புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
20 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 25 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 25 of 84 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 54 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 19, 2013 8:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (183)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஞ , ந , ம , ய , வ – ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களும் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் , 24 எழுத்துகளை ஈறாகக் கொண்ட  வெவ்வேறு நிலைமொழிகளுடன் புணர்ந்தால் , அப் புணர்ச்சி இயல்பான புணர்ச்சியாகும் !

இதுதான் தொகைமரபில் அடுத்து நாம் காணும் நூற்பாவின் கருத்து ! அந் நூற்பா ! :-

“ஞநம யவவெனு முதலாகு மொழியும்
உயிர்முத லாகிய மொழியு முளப்பட
அன்றி யனைத்து மெல்லா வழியும்
நின்ற சொன்மு  னியல்பா கும்மே”   (தொகை . 2)

‘எல்லா வழியும்’ – வேற்றுமைப் புணர்ச்சியிலும் , அல்வழிப் புணர்ச்சியிலும் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

விள + ஞான்றது = விள ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + ஞாற்சி = விள ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + நீண்டது = விள நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
 விள + நீட்சி = விள நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

  விள + மாண்டது = விள மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + மாட்சி = விள மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + யாது = விள யாது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + யாப்பு = விள யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + வலிது = விள வலிது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + வலிமை = விள வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + அடைந்தது = விள வடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய் ;   உடம்படு மெய் வந்தாலும் அஃது இயல்புப் புணர்ச்சியே !)  
விள + அடைவு = விள வடைவு (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + ஆடிற்று = விள வாடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஆட்டம் = விள வாட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + இடிந்தது = விள விடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + இடிவு = விள விடிவு (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + ஈரிற்று = விள வீரிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஈட்டம் = விள வீட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + உடைந்தது = விள வுடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + உடைபு = விள வுடைபு (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + ஊறிற்று = விள வூறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஊற்றம் = விள வூற்றம் (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + எழுந்தது = விள வெழுந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + எழு = விள வெழு (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + ஏறிற்று = விள வேறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஏணி = விள வேணி (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + ஐது = விள வைது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஐயம் = விள வையம் (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + ஒடிந்தது = விள வொடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஒடுக்கம் = விள வொடுக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)

 விள + ஓடிற்று = விள வோடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஓக்கம் = விள வோக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)

   விள + ஔவியத்தது = விள வவ்வியத்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஔவியம் = விள வவ்வியம் (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + நுந்தையது = விள நுந்தையது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + நுந்தை = விள நுந்தை (வேற்றுமைப் புணர்ச்சி)  

இதுவரை ‘விள’ என்ற உயிரீற்றுச் சொல்லுடன் , தொல்காப்பியர் கூறிய ஞ , ந , ம , ய , வ  , 12 உயிர்கள் , மொழிமுதல் குற்றியலுகரம் ‘ நு’ ஆகியவற்றைச் சொல் முதலில் பெற்ற சொற்கள் புணர்ந்ததைப் பார்த்தோம் !

இனி , ‘தாழ்’ என்ற மெய்யீற்றுச் சொல்லுடன் இவை புணரும் வகை ! :-

தாழ் + ஞான்றது = தாழ் ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + ஞாற்சி = தாழ் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

  தாழ் + நீண்டது = தாழ் நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
 தாழ் + நீட்சி = தாழ் நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

  தாழ் + மாண்டது = தாழ் மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + மாட்சி = தாழ் மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

தாழ் + யாது = தாழ் யாது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + யாப்பு = தாழ் யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

தாழ் + வலிது = தாழ் வலிது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + வலிமை = தாழ் வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

தாழ் + அடைந்தது = தாழடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) ( மெய் மீது உயிர் ஏறினாலும்  அஃது இயல்புப் புணர்ச்சியே !)  
தாழ் + அடைவு = தாழடைவு (வேற்றுமைப் புணர்ச்சி)

  தாழ் + ஆடிற்று = தாழாடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஆட்டம் = தாழாட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)  (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + இடிந்தது = தாழிடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + இடிவு = தாழிடிவு (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஈரிற்று = தாழீரிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஈட்டம் = தாழீட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)    

தாழ் + உடைந்தது = தாழுடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + உடைபு = தாழுடைபு (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

  தாழ் + ஊறிற்று = தாழூறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஊற்றம் = தாழூற்றம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

  தாழ் + எழுந்தது = தாழெழுந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + எழு = தாழெழு (வேற்றுமைப் புணர்ச்சி)   (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஏறிற்று = தாழேறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஏணி = தாழேணி (வேற்றுமைப் புணர்ச்சி)  (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஐது = தாழைது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஐயம் = தாழையம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஒடிந்தது = தாழொடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஒடுக்கம் = தாழொடுக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

 தாழ் + ஓடிற்று = தாழோடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஓக்கம் = தாழோக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

   தாழ் + ஔவியத்தது = தாழௌவியத்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஔவியம் = தாழௌவியம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + நுந்தையது = தாழ் நுந்தையது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + நுந்தை = தாழ் நுந்தை (வேற்றுமைப் புணர்ச்சி)  

இயல்புப் புணர்ச்சி ஒரு தொகுப்பாக வந்துள்ளது அல்லவா? இதனால்தான் இது தொகை மரபு !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 20, 2013 10:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (184)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  இயல்புப் புணர்ச்சி பற்றி முன்னே பார்த்தோம் !

அதற்கு ஒரு விதி விலக்கு !

அஃதாவது , சில மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , இயல்புப் புணர்ச்சி ஏற்படலாம், ஏற்படாமல் ஒற்று மிகவும் செய்யலாம்!

கதிர் + ஞெரி = கதிர் ஞெரி √  (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கதிர் + ஞெரி = கதிர்ஞ் ஞெரி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (ஞ் - மிகுந்தது)

கதிர் + நுனி = கதிர் நுனி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கதிர் + நுனி = கதிர்ந் நுனி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (ந் - மிகுந்தது)

கதிர் + முரி = கதிர் முரி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கதிர் + முரி = கதிர்ம் முரி  √ (வேற்றுமைப் புணர்ச்சி) (ம் - மிகுந்தது)

ஒற்று மிகுந்தும் , ஒற்று மிகாதும் மேலே புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?
இவ்வாறு இருவாறாகப் புணர்வதே – ‘உறழ்ச்சி’!

இளம்பூரணர் ஒரு செய்தியை இது தொடர்பாகத் தருகிறார் !

அஃதாவது , ஓரெழுத்து , ஈரெழுத்துச் சொற்கள் சிலவற்றோடு , மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணரும்போது , ஒற்று கட்டாயம் மிகவேண்டும் என்கிறார் இளம்பூரணர் !

இதற்கு அவர் தந்த காட்டுகள் :-

கை + ஞெரித்தார் = கைஞ் ஞெரித்தார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ஞ் - மிகுந்தது)
=  கை ஞெரித்தார் ×

கை + நீட்டினார் = கைந் நீட்டினார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ந் - மிகுந்தது)
=  கை நீட்டினார் ×

கை + மடித்தார் = கைம் மடித்தார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ம் - மிகுந்தது)
=  கை மடித்தார் ×

மெய் + ஞானம் = மெய்ஞ் ஞானம் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ஞ் - மிகுந்தது)
=  மெய் ஞானம் ×

மெய் + நூல் = மெய்ந் நூல் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ந் - மிகுந்தது)
=  மெய் நூல் ×

மெய் + மறந்தார் = மெய்ம் மறந்தார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ம் - மிகுந்தது)
=  மெய் மறந்தார் ×


இக் கருத்துகளைத் தாங்கிய தொல்காப்பிய நூற்பா ! :-
“அவற்றுள்
மெல்லெழுத்  தியற்கை யுறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி யிறுதி யான” (தொகை . 3)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 21, 2013 5:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (185)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஞா’வை முதல் எழுத்தாகக் கொண்ட வினைச் சொற்கள் , ‘யா’வை முதல் எழுத்தாகக் கொண்ட வினைச் சொற்கள் ஆகியன ‘ண்’ , ‘ன்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட வினைச் சொற்களோடு புணர்ந்தால்?

இப்படிப் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

மண் + யாத்த = மண் யாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
மண் + ஞாத்த = மண் ஞாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

பொன் + யாத்த = பொன் யாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
பொன் + ஞாத்த = பொன் ஞாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

இதற்கு நூற்பா !:-
“ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய வென்மனார் புலவர்” (தொகை . 4)

இதன் உரையில் நச்சினார்க்கினியர் , ‘யா , ஞா ஆகிய சொற்களோடு என்றால் , வினைச்சொற்களோடுதான் ! பெயர்ச் சொற்களுக்குப் பொருந்தாது !’என்கிறார் !

இதன்படி –

மண் + யாமை = மண் யாமை × (யாமை – பெயர்ச் சொல்)
மண் + ஞாமை = மண் ஞாமை × (ஞாமை – பெயர்ச் சொல்)

இளம்பூரணர் இன்னும் ஓர் இலக்கண நுட்பம் தருகிறார் ! – “யா முதன் மொழிக்கண் ஞா வருமாறு கொள்க!”

ஒன்றும் விளங்கவில்லை !
இதற்கு நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார் !- “ஞாச் சென்ற வழி யாச் செல்லாது, யாச் சென்ற வழி ஞாச் செல்லும் என்று கொள்க !”

சற்று விளங்குவது போல உள்ளது , ஆனால் விளங்கவில்லை !

சூத்திரம் மட்டுமல்ல அந்தக்கால உரைகளும் இரத்தினச் சுருக்கமாகவே இருந்தன என்பதற்கு இவ்விடங்கள் சன்றுகள் !

தொடர்ந்து நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை நாடுவோம் ! – “மண் ஞான்றது என்றவழி , மண் யான்றது என்று வாராமை உணர்க !”

இப்போது விளங்கிவிட்டது !

அஃதாவது –
மண் + ஞான்றது = மண் ஞான்றது √ (அல்வழிப் புணர்ச்சி)

இதைப்போல , ‘மண் + யான்றது = மண் யான்றது’ (அல்வழிப் புணர்ச்சி) என்றுதானே வரவெண்டும் ? ஆனால் ‘வராது’என்கிறார்கள் உரையாசிரியர்கள் !

அஃதாவது , ‘ஞா’வை முதலாகக் கொண்ட சொல் , ‘ண்’ , ‘ன்’முன் சேர்ந்து புணர்வதுபோல , ‘யா’வை முதலாகக் கொண்ட சொல் புணரும் என்று நீங்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்பதே கருத்து !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 9:06 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (186)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ண்’ , ‘ன்’  ஆகிய இரு  ஈறுகளைக் கொண்ட சொற்புணர்ச்சி தொடர்கிறது !

ண் , ன்  - ஈறுகளைக் கொண்ட பெயர்ச் சொற்களை நிறுத்தி , மொழிக்கு முதலாக வரக்கூடிய எல்லா எழுத்துகளையும்  முதலாகக் கொண்ட சொற்களைப் புணர்த்தினால் , அல்வழிப் புணர்ச்சியில் ,  ‘ண்’ , ‘ன்’ திரிபு பெறாது இயல்பாகப் புணரும் ! :-

”மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும்
வருவழி நின்ற வாயிரு  புள்ளியும்
வேற்றுமை  யல்வழித்  திரிபிட னிலவே” (தொகை . 5)

 ‘மொழிமுதல் ஆகும்  எல்லா எழுத்தும்
வரும்வழி’ – சொல்லின் முதல் எழுத்தாக வரத்தக்க எல்லா எழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணரும்போது,
 ‘நின்ற ஆயிரு புள்ளி’ – ‘ண்’ , ‘ன்’ ஆகியவற்றை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்கள் ,
‘வேற்றுமை  யல்வழித்  திரிபிடன் இலவே’ – அல்வழிப் புணர்ச்சியில் , திரிதல் இலாது , இயல்பாகப் புணரும் !

உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

மண் + கடிது = மட் கடிது ×
மண் + கடிது = மண் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + கடிது = பொற் கடிது ×
பொன் + கடிது = பொன் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + சிறிது = மட்  சிறிது ×
மண் + சிறிது = மண் சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + சிறிது = பொற் சிறிது ×
பொன் + சிறிது = பொன் சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + தீது = மட்  டீது ×
மண் + தீது = மண் டீது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + தீது = பொற் றீது ×
பொன் + தீது = பொன் தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + பெரிது = மட்  பெரிது ×
மண் + பெரிது = மண் பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + பெரிது = பொற்  பெரிது ×
பொன் + பெரிது = பொன் பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + நெகிழ்ந்தது = மண்ணெகிழ்ந்தது √  (அல்வழிப் புணர்ச்சி)



பொன் + நெகிழ்ந்தது = பொன்னெகிழ்ந்தது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + நீண்டது = மண்ணீண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

பொன் + நீண்டது = பொன்னீண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + மாண்டது = மண் மாண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

பொன் + மாண்டது = பொன் மாண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + யாது = மண் யாது √  (அல்வழிப் புணர்ச்சி)

பொன் + யாது = பொன் யாது √  (அல்வழிப் புணர்ச்சி)
மண் + வலிது = மண் வலிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + வலிது = பொன் வலிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + நுந்தையது = மண்ணுந்தையது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + நுந்தையது = பொன்னுந்தையது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + அடைந்தது = மண் அடைந்தது ×
மண் + அடைந்தது = மண்ணடைந்தது  √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + அடைந்தது = பொன் அடைந்தது   ×
பொன் + அடைந்தது = பொன்னடைந்தது √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஆயிற்று = மண் ஆயிற்று ×
மண் + ஆயிற்று = மண்ணாயிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஆயிற்று = பொன் ஆயிற்று   ×
பொன் + ஆயிற்று = பொன்னாயிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + இல்லை = மண் இல்லை ×
மண் + இல்லை = மண்ணில்லை √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + இல்லை = பொன் இல்லை   ×
பொன் + இல்லை = பொன்னில்லை √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஈண்டிற்று = மண் ஈண்டிற்று ×
மண் + ஈண்டிற்று = மண்ணீண்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஈண்டிற்று = பொன் ஈண்டிற்று   ×
பொன் + ஈண்டிற்று = பொன்னீண்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + உண்டு = மண் உண்டு ×
மண் + உண்டு = மண்ணுண்டு √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + உண்டு = பொன் உண்டு   ×
பொன் + உண்டு = பொன்னுண்டு √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஊட்டிற்று = மண் ஊட்டிற்று  ×
மண் + ஊட்டிற்று = மண்ணூட்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஊட்டிற்று = பொன் ஊட்டிற்று   ×
பொன் + ஊட்டிற்று = பொன்னூட்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + எவ்விடத்தது = மண் எவ்விடத்தது ×
மண் + எவ்விடத்தது = மண்ணெவ்விடத்தது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + எவ்விடத்தது = பொன் எவ்விடத்தது   ×
பொன் + எவ்விடத்தது = பொன்னெவ்விடத்தது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஏறிற்று = மண் ஏறிற்று ×
மண் + ஏறிற்று = மண்ணேறிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஏறிற்று = பொன் ஏறிற்று   ×
பொன் + ஏறிற்று = பொன்னேறிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஐது = மண் ஐது ×
மண் + ஐது = மண்ணைது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஐது = பொன் ஐது   ×
பொன் + ஐது = பொன்னைது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஒழுகிற்று = மண் ஒழுகிற்று ×
மண் + ஒழுகிற்று = மண்ணொழுகிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஒழுகிற்று = பொன் ஒழுகிற்று   ×
பொன் + ஒழுகிற்று = பொன்னொழுகிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஓங்கிற்று = மண் ஓங்கிற்று ×
மண் + ஓங்கிற்று = மண்ணோங்கிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஓங்கிற்று = பொன் ஓங்கிற்று   ×
பொன் + ஓங்கிற்று = பொன்னோங்கிற்று  √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஔவியது = மண் ஔவியது ×
மண் + ஔவியது = மண்ணௌவியது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஔவியது = பொன் ஔவியது   ×
பொன் + ஔவியது = பொன்னௌவியது √  (அல்வழிப் புணர்ச்சி)

இறுதியாக இளம்பூரணரின் ஒரு விதிவிலக்கு !

இளம்பூரணர் – ‘ண்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றுக்குச்  சிறுபான்மை திரிபு ஏற்படுவதும் உண்டு என்கிறார் !

சாண் + கோல் = சாண் கோல்  √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
சாண் + கோல் = சாட் கோல்  √  (அல்வழிப் புணர்ச்சி) (ண் - திரிந்தது)

மேலே தொகுத்துக் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறாகவும் உள்ளே , வேறு இயல்களில் ,சில புணர்ச்சி விதிவிலக்குகள் வரலாம் ! மொத்தமாகத் தொகுத்துக் கூறுவது மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வதற்கே !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 9:16 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (187)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முந்தைய ஆய்வில் , அல்வழிப் புணர்ச்சியில் , நிலைமொழி ஈறுகள் மாற்றமின்றிப் புணர்ந்ததைப் பார்த்தோம் !

தொடர்ந்து , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தாலும் , வல்லின எழுத்து அல்லாத எழுத்துகள்  சொல்லின் முதலிலே நின்று  ‘ண்’ , ‘ன்’ ஈறுகளைக் கொண்ட சொற்களோடு புணர்ந்தால் , இவ்வீறுகளில் திரிபு இராது என்கிறார் தொல்காப்பியர் ! :-

“வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்  தல்வழி
மேற்கூ  றியற்கை  யாவயி   னான” (தொகை . 6)

’மேற்கூறு இயற்கை’ – நிலைமொழித் திரிபின்மையைக் குறிக்கும் !
தொகை மரபு நூற்பா 5இல் இதற்கே விதி கூறப்பட்டது !

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

மண் + ஞாற்சி = மண் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + ஞாற்சி = பொன் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + நீட்சி = மண்ணீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + நீட்சி = பொன்னீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + மாட்சி = மண்மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + மாட்சி = பொன்மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + யாப்பு = மண்யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + யாப்பு = பொன்யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + வன்மை = மண்வன்மை (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + வன்மை = பொன்வன்மை (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + அழகு = மண்ணழகு (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + அழகு = பொன்னழகு (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + ஆக்கம் = மண்ணாக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + ஆக்கம் = பொன்னாக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + இன்மை = மண்ணின்மை (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + இன்மை = பொன்னின்மை (வேற்றுமைப் புணர்ச்சி)

எந்த இடத்தும் நிலைமொழி ஈற்றிலே மாற்றம் எதுவும் இல்லை என்பதைக் காண்க !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 11:45 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (188)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சொல் + நன்று = சொன்னன்று
மான் + நன்று = மானன்று
- இந்தப் புணர்ச்சிகளுக்குத் தொல்காப்பியர் விதி உள்ளதா?

எங்கே உள்ளது ?

இதே தொகைமரபில்தான் !

இதோ அவ் விதி ! :-

“லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தந  வெனவரிற் றனவா கும்மே ” (தொகை . 7)

‘ல ன என வரும் புள்ளி முன்னர்’ – ‘ல்’ ,’ன்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட சொற்களின் முன்னர்’ ,
‘த ந என வரின்’ – ‘த’ , ‘ந’ ஆகிய எழுத்துகளை முதற்கண் கொண்ட சொற்கள் வந்தால் ,
‘ற ன ஆகும்’ –  ‘த’ , ‘ந’  ஆகியன ‘ ற’ , ‘ ன’  ஆகத் திரியும் !  

எடுத்துக்காட்டுகள் ! : -

கல் + தீது = கஃறீது (அல்வழிப் புணர்ச்சி)
கல் + நன்று = கன்னன்று (அல்வழிப் புணர்ச்சி)
பல் + நன்று = பன்னன்று (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + நன்று = பொன்னன்று (அல்வழிப் புணர்ச்சி)

அடுத்து வரும் புணர்ச்சி :-

“ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்”  (தொகை . 8)

அஃதாவது –
அதே த , ந  இரண்டும் ,  ‘ண்’ , ‘ள்’ ஆகிய எழுத்துகளின் முன் வந்தால் , ட , ண ஆகியனவாக மாறும் ! –
மண் + தீது = மண்டீது ( த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
மண் + நன்று = மண்ணன்று ( ந , ண ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
முள் + தீது = முஃடீது ( த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
முள் + நன்று = முண்ணன்று ( ந , ண ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)

இதே முறையில் ,

பண் + தீது = பண்டீது (த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
கண் + தீது = கண்டீது (த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
பண் + நன்று = பண்ணன்று (ந , ண ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
தாள் + நன்று = தாணன்று (ந , ண  ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)

என வரும் !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 12:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (189)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் நூற்பாக்களில் (தொகை .1-8 ) நிலைமொழிகள் பெயர்ச்சொற்களாக இருந்ததைக் கவனித்திருப்பீர்கள் !

இந்த நூற்பாவில் , வினையை நிலைமொழியாக்கிப் புணர்ச்சி விதி கூறுகிறார் தொல்காப்பியர் !

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் , முன்னிலை வினைச் சொற்களுடன் புணர்ந்தால் கீழ்வருமாறு புணருமாம் ! :-

எறி + கொற்றா = எறிகொற்றா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
எறி + சாத்தா = எறிசாத்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
எறி + தேவா = எறிதேவா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
எறி + பூதா = எறிபூதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

கொணா + கொற்றா = கொணாகொற்றா √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + கொற்றா = கொணாக்கொற்றா× (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

கொணா + சாத்தா = கொணாசாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + சாத்தா = கொணாச்சாத்தா× (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

கொணா + தேவா = கொணாதேவா √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + தேவா = கொணாத்தேவா × (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)


கொணா + பூதா = கொணாபூதா √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + பூதா = கொணாப்பூதா× (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

(கொணா - கொண்டுவா)

எறி , கொணா – ஆகியன முன்னிலை வினைச்சொற்களாகும் .

இயல்புப் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் !

இனி,இளம்பூரணர் சில  உறழ்வுப் புணர்சிகளைக் காட்டுகிறார் !  :-

(1) நட + கொற்றா = நட கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)
நட + கொற்றா = நட க்கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)

( க் – சந்தி தோன்றாதும் தோன்றியும் வந்துள்ளதால் , ‘உறழ்ச்சி’)

(2) ஈர் + கொற்றா = ஈர் கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)
ஈர் + கொற்றா = ஈர்க்கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)

இதற்குத் தொல்காப்பிய விதி ! :-

”உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவு முறழ்பா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே”  (தொகை . 9)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 6:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (190)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

எறி , உண் ,தின் முதலிய முன்னிலை  வினைச்சொற்களின் புணர்ச்சிகளை இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

ஆனால் , முன்னிலை வினையானாலும் , சில சொற்கள் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு புணரும்போது , இயல்பாகவோ உறழ்ந்தோ வராமலும் இருக்கும் என்கிறார் தொல்காப்பியர் !

அப்படிப்பட்ட  முன்னிலை வினைகளை அவர் வாக்கில் கேட்போம் ! :-

“ஔவென வரூஉ  முயிரிறு சொல்லும்
ஞநமவ  வென்னும் புள்ளி யிறுதியுங்
குற்றிய  லுகரத்  திறுதியு முளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே ” (தொகை . 10)

இயல்பாகவும் ஒற்றுப் பெற்றும் புணராத முன்னிலை வினைகள்
, இளம்பூரணரை ஒட்டி –

1 . கௌ கொற்றா ×   ,  கௌக் கொற்றா ×

2 . உரிஞ் கொற்றா ×  ,  உரிஞ்க் கொற்றா ×

3 . பொருந் கொற்றா × , பொருந்க் கொற்றா ×

4 . திரும் கொற்றா × , திரும்க் கொற்றா ×

5 . தெவ் கொற்றா × ,  தெவ்க் கொற்றா ×

ஆனால், இம் முன்னிலை வினைகளை ( ‘கௌ’முதலியன) , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணர்த்துவதற்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார் இளம்பூரணர் !

இளம்பூரணர் கூறிய வழியின்படி –

1 . கௌ + வ் + உ + கொற்றா = கௌவு கொற்றா √(உகரச் சாரியை சேர்க்கப்பட்டுள்ளது ; வ் – உடம்படு மெய்) (அல்வழிப் புணர்ச்சி)
கௌ + வ் + உ + கொற்றா = கௌவுக் கொற்றா √(உகரச் சாரியை சேர்க்கப்பட்டுள்ளது ; க் – சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

இதே முறையில் ,
2 . உரிஞ் + உ + கொற்றா = உரிஞு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
உரிஞ் + உ + கொற்றா = உரிஞுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

3 . பொருந் + உ + கொற்றா = பொருநு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
பொருந் + உ + கொற்றா = பொருநுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

4 . திரும் + உ + கொற்றா = திருமு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
திரும் + உ + கொற்றா = திருமுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

5. தெவ் + உ + கொற்றா = தெவ்வு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
தெவ் + உ + கொற்றா = தெவ்வுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

6 . கூடு + கொற்றா = கூடு கொற்றா √ (குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்டுள்ளதால் , உகரச் சாரியை இயையாது ) √(அல்வழிப் புணர்ச்சி)
கூடு + கொற்றா = கூடுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

தொல்காப்பிய நூற்பாவையும் , இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளையும் ஆழ்ந்து நோக்கினால் , ஒரு பெரிய உண்மை தெளிவாகிறது ! அஃதாவது , தொல்காப்பியர் நூற்பாவை எழுதும்போதே அதற்கான எடுத்துக்காட்டுகளை மனதிற்கொண்டே எழுதியிருப்பார் ! தொல்காப்பியர் தம் மாணவர்களுக்கு அந்த எடுத்துக்காட்டுகளைத்தான் கூறியிருப்பார் ! அந்த எடுத்துக்காட்டுகள் மாணவப் பரம்பரையாக வந்து  ,  இளம்பூரணர் கூறியவற்றிலும்  தங்கியிருக்கும் !  

இந்த அடிப்படையில் ஆயும்போது , மேலே நாம் பார்த்த வினைகள் தொல்காப்பியருக்கும் முற்பட்ட தமிழ் வினைகள் (Tamil verbs before Tholkappiyar) என்று கூற இடம் ஏற்படுகிறது !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 04, 2014 4:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (191)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘அவன் + கை = அவன் கை’ – இது சரியா?
 ‘அவன் + கை = அவற் கை’ – இது சரியா?
எது சரி?
தொல்காப்பிய விதி யாது?


இதோ :-

“உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும்
புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரும்
எல்லா வழியு மியல்பென மொழிப” (தொகை . 11)

இதன் சுருக்கப் பொருள் – உயிர் எழுத்தை அல்லது மெய் எழுத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைசப் பெயர்ச்சொற்களாக சொற்களாக இருந்தால், வேற்றுமையானாலும் அல்வழியானாலும் , அச் சொற்களின் புணர்ச்சி இயல்புப் புணர்ச்சி ஆகும் !

மேலே பார்த்த ‘அவன்’ என்பது உயர்திணைச் சொல்தான் !

எனவே , அவன் + கை = அவன் கை √ (அல்வழிப் புணர்ச்சி)
அவன் + கை = அவற் கை ×

மேலைச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

நம்பி + குறியன் = நம்பிக் குறியன் ×
நம்பி + குறியன் = நம்பி குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + சிறியன் = நம்பிச் சிறியன் ×
நம்பி + சிறியன் = நம்பி சிறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + தீயன் = நம்பித்  தீயன் ×
நம்பி + தீயன் = நம்பி தீயன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + பெரியன் = நம்பிப் பெரியன் ×
நம்பி + பெரியன் = நம்பி பெரியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + ஞான்றான் = நம்பிஞ் ஞான்றான் ×
நம்பி + ஞான்றான் = நம்பி ஞான்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + நீண்டான் = நம்பிந் நீண்டான் ×
நம்பி + நீண்டான் = நம்பி நீண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + மாண்டான் = நம்பிம் மாண்டான் ×
நம்பி + மாண்டான் = நம்பி மாண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + குறியன் = நம்பிக் குறியன் ×
நம்பி + குறியன் = நம்பி குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + யாவன் = நம்பிய் யாவன் ×
நம்பி + யாவன் = நம்பி யாவன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + வலியன் = நம்பிவ்  வலியன் ×
நம்பி + வலியன் = நம்பி வலியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + அடைந்தான் = நம்பி அடைந்தான் ×
நம்பி + அடைந்தான் = நம்பி யடைந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)(யகர உடம்படு மெய் வந்தாலும் அஃது இயல்புப் புணர்சியே !)

நம்பி + ஔவியத்தான் = நம்பி  ஔவியத்தான் ×
நம்பி + ஔவியத்தான் = நம்பி யௌவியத்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + கை = நம்பிக் கை ×
நம்பி + கை = நம்பி கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + செவி = நம்பிச் செவி ×
நம்பி + செவி = நம்பி செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + தலை = நம்பித் தலை ×
நம்பி + தலை = நம்பி தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + புறம்= நம்பிப் புறம் ×
நம்பி + புறம் = நம்பி புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + ஞாற்சி = நம்பிஞ் ஞாற்சி ×
நம்பி + ஞாற்சி = நம்பி  ஞாற்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + நீட்சி = நம்பிந் நீட்சி ×
நம்பி + நீட்சி = நம்பி நீட்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + யாப்பு = நம்பிய் யாப்பு ×
நம்பி + யாப்பு = நம்பி யாப்பு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + வலிமை = நம்பிவ் வலிமை ×
நம்பி + வலிமை = நம்பி வலிமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + அடைபு = நம்பி அடைபு ×
நம்பி + அடைபு = நம்பி யடைபு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + ஔவியம் = நம்பி ஔவியம் ×
நம்பி + ஔவியம் = நம்பியௌவியம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

- மேலே ‘நம்பி’ எனும் உயிரெழுத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொல்லின் புணர்ச்சிகளைப் பார்த்தோம் !
இனி ,  ‘அவன்’ எனும் மெய்யெழுத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொல்லின் புணர்சிகளைப் பார்ப்போம் ! :-

அவன் + குறியன் = அவற் குறியன் ×
அவன் + குறியன் = அவன் குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + சிறியன் = அவற் சிறியன் ×
அவன் + சிறியன் = அவன் சிறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + தீயன் = அவற்  றீயன் ×
அவன் + தீயன் = அவன் தீயன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + பெரியன் = அவற் பெரியன் ×
அவன் + பெரியன் = அவன் பெரியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + ஞான்றான் = அவன்ஞ் ஞான்றான் ×
அவன் + ஞான்றான் = அவன் ஞான்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + நீண்டான் = அவந் நீண்டான் ×
அவன் + நீண்டான் = அவன் நீண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + மாண்டான் = அவன்ம் மாண்டான் ×
அவன் + மாண்டான் = அவன் மாண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + குறியன் = அவற் குறியன் ×
அவன் + குறியன் = அவன் குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + யாவன் = அவன் யாவன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + வலியன் = அவன்வ்  வலியன் ×
அவன் + வலியன் = அவன் வலியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + அடைந்தான் = அவன் அடைந்தான் ×
அவன் + அடைந்தான் = அவனடைந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)(மெய் மீது உயிர் ஏறினாலும் அஃது இயல்புப் புணர்சியே !)

அவன் + ஔவியத்தான் = அவன்  ஔவியத்தான் ×
அவன் + ஔவியத்தான் = அவனௌவியத்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + கை = அவற் கை ×
அவன் + கை = அவன் கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + செவி = அவற் செவி ×
அவன் + செவி = அவன் செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + தலை = அவற் றலை ×
அவன் + தலை = அவன் தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + புறம்= அவற் புறம் ×
அவன் + புறம் = அவன் புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)


அவன் + ஞாற்சி = அவன்  ஞாற்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + நீட்சி = அவன் நீட்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + யாப்பு = அவன் யாப்பு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + வலிமை = அவன் வலிமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + அடைபு = அவன் அடைபு ×
அவன் + அடைபு = அவனடைபு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + ஔவியம் = அவன் ஔவியம் ×
அவன் + ஔவியம் = அவனௌவியம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒருவேன் + குறியன் = ஒருவேற்  குறியேன் ×
ஒருவேன் + குறியன் = ஒருவேன்  குறியேன் √ (அல்வழிப் புணர்ச்சி)

ஒருவேன் + சிறியன் = ஒருவேற்  சிறியேன் ×
ஒருவேன் + சிறியன் = ஒருவேன்  சிறியேன் √ (அல்வழிப் புணர்ச்சி)

ஒருவேன் + கை = ஒருவேற்  கை ×
ஒருவேன் + கை = ஒருவேன்  கை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒருவேன் + செவி = ஒருவேற்  செவி ×
ஒருவேன் + செவி = ஒருவேன்  செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)



மேற் சூத்திரத்திற்கு (தொகை .11) விதி விலக்குகளை இளம்பூரணர் வரைகிறார் ! அவற்றை விரித்துக்காட்டலாம் ! :-

பலர் + சான்றார் = பல் சான்றார் √  ( ‘பலர்’ , ‘பல்’ ஆகத் திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
பலர் + சான்றார் = பல் சான்றார் ×


கபிலர் + பரணர் = கபில பரணர் √   (அல்வழிப் புணர்ச்சி)
கபிலர் + பரணர் = கபிலர் பரணர் ×

 இறைவன் + நெடுவேட்டுவர் = இறைவ நெடுவேட்டுவர் √ (அல்வழிப் புணர்ச்சி)

பலர் + அரசர் = பல்லரசர் √ (அல்வழிப் புணர்ச்சி)
 பலர் + அரசர் = பலர் அரசர் ×

கோலிகன் + கருவி = கோலிகக்  கருவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)


வண்ணார் + பாடி = வண்ணாரப் பாடி  √(வேற்றுமைப் புணர்ச்சி)

ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப்  பள்ளி √ (வேற்றுமைப் புணர்ச்சி)

குமரன் + கோட்டம் = குமரக்  கோட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
குமரன் + கோட்டம் = குமர  கோட்டம்  √(வேற்றுமைப் புணர்ச்சி)

பிரமன் + கோட்டம் = பிரமக்  கோட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பிரமன் + கோட்டம் = பிரம  கோட்டம்  √(வேற்றுமைப் புணர்ச்சி)

உண்ப + சான்றார் = உண்பச் சான்றார்×
உண்ப + சான்றார் = உண்ப சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)
உண்டார் + சான்றார் = உண்டார்ச் சான்றார்×
உண்டார் + சான்றார் = உண்டார் சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)

உண்பேன் + பழம் = உண்பேற் பழம் ×
உண்பேன் + பழம் = உண்பேன் பழம் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)

பார்ப்பேன் + காட்சி = பார்ப்பேற் காட்சி×
பார்ப்பேன் + காட்சி = பார்ப்பேன் காட்சி √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)

உண்டேம்  + நாம் = உண்டே நாம் (அல்வழிப் புணர்ச்சி) (திரிபுப் புணர்ச்சி)

உண்டேம்  + சான்றேம் = உண்டேஞ்  சான்றேம் (அல்வழிப் புணர்ச்சி) (திரிபுப் புணர்ச்சி)

உண்டனெம்  + சான்றேம் = உண்டனெஞ்  சான்றேம் (அல்வழிப் புணர்ச்சி) (திரிபுப் புணர்ச்சி)

     நச்சினார்க்கினியர் தரும் சில கூடுதல் குறிப்புகளை வருமாறு காட்டலாம் ! :-

1 . உண்ப + சான்றார் = உண்ப சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்ப + சான்றார் = உண்பச்  சான்றார் ×
(உண்ப – படர்க்கை வினை முற்று)

2 . உண்ப + பர்ப்பார் = உண்ப பார்ப்பார்√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்ப + பர்ப்பார் = உண்பப்  பார்ப்பார் ×

3. உண்டார் + சான்றார் = உண்டார் சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டார் + சான்றார் = உண்டார்ச் சான்றார் ×
(உண்டார் – படர்க்கை வினைமுற்று)

4 . உண்டார் + பார்ப்பார் = உண்டார் பார்ப்பார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டார் + பார்ப்பார் = உண்டார்ப் பார்ப்பார் √(

5. உண்டீர் + சான்றீர் = உண்டீர் சான்றீர்√(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டீர் + சான்றீர் = உண்டீர்ச்  சான்றீர்×
(உண்டீர் – முன்னிலை வினைமுற்று)

6 . உண்டீர் + பார்ப்பீர் = உண்டீர் பார்ப்பீர் (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

7 . உண்பல் + சாத்தா = உண்பல்  சாத்தா√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்பல் + சாத்தா = உண்பற்  சாத்தா ×
(உண்பல் – தன்மை வினைமுற்று)

8. உண்டேன் + சாத்தா = உண்டேன் சாத்தா√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டேன் + சாத்தா = உண்டேற் சாத்தா×
(உண்டேன் – தன்மை வினைமுற்று)

9 . உண்பேன் + சாத்தா = உண்பேன் சாத்தா √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்பேன் + சாத்தா = உண்பேற் சாத்தா ×
(உண்பேன் – தன்மை வினைமுற்று)

10 . உண்கு + வருது = உண்கு வருது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

(உண்கு வருது – உண்ண  வருவேன்)

11 . உண்டு + வருது = உண்டு வருது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

(உண்டு வருது – உண்டு  வருவேன்)

12 . உண்கு + சேறு = உண்கு சேறு √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்கு + சேறு = உண்குச் சேறு ×

(உண்கு சேறு – உண்ணச் செல்வேன்)

13 . உண்டு + சேறு = உண்டு சேறு √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டு + சேறு = உண்டுச் சேறு ×

(உண்டு சேறு – உண்டு செல்வேன்)

நச்சினார்க்கினியர் , “நீ , நீயிர் என்பன முன்னிலை விரவுப் பெயர் ஆதலின் ஈண்டைக்கு ஆகா ” என்கிறார் ! ஆகா !

அஃதாவது – ‘நீ’ , ‘நீயிர்’ ஆகியன , உயர்திணைக்கு மட்டுமின்றி அஃறிணைக்கும் வருமாதலால் , உயர்திணைச் சொற்கள் பற்றிய இந் நூற்பாவிற்கு இவை  பொருந்தா என்கிறார் நச்சினார்க்கினியர் !

நச் என்றுதான் கூறியுள்ளார் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 05, 2014 5:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (192)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உயர்திணைப் பெயர்களின் இயல்புப் புணர்ச்சிகளை முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

அடுத்த நூற்பாவில் , அதற்கு ஒரு விதி விலக்கைக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“அவற்றுள்
இகரவீற்  றுப்பெயர்  திரிபிட  னுடைத்தே” (தொகை . 12)

என்ன விதி விலக்கு?

பெயர்ச்சொல்லாக இருந்தாலும் , ‘இ’யில் முடியும் சில பெயர்கள் , திரிந்து முடியும் புணர்ச்சிகளையும் நாம் காணலாம் !
இதுவே தொல்காப்பியர் கூறிய விதி விலக்கு !


இதற்குச் சான்றுகள் !:-
எட்டி + பூ = எட்டிப் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
எட்டி + புரவு = எட்டிப் புரவு (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
காவிதி + பூ = காவிதிப் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
காவிதி + புரவு = காவிதிப்  புரவு (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
நம்பி + பூ = நம்பிப் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
நம்பி + பேறு = நம்பிப் பேறு (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)

இங்கே , ஓர் இலக்கணக் குறிப்பு ! தருபவர் இளம்பூரணர் !

இளம்பூரணர் கருத்துப்படி , இகர ஈற்றுப் பெயர்கள் மட்டுமல்லாது , ஐகார ஈற்றுப் பெயர்கள் சிலவும் திரிந்து முடியும் !
சான்றுகள் –
தினை + பூ = தினை பூ ×
தினை + பூ = தினைப்  பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)

தினை + புரவு = தினை புரவு ×
தினை + புரவு = தினைப்  புரவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)

சரி ! உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தக்கூடிய பெயர் (இதுவே விரவுப் பெயர்) வந்தால் , புணர்ச்சி எப்படி இருக்கும் ?
தொல்காப்பியர் விடை ! –
“அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே” (தொகை . 13)

அஃதாவது , விரவுப் பெயராக இருந்தால் , இயல்புப் புணர்ச்சியும் வரும் , திரிபுப் புணர்ச்சியும் வரும் என்கிறார் தொல்காப்பியர் !
இயல்புப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் !-
சாத்தன் + குறியன் = சாத்தற் குறியன் ×
சாத்தன் + குறியன் = சாத்தன் குறியன்√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

சாத்தன் + குறிது = சாத்தற் குறிது ×
சாத்தன் + குறிது = சாத்தன் குறிது√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

சாத்தன் + கை = சாத்தற் கை ×
சாத்தன் + கை = சாத்தன் கை√ (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

‘சாத்தன் குறியன்’ எனும்போது , ‘சாத்தன்’ , ஆளைக் குறிக்கும் ! ‘சாத்தன் குறிது’ எனும்போது , ‘சாத்தன்’ என்பது மாட்டையோ வேறு விலங்கையோ குறிக்கும் !

இந் நூற்பாவிற்கு (தொகை . 13)நச்சினார்க்கினியர் தந்த  சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கிக் காட்டலாம் ! :-
1 . சாத்தன் + சிறியன் = சாத்தற் சிறியன் ×
 சாத்தன் + சிறியன் = சாத்தன்  சிறியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

2 . சாத்தன் + தீயன் = சாத்தற் றீயன் ×
 சாத்தன் + தீயன் = சாத்தன்  தீயன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

3 . சாத்தன் + பெரியன் = சாத்தற் பெரியன் ×
 சாத்தன் + பெரியன் = சாத்தன்  பெரியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

4. கொற்றன் + குறியன் = கொற்றற் குறியன் ×
 கொற்றன் + குறியன் = கொற்றன்  குறியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

5. கொற்றன் + சிறியன் = கொற்றற் சிறியன் ×
 கொற்றன் + சிறியன் = கொற்றன்  சிறியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

6. கொற்றன் + தீயன் = கொற்றற் றீயன் ×
 கொற்றன் + தீயன் = கொற்றன்  தீயன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

7. கொற்றன் + பெரியன் = கொற்றற் பெரியன் ×
 கொற்றன் + பெரியன் = கொற்றன்  பெரியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

8. சாத்தி + குறியள் = சாத்திக் குறியள் ×
 சாத்தி + குறியள் = சாத்தி  குறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

9. சாத்தி + சிறியள் = சாத்திச் சிறியள் ×
 சாத்தி + சிறியள் = சாத்தி  சிறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

10. சாத்தி + தீயள் = சாத்தித் தீயள் ×
 சாத்தி + தீயள் = சாத்தி  தீயள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

11. சாத்தி + பெரியள் = சாத்திப் பெரியள் ×
 சாத்தி + பெரியள் = சாத்தி  பெரியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

12. கொற்றி + குறியள் = கொற்றிக் குறியள் ×
 கொற்றி + குறியள் = கொற்றி  குறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

13. கொற்றி + சிறியள் = கொற்றிச் சிறியள் ×
 கொற்றி + சிறியள் = கொற்றி  சிறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

14. கொற்றி + தீயள் = கொற்றித் தீயள் ×
 கொற்றி + தீயள் = கொற்றி  தீயள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

15. கொற்றி + பெரியள் = கொற்றிப் பெரியள் ×
 கொற்றி + பெரியள் = கொற்றி  பெரியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

16. சாத்தன் + ஞான்றான் = சாத்தஞ்  ஞான்றான் ×
சாத்தன் + ஞான்றான் = சாத்தன்  ஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

17. சாத்தன் + நீண்டான் = சாத்தந்  நீண்டான்×
சாத்தன் + நீண்டான் = சாத்தன்  நீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

18. சாத்தன் + மாண்டான் = சாத்தம்  மாண்டான்×
சாத்தன் + மாண்டான் = சாத்தன்  மாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

19. சாத்தன் + யாவன் = சாத்தனி  யாவன் ×
சாத்தன் + யாவன் = சாத்தன் யாவன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

20. சாத்தன் + வலியன் = சாத்த  வலியன்×
சாத்தன் + வலியன் = சாத்தன்  வலியன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

21. கொற்றன் + ஞான்றான் = கொற்றஞ்  ஞான்றான் ×
கொற்றன் + ஞான்றான் = கொற்றன்  ஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

22. கொற்றன் + நீண்டான் = கொற்றந்  நீண்டான் ×
கொற்றன் + நீண்டான் = கொற்றன்  நீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

23. கொற்றன் + மாண்டான் = கொற்றம்  மாண்டான் ×
கொற்றன் + மாண்டான் = கொற்றன்  மாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

24. கொற்றன் + யாவன் = கொற்றனி  யாவன் ×
கொற்றன் + யாவன் = கொற்றன்  யாவன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

25. கொற்றன் + வலியன் = கொற்றவ்  வலியன் ×
கொற்றன் + வலியன் = கொற்றன்  வலியன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

26. சாத்தி + ஞான்றாள் = சாத்திஞ்  ஞான்றாள் ×
சாத்தி + ஞான்றாள் = சாத்தி  ஞான்றாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

27. சாத்தி + நீண்டாள் = சாத்திந்  நீண்டாள் ×
சாத்தி + நீண்டாள் = சாத்தி  நீண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

28. சாத்தி + மாண்டாள் = சாத்திம்  மாண்டாள் ×
சாத்தி + மாண்டாள் = சாத்தி  மாண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

29. சாத்தி + யாவள் = சாத்திய்  யாவள் ×
சாத்தி + யாவள்= சாத்தி  யாவள்√(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

30. சாத்தி + வலியள் = சாத்திவ்  வலியள் ×
சாத்தி + வலியள் = சாத்தி  வலியள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

31. கொற்றி + ஞான்றாள் = கொற்றிஞ்  ஞான்றாள் ×
கொற்றி + ஞான்றாள் = கொற்றி  ஞான்றாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

32. கொற்றி + நீண்டாள் = கொற்றிந்  நீண்டாள் ×
கொற்றி + நீண்டாள் = கொற்றி  நீண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

33. கொற்றி + மாண்டாள் = கொற்றிம்  மாண்டாள் ×
கொற்றி + மாண்டாள் = கொற்றி  மாண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

34. கொற்றி + யாவள் = கொற்றிய்  யாவள் ×
கொற்றி + யாவள்= கொற்றி  யாவள்√(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

35. கொற்றி + வலியள் = கொற்றிவ்  வலியள் ×
கொற்றி + வலியள் = கொற்றி  வலியள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

36. சாத்தன் + அடைந்தான் = சாத்தன்  அடைந்தான் ×
சாத்தன் + அடைந்தான் = சாத்தனடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

37. சாத்தன் + ஔவியத்தான் = சாத்தன்  ஔவியத்தான் ×
சாத்தன் + ஔவியத்தான் = சாத்தனௌவியத்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

38. கொற்றன் + அடைந்தான் = கொற்றன்  அடைந்தான் ×
கொற்றன் + அடைந்தான் = கொற்றனடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

39. கொற்றன் + ஔவியத்தான் = கொற்றன்  ஔவியத்தான் ×
கொற்றன் + ஔவியத்தான் = கொற்றனௌவியத்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

40. சாத்தி + அடைந்தாள் = சாத்தி  அடைந்தாள்×
சாத்தி + அடைந்தாள் = சாத்தியடைந்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)(உடம்படு மெய் பெற்றாலும் இயல்புப் புணர்ச்சியே)

41. சாத்தி + ஔவியத்தாள் = சாத்தி  ஔவியத்தாள் ×
சாத்தி + ஔவியத்தாள் = சாத்தியௌவியத்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

42. கொற்றி + அடைந்தாள் = கொற்றி  அடைந்தாள் ×
கொற்றி + அடைந்தாள் = கொற்றியடைந்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

43. கொற்றி + ஔவியத்தாள் = கொற்றி  ஔவியத்தாள் ×
கொற்றி + ஔவியத்தாள் = கொற்றியௌவியத்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

44. சாத்தன் + கை = சாத்தற் கை ×
சாத்தன் + கை = சாத்தன் கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

45.  சாத்தன் + செவி = சாத்தற் செவி ×
சாத்தன் + செவி = சாத்தன் செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

46. சாத்தன் + தலை = சாத்தற் றலை ×
சாத்தன் + தலை = சாத்தன் தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

47. சாத்தன் + புறம் = சாத்தற் புறம் ×
சாத்தன் + புறம் = சாத்தன் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

48. சாத்தன் + ஞாற்சி = சாத்தஞ் ஞாற்சி ×
சாத்தன் + ஞாற்சி = சாத்தன் ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

49. சாத்தன் + நீட்சி = சாத்தந் நீட்சி ×
சாத்தன் + நீட்சி = சாத்தன் நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

50. சாத்தன் + மாட்சி = சாத்தம் மாட்சி ×
சாத்தன் + மாட்சி = சாத்தன் மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

51. சாத்தன் + யாப்பு = சாத்தனி யாப்பு ×
சாத்தன் + யாப்பு = சாத்தன் யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

52. சாத்தன் + வன்மை = சாத்த வன்மை ×
சாத்தன் + வன்மை = சாத்தன் வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

53. சாத்தன் + அழகு = சாத்தன் அழகு ×
சாத்தன் + அழகு = சாத்தனழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

54. சாத்தன் + ஔவியம் = சாத்தன் ஔவியம் ×
சாத்தன் + ஔவியம் = சாத்தனௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

55. கொற்றன் + கை = கொற்றற் கை ×
கொற்றன் + கை = கொற்றன் கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

56.  கொற்றன் + செவி = கொற்றற் செவி ×
கொற்றன் + செவி = கொற்றன் செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

57. கொற்றன் + தலை = கொற்றற் றலை ×
கொற்றன் + தலை = கொற்றன் தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

58. கொற்றன் + புறம் = கொற்றற் புறம் ×
கொற்றன் + புறம் = கொற்றன் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

59. கொற்றன் + ஞாற்சி = கொற்றஞ் ஞாற்சி ×
கொற்றன் + ஞாற்சி = கொற்றன் ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

60. கொற்றன் + நீட்சி = கொற்றந் நீட்சி ×
கொற்றன் + நீட்சி = கொற்றன் நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

61. கொற்றன் + மாட்சி = கொற்றம் மாட்சி ×
கொற்றன் + மாட்சி = கொற்றன் மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

62. கொற்றன் + யாப்பு = கொற்றனி யாப்பு ×
கொற்றன் + யாப்பு = கொற்றன் யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

63. கொற்றன் + வன்மை = கொற்ற வன்மை ×
கொற்றன் + வன்மை = கொற்றன் வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

64. கொற்றன் + அழகு = கொற்றன் அழகு ×
கொற்றன் + அழகு = கொற்றனழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

65. கொற்றன் + ஔவியம் = கொற்றன் ஔவியம் ×
கொற்றன் + ஔவியம் = கொற்றனௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

66. சாத்தி + கை = சாத்திக் கை ×
சாத்தி + கை = சாத்தி கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

67.  சாத்தி + செவி = சாத்திச் செவி ×
சாத்தி + செவி = சாத்தி செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

68. சாத்தி + தலை = சாத்தித் தலை ×
சாத்தி + தலை = சாத்தி தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

69. சாத்தி + புறம் = சாத்திப் புறம் ×
சாத்தி + புறம் = சாத்தி புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

70. சாத்தி + ஞாற்சி = சாத்திஞ் ஞாற்சி ×
சாத்தி + ஞாற்சி = சாத்தி ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

71. சாத்தி + நீட்சி = சாத்திந் நீட்சி ×
சாத்தி + நீட்சி = சாத்தி நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

72. சாத்தி + மாட்சி = சாத்திம் மாட்சி ×
சாத்தி + மாட்சி = சாத்தி மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

73. சாத்தி + யாப்பு = சாத்திய் யாப்பு ×
சாத்தி + யாப்பு = சாத்தி யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

74. சாத்தி + வன்மை = சாத்திவ் வன்மை ×
சாத்தி + வன்மை = சாத்தி வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

75. சாத்தி + அழகு = சாத்தி அழகு ×
சாத்தி + அழகு = சாத்தியழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

76. சாத்தி + ஔவியம் = சாத்தி ஔவியம் ×
சாத்தி + ஔவியம் = சாத்தியௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

77. கொற்றி + கை = கொற்றிக் கை ×
கொற்றி + கை = கொற்றி கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

78.  கொற்றி + செவி = கொற்றிச் செவி ×
கொற்றி + செவி = கொற்றி செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

79. கொற்றி + தலை = கொற்றித்  தலை ×
கொற்றி + தலை = கொற்றி தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

80. கொற்றி + புறம் = கொற்றிப் புறம் ×
கொற்றி + புறம் = கொற்றி புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

81. கொற்றி + ஞாற்சி = கொற்றிஞ் ஞாற்சி ×
கொற்றி + ஞாற்சி = கொற்றி ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

82. கொற்றி + நீட்சி = கொற்றிந் நீட்சி ×
கொற்றி + நீட்சி = கொற்றி நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

83. கொற்றி + மாட்சி = கொற்றிம் மாட்சி ×
கொற்றி + மாட்சி = கொற்றி மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

84. கொற்றி + யாப்பு = கொற்றிய் யாப்பு ×
கொற்றி + யாப்பு = கொற்றி யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

85. கொற்றி + வன்மை = கொற்றிவ் வன்மை ×
கொற்றி + வன்மை = கொற்றி வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

86. கொற்றி + அழகு = கொற்றி அழகு ×
கொற்றி + அழகு = கொற்றி யழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

87. கொற்றி + ஔவியம் = கொற்றி ஔவியம் ×
கொற்றி + ஔவியம் = கொற்றி யௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)


மேல் 87 எடுத்துக்காட்டுகளிலும் , வல்லெழுத்து , மெல்லெழுத்து , இடையெழுத்து , உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததைக் கவனியுங்கள் !

மேல் 87 காட்டுகளில் , உயர்திணை ஆண்பால் பெயர்களுக்கு மட்டுமல்லாது பெண்பால் பெயர்களுக்கும் பொருத்தம் காட்டியுள்ளார் நச்சினார்க்கினியர் என்பதையும் கவனியுங்கள் !

சாத்தன் , கொற்றன் – உயர்திணை ஆண்பால் பெயர்ச் சொற்கள் .
சாத்தி , கொற்றி – உயர்திணைப் பெண்பால் பெயர்ச்சொற்கள் .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 25 of 84 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 54 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக