புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 36 of 37 •
Page 36 of 37 • 1 ... 19 ... 35, 36, 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்

சேலம் மாநகரில் 2012ல் குற்றங்கள் குறைவு
சேலம்: ""சேலம் மாநகரில், 2012ல், கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் குறைந்துள்ளது. வரும் புத்தாண்டில் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் மாஹாலி தெரிவித்தார்.கமிஷனர் மாஹாலி நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மாநகரில், 2012ல் போலீஸ் காவலில் மரணம், காவல்துறை சித்ரவதை, குற்றவாளிகள், கைதிகள் தப்பிடு ஓடுவது, துப்பாக்கி சூடு, தடியடி போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற வில்லை.கடந்த, 2011ல் மாநகரில் கொலைகளின் எண்ணிக்கை, 23 ஆக இருந்தது, 2012ல், 16 ஆக குறைந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவங்கள், 60 ஆக இருந்தது, 38 ஆக குறைந்துள்ளது. திருட்டு உள்ளிட்ட சம்பவங்களின் எண்ணிக்கை, 273ல் இருந்து, 162 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 394 என்ற அளவில் இருந்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 237 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அதே போல், திருட்டு, கொள்ளை என்ற வகையிலான பொதுமக்களின் பொருட்கள இழப்பு, இரண்டு கோடியே, 28 லட்சத்து, 60 ஆயிரத்து, 638 ரூபாய் என்பது, ஒரு கோடியே, 85 லட்சத்து, 95 ஆயிரத்து, 869 ஆக குறைந்துள்ளது.
பொருட்களின் மீட்பு, 54 சதவீத்தில் இருந்து, 64 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறு வழக்குகளின் எண்ணிக்கை, 52 ஆயிரத்து, 911ல் இருந்து, 63 ஆயிரத்து, 527 ஆக அதிகரித்துள்ளது.
வீதிகளை மீறுபவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் அபாரத தொகையின் அளவு, 38 லட்சத்து, 21 ஆயிரத்து, 605 ரூபாயில் இருந்து, 64 லட்சத்து, 24 ஆயிரத்து, 750 ரூபாயாக அதிகரித்துள்ளது.மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, ஒன்பதில் இருந்து, 70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு முதல் பெண்கள், சிறுவர், மூதியோர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சட்டம் ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான அனைத்த நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். துரித வழக்கு விசாரணையும், வழக்குகள் முடிவும் உறுதி செய்யப்படும். இந்த நோக்கங்களுக்காக, நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு கமிஷனர் அலுவலகத்தில் இன்று முதல் செயல்படும்.சமுதாய காவல்பணி நிகழ்ச்சிகள் சேலம் மாநகரில் மேற் கொள்ளப்படும். மாநகரில், 66 வார்டு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களை ஈடுபடுத்தி அதன் மூலம் குற்றத்தடுப்பும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பும், ரகசிய தகவல் சேகரிப்பும் மேற் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது துணை கமிஷனர்கள் பாபு, ரவீந்திரன், உதவி கமிஷனர்கள் தங்கதுரை, சுப்பிரமணியன், ரவிசங்கர், உதயகுமார், தம்பிதுரை, ஸ்ரீதர், காசிலிங்கம், பெரியசாமி, மாநகர அனைத்து இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.
-தினமலர்

விடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய களை கட்டியது. தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் ஹேப்பி நியூ இயர் சொல்லியும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
2012ம் ஆண்டு முடிந்து இன்று 2013ம் ஆண்டு பிறந்து விட்டது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சர்ச்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
சென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணிக்குள் காமராஜர் சாலை சிவாஜி சிலையருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அதிர்வேட்டுகள் முழங்கின. வானில் மத்தாப்புகள் ஜொலித்தன. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை உரத்த குரலில் தெரிவித்தனர். வண்ணப்பொடிகளை வீசியும், வண்ணப்பொடி கலந்த நீரை ஊற்றியும் புத்தாண்டு பரிமாறிக் கொண்டனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் தடுப்பு வைத்திருந்தனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு மெரினாவில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நல்லவிதமாகவே அமைந்தது.
புத்தாண்டை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 2 மணியில் இருந்து சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூங்கா நகர் தங்க சாலை தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.
சாந்தோம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச், பூக்கடை அந்தோணியார் சர்ச், கதீட்ரல், பெரம்பூர் சர்ச், ராயப்பேட்டை சிஎஸ்ஐ சர்ச், லஸ் சர்ச்களில் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றன.
-தினகரன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எப்படி வந்தது புத்தாண்டு?
புத்தாண்டை கணக்கிடும் மரபு, பல நூறு ஆண்டாகவே, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கணக்கிடப்பட்டு வந்துள்ளது. சூரியன் சுழற்சியை வைத்து கணக்கிடும் முறை சரியானது என்றும் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆங்கில புத்தாண்டை பொருத்தவரை, கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 12 மாதங்களாக பிரிக்கப்பட்டு, 365.25 நாள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு கடைபிடிக்கின்றனர்.
அதற்கு முன், ஜூலியன் காலண்டர் முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. கிரிகோரியன் காலண்டர் முறையில் சூரியன் சுழற்சி மற்றும் ஈஸ்டர் நாளை வைத்தும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இவற்றை கூட சில நாடுகள் பின்பற்றாமல் தங்கள் வழியில் ஆண்டு நாட்களை கணக்கிட்டு கடைபிடிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளின் உயர் பீடம், மன்னர் கிரிகோரி-8 தலைமையில் 1582 பிப்ரவரி மாதம் 24 ம் தேதி நள்ளிரவில் கூடி, இந்த கிரிகோரி காலண்டரை முடிவு செய்தது. அதன் பின் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாடுகளில் ஆங்கில ஆண்டாக ஏற்கப்பட்டது. மதம் வாரி, மொழி வாரி காலண்டர் கடைபிடிப்பதும் பின்னாளில் அறிமுகம் ஆனது.

.விழா கொண்டாடுவதில் விநோத நம்பிக்கைகள்..
ஜனவரி 1 - புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பல்வேறு விதமான விநோத பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் 11ம் நூற்றாண்டில் வில்லியம்கான் கொயரர் காலத்தில், புத்தாண்டு என்பது ஜனவரி முதல் நாளா அல்லது மார்ச் 25ம் தேதியா என்பதில் குழம்பம் இருந்தது. அவர்கள் இரு தேதிகளிலும் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறக்கும் போது, கடிகாரம் மணி 12 அடிக்கத் தொடங்கியதும், 12 திராட்சைப் பழங்களை (மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில்) அவசர, அவசரமாக விழுங்குகிறார்கள். அப்படி செய்தால் பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
யூதர்கள் தேன் சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
பிரேசில் நாட்டு மக்கள் துவரம் பருப்பை அதிர்ஷ்டத்தின் குறியீடாக கருதுகிறார்கள். எனவே, புத்தாண்டு அன்று அதை சூப் வைத்தும், சமைத்தும் சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவின் தென்பகுதிகளில் உள்ளவர்கள் புத்தாண்டு அன்று காட்டு பன்றியின் கழுத்தில் தொங்கும் ஆடு சதை, பட்டாணி போன்றவற்றை சாப்பிட்டால் ஆண்டு முழுவதும் சாப்பாட்டுக் கஷ்டமே வராது என்று நம்புகிறார்கள்.
கொரியா நாட்டு மக்கள் புத்தாண்டுத் தினத்தன்று குடும்பம் குடும்பமாக பட்டம் பறக்க விட்டு மகிழ்கிறார்கள்.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் கரும் புள்ளிகளை கொண்ட பட்டாணி ராசியானதாக கருதப்படுகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது அவர்களுக்கு கிடைத்த ஒரே உணவு இது என்பதால் அவர்களுக்கு அதன் மீது அலாதி பிரியம். இதனால், புத்தாண்டு விருந்தில் இது முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
ஜப்பானியர்கள் புத்தாண்டில் கெட்ட ஆவிகள் வீட்டுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக புனித கயிறு, மாவிலை தோரணம் உள்ளிட்டவற்றை கட்டுகிறார்கள். அவர்கள் ஜனவரி முதல் தேதி அதிகாலையில் புத்தர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். இவர்கள் புத்தாண்டு அன்று வீட்டை கூட்டிப் பெருக்க மாட்டார்கள். அப்படி செய்தால் அதிர்ஷ்டம் போய்விடும் என்று நம்புகிறார்கள்.
டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் சுத்தப்படுத்தப்பட்ட பழைய பூட்ஸ்களில் வண்ண வண்ண பூக்களை நிரப்புகிறார்கள். அதை பிடித்தமானவர்களின் வீட்டு வாசலில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வைத்து விட்டு வருகிறார்கள். விடிந்ததும் மலர்களை வீட்டின் உரிமையாளர் எடுத்து கொள்கிறார். இதனால், அந்த ஆண்டு முழுவதும் பரிசு கொடுத்தவர் மற்றும் பரிசு பெற்றவருக்கு மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்பது நம்பிக்கை.
ஜப்பானியர்களின் புத்தாண்டு சிறப்பு உணவு அரிசி மாவு ‘கேக்’ மற்றும் காய்கறி சூப்.
டென்மார்க்கில் உடைந்த பாத்திரங்களை ஆண்டு முழுவதும் பாதுகாத்து, புத்தாண்டுக்கு முன்பு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் எறிவதை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள்.
அர்ஜென்டினாவில் புத்தாண்டு பிறக்கும் போது சூட்கேஸை எடுத்துக் கொண்டு வீட்டை சுற்றி ஓடினால் அந்த ஆண்டு அவரது வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டின் போது கேக் கிரீம் தரையில் சிறிது சிந்தி விழுவது நல்லது என நம்புகிறார்கள்.
பழங்காலத்தில் மார்ச் முதல் தேதியிலேயே பாபிலோனியர்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்.

புத்தாண்டு தினத்தில் பரிசு கொடுத்து மகிழ்வோம்
புத்தாண்டை நண்பர்களுடன், உறவினர்களுடன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சியே தனிதான். புத்தாண்டில் மற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கொண்டாடுங்கள். இதோ உங்களுக்காக புத்தாண்டு பார்ட்டிக்கான சில டிப்ஸ்...
ஷி உங்களது நண்பர்களை, உறவினர்களை முன் கூட்டியே பார்ட்டிக்கு அழைத்து விடுங்கள். வெறும் வாய் வார்த்தையில் கூப்பிடாமல், அழகான இன்விடேஷன் கார்டு கொடுத்து அழையுங்கள். இதில் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து விடுங்கள். புத்தாண்டு அட்டை புதுமையாக இருக்கட்டும்.
ஷி புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய அம்சம் என்ன என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன் கூட்டியே தெரிவித்து விடுங்கள். அப்போதுதான் அதற்கு தகுந்தவாறு, அவர்கள் தயாராக வருவார்கள்.
ஷி பார்ட்டி நடத்தும் இடம் மிகவும் முக்கியம். பாதுகாப்பானதாகவும், அனைவரும் எளிதில் வந்து செல்லும்படியும் இருக்க வேண்டும். பார்ட்டி நடக்கும் இடத்தை பூக்கள், காகித பூக்கள், வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். புத்தாண்டு வாழ்த்துக்களை வித்தியாசமாக எழுதி அட்டைகளை தொங்க விடுங்கள்.
ஷி எத்தனை பேர் வருவார்கள், என்ன ‘மெனு’ தயாரிக்க வேண்டும், என்ன ‘கிப்ட்‘ கொடுக்க வேண்டும் என்பதை முன்பே பட்டியலிட்டு விடுங்கள். டிசம்பர் 31ம் தேதி இரவில் இருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடுங்கள். எந்த கிப்ட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, பெயர் எழுதி வைத்து விடுங்கள். அப்பொழுது தான் குழப்பம் இருக்காது. கடைசி நேர டென்ஷனை குறைக்க தனித்தனி கவரில் போட்டு வையுங்கள்.
பார்ட்டியில் வெறுமனே பேசி கழித்தால் நன்றாக இருக்காது. பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்று தனி தனியாக பாட்டு, டான்ஸ் போட்டிகள் நடத்தலாம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறிய பரிசு கொடுக்கலாம். அந்த பரிசுப் பொருட்களில் நல்ல கருத்துகளை சொல்லும் புத்தகங்கள் இடம்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
புத்தாண்டில் பொறாமை, ஆணவம், கோபம், தீய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அறிவு சார்ந்த எண்ணங்களுக்கு தீபஒளி ஏற்றலாம். புத்தாண்டை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடலாம்...

இன்று சூரியனை நெருங்கும் பூமி
சூரிய குடும்பத்தில், பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பூமி, சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது.
இன்று காலை 10.10 மணிக்கு, சூரியனுக்கு அருகில் பூமி (அதாவது 14.7 கோடி கி.மீ., தூரம்) கடந்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. இது வழக்கமான வானியல் நிகழ்வு. இதனால் காலநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் பூமிசுற்றுவட்டப்பாதைசூரியனுக்கு அருகில் (ஜன.,) 14.7 கோடி கி.மீ., தூரம் சூரியனுக்கு அப்பால் (ஜூலை) 15.2 கோடி கி.மீ., தூரம்.

- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
அச்சலா wrote:இன்று சூரியனை நெருங்கும் பூமி
சூரிய குடும்பத்தில், பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பூமி, சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது.
இன்று காலை 10.10 மணிக்கு, சூரியனுக்கு அருகில் பூமி (அதாவது 14.7 கோடி கி.மீ., தூரம்) கடந்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. இது வழக்கமான வானியல் நிகழ்வு. இதனால் காலநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் பூமிசுற்றுவட்டப்பாதைசூரியனுக்கு அருகில் (ஜன.,) 14.7 கோடி கி.மீ., தூரம் சூரியனுக்கு அப்பால் (ஜூலை) 15.2 கோடி கி.மீ., தூரம்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் ரூ.100 அபராதம்
திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

ராணுவ பட்ஜெட்டில் ரூ. 10 ஆயிரம் கோடி கட்!
புதுடில்லி: இந்தாண்டு ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 10 ஆயிரம் கோடி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ராணுவத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தெரிவித்திருந்த நிலையில், பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ராணுவத்திற்கென குறிப்பிட்ட அளவில் தொகை ஒதுக்கப்படுவதுண்டு. இந்தாண்டு நிதிச்சிக்கல் காரணமாக பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 10 ஆயிரம் கோடி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவு பாதுகாப்பு திட்டங்களில் பெரும் தொய்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை நெருங்கி செயல்படும் நிலையில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த பெருமளவு நிதி தேவைப்படும் நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவால் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் அதிருப்தியடைந்துள்ளன. குறிப்பாக, 20 பில்லியன் டாலர் மதிப்பிலான நடுத்தர பல்நோக்கு போர்விமானங்கள் வாங்குவதற்கான திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2012-13ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் பாதுகாப்புத்துறையின் கனவுகள் தகர்ந்து போயுள்ளன.

அரசு பஸ்களில் கேமரா அடுத்த யோசனை அரங்கேறுமா?
பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடாவடிகளை கட்டுப்படுத்த, அரசு பேருந்துகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஓடும் பேருந்தில், டில்லியில், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் சம்பவத்தை அடுத்து, கர்நாடக அரசு பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்
திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது.முதல் கட்டமாக, 1,000 பேருந்துகளில், கேமராக்கள், 6,000 பேருந்துகளில், புவியிடம் காட்டி (ஜி.பி.எஸ்.,) கருவிகள் பொருத்துவதற்காக, ஒப்பந்தப் புள்ளி கோரும் பணியை, கர்நாடக அரசு துவங்கி உள்ளது.
இப்புதிய முயற்சிக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை போல், தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளிலும், கண்காணிப்பு நுண் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறுகையில், ""அரசு போக்குவரத்து கழகத்தில், 20 ஆயிரத்து 500 பஸ்கள் உள்ளன. இவைகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் முடிவை, அரசு தான் எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. கேமராக்களை பொருத்தி, அதிலிருந்து பெறப்படும் விவரங்களை பதிவு செய்து, குறிப்பிட்ட காலங்களுக்கு பராமரிக்கவும் முடியும்,'' என்றார்.இதன் மூலம், பேருந்துகளில் நடக்கும் பாலியல் சீண்டல்களையும், அடாவடிகளையும் தடுக்க முடியும் என, பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.அதே சமயம், அரசு பேருந்துகளின் கதவு, இருக்கை வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்த பிரச்னைகள் முழுவதும் அகலாத பட்சத்தில், இந்த வசதி எப்போது அமலாகும் என்று தெரியவில்லை.மாநிலங்களுக்கு இடையே செல்லும் தனியார் பேருந்துகள் சிலவற்றில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -தினமலர்

- Sponsored content
Page 36 of 37 • 1 ... 19 ... 35, 36, 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 36 of 37