புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 3 of 37 Previous  1, 2, 3, 4 ... 20 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:38 am

ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கும் சிங்களவருக்கு பரிசு வழங்க இருப்பதாக சிங்கள பௌத்த மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்கும் சகல சிங்களக் குடும்பங்களுக்கும் நிதி உதவிகள் வழங்கப்படும். சிங்களக் குடும்பங்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்காத காரணத்தினால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். இதன் மூலம் பௌத்த மத போதகர்கள் உருவாக்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரான்ஸ் மஹாநாயக்கர் பரவாஹர சந்தரதன தேரர் சிங்கள இனம் அழிவடைந்து செல்வதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவொன்றில் கலந்து கொண்ட பரவாஹர சந்தரதன தேரர் சிங்களக் குடும்பத்தினர் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். பெளத்த போதகர்களாக ஆவதற்குக் கூட சிங்களக் குடும்பங்களில் குழந்தைகள் இல்லை என்று கவலைப்பட்ட அவர் , இதற்காக, பெளத்தத் துறவிகளாக மாற்றுவதற்கு, வங்கதேச குழந்தைகளை இறக்குமதி செய்ய வேண்டியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

-தமிழ் வெப்தூனியா..




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:40 am

ரஷ்யாவில் 36 வருடங்களாக அமைதியாக இருந்த எரிமலை மீண்டும் குமுறத் தொடங்கியுள்ளது
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 446c9eb2-d584-4a29-b248-6bbca73b0159_S_secvpf

ரஷ்யாவில் காம்சத்கா தீபகற்பத்தில் போல்ஸ்கி டோல்பச்சிக் என்ற எரிமலை கடந்த 1976-ம் ஆண்டு சாம்பல் மற்றும் புகையை கக்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அந்த எரிமலை அமைதியாக இருந்தது. கடந்த வாரம் மீண்டும் சாம்பல் மற்றும் புகையை பீச்சியடித்து அது குமுறத் தொடங்கியுள்ளது.

இதனால் சுற்றுலாப்பயணிக்ளோ அல்லது பொதுமக்களோ அப்பகுதிக்கு செல்லவேண்டாமென நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:51 am

17, 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் கலெக்டர்கள்- போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 A9469656-38a1-4538-a129-8b31cc37f808_S_secvpf
அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் முதல் நாள் 17-ந்தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், 18-ந்தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டமும் மற்றும் 19-ந் தேதி காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:53 am

திமுக தலைவர் கருணாநிதி ஏழைகளுக்கு ரூ. 3.2 லட்சம் உதவி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 53dbfe1e-6491-4d40-b8fa-4d5e9f6aa1f6_S_secvpf

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் வட்டித் தொகை மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று கருணாநிதி திறந்து வைத்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை வழங்கிய நிதி ரூ. 2 கோடியே 59 லட்சத்து 5 ஆயிரம். மேலும் 2012, நவம்பர் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 16 பேருக்கு தலா ரூபாய் 20 ஆயிரம் வீதம் இன்று கருணாநிதி (7-ந்தேதி) மொத்தம் ரூ. 3,20,000 வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:57 am

இந்திய அணிக்கு தெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு தேவை: வாக்கர் யூனுஸ்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 32a584b0-95d9-49fa-8203-ae66f491064c_S_secvpf

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீரருமான வாக்கர் யூனுஸ் தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடுவதை வைத்து தெண்டுல்கரை விமர்சிப்பது தவறானது. உலகின் மிகச்சிறந்த வீரர்களில் தெண்டுல்கரும் ஒருவர். 23 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிலையில் அவர் நிலைத்து நின்று ஆடியது அவ்வளவு எளிதானது அல்ல.

என்னை பொறுத்த வரை அவரது சேவை இந்திய அணிக்கு தொடர வேண்டும். இன்னும் 6 முதல் 8 மாதங்கள் வரையோ அல்லது ஒரு ஆண்டோ தெண்டுல்கர் விளையாட வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாகவே தெண்டுல்கர் ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்த விமர்சனத்துக்கு அவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

இவ்வாறு வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.

மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கரால் இன்னும் ஒரு ஆண்டு விளையாட இயலும். அவர் 200 டெஸ்டில் விளையாட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அவரால் 200 அல்லது 250 டெஸ்ட் வரையே விளையாட முடியும். கிரிக்கெட் புத்தகத்தில் அனைத்து சாதனைகளும் அவருடையதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதே டெஸ்டில் தான் வாக்கர் யூனுசும் அறிமுகம் ஆனார். அவர் வாசிம் அக்ரமுடன் இணைந்து தொடக்கத்தில் பந்து வீசினார். அப்போது இருவரும் உலகின் சிறந்த வேகப்பந்து வீரர்களாக திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:01 pm

புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் இல்லை: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வங்கி கணக்கு முடக்கம்- ஐ.ஒ.சி. நடவடிக்கை

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 8ec65452-7788-4102-ba95-ec163fdb70ff_S_secvpf

ஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஒ.ஏ.) சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி) சஸ்பெண்டு செய்தது. ஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாத வரை சஸ்பெண்டை நீக்க முடியாது என்று ஐ.ஒ.சி அறிவித்துவிட்டது.

தடைக்கு பிறகு இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடந்தது இந்த புதிய நிர்வாகிகளை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரிக்கவில்லை. புதிய நிர்வாகிகள் அங்கீகரிக்கப்படாதது. அவர்கள் இந்த ஒலிம்பிக் சங்கம் சார்பில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட அதிகாரம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

இதே போல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வங்கி கணக்கையும் ஐ.ஒ.சி. முடக்கியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தலைவர் அபய்சிங் சவுதாலா, பொதுச் செயலாளர் லலித் பனோட் ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க வங்கி கணக்கு பற்று ஒலிம்பிக் சாசன நிதி தொகையும் கையாள முடியாது என்று அறிவித்துள்ளது.

இதே போல இந்திய ஒலிம்பிக் சங்க புதிய நிர்வாகிகளை மத்திய விளையாட்டு அமைச்சர்களும் அங்கீகரிக்க வில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிர்வகிக்க 10 பேர் கொண்ட இடைக்கால குழுவை விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது. முன்னனி விளையாட்டு வீரர்களை அடங்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:03 pm

இந்திய நிறுவனத்திடமிருந்து ஏர் போர்ட்டை திரும்பப்பெற்றது மாலத்தீவுகள்: பின்னணியில் சீனா?

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_601743

மாலே: இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலே ஏர்போர்ட்டை திரும்பப்பெற்றது மாலத்தீவுகள். இந்த பிரச்னையின் பின்னணியில் சீனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலத்தீவுகள் தலைநகர் மாலேவில் உள்ள இப்ராகிம் நசிர் சர்வதேச விமான நிலையத்தை சுமார் 511 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மேம்படுத்தும் ஒப்பந்த பணியை இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு பெற்றது. மாலத்தீவுகள் அதிபராக முகமது நசீத் இருந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், மாலத்தீவுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முகமது வாகித் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், திடீரென இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மாலத்தீவுகள் அரசு தெரிவித்தது. முறைகேடுகள் மூலமாக இந்த ஒப்பந்தம் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியது.

மாலத்தீவுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கப்பூர் கோர்ட்டில் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், மாலத்தீவுகளின் நலனுக்கு ஏற்றவாறு செயல்பட அந்நாட்டு அரசுக்கு உரிமை உண்டு என்றும், எனினும் விதிமுறைகளை மீறி ஏர்போர்ட் எடுத்துக்கொள்ளப்படும்பட்சத்தில், உரிய நிவாரணம் கோரி ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் மனு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. தங்களுக்கு சாதகமாக உத்தரவு கிடைத்த உடனேயே செயலில் இறங்கிய மாலத்தீவுகள் அரசு, நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக ஏர்போர்ட் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலத்தீவுகள் அரசு எடுத்துக்கொண்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிபதியின் தீர்ப்பை முழுமையாக படித்த பின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பின்னணியில் சீனா? சுமார் 1190 தீவுகளைக் கொண்ட மாலத்தீவுகள் பிராந்திய ரீதியாக, இந்திய பெருங்கடலில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்திய கடற்படை தற்போது மாலத்தீவுகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சீனா, மாலத்தீவுகளில் தனது காலடியை பதிப்பதற்காகவே இந்த வேலைகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாலத்தீவுகள் அதிபர் முகமது வாகித் சீனா சென்ற போது, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா முன்வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த ஒப்பந்தம் சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்க ஒன்றுமில்லை. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பர்மா என இந்தியாவைச் சுற்றி பல இடங்களில் தனது தடத்தை பதித்துள்ள நிலையில், மாலத்தீவுகளிலும் சீனா தனது ஆதிக்கத்தை பரவவிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-தின மலர்






சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:05 pm

குஜராத் தேர்தல் வேட்பாளர்களில் 32 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்:தேர்தல் கண்காணிப்பு குழு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_601735

ஆமதாபாத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தலில் மொத்தம் 9400 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ததில் இவர்களில் 301 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.
தேர்தல் குழு தகவல்:
இரு கட்ட தேர்தல்களிலும் போட்டியிடும் 1666 வேட்பாளர்களில் 940 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஆமதாபாத்தில் நேற்று வெளியிட்ட தகவல் அறிக்கையில் குஜராத் தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் 2007ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்துள்ளனர்.

கட்சிகளின் சொத்து விபரம்:
தேர்தல் கண்காணிப்பு குழு முக்கிய கட்சிகள் வாரியாக அவற்றின் சொத்து மதிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரசிற்கு ரூ.7.17 கோடியும், பா.ஜ., விற்கு ரூ.5.47 கோடியும், தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.4.36 கோடியும், குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு ரூ.1.13 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.46.24 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ.22.31 லட்சமும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு ரூ.17.87 லட்சமும் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முதலிடம்:
கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ளனர். உயர் பதவிகளை வகிக்கும் வேட்பாளர்கள் பட்டியலிலும் காங்கிரசே அதிகளவில் உள்ளது. இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புட்டிற்கு ரூ.268 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் 9 பேர் தங்களின் பான் மதிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 940 வேட்பாளர்களில் 214 பேர் தங்களின் பான் மதிப்பை வெளியிடவில்லை. இரு கட்ட தேர்தல்களிலும் எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுபவர்களில் 170 பேர் 2007ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-தின மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:08 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விசா ; கடும் சோதனை ' ; உள்துறை அமைச்சர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_601301

புதுடில்லி: ""இந்தியா - பாக்., இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, கடும் சோதனைக்கு பிறகே, விசா வழங்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.
செய்தி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:நம் அண்டை நாடு என்ற வகையில், பாக்., அணி இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலாச்சாரம், பொழுது போக்கு ஆகியவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை. இதில், பங்கேற்க பொதுமக்கள் வரவேண்டும்; அது தான் நல்லது.

கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்காக, 3,000 விசாக்களும், வி.ஐ.பி.,க்களுக்கு, 300 விசாவும் வழங்கப்படுகிறது. விசா வழங்கும் நடைமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கும். ஒவ்வொருவரை பற்றியும் முழுமையாக விசாரித்த பின், விசா வழங்கப்படும்.

இவ்வாறு சுசில் குமார் ஷிண்டே கூறினார்.கடந்த, 2007ம் ஆண்டு பாக்., அணி, இந்தியாவில் பங்கேற்ற போட்டியை பார்ப்பதற்காக, பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த, 12 பேர், காணாமல் போயினர். அவர்கள் என்ன ஆயினர் என்பது, இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:27 pm

பாதாள சாக்கடையில் 22 ஆண்டுகளாக குடும்பம் நடத்தும் தம்பதி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_601467
மெடிலின்: கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மெடிலின் நகரில் வசிப்பவர், மைக்கேல் ரெஸ்டிரிபோ, 62. இவரது மனைவி மரியா கிரேசியா. கூலி வேலை செய்து வந்த மைக்கேல், போதைக்கு அடிமையானதால், வறுமையில் வாடினார். மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கøடையின் ஒரு பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை, என ஒதுக்கி விட்டனர். இதனால், இந்த பாதாள சாக்கடையை, மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக்கொண்டு, 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை ஏற்படுத்தி கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர கொண்ட, பாதாள அறையில் டிவி, மின்விசிறி, உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.

மழை காலங்களில், பாதாள சாக்கøடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே இருக்கின்றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்துவைத்து விடுகின்றனர். இவர்களுடன் வசிக்கும் நாயுடன் தான், இந்த பாதாள அறைக்குள் தூங்குகின்றனர். இதுவரை நகராட்சி அதிகாரிகள் இவர்களை அகற்ற, எந்த நடவடிக்கை எடுக்காததால், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.


-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 3 of 37 Previous  1, 2, 3, 4 ... 20 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக