புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைவிரு(ந்)து2012 I_vote_lcapதிரைவிரு(ந்)து2012 I_voting_barதிரைவிரு(ந்)து2012 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
திரைவிரு(ந்)து2012 I_vote_lcapதிரைவிரு(ந்)து2012 I_voting_barதிரைவிரு(ந்)து2012 I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
திரைவிரு(ந்)து2012 I_vote_lcapதிரைவிரு(ந்)து2012 I_voting_barதிரைவிரு(ந்)து2012 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைவிரு(ந்)து2012


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 1:27 pm

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தமிழ் சினிமா காதலை பிடித்து தொங்கப்போகிறது என்பதற்குவிடையில்லை. வித்யாசமான களத்தை தேர்ந்து எடுக்க எண்ணும் சகலவிதமான கலைஞர்களும்(வழக்கு எண் 18/9, கும்கி முதல் எந்திரன் வரை) காதலை மையமாக வைத்து கதை சொல்லியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். இதைத்தாண்டி சிந்திக்காத வரை 'நாங்களும் உலக சினிமா எடுத்துள்ளோம்' என்று மார்தட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஹிந்திமற்றும் மலையாள சினிமாக்கள் காதலை தவிர்த்து மற்ற படைப்புகளை தந்து வருவதைக்கண்டு கோடம்பாக்கம் சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் 2013 முதல் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு சாபவிமோசனம்கிடைக்க வாய்ப்புகள் வெகு குறைவு.
:-
சிறந்ந ஸ்டன்ட் மாஸ்டர்:
அனல் அரசு - தடையற தாக்க
மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லா சந்தினுள் கிரிக்கெட் ஆடும் வில்லனை அருண் விஜய் தாக்கும் காட்சி, இரவு நேரத்தில் வில்லன்கள் ஹீரோ, ஹீரோயினைதுரத்தும் பரபரப்பான காட்சி என அனல் பரத்தி இருக்கும் அனல் அரசுதான் 2012 ஆம் ஆண்டிற்கான ஹாட் சாய்ஸ்.
:-
சிறந்த வசனகர்த்தா:
பாலாஜி மோகன் - காதலில் சொதப்புவது எப்படி
உலக சினிமா அரங்கில் காதலை பல்வேறு கோணங்களில் சளைக்காமல் அடிமட்டும் வரை சென்று அலசுவதில் தமிழ் இயக்குனர்களுக்கு இணை எவருமில்லை. காதலை மையப்படுத்தி மூச்சு முட்ட வந்துகொண்டிருக்கும் படங்களைக்கண்டு திகட்டல்தான் மிஞ்சுகிறது.ஆனால் அதையும் தாண்டி வெகுசில படங்கள் ரசிக்க வைக்கவே செய்கின்றன. 'உன்னாலே உன்னாலே' விற்கு பிறகு கவர்ந்த முழுநீள காதல் படைப்பு (ரோம்-காம்) பாலாஜியின் காதலில் சொதப்புவது எப்படி.
:-
சிறந்த பாடகர்:
கானா பாலா - அட்ட கத்தி
ஆடி போனா ஆவணி
இரைச்சலான இசைக்கு இரையாகும் பாடகர்களின் குரல்களும், மேற்கத்திய தாக்கத்தால் கழிப்பறைக்கு ஓடுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் முனகுவது போல நவீன தலைமுறைஇளைஞர்கள் பாடிக்கொல்வதும் அதிகரித்து வரும் வேளையில் 'நம்ம ஏரியா' பாடகர் கானா பாலாவின் ஆடி போனா ஆவணி இவ்வாண்டு பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. 2012 இல் அதிக முறை கேட்ட பாடல்.
:-
சிறந்த பாடலாசிரியர்:
நா.முத்துகுமார் - மெரினா
'வணக்கம் வாழ வைக்கும் சென்னை'
செல்வராகவன் - யுவன் கூட்டணியில் தனது வெற்றிப்பயணத்தை துவங்கியநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பாடல்களை எழுதுவதில் என்னைப்பொருத்தவரை முத்துகுமார் முன்னணியில்இருக்கிறார். வைரமுத்து போல இலக்கிய/அறிவியல் சார்ந்த கடினமான சொற்களை தவிர்த்து சராசரி ரசிகன் மனதில் நிற்கும் வரிகளையே பெரும்பாலும் உபயோகித்து தரமான பாடல்களை தந்துவரும் பாடலாசிரியர். மதன் கார்க்கி இவ்வாண்டு விஸ்வரூபம் எடுத்தாலும் இந்த ஒற்றைப்பாடலால் மனதை கவர்ந்தவர் இவர். சென்னை பற்றி மணிக்கணக்கில் பேசுவது, பக்கம் பக்கமாக புத்தகம் எழுதுவது என்று பலர் தொடர்ந்து மெனக்கெட்டாலும் சாமான்யனுக்கு புரியும் வண்ணம் 5 நிமிட பாடல் மூலம் சென்னை பற்றி சொன்ன இப்பாடலே இவ்வாண்டு பேவரிட்.
:-
சிறந்த இசையமைப்பாளர்:
இமான் - கும்கி
'ஒவ்வொரு மனுஷக்கும் ஒரு ப்ரேக்கிங் பாய்ன்ட் இருக்கும்' - கமலஹாசன் குருதிப்புனலில் சொன்னது போல கும்கி மூலம் பட்டத்து யானையாக இமான் இவ்வருடம் பவனி வந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. ரீமிக்ஸ் பாடல்கள் உட்பட சுமாரான பாடல்கள் மூலம் பெரிய வெளிச்சத்திற்கு வராமல் இருந்த கோடம்பாக்க அரண்மனைக்கதவை மதம் கொண்டு அகலத்திறந்து தனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அதற்கு சாட்சி நான் தியேட்டரில் கும்கி பார்க்கையில் ஒவ்வொரு பாடலும் திரையில் தோன்றும் சில நொடிகளுக்கு முன்பு ரசிகர்கள் செவி பிளக்க கோஷம் எழுப்பி வரவேற்றதை சொல்லலாம். ராக்ஆன் இமான்!!
:-
சிறந்த ஒளிப்பதிவாளர்:
கோபி அமர்நாத் - பீட்சா
ஒற்றை டார்ச் ஒளியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும்அரங்கில் திகிலுடன் அமரவைத்த புண்ணியவான். எப்போது இடைவேளை வருமென ஆங்காங்கே கதறல் சத்தங்கள். இடைவேளை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி ரெஸ்ட் ரூமுக்கு படையெடுத்தனர் கணிசமானோர்.சிறந்த படைப்புகளை கைதட்டி வரவேற்கும் சத்யம் தியேட்டரின் ஆஸ்தான ரசிகர்கள் எனது அனுபவத்தில் முதன் முறை இடைவேளை போட்டதும் கைதட்டியது பீட்சாவிற்கு மட்டுமே. கும்கியில் சுகுமாரின் கேமரா அற்புதம் என்றாலும் இயற்கை அவருக்கு பாதிபலம் தந்தது. ஆனால் நான்கு சுவர்கள், ஒரு டார்ச் பின்னணியுடன் நாயகனுடன் அவ்வீட்டை பலமுறை சுற்றி நம்மை திகிலில் ஆழ்த்திய கோபிதான் இவ்வாண்டின் பெஸ்ட்.
:-
சிறந்த துணை நடிகர்(கள்):
ராஜ், பக்ஸ் மற்றும் விக்னேஷ்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
அர்ஜுன், விக்னேஷ்
காதலில் சொதப்புவது எப்படி
துணை நடிகர்கள் என்பதை விடபடத்தின் ஹீரோக்கள் என்று சொல்வதே சாலப்பொருந்தும். அட்டாகாசமான புதுவரவுகள். அப்பாவியாக பஜ்ஜி, விவரம் தெரிந்தவர் போல காட்டிக்கொள்ளும் பக்ஸ், நட்பின் பிடியில் மாட்டித்தவிக்கும் சரஸ் ஆக விக்னேஷ் என மூவரும் பின்னி பெடல் எடுத்ததை நான் சொல்லியா தெரிய வேண்டும்? அதேபோல மொக்கை காதல் ஐடியாவை சொல்லும் அர்ஜுன் மற்றும் அதை அசடாகபின் பற்றும் விக்னேஷ்(காதலில் சொதப்புவது எப்படி) ஆகியோரின் நடிப்பும் சளைத்ததல்ல. இந்த ஐவரும் தி பெஸ்ட்.
:-
நன்றி மெட்ராஸ்பவன்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 1:38 pm

இவ்வாண்டு வெளியான தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் சில ஆங்கிலப்படங்கள் பற்றிய அலசலிது. சிறந்த படங்கள், சிறந்த நடிகர் என்று ஆஸ்கர், பிலிம்பேர் ரேஞ்சுக்கு எவரிதிங் ஏகாம்பரம் போல விருது தருவதற்கு என்று சரியான தகுதி வேண்டும். சினிமா ஆர்வம் மட்டுமே 'சிறந்த' விருது தருவதற்கான தகுதியை தந்து விடாது எனது கருத்து. கிட்டத்தட்டவெளியான அனைத்து படங்களையும் பார்த்தவர்கள் அதேசமயம் சினிமா பற்றிய தெளிவான புரிதல், தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள் தரும் விருது என்றுமே ஒஸ்தி தான். ஆதலால் 'சிறந்த' வகையறா விருது தராமால் நான் பார்த்த படங்களில் 'எனக்கு பிடித்த/பிடிக்காதபடங்கள், பாடல்கள், நடிகர்கள் எது, எவர் என்பதை மட்டுமே மையமாக கொண்டு கனகெம்பீரமாக வழங்கப்படுகிறது இந்த திரை விரு(ந்)து - 2012. முதலில் தமிழ்ப்படங்களில்இருந்து தொடங்குகிறேன். இவ்வாண்டு குப்புற கவிழந்த, குபீரென நிமிர்ந்த கோடம்பாக்க படைப்புகள் பற்றிய எனது பார்வை வரும் பதிவில். இப்பதிவில் நேரடியாக விருதுப்படலம் நோக்கியே லைட்ஸ் ஆன்!!
:-
சிறந்த நகைச்சுவை நடிகர்:
சந்தானம் - ஒரு கல் ஒரு கண்ணாடி, நான் ஈ
'அம்மா இவன் கோவத்துல கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மாதிரியே சிரிக்கறாம்மா' -என்ன ஒரு டைமிங். உதயநிதி, ஹன்சிகா போன்ற இரண்டு உலகமகா கலைஞர்களை வைத்துக்கொண்டு சூப்பர் இயக்குனர் ராஜேஷ் ஒரு ஹிட்படத்தை தர எண்ணியது மிகப்பெரிய விஷப்பரிட்சைக்கு சமம். ஆனாலென்ன? 'யாமிருக்க பயமேன்' என்று ஒற்றை ஆளாக அரங்கை அதிர வைத்தார் சந்தானம். நான் ஈ திரைப்படம் முடிந்துவிட்டதென தியேட்டரை விட்டு அனைவரும் வெளியேற ஆரம்பித்த சமயம் திருந்திய பூட்டு கோவிந்தனாக சந்தானம் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவரை நோட்டம் விடும் நபரை பார்த்து சந்தானம் சொல்லும் வசனம் ' ஜூல நீர் யானைய சுத்தி பாக்குற மாதிரியே பாக்குறானே'. இந்தவருடமும் நீர்தான் டாப் பார்த்தா!!
:-
சிறந்த வில்லன்:
சுதீப் - நான் ஈ
தமிழ் சினிமா பார்த்திராத முகம். கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பின் வரவு 'நான் சிங்கம்' என கர்ஜனை செய்யும் அளவிற்கு ஆக்ரோஷமாகவே இருந்தது. ஆறடி உயரம்,கெத்தான குரல், ஈயைக்கண்டு கண்களில் காட்டும் மிரட்சி என அசத்திய மனிதர். செலெப்ரிடி கிரிக்கெட் லீக் போட்டிகளில் தொடர்ந்து சென்னையிடம் தோற்று கடுப்பில் இருந்த இந்த கன்னடத்து கேப்டன் நான் ஈக்கு நம் மக்கள் தந்த வரவேற்பைக்கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார். கண்டிப்பாக 2013 ஆம் ஆண்டும் தமிழ்ப்படங்களில் வலம் வருவார் என நம்பலாம்.
:-
பிடித்த நாயகன்:
தினேஷ் - அட்டகத்தி
சென்னைபுறநகரில் வசிக்கும் கல்லூரி மாணவனுக்கே உரித்தான அனைத்து அம்சங்களையும் தாங்கி புட்போர்ட் அடித்து மனதைக்கவ்விய ரூட்டு தல. விளையாட்டாக காதலை எதிர்கொள்ளும் வாலிபனாக ஆரம்பத்திலும், பிறகு ரூட்டு தலையாக உருவெடுத்து உள்ளம் கவர்ந்த கூத்துப்பட்டறைக்காரர். கதாபாத்திரம் வேண்டுமானால் அட்டகத்தி என பெயரெடுத்து இருக்கலாம். நடிப்பில் திப்பு சுல்தானின் வீரவாள் என்பதில் சந்தேகமில்லை.
:-
பிடித்த நாயகி:
லட்சுமி மேனன் - சுந்தரபாண்டியன்
சிம்ரன், ஜோதிகா, ப்ரியாமணி அளவிற்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பு அமையாவிடினும் இரண்டாம் படமான சுந்தரபாண்டியனில் பல்வேறு ரியாக்சன்களால் கலக்கி எடுத்தவர் லக்ஷ்மி.இனிகோ, சசியைக்கண்டு கோபப்பார்வை பார்ப்பது, பின்பு காதலில் விழுவது எனகேரளப்பைங்கிளி பலே பேஷ். 'நெஞ்சுக்குள்ள'(சுந்தர பாண்டியன்) பாடலில் சந்தோஷம் பொங்க இவர் ஆடும்காட்சிகளும் அருமை.என் மனம் தமன்னாவை மறந்து இவரைக்கண்டு ஒரு கணம் உருகிப்போக வழி வகுத்ததே இந்தப்பாடல் என்பது சிறப்பு செய்தி
:-
பிடித்த இயக்குனர்:
ராஜமௌலி - நான் ஈ
வசூல் ரீதியாக தோல்வியை தராத இயக்குனர். ஆந்திர தேசத்து மனிதர். கன்னட நடிகர் சுதீப்பையும், கிராபிக்ஸ் ஈயையும் மட்டுமே பிரதானமாக வைத்து தமிழக பாக்ஸ் ஆபீசை அதிர வைப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆந்திர கலைஞர்கள் படைப்பில் வெளிவந்த இதுதான்டா போலீஸ், அம்மன் போன்ற படங்களுக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்கும். ஆந்திராவின் முன்னணி நாயகன் ஒருவர் இவர் படத்தில் நடிக்க அது பெரும் வெற்றி பெற்றது. 'என்னால்தான் அப்படம் வென்றது' என அந்த ஹீரோ தம்பட்டம் அடித்து கொண்டாராம். 'என் படத்திற்கு ஹீரோ தேவையில்லை. ஈ, கொசுவை வைத்து கூட ஹிட் தர முடியும்' என்று சவால் விட்டு சாதித்து காட்டியவர் ராஜமௌலி. (ஆளே ஹீரோ போலத்தான் இருக்கிறார்).
:-
பிடித்த திரைப்படம்:
தோனி
கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் சரியாக படிக்காமல் இருக்கும் மகனையும், அவனது தந்தையையும் மையமாக கொண்டு வெளிவந்த படைப்பு. பிரகாஷ் ராஜின் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பு என பன்முகத்திறமை பளிச்சிட்ட படம். வலுக்கட்டாயமாக பிள்ளைகளைட்யூசனில் சேர்க்கும் பெற்றோர், 100% பாஸ் காட்டபள்ளிகள் செய்யும் கெடுபிடிகள் உள்ளிட்ட பல பிரச்னைகளை யதார்த்தமாகவும், நியாயமாகவும் அலசி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். தோனி செய்ததை சாட்டை செய்யத்தவறி விட்டது என சொல்லலாம். 'நீயா நானா' நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் உணர்ச்சி பொங்க பேசும் வசனம் மற்றும் நடிப்பு வெகு பிரமாதம். என்னை மிகவும் கவர்ந்த நடிகர் பட்டியலில் அட்டகத்தி தினேசுக்கு பிறகு தோனி பிரகாஷ் ராஜூக்குதான் இரண்டாமிடம். வழக்கம்போல சிறந்த படைப்பை தந்த டூயட்மூவிஸ் நிறுவனத்திற்கு ஹாட்ஸ் ஆப்!!
:-
நன்றி மெட்ராஸ்பவன் தளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக