புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
1 Post - 1%
viyasan
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
19 Posts - 3%
prajai
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 நாடு மறந்த நல்லவர்  Poll_m10 நாடு மறந்த நல்லவர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு மறந்த நல்லவர்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Dec 01, 2012 11:12 am

முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ராலின் மரணம் அமைதியாக இருந்தது என்பது மட்டுமல்ல, அவருக்கு இந்த நாடு செலுத்தும் அஞ்சலியும் ஆரவாரம் இல்லாததாகவே இருக்கப் போகிறது. ஐ.கே. குஜ்ராலின் மரணத்துக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், பொதுவாழ்க்கையை ஆரவாரமில்லாமல் நடத்திக் காட்டிய அந்த மனிதர், இப்படி ஓர் இறுதி அஞ்சலியைத்தான் விரும்பியும் இருப்பார்.

பதினொரு மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். சத்தம்போட்டுக்கூடப் பேசாதவர். தனக்கென்று மக்கள் செல்வாக்கு எதுவும் இல்லாதவர். ஆனாலும், கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர். நேசிக்கப்பட்டவர். இதுதான் இந்தர்குமார் குஜ்ரால்.

குஜ்ராலின் மறைவு இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கடைசி தேசியத் தலைவர் ஐ.கே. குஜ்ராலாகத்தான் இருப்பார். இப்போது பாகிஸ்தானாகி விட்டிருக்கும் மேற்குப் பஞ்சாபிலுள்ள "குஜ்ரால்' என்கிற கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட இந்தர்குமார் 1919-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜீலம் நகரில் பிறந்தவர் என்றாலும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பம் அவருடையது. லாகூரில் கல்லூரி மாணவராக இருக்கும்போதே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1942-இல் அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் குதித்தவர்.

இன்றைய தேசிய அரசியலில் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குகொண்ட தலைவர்கள் யாருமே இல்லை என்கிற நிலையில், அந்த சகாப்தத்தின் கடைசித் தலைவராக இந்தர்குமார் குஜ்ரால் சரித்திரத்தில் அடையாளம் காணப்படுவார். அதுமட்டுமல்ல, தனது 60 ஆண்டுப் பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, யாரும் அவர்மீது சுண்டுவிரலைக்கூட நீட்டிக் குற்றம் காணமுடியாத நேர்மையாளராக இருந்த பெருமைக்குரியவரும் இந்தர்குமார் குஜ்ராலாகத்தான் இருக்க முடியும்.

குஜ்ராலின் பொதுவாழ்க்கை 1947 பிரிவினையின்போதுதான் புதிய இலக்கை நோக்கி நகர்ந்தது. அதுவரை சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமே இருந்த குஜ்ரால், பிரிவினையால் பாதிக்கப்பட்டு, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு விரட்டப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க இந்திரா காந்தியின் தலைமையில் களமிறங்கிய இளைஞர் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்திரா காந்தியுடனான அந்த நெருக்கம்தான், அவர் 1964-இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படக் காரணமாக அமைந்தது. அதற்கு முன்னால்வரை, தில்லி மாநகராட்சி அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஐ.கே. குஜ்ரால் தேசியத் தலைவராக உருவாக வழிகோலியது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி.

பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர் என்றுதான் ஆரம்பத்தில் குஜ்ரால் அறியப்பட்டார். சொல்லப்போனால், 1975 ஜூன் 25-ஆம் நாள் இந்தியாவின்மீது நெருக்கடிநிலை திணிக்கப்பட்டபோது செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் குஜ்ரால். பத்திரிகைத் தணிக்கை என்பது சுதந்திர இந்தியாவில் அவரது அமைச்சகத்தால்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், "எமர்ஜென்சி' காலத்தின் தவறுகள் எதுவுமே, குஜ்ராலின் மரியாதையைப் பாதிக்கவில்லை. காரணம், அவருக்கு அதில் தொடர்பில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

தன்னால் நெருக்கடிநிலை அமலையும், அடக்குமுறை ஆட்சியையும், தணிக்கைக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குஜ்ரால் வெளிப்படையாகவே பிரதமர் இந்திரா காந்தியிடம் சொன்னபோது, அவர் கோபப்படவில்லை. மாறாக, குஜ்ராலை அன்றைய சோவியத் யூனியனுக்கு இந்தியாவின் தூதுவராக அனுப்பி வைத்தார். நெருக்கடிநிலை காலத்திலும் குஜ்ராலால் தாமரை இலைத் தண்ணீராக இருக்க முடிந்தது என்பதைத்தான் இது காட்டுகிறது.

1977-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி பதவி ஏற்றபோது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்ட எல்லா தூதுவர்களும் மாற்றப்பட்டனர் - ஐ.கே. குஜ்ராலைத் தவிர. பிரதமர் மொரார்ஜி தேசாயும் சரி, அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாயியும் சரி, குஜ்ராலின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல் பதவியில் தொடரச் சொன்னார்கள். அதன் விளைவாக, இந்தியா ஒரு தலைசிறந்த வெளிவிவகார சிந்தனையாளரைப் பெற முடிந்தது.

குஜ்ராலின் ஐந்து அம்ச வெளிவிவகாரக் கொள்கை, இந்திய சரித்திரத்தில் பஞ்ச சீலத்துக்கு அடுத்தபடியாக பாராட்டவும், விமர்சிக்கவும் பட்ட ஒன்று. சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் வல்லரசு நாடுகளின் பனிப்போர் அகன்றுவிட்ட நிலையில், தெற்காசிய நாடுகளின் கூட்டுறவும், அணிசாரா நாடுகளை இந்தியா வழிநடத்துவதும்தான் சரியான வெளிவிவகாரக் கொள்கையாக இருக்க முடியும் என்கிற அவரது வாதம் செயல்படுத்தப்படுமானால் மட்டுமே இந்தியா அச்சுறுத்தல்கள் இல்லாத முன்னேற்றம் காண முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

11 மாதம் பிரதமராக இருந்து இந்தர்குமார் குஜ்ரால் பெரிதாக என்ன சாதித்து விட்டார் என்று கேட்கலாம். "இப்படியும் ஒரு பிரதமர்' என்று வருங்காலம் அவரைச் சிறப்பித்துப் பாராட்டாமல் இருக்கலாம். ஆனால், சரித்திரம் "இப்படியும் ஒரு நல்ல மனிதர் பிரதமர் பதவியை அலங்கரித்தார்' என்று பதிவு செய்யாமல் இருக்க முடியாது!

எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பிரதமராக அவரால் பதவியில் இருக்க முடிந்தது. நேர்மையையும், பொதுவாழ்க்கையில் சில குறிக்கோள்களையும் கடைப்பிடிக்கும் அரசியல்வாதியாக அவரால் வாழ்ந்து காட்ட முடிந்தது. தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றப் பிரதமர் பதவியையே தூக்கி எறியும் துணிவுடன் செயல்பட முடிந்தது.

இந்தர்குமார் குஜ்ராலின் மரணம் என்பது இந்தியாவை நேசித்த, அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை வாழ்ந்து காட்டிய ஒரு நல்ல மனிதரின் மரணம்.

நன்றி தினமணி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 11:25 am

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 11:35 am

 நாடு மறந்த நல்லவர்  Gujaral1

RIP

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Dec 01, 2012 11:38 am

அரசியல் துறவறம் மேற்கொண்ட வி பி சிங்க், கருப்பு வெள்ளை தொலைகாட்சி பெட்டி மட்டுமே வைத்திருந்த முன்னாள் நிதி அமைச்சர் மது தண்டவதே என்று நாடு மறந்த நல்லவர்களை கூறிக்கொண்டே போகலாம். ஊழல் வாதிகளும் அவர்களின் வாரிசுகளையுமே திரும்ப திரும்ப தேர்ந்தெடுக்கும் செம்மறி கூட்டமே நாம்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 11:41 am

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் (92) வெள்ளிக்கிழமை காலமானார்.

மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த குஜ்ராலின் உடல் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜ்ராலின் சிறுநீரகம் செயலிழந்ததையடுத்து, கடந்த ஓராண்டாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. நவம்பர் 19ஆம் தேதி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் குஜ்ரால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3.27 மணிக்கு குஜ்ரால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அரசியல் வாழ்வு: குஜ்ரால் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். அவசரநிலை பிரகடனத்தின்போது, இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். 1976-ல் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷியாவுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றி உள்ளார்.

1980-களின் இறுதியில் காங்கிரûஸ விட்டு விலகி ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1989 முதல் 1991 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.

லாலு பிரசாத் ஆதரவுடன் 1992-ல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் எச்.டி. தேவ கெüடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

12ஆவது பிரதமர்: கெüடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 1997 ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1997ஆம் ஆண்டு ஏப்ரலில் நாட்டின் 12ஆவது பிரதமராக குஜ்ரால் பொறுப்பேற்றார். எனினும், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தி.மு.க. மீது குற்றம் சாட்டி ஜெயின் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, குஜ்ரால் அரசு 1997 இறுதியில் பதவி விலகியது. அவர் இடைக்காலப் பிரதமராக 1998 மார்ச் வரை தொடர்ந்தார். 1998இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்டு, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் பிறந்தவர்: இப்போது பாகிஸ்தானில் உள்ள ஜீலம் நகரில், சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தில் 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இந்தர் குமார் குஜ்ரால் பிறந்தார். இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.

2 மகன்கள்: குஜ்ரால் மனைவி பெயர் ஷீலா. நரேஷ் குஜ்ரால் மற்றும் சதீஷ் குஜ்ரால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் நரேஷ், அகாலி தள கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். சதீஷ் புகழ்பெற்ற ஓவியர் மற்றும் கட்டடக்கலை நிபுணர் ஆவார்.

http://dinamani.com/india/article1362133.ece

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 2:06 pm

நல்ல பகிர்வு தர்மா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக