புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_m10இன்று ஒரு தகவல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு தகவல்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 5:44 pm

First topic message reminder :

இன்று ஒரு தகவல் - Page 2 Humpback_whale_margaret_river

வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் அதிசயத்தின் உச்சம் !!!

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான் !!

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.

திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும்

10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும் என்கிறார்கள்

ஆராய்ச்சியாளர்கள்.

இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான்.

இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 8 0நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.

இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.

பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.

இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.

இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 10:22 pm

இன்று ஒரு தகவல் - Page 2 230982_297193890386118_1246662302_n
அதி நவீன காற்றாலை !!!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் ) அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது . இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .

70 அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21 அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது . அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது


குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் . வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் ) லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் வருக ... வெல்க

தமிழகத்திலும் நிறைய முயற்ச்சிகள் எடுக்கபடுகிறது .
காற்றாலைகளை நிறுவுகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI).
நாட்டில் முதல் முறையாக பொதுத் துறை வங்கியான பாரத்ஸ்டேட் வங்கி சொந்தப் பயன்பாட்டிற்காக தமிழகம் ,ஜதராபாத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றாலைகளை நிறுவுகிறது. தமிழகம் , மகராஷ்டிரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கும் நோக்கில் இம்மூன்று மாநிலங்களிலும் காற்றாலைகளை நிறுவ SBI திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பத்தூரில் சமீபத்தில் காற்றாலைகளைஇவ்வங்கி நிறுவியது. மற்ற மாநிலங்களில் இன்னும் நான்குமாதங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுவிடும்.

இதேபோல் அனைத்து தொழிற்ச்சாலைகள் மற்றும் தனியார்நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான மின்சக்தியைதயாரிக்க அவைகளே முன்வந்தால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் மின்சக்தி தட்டுப்பாடேஏற்ப்படாது.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 10:23 pm

இன்று ஒரு தகவல் - Page 2 75651_294738523964988_534663180_n
கூலி வேலை செய்தவரின் சாதனை !!!

ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை கொழு கொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான், சமையல்காரர். தாய் லீ - லீ, வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர், குடும்பத்தின் நிலையையையும், குழந்தையின் அழகையும் பார்த்து தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழை பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.

அந்த குழந்தைக்கு சான் காங் - காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்று அர்த்தம். இந்நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடக பள்ளியில் காங் - காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே குங்பூ என மார்ஷியல் கலைகள் அனைத்தையும் கற்றான். தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். 8 வயதில் 'பிக் அன்ட் லிட்டில் வாங்க்ஷன்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தான்.

அவனின் 18 வயதில் புருஸ்லீ நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தில் சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டான்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட காங் - காங் உடனே ஓடி வந்து குதித்து புருஸ்லீயை கவர்ந்தார்.

அதன் வாய்ப்புகள் கிடைக்காததால் கட்டிட வேலைகளில் உதவியாளராக கூலி வேலை செய்தார். தினக்கூலியாக வேலை பார்த்தாலும் இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர்கள் ஒருவர் 'லிட்டில் ஜாக்' என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி' ஆனது. ஹாங்காங்கில் இருந்து உடனே தந்தி வர ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர் 'பிஸ்ட் ஆப் ப்யூரி' என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்தது. அந்த சாதனையாளரின் பெயர் தான் ஜாக்கி சான்



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Mon Nov 26, 2012 10:50 pm

இன்று ஒரு தகவல் - Page 2 Tamil_News_large_442165
சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !!

உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.

78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 10:12 am

அருமை...தொடருங்கள்...



இன்று ஒரு தகவல் - Page 2 Paard105xzஇன்று ஒரு தகவல் - Page 2 Paard105xzஇன்று ஒரு தகவல் - Page 2 Paard105xzஇன்று ஒரு தகவல் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 27, 2012 10:31 am

சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Nov 27, 2012 2:07 pm

ஆர்வமூட்டும் தகவல்கள். அருமையிருக்கு

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Tue Nov 27, 2012 6:05 pm

இன்று ஒரு தகவல் - Page 2 382018_308272992611541_1729121966_n

தேயிலையே முதலில் உபயோகபடுத்தியவர்கள் சீனர்கள் தான் !!!

தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.

தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும். பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.

தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான் இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.

வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள். கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை. தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.

தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும்.தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும்.இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும்.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 6:08 pm

தினமும் அருமையான தகவல்கள்...
பலே!! பாராட்டுக்கள்.... :வணக்கம்:



இன்று ஒரு தகவல் - Page 2 Paard105xzஇன்று ஒரு தகவல் - Page 2 Paard105xzஇன்று ஒரு தகவல் - Page 2 Paard105xzஇன்று ஒரு தகவல் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Tue Nov 27, 2012 10:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அச்சலா wrote:தினமும் அருமையான தகவல்கள்...
பலே!! பாராட்டுக்கள்.... :வணக்கம்:




♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Thu Nov 29, 2012 7:13 pm

இன்று ஒரு தகவல் - Page 2 556820_309314865840687_1140706089_n
பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்) !!!

உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக