புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
1 Post - 2%
prajai
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
383 Posts - 49%
heezulia
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
26 Posts - 3%
prajai
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வானொலியே வரம்....!! Poll_c10வானொலியே வரம்....!! Poll_m10வானொலியே வரம்....!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானொலியே வரம்....!!


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 1:33 pm

ஒரு இணையத்தளத்தில் வாசித்தேன். என் நினைவில் இளமைக்கால அனுபவங்கள், எங்க ஊர் நிலைமைகள் நிழலாடின. கண்களில் கண்ணீர் சுரந்தது. ஞாபகங்கள் அழிவதில்லை.


இது 1995 ற்கு முற்பட்ட காலத்தின் கண்ணாடிப்பதிவு. பொருளாதாரத்தடை என்ற அரக்கன் எம்மை நசுக்கிய துன்பமான காலம். மின்சாரம் என்பதை கண்ணால் காணமுடியாத கொடுமையான காலம். மெழுகுதிரி, மண்ணெண்ணை, ஜாம் போத்தல் விளக்கு, தேங்காய் எண்ணை விளக்கு என்பவைதான் எமது இருளினை விரட்டிய வேதனையான காலம்.வானொலியே வரம்....!! Graetz_valve_radioமின்சாரம் இல்லை என்பதால் தொலக்காட்சிகள் எல்லாம் வடிவாக பெட்டிகளில் அடைக்கப்பட்டு அறைகளில் பேணப்பட்ட சோகமான காலம். செய்திகளுக்காக சில அச்சு ஊடகங்கள் தவிர வேறு எதுவும் எமக்காக இல்லை என்ற வருத்தமான காலம். இந்த காலத்தில் எல்லாம் எமக்கு வானொலிதான் நண்பன். உறவினன். உற்ற சகோதரன். ஏன் எல்லாமே வானொலிதான். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு சைக்கிளாவது நிற்கும். அதே போலத்தான் அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலியும் இருந்தது.

செய்திக்காக மட்டுமல்ல எமது பொழுது போக்கு அம்சமாக, எமது மனங்களை ஓரளவு சாந்தப்படுத்த கூடிய ஒரு சாதனமாக வானொலி விளங்கியது என்றால் மிகையல்ல. பாட்டு கேட்பதுதான் பிரதானமான ஒரு பொழுது போக்கு. ஒலிப்பேழை (கசெற்) வாங்கி கேட்குமளவிற்கு வசதிகள் எல்லோரிடமும் கிடைக்கவில்லை. எனவே வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள்தான் எமக்கு கண்கண்ட தெய்வம் போல விளங்கியது. மத்திய அலைவரிசைகளில் தவழ்ந்து வரும் இசைதான் எம்மை எல்லாம் பரவசப்படுத்தும். பன்பலையில்(FM) வலம் வந்தது ஒரே ஒரு தாயக வானொலி புலிகளின் குரல் தான். இதே நேரத்தில் செய்திகளுக்காக பிலிப்பைன்ஸ் மணிலாவில் இருந்து ஒலித்த வெரித்தாஸ் வானொலி, இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகிய பிபிசி போன்றவைதான் எமக்கு தஞ்சம். இதைவிட நாம் பெரிதும் ரசித்தது சிங்கப்பூர் ஒலி 96.8 . இவைதவிர அகில இந்தியா வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்தோம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளை சிற்றலைவரிசைகளிலும், சர்வதேச வானொலியை மத்திய அலைவரிசை 882 அதிர்வெண்ணிலும், சிங்கப்பூர் வானொலி, பிபிசி மற்றும் வெரித்தாஸ் வானொலிகளை நாம் சிற்றலை வரிசையிலும் கேட்க கூடியதாக இருந்தது எமக்கு. இந்திய வானொலிகளின் நிகழ்ச்சிகள் எல்லாம் மத்திய அலைவரிசையில் தெளிவாக கேட்க முடியும். அந்தக் காலத்தில், இப்பொழுது புளுத்து போயிருக்கும் தனியார் வானொலிகள் எதுவும் இருக்கவில்லை. இலங்கை வானொலிதான் கொடி கட்டி பறந்தது. அவர்களுடைய செய்தியை தவிர மற்ற எல்லாவற்றையும் மக்கள் கேட்க தயாராகவே இருந்தனர்.

வானொலி என்றதும் இப்போதுள்ள டிஜிற்றல் தொழில் நுட்பத்தோடு வந்த வானொலிகள் அல்ல. சாதாரண றேடியோக்கள் தான். National Panasonic றேடியோதான் எல்லோர் வாயிலும் வரும் பெயர். சின்ன றேடியோ பெரிய றேடியோ என எல்லா வகையிலும் மக்கள் பாவித்தனர். ஆனால் அந்தக்காலத்தில் யாரிடமாவது RX செற் (இப்படித்தான் அழைப்பார்கள்) இருந்தால் அவர்கள் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்படுவார்கள். சரி வானொலி இருந்து மட்டும் போதுமா அதற்கு மினசார முதல் தேவை இல்லையா? தேவைதான். அப்படி என்றால் கரண்ட் இருந்ததா? இல்லை. அப்படி என்றால் பற்றறி இருந்ததா? அது கூட மிகப்பெரும் தட்டுப்பாடு. பெரிய பற்றரி ஓரளவு வந்து கொண்டு இருந்தது.வானொலியே வரம்....!! Eveready-battery3ஆனால் சிறிய பற்றரிக்குத்தடை (ஏன் தெரியும்தானே). இதையெல்லாம் சவாலாக எடுத்து சமாளித்தோம். சைக்கிள் டைனமோ வில் இருந்து வரும் ஆடலோட்ட மின்னை(AC Current) நேரோட்ட மின்னாக(DC Current) மாற்ற இருவாயி என்ற சொல்லப்படுகின்ற டயோட் (Diode) பயன்படுத்தப்பட்டது. ஒரு சைக்கிளை கவிழ்த்து வைத்துவிட்டு அதன் கால்மிதியை - பெடல் - கையால் சுற்றுவோம். அல்லது இரட்டைத் தாங்கி (டபுள் ஸ்ராண்ட்) யில் சைக்கிள் நிற்கும் போது அதன் மேலே ஏறி இருந்து சுற்றுவோம். டைனமோவில் உருவாகும் மின் இரவாயி கொண்ட பொறிமுறை ஊடாக றேடியோவை வந்தடையும். பிறகென்ன றேடியோ உயிர் பெற்று கத்த ஆரம்பித்து விடும். இவைகள் தான் எமக்கு அந்தக்காலங்களில் சொர்க்கம். புலிகளின் குரல் செய்திகள் அந்தநாட்களில் எல்லோர் வீடுகளிலும் பலமாக ஒலிக்கும்.

ஒலிப்பேழைகளிலே பாட்டு கேட்பதும் நடக்கும். அதற்கும் மேற்படி செயற்பாடுதான். பாடல்கள் பதியப்பட்ட ஒலிப்பேழைகள் நண்பர்களிடத்தில் வாங்கி கேட்போம். பாடல்களை அன்று பதிந்து கொடுப்பதில் யாழ் நகரினுள் சண் றெக்கோடிங் ஸ்பொட், சுப்பஸோ, நியூ விக்ரேஸ் என பிரபலமான கடைகள் இருந்தன. கடைகளுக்கு போய் அங்கே இருக்கும் இறுவட்டுகளை பார்த்துவிட்டும், அந்தக் கடையில் இருக்கும் பாட்டுக் கொப்பியை பார்த்துவிட்டும் திரும்புவதே எங்கள் வாடிக்கை. இந்தக் கடைகளில் பாடல் ஒலிப்பதிவு செய்ய கொடுத்தால் கூடுதலாக 7 நாட்கள் எடுப்பார்கள். அவ்வளவு அவர்கள் பிஸி.
வானொலிகள் பாட்டுகளுக்கு மட்டுமன்றி சிலருடைய திறமைகளை படைப்புகளாக வெளிக்கொணர்வதிலும் அவை அளப்பரிய சேவையே செய்தனர். கவிதைகள், கதைகள், கதையும் கானமும் அல்லது இசையும் கதையும் அத்துடன் பலதரப்பட்ட பட புதிய பாடல்கள் , பழைய பாடல்கள், இடைக்காலப் பாடல்கள் என் அனைத்தையும் எமக்கு அள்ளி வழங்கின. பாடல்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் சுவார்ஸ்யமாக இருக்கும். "கை வலிக்குது கை வலிக்குது மாமா, கவலை வேண்டாம் கண்ணே, இதோ வந்து விட்டது போலார் ஹை பவர் லோ வோல்ட்டேஜ் கிறைண்டர் மோட்டர்" என்ற விளம்பரம் தாங்கி வரும் சர்வதேச வானொலியும், "உடம்பைக் குறை உடம்பைக் குறை என்று சொன்னால் கேட்கிறாயா நீ, நான் என்ன குறைக்க மாட்டேன்னா சொன்னேன் அது குறைய மாட்டேங்குதே" என்ற விளம்பரத்துடன் உலா வந்த சிங்கப்பூர் ஒலி96.8 உம் எமக்கு மகிழ்வைத் தந்த வானொலிகள். அந்த விளம்பரங்கள் எல்லாம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. தமிழக மக்களுக்கு இலங்கை வானொலி மீது தீராத காதல். அதனால்தான் இலங்கை வானொலியின் சர்வதேச வானொலி தமிழக மக்களுக்காக தனது சேவையை வழங்கியது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் சர்வதேச வானொலி காலை 10 மணியுடன் நிறைவுறும். ஞாயிற்களில் மட்டும் 11 மணியாகும். மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி 6 மணிக்கு நிறைவுறும். தமிழக மக்களின் வணிக விளம்பரங்களைத் தாங்கித்தான் பெரும்பாலும் வரும். சில நிறுவனங்களின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னமும் சாகா நிகழ்ச்சிகளே. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இதைத் தொகுத்து வழங்கிய பெருமகன் பி.எச்.அப்துல் ஹமீது. உலகறிந்த ஒரு அறிவிப்பாளர். இவர் தொகுத்து வழங்கிய இன்னொரு நிகழ்ச்சி “இசையும் கதையும்”. லீ.வீ யின் சினிமாப்பாடல், ஸ்ரீராம் சிப்ஸ் நிறுவனத்தாரின் ஒரு நிகழ்ச்சி, என பல நிகழ்ச்சிகளைச் சுமந்து வந்தது அந்தக்கால வானொலிகள்.

இந்த இடத்திலே குறிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதமாகிய தூத்துக்குடி வானொலி எம்மை நிறையவே பாதித்தது. காரணம் இரவு 8.45 மணியில் இருந்து 9.00 மணிவரை 3 பாடல்களை ஒலிபரப்புவார்கள். அந்த மூன்றும் முத்தான பாடல்கள். இந்த பாடலை பற்றி அடுத்த நாள் நாம் நண்பர்களை சந்திக்கும் போது "நேற்று தூத்துக்குடி கேட்டாயா? சுப்பர் பாட்டுகள் மச்சான்" என்று கேட்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் இடம்பெற்றதை மறுக்க முடியாது.

வானொலி நிகழ்ச்சிகளைப் படைக்கும் அறிவிப்பாளர்கள் மக்கள் மனதிலே நிறையவே இடம் பிடித்தார்கள். குறிப்பாக இந்த இடத்திலே இலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல் வளம், அவர்களின் மொழி ஆளுகை, கடைசிவரை அந்த நிகழ்ச்சியை சேர்க்கும் திறன் என்பவற்றில் ஆட்சி செலுத்தினர் என்றால் மிகையாகாது. 'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு', 'கதையும் கானமும்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பி.எச்.அப்துல் ஹமீத் எல்லோர் இதயத்திலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். அவரை வானொலி நிகழ்ச்சிகள் கேட்டவர்கள் மறக்க மாட்டார்கள். கம்பீரமான குரல். அழகான தமிழ். பிசிறில்லாத உச்சரிப்பு. வார்த்தைகள் பாயும் விதம். அவருக்கு நிகர் அவரேதான். ஏ.ஆர்.எம்.ஜெப்ரி, ஜெயகிருஷ்ணா போன்றவர்களின் குரலும் மிக அழகானவை. இவர்களோடு பெண் அறிவிப்பாளினிகளாக 'வானொலிக்குயில்' இராஜேஸ்வரி சண்முகம், புவனோலஜனி நடராஜசிவம், றேலங்கி செல்வராஜா, சற்சொரூபவதி நாதன் (இவர் வர்த்தக துறைக்குள் தலை காட்டவில்லை என எண்ணுகிறேன்) இப்படிப்பலர். அதே போன்று ஒலி 96.8 இல் பாலசுப்ரமணியன், சோமு, பிரேமா, மீனாட்சி சபாபதி. பிபிசி யில் ஆனந்தி அக்கா. அவர்கள் தொகுத்து வழங்கிய “பாலியல் விவேக பக்குவப் பயிற்சி” இதனை நாம் வீட்டுக்காரருக்கு தெரியாமல் ஒளித்துக் கேட்டோம். எல்லோர் நெஞ்சங்களையும் பிழிந்த ஒரு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைகளில் ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்கள் வெரித்தாஸ் வானொலியில் செய்த பிரார்த்தனை.....நெக்குருக வைத்துவிடும்.

குறிப்பாக ஒலி 96.8 இன் மூலமே நாம் முதன் முதலில் தொலைபேசி மூலம் நேயர்கள் பாடல்களை விரும்பி கேட்கலாம் என்று அறிந்தோம். அதனைப் பற்றி அடுத்தநாள் பாடசாலையில் சிலாகிப்போம். எப்படி செய்வார்கள்? எப்படி பாடல்களை ஒலிபரப்புவார்கள்? இதன் போது என்ன செயன் முறை? அந்தளவிற்கு அது எம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. 1994 இல் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு RX செற் கொண்டு வந்து சைக்கிளை வகுப்பறைக்குள்ளே வைத்து டைனமோவை சுற்றி பாட்டு கேட்டோம். அந்தக் காலத்தில்தான் ”காதலன்” வந்து இளைஞர் பட்டாளத்தை உலுப்பி எடுத்த காலம்.

இன்னும் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் பதிவு நீண்டு விடும். காலங்கள் கரைந்தோடி விடுகின்றன. ஆனால் அவை தந்த அந்த இனிமையான நினைவுகள் இன்னும் அழியாத பாதச்சுவடுகளாய் வாழ்க்கைப்பயணத்தில் இன்னும் மனங்களில் வியாபித்தே நிற்கின்றன. காலம் கனிகின்ற போது இந்த நினைவுகள் மீண்டும் வருடப்படும்.


-நன்றி:கிடுகுவேலி-



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 2:01 pm

சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




வானொலியே வரம்....!! Mவானொலியே வரம்....!! Uவானொலியே வரம்....!! Tவானொலியே வரம்....!! Hவானொலியே வரம்....!! Uவானொலியே வரம்....!! Mவானொலியே வரம்....!! Oவானொலியே வரம்....!! Hவானொலியே வரம்....!! Aவானொலியே வரம்....!! Mவானொலியே வரம்....!! Eவானொலியே வரம்....!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 11, 2012 2:52 pm

மீண்டும் பழைய நினைவுகளை நினைவு படுத்தமைக்கு நன்றி அண்ணா.!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 11, 2012 4:17 pm

அழியா நினைவுகளின் அழகிய பகிர்வு றினா




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 5:26 pm

எனக்கும் பழைய நினைவு வந்துவிட்டது... அழுகை

அப்படியே இருந்திருக்கலாம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 11, 2012 5:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 11, 2012 5:44 pm

அருமையான பதிவு .. மீண்டும் பழைய நினைவுகளை நினைவுக்கு கொண்டுவந்தற்கு நன்றி ..

தமிழ் நாட்டில் நிகழும் கடுமையான மின்வெட்டால் மீண்டும் மக்கள் வானொலி பக்கம் வருவார்கள் ( ஒரு திருத்தம் பாட்டரி கொண்டு இயங்கும் வானொலி )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக