புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
85 Posts - 79%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
250 Posts - 77%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
8 Posts - 2%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 32 of 37 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 1:49 am

ஜன.1 முதல் இணையதளம் மூலம் கட்டிட வரைபட அனுமதி மதுரை மாநகராட்சி அறிவிப்பு
மதுரை,: மதுரை மாநகராட்சி பகுதியில் வரும் ஜன.1ம் தேதி முதல் கட்டிட வரைபட அனுமதி இணைய தளம் மூலம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் கூறுகையில்: பொது மக்கள் கட்டிய கட்டிட வரைபடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபட வரைவாளர் மூலம் தயார் செய்து கம்ப்யூட்டர் மூலம் இணையதளத்தில் கட்டிட வரைபடம் சரிபார்க்கப்படும். இதனை உறுதி செய்த பின் மாநகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிறகு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வரைபடம் சரிபார்த்து உடன் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பத்துடன் புளு பிரிண்ட 5 நகல்கள், பத்திர நகல், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழிப் படிவம். அந்த இடத்தினுடைய நான்கு மூலைகளும் தெரியுமாறும் மனை உரிமையாளர் அங்கு நின்று எடுக்கப்பட்ட புகைப்படம், மனை உரிமையாளரின் 2 பாஸ்போர்ட் புகைப்படம், விண்ணப்ப கட்டணம், கட்டிட உரிமையாணை கட்டணம் கட்டிட இடிபாடு அகற்றும் கட்டணம், தொழிலாளர் நலநிதி கட்டணம், உள்ளூர் திட்டக்குழுமம் அபிவிருத்தி கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தபால் செலவு கட்டணம் ரூ.100 ஆகிய கட்டணங்களை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் செலுத்த வேண்டும். இந்த ரசீது, விண்ணப்பதாரரால் நேரில் வர இயலாதபட்சத்தில் அவரால் சான்றிளிக்கப்பட்ட கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
மாநகராட்சியின் மைய நகரமைப்பு பிரிவில் விண்ணப்பம் பெறப்பட்டதும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை உடன் சரிபார்க்கப்பட்டு ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கட்டிட அனுமதி உத்தரவு வழங்கப்படும். கட்டிட உத்தரவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் உரிமைதாரரின் முகவரிக்கு பதிவுத்தபாலில் நேரடியாக அனுப்பப்படும்.
இடைத்தரகர்களை அணுக வேண்டாம்: பொது மக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக தங்களுக்கு தேவையான கட்டிட வரைபடத்தை வரைவாளர் மூலம் தயார் செய்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மாநகராட்சி கருவூலம் மூலம் செலுத்தலாம். கட்டணத்தைவிட அதிகமாக தொகையை யாரிடமும் வழங்க வேண்டாம் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாநகராட்சி மைய நகரமைப்பு பிரிவில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 1:51 am

‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், பூமியில் இருந்து சராசரியாக 370 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியை தினமும் 15 முறை சுற்றி வருகிறது.

சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில் பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்-ஐ பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.

-தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 2:08 am

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம்
மதுரை, டிச.28 - மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் டிசம்பர் மாத உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் தலைமையில் கோயில் உண்டியல்கள், உபகோயில்களின் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ. 50 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.90 ஆயிரம் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல்களில் பக்தர்கள் தாலிச் சங்கிலி, தங்கக்காசுகள் காணிக்கையாகவும் அளித்துள்ளனர். அதன்படி 360 கிராம் தங்கமும், 450 கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைத்துள்ளன. உபகோயிலான தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 2.40 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரமும்,செல்லூர் திருவாப்புடை யார் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.26 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருண பாராயணம் மழைவேண்டி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 12-ம் தேதி சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் அருகே வருணபாராயண சிறப்பு யாகம் தொடங்கியது. இதில் 7 நதிகளது புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு, வேதபாராயணம் முழங்க, பொற்றாமரைக் குளத்தில் புனிதநீர் கலக்கப்பட்டது. வருணபாராயண நிறைவு நிகழ்ச்சியானது புதன்கிழமை நடைபெற்றது. இதில் ,பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, நதிகளது புனிதநீருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த நீரானது பொற்றாமரைக்குளத்தில் கலக்கப்பட்டது. பாராயணத்தின் நிறைவு நாளான புதன்கிழமை மாலை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் லேசான மழையும் பெய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.

-தினபூமி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 2:09 am

சூரிய மின் சக்தியில் உலகிலேயே முதலிடம் பெறுவோம்

துடெல்லி, டிச.28 - கடந்த ஆட்சியால் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க உறுதியான முடிவு எடுத்துள்ளோம். சூரிய மின் சக்தியில் உலகிலேயே 2015-ல் முதலிடம் பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

தற்போது நிறைவேறி வரும் மின் உற்பத்தி மற்றும் பரிமான திட்டங்களை குறித்த காலத்தில் முடிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல நெருக்கடிக்கு இடையில் ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொண்டுள்ளது. 2015 -ல் மீண்டும் உபரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு பல குறுகிய கால திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். வினியோக நிறுவனங்களுக்கு நிதி உதவி மறுசீரமைப்பு திட்டம் நீண்ட கால பிரச்சனையாக இருந்துவந்துள்ளது. எவ்வாராகினும் நிதி உதவி பொறுப்பு மற்றும் வரவு செலவு பராமரிப்பு வரம்புகள் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்த என்னுடைய தலைமைலான அரசு பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் ஆட்சியில் எற்படாத கடந்த ஆட்சி விட்டுச் சென்ற பிரச்சனைகளால் ஏற்பட்ட மின் நெருக்கடியை சமாளிப்பதற்கு என்னுடைய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையையே இது காட்டுகிறது.

தமிழ்நாடு 2015 -ல் 3000 மெகாவாட் சூரிய மின் சக்தியை பெற்று உலகிலேயே முதலாவதாக திகழும் வகையில் தமிழகத்தின் சூரிய மின் சக்தி திட்டம் 2012 அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் நிறைவேற்றிய மழைநீர் சேமிப்பு திட்டத்தை போல சூரிய மின் சக்தி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற என்னுடைய அரசு முடிவெடுத்துள்ளது. எங்களுடைய இத்தகைய முயற்சிகளுக்கு நிதி அடிப்படையிலும் சரியான கொள்கை முடிவுகளாலும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

-தினபூமி.

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 28, 2012 1:34 pm

நண்பர்கள் வைத்த பந்தயத்தில் 28 முட்டை குடித்தவர் சாவு
துனிஷ், டிச 28-

நண்பர்கள் வைத்த பந்தயத்தில் 28 முட்டைகள் குடித்தவர் இறந்தார்.

துனிசியா நாட்டில் எல் பேட்டன் பகுதியை சேர்ந்தவர் தாவூ பட்னாசி (20). இவர் வேக வைக்காமல், 30 முட்டைகளை அப்படியே குடிப்பதாக தனது நண்பர்களிடம் பந்தயம் கட்டினார்.

அதன்படி மடமட வென முட்டைகளை உடைத்து குடித்தார். 28 முட்டைகளை குடித்த அவரால் அதற்கு மேல் குடிக்க முடியவில்லை. 28 முட்டைகளை குடித்த அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்............

மாலைமலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 28, 2012 2:26 pm

சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் டெல்லி மருத்துவ மாணவி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் உடல்நிலை மோசம் அடைந்ததற்கு இரத்த அழுத்தம் குறைபோனதே காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மாணவியை சிங்கப்பூர் விமானத்தில் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதே இரத்த அழுத்தம் குறைய காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாலியல் பலாத்காரம் சம்பவங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதே போல் பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டன.

மாணவி உயிருக்கு போராட்டம்

அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் நிலையில் மாணவியின் உடல்நிலை இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அம்மாணவிக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அம்மாணவியின் நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதி மிகவும் சிதைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 28, 2012 2:28 pm

இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் : தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை...

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க, இந்தியா மீது அந்நாடு போர் தொடுக்க வேண்டும் என தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்நாட்டு மீது தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் அமீர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பாகிஸ்தானில் தற்போது உள்ள சட்டங்களை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய மது கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான்,

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு உறுதி செயதுள்ளது. ஆனால் தாலிபன்களின் இந்த நிபந்தனையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 28, 2012 2:31 pm

டெல்லி மாணவி இறந்ததாக எஸ்எம்எஸ் வதந்தி ....

ஓடும் பஸ்சில் பலாத்கார கொடுமைக்கு ஆளான டெல்லி மாணவி, சிறப்பு சிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக செல்போனில் நேற்று மாலை எஸ்எம்எஸ்சில் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த 16ம் தேதி, 23 வயதான மருத்துவ மாணவியை ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து டாக்டர்கள் ஆலோசனையின்படி, மாணவிக்கு சிங்கப்பூரில் சிறப்பு சிகிச்சை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு நேற்று

மாணவியை விமானத்தில் கொண்டு சென்றனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் மாணவி இறந்து விட்டதாகவும், இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2 மாதம் கருப்பு ஆடை அணிய

வேண்டும் என்றும், மனிதாபிமானம் உள்ள அனைவரும் இந்த செய்தியை 4 நபர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றும் செல்போன்களில் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 28, 2012 2:43 pm

சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: சென்னையில் 30-ந் தேதி நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. சிதம்பரம் மைதானத்தை சுற்றி 7 ஆயிரத்து 500 போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். அதிவிரைவுப்படை, அதிவிரைவு பதிலடிக் குழு, கமாண்டோ படை பாதுகாப்பில் ஈடுபடும்.

மைதானத்தின் 18 நுழைவு வாயில்களிலும் 218 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காலை 6 மணிக்கே மைதானத்தில் இருக்க அறிவுரை கூறப்பட்டுள்ளது.

7500 பேர பாதுகாப்புக்கு போட்டா , மற்ற இடங்களில் பாதுகாப்புக்கு என்ன பண்ணுவிங்க .? பாகிஸ்தான் இங்க வந்து விளையாடுவதால என்ன பயன் ? கொஞ்சம் தீவிரவாதிங்க வீசா வாங்கிகிட்டு இந்தியால புகுந்துடுவங்க . போன தடவைமாதிரி தான் நடக்கும் .....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 28, 2012 3:08 pm

V.BABU wrote:இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் : தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை...

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க, இந்தியா மீது அந்நாடு போர் தொடுக்க வேண்டும் என தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்நாட்டு மீது தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் அமீர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பாகிஸ்தானில் தற்போது உள்ள சட்டங்களை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய மது கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான்,

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு உறுதி செயதுள்ளது. ஆனால் தாலிபன்களின் இந்த நிபந்தனையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்..

முதலில் தாலிபானை ஒழிக்கவேண்டும்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 32 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 32 of 37 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக