புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
21 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 13 of 37 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:00 am

இரு ஆண்டுகளில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதலில் 540 போலீசார் பலி

புதுடில்லி: கடந்த இரு ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதுவரை 540 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பார்லிமென்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், பார்லிமென்ட் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து பேசியதாவது: கடந்த 2010-ம் ஆண்டு துவங்கி நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது 540 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஆர்.பி.என். சிங் கூறினார்.
-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:01 am

கள்ளத்தொடர்பு: சிங்கப்பூர் சபாநாயகர் ராஜினாமா

சிங்கப்பூர்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சிக்கிய சிங்கப்பூர் பார்லிமென்ட் சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் , மக்கள் நடவடிக்கை கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியைச் சேர்ந்த மைக்கேல் பால்மர் (44) அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகராக உள்ளார். இவர் தனது கிழக்கு பங்கூல் பார்லிமென்ட் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் , பல முறை அவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக புகார் எழந்தது.
இதையடுத்து தனது சபாநாயகர் பதவியையும், எம.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். தற்காலிக சபாநாயகராக, துணை சபாநாயகர் சார்லஸ் சோங், பொறுப்பேற்றார். இதனை அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் ஆகியோர் நியமித்தனர். விரைவில் கிழக்குபங்கூல் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் எனவும் தெரிவித்தனர்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:02 am

உத்தர்காண்ட் மாஜிமுதல்வர் மரணம்

பாட்னா: உத்தர்க்காண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உடல்நலக்குறைவால் காலமானார். பீகார் மாநிலத்தை இரண்டாக பிரித்து உத்தர்க்காண்ட் மாநிலம் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அம்மாநிலத்தின் முதல், முதல் அமைச்சராக நித்யானந்தசுவாமி (88) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் டேராடூன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:03 am

நடை பயணத்தை துவங்கினார் வைகோ
திருநெல்வேலி: பூரண மதுவிலக்கு கோரி ம.தி.மு.க., சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் இன்று துவங்கியது. இதில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 1200 இளைஞர்கள் கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாக 14 நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணம் மதுரையில் நிறைவு பெறுகிறது.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:04 am

ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இன்று 63வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க., அழகிரி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி பேட்டி: தனது பிறந்த நாள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி,சிறப்பான இந்நாளில் எனது பிறந்தநாள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும் சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள் தான் முக்கியம் என்றார். மேலும் இப்போது தான் நடித்து வரும் கோச்சடையான் படம் பற்றி கூறுகையில், கோச்சடையான் படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம் மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறலாம் என்றார்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 12:04 am

சூப்பரோ சூப்பருங்க உங்க செய்திகள்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:06 am

2016ல் "சுகாய்-30' போர் விமான தளமாக மாறுகிறது சூலூர்:இந்திய பெருங்கடல் அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கை

கோவை:""இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகாய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார்.
கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், நேற்று ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு அமைப்புகள், அணுமின்நிலையங்கள், விமான தொழிற்சாலைகள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில் தென்பிராந்திய படைப்பிரிவுகள், அதிநவீன தளவாடங்களுடன் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. சூலூர் விமான படைதளத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விமான ஓடுதளம் (ரன்வே) நவீனப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் முதல் தயார் நிலையில் வரும். தற்போது, கூடுதலாக "டாக்ஸி வே' அமைக்கப்பட்டுள்ளது.
"தேஜாஸ்' இலகுரக போர் விமானங்களை கையாளும் நாட்டின் முதல் விமான தளமாகவும் சூலூர் படைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். 2016ம் ஆண்டில் "சுகாய்-30' போர் விமானங்களை கையாளும் விதத்தில் சூலூர் தளம் உருவாக்கப்படும். அதிநவீன போர்விமானங்கள், @ரடார்கள் மற்றும் பாதுகாப்பு தளவாட கருவிகள் நிறுவப்படும்.கடல் வழியான நடமாட்டத்தை கண்காணிக்கவும் , எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எளிதில் இயங்கவும், நிலை நிறுத்தவும் தயாராக விமானப்படை தளங்கள் உள்ளன. தேவைப்பட்டால், இங்குள்ள படைப்பிரிவு (ஸ்குவாட்ரன்) நிர்வாக வசதிக்காக, வேறு இடத்தில் மாற்றப்படும்.இதேபோல், தஞசாவூரிலும் விரைவில் முழு அளவிலான விமான படைதளம் செயல்படத் துவங்கும். ஒரு படைத் தளம் உருவாக்க 10 ஆண்டுகள் வரை தேவைப்படும். இதற்கு 2,000 கோடி முதல் 3,000 கோடி ரூபாய் வரை செலவாகும்.
விமானப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை. ஓய்வு காலத்துக்கு முன்பே அலுவலர்கள் பணியில் இருந்து விலகுவதாக கூறுவது, கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. ஆண்டுதோறும் புதிய அலுவலர்கள் பலர் பணியில் சேர்ந்து வருகின்றனர். இதில், தென் மாநிலங்களின் பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. கால நிலை மாற்றத்தால், போர் விமானங்களை இயக்குவதில் சிரமம் எதுவும் இல்லை. இயற்கை சூழல் மாற்றம், இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில், பைலட்களுக்கு அதிநவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, ஏர் மார்ஷல் ஜாலி தெரிவித்தார்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:11 am

ஹைதராபாத் ஆஸ்பத்திரியில் குழந்தையின் கைவிரல்களை பூனை கடித்து தின்றதாக பெற்றோர்கள் புகார்
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தின் அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு தங்கி தாயும் சேயும் சிகிச்சை பெற்றுவந்த போது குழந்தையின் கையை பூனை கடித்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த தவறை மறைக்க பெற்றோர்களுக்கு தெரியாமல் கையில் கட்டு போட்டு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

குழந்தையின் கையை பிரிக்கவேண்டாம் மற்றும் யாருக்கும் இந்த குழந்தையை காட்டவேண்டாம் என்று கூறி அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அவர்களுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு சென்ற அந்த தினக்கூலி பெற்றோர்கள் குழந்தையின் கையில் சுற்றியிருந்த துணியை பிரித்து பார்த்தனர்.

அப்போது குழந்தையின் கையில் விரல்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மனித உரிமை அமைப்பினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:12 am

மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை உடனே தூக்கிலிடவேண்டும்: திக் விஜய்சிங் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இன்று தனது சொந்த நகரமான மத்தியப் பிரதேச மாநிலம் ரகோகருக்கு சென்று இருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பாராளுமன்ற தாக்குதல் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குரு பற்றி கூறியதாவது:-

பாராளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை விரைவில் தூக்கிலிடப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்சல் குருவால் கொடுக்கப்படும் கருணை மனுவை பரிசீலனை செய்து உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

அப்சல் குருவை தூக்கிலிடப்படுவது குறித்து பாரதீய ஜனதா இரட்டை நிலைபாட்டுடன் இருக்கிறது. ஒரு புறம் அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்கிறது. மற்றொரு புறம் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்கவேண்டும் என்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:13 am

அடுத்த வருடம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து: மத்திய மந்திரி கபில் சிபல் உறுதி

இந்தியாவிலுள்ள மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் அடுத்த வருடம் முதல் ரோமிங் கட்டணம் கட்ட தேவையில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி கபில் சிபல் என்று கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தகவல் தொடர்பு துறை கொள்கை 2012-ன் படி 'ஒன் நேசன் - பிரீ ரோமிங்' என்ற குறிக்கோளை நடைமுறைப் படுத்துவோம் என்று முன்னதாகவே சொல்லியிருந்தோம். நாடு முழுவதும் ஒரே போன் நம்பரை பயன்படுத்துவதற்கு ரோமிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற நடைமுறையை நீக்குவது தொடர்பான கொள்கைக்கு கடந்த மே மாதமே எங்கள் துறை ஒப்புதல் அளித்து விட்டது.

அதன் படி 2013-ம் ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகு இந்த சலுகை நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 13 of 37 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக