புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
1 Post - 1%
manikavi
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_m10கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 10:37 pm

ஆட்சி போனாலும் பரவாயில்லை, தமிழர் வாழ்வே எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லிச் சொல்லி ஓட்டுக்களைப் பிடுங்கிய கலைஞர்தான் இன்று இப்படிச் சொல்கிறார்:

கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்! Karu-sonia-feat-2

‘ஈழத் தமிழருக்காக போராடச் சொல்லி என்னைத் தூண்டுவதன் மூலம் திமுகவையும் காங்கிரஸையும் பிரிக்கப் பார்க்கிறார் ராமதாஸ். அது நடக்க விடமாட்டேன். காங்கிரஸையும் என்னையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்கவே முடியாது! தமிழர் வாழ்வுரிமை பற்றி இப்போது மாநில அரசு பேசுவதால் பலனில்லை. அதை ஐநா தலையிட்டு தீர்க்கட்டும்…!’ என்று.

இதையெல்லாம் விட புல்லரிக்க வைக்கும் அவரது புதிய ஞானம், ‘புலிகள் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள்’ என்ற பேருண்மை புரிந்திருப்பதுதான்!

இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றுவதில் உள்ள அக்கறையைக் காட்டிலும், சோனியா - மன்மோகன் சிங் அரசிற்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கக் கூடாது என்பதிலும், ஒரு சிறு காரணத்திற்காகக் கூட காங்கிரஸை விரோதித்துக் கொண்டு ஆட்சியை இழந்துவிடக் கூடாது என்பதிலும் காட்டுவதை அவரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்போது முக - ஜெ கூட்டணி!

கருணாநிதி பல முறை, சூழ்நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற்றவர்தான் என்றாலும், அவரது இந்த புதிய ‘பரிமாண’த்தை தமிழர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இனி வரலாற்றில் நீங்காத கறையாகவே அது என்றென்றும் நிலைத்திருக்கும். தமிழர் விரோதிப் பட்டியலில் கிடக்கும் ஜெயலலிதாவுடன் சேர்ந்துவிட்டார் இவரும்.

பரவாயில்லை… புலிகள், ஈழத்தமிழர் விஷயத்தில் இருவரும் ஒரு அசிங்கமான கூட்டணியை அமைத்து தங்களை இனம் காட்டிக் கொண்டுள்ளனர்!

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவமும், அவர்களுக்கு பல்வேறு மட்டங்களில் உதவிவரும் இந்தியப் படையும் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலை நிறுத்த, தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ‘அய்யகோ தமிழினம் அழிகிறதே’ என்று கூறித் துவங்கும் தீர்மானத்தினை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இன்றே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், போர் நிறுத்தம் செய்து, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்றார் உணர்ச்சிப் பொங்க.

‘அய்யோ! அந்த சிங்கள ராணுவ குண்டு வீச்சுக்கிடையே- சிதறியோடும்- சிறுவர், சிறுமியர்- சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய்- இன்று கூண்டோடு சாகின்றனரே- பூண்டோடு அழிகின்றனரே- மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும்- பழித்தும்- இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம்- அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப்போகிறோம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 10:37 pm

இறுதி வேண்டுகோளாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும்- ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும்- பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும்- இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு;- உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்த பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்த கரங்களைப் பிடித்துக் கொண்டுதானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்….” என்று கதறினார்.

அவரது அரசியல் நாடகத்தின் ஒரு காட்சிதான் இது என்ற சின்ன சந்தேகம் கூட வராமல் பெரும்பாலான தமிழர்களும் அதை அப்படியே நம்பினார்கள். அன்றைக்கு உண்மையிலேயே பல ஈழத் தமிழர்கள் சற்றே மன ஆறுதலும், நம்பிக்கையும் கொண்டார்கள் என்பதே உண்மை. எதிர்கட்சிகளே கூட, வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் அதை நம்பினார்கள்.

ஆனால் அவரே இன்று ஈழத் தமிழர்களையும் அவர்களது உரிமைப் போரையும் அறவே கைகழுவும்படியான வார்த்தைகளில், பட்டும்படாமலும் பேசுகிறார் என்றால்…

உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பெருமையோடு வலம் வந்த கலைஞர் அவர்களே… இவ்வளவுதானா உங்கள் தன்மான, இனமான… தமிழ் உணர்ச்சி!

“இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி ஏற்படவும், ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற பெயரால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் மக்களைத் திரட்டி அறப்போராட்டங்கள் நடத்தப்படும்” என்று இப்போது கூறுகிறீர்களே… இன்றைக்கு ஈழத் தமிழன் நிலை அறப்போராட்டம் நடத்தி நிதானமாகத் தீர்வு கண்டுகொண்டிருக்கும் நிலையிலா உள்ளது. உங்கள் அறப்போராட்டம் என்றைக்கு அந்த சகோதரர்களுக்கு வாழ்க்கை தரும்? அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஈழத்தில் எவரேனும் உயிருடன் மிஞ்சுவார்களா?

சரி, நீங்கள் இத்தனை நாளாக வற்புறுத்திக் கேட்ட போர் நிறுத்தம் எங்கே, ஏன் ஏற்படவில்லை. அந்த கோரிக்கையைப் பற்றி இலங்கை சென்ற அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏன் பேசவில்லை?

அதற்கு என்ன விளக்கம் என்று மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பாமல். “அந்தப் பயணம் அவருக்கே திருப்தியளிப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். அதாவது பிரணாப்புக்கு பிஆர்ஓ போல இவரே இங்கு பதிலைத் தருகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 10:40 pm

உண்மையில் பிரணாப் என்ன சொன்னார் தன் பயணம் பற்றி?

“இலங்கையில் ஏற்பட்டுவரும் சமீபகால சம்பவங்கள் குறித்து மேதகு அதிபர் ராஜபக்சே அளித்த விளக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது, பெரும் மாற்றம் ஏற்பட்டு வரும் இந்தச் சூழலில் நாம் நமது உறவுகளை பலப்படுத்திக் கொள்வது முக்கியம்” என்றும் பிரணாப் கூறியது முதல்வருக்குத் தெரியாதா அல்லது அதைத் தரிந்து கொள்ள விரும்பவில்லையா?

தான் மனதுக்குள் நினைப்பதெல்லாம் வெளியில் நடப்பதைப் போன்ற ஒரு கற்பனையுலகில் வசிக்கிறாரா இவர்?

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை தீர இன்னொரு முடிவையும் முன் வைக்கிறார் இப்போது புதிதாக…

“இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும், சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றிணை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு இலங்கை அரசு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்த செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது…” என்ற குண்டை வீசுகிறார்.

ஐயா கலைஞர் அவர்களே… எதற்காக இன்னமும் இலங்கை எரிந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?

தமிழர்களுக்கும் தமிழர் உரிமைக்காக ஆயுதமேந்திய போராளிகளுக்கும் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே ஒரு தீர்வைத் திணித்த இந்திய-இலங்கை அரசுகளின் திட்டத்தை எதிர்த்துதானே பிரபாகரன் மீண்டும் ஆயுதம் ஏந்தினார்?

இந்திய படைகளுடன் ஆண்டுக்கணக்கில் யுத்தம் செய்கிறார்? இப்போது அதே போன்றதொரு துரோக ஒப்பந்தத்துக்கு நீங்களும் துணை போகலாமா?

தன் கணவனின் கொலைக்காக ஒரு இனமே அழிய வேண்டும், தன் கணவனால் திணிக்க முடியாத ஒரு ஒப்பந்தத்தை தன் காலத்தில் திணித்து, வெற்றி என அறிவிக்க வேண்டும் என்ற ‘சோனியா சபதம்’ நிறைவேறிட உங்களால் ஆன ஒத்துழைப்பா இது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 10:40 pm

புலிகள் பற்றிய புதிய ஞானம்!!

இதையெல்லாம் விட பேரதிர்ச்சி, இன்று விடுதலைப் புலிகளைப் பற்றி கலைஞர் பெற்றுள்ள புதிய ஞானம்.

இது அவரது ஒப்புதலோடே சிங்கள ராணுவத்துக்கு அலவன்ஸ் எல்லாம் அளித்து ஈழத் தமிழர்களைக் கொல்ல இந்திய விமானப்படை பயிற்சி அளித்தார்களே அப்போது வந்த ஞானமா? அல்லது ராமச்சந்திரா மருத்துவமனையில் சோனியாஜீயுடன் நடத்திய தேர்தல் பேரத்துக்குப் பின் வந்த ஞானமா?

பிரபாகரன் சர்வாதிகாரியாக நினைத்தார் என்ற ‘உலகமகா’ உண்மையை இன்று வெளிக் கொணர்ந்துள்ளீர்கள். பிரபாகரன் எப்போதோ கொடுத்த பேட்டி அது.

அதன் பிறகு எத்தனையோ முறை அந்த ‘அன்புத் தம்பி, அருமை உடன்பிறப்பு’ பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளீர்களே… மேடைகளில் முழங்கினீர்களே அப்போது தெரியவில்லையா, நாம் ஒரு சர்வாதிகாரி பற்றிப் பேசுகிறோம் என்று!

‘புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றனர்… சக போராளிகளை அழித்தனர், சகோதர யுத்தத்தில் அனைத்தையும் அழித்துக் கொண்டனர். ஆக அவர்களுக்கு நான் உதவ முடியாது. விடுதலைப் புலிகள் அழிந்தவுடன் இலங்கை தமிழருக்கு உதவுகிறேன்’ என்ற புதிய நிலைப்பாட்டை கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்துக் கூறியிருக்கிறீர்கள்.

புலிகள் கையில் பெரும் ராஜ்ஜியம் இருந்ததே அப்போது சொல்ல வேண்டியதுதானே இந்த உண்மைகளை… ‘சரியோ.. தவறோ… புலிகளைத் தவிர்த்துவிட்டு பேச்சு வார்த்தைகளில் இறங்கமுடியாது. இன்று தமிழ் மக்களுக்கு காவலர்களாக களத்தில் நின்று போராடி உயிர் விட்டுக் கொண்டிருப்பது புலிகள்தான்’ என சரியாக ஓராண்டுக்கு முன்பு நீங்கள் சொன்னது மறந்து போனதோ?

அது சரி… முதல்நாள் சொன்னதை அடுத்த நாளே மறந்து அல்லது மறுத்துப் பேசும் பேப்பர் புலியான உங்களிடம் போய் இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதானே!

டெலோவை நீங்களும், புலிகளை அமரர் எம்ஜிஆரும் ஆதரித்த காலத்தி்ல் எழுந்த காழ்ப்புணர்ச்சி, புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்பதை நீங்களே உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் உங்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு கவிதை எழுதி, ஜெயாவிடமும் மானங்கெட்ட காங்கிரஸ் கூட்டத்திடமும் கண்டனக் கணைகளைப் பரிசாகப் பெற்றபோது கூட உங்களுக்கு இந்த ஞானம் பிறக்கவில்லையே அய்யா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 10:41 pm

எல்லாம் சரி… புலிகள் அழிக்கப்பட்ட பிறகு…?

ஒரு நாலாந்தர காமுகனாக மக்கள் பார்க்கும் ‘புதிய சிங்களன்’ கருணாவுடன் பேசிக் கொள்வீர்களோ… அல்லது தமிழக போலீசால் கேடி லிஸ்டில் சேர்க்கப்பட்ட டக்ளஸை தமிழர் தலைவனாக்குவீர்களோ?

சோனியாவின் இலக்கு புலிகள் அடியோடு அழிய வேண்டும், இலங்கைத் தமிழர் அரசியல் பேச்சுக்களில் புலிகள் என்று யாருமே வரக்கூடாது என்பதாகவே இருக்கிறது. ராஜபக்சேவை விட ஆயிரம் மடங்கு அதிக வேகத்துடன் இந்த விஷத்தை உங்களைப் போன்றவர்களின் மனதுக்குள்ளும் ஏற்றி விட்டதில் அம்மையார் ஆற்றல்… பலே! ஜெயலலிதாவையே மிஞ்சிவிட்டார் சோனியா!!

அப்படியெனில் உங்கள் அன்பும் ஆதரவும் பெற்ற, ஈழ அமைதியின் தூதுவர்கள் யார் என்றும் சொல்லிவிடலாமே! அவர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தால், இந்த தமிழர்கள் எதற்கு வன்னிக் காடுகளில் ஓடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்!

முதல்வர் அவர்களே… நினைவில் கொள்ளுங்கள்… உங்கள் தேர்தல் உரை பாணியிலேயே சொன்னால், தமிழர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பேசும் நாங்கள் சொல்கிறோம்… திருமங்கலம் வெற்றிகள் நிரந்தரமல்ல. அழகிரிக்கும் அடி சறுக்கச் செய்யும் வலிமை தமிழர்களுக்குண்டு!

காரணம், தமிழன் பார்வை முன்னைக் காட்டிலும் தெளிவடைந்துள்ளது. எது அரசியல், எது மனிதாபிமானம், எது துரோகம் என்பது அவனுக்கும் தெரியும்.

சோனியாக்களுக்கும் காங்கிரஸ் பண்ணையார்களுக்கும் யாரையும் தோளில் சுமந்து பழக்கமில்லை… சவாரி செய்தே பழக்கம்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக