‘இந்தப் புணர்ச்சிகளையெல்லாம் இந்த (தொகை . 29) நூற்பாவையே அடிபடையாகக்கொண்டு ஏற்றுக்கொள்க !’ என்கிறார் ! அப்படி நச்சினார்க்கினியர் கூறிய புணர்ச்சிகள் :-
1 . பதக்கு + நானாழி = பதக்கே நானாழி ×
பதக்கு + நானாழி = பதக்க நானாழி √
2 . பதக்கு + முந்நாழி = பதக்கே முந்நாழி ×
பதக்கு + முந்நாழி = பதக்க முந்நாழி √
3 .சீரகம் + அரை = சீரகமரை ×
சீரகம் + அரை = சீரகரை √
4 . ஒருமா + அரை = ஒருமாவரை ×
ஒருமா + அரை = ஒருமாரை √
5 . கலம் + அரை = கலமரை ×
கலம் + அரை = கலரை √
6 . நாகம் + அரை = நாகமரை ×
நாகம் + அரை = நாகரை √
7 . நில் +கொற்றா = நில் கொற்றா √
நில் +கொற்றா = நிற் கொற்றா √
வழக்கிற்கு நல்ல மதிப்புத் தருவது தொல்காப்பியக் கோட்பாடு (Theory of Tholkappiyam)!

தொடத் தொடத் தொல்காப்பியம் (209)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபின் கடைசி நூற்பாவுக்கு வந்துள்ளோம் ! :-
“பலரறி சொன்முன் யாவ ரென்னும்
பெயரிடை வகரங் கெடுதலு மேனை
ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலு மிரண்டும்
மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே” (தொகை . 30)
பலரறி சொல் - ‘அவர்’.
‘யாவர் என்னும் பெயரிடை’ – ‘யாவர்’ என்ற சொல் வந்து புணர்ந்தால் ,
‘வகரம் கெடுதலும்’ – இடையில் உள்ள ‘வ’ கெடும் !
ஒன்றறி சொல் – ‘அது’ .
‘ஒன்றறி சொல் முன் யாது என் வினா இடை’ – ‘அது’ என்ற சொல் முன் , ‘யாது’ எனும் வினாச்சொல் வந்தால்,
‘ஒன்றிய வகரம் வருதலும்’ – வகரம் இடையே வரும் !
‘இரண்டும் மருவின் பாத்தியில் திரியும்’ – இப்படி இரண்டும் புணர்வது ‘மரூஉ’ ஆகும் !
அஃதாவது –
அவர் + யாவர் = அவர் யார்? ( ‘யாவர்’ → ‘யார்’ என வந்தது மரூஉ !)
(அல்வழிப் புணர்ச்சி)
அது + யாது = அது யாவது ? ( ‘யாது’ → ‘யாவது’ என வந்தது மரூஉ !)
(அல்வழிப் புணர்ச்சி)
இளம்பூரணர் , ‘யார்’ , ‘யாவது’ இரண்டும் நிலைமொழியாக
நிற்கும் போதும் இதே வடிவில் நிற்கலாம் என்கிறார் –
யாவர்யாவர் + கண்டு = யார்யார்க் கண்டு (வேற்றுமைப் புணர்ச்சி)
யாது + நன்றென = யாவது நன்றென (அல்வழிப் புணர்ச்சி)
யாவர் + அவர் = யாரவர் (அல்வழிப் புணர்ச்சி)
யாது + அது = யாவதது (அல்வழிப் புணர்ச்சி)
‘மரூஉ’ பற்றிப் பார்த்தோம் !
மரூஉ எப்படி உண்டாகிறது?
வழக்கால் (Usage) உண்டாகிறது !
மக்கள் பேசும்போது உற்றுக் கவனியுங்கள் ! பல மரூஉக்களைக் காணலாம் ! சிலவற்றைத்தான் தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் சொல்லியுள்ளார்கள் ! மீதியை நாம்தான் காணவேண்டும் !
மரூஉவில் என்ன வேடிக்கையென்றால் , ஏற்கனவே ஒரு சொல் மருவித்தான் நம்மிடம் நின்றுகொண்டிருக்கும் ! அது மேலும் மருவும் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (210)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
சென்ற ஆய்வில் தொகை மரபை முடித்தோம் !
அடுத்தது - உருபியல் !
இது வேற்றுமை உருபு இத்தனை என்றெல்லாம் கூறும் இயல்
அல்ல !
வேற்றுமை உருபுகள் வந்துபெயர்ச் சொற்களோடு புணர்ந்தால் சாரியை முதலியன எப்படி இடையே வரும் என்பதை விளக்கும் இயல் இது !
முதலாவது சூத்திரம் ! –
“அஆ உஊ ஏஔ வென்னும்
அப்பா லாற னிலைமொழி முன்னர்
வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை” (உருபு . 1)
அஃதாவது –
பெயர்ச் சொற்கள் , அ , ஆ , உ , ஊ , ஏ , ஔ எனும் எழுத்துகளை ஈற்றிலே
பெற்றுவந்தால் , அப் பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபு வந்து புணரும்போது ,
‘இன்’ சாரியை இடையே வரும் !
இதற்கு நச்சினார்க்கினியர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கி எழுதலாம் ! :-
1 . விள + ஐ = விளவினை ( இன் – சாரியை ; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(விள – அகர ஈற்றுச் சொல்)
2. விள + ஒடு = விளவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . விள + கு = விளவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
4 . விள + அது = விளவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
5. விள + கண் = விளவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
1 . பலா + ஐ = பலாவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(பலா – ஆகார ஈற்றுச் சொல்)
2 . பலா + ஒடு = பலாவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
3. பலா + கு = பலாவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
4. பலா + அது = பலாவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
5 . பலா + கண் = பலாவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
1 . கடு + ஐ = கடுவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடு – உகர ஈற்றுச் சொல்)
2 . கடு + ஒடு = கடுவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
3. கடு + கு = கடுவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
4. கடு + அது = கடுவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
5 . கடு + கண் = கடுவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
1 . தழூஉ + ஐ = தழூஉ வினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(தழூஉ – உகர அளபெடை பெற்றாலும், இச் சொல் ஊகார
ஈற்றுச் சொல்லாகவே கருதப்படும் !)
2 . தழூஉ + ஒடு = தழூஉவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
3. தழூஉ + கு = தழூஉவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
வேற்றுமைப் புணர்ச்சி)
4. தழூஉ + அது = தழூஉவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
5 . தழூஉ + கண் = தழூஉவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(தழூஉ – குரவைக் கூத்து)
1 . சே + ஐ = சேவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சே – ஏகார ஈற்றுச் சொல்)
2 . சே + ஒடு = சேவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
3. சே + கு = சேவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
4. சே + அது = சேவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
5 . சே + கண் = சேவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
1 . வௌ + ஐ = வௌவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(வௌ – ஔகார ஈற்றுச் சொல்)
2 . வௌ + ஒடு = வௌவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
3. வௌ + கு = வௌவிற்கு ( இன் - சாரியை ;வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
4. வௌ + அது = வௌவினது ( இன் - சாரியை ;வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
5 . வௌ + கண் = வௌவின்கண் ( இன் - சாரியை ;வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் வேற்றுமை உருபுகளை வருமாறு குறிக்கலாம் ! :-
1 . ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு
2 . ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு
3 . கு – நான்காம் வேற்றுமை உருபு
4 . அது – ஆறாம் வேற்றுமை உருபு
5 . கண் – ஏழாம் வேற்றுமை உருபு
மேலே வந்ததே இன் சாரியை , அது ஏன் வரவேண்டும் ?
அதிலே ஏதாவது மொழி நுட்பம் உள்ளதா ?
உள்ளது !
முதலில் ‘விள’வை எடுத்துக்கொள்வோம் !
‘விள + ஐ = விளவை ’ என வரலாம்தான் ! பொருளும் மாறாது !
‘விள + ஒடு = விளவொடு’ என வரலாம்தான் ! பொருளும் மாறாது !
‘விள + கு = விளக்கு’ – வரமுடியாதே? பொருள் மாறுகிறதே ?
இந்த நேரத்தில்தான் சாரியை உதவிக்கு வருகிறது !
‘இன்’ சாரியை போட்டுப் பாருங்கள் ! ‘விள + இன் + கு = விளவிற்கு’
- பொருள் மாறவில்லை !
இப்போது புரிகிறதா சாரியை இரகசியம் ?

- Sponsored content
Page 27 of 84 • 1 ... 15 ... 26, 27, 28 ... 55 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 84