புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
181 Posts - 77%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
10 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 22 of 37 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:17 am

பழநியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு

பழநி:பழநிக்கு ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்காலங்கள் மட்டுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பின், பஞ்சாமிர்தம் வாங்கும் பக்தர்கள் ஏராளம். மலைக்கோயிலில் உள்ள கடைகளில் நேற்று ஸ்டாக் இல்லாததால், பஞ்சாமிர்தம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மலைகோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், பஞ்சாமிர்த தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பஞ்சாமிர்த டப்பாக்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு, மின்தடை காரணமாக டப்பா தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் நிலைமை சீராகிவிடும்,'' என்றார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:18 am

ஆதீனம், நித்யானந்தா மனுக்கள் தள்ளுபடி

மதுரை : மதுரை ஆதீனம் மடத்தை அரசே ஏற்க உத்தரவிடக்கோரிய வழக்கிற்கு தடை கோரிய ஆதீனத்தின் இடைக்கால மனு, நித்யானந்தாவின் மனுவை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்தது. அறநிலையத்துறை கமிஷனர்," ஆதீனம் அருணகிரிநாதர், இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தார். அறக்கட்டளை துவக்கினர். இவை முறைப்படி நடைபெறவில்லை. ஆதீன சொத்துக்களை தனிநபர்களிடம் விற்பனை செய்துள்ளனர். மடம் நிர்வாகத்தை அரசே ஏற்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார்.ஆதீனம்," ஏற்கனவே 1984 ல் மடத்திற்கு எதிராக அரசு தாக்கல் செய்த மனு, 2வது கூடுதல் சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போது நித்யானந்தாவை நீக்கிவிட்டேன். அறநிலையத்துறை மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,' என இடைக்கால மனு தாக்கல் செய்தார். தீனம், "நித்யானந்தாவும், அவரது ஆட்களும் மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்,' என மற்றொரு வழக்கு தாக்கல் செய்தார். இதில், "அறநிலையத்துறை கமிஷனரை எதிர்தரப்பாக சேர்க்க வேண்டும்,' என நித்யானந்தா மனு தாக்கல் செய்தார்.முதலாவது சப்-கோர்ட் நீதிபதி குருவைய்யா முன்னிலையில், மனுக்கள் விசாரணைக்கு வந்தன.அரசுதரப்பில்," அரசு 1984 ல் தாக்கல் செய்த வழக்கின் தன்மை வேறு. தற்போதைய வழக்கின் தன்மை வேறு' என வலியுறுத்தப்பட்டது. அறநிலையத்துறை மனு மீதான விசாரணைக்கு தடை கோரிய ஆதீனம் மனு, அறநிலையத்துறை கமிஷனரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடக்கோரிய நித்யானந்தாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். விசாரணையை டிச.,17க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:22 am

நடிகை கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு சம்பளம் ரூ.1.40 கோடி

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநில பிறந்த நாள் விழாவில், 8 நிமிட நடன நிகழ்ச்சிக்காக, பாலிவுட் நடிகை, கரீனா கபூருக்கு, 1.40 கோடி ரூபாய், கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து, 2000 ஆண்டில், தனியாக பிரித்து உருவாக்கப்பட்டது, சத்தீஸ்கர் மாநிலம். வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள், அதிகமுள்ள மாநிலம். பழங்குடியின மக்கள் நிறைந்த இந்த மாநிலத்தில், பாரதிய ஜனதாவை சேர்ந்த, ராமன் சிங் முதல்வராக உள்ளார்.

ராஜ்யோத்சவம்:

ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், 1ம் தேதி, மாநிலம் உருவாக்கப்பட்டதன் ஆண்டு விழா நடத்தப்படுவது வழக்கம். "ராஜ்யோத்சவம்' என்ற இதற்கான நிகழ்ச்சி, இந்த ஆண்டில், கடந்த மாதம், 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தலைநகர், ராய்ப்பூரில் விமரிசையாக நடந்தது.அதில், பாலிவுட் நடிகர், நடிகைகள் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. பாலிவுட் படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், சயீப் அலி கான் என்ற, ஏற்கனவே திருமணம் ஆகி, 16 வயதில் குழந்தைகள் உள்ள நடிகரை, 5 ஆண்டுகளாக காதலித்து, சமீபத்தில் மணந்து கொண்டவருமான, நடிகை கரீனா கபூரும் பங்கேற்றார்.

8 நிமிட நடனம்:

அவருடைய நடன நிகழ்ச்சி, மொத்தமே, 8 நிமிடங்கள் தான் நடந்தது. அதற்காக, அவருக்கு, ஏராளமான பணம் கொடுக்கப்பட்டதாக அப்போதே பேசப்பட்டது. மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ், கலைநிகழ்ச்சிக்கு, எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என, மாநில பொதுப்பணி துறை அமைச்சர், பிரிஜ்மோகன் அகர்வாலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்து, சட்டசபையில் நேற்று, அமைச்சர், பிரிஜ்மோகன் அகர்வால் வெளியிட்ட பதிலில் கூறியுள்ளதாவது:ஒரு வாரம் நடந்த கலைநிகழ்ச்சிகளில், 245 கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களில், 42 பேர், பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். கலை நிகழ்ச்சிக்காக, மொத்தம், 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, பாலிவுட் நடிகை, கரீனா கபூருக்கு, அதிகபட்சமாக, 1.40 கோடி ரூபாய், கவுரவ ஊதியமாக வழங்கப்பட்டது.

சாப்பாட்டுக்கு ரூ.11 லட்சம்

:நடிகர் சோனு நிகாமுக்கு, 36 லட்ச ரூபாய், பாடகி, சுனிதி சவுகானுக்கு, 32 லட்ச ரூபாய், நடிகை, தியா மிர்சாவுக்கு 25 லட்ச ரூபாய், நடிகர், ஹிமேஷ் ரெஷாமியாவுக்கு, 24 லட்ச ரூபாய், பாடகர், பங்கஜ் உதாசுக்கு, 90 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.கலைநிகழ்ச்சிக்காக, நடிகர், நடிகைகளை அழைத்து வந்த விதத்தில், 54 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது; அவர்களின் தங்குமிடம், சாப்பாடு போன்றவற்றிற்காக, 11 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது.இவ்வாறு, அமைச்சர் அகர்வால், பட்டியல் வாசித்தார்.

-தினமலர்
"தினமும், 100 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காத, ஏழை மக்கள் நிறைந்த, சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆண்டுதோறும், அரசு கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில், பணத்தை இப்படி கரியாக்கலாமா...' என, நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"அன்றாடம் காய்ச்சிகளாக, 90 சதவீத மக்களைக் கொண்டுள்ள மாநிலத்தில், 8 நிமிட நடனத்திற்கு, 1.40 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ள, நடிகை கரீனா கபூருக்குத் தான், வெட்கம் இல்லை; அதைக் கொடுத்த மாநில அரசுக்கு, புத்தி எங்கே போயிற்று...' என, பொதுமக்களும் கொதிப்படைந்துள்ளனர்.



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 16, 2012 9:03 am

நடிகை கரீனா கபூர் ஏழைகளுக்கு இந்த பணத்தை கொடுத்து உதவினால் மட்டுமே அவரால் திருப்தி அடைய முடியும் :afro:



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Knight
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 6:21 pm

ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.

இந்தோனேஷியாவின் சுலாவெசி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் சுலாவெசி மாகாணத்திலிருந்து 119 கி.மீ., தொலைவில் லூவுக் என்ற இடத்தில் இருந்தது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை................



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 6:25 pm

மும்பை: மகாராஷ்டிர சட்டசபை நிகழ்ச்சிகைளை காண்பதற்கு பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர சட்டசபை கூட்டம் கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கூட்டத்தொடர் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக நிருபர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 10ம் தேதி வழங்கப்பட்ட 2246 எண் கொண்ட பாசில், பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் படம் ஒட்டப்பட்டு, அதில் சட்டசபை செயலாளர் மற்றும் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் கையெழுத்தும் இடம் பெற்றிருந்தது.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. பார்லி., தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், மகாராஷ்டிர பாதுகாப்பு அதிகாரிகள் சட்டசபை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Dec 17, 2012 7:00 pm

தகவல்களுக்கு நன்றி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 17, 2012 8:10 pm

நன்றிகள் பாபு... அன்பு மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 8:20 pm

பதவி உயர்வில்
இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் : மாநிலங்களவையில் நிறைவேற்றம்


டெல்லி: பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் 117வது சட்டதிருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 206 வாக்குகள் பெற்று மாநிலங்களவையில் இந்த அரசியல்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. அவையில் இருந்த 216 உறுப்பினர்களில், 10 பேர் மட்டுமே மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். அவையில் இருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா நிறைவேறியது.

தினகரன்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 8:21 pm

2015க்குள் சூரிய சக்தி வாயிலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம் : முதல்வர் ஜெ. தகவல்

சென்னை: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக முன்னேற்றம் குறித்து தொலைநோக்கு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இந்த தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறப்பான நிர்வாகத்தின் மூலமே இது சாத்தியமாகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. மத அடிப்படைவாதம் தலைதூக்க அனுமதி இல்லை. சாதிக் கலவரங்கள் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நிலஅபகரிப்பு தொடர்பாக 1627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.835.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிரானைட் தொழில் செய்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் ரூ.9783 கோடி சொத்துக்களை முடக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழகம். இதற்காக ஆண்டுதோறும் ரூ.3300 கோடியை மாநில அரசு செலவழித்து வருகிறது. பொது விநியோக திட்டத்துக்கான அரிசியை மாநில எல்லைகள் வழியாக கடத்துவதை தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து போலி மதுபானங்கள் தமிழகத்துக்கு வருவது தடுக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும். விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பொது விநியோக திட்டத்தின் வாயிலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடத்தலை கடுமையாக கண்காணிக்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் களையப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழை என்பதற்காக மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க ரொக்கபரிசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பாடப் புத்தகம், நோட்டு, பை, சீருடை, ஜாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், லேப்டாப், காலனி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர மேம்பாட்டுக்காக கடந்த 2011-12 மற்றும் 2012-13ம் ஆண்டுகளில் ரூ. 1000 கோடியும், மற்ற மாநகராட்சிகளுக்கு ரூ.1500 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர், கழிவுநீர், சானிடேஷன் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட மேம்பாட்டுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி வாயிலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்க நீட்ஸ் என்ற புது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, முதல் தவணையாக ஏற்கனவே ரூ.51.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 2023 தொலை நோக்கு திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிக்கோள்களை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தினகரன்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 22 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 22 of 37 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக