புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 12:05 am

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!


பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று ஓட்டெடுப்பு நடத்தினோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ! ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் ...வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையாய கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.

நன்றி இன்று ஒரு தகவல்

இதை படித்து விட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுகள் உங்களுடைய கருத்துகளையும் பதியுங்கள்




இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Tஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Oஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Eஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Dec 21, 2012 10:51 am

பெண்களின் உடையணியும் முறை”யும்” ஒரு காரணம்.

//அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் ...வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .// மறுப்பேதும் இல்லை... இருப்பினும் ஒரு சந்தேகம், கையெடுத்துக்கும்பிடத் தோற்றமளிக்கும் புடவை கட்டிய பெண்களிடம் ஆண்கள் தவறாக நடப்பதே இல்லியா..?? --- பெண்ணின் பெருமையை ஆணுக்கு உணர்த்தி வளர்க்காத வளர்ப்பு முறையும் காரணம். பெண்களே தங்களைப்பற்றிய பெருமையை உணராத நிலையில் ஆண்களுக்கு எப்படி உணர்த்த முடியும்..?

பெண்களின் அறியாமையும் காரணம் எனக்கூறலாம். சுதந்திரம் எது, நாகரீகம் எது என்று பகுத்துப்பார்த்து அறியாமல் தங்களைத் தாங்களே போகப்பொருளாக சித்தரித்துக்கொள்ளும் முறை..

//இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !// ஆபாசமாக நடிப்பது அங்கே ஒரு பெண்..அவர் தன் இனம் பற்றி யோசிக்கவில்லை..அங்கே அவருக்கு அவர் தொழில் சார்ந்த பணமே முக்கியம்..படம் எடுப்பவர்...அவருக்கும் அங்கு தாய், மனைவி, சகோதரி, மகள் என்ற உணர்வு இல்லை.. ஊடகம்..அவர்களுக்கும் அவர்கள் தொழில் தர்மம்(டி.ஆர்.பி. ரேட் அதிகரிப்பது)...இப்படியிருக்க பெண்கள் அமைப்பு கோஷம் போடுவதால் மட்டும் சரியாகிவிடுமா..?
//உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.// ம்ம் உண்மைதான்..நிரூபிக்கப்பட்ட அந்த நேரமே பொதுமக்கள் பார்வையில் தண்டனைகள் நிறைவேட்டப்பட்டால், மற்றவர்களுக்கு பயமாகவும், பாடமாகவும் அமையும். தனித்த அறையில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு ஒரு சில வருடங்களில் வெளியேறி முன்புபோல் ஆட்டம் துவங்க வாய்ப்பளிக்காமல்..

குறிப்பு: இதில் கூறியிருப்பது எமது தனிப்பட்ட கருத்துக்களே.































நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 12:32 pm

//இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !// ஆபாசமாக நடிப்பது அங்கே ஒரு பெண்..அவர் தன் இனம் பற்றி யோசிக்கவில்லை..அங்கே அவருக்கு அவர் தொழில் சார்ந்த பணமே முக்கியம்..படம் எடுப்பவர்...அவருக்கும் அங்கு தாய், மனைவி, சகோதரி, மகள் என்ற உணர்வு இல்லை.. ஊடகம்..அவர்களுக்கும் அவர்கள் தொழில் தர்மம்(டி.ஆர்.பி. ரேட் அதிகரிப்பது)...இப்படியிருக்க பெண்கள் அமைப்பு கோஷம் போடுவதால் மட்டும் சரியாகிவிடுமா..?

உங்களின் சொந்த கருத்தும் நல்ல கருத்தாகவே உள்ளது

தனி மனிதன் திருந்தினால்தான் இந்த சமூகமும் திருந்தும்

தண்டனைகள் கண்டிப்பாக கடுமயாக்கபடவேண்டும்




இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Tஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Oஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Eஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:21 pm

தகவலுக்கு நன்றி முஹமத்.தனி மனித ஒழுக்கம் மட்டுமே ஒரு தீர்வாக அமைய முடியும்.

(சேலை மற்றும் தாவணியில் பெண்மை என்றுமே அழகோ அழகு தான் போங்க..... புன்னகை )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 2:28 pm

அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை
அழகை (காணும் அழகை எல்லாம்) தானே அடைய நினைப்பது தான் தவறாகிறது

தனி மனித ஒழுக்கம் என்பதும் குறைந்துவிட்டது - உடைகள் குறைந்தது போலவே






அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 2:58 pm

பெண்களின் அரைகுறை ஆடை மட்டுமே இதற்கு காரணம் இல்லை. வக்கிரமான சில மனிதனும் தான். உண்மையைச் சொன்னால் மனிதனும் ஒரு மிருகமே. ஆயையால் அத்தனை மிருகங்களும் சாதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. முடிந்தவரை பெண்களும் நாகரீகமாக இருக்க முயற்சித்தால் சில சதவீதம் குற்றம் குறையலாம்.

சகோ காயத்ரி சொல்லியதை இங்கு நான் வழிமொழிகிறேன் // பெண்களின் அறியாமையும் காரணம் எனக்கூறலாம். சுதந்திரம் எது, நாகரீகம் எது என்று பகுத்துப்பார்த்து அறியாமல் தங்களைத் தாங்களே போகப்பொருளாக சித்தரித்துக்கொள்ளும் முறை.. //



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 3:03 pm

யினியவன் wrote:அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை
அழகை (காணும் அழகை எல்லாம்) தானே அடைய நினைப்பது தான் தவறாகிறது

தனி மனித ஒழுக்கம் என்பதும் குறைந்துவிட்டது - உடைகள் குறைந்தது போலவே


சூப்பருங்க




இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Tஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Oஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Eஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 22, 2012 3:16 pm

நாகரீகம்

நாகரீகம் ஒருநாளும் குற்றத்துக்கு காரணமாக இருப்பதில்லை. இது தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. அது போல் குற்றங்களும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் வடிவமும், வெளிப்பாடும் மட்டுமே வேறுபடுகிறது. இது அனைத்து குற்றங்களுக்கும் பொருந்தும், கற்பழிப்பு உட்பட.

பல நேரங்களில் ஒரு விஷயத்தை நாம் எடைபோடும் போது , நமக்குச் சரி என்று சொல்லிக்கொடுக்கபட்ட அளவு கோலை வைத்து அடுத்த தலைமுறைக்கு இது தான் சரி என்ற வாதத்தை முன் வைக்கிறோம். ஆகையால் நாம் எடைபோடும் அனைத்தும் பயனற்றுப் போகிறது. என் தாத்தா முன்னாடி என் அப்பா உட்கார மாட்டார், ஆனால் இன்று இது சரியா ? சரியில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் என் தாத்தாவுக்கு அது தான் சரி. அது போல் தான் உடையும், பெண்களின் வரைமுறையும் காலத்துக்கு காலம் மாறுகிறது. பெண்களுக்கு ஓட்டு உரிமை, வாகனம் ஓட்டும் உரிமை, கல்வி உரிமை மறுத்த நாடுகள் காலத்தின் கோலத்தால் இவற்றுக்கு சரி என்று தலையை ஆட்டுகிறது.

மலேஷியாவில் மூடிய உடை அணியும் மலாய் மக்களும், அரைக்கால் பேன்ட், டீ ஷார்ட் மட்டுமே அணிந்து செல்லும் சீனப் பெண்களும் உள்ளனர். ஆனால் அதிக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உடை அணியும் தமிழ் பெண்களே. அனைவரும் உடையை குறைத்தால் எங்கே கவர்ச்சி இருக்கப்போகிறது. வெளிநாடுகளில் சென்றால் முதலில் உயர உயரமாகத் தெரிந்த கட்டடம் நாளடைவில் சாதாரணக் கட்டங்களாகத் தான் தெரிகிறது. அது போல் தான் உடை கவர்ச்சியும், ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய விசயமாகத் தெரிந்தாலும் நாளடைவில் இது சாதாரணம். ஆகையால் தான் இன்றைய வாரப் பத்திரிக்கைகளில் பெண்களின் உள்ளாடை விளம்பரம் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது. இதைப் பார்க்கும் போது சிலுக்கு நாகரீமானவளாகத் தெரிகிறாள்.


விளம்பரம்.

பெண் என்றுமே போகப் பொருளாகத் தான் கட்டப்பட்டுள்ளாள், சங்க இலக்கியம் முதல் இன்று எடுக்கும் சினிமா வரை. நவீன விளம்பரங்களும், இன்டெர்நெட் காலத்துக்கு முன்பே கற்பழிப்பு இருக்கிறது, தொடர்ந்து நடக்கிறது. இவையும் குற்றங்களுக்கு காரணமாக அமைவதில்லை.

தனி மனித ஒழுக்கம்

ஒவ்வொரு தலைமுறைக்கும் தனிமனித ஒழுக்கத்தின் வரைமுறைகள் மாறுகிறது. மேலும் நாடு, இனம், மதம் பொருத்தும் சரி, தவறுகள் நிர்ணயம் ஆகிறது. சென்ற தலைமுறையில் பெண்கள் வெளி ஆண்களுடன் பேசுவது கண்டனைக்குரியது, ஆனால் இன்று இது சர்வ சாதாரண விஷயம். கணவன், மனைவி தான் இணைந்து வாழவேண்டும் என்பது பழையது. பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் என்றாளே அவர்கள் ஏறக்குறைய கணவன் மனைவி போல் தான் என்ற நிலை இன்று மேலைநாடுகளில் இருந்து, நம்நாட்டுக்கு இறக்குமதியாகி உள்ளது. ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், ஒரு சில ஆண்டுக்கு ஒருமுறை இதன் வரைமுறைகளை update செய்யவேண்டும்.

மதம்

மதத்தின் அரிச்சுவடிகளே இன்று மதம் என்று அனைத்து மதத்தினராலும் அறியாமையால் நம்பப்படுகிறது. ஆகையால் இவை ஒழுக்கத்தையும், மனப்பக்குவத்தையும் வளர்ப்பதில்லை. மாறாக பக்குவமற்ற நீயா நானா போட்டிகளும், கடிவாள சிந்தனையும் தான் வளர்க்கிறது. நாம் கற்றுக்கொள்ளும் அ ஆ இ கல்வி அல்ல, அதை வைத்து மேலே படிக்கும் படிப்பே கல்வி. அது போல் பக்தி, விரதம், வழிபாடு, வேதப் பாராயணம், மத ஒழுக்கத்தில் உள்ள புலனடக்கம் என்ற அரிச்சுவடி ஆன்மீகம் அல்ல ஞானச் செறிவு, தன்னிறைவு, பற்றற்ற மனப்பக்குவம், பரந்த சிந்தனை, ஆன்ம விடுதலை, நிறைத்தன்மை ஆகியவையே ஆன்மீகம்.... இந்த அறியாமையால் சூஃபி, ஜென், சித்தாந்தக் கருத்துகள், உபநிடதங்கள் வெறும் கதைகளாகவே சென்று விடுகிறது.

தண்டனை

கழுமரம், கைவெட்டுதல், தூக்கு, சிரச் சேதம், காலாக்கிரகம் இந்தியாவுக்கு புதிதல்ல. கடுமையான குற்றம் செய்தவனை, மிகக் கடுமையாக தண்டிப்பது அதை விடக் குற்றம்... சிறைக்கைதிகளையும் மனிதத் தன்மையுடன் தான் நடத்த வேண்டும் என்ற உலகச் சிந்தனை இன்று பல நாடுகளில் பரவுகிறது. டிக்கெட் ரிசர்வேஷன், பாங்கில் காத்திருப்போருக்கு எதுக்கு சேர் கொடுக்க வேண்டும் என்ற நிலை போய், சேர் கொடுப்பதும் இந்த மனித நேய அடிப்படை தான். காலத்தின் பக்குவத்தில் தண்டனைகள் உலக அளவில் கொஞ்சம் கொஞ்சமாக மென்மை படுத்தப்பட்டுள்ளது.ஆனால் சில நாடுகள் இன்றும் கற்காலத்தில் வாழ்கிறது. அது சரி என்று கற்கால மனிதர்கள் வாதிடுகின்றனர்.

இல்லை இல்லை அதுவே சரி என்று சொன்னால் இன்றைக்கு அதிக கட்டணம் வாங்கும் கல்விக்கூடங்கள் மட்டுமல்ல, அதில் உடன்படும் ஆசிரியர்களும் குற்றவாளிகளே... லஞ்சம் வாங்குபவன் மட்டுமல்ல, தன் காரியத்தை துரிதப் படுத்த லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளி தான். அவசரத்துக்கு ட்ராஃபிக் கோட்டை கடப்பவனும் குற்றவாளி தான். மதம், அரசியல், மொழிப் பெயரில் அனைத்து பொது மக்களுக்கும் இடைஞ்சல் கொடுத்து செய்யும் நிகழ்வுகள் குற்றங்களாகவே கருதப்படுவதில்லை. ஒவ்வொரும் கையை வெட்ட வேண்டும், விரலை எடுக்க வேண்டும், கசையடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால் இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு கை மற்றும் ஒரு சில விரல்கள் இருக்காது, வரிக்குதிரை முதுகுடன் தான் வலம் வருவர் . பல தவறுகள் இன்றைக்கு சாமார்த்தியம் என்ற பெயரை வாங்கி சீறும் சிறப்புடன் போற்றப்பட்டு வருகிறது.


சரி, அப்போ குற்றங்களுக்கு என்ன தான் விடிவு.....

தீர்வு

குற்றங்கள் ஒருவகை உளவியல் வெளிப்பாடு. ஒவ்வொரு குற்றத்துக்கும் ஆயிரம் பின்புலங்கள் இருக்கிறது.

இவை அனைத்து கால கட்டங்களிலும், அனைத்து சமுதாயத்திலும் இருக்கிறது.

ஒரு சிறிய நாட்டில் விதிகளை விதித்து கடைபிடிப்பது எளிது. ஆனால் இதுவே பெரிய நாட்டுக்கு மிகக் கடினம்.

வீட்டுக்கு கழிவறை எப்படி தவிர்க்கமுடியாதோ அது போல் இவை முற்றிலும் தவிர்க்க முடியாது. சென்ற தலைமுறையில் கழிவறை வெளியில் எங்கோ இருந்தது. நாற்றம் தெரியவில்லை. இன்று வரவேற்பு அறைக்கு அருகில் இருக்கிறது. அது போல் தான் குற்றங்களும் இன்றைக்கு செய்திகள், இன்டெர்நெட் மூலம் வெகு அருகில் வந்து வெளிச்சமாக தெரிகிறது. வெளிச்சம் போடுவதும் குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவர் பொறுத்து மாறுகிறது, கீழ் ஜாதிப் பெண்ணை நிர்வாணமாக ஓட விடும் போது போராட்டம் செய்ய பெரிய கூட்டம் வரவில்லை, சமீபத்திய டெல்லி நிகழ்வு பெரிய போராட்டமாக வெளிப்படுகிறது.

மற்றபடி குற்றங்கள் அளவு மிகப்பெரிய அளவில் மாறவில்லை. வடிவமும், வெளிப்பாடும் மட்டுமே மாறுகிறது.

குற்றங்களில் ஈடுபாடாமல், அதில் இருந்து தப்பிக்க, தவிர்க்க நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.







சதாசிவம்
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 22, 2012 3:44 pm

சதாசிவம் சாட்டை சொடுக்கிய விதம் அருமை...நானும் ஆமோதித்தல் ...

பெண்களோ ஆண்களோ...இருமுனைகளிலும் கழிவுகள் தேங்கிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை...
நாள்பட்டக் கழிவுகள் நச்சாகவும் ஆரோக்கியக் கேடாகவும் உருமாற்றம் பெறுவதற்கு
நாமும் ஓர் காரணி...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
(இங்கு 'திருடியாய்ப் பார்த்தும்' என்றும் கொள்ளலாம்...)



இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  224747944

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Rஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Emptyஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  Rஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 10:13 am

ரா.ரா3275 wrote:சதாசிவம் சாட்டை சொடுக்கிய விதம் அருமை...நானும் ஆமோதித்தல் ...

பெண்களோ ஆண்களோ...இருமுனைகளிலும் கழிவுகள் தேங்கிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை...
நாள்பட்டக் கழிவுகள் நச்சாகவும் ஆரோக்கியக் கேடாகவும் உருமாற்றம் பெறுவதற்கு
நாமும் ஓர் காரணி
...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
(இங்கு 'திருடியாய்ப் பார்த்தும்' என்றும் கொள்ளலாம்...)

நன்றி ரா ரா,

நீங்கள் சொல்வதும் சரி தான்.




சதாசிவம்
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக