புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
23 Posts - 3%
prajai
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அவதாரம் Poll_c10அவதாரம் Poll_m10அவதாரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதாரம்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Fri Feb 01, 2013 1:40 pm

அவதாரம்
(சிறுகதை)

‘சக்தி டெக்ஸ்‘ ஜவுளிக் கடையின் வாசலில் நின்று போகின்ற வருகின்ற பெண்களிடமெல்லாம் 'அம்மா வாங்க!...அக்கா வாங்க!...தங்கச்சி வாங்க!” என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்தான் தனபால். காலில் விழுவதுதான் பாக்கி. ம்ஹூம்…ஒருத்தரும் அவன் கெஞ்சலை லட்சியமே செய்யவில்லை. நின்று கேட்கும் ஒன்றிரண்டு பேரும் சட்டென்று மனம் மாறி பக்கத்துக் கடைக்குள்ளோ அல்லது அதற்கடுத்த கடைக்குள்ளோ நுழைந்து விடுகின்றனர்.

முந்தா நாள் முதலாளி அவனைப் பற்றி ஜவுளிக்கடை மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்ததை எதேச்சையாய் கேட்க நேரிட்டதிலிருந்து அவன் மாபெரும் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தான்.

'யோவ் மேனேஜர்…எனக்கென்னவோ அந்தப் புதுப் பையன் அவ்வளவு சூட்டிப்பானவனாத் தெரியலைய்யா!...பேசுற பேச்சிலேயே தெருவுல போறவங்க அத்தனை பேரையும் கடைக்குள்ளார இட்டாந்திடணும்!...இவன் என்னடான்னா பிச்சைக்காரன் பிச்சை கேட்கற மாதிரி 'அம்மா…தாயே!”ன்னு கதறிக்கிட்டிருக்கான்!...ம்ஹூம்…இது பிரயோஜனப்படாது…பார்க்கற வரைக்கும் பார்த்துட்டு ஆன மட்டுக்கும் சம்பளத்தைக் குடுத்து அனுப்பிடுய்யா!”

பகீரென்றது தனபாலுக்கு. 'கடவுளே!...இதை நம்பித்தான் ஊரு விட்டு ஊரு வந்து ரூம் எடுத்துத் தங்கியிருக்கேன்!...இந்தச் சம்பளத்துல மிச்சம் பண்ணித்தான் ஊருக்கு அனுப்பணும்!...அம்மாவும் தங்கச்சிகளும் பாவம் என்னை நம்பித்தான் இருக்காங்க!” அழுகையே வந்து விட்டது.

அன்று இரவு. பவர் கட் காரணமாக அறைக்கு வெளியே வந்து வராண்டாவில் அமர்ந்திருந்தான் தனபால். பக்கத்து அறை முருகேசன் அப்போதுதான் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வந்தான். 'என்ன தனபாலு….வேலையெல்லாம் எப்படியிருக்கு?” யதார;த்தமாய்க் கேட்க

கேவினான் தனபால்.

'அட…என்னப்பா…அழுவறியா?...' பதட்டமாகி அவன் அருகே வந்து அவன் தலையைத் தன் வயிற்றில் சாய்த்துக் கொண்டு 'என்னப்பா பிரச்சினை?..யாராச்சும்…ஏதாச்சும் சொல்லிட்டாங்களா?”

நடந்தவைகளை அப்படியே ஒப்பித்தான் தனபால்.

கேட்டுவிட்டு சில நிமிடங்கள் அமைதி காத்த முருகேசன் 'த பாரு தனபாலு….எந்தவொரு செயலையும்…எந்தவொரு காரியத்தையும் எல்லோரும் செய்கிற மாதிரியே ஈயடிச்சான் காப்பியா நாமும் செஞ்சிட்டிருந்தா அது சாதாரணமாத்தான் இருக்கும்!...அதனால நமக்கு எந்தவித பலனும் கிட்டாது!...நாமும் சராசரி மக்கள்ல ஒருத்தரா இருப்போம்!...அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சு…வித்தியாசமாச் செஞ்சா நிச்சயம்..மத்தவங்களோட கவனம் நம்ம பக்கம் ஈh;க்கப்படும்…அந்த ஈh;ப்பே ரசிப்பிற்கு வழி வகுக்கும்!...ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா…அப்புறம் வெற்றி நிச்சயமாய்டும்…அதனால நீ என்ன பண்றே….”

முருகேசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மெல்ல எழுந்து தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் தனபால்.

தன் வார்த்தைகள் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்த துவங்கி விட்டன என்பதைப் புரிந்து கொண்ட முருகேசன் புன்முறுவலுடன் நகர்ந்தான்.

அன்று இரவு முழுவதும் மூளையை ஏகமாய்க் கசக்கியபடியே படுத்துக் கிடந்த தனபாலுக்கு அதிகாலை நேரத்தில் அந்த ஐடியா உதித்தது. எழுந்து அந்தப் பழைய டிரங்க் பெட்டியை கட்டிலுக்கடியிலிருந்து வெளியே இழுத்து திறந்து அதனுள்ளிருந்த பொருட்களையே வெறித்துப் பார;த்தான்.

பெட்டிக்குள்ளிருந்து சச்சின்….ரஜினி…கமல்…டி.ராஜேந்தா;…விஜய்…என பலர் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினர்.

கிராமத்தில் திருவிழாவின் போது நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக நடத்தப்படும் கலை நிகழ்ச்சிக்காக அவன் வாங்கி வைத்திருந்த பிரபலங்களின் முகமூடிகள்.

'கரெக்ட்…நிச்சயம் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்!” தனக்குள் சொல்லிக் கொணடான்.

மறுநாள் சச்சின் முகமூடியுடன்…இந்திய அணி யூனிஃபார்முடன் காற்றில் பௌலிங்கும் பேட்டிங்கும் செய்து கொண்டே போவோர் வருவோரைக் கூவி அழைக்க

அவனைப் பார;த்த பலர; 'இவனென்ன கிறுக்கனா?” என்று முணுமுணுத்தனர்.

அடுத்த நாள் அதே தனபால் ரஜினி முகமூடி மற்றும் உடையலங்காரத்தோடு ஸ்டைல் செய்தவாறே ஜனங்களை அழைக்க. மக்கள் கவனம் லேசாய்த் திரும்பியது.

'நாளைக்கு இவன் என்னவா வருவான்யா?” பலர் பேசிக் கொண்டனர்.

மறுநாள் எம்.ஜி.ஆர் ஆனான் தனபால்.

அடுத்து சிவாஜி…கமல்…விஜய்…டி.ராஜேந்தர்….என பல்வேறு அவதாரங்களை தனபால் எடுத்ததில் சக்திடெக்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

புதுச் சரக்குகள் வந்திறங்குவதும் அவை உடனுக்குடன் தீர்ந்து போவதுமாய் இருக்க.

முதலாளி மேனேஜரை அழைத்தார். 'யோவ்…அந்தப் பையன் இனிமேல் வெளிய எங்கேயும் தங்க வேண்டாம்…இங்க கடைக்கு மேல இருக்கற கெஸ்ட் ரூம்ல ஒண்ணை அவனுக்கு ஒதுக்கிக் குடுத்து இங்கியே தங்கிக்கச் சொல்லு!...அவனுக்கு வேஷங் கட்டறதுக்கு எதுனா வேணும்னா வாங்கிக்கச் சொல்லு…பணம் குடுத்துடலாம்!...ம்ம்ம்…அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்…அவனுக்கு இப்பக் குடுக்கற சம்பளத்தை அப்படியே மூணு மடங்காக்கிடு…இல்லேண்ணா வேற கடைக்காரன் எவனாவது அதிக சம்பள ஆசை காட்டி கொத்திட்டுப் போயிடுவாங்க!”

முதலாளி சொல்லிக் கொண்டிருக்கையில் வெளியே தனபால் பில்கேட்ஸாய் அவதாரமெடுத்திருந்தான்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்








avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Feb 01, 2013 1:56 pm

சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக