புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
2 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
2 Posts - 4%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
1 Post - 2%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
1 Post - 2%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
2 Posts - 13%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 23 of 84 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 53 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 17, 2013 5:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (169)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர் 9 சாரியைகளைக் கூறியதை முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

அதில் முதலாவது – ‘இன்’ சாரியை !

அதைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் ! : -

“அவற்றுள்
இன்னி னிகர மாவி னிறுதி
முன்னர்க் கெடுத லுரித்து மாகும் !” (புணரி . 18)

‘இன்னின் இகரம்’ - ‘இன்’ என்பதன் ‘இ’ ,

‘ஆவின் இறுதி’ - ‘ஆ’ என்ற சொல்லின் ஈறாகிய ‘ஆ’ முன்,

‘கெடுதலும் உரித்தும் ஆகும் ’ – கெட்டும் வரும் , கெடாமலும் வரும் !

இதற்கு இளம்பூரணரும் , நச்சினார்க்கினியரும் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! : -

ஆ + இன் + ஐ = ஆனை ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஐ = ஆவினை ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆ + இன் + ஒடு = ஆனொடு ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஒடு = ஆவினொடு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆ + இன் + கு = ஆற்கு ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஐ = ஆவிற்கு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆ + இன் + இன் = ஆனின் ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + இன் = ஆவினின் ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆ + இன் + அது = ஆனது ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஐ = ஆவினது ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆ + இன் + கோடு = ஆன்கோடு ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப்
புணர்ச்சி)
ஆ + இன் + கோடு = ஆவின்கோடு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் –
உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

நூற்பாவில் ஒரு பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறான் ஒரு மாணவன் இளம்பூரணரிடம் !

நூற்பாவில் ‘மாவின் இறுதி’ என்றுதானே உள்ளது? நீங்கள் ‘ஆவின் இறுதி’ என்று பொருள் சொல்கிறீர்களே ? – இதுதான் மாணவன் வினா!

இளம்பூரணர் – “நீ சொல்வது சரிதான் ! நூற்பாவின் ‘இகர மாவினிறுதி’ என்பதை , ‘இகரம் ஆவின் இறுதி’ என்றும் பிரிக்கலாம் ; ‘இகரம் மாவின் இறுதி’ என்றும்
பிரிக்கலாம்தான் ! நீ சொல்வதுபோலப் பிரித்தாலும் , அதற்கும் நான் கூறிய உரை
பொருந்தும் ! ” எனச் சொல்லிவிட்டுச் சில காட்டுகளைக் காட்டியிருக்கவேண்டும் !

அவை –

மா + இன் + ஐ = மானை( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
மா + இன் + ஐ = மாவினை ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

மா + இன் + கோடு = மான்கோடு( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
மா + இன் + கோடு = மாவின்கோடு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே கண்ட ‘ஆவின் இறுதி’ , ‘மாவின் இறுதி’ப் பிரிப்புகள் செம்பதிப்பு (Critical Edition) நோக்கில் குறிப்பிடத் தக்கன ! இரண்டுவகைப் பிரிப்புகளுக்கும் இளம்பூரணர்
உரை கூறினாலும் , அவர் முதலில் சொன்ன ‘ஆவின் இறுதி’ என்ற பிரிப்பையே அவர் ஆதரித்துள்ளார் என அறியவேண்டும் !

‘இன்’னின் ‘இ’ கெடுதல் பற்றி மேலே பார்த்தோம் !

அடுத்து , ‘இன்’னின் ‘ன்’ என்பது , ‘ற்’ ஆவது பற்றிப் பேசுகிறார் ! :-

“அளபாகு மொழிமுத நிலைஇய வுயிர்மிசை
னஃகான் றஃகா னாகிய நிலைத்தே” (புணரி . 19)

‘அளபாகு மொழிமுதல்’ - அளவுப் பெயர்ச் சொல்லின் முதலில்,

‘நிலைஇய உயிர்மிசை’ - நிற்கும் உயிர்க்குமுன் நின்ற,

‘னஃகான் , றஃகான் ஆகிய நிலைத்தே’ – ‘இன்’னின் ‘ன்’ , ‘ற்’ ஆகும் !

அஃதவது –

பத்து + இன் + அகல் = பதிற்றகல் (அல்வழிப் புணர்ச்சி)
(அளவுப் பெயராம் ‘அகல்’ என்பதிலுள்ள ‘அ’ முன்பாக நின்ற ‘ன்’ , ‘ற்’ ஆனது )

பத்து + இன் + உழக்கு = பதிற்றுழக்கு (அல்வழிப் புணர்ச்சி)
(அளவுப் பெயராம் ‘உழக்கு’ என்பதிலுள்ள ‘உ’ முன்பாக நின்ற ‘ன்’ , ‘ற்’ ஆனது )

அளவுப் பெயர்கள் அல்லாமல் வேறு பெயர்கள் வந்தாலும் ‘ன்’ , ‘ற்’ ஆவது உண்டு
என்கிறார் இளம்பூரணர் ! அவர் தந்த உதாரணம் ! –

பத்து + இன் + ஒன்று = பதிற்றொன்று (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + இன் + ஏழு = பதிற்றேழு (அல்வழிப் புணர்ச்சி)

நன்னூலில் , ‘பத்து + இற்று + ஒன்று = பதிற்றொன்று ’ என்று காட்டி , ‘இற்று’
என்ற ஒரு புதுச் சாரியையை
த் தந்தார் பவணந்தி முனிவர் !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 18, 2013 9:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (170)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஆய்வில் ‘இன்’ சாரியை
! இப்போது – ‘வற்று’ச் சாரியை! : -

“வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன்
அஃகா னிற்ற லாகிய பண்பே” ! (புணரி . 20)

‘வஃகான் மெய்கெட’ – ‘வற்று’வின் , ‘வ்’ கெட ,

‘சுட்டு முதல் ஐ முன்’ - ‘அவை’யின் ‘ஐ’ முன்பாக ,

‘அஃகான் நிற்ற லாகிய பண்பே’ - ‘வற்று’வின் முதல் ‘வ்’ போனபின் , ‘அ’ நிற்கும்!

அஃதாவது –

அவை + வற்று + ஐ → ‘வ்’ கெட → அவை + அற்று + ஐ → ‘ய்’ உடம்படு மெய் சேர → அவையற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
இவை + வற்று + ஐ → ‘வ்’ கெட → இவை + அற்று + ஐ → ‘ய்’ உடம்படு மெய் சேர → இவையற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
உவை + வற்று + ஐ → ‘வ்’ கெட → உவை + அற்று + ஐ → ‘ய்’ உடம்படு மெய் சேர → உவையற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)

அவை + வற்று + கோடு → ‘வ்’ கெட → அவை + அற்று + கோடு → ‘ய்’ உடம்படு மெய் சேர → அவையற்றுக் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)
இவை + வற்று + கோடு → ‘வ்’ கெட → இவை + அற்று + கோடு → ‘ய்’ உடம்படு மெய் சேர → இவையற்றுக் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)
உவை + வற்று + கோடு → ‘வ்’ கெட → உவை + அற்று + கோடு → ‘ய்’ உடம்படு மெய் சேர → உவையற்றுக் கோடு வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே உள்ளவை , இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளுக்கு நாம் கண்ட விளக்கம் !

இளம்பூரணர் தம் உரையில் , இன்னொரு புணர்ச்சி முறையும் கூறுகிறார் !

‘அவை’ என்று நிலைமொழி இல்லாமல் , ‘அவ்’ என இருந்தால் ?

இளம்பூரணர் கூறக் கேட்கலாமே ?

“சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி , வற்றின் வகரம் , அகரம் நிற்கக் கெடாது வற்றாயே நிற்றல் கொள்க ! ” என்கிறார் இளம்பூரணர் !

அஃதாவது , ‘அவை’ என்பதற்குப் பதில் ‘அவ்’ என்று நிலைமொழி இருந்தால் , ‘வற்று’ச் சாரியையில் எந்த மாற்றமும் இருக்காது!

அவ் + வற்று + ஐ → ‘வ்’ கெட → அ + வற்று + ஐ = அவற்றை .

இதன்பின் ஒரு வினாவை வைக்கிறார் இளம்பூரணர் !

அவர் வினாவை நம் நடையில் இப்படித் தரலாம் ! - “இதனைச் ‘சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி’ எனக் கூறுவானேன் ? ‘திரிந்ததன் திரிபு பிறிது’ என்ற உத்திப்படியே ‘அவ்’ என்ற நிலைமொழியைப் பெறலாமே ? ’என்று கேட்கிறீர்களா? ” எனக் கேட்டுவிட்டு அவரே விடையும் கூறுகிறார் !

இளம்பூரணர் விடையை வருமாறு நம் நடையில் காட்டலாம் -

“ ‘சுட்டு முதல் ஐம்முன் ’ என்று தொல்காப்பியர் கூறிவிட்டதால் , ‘அவ்’ என்பதை உத்தியால் கொள்ள முடியாது !”

என்ன அது ‘திரிந்ததன் திரிபு பிறிது ’ ?

அவை → திரிந்து → அவ் → திரிந்து → அ

அஃதாவது ‘அவை’ என்பது , திரிந்து திரிந்து பிறிதொன்றாக ஆகியுள்ளதல்லவா? இதனைத்தான் , ‘திரிந்ததன் திரிபு பிறிது’ என்கின்றனர் ! வேறு ஒன்றுமில்லை !

இந்த உத்திப்படி ‘அ’ வந்துவிடவே , ‘அ + வற்று + ஐ = அவற்றை’ என்று புணர்ச்சியைக் காட்டிவிடலாமே ? – என்றுதான் அவர் வினா எழுப்பி , அதற்கு மேலே நாம் பார்த்த விடையையும் கூறினார் இளம்பூரணர் !

தொல்கப்பிய நூற்பாவின் ஒவ்வோர் எழுத்துக்கும் நாம் கொடுக்க வேண்டிய மதிப்பையும் , உரை உத்திகளை (Techniques) எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதயும் இளம்பூரணர் கூறிய விளக்கத்தால் நாம் நன்கு அறிகிறோம் !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 22, 2013 8:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (171)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர் கூறிய  9 சாரியைகளில்  ‘ன்’ ஈற்றுச் சாரியைகள் நான்கு !

அவை – இன் , ஒன் , ஆன் , அன்  !

இந்த நான்கும்  தமது ஈறு திரிந்து எப்படி வரும்  என்று காட்டுகிறார் அவர் ! : -

“னஃகான்  றஃகா  னான்க   னுருபிற்கு” (புணரி . 21)

’னஃகான் , றஃகான்’ -  ‘ன்’ , ‘ற்’  ஆகும் ,

‘நான்கன்  உருபிற்கு’ -  ‘கு’ எனும்  வேற்றுமை உருபு புணரும்போது !

இதன்படி –

விள + இன் + கு =  விளவிற்கு   (வேற்றுமைப் புணர்ச்சி)

கோ + ஒன் + கு =  கோஒற்கு   (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒருபது + ஆன் + கு = ஒருபாற்கு  (வேற்றுமைப் புணர்ச்சி)

அது + அன் + கு =  அதற்கு   (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே  ‘ஆன்’ சாரியைக்கு ஒரு புணர்ச்சி கூறினாரல்லவா ?

அதே ‘ஆன்’ சாரியைக்கு வேறு ஒரு வேலை இருப்பதைக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-

“ஆனி   னகரமு  மதனோ  ரற்றே ’ -  ‘ஆன்’ சாரியையின்  ‘ன்’  , முன்னே (புணரி . 21) கூறியது போன்றே  ,  ‘ற்’  ஆகும் !
நாண்முன்  வரூஉம்  வல் முதல் தொழிற்கே”  -   நாளைக் குறிக்கும் பெயர் முன் , வல்லெழுத்தை  முதலாகக் கொண்ட  வினைச் சொற்கள்  வந்து  சேர்ந்தால் !

நாளைக் குறிக்கும் பெயர்கள் -  பரணி , கார்த்திகை முதலியன .

நூற்பாப்படி –

பரணி + ஆன் + கொண்டான் =  பரணியாற் கொண்டான்  (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர்  தரும்  கூடுதல்  உரையால் -  நாட்பெயர் அல்லாத  பெயர்களின் முன் ,  வல்லெழுத்தை முதலாகக் கொண்ட  வினைச் சொல் வந்து   சேரின்  ,  ‘இன்’  என்பதன் , ‘ன்’னும்  , ‘ற்’  ஆகும் ! -

பனி +  இன் + கொண்டான்  =  பனியிற் கொண்டான்  (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலும் ஆய்கிறார் இளம்பூரணர் !

மேலே , வினைச்சொற்கள் வந்து புணர்ந்ததைத்தானே பார்த்தோம் ?  அதற்குத்தானே , ‘ன்’ ,  ‘ற்’ ஆகும் எனக்  கண்டோம் ?

ஆனால்  இளம்பூரணர் ,  பெயர்ச்சொல் வந்து  புணர்ந்தால் ,  ‘ன்’  ஆனது ‘ற்’  ஆகவும் செய்யும் , ஆகாமலும் இருக்கும் என்கிறார் !    

ன் →  ற்    ஆவதற்கு  எடுத்துக்காட்டு -  
பறம்பு  + இன்  + பாரி = பறம்பிற் பாரி   (வேற்றுமைப் புணர்ச்சி)  

ன்    →  ற்  ஆகாததற்கு  எடுத்துக்காட்டு  -  
வண்டு  + இன் + கால்  =  வண்டின் கால்

(பாரி ,  கால்  -  இரண்டும் பெயர்ச் சொற்கள்)

‘பெயர்ச்சொல் வந்து புணர்ந்தாலும் ’ என்று  ஒரு  விதிக்குள் நுழைந்தாரே  இளம்பூரணர் , அது  எப்படியாம்?

‘ஞாபகம் கூறல்’  என்ற  உத்திப்படியாம் !

‘ஞாபகம் கூறல்’ என்றால் ?

விளக்கம் காண்போம் !

மேல் நூற்பாவில்  (புணரி . 22)  ,  ‘ஆனின்  னகரமும்’  என்பதில் உள்ள ’உம்’மை ,  இறந்ததும் தழுவிற்று ! ஆனால் இரு வேறு பொருள்கள் !

இறந்தது தழுவியபோது (முன்னே நூற்பா 21இல் சொல்லப்பட்டதோடு தொடர்புபடும்போது)  , நாட் பெயர்முன்  வல்லெழுத்தை  முதலாகக் கொண்ட  வினைச் சொல் வரும்போது ,  ‘ன்’ , ‘ற்’  ஆன பொருள் !

எதிரது தழுவியபோது  (பின்னே நூற்பா 22 இல் சொல்லப்பட்டதோடு தொடர்புபடும்போது) , நாளைக் குறிக்காத பெயர்முன் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட   சொல் வரின் , ‘ன்’ , ‘ற்’  ஆன பொருள் !

இந்த இரண்டு பொருள் அல்லாது , மூன்றாவதாக , வருமொழி வினைச் சொல்லே இல்லாது , பெயர்ச்சொல்லாக இருந்தாலும் , ‘ன்’ , ‘ற்’  ஆகச்  சில இடங்களில் மாறும் ; சில இடங்களில் மாறாது  ‘ன்’  ஆகவே நிற்கும் ! (சான்றுகளை மேலே கண்டோம் !)

மேல் இரண்டு பொருள்களைத் தவிர மூன்றாவது பொருள் எடுத்தால் ?

அப்படி எடுப்பதே ‘ஞாபகம் கூறல்’ !

ஞாபித்தல் – வியாபித்தல் ; பரவல் .
ஒரு சொல்லுக்கு இரண்டு மூன்று பொருள்களைக் கண்டு கூறும் உத்தி – ஞாபகம் கூறல் !  

‘பையன் அடுக்கிக் கட்டுகிறான்’ – என்றால் , ‘அவன் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான்’ என்று ஒரு  பொருள் எடுக்கலாம்! ‘வங்கியில் வேலை செய்கிறான்’  என இரண்டாம் பொருள் எடுக்கலாம் ! ‘புத்தகக் கடையில் வேலை பார்க்கிறான்’ என்று மூன்றாவது பொருளும் ,  ‘ஞபகம் கூறல் ’என்ற உத்திப்படி எடுக்கலாம் !

முன்னே சொன்ன கருத்து இப்போ ஞாபகம்  வருகிறதா?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 23, 2013 10:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (172)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர் அடுத்து ‘அத்து’ச் சாரியை கூற வருகிறார் !

“ அத்தி  னகர  மகரமுனை  யில்லை  ”  (புணரி . 23)

‘அத்தின் அகரம்  அகர முனை இல்லை’ -  ‘அத்து’ச்  சாரியையின்  ‘அ’ ,  
‘அகர முனை இல்லை’ -  ‘அ’வை  ஈறாகக் கொண்ட  சொல் முன்னே , கெடும் !

இதன்படி –

மக + அத்து + கை  =  மகத்துக் கை  (வேற்றுமைப் புணர்ச்சி)

‘மக’  என்பது , ‘மகம்’  என்ற சொல்லின் திரிபு அல்ல !

மக =  மகன்  அல்லது  மகளைக் குறிக்கும்  பெயர்ச் சொல் !

மகத்துக் கை -  ‘மகனின் கை’ அல்லது ‘மகளின் கை’

‘அத்து’ பற்றிச் சொன்னது போலவே அடுத்து ‘இக்கு’ பற்றிப் பேசுகிறார்  தொல்காப்பியர்! –

“இக்கி  னிகர  மிகரமுனை  யற்றே”  (புணரி . 24)

‘இக்கின்  இகரம்’  -  ‘இக்கு’ச்  சாரியையின்  ‘இ’ ,

‘இகர முனை அற்றே’ -  ‘இ’யை ஈறாகக் கொண்ட  சொல்முன் வந்தால் , கெடும் !

அஃதாவது –

ஆடி + இக்கு  + கொண்டான்  =  ஆடிக்குக்  கொண்டான்   (வேற்றுமைப் புணர்ச்சி)

‘ஆடி’ என்பது வினையெச்சம் அல்ல! பெயர்ச் சொல் !
ஆடிக்குக் கொண்டான் -  ஆடி மாதத்தில் கொண்டான் !

மேலே ‘இக்கு’ச் சாரியை , இகரத்தின் முன் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டினார்  தொல்காப்பியர்!

அடுத்து , அதே ‘இக்கு’ , ஐகாரத்தை ஈறாகக் கொண்ட சொல் முன் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் ! : -

“ஐயின்  முன்னரு மவ்விய  னிலையும்”  (புணரி . 25)

 ‘ஐயின்  முன்னரும்’ -  முன்னே சொன்ன ‘இக்கு’ச் சாரியையின்  ‘இ’ ,  ‘ஐ’யை  ஈறாகக் கொண்ட  சொல் முன் வந்தாலும்,

‘அவ்வியல் நிலையும்’  -  அதே முறைப்படிக் கெடும் !  

இதன்படி –

சித்திரை  + இக்கு + கொண்டான் =  சித்திரைக்குக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)

சித்திரைக்குக் கொண்டான் – சித்திரை மாதத்தில் கொண்டான் !

தொல்காப்பியர் ‘இக்கு’ என்று சாரியையைக் கொண்டாரல்லவா? நன்னூலார் , அதிலுள்ள ‘கு’தான் பயன்பட்டுக்கு வருகிறது என்று கருதி  ‘கு’தான் சாரியை என்று கூறியுள்ளார் !

தொல்காப்பியர் கால ‘இக்கு’ , நன்னூல் காலத்தில் ‘கு’ ஆனது ! இதுபற்றி முன்பும் பார்த்துள்ளோம் !

அகர ஈற்றுச் சொல்முன் , இகர  ஈற்றுச் சொல்முன் , ஐகார ஈற்றுச் சொல்முன்  சாரியைகள் எப்படிப் புணரும் என மேலே பார்த்தோம் !

அடுத்து , எந்த ஈறானலும் அதற்கு முன் ‘கு’ வந்தால் எப்படிப் புணரும்  எனக் காட்டுகிறார்  தொல்காப்பியர் ! –

“எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து  வருவழி
அக்கி  னிறுதிமெய்  மிசையொடுங்  கெடுமே
குற்றிய  லுகர முற்றத் தோன்றாது  ”  (புணரி . 26)

‘எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வரும் வழி’ -  எந்த ஈற்றெழுத்தைக் கொண்டாலும் அந்தப் பெயர்ச் சொல்முன் ,

‘அக்கின்  இறுதி மெய்  மிசையொடும் கெடும் ’ – ‘அக்கு’ என்பதிலுள்ள மெய்யான ‘க்’கும் அதற்கடுத்த மெய் ‘க்’கும் கெடும் ;

‘குற்றியலுகரம்  முற்றத் தோன்றாது’ -  ‘அக்கு’ என்பதன் ‘கு’ , முழுவதும் கெடும் !  

அஃதாவது –

குன்று + அக்கு + கூகை =  குன்றக் கூகை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கூகை – ஆந்தை ; குன்றக் கூகை – குன்றிலுள்ள ஆந்தை .

மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை (வேற்றுமைப் புணர்ச்சி)

மன்று – மன்றம் ; ஊர்ப் பொது இடம் ; மன்றப் பெண்ணை – ஊர்ப் பொதுவிடத்துப் பெண்ணை மரம் ; பெண்ணை மரம் – பனை மரம்.

ஈமம்  + அக்கு  + குடம்  = ஈமக் குடம்   (வேற்றுமைப் புணர்ச்சி)

ஈமம் – பிணம் ; ஈமக் குடம் – பிணத்தை வைத்த குடம் ; முதுமக்கள் தாழி .

அரசு + அக்கு + கன்னி = அரசக் கன்னி (வேற்றுமைப் புணர்ச்சி)

அரசக் கன்னி – அரச குலக் கன்னி

தமிழ் + அக்கு + கூத்து = தமிழக் கூத்து (வேற்றுமைப் புணர்ச்சி)

தமிழக் கூத்து – தமிழில் எழுதப்பட்ட தமிழ் நாட்டுக் கூத்து .

மேல் புணர்ச்சிகளில் , நன்னூலார் ‘அக்கு’ தேவையில்லை , ‘அ’ போதும் எனக் கருதி அகரச் சாரியையாகவே கொண்டார் !

மேல் நூற்பாவில் (புணரி .26)  , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது மட்டும் பொருந்தக்கூடிய விதி கூறப்பட்டதைக் காண்க !

இங்கு ,  - தமிழ நூல் , தமிழ யாப்பு , தமிழ வரையர் !

விளக்கம் –

தமிழ் + அக்கு + நூல் =  தமிழ நூல்  (வேற்றுமைப் புணர்ச்சி)  
தமிழ நூல்  - தமிழில் எழுதப்பட்ட நூல்

தமிழ் + அக்கு + யாப்பு =  தமிழ யாப்பு  (வேற்றுமைப் புணர்ச்சி)
தமிழ யாப்பு  - தமிழில் எழுதப்பட்ட யாப்பு நூல்  

தமிழ் + அக்கு + அரையர் =  தமிழ வரையர்  (வேற்றுமைப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)
தமிழ வரையர்  - தமிழ்நாட்டு  அரசர்.

இளம்பூரணர் குறித்த ஈமக் குடத்தைப் பார்க்க ஆசையா?

 
     [You must be registered and logged in to see this image.]

                                             Courtesy - [You must be registered and logged in to see this link.]
- இதுதான்  ஈமக் குடம் எனப்படும் முதுமக்கள் தாழி !

 பழந் தமிழகத்தில் இறந்த வீரர்களின் உடல்களை வைத்துப் புதைக்கும் பெரிய குடம் ! (புறநானூறு 256 உரை)

அந்த நாளிலேயே மட்பாண்டம் செய்வதில் வித்தை காட்டியவர்கள் தமிழர்கள் என்பதற்கு இஃது ஒரு சான்று !
                                                       ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 24, 2013 11:02 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (173)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது ‘அம்’ சாரியை ! : -

“அம்மி  னிறுதி  கசதக் காலைத்
தன்மெய்  திரிந்து  ஙஞந  வாகும்”  (புணரி . 27)

‘அம்மின் இறுதி’  -  ‘அம்’ சாரியையின்  இறுதியாகிய ‘ம்’ ,

‘கசதக் காலை’ -  க , ச , த ,  ஆகிய  எழுத்துகளை முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணரும்போது ,  

‘தன் மெய் திரிந்து  ஙஞந  வாகும்’ – ‘ங்’ , ‘ஞ்’ , ‘ந்’ ஆகும் !

இதன்படி –

புளி + அம் + கோடு  =  புளியங் கோடு  (  ய், உடம்படு மெய் ; ம் ,  ங்  ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + செதிள்  =  புளியஞ் செதிள்  (  ய், உடம்படு மெய் ; ம் ,  ஞ்  ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + தோல்  =  புளியந் தோல்  (  ய், உடம்படு மெய் ; ம் ,  ந்  ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு , இளம்பூரணர் சில இலக்கண நுணுக்கங்களைத் தருகிறார் ! –

“அம்மின் இறுதி மகரமே யன்றித் , தம் , நம் , நும் , உம்  என்பவற்றின்  இறுதி  மகரமும் திரியுமென்பது கொள்க  ”

இதற்கு அவரது எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! –

எல்லார் + தம் + ஐ + உம் = எல்லார் தங்கையும்  ( ம் , ங்  ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)

எல்லார் + நம் + ஐ + உம் = எல்லார் நங்கையும்  ( ம் , ங்  ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)

எல்லார் + நும் + ஐ + உம் = எல்லார் நுங்கையும்  ( ம் , ங்  ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)

வில் + உம் + திங்கள் + உம் = வில்லுந் திங்களும்  (ம் , ந் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)

மேலேஎ வந்த நான்கு சொற்களின் ஈற்றில், ‘உம்’ வந்ததல்லவா? இதனை மொழியியலில் Enclitic என்பர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 24, 2013 9:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (175)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘அம்’ பற்றி மேலும் ஒரு நூற்பா ! :-

“மென்மையு மிடைமையும் வரூஉங் காலை
இன்மை  வேண்டு மென்மனார் புலவர்”  (புணரி . 28)

‘மென்மையும்  இடைமையும் வரூஉம் காலை’ -  மெல்லின எழுத்துகளையும் இடையின எழுத்துகளையும் முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணரும்போது ,

‘இன்மை வேண்டும்’ -  ‘அம்’மின் இறுதியாகிய  ‘ம்’ கெடும் !

இதற்கிணங்க –

புளி + அம் + ஞெரி =  புளிய ஞெரி  (ய் , உடம்படு மெய் ;  ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)
 
புளி + அம் + நுனி =  புளிய நுனி  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + முரி =  புளிய முரி  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + யாழ் =  புளிய யாழ்  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + வட்டு =  புளிய வட்டு  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

ஞெரி , முரி – இரண்டுக்கும்  துண்டு (piece) என்பது பொருள்!


மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் தலையிலே கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கு எடுத்துக்கட்டுகள் மேலே கண்டவை !

இளம்பூரணர் உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட  சில சொற்கள் வந்து புணரும்போதும் இதே விதியைக் கொள்ளலாம் என அனுமதிக்கிறார் !  ‘புளிய விலை’ – அவர் தந்த எடுத்துக்காட்டு !

இதன்படி-

புளி + அம் + இலை = புளிய விலை (ய் , உடம்படு மெய் ; ம் , கெட்டது ; வ் , உடம்படு மெய்)

‘புளிய விலை’ – என்ற முடிவைக் கொண்டாரல்லவா இளம்பூரணர் ? இதனை அவர்  ‘உரையிற் கோடல்’ என்ற உத்தியால் கொண்டதாகத் தெரிவிக்கிறார் !

உரையிற் கோடல் – உரையில் கொள்ளுதல் .  

மூல நூற்பாவில் ஆசிரியன் சில விதிகளைச் சொன்னாலும் , உரை எழுதும் உரையாசிரியருக்கு என்று சில உரிமைகள் (Licence)  உண்டு ! அந்த உரிமைகள் இல்லாவிட்டால் உரையாசிரியனால் சிறந்த உரையைத் தர இயலாது ! மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை கூற இயலாது !

இதனை ஏற்பதற்குக் கடினமாக உள்ளதா?

‘பையை எடுத்துக்கொண்டு போய் அவரைக்காய் வாங்கி வாருங்கள் !’ என்று மனைவி கூறினாள் ! கணவன் பையை எடுத்துச்செல்ல மறந்துவிட்டான் ! அவரைக்கய் வாங்கிய பிறகுதான் அது நினைவுக்கு வந்தது ! என்ன செய்தார் அவர்? சடக்கென்று மேல் துண்டில் பிடித்து ஒரு முடிச்சாகக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார் !  

மனைவி சொன்னது – விதி !

கணவர் செய்தது – ‘உரையிற் கோடல்’ !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 26, 2013 7:52 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் -173 க்குப் பின் வந்துள்ள  175 ஐ , 174 என்று கொள்ளவும் . 175 பின் தொடர்கிறது.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 27, 2013 10:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (175)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்தது ‘இன்’ !  :-

“இன்னென  வரூஉம்  வேற்றுமை  யுருபிற்
கின்னென்  சாரியை  யின்மை வேண்டும்” !   (புணரி . 29)

‘இன் என வரும் வேற்றுமை உருபிற்கு’ -  ‘இன்’  எனும் 5ஆம் வேற்றுமை உருபு வந்து  புணர்ந்தால் ,

‘இன் என் சாரியை இன்மை வேண்டும்’ -  ‘இன்’ சாரியை கெடும் !

விள + இன் + இன் =  விளவின்  ( இன் – சாரியை கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

பலா + இன் + இன் =  பலாவின்  ( இன் – சாரியை கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆயினும் , இளம்பூரணர் , சில இடங்களில் இந்த விதிக்கு  முரணாகவும்  புணர்ச்சி  ஏற்படுவதுண்டு எனக் கூறி , அதற்குப் , ‘பாம்பினிற் கடிது தேள்’  என்று எடுத்துக்காட்டும் சொன்னார் !

பாம்பு + இன் + இன் + கடிது  =  பாம்பினிற் கடிது  (இன் – சாரியை கெடவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இதன் பின் , எல்லாச் சாரியைகளுக்கும் பொருந்துமாறு ஒரு விதியை முன் வைக்கிறார் தொல்காப்பியர் ! : -

பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு  நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
திடைநின்  றியலுஞ் சாரியை யியற்கை
உடைமையு மின்மையு மொடுவயி  னொக்கும்  (புணரி . 30)


‘பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப’ – பெயர்ச்சொல்லும் , வினைச்சொல்லும் புணரும்போதும் , பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொல்லும் புணரும்போதும் ,

‘வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்’ -  வேற்றுமை உருபானது நின்று வெளிப்படத் தோன்றுவது உண்டு ;

‘தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்’ – அப்படி  வெளிப்படையாகத் தோன்றாது மறைதலும் உண்டு ;

‘ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி’ -  சாரியை வரவேண்டும் என்ற விதி , மரபு , இருந்தால் மட்டும் அதற்கு இயைய ,  
‘சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
இடை நின்று இயலும் சாரியை இயற்கை’ -  சாரியை பெறும் சொற்களைப் பிரித்தால் , சாரியையானது நடுவே நிற்கும் ;

‘உடைமையும் இன்மையும் ஒடு வயின் ஒக்கும்’ -  ‘ஒடு’ வேற்றுமை உருபு புணரும்போது , ‘இன்’ சாரியை வரவும் செய்யும் , வராமலும் இருக்கும் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! : -

1 . பெயரும் தொழிலும் சாரியை பெற்றுப் புணர்ந்தது –

விள + இன் + ஐ  + குறைத்தான் =  விளவினைக் குறைத்தான்  (வேற்றுமைப் புணர்ச்சி)
விள – பெயர் ; இன் – சாரியை ; ஐ – 2ஆம் வேற்றுமை உருபு ; குறைத்தான் – தொழில் (வினை)  


விள + இன் + ஐ  + கொண்டவன் =  விளவினைக் கொண்டவன்  (வேற்றுமைப் புணர்ச்சி)
விள – பெயர் ; இன் – சாரியை ; ஐ – 2ஆம் வேற்றுமை உருபு ; கொண்டவன் – வினையாலணையும் பெயர் .

2 . பெயரும் வினையும் சாரியை பெற்று , வேற்றுமை உருபு பெறாததற்கு –

நிலா + அத்து  + கொண்டான் =  நிலாவத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலா – பெயர் ; கொண்டான் – வினை ; அத்து – சாரியை ;   வேற்றுமை உருபு வெளிப்பட  வரவில்லை .

3 . பெயரும் பெயரும் சாரியை பெற்று , வேற்றுமை உருபு பெறாததற்கு –
நிலா + அத்து  + கொண்டவன் =  நிலாவத்துக் கொண்டவன் (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலா – பெயர் ; கொண்டவன் – வினையாலணையும் பெயர் ; அத்து – சாரியை ;   வேற்றுமை உருபு வெளிப்பட  வரவில்லை .

4 . சாரியை பெறும் வழக்கு இல்லாத நிலையில்  , அதைப் பெறாது வருவதற்கு எடுத்துக்காட்டு –

நிலா + கதிர் = நிலாக் கதிர்  (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலா + முற்றம் = நிலா முற்றம்  (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . சாரியை பெரும்பாலும் நடுவிலேதான் வருமெனினும் , இறுதியிலே வருவதும் உண்டு –

எல்லா + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும்

  ஈற்று உம்மையை  ‘இது முற்றும்மை ; சாரியை இல்லை’ என்று சிலர் கருதியுளர் !

இளம்பூரணர் மட்டுமல்ல , நச்சினார்க்கினியரும் ஈற்று ‘உம்’மையைச் சாரியை என்றுதான் கொண்டார் ! அவர்கள் கொண்டது சரிதான் !

சாரியையா ? முற்றும்மையா ? தீர்மானிப்பது எப்படி ?
பயிலக்கூடிய தொடர்தான் தீர்மானிக்கும் !

‘எல்லாநம்மையும்  விசாரித்தனர்’ –  முதல் உம்மை, எச்ச உம்மை ! ( ‘பிறரையும் விசாரித்தனர்’ என்ற பொருள் வருவதைக் கவனிக்க) .

‘நாற்பது பேர் இருக்கிறோம்; எல்லா நம்மையும் அழைத்துள்ளனர்’ – உம்மை , முற்றும்மை .

‘மற்றவர்களை அழைக்காவிட்டலும் எல்லா நம்மையும் அழைப்பார்’ – இரண்டாம் உம்மை , சாரியை !

6 . ‘ஒடு’ உருபு புணரும்போது சாரியை வரலாம் , வராமலும் போகலாம் –
பூ + இன் + ஒடு = பூவினொடு  (வ் , உடம்படுமெய் ; இன்  சாரியை வந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ +  ஒடு = பூவொடு  (வ் , உடம்படு மெய் ; இன்  சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 30, 2013 12:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (176)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்து , ‘அத்து’ச் சாரியை பற்றியும் ‘வற்று’ச் சாரியை பற்றியும் ஒரு நூற்பாவில் விளக்குகிறார் ! :-

“அத்தே வற்றே  யாயிரு  மொழிமேல்
ஒற்றுமெய்  கெடுத றெற்றென் றற்றே
அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே ” (புணரி . 31)

‘அத்தே வற்றே  ஆயிரு மொழிமேல்’ -  ‘அத்து’ , ‘வற்று’ ஆகிய சாரியைகளின் முன் ,

‘ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்று’ -  வந்த மெய்யும் , மெய் மீது உயிரிருந்தால் மெய்யும் அந்த உயிரும் கெடும் !

‘அவற்று முன் வல்லெழுத்து மிகுமே’ -  இந்த இரு சாரியைகளின் முன் ,  வல்லெழுத்துச் சந்தி எழுத்து வரும் !

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் , விரிவாக ! –

கலம் + அத்து + குறை = கலத்துக் குறை (ம் – கெட்டது , க் - சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)

அவை + வற்று + கோடு = அவற்றுக் கோடு (வை – கெட்டது , க்- சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே வந்த ‘கலம்’ என்பதன் விகாரம் ‘கலன்’ ; இக்  ‘கலன் ’ நிலைமொழியாக வந்தாலும் , அப்போதும் ‘கலன் + அத்து + குறை  =  கலத்துக் குறை’  என்றுதான் ஆகும் என்கிறார் இளம்பூரணர் !

‘அத்து’ச் சரியைப் புணர்ச்சியில் , நிலைமொழி ஈறு கெடாமையும் உண்டு என்கிறார் இளம்பூரணர் ! :-

வெயில் + அத்து + கொண்டான் = வெயிலத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)

(நிலை மொழியின் ‘ல்’ கெடவில்லை; ‘அ’வுடன் சேர்ந்து ‘ல’ ஆகியுள்ளது)

விண் + அத்து + கொண்டான் = விண்ணத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)

(நிலை மொழியின் ‘ண்’ கெடவில்லை; இரட்டித்து , ‘அ’வுடன் சேர்ந்து ‘ண’ ஆகியுள்ளது)

’அத்தின் அகரம் அகரமுனை இல்லை’ (புணரி . 23) என்று முன் நாம் பார்த்த நூற்பாவுக்கு மேலும் ஓர் ஒட்டுச் செய்தியை இளம்பூரணர் தருகிறார் !
அஃதாவது ,
‘அ’ என்ற எழுத்தின் முன்னால் ‘அத்து’ வரும்போதுதான் அத்தின் ‘அ’ கெடும் என்பதில்லை !  வேறு உயிர் ஈற்றின் முன்னும்  அத்தின் ‘அ’ கெடும் என்கிறார் இளம்பூரணர் ! அதற்கு அவரின் எடுத்துக்காட்டு -  ‘அண்ணாத் தேரி’ !

அண்ணா + அத்து + தேரி = அண்ணாத் தேரி  (வேற்றுமைப் புணர்ச்சி)

‘அண்ணா’வின் ஈறு ‘ஆ’ ; இதன் முன் ‘அத்து’ வந்தாலும் , அத்தின் ‘அ’ கெட்டதைக் காணலாம் !

அண்ணா – ஓர் ஊரின் பெயராக இருக்கலாம்  என எழுதியுள்ளனர்.

தேரி – மணல் குன்று (Sand hill)

அண்ணாத் தேரி – அண்ணா என்ற ஊரிலுள்ள மணற் குன்று .

‘அத்து’ என்பதிலுள்ள ‘அ’ , நிலைமொழி ஈறான ‘அ’ முன் கெடும் என்று பார்த்தோம் !

அப்படிக் கெடாது வரும் இடங்களும் உள ; ஏமாந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் இளம்பூரணர் ! அவர் தந்த சான்று –  ‘விளவத்துக் கண்’ .

விள + அத்து + கண் = விளவத்துக் கண்  (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு , நிலைமொழி ஈறு ‘அ’தான் ! தொல்காப்பிய விதிப்படி (புணரி ,23) , இந்த ‘அ’முன் , அத்தின் ‘அ’ கெடவேண்டும் ! ஆனால் கெடாமல் , வகர உடம்படுமெய் பெற்று , விளவத்துக் கண் என்று வந்துள்ளது !

‘விள’ -  இச் சொல் குழப்பத்தைத் தரும் !

‘விள’ , மரத்தையும் , ஊர்ப்பெயரையும் குறிக்கும் ! இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும் !

 விள மரம் எப்படி இருக்கும் என்று படத்துடன் முன் கட்டுரை ஒன்றில் நாம் பார்த்துள்ளோம் !

‘விள’ என்பது ஊரையும் குறிக்குமா? – ஐயமா?

விளவங்கோடு – இருக்கிறதே ?  

இப்படியெல்லாம் , இளம்பூரணர் , இலக்கணத்தை வாரி வழங்குவதால்தான் , ‘தொல்காப்பியம்’ என்பதுபோல , இளம்பூரணர் உரையை ‘இளம்பூரணம்’ என்கிறோம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 03, 2013 8:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (177)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது , எழுத்துச் சாரியை ! : -

“காரமுங் கரமுங் கானொடு சிவணி
நேரத் தோன்று மெழுத்தின் சாரியை”  (புணரி . 32)

அஃதாவது –

‘காரமும் கரமும் கானொடு சிவணி  - ‘காரம்’ , ‘கரம்’ , ‘கான்’ ஆகியன ,

‘நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை’ – எழுத்துச் சாரியைகளாக வரும் !

இதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தரவில்லை ! – இளம்பூரணரும் தரவில்லை , நச்சினார்க்கினியரும் தரவில்லை !

எல்லோருக்கும் தெரிந்ததுதான் என விட்டிருப்பர் !


 ‘ஆகாரம் ’ -   ‘ஆ ’வைக் குறிக்கும் !

இங்கே ‘காரம்’  , எழுத்துச் சாரியை !


 ‘மகரம் ’ -   ‘ம ’வைக் குறிக்கும் !

இங்கே ‘கரம்’  , எழுத்துச் சாரியை !


 ‘ணஃகான் ’ -   ‘ண ’வைக் குறிக்கும் !

இங்கே ‘கான்’  , எழுத்துச் சாரியை ! (ஃ - சந்தி)


‘அஃகேனம் ’ -   ‘ஃ ’எழுத்தைக் குறிக்கும் ! (ஃ , க் - சந்திகள்)


இங்கே ‘ஏனம்’  , எழுத்துச் சாரியை !


இளம்பூரணர் , தம் உரையில் , ‘ஆனம்’ , ‘ஏனம்’ , ‘ஓனம்’ என்ற மூன்று எழுத்துச் சாரியைகளைத் தெரிவிக்கிறார் ! எடுத்துக்காட்டுகளைச் சொல்லவில்லை !

இம் மூன்றில் ‘ஏனம்’ சாரியை பற்றி மேலே பார்த்துவிட்டோம் ! மீதி இரண்டு சாரியைகள் மேலாய்வுக்கு உரியனவாக உள்ளன!

‘ஆனம்’  ‘அ’வையும் , ‘ஓனம்’ ‘ஒ’வையும் குறித்திருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு !

நன்னூலில் (126) , ‘அ’ ஓர் எழுத்துச் சாரியை எனக் கூறப்பட்டுள்ளது !

அஃதாவது , க்  , ச் , ட் , த் , ப் , ற்  - ஆகிய மெய்களைக் குறிக்க இலக்கணத்தில் ‘க ச ட த ப ற  மெல்லினமாம்’   என்றுதானே எழுதுகிறார்கள்? அப்போ அங்கே ‘அ’ எனும் சாரியை சேர்த்துத்தானே ( க் + அ = க , என்றாங்கு) கூறுகிறார்கள்? இதைத்தான் நன்னூல் கூறுகிறது !

இங்கே , இராமாநுசர் (நன் . 126) கருத்து குறிப்பிடத் தக்கது !அதை வருமாறு விளக்கலாம் ! :-

1 .‘அ’வைக் குறிக்க ‘ஆன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘ஆன’ !

2 .‘எ’யைக் குறிக்க ‘ஏன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘ஏன’ !

3 .‘ஒ’வைக் குறிக்க ‘ஓன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘ஓன’ !

4 .‘ஐ’வைக் குறிக்க ‘ஐயன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘அன’ !

5 .‘ஔ’வைக் குறிக்க ‘ஔவன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘அன’ ! (வ்-உடம்படு மெய்)

இலக்கண நூற்களில் , ‘ககர இகரம்’ என்றால் ‘கி’ ஆகும் ! இங்கே வந்துள்ள ‘கர’ , ‘கரம்’ என்பதன் திரிபுதான் !  இரண்டும் எழுத்துச் சாரியைகள்தான் !

இதே போலத்தான் ‘மகர உகரம்’ – ‘மு’ !

‘பகர உகரம்’ – ‘பு’ !

‘பகர ஊகாரம்’ – ‘பூ’ !
- இப்படியே பிற எழுத்துகளுக்கும் ஒட்டிக் கொள்க!

இலக்கணங்களில் ‘உப்பகாரம்’ என்பது – ‘பு’!
‘பவ்வீ’ என்பது – ‘பீ ’
‘உச்சகாரம்’ என்பது – ‘சு’!

இங்கு  எழுத்துச்சாரியை , சொற்சாரியை ஆகிய இரு கலைச் சொற்களை (Technical terms) நான் விளக்கவேண்டும் !
எழுத்துச் சாரியை வேறு , ஓர் எழுத்து சாரியையாக வருவது வேறு !

ஆன் – இதில் ஒரே ஒரு எழுத்தாகிய  ‘ன்’ சாரியையாக வந்துள்ளது ; இஃது எழுத்துச் சாரியை அல்ல; சொற்சாரியை !

பண்ணுவாள் – இதன் நடுவே ஒரே ஒரு எழுத்தாகிய  ‘உ’ சாரியையாக வந்துள்ளது ; இஃது எழுத்துச் சாரியை அல்ல; சொற்சாரியை !

எழுத்தைக் குறிக்கப் பயன்பட்டால்தான் அச் சாரியை எழுத்துச் சாரியை !

  இதுவரை நாம் பார்த்தவை எழுத்துத் தமிழுக்கானவை !

இனிப் பேச்சுத் தமிழில் எப்படி உச்சரிக்கிறோம் ?

‘அ’வை , ‘ஆனா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘ஆனா’ !

‘ஆ’வை , ‘ஆவன்னா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘அன்னா’
! (வ்- உடம்படு மெய்) .

‘க’வைக் , ‘கானா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘ஆனா’ !

‘கா’வைக் , ‘காவன்னா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘அன்னா’ !
(வ் – உடம்படு மெய்)
- இவை மேலாய்வுக்கு உரியனவே !


மொழியியலில் சாரியையை Empty morph குறிப்பர் !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 23 of 84 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 53 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக