புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 23 of 84 •
Page 23 of 84 • 1 ... 13 ... 22, 23, 24 ... 53 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

தொடத் தொடத் தொல்காப்பியம் (164)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
வேற்றுமைப் புணர்ச்சி குறித்துத் தொல்காப்பியர் , முன் நூற்பாவில் (புணரி . 10) , ‘வேற்றுமை குறித்த புணர் மொழி’ என்றார் !
இந் நூற்பாவில் , வேற்றுமை உருபுகள் இத்தனை என்றும் , அவற்றின் வரிசை இன்னது என்றும் கூறுகிறார் ! :-
“ஐஒடு குஇன் அதுகண் ணென்னும்
அவ்வா றென்ப வேற்றுமை யுருபே” (புணரி . 11)
இந் நூற்பாவில் உள்ள வேற்றுமை உருபுகளை (Case markers) எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள் ! :-
வேற்றுமை உருபுகள் மொத்தம் ஆறுதான் ! :-
ஐ (இரண்டாம் வேற்றுமை)
ஒடு (மூன்றாம் வேற்றுமை)
கு (நான்காம் வேற்றுமை)
இன் (ஐந்தாம் வேற்றுமை)
அது (ஆறாம் வேற்றுமை)
கண் (ஏழாம் வேற்றுமை)
( முதல் வேற்றுமை – எழுவாய் வேற்றுமை ; 8ஆம் வேற்றுமை – விளி வேற்றுமை)
மேல் 6 வேற்றுமை உருபுகளில் கு , கண் ஆகிய இரண்டும்தான் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை !
எனவே இந்த இரண்டும் (கு , கண்) , புணரும்போது , சந்தியாக வல்லெழுத்தோ மெல்லெழுத்தோ மிக்கு வரும் என்று அடுத்துக் கூறுகிறார் ! :-
“வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்
கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும் !” (புணரி . 12)
இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு பிரித்துக் காட்டலாம் ! :-
ஊர் + கு = ஊர்க்கு √ (கு- நான்காம் வேற்றுமை உருபு ; க் – வல்லெழுத்துச் சந்தி)(வேற்றுமைப் புணர்ர்ச்சி)
= ஊர்கு ×
நீர் + கு = நீர்க்கு √ (கு- நான்காம் வேற்றுமை உருபு ; க் – வல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ர்ச்சி)
= நீர்கு ×
ஊர் + கண் = ஊர்க்கண் √ (கண்- 7ஆம் வேற்றுமை உருபு ; க் – வல்லெழுத்துச் சந்தி)(வேற்றுமைப் புணர்ர்ச்சி)
= ஊர்கண் ×
நீர் + கண் = நீர்க்கண் √ (கண்- 7ஆம் வேற்றுமை உருபு ; க் – வல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ர்ச்சி)
= நீர்கண் ×
தம் + கண் = தங்கண் √ (கண்- 7ஆம் வேற்றுமை உருபு ; ங் – மெல்லெழுத்துச் சந்தி)(வேற்றுமைப் புணர்ர்ச்சி)
= தம்கண் ×
எம் + கண் = எங்கண் √ (கண்- 7ஆம் வேற்றுமை உருபு ; ங் – மெல்லெழுத்துச் சந்தி)(வேற்றுமைப் புணர்ர்ச்சி)
= எம்கண் ×
இந் நூற்பா உரையில் இளம்பூரணர் சில கூடுதல் இலக்கணங்களைத் தருகிறார் ! அவற்றை வருமாறு பிரித்து ஆயலாம் ! :-
அரசர் + கண் = அரசர்க்கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (=அரசரிடத்தில்)
= அரசர்கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பார்ப்பார் + கண் = பார்ப்பார்க்கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (=பார்ப்பார்களிடத்தில்)
= பார்ப்பார்கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + கண் = பொற்கண் (வேற்றுமைப் புணர்ச்சி) (=பொன்னில்)
பொன் + கு = பொற்கு (வேற்றுமைப் புணர்ச்சி) (=பொன்னுக்கு)
ஆங்கு + கண் = ஆங்கண் (வேற்றுமைப் புணர்ச்சி) (=அவ்விடத்தில்)
ஈங்கு + கண் = ஈங்கண் (வேற்றுமைப் புணர்ச்சி) (=இவ்விடத்தில்)
ஊங்கு + கண் = ஊங்கண் (வேற்றுமைப் புணர்ச்சி) (=உவ்விடத்தில்; அவ்விடத்திற்கும் இவ்விடத்திற்கும் நடுவே உள்ள இடம்)
அவன் + கு = அவற்கு (வேற்றுமைப் புணர்ச்சி) (=அவனுக்கு)
இவன் + கு = இவற்கு (வேற்றுமைப் புணர்ச்சி) (=இவனுக்கு)
நும் + கண் = நுங்கண் (வேற்றுமைப் புணர்ச்சி) (=நும்மிடத்தில்)
கொற்றன் + கு = கொற்றற்கு (வேற்றுமைப் புணர்ச்சி) (=கொற்றனுக்கு)
சாத்தன் + கு = சாத்தற்கு (வேற்றுமைப் புணர்ச்சி) (=சாத்தனுக்கு)
அவன் + கண் = அவற்கண் ×
அவன் + கண் = அவன்கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (=அவனிடத்தில்) ( ‘அவன்கண் விடல்’ என்ற திருக்குறள் காண்க !)
சாத்தன் + கண் = சாத்தற் கண் ×
சாத்தன் + கண் = சாத்தன் கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (= சாத்தனிடத்தில்)
‘அவற்கு’ என்று வரும்போது , ‘அவற்கண்’ என வரும் என்றுதானே நினைக்கத் தோன்றும் ?
ஆனால் அப்படி வராது என்கிறார் இளம்பூரணர் !
இதில் மொழி நுட்பம் உள்ளதா?
உள்ளது !
‘அவற்கண்’ – எனில் , ‘அவனுடைய கண்’ என்றும் ‘அவனுக்குக் கண்’ என்றும் பொருள் திரள வாய்ப்பு ஏற்படுகிறது !
எனவே , தெளிவைத் தருவதற்காக ‘அவன் கண்’ என்று போட விழைந்தனர் !
இதே முறையில்தான் ‘சாத்தற் கண்’ என்றால் , ‘சாத்தனுடைய கண்’ என்றோ ‘சாத்தனுக்குக் கண்’ என்றோ பொருள்வர வாய்ப்பு ஏற்படும் ! இதைத் தவிர்ப்பதற்கே ‘சாத்தன் கண்’ !
சூட்சுமம் புரிந்ததா?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (165)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
இப்போது ஆறாம் வேற்றுமை உருபு எப்படிப் புணரும் என்பதற்கு நூற்பா ! :-
“ஆற னருபி னகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும் ! ” (புணரி . 13)
‘ஆறன் உருபின் அகரக் கிளவி’ - ‘அது’ எனும் 6ஆம் வேற்றுமை உருபின் ‘அ’ ,
‘ஈறாகு அகர முனை’ - சொல்லின் ஈற்றில் உள்ள ‘அ’ என்ற எழுத்தைப் பார்த்துக் ,
‘கெடுதல் வேண்டும்’ - கெடும் !
இதற்கு இளம்பூரணர் சான்றுகள் – தமது , நமது, எமது , தனது , எனது , நினது .
அஃதாவது –
தம + அது = தமது (நிலைமொழி ஈற்று ‘ம’வின் அகரத்தின் முன் , ‘அது’ வின் அகரம் நிற்காது !)
‘தம’ எங்கிருந்து வந்தது?
‘நெடுமுதல் குறுகி விகாரப்பட்டு நின்ற மொழி ’ என்று விடை கூறுகிறார் இளம்பூரணர் !
அஃதாவது-
தாம் → நெடுமுதல் குறுகி → தம் → விகாரப் பட்டுத் → தம !
‘தம’ வந்த வழி கண்டாயிற்றா?
இதனைப் போன்றே –
நாம் → நெடுமுதல் குறுகி → நம் → விகாரப் பட்டு → நம → + அது = நமது !
யாம் → நெடுமுதல் குறுகி → எம் → விகாரப் பட்டு → எம → + அது = எமது !
தான் → நெடுமுதல் குறுகித் → தன் → விகாரப் பட்டுத் → தன → + அது = தனது !
யான் → நெடுமுதல் குறுகி → என் → விகாரப் பட்டு → என → + அது = எனது !
நீ → நெடுமுதல் குறுகி → நின் → விகாரப் பட்டு → நின → + அது = நினது !
இவ்வளவு எதற்கு ? ‘தம் + அது = தமது’ எனக் காட்டியிருக்கலாமே ?
நல்ல கேள்வி !
இப்படிக் காட்டியிருந்தால் ,
‘தம் + அது = தம்மது ’ என்றுதான் கூறவேண்டியிருக்கும் !
இதனைத் தவிர்ப்பதற்கே , ‘தாம்’ என்பதிலிருந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது !
‘தாம்’ என்பதிலிருந்தே ‘தம்’ வந்தது (உருபியல் . 16) என பின்னால் காட்ட உள்ளார் தொல்காப்பியர்!
ஆகவே , மிகப் பழைய ஓர் இலக்கண மரபிற்கு உட்பட்டுத்தான் தொல்காப்பியர் இலக்கணம் கூறிவருகிறார் என்பது தெளிவாகிறது !
தமிழ் வரலாற்றிலக்கணம் வகுக்க இதுவே உதவும் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (166)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
வேற்றுமை உருபானது , ஒரு பெயருடன் எப்படிப் புணரும் ? :-
“வேற்றுமை வழிய பெயர்புணர் நிலைய ” (புணரி . 14)
‘வேற்றுமை , வழிய ’ - வேற்றுமை உருபானது , பெயரின் பின்னே வரும்,
‘பெயர்புணர் நிலையே’ – பெயர்களுடன் புணரும்போது !
சாத்தன் + ஐ = சாத்தனை ( இரண்டாம் வேற்றுமை உருபு புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
சாத்தன் + ஒடு = சாத்தனொடு ( மூன்றாம் வேற்றுமை உருபு புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
‘சாத்தன்’ எடுத்துக்காட்டு இளம்பூரணர் காட்டியது .
வேறு காட்டுகள் : -
பாரி + ஐ = பாரியை (ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
பாரி + ஒடு = பாரியொடு (ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
பாரி + கு = பாரிக்கு (கு – நான்காம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
பாரி + இன் = பாரியின் (இன் – ஐந்தாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
பாரி + அது = பாரியது (அது –ஆறாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
பாரி + கண் = பாரிக்கண் (கண் –ஏழாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
‘பாரி வந்தான்’ : இதில் ‘பாரி’ , எழுவாய் வேற்றுமை(முதல் வேற்றுமை) கொண்டது. ‘பாரி வந்தான்’ என்பதன் இடையே எந்த வேற்றுமைப் பொருளும் இல்லை ; எனவே ‘பாரி வந்தான்’ எனபது அல்வழிப் புணர்ச்சி !
‘பாரீ வருக’ : இதில் ‘பாரீ’ , விளி வேற்றுமை(எட்டாம் வேற்றுமை) கொண்டது . ‘பாரீ வருக’ என்பதன் இடையே எந்த வேற்றுமைப் பொருளும் இல்லை ; எனவே ‘பாரீ வருக’ என்பது அல்வழிப் புணர்ச்சி !
மேலே வந்த ‘சாத்தன்’ , ‘பாரி’ ஆகியன இயற் பெயர்கள் (Proper nouns)!
வேறுவகைப் பெயர்களுக்கும் இவ்விதி பொருந்துமா ?
நிச்சயமாக !
பண்புப் பெயருக்கு (Qualitative noun)எவ்வாறு பொருந்துகிறது என்று பார்ப்போமே ! :-
நீதி + ஐ = நீதியை (ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீதி + ஒடு = நீதியொடு (ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீதி + கு = நீதிக்கு (கு – நான்காம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீதி + இன் = நீதியின் (இன் – ஐந்தாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீதி + அது = நீதியது (அது –ஆறாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீதி + கண் = நீதிக்கண் (கண் –ஏழாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
‘நீதி வென்றது’ : இதில் ‘நீதி’ , எழுவாய் வேற்றுமை(முதல் வேற்றுமை) கொண்டது. ‘நீதி வென்றது’ என்பதன் இடையே எந்த வேற்றுமைப் பொருளும் இல்லை ; எனவே ‘நீதி வென்றது’ எனபது அல்வழிப் புணர்ச்சி !
‘நீதியே வருக’ : இதில் ‘நீதியே’ , விளி வேற்றுமை(எட்டாம் வேற்றுமை) கொண்டது . ‘நீதியே வருக’ என்பதன் இடையே எந்த வேற்றுமைப் பொருளும் இல்லை ; எனவே ‘நீதியே வருக’ என்பது அல்வழிப் புணர்ச்சி !

தொடத் தொடத் தொல்காப்பியம் (167)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
முன் இரு கட்டுரைகளில் வேற்றுமையோடு புணரும் ‘பெயர்’ (Noun) பற்றிப் பேசினோம் !
‘அப்படியானால் பெயர் எத்தனை வகைப்படும் ?’ என்று ஒரு மாணவன் தொல்காப்பியரைக் கேட்டிருக்கவேண்டும் !
அவனுக்கு விடை கூறினார் தொல்காப்பியர் ! :-
“உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென்
றாயிரெண் டென்ப பெயர்நிலைச் சுட்டே ” (புணரி . 15)
பெயர் இரண்டு வகைப்படும் ! :-
1 . உயர்திணைப் பெயர் (Nouns of Human class)
2 . அஃறிணைப் பெயர் ( Nouns of Non – human class)
1 . உயர்திணைப் பெயர்கள் - ஆடூஉ (ஆண்) , மகடூஉ (பெண்) முதலியன .
2 . அஃறிணைப் பெயர்கள் - ஒன்று , பல முதலியன .
மேல் எடுத்துக்காட்டுகள் இளம்பூரணர் தந்தவை !
மேலும் சில பெயர்களை நாம் சுட்டலாம் !
1 . தலைவன் , தலைவி , அமைச்சர் , பாணன் , ஆய்வாளன் , ஆசிரியர் , தொழிலாளி , சிற்பி , மாணவன் – எல்லாம் உயர்திணைப் பெயர்களே !
2 . ஆடு , கோழி , கல் , தங்கம் , மரம் , அறம் , அன்பு , காதல் , மகிழ்ச்சி , துன்பம் – எல்லாம் அஃறிணைப் பெயர்களே !
முன் கட்டுரைகளில் , பெயர்களின் பின்னே வேற்றுமை உருபுகள் வருவதைப் பார்த்தோமல்லவா?
அதுபோலவே , சாரியைகளும் பெயர்களின் பின்னே வருவதை அடுத்துச் சுட்டுகிறார் ! : -
“அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே” (புணரி . 16)
அஃதாவது –
ஆடூஉ + இன் + கை = ஆடூவின் கை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பல + வற்று + கோடு = பலவற்றுக் கோடு (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் இரண்டும் இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-
மேலும் சில ! –
காதலி + இன் + அது = காதலியினது (இன் – சாரியை ; அது – 6ஆம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
வீடு + இன் + ஐ = வீட்டினை (இன் – சாரியை ; ஐ – 2ஆம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + அம் + பழம் = புளியம் பழம் (அம் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
சரி ! வேற்றுமை உருபும் பெயருக்குப் பின்னே வரும் ; சாரியையும் பெயருக்குப் பின்னே வரும் !
அப்படியானால் , இரண்டும் ஒரே நேரத்தில் பெயருக்குப் பின்னால் வருமா?
வரும் !
சிற்பி + இன் + அது = சிற்பியினது (இன் – சாரியை ; அது – 6ஆம் வேற்றுமை உருபு)
தங்கம் + அத்து + இன் + விலை = தங்கத்தின் விலை (அத்து – சாரியை ; இன் – 5ஆம் வேற்றுமை உருபு)
வேற்றுமை உருபும் சாரியையும் ஒரே நேரத்தில் பெயரின் பின்னே வரும்போது , எது முன்னே வரும் ? எது பின்னே வரும் ?
சாரியை முன்னே வரும் ; வேற்றுமை உருபு பின்னே வரும் ! : -
தாய் + இன் + அது + அன்பு = தாயினது அன்பு (இன் – சாரியை ; அது – வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + அத்து + ஒடு + முட்டியது = மரத்தொடு முட்டியது (அத்து – சாரியை ; ஒடு – வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
தமிழ்ச் சொற்களை எப்படி அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி விளக்குகிறார் தொல்காப்பியர் பார்த்தீர்களா?
வியப்பு ! வியப்பு !

தொடத் தொடத் தொல்காப்பியம் (168)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
சாரியை பர்றி முன் கட்டுரையில் சிறிது பார்த்தோம் !
சாரியைகள் எத்தனை ? அவை யாவை ?
விடை கூறினார் தொல்காப்பியர் ! :-
“அவைதாம்
இன்னே வற்றே யத்தே யம்மே
ஒன்னே யானே யக்கே யிக்கே
அன்னென் கிளவி யுளப்படப் பிறவும்
அன்ன வென்ப சாரியை மொழியே” (புணரி . 17)
சாரியைகள் பல ! தொல்காப்பியர் 9ஐ மட்டும் குறிப்பிட்டு , ‘இன்னும் பல உள’ என முடிக்கிறார் !
தொல்காப்பியர் கூறிய 9 சாரியைகளை எடுத்துக்காட்டுகளுடன் வருமாறு தரலாம் : -
1 . இன் – சாரியை ( ‘நிலவினை ’) (நிலவு + இன் + ஐ )
2 . வற்று – சாரியை ( ‘எல்லாவற்றையும் ’) (எல்லா + வற்று + ஐ + உம் )
3 . அத்து – சாரியை (‘மரத்துப்பால்’) (மரம் + அத்து + பால் )
4 . அம் – சாரியை ( ‘புன்னையங்காடு’) (புன்னை + அம் + காடு )
5 . ஒன் – சாரியை ( ‘கோஒனை’) (கோ + ஒன் + ஐ )
6 . ஆன் – சாரியை ( ‘பொருள்வயினானும்’) (பொருள்வயின் + ஆன் + உம் )
7 . அக்கு – சாரியை ( ‘தாழக்கோல்’) (தாழ் + அக்கு + கோல் )
8 . இக்கு – சாரியை ( ‘ஆடிக்குக் கொண்டான்’) (ஆடி + இக்கு + கொண்டான் )
9 . அன் - சாரியை (‘அதனை’) (அது + அன் + ஐ )
இளம்பூரணர் சில சாரியைகளைக் கூடுதலாகக் காட்டுகிறார் ! அவர் தந்த சாரியைகளையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளையும் வருமாறு நல்கலாம் ! :-
1 . தம் – சாரியை ( ‘அவர்தம்மால் ஆகாது’) (அவர் + தம் + ஆல்)
2 . நம் – சாரியை ( ‘எல்லார்நம்மையும்’) (எல்லார் + ந்ம் + ஐ + உம்)
3 . நும் – சாரியை ( ‘எல்லீர்நும்மையும்’) (எல்லீர் + நும் + ஐ + உம்)
4 . கெழு – சாரியை ( ‘கான்கெழு நாடன்’) (கான் + கெழு + நாடன்)
5 . ஏ – சாரியை ( ‘நாலே கால்’) (நால் + ஏ + கால்)
6 . ஐ – சாரியை ( ‘மற்றையவர்’) ( மற்று + ஐ + அவர்)
இந்த இரு பட்டியல்களிலும் சேராத வேறு சாரியைகளும் உள ! :-
1 . அ – சாரியை ( ‘தனக்கு’) (தன் + அ+ கு)
2 . அல் – சாரியை ( ‘தொடையல்’) (தொடை + அல்)
3 . ஆம் – சாரியை ( ‘கூட்டாஞ் சோறு’) (கூட்டு + ஆம் + சோறு)
4 . உ – சாரியை ( ‘சாத்தனுக்கு’) (சாத்தன் + உ + கு)
5 . கு – சாரியை ( ‘காண்குவன்’)(காண் + கு + அன்)
6 . ன் – சாரியை ( ‘ஆனை ’) (ஆ + ன் + ஐ)
மேல் பட்டியலால் , சாரியை என்பது சொல்லின் நடுவேயும் வரும், ஈற்றிலும் வரும் என்பதை அறியலாம் !
மேல் நூற்பா உரையில் சுவையான ஆய்வு ஒன்றையும் தருகிறார் இளம்பூரணர் !
‘குலையலங் காந்தள்’ – என்பது தொடர் !
இதனைப் பார்த்ததும் , ‘அலம்’ என்ற சாரியை இடையே உள்ளது போலத்தான் தெரிகிறது ! ‘அலம்’ , சாரியையா?
‘அலம்’ , சாரியை இல்லையாம் !
‘அலங்கு காந்தள்’ என்பதே விகாரம் அடைந்து ‘அலங்காந்தள்’ என வந்ததாம் ! இளம்பூரணர் கேள்வியும் கேட்டுப் பதிலும் சொல்லுகிறார் !
தொல்காப்பியம்தான் சுவை என்பதில்லை ; இளம்பூரணமும் சுவைதான் !
அலங்கு காந்தள் – அசையும் காந்தள் .
அலங்கு காந்தள் – வினைத் தொகை (Verb compound).
தொல்காப்பியர் கூறிய சில சாரியைகளை நன்னுல் ஆசிரியர் பவணந்தி முனிவர் மாற்றியுள்ளார் ! மாற்றங்களில் சில ! : -
தொல்காப்பியத்தில் – ‘வற்று’ ; நன்னூலில் ‘அற்று’ !
தொல்காப்பியத்தில் – ‘அக்கு’ ; நன்னூலில் - ‘அ ’!
தொல்காப்பியத்தில் – ‘இக்கு ’; நன்னூலில் - ‘கு’ !
தொல்காப்பியத்தில் – ‘ஒன் ’ ; நன்னூலில் – கைவிடப்பட்டது!
இன்னும் நாம் தமிழக வட்டார வழக்குகளை (Dialects)ஆய்ந்தோமானால் பல புதுச் சாரியைகளை அறியலாம் !
சரி! எந்தெந்த இடத்தில் என்னென்ன சாரியை வரும் என்று விதி உள்ளதா?
உள்ளது ! உருபுப் புணரியலில் தொல்காப்பியர் கூறியுள்ளார் ! அவற்றை அம்முறை வரும்போது பார்ப்போம் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (169)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் 9 சாரியைகளைக் கூறியதை முந்தைய ஆய்வில் பார்த்தோம் !
அதில் முதலாவது – ‘இன்’ சாரியை !
அதைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் ! : -
“அவற்றுள்
இன்னி னிகர மாவி னிறுதி
முன்னர்க் கெடுத லுரித்து மாகும் !” (புணரி . 18)
‘இன்னின் இகரம்’ - ‘இன்’ என்பதன் ‘இ’ ,
‘ஆவின் இறுதி’ - ‘ஆ’ என்ற சொல்லின் ஈறாகிய ‘ஆ’ முன்,
‘கெடுதலும் உரித்தும் ஆகும் ’ – கெட்டும் வரும் , கெடாமலும் வரும் !
இதற்கு இளம்பூரணரும் , நச்சினார்க்கினியரும் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! : -
ஆ + இன் + ஐ = ஆனை ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஐ = ஆவினை ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஒடு = ஆனொடு ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஒடு = ஆவினொடு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + கு = ஆற்கு ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஐ = ஆவிற்கு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + இன் = ஆனின் ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + இன் = ஆவினின் ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + அது = ஆனது ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + ஐ = ஆவினது ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆ + இன் + கோடு = ஆன்கோடு ( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப்
புணர்ச்சி)
ஆ + இன் + கோடு = ஆவின்கோடு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் –
உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
நூற்பாவில் ஒரு பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறான் ஒரு மாணவன் இளம்பூரணரிடம் !
நூற்பாவில் ‘மாவின் இறுதி’ என்றுதானே உள்ளது? நீங்கள் ‘ஆவின் இறுதி’ என்று பொருள் சொல்கிறீர்களே ? – இதுதான் மாணவன் வினா!
இளம்பூரணர் – “நீ சொல்வது சரிதான் ! நூற்பாவின் ‘இகர மாவினிறுதி’ என்பதை , ‘இகரம் ஆவின் இறுதி’ என்றும் பிரிக்கலாம் ; ‘இகரம் மாவின் இறுதி’ என்றும்
பிரிக்கலாம்தான் ! நீ சொல்வதுபோலப் பிரித்தாலும் , அதற்கும் நான் கூறிய உரை
பொருந்தும் ! ” எனச் சொல்லிவிட்டுச் சில காட்டுகளைக் காட்டியிருக்கவேண்டும் !
அவை –
மா + இன் + ஐ = மானை( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
மா + இன் + ஐ = மாவினை ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
மா + இன் + கோடு = மான்கோடு( ‘இன்’னின் ‘இ’ கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
மா + இன் + கோடு = மாவின்கோடு ( ‘இன்’னின் ‘இ’ கெடாமல் வந்தது; வ் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
மேலே கண்ட ‘ஆவின் இறுதி’ , ‘மாவின் இறுதி’ப் பிரிப்புகள் செம்பதிப்பு (Critical Edition) நோக்கில் குறிப்பிடத் தக்கன ! இரண்டுவகைப் பிரிப்புகளுக்கும் இளம்பூரணர்
உரை கூறினாலும் , அவர் முதலில் சொன்ன ‘ஆவின் இறுதி’ என்ற பிரிப்பையே அவர் ஆதரித்துள்ளார் என அறியவேண்டும் !
‘இன்’னின் ‘இ’ கெடுதல் பற்றி மேலே பார்த்தோம் !
அடுத்து , ‘இன்’னின் ‘ன்’ என்பது , ‘ற்’ ஆவது பற்றிப் பேசுகிறார் ! :-
“அளபாகு மொழிமுத நிலைஇய வுயிர்மிசை
னஃகான் றஃகா னாகிய நிலைத்தே” (புணரி . 19)
‘அளபாகு மொழிமுதல்’ - அளவுப் பெயர்ச் சொல்லின் முதலில்,
‘நிலைஇய உயிர்மிசை’ - நிற்கும் உயிர்க்குமுன் நின்ற,
‘னஃகான் , றஃகான் ஆகிய நிலைத்தே’ – ‘இன்’னின் ‘ன்’ , ‘ற்’ ஆகும் !
அஃதவது –
பத்து + இன் + அகல் = பதிற்றகல் (அல்வழிப் புணர்ச்சி)
(அளவுப் பெயராம் ‘அகல்’ என்பதிலுள்ள ‘அ’ முன்பாக நின்ற ‘ன்’ , ‘ற்’ ஆனது )
பத்து + இன் + உழக்கு = பதிற்றுழக்கு (அல்வழிப் புணர்ச்சி)
(அளவுப் பெயராம் ‘உழக்கு’ என்பதிலுள்ள ‘உ’ முன்பாக நின்ற ‘ன்’ , ‘ற்’ ஆனது )
அளவுப் பெயர்கள் அல்லாமல் வேறு பெயர்கள் வந்தாலும் ‘ன்’ , ‘ற்’ ஆவது உண்டு
என்கிறார் இளம்பூரணர் ! அவர் தந்த உதாரணம் ! –
பத்து + இன் + ஒன்று = பதிற்றொன்று (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + இன் + ஏழு = பதிற்றேழு (அல்வழிப் புணர்ச்சி)
நன்னூலில் , ‘பத்து + இற்று + ஒன்று = பதிற்றொன்று ’ என்று காட்டி , ‘இற்று’
என்ற ஒரு புதுச் சாரியையைத் தந்தார் பவணந்தி முனிவர் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (170)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
முன் ஆய்வில் ‘இன்’ சாரியை ! இப்போது – ‘வற்று’ச் சாரியை! : -
“வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன்
அஃகா னிற்ற லாகிய பண்பே” ! (புணரி . 20)
‘வஃகான் மெய்கெட’ – ‘வற்று’வின் , ‘வ்’ கெட ,
‘சுட்டு முதல் ஐ முன்’ - ‘அவை’யின் ‘ஐ’ முன்பாக ,
‘அஃகான் நிற்ற லாகிய பண்பே’ - ‘வற்று’வின் முதல் ‘வ்’ போனபின் , ‘அ’ நிற்கும்!
அஃதாவது –
அவை + வற்று + ஐ → ‘வ்’ கெட → அவை + அற்று + ஐ → ‘ய்’ உடம்படு மெய் சேர → அவையற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
இவை + வற்று + ஐ → ‘வ்’ கெட → இவை + அற்று + ஐ → ‘ய்’ உடம்படு மெய் சேர → இவையற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
உவை + வற்று + ஐ → ‘வ்’ கெட → உவை + அற்று + ஐ → ‘ய்’ உடம்படு மெய் சேர → உவையற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
அவை + வற்று + கோடு → ‘வ்’ கெட → அவை + அற்று + கோடு → ‘ய்’ உடம்படு மெய் சேர → அவையற்றுக் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)
இவை + வற்று + கோடு → ‘வ்’ கெட → இவை + அற்று + கோடு → ‘ய்’ உடம்படு மெய் சேர → இவையற்றுக் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)
உவை + வற்று + கோடு → ‘வ்’ கெட → உவை + அற்று + கோடு → ‘ய்’ உடம்படு மெய் சேர → உவையற்றுக் கோடு வேற்றுமைப் புணர்ச்சி)
மேலே உள்ளவை , இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளுக்கு நாம் கண்ட விளக்கம் !
இளம்பூரணர் தம் உரையில் , இன்னொரு புணர்ச்சி முறையும் கூறுகிறார் !
‘அவை’ என்று நிலைமொழி இல்லாமல் , ‘அவ்’ என இருந்தால் ?
இளம்பூரணர் கூறக் கேட்கலாமே ?
“சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி , வற்றின் வகரம் , அகரம் நிற்கக் கெடாது வற்றாயே நிற்றல் கொள்க ! ” என்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , ‘அவை’ என்பதற்குப் பதில் ‘அவ்’ என்று நிலைமொழி இருந்தால் , ‘வற்று’ச் சாரியையில் எந்த மாற்றமும் இருக்காது!
அவ் + வற்று + ஐ → ‘வ்’ கெட → அ + வற்று + ஐ = அவற்றை .
இதன்பின் ஒரு வினாவை வைக்கிறார் இளம்பூரணர் !
அவர் வினாவை நம் நடையில் இப்படித் தரலாம் ! - “இதனைச் ‘சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி’ எனக் கூறுவானேன் ? ‘திரிந்ததன் திரிபு பிறிது’ என்ற உத்திப்படியே ‘அவ்’ என்ற நிலைமொழியைப் பெறலாமே ? ’என்று கேட்கிறீர்களா? ” எனக் கேட்டுவிட்டு அவரே விடையும் கூறுகிறார் !
இளம்பூரணர் விடையை வருமாறு நம் நடையில் காட்டலாம் -
“ ‘சுட்டு முதல் ஐம்முன் ’ என்று தொல்காப்பியர் கூறிவிட்டதால் , ‘அவ்’ என்பதை உத்தியால் கொள்ள முடியாது !”
என்ன அது ‘திரிந்ததன் திரிபு பிறிது ’ ?
அவை → திரிந்து → அவ் → திரிந்து → அ
அஃதாவது ‘அவை’ என்பது , திரிந்து திரிந்து பிறிதொன்றாக ஆகியுள்ளதல்லவா? இதனைத்தான் , ‘திரிந்ததன் திரிபு பிறிது’ என்கின்றனர் ! வேறு ஒன்றுமில்லை !
இந்த உத்திப்படி ‘அ’ வந்துவிடவே , ‘அ + வற்று + ஐ = அவற்றை’ என்று புணர்ச்சியைக் காட்டிவிடலாமே ? – என்றுதான் அவர் வினா எழுப்பி , அதற்கு மேலே நாம் பார்த்த விடையையும் கூறினார் இளம்பூரணர் !
தொல்கப்பிய நூற்பாவின் ஒவ்வோர் எழுத்துக்கும் நாம் கொடுக்க வேண்டிய மதிப்பையும் , உரை உத்திகளை (Techniques) எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதயும் இளம்பூரணர் கூறிய விளக்கத்தால் நாம் நன்கு அறிகிறோம் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (171)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் கூறிய 9 சாரியைகளில் ‘ன்’ ஈற்றுச் சாரியைகள் நான்கு !
அவை – இன் , ஒன் , ஆன் , அன் !
இந்த நான்கும் தமது ஈறு திரிந்து எப்படி வரும் என்று காட்டுகிறார் அவர் ! : -
“னஃகான் றஃகா னான்க னுருபிற்கு” (புணரி . 21)
’னஃகான் , றஃகான்’ - ‘ன்’ , ‘ற்’ ஆகும் ,
‘நான்கன் உருபிற்கு’ - ‘கு’ எனும் வேற்றுமை உருபு புணரும்போது !
இதன்படி –
விள + இன் + கு = விளவிற்கு (வேற்றுமைப் புணர்ச்சி)
கோ + ஒன் + கு = கோஒற்கு (வேற்றுமைப் புணர்ச்சி)
ஒருபது + ஆன் + கு = ஒருபாற்கு (வேற்றுமைப் புணர்ச்சி)
அது + அன் + கு = அதற்கு (வேற்றுமைப் புணர்ச்சி)
மேலே ‘ஆன்’ சாரியைக்கு ஒரு புணர்ச்சி கூறினாரல்லவா ?
அதே ‘ஆன்’ சாரியைக்கு வேறு ஒரு வேலை இருப்பதைக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“ஆனி னகரமு மதனோ ரற்றே ’ - ‘ஆன்’ சாரியையின் ‘ன்’ , முன்னே (புணரி . 21) கூறியது போன்றே , ‘ற்’ ஆகும் !
நாண்முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே” - நாளைக் குறிக்கும் பெயர் முன் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வினைச் சொற்கள் வந்து சேர்ந்தால் !
நாளைக் குறிக்கும் பெயர்கள் - பரணி , கார்த்திகை முதலியன .
நூற்பாப்படி –
பரணி + ஆன் + கொண்டான் = பரணியாற் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
இளம்பூரணர் தரும் கூடுதல் உரையால் - நாட்பெயர் அல்லாத பெயர்களின் முன் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வினைச் சொல் வந்து சேரின் , ‘இன்’ என்பதன் , ‘ன்’னும் , ‘ற்’ ஆகும் ! -
பனி + இன் + கொண்டான் = பனியிற் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
மேலும் ஆய்கிறார் இளம்பூரணர் !
மேலே , வினைச்சொற்கள் வந்து புணர்ந்ததைத்தானே பார்த்தோம் ? அதற்குத்தானே , ‘ன்’ , ‘ற்’ ஆகும் எனக் கண்டோம் ?
ஆனால் இளம்பூரணர் , பெயர்ச்சொல் வந்து புணர்ந்தால் , ‘ன்’ ஆனது ‘ற்’ ஆகவும் செய்யும் , ஆகாமலும் இருக்கும் என்கிறார் !
ன் → ற் ஆவதற்கு எடுத்துக்காட்டு -
பறம்பு + இன் + பாரி = பறம்பிற் பாரி (வேற்றுமைப் புணர்ச்சி)
ன் → ற் ஆகாததற்கு எடுத்துக்காட்டு -
வண்டு + இன் + கால் = வண்டின் கால்
(பாரி , கால் - இரண்டும் பெயர்ச் சொற்கள்)
‘பெயர்ச்சொல் வந்து புணர்ந்தாலும் ’ என்று ஒரு விதிக்குள் நுழைந்தாரே இளம்பூரணர் , அது எப்படியாம்?
‘ஞாபகம் கூறல்’ என்ற உத்திப்படியாம் !
‘ஞாபகம் கூறல்’ என்றால் ?
விளக்கம் காண்போம் !
மேல் நூற்பாவில் (புணரி . 22) , ‘ஆனின் னகரமும்’ என்பதில் உள்ள ’உம்’மை , இறந்ததும் தழுவிற்று ! ஆனால் இரு வேறு பொருள்கள் !
இறந்தது தழுவியபோது (முன்னே நூற்பா 21இல் சொல்லப்பட்டதோடு தொடர்புபடும்போது) , நாட் பெயர்முன் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வினைச் சொல் வரும்போது , ‘ன்’ , ‘ற்’ ஆன பொருள் !
எதிரது தழுவியபோது (பின்னே நூற்பா 22 இல் சொல்லப்பட்டதோடு தொடர்புபடும்போது) , நாளைக் குறிக்காத பெயர்முன் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல் வரின் , ‘ன்’ , ‘ற்’ ஆன பொருள் !
இந்த இரண்டு பொருள் அல்லாது , மூன்றாவதாக , வருமொழி வினைச் சொல்லே இல்லாது , பெயர்ச்சொல்லாக இருந்தாலும் , ‘ன்’ , ‘ற்’ ஆகச் சில இடங்களில் மாறும் ; சில இடங்களில் மாறாது ‘ன்’ ஆகவே நிற்கும் ! (சான்றுகளை மேலே கண்டோம் !)
மேல் இரண்டு பொருள்களைத் தவிர மூன்றாவது பொருள் எடுத்தால் ?
அப்படி எடுப்பதே ‘ஞாபகம் கூறல்’ !
ஞாபித்தல் – வியாபித்தல் ; பரவல் .
ஒரு சொல்லுக்கு இரண்டு மூன்று பொருள்களைக் கண்டு கூறும் உத்தி – ஞாபகம் கூறல் !
‘பையன் அடுக்கிக் கட்டுகிறான்’ – என்றால் , ‘அவன் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான்’ என்று ஒரு பொருள் எடுக்கலாம்! ‘வங்கியில் வேலை செய்கிறான்’ என இரண்டாம் பொருள் எடுக்கலாம் ! ‘புத்தகக் கடையில் வேலை பார்க்கிறான்’ என்று மூன்றாவது பொருளும் , ‘ஞபகம் கூறல் ’என்ற உத்திப்படி எடுக்கலாம் !
முன்னே சொன்ன கருத்து இப்போ ஞாபகம் வருகிறதா?

தொடத் தொடத் தொல்காப்பியம் (172)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் அடுத்து ‘அத்து’ச் சாரியை கூற வருகிறார் !
“ அத்தி னகர மகரமுனை யில்லை ” (புணரி . 23)
‘அத்தின் அகரம் அகர முனை இல்லை’ - ‘அத்து’ச் சாரியையின் ‘அ’ ,
‘அகர முனை இல்லை’ - ‘அ’வை ஈறாகக் கொண்ட சொல் முன்னே , கெடும் !
இதன்படி –
மக + அத்து + கை = மகத்துக் கை (வேற்றுமைப் புணர்ச்சி)
‘மக’ என்பது , ‘மகம்’ என்ற சொல்லின் திரிபு அல்ல !
மக = மகன் அல்லது மகளைக் குறிக்கும் பெயர்ச் சொல் !
மகத்துக் கை - ‘மகனின் கை’ அல்லது ‘மகளின் கை’
‘அத்து’ பற்றிச் சொன்னது போலவே அடுத்து ‘இக்கு’ பற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர்! –
“இக்கி னிகர மிகரமுனை யற்றே” (புணரி . 24)
‘இக்கின் இகரம்’ - ‘இக்கு’ச் சாரியையின் ‘இ’ ,
‘இகர முனை அற்றே’ - ‘இ’யை ஈறாகக் கொண்ட சொல்முன் வந்தால் , கெடும் !
அஃதாவது –
ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
‘ஆடி’ என்பது வினையெச்சம் அல்ல! பெயர்ச் சொல் !
ஆடிக்குக் கொண்டான் - ஆடி மாதத்தில் கொண்டான் !
மேலே ‘இக்கு’ச் சாரியை , இகரத்தின் முன் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டினார் தொல்காப்பியர்!
அடுத்து , அதே ‘இக்கு’ , ஐகாரத்தை ஈறாகக் கொண்ட சொல் முன் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் ! : -
“ஐயின் முன்னரு மவ்விய னிலையும்” (புணரி . 25)
‘ஐயின் முன்னரும்’ - முன்னே சொன்ன ‘இக்கு’ச் சாரியையின் ‘இ’ , ‘ஐ’யை ஈறாகக் கொண்ட சொல் முன் வந்தாலும்,
‘அவ்வியல் நிலையும்’ - அதே முறைப்படிக் கெடும் !
இதன்படி –
சித்திரை + இக்கு + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
சித்திரைக்குக் கொண்டான் – சித்திரை மாதத்தில் கொண்டான் !
தொல்காப்பியர் ‘இக்கு’ என்று சாரியையைக் கொண்டாரல்லவா? நன்னூலார் , அதிலுள்ள ‘கு’தான் பயன்பட்டுக்கு வருகிறது என்று கருதி ‘கு’தான் சாரியை என்று கூறியுள்ளார் !
தொல்காப்பியர் கால ‘இக்கு’ , நன்னூல் காலத்தில் ‘கு’ ஆனது ! இதுபற்றி முன்பும் பார்த்துள்ளோம் !
அகர ஈற்றுச் சொல்முன் , இகர ஈற்றுச் சொல்முன் , ஐகார ஈற்றுச் சொல்முன் சாரியைகள் எப்படிப் புணரும் என மேலே பார்த்தோம் !
அடுத்து , எந்த ஈறானலும் அதற்கு முன் ‘கு’ வந்தால் எப்படிப் புணரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! –
“எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
அக்கி னிறுதிமெய் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகர முற்றத் தோன்றாது ” (புணரி . 26)
‘எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வரும் வழி’ - எந்த ஈற்றெழுத்தைக் கொண்டாலும் அந்தப் பெயர்ச் சொல்முன் ,
‘அக்கின் இறுதி மெய் மிசையொடும் கெடும் ’ – ‘அக்கு’ என்பதிலுள்ள மெய்யான ‘க்’கும் அதற்கடுத்த மெய் ‘க்’கும் கெடும் ;
‘குற்றியலுகரம் முற்றத் தோன்றாது’ - ‘அக்கு’ என்பதன் ‘கு’ , முழுவதும் கெடும் !
அஃதாவது –
குன்று + அக்கு + கூகை = குன்றக் கூகை (வேற்றுமைப் புணர்ச்சி)
கூகை – ஆந்தை ; குன்றக் கூகை – குன்றிலுள்ள ஆந்தை .
மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை (வேற்றுமைப் புணர்ச்சி)
மன்று – மன்றம் ; ஊர்ப் பொது இடம் ; மன்றப் பெண்ணை – ஊர்ப் பொதுவிடத்துப் பெண்ணை மரம் ; பெண்ணை மரம் – பனை மரம்.
ஈமம் + அக்கு + குடம் = ஈமக் குடம் (வேற்றுமைப் புணர்ச்சி)
ஈமம் – பிணம் ; ஈமக் குடம் – பிணத்தை வைத்த குடம் ; முதுமக்கள் தாழி .
அரசு + அக்கு + கன்னி = அரசக் கன்னி (வேற்றுமைப் புணர்ச்சி)
அரசக் கன்னி – அரச குலக் கன்னி
தமிழ் + அக்கு + கூத்து = தமிழக் கூத்து (வேற்றுமைப் புணர்ச்சி)
தமிழக் கூத்து – தமிழில் எழுதப்பட்ட தமிழ் நாட்டுக் கூத்து .
மேல் புணர்ச்சிகளில் , நன்னூலார் ‘அக்கு’ தேவையில்லை , ‘அ’ போதும் எனக் கருதி அகரச் சாரியையாகவே கொண்டார் !
மேல் நூற்பாவில் (புணரி .26) , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது மட்டும் பொருந்தக்கூடிய விதி கூறப்பட்டதைக் காண்க !
இங்கு , - தமிழ நூல் , தமிழ யாப்பு , தமிழ வரையர் !
விளக்கம் –
தமிழ் + அக்கு + நூல் = தமிழ நூல் (வேற்றுமைப் புணர்ச்சி)
தமிழ நூல் - தமிழில் எழுதப்பட்ட நூல்
தமிழ் + அக்கு + யாப்பு = தமிழ யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)
தமிழ யாப்பு - தமிழில் எழுதப்பட்ட யாப்பு நூல்
தமிழ் + அக்கு + அரையர் = தமிழ வரையர் (வேற்றுமைப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)
தமிழ வரையர் - தமிழ்நாட்டு அரசர்.
இளம்பூரணர் குறித்த ஈமக் குடத்தைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this image.]
Courtesy - [You must be registered and logged in to see this link.]
- இதுதான் ஈமக் குடம் எனப்படும் முதுமக்கள் தாழி !
பழந் தமிழகத்தில் இறந்த வீரர்களின் உடல்களை வைத்துப் புதைக்கும் பெரிய குடம் ! (புறநானூறு 256 உரை)
அந்த நாளிலேயே மட்பாண்டம் செய்வதில் வித்தை காட்டியவர்கள் தமிழர்கள் என்பதற்கு இஃது ஒரு சான்று !

தொடத் தொடத் தொல்காப்பியம் (173)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
இப்போது ‘அம்’ சாரியை ! : -
“அம்மி னிறுதி கசதக் காலைத்
தன்மெய் திரிந்து ஙஞந வாகும்” (புணரி . 27)
‘அம்மின் இறுதி’ - ‘அம்’ சாரியையின் இறுதியாகிய ‘ம்’ ,
‘கசதக் காலை’ - க , ச , த , ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது ,
‘தன் மெய் திரிந்து ஙஞந வாகும்’ – ‘ங்’ , ‘ஞ்’ , ‘ந்’ ஆகும் !
இதன்படி –
புளி + அம் + கோடு = புளியங் கோடு ( ய், உடம்படு மெய் ; ம் , ங் ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + அம் + செதிள் = புளியஞ் செதிள் ( ய், உடம்படு மெய் ; ம் , ஞ் ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + அம் + தோல் = புளியந் தோல் ( ய், உடம்படு மெய் ; ம் , ந் ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கு , இளம்பூரணர் சில இலக்கண நுணுக்கங்களைத் தருகிறார் ! –
“அம்மின் இறுதி மகரமே யன்றித் , தம் , நம் , நும் , உம் என்பவற்றின் இறுதி மகரமும் திரியுமென்பது கொள்க ”
இதற்கு அவரது எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! –
எல்லார் + தம் + ஐ + உம் = எல்லார் தங்கையும் ( ம் , ங் ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)
எல்லார் + நம் + ஐ + உம் = எல்லார் நங்கையும் ( ம் , ங் ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)
எல்லார் + நும் + ஐ + உம் = எல்லார் நுங்கையும் ( ம் , ங் ஆனது) (வேற்றுமைப் புணர்ச்சி)
வில் + உம் + திங்கள் + உம் = வில்லுந் திங்களும் (ம் , ந் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
மேலேஎ வந்த நான்கு சொற்களின் ஈற்றில், ‘உம்’ வந்ததல்லவா? இதனை மொழியியலில் Enclitic என்பர் !

- Sponsored content
Page 23 of 84 • 1 ... 13 ... 22, 23, 24 ... 53 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 84