புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
39 Posts - 49%
heezulia
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
3 Posts - 4%
jairam
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_m10கோயில்-பயனுள்ளவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்-பயனுள்ளவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 8:12 am

First topic message reminder :

இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?

கோயில்-பயனுள்ளவை - Page 2 TN_121208131006000000

இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்.


மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?
கோயில்-பயனுள்ளவை - Page 2 Large_142823108

அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா?
மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை. அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம்.
பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல! வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற கருணையுடன், தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர்.


-நன்றி :தினமலர்


மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் ?கோயில்-பயனுள்ளவை - Page 2 Challaram_mavilai_thoranam_12745

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் ?
மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

-நன்றி:சாளரம்



கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 1:49 am

சிலிர்க்க வைக்கும் திருப்பதி ரகசியங்கள்கோயில்-பயனுள்ளவை - Page 2 Tirupati+Balaji+Temple


திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
கோயில்-பயனுள்ளவை - Page 2 709-large

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........




1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.


2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்.அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை .



3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பிகளின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால்ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள் , நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.



4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் . அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது .பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.



திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன .



1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.



2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் .



3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.



6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.



7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.



8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.



9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம் , அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் , தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.



10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .



11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ .100கோடி.



12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் . ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.



13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார் .



14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.



15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது . மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது .



16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது . அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர் , நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான்மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார் .



17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.



18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .



19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் , வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.



20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .



21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.



22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை.ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.



23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.



24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.



25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.



25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாய த்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.



26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.



27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார் .



28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

நன்றி: முகனூல் ராஜா



கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 1:53 am

தென்னிந்தியக் கோயில்கள்
கோயில்-பயனுள்ளவை - Page 2 6yd4m0
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டு கிளைவிட்டு தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை இலக்கியம் வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன.



ஆனால் நாம் மிகக் குறைவாகவே கோயில்களைப் புரிந்துகொண்டிருக்கிறோம். பத்துப்பதினைந்து முக்கியமான கோயில்கலுக்குச் செல்லாதவர்கள் நம்மிடையே அபூர்வம். ஆனால் கோயிலின் அமைப்பு, அதன் பரிணாமம் ஆகியவற்றைப் பற்றி எளிய புரிதல்கூட நம்மிடையே இல்லை. நம் பண்பாட்டின் ஆதாரமாக விளங்கும் ஆலயங்களைப் பற்றி எளிய அறிமுகம்கூட நம் கல்வி முறைமூலம் நமக்குக் கிடைப்பதில்லை.



நம் மொழிகளில் நம் சிற்பக்கலை குறித்த நல்ல நூல்கள் மிக மிகக் குறைவு. நல்ல புகைப்படங்களும் கோட்டோவியங்களும் விளக்கங்களும் கொண்ட அறிமுக நூல்கள் தமிழில் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் வரும் நூல்கள் மிகவிலைமதிப்பு மிக்கவை. பெரும்பாலும் வெளிநாட்டுப்பல்கலைகளை கருத்தில்கொண்டவை.



ஆலயங்கள் பற்றிய ஆய்வுநூல்களே தமிழில் மிக மிகக் குறைவு. தமிழநாட்டு ஆலயங்களைப்பற்றிய நூல்களில் ஒரு மாபெரும் செவ்வியலாக்கம் என்றால் சுசீந்திரம் ஆலயத்தைப்பற்றிய முனைவர் கெ.கெ.பிள்ளை அவர்களின் நூல்தான். அந்நூல் இன்றுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. முனைவர் தொ.பரமசிவன் எழுதிய் ‘அழகர்கோயில் வரலாறு ‘ நூலும் அ.கா.பெருமாள் எழுதிய ‘திருவட்டார் ஆலயம்‘ நூலும் முக்கியமானவை.



இந்தியச் சிற்பக்கலையைப் பற்றி தமிழில் கிடைக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது கே.ஆர்.சீனிவாசன் எழுதிய ‘தென்னிந்தியக் கோயில்கள்‘ என்ற நூல். அறிமுகவாசகர்களுக்கு உரிய ஆய்வுநூல் என இதைச் சொல்லலாம். கெ.ஆர்.சீனிவாசன் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம் இது.



இந்தியக் கோயில்கலையை பௌத்தர்களின் காலத்தில் வளர்ச்சிகொள்ள ஆரம்பித்த ஒன்று என்று அடையாளம் காண்கிறார் கே.ஆர்.சீனிவாசன். புத்தகயை பகுதிகளில் அசோகர் பல இடங்களில் உருவாக்கிய குடைவரைக் கோயில்முறை மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தே நம்முடைய ஆலயக் கடமைப்பு உருவானது என்கிறார். இது மரபான ஒரு பார்வையாகும்.



ஆரம்பத்தில் திறந்தவெளிக்கோயில்கலும் ஸ்தூபங்களும்தான் கோயில்களின் முதல்வடிவங்களாக இருந்தன.பின்னர் மரத்திலும் செங்கல்லிலும் கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் குடைவரை கோயில்கள் உருவாயின. அதன்பின் அவை தனித்து நிற்கும் கருங்கல் கோயில்களாக மாறின. கருங்கல்லிலும் மரம் செங்கல் கட்டுமானங்களின் அழகியல் அமைப்பு தொடரப்பட்டது. கருங்கல் கோயில்களில் கூட மரக்கட்டிடங்களின் உத்தரங்களும் பட்டிகைகளும் கபோதங்களும் அமைக்கப்பட்டன. கருங்கல் கட்டிட அமைப்பு பல்வேறு காலகட்டங்களாக வளர்ச்சி அடைந்து தென்னிந்தியப் பேராலயங்களின் அதன் உச்சத்தைக் கண்டது.



இந்தியா முழுக்க கட்டிஅக்கலை பௌத்தத்தின் எழுச்சியை ஒடி வீறுடன் உருவாகி வளர்ந்தது. எல்லோராவின் குகைக்கோயில்கல் குடைவரைக்கோயில்கள் படிப்படியாக தனிக்கோயில்களாக ஆவதன் பரிணாம சித்திரத்தை அளிக்கின்றன. பின்னர் வட இந்தியாவில் அந்த வளர்ச்சி மட்டுப்பட்டது. பெரும்பாலான கோயில்கள் அன்னிய படையெடுப்பாளர்களால் இடித்து அழிக்கப்பட்டன. ஆனால் நிலையான பேரரசுகள் இருந்தமையால் தென்னிந்திய கலைச்செல்வங்கள் அழியாமல் நீடித்தன.



தென்னிந்தியாவில் ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள், யாதவர்கள், பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் அரசுகள் உருவாக்கிய கோயில்கலை விஜயநகரப்பேரரசின் காலகடத்தில் உச்சத்தை அடைந்தது. அந்த பரிணாமத்தின் சித்திரத்தை நுட்பமான தகவல்கள் வழியாக அளிக்கிறார் ஸ்ரீனிவாசன். அந்தந்த கட்டிடக்கலைகளின் சிறப்பியல்புகளையும் அவை ஒன்றில் இருந்து ஒன்றாக உருவாகிவந்த முறையையும் விரிவான உதாரணங்கள் மூலம் காட்டுகிறார்.



முற்காலக் கோயில்கள், முற்கால குடைவரைக்கோயில்கள், பிற்காலகுடைவரைக்கோயில்கள், கட்டிடச்சிற்பங்கள், தொடக்ககால கட்டுமானக் கற்கோயில்கள், பிற்காலக் கட்டுமானக் கற்கோயில்கள், பிற்காலக்கோயில் வகைகள் என்னும் தலைப்புகளில் இந்தியச் சிற்பக்கலையின் வரலாறு தொகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் கேரளத்து மரக்கோயில்கள் , உலோகக்கூரையிட்ட கோயில்கல் போன்ற தனித்தன்மை கொண்ட கோயில்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன இந்தியக் கோயிலமைப்பு சார்ந்த கலைச்சொல் பட்டியலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியக்கோயில்களின் பரிணாமத்தை விளக்கும் 23 படங்களும் உள்ளன.



கோயில்களைப்பற்றி தமிழில் வெளிவந்த முக்கியமான நூல்களில் ஒன்று இது







[நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியீடு. ரூ 61. நியூசெஞ்சுரி புத்தகநிலையங்களில் கிடைக்கும்]













கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 1:55 am

மலையில் புதைந்திருக்கும் குகைக் கோயில்கள்

தமிழகத்தின் பல இடங்களில் குடவரைக் கோயில்களை காணலாம். முன்னர் களப்பிரர், சமண மதம் தழுவிய பல்லவ,சோழர்களாலும், பின்னர் சைவம் தழுவிய முற்காலப் பாண்டியர்களாலும் குடைவரைகுகைக்கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அனைவரும் அறிந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். திருக்கோளக்குடி, குன்றக்குடி, பிரான்மலை, அரளிப்பாறை, மகிபாலன்பட்டி... என்று வரிசையாக பல குடவரைக் கோயில்கள் உள்ளன. இதில் குன்றக்குடி குகைக் கோயில்கள் வரலாற்று சிறப்புமிக்கது. இங்குள்ள கல்வெட்டில் சிந்துசமவெளி எழுத்துக்களின் எச்சமாகக் தமிழி எனப்படும் கி.மு.3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் எழுத்துக்கள் கல்வெட்டுக்களாக உள்ளன.

நன்றி -யாகூ.காம்



கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 1:58 am

கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும்போது….!
கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள்:


*ஆண்டவனின் சன்னிதானத்தினுள் நுழையும் போது கோயிலின் வாசலிலேயே நம் காலணியுடன் ‘நான்’ என்னும் அகந்தையையும் கழற்றி விட வேண்டும். அமைதியுடன் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பேசுவதை அதிலும் அபசகுனமாகப் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

*கோயிலினுள் நுழையும் போதுதான் தான தர்மங்களைச் செய்ய வேண்டும் – திரும்பி வரும் போது செய்யக் கூடாது .

* கோயிலை வலம் வரும் முன்பு நமஸ்காரம் செய்ய வேண்டும். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு கோயிலினுள் செல்லக்கூடாது. ஆண்களாக இருந்தால் தலைப்பாகையைத் தவிர்க்க வேண்டும்.

*நெற்றியில் பொட்டு ஏதும் இடாமல் செல்வதோ, வெறுங்கையுடன் செல்வதோ கூடாது.

*கோயிலில் தரப்படும் பிரசாதத்தை வலது கையினால் வாங்கி அப்படியே கைமாற்றாமல் வலது கையால் உண்ண வேண்டும்.

*சன்னதியில் நின்று ஒருபோதும் கண்ணீர் விடுவதோ அழுவதோ கூடாத ஒன்று. ஆண்டவன் முன்பு நின்று அழுதுதான் கேட்க வேண்டுமென்பது தவறான கருத்து.

*கர்ப்பகிரகத்தில் சுவாமி அலங்காரத்துக்காகத் திரை போட்டிருக்கும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

*கோயில் உள்ளே அமர்ந்து தேவையில்லாமல் விவாதம் செய்வது, மார்பிலோ, தலையிலோ அடித்துக் கொள்வது போன்றவைகள் கூடாது.

*கோயிலினுள் பிற மனிதர்களை வணங்குவதும் – வாழ்த்துவதும் கூடாது. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும் கூடாது.

*மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தபடியே கோயிலை வலம் வர வேண்டும். வேறு சிந்தனைகள் கூடாது.

நியாயமான வேண்டுதல்களை ஆண்டவன் முன் வைக்க வேண்டும். நல்ல மனதுடன் ‘அவனை’ தியானம் செய்தால் நிச்சயம் அவன் தேடி வந்து நம்முள் குடிபுகுவான். நல்ல மனம்தானே நாளும் ‘அவன்’ தங்கியிருக்கும் கோயில்!

-மகிழை செய்தி



கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 2:06 am

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்’’

கோயில்-பயனுள்ளவை - Page 2 T_500_22

சிறப்பம்சம்:

லிங்கமே மலையாக அமைந்த மலை

*தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது.

*நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம்.

*நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம்
*பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம்.

*அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம்

*அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம்

*எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம்.

*9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம்

*தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம்.

*தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம்.

*6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது.

*ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை.

*சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம்

கிரிவல சிறப்பு :

கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு, முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது.

சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம்.

புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும்.

48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். அம்மனின் சக்தி பீடங்களில் இது அருணை பீடமாகும் முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். .

அதிசயம்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம்.

இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும்.
அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

-தினமலர்



கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 3:07 pm

சிறுமியர், பெண்களுக்கு சாட்டையடி: வினோத நேர்த்தி கடன்!

ஓசூர்: ஓசூர் அருகே, கோவில் திருவிழாவில், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடித்தும், ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், வினோத வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், குரும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தற்போது, சொந்த ஊர்களில் வசிப்பவர்கள், ஆடு மேய்ச்சல் தொழிலை செய்து வந்தாலும், வேலை வாய்ப்புக்காக, இடம் பெயர்ந்தவர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின், குல தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு விழா எடுத்து, ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பெண்களை சாட்டையால் அடித்தும், வினோத முறையில் நேர்த்தி கடன் செலுத்துவதை, வழக்கமாக செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா எலவம்பட்டி, குறும்பேரி கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும், புத்தாண்டையொட்டி, ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பம்மா தேவி கோவில் வளாகத்தில், தங்கள் குலதெய்வமான வீரபத்திர சுவாமி கோவில், திருவிழாவை கொண்டாடுவர். நேற்று, புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். குறும்பர் இன பராம்பரிய நடனமான, சேவாட்டம் நடந்தது.அதன் பின், தேங்காய் உடைக்கும் பக்தர்கள், கைளை மேலே உயர்த்தி, தங்கள் குலதெய்வத்தை வணங்கினர். அவர்கள் தலை மீது, கோவில் குருசாமி தேங்காய்களை உடைத்தார். வீரபத்திர சுவாமி சத்தியா வந்து தேங்காயை உடைப்பதால், தங்கள் தலைக்கு வலி ஏற்படவில்லை என, பக்தர்கள் தெரிவித்தனர்.சிறுமியர் மற்றும் பெண்களை, பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடிக்கும் வினோத வழிப்பாடும் நடந்தது. சிறுமியர், பெண்கள் வரிசையாக நிற்க, அவர்கள் கைகள், முதுகில், கோவில் குருசாமி சாட்டையால் அடித்தார்.இதுகுறித்து, கோவில் குருசாமி, வீரபத்திரப்பா கூறியதாவது;எல்லா தெய்வங்களுக்கும், குழந்தை பருவ காலம் உண்டு. ஆனால், எங்கள் தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு, குழந்தை பருவ காலம் கிடையாது. வீரத்தில் பிறந்த எங்கள் சுவாமிக்கு, தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும், வழிப்பாட்டால், தங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும். வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, எங்களுடைய நம்பிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

-தினமலர்



கோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xzகோயில்-பயனுள்ளவை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 3:21 pm

தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும், வழிப்பாட்டால், தங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும்
----------------------------------------------------------------------
இந்த தவறான வழிபாடுகள் மாறவேண்டும், குழந்தைகளுக்கு என்ன தெரியும் சாட்டையடி கொடுப்பவர்க்கு அந்த அடியை திரும்ப கொடுங்கள் அவரது தலையில் தேங்காய் உடைத்து பாருங்கள் தெரியும் அவருக்கு வலியும் வேதனையும்




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 3:57 pm

அவரு குருசாமிய இல்ல குருமா சாமியா எல்லார் தலையிலும் தக்காளி சட்னிய பாக்க ஆசபடுறாரே



ஈகரை தமிழ் களஞ்சியம் கோயில்-பயனுள்ளவை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 02, 2013 4:03 pm

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக