புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 Poll_c10 
75 Posts - 56%
heezulia

42 Posts - 31%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 55%

40 Posts - 31%

6 Posts - 5%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 3:57 am

First topic message reminder :

ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.

அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.

மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க

சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.

மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.

சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.

அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Mar 12, 2013 1:11 pm

+2 படிக்கும் தங்கள் மகன் எவ்வாறு தேர்வு எழுதியுள்ளான்? அவன் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 17, 2013 4:38 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-16) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
போன வாரம்-15 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் மகேஷின் சகலை சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு உடனே, தன் அண்ணன் மகேஷிடம் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க எண்ணிய சீதா மகேஷை அழைக்க, மகேஷ் தன் குழந்தை சுகமில்லாத காரணத்தால் மறுநாள் பேசுவதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், மறுநாள் காலையிலும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதால் மகேஷ் சீதாவை கைப்பேசியில் அழைக்கவில்லை. மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார்.

இந்நிலையில் சந்திரனின் அக்கா கலா சந்திரன் வீட்டுக்கு வந்து சீதாவிடம் பேசியதையும் சீதா கோபத்தில் கைப்பேசி இணைப்பை துண்டித்ததையும் விளக்கமாக கூறுகிறார். மித்ரா சீதாவிடம் மகேஷின் சூழ்நிலையை விளக்கமாகக் கூற, சீதா அண்ணனிடம் மன்னிப்புக் கேட்க கைப்பேசியில் அழைக்கிறார். ஆனால், மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனைப்படி தங்கையிடம் கைப்பேசியில் கடிந்து பேசி அவரை உதாசீனப் படுத்துகிறார்.
இந்நிலையில் சீதா மனம் உடைந்து போகாமல் இருக்க வேண்டி, சீதாவின் பள்ளித்தோழி சரிதாவிடம் விஷயத்தைக் கூறி, சீதாவை சமாதானப் படுத்தும் முயற்சி நடக்கிறது.
இனி ......//

சரிதா சீதாவின் கைப்பேசியில் அழைக்கிறார்.

சீதா: ஹலோ,

சரிதா: ஹலோ சீதா, நான்தான் சரிதா பேசறேன். எப்படி இருக்கே?

சீதா: ஏதோ போய்க்கிட்டிருக்கு. சொல்லு நீ எப்படி இருக்கே சரிதா?

சரிதா: இப்போ, நாங்க சென்னையிலிருந்து நம்ம ஊருக்கே வந்துட்டோம். இங்க அவரு சொந்தமா ஒரு பார்மசி தொடங்கி இருக்கார். சுமாரா போய்க்கிட்டிருக்கு.

சீதா: அப்படியா, ரொம்ப சந்தோஷம். குழந்தை எப்படி இருக்கா?

சரிதா: இப்போ, 6ஆவது படிக்கிறா. இங்கேயே ஸ்கூல் பார்த்து சேர்த்துட்டேன். சரி, வைத்யா எப்படி இருக்கான்? பரீட்சை நெருங்கிடுச்சே, படிக்கிறானா? எந்த குரூப் எடுத்திருக்கான்?

சீதா: அவங்க அப்பா ஆசைப்படி சைன்ஸ் & மேத்ஸ் தான். மெடிசின் படிக்கணும்னு ஆசைப்படறான்.

சரிதா: எல்லாம் நல்லா வருவான். நீ ஒன்னும் கவலைப் படாதே.

சீதா: கவலைப்படாமல் இருக்க முடியல. ஒவ்வொரு நாளும் கழிவது ஒரு யுகமா இருக்கு. தினமும் சந்திக்கும் விஷயங்கள் பாடாய் படுத்துது.

சரிதா: நீ சொல்றது புரியுதுடீ. மனதை தேற்றிக்க. வைத்யாவின் முகத்தைப் பாரு. அவன் எதிர்காலம் தான் முக்கியம். அவனுக்கு நீதான் துணையாய் இருக்கணும். அவனை ஒரு டாக்டரா நீ தான் உருவாக்கணும். வேற எந்த விஷயத்தையும் போட்டு மனசைக் குழப்பிக்காதே.

சீதா: கூடப் பொறந்த சொந்தம் கைவிட்டாலும் தோழி நீ கொடுக்கற தைரியம் ரொம்ப ஆறுதலா இருக்கு.

சரிதா: என்னாச்சி? ஏன் அப்படி சொல்றே? மகேஷ் அண்ணனோட ஏதாவது பிரச்சினையா?

சீதா: ஆமா? (என்று கூறியவாறு எல்லாத்தையும் சீதா விளக்க, இதுவரை ஒன்றுமே தெரியாததுபோல் சரிதா கேட்டுக் கொண்டாள்).

சரிதா: என்னது, மகேஷ் அண்ணனா இப்படி நடந்து கொண்டார். என்னால் நம்பவே முடியல.

சீதா: கலான்னு ஒரு சொந்தக்காரங்க அப்பவே சொன்னாங்க. நான்தான் நம்பவில்லை. போகப்போக அவங்க சொன்னதெல்லாம் கொஞ்சகொஞ்சமா நடந்துக்கிட்டு வருது.

சரிதா: கலாக்காவா? யார் அவங்க?

(சீதா கலாக்காவின் விவரங்களையும், அவர்களுடன் நடந்த உரையாடல்களையும், அவரை கடிந்து கொண்டதையும் விளக்கமாகக் கூறினாள்).

சரிதா: அவங்க சொல்றது சரிதான். எனக்குக் கூட மெடிக்கல் ஷாப்பு வைக்க எங்க தம்பியை கொஞ்சம் பணம் புரட்டித் தரச் சொல்லிக் கேட்டிருந்தேன். இத்தனைக்கும் கடனாத்தான் கேட்டேன். ஆனா என் தம்பி ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. கடைசியில் அவரே உருண்டு புரண்டு அங்க இங்க வாங்கி கடையை ஆரம்பிச்சார். வீட்டுக்கு வீடு வாசப்படிதான்.

சீதா: அது சரிதான். அவங்களச் சொல்லியும் குற்றம் இல்லை. அவங்களுக்கு முதலில் அவங்க குடும்பம். அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்.

சரிதா: நல்லா யோசிச்சுப் பார்த்தால் நாமளும் இந்த மாதிரி சூழ்நிலைகளில் அப்படித்தான் நடந்திருப்போமொன்னு தோணுது. யதார்த்தமும் அதுதான். அவரவர்க்கு தன் குடும்பத்தைப் பார்க்கவே நேரம் போதலை. காலம் அப்படி இருக்கு. பொருளாதாரத் தேடலில் அவரவர் வீட்டுக்குள்ளேயே பேசிக்கொள்ள நேரம் இருப்பதில்லை. அப்புறம் எங்க கூட பொறந்தவங்க கிட்ட பேசுறது.

சீதா: நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிதான். என் அண்ணனை சொல்லிக் குற்றமில்லை. நான்தான் தப்பா நினைச்சிட்டேன். ஆனா ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்ன ஆனாலும் நாமலே சமாளிக்கணும்னு.

சரிதா: இந்த சூழ்நிலைல உன்னோட மன வலிமையை நினைத்தால் எனக்கு உன் தோழின்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு.

சீதா: எல்லா வலிமையும், நம்ம சூழ்நிலைதான் நமக்குக் கொடுக்குது.

சரிதா: ஆமாமாம். பையனை நல்லா படிக்க வை. எல்லா சூழ்நிலைக்கும் பதிலா அவன் இருப்பான் உனக்கு.

சீதா: ரொம்ப ஆறுதலா இருக்குடீ உன்கிட்ட பேசினது. சென்னைக்கு வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும்.

சரிதா: கண்டிப்பா வரேன். வர முடியாட்டியும் கண்டிப்பா போன் பண்றேன். உடம்ப நல்லாப் பாத்துக்க.

சீதா: சரிடீ. வீட்டிலே எல்லோரையும் கேட்டதா சொல்லு. உன் பொண்ணுக்கு என் ஆசீர்வாதத்த சொல்லு.

சரிதா: கண்டிப்பா சொல்றேன். சரி வைக்கிறேன். அடிக்கடி பேசுறேன்.

சரிதா போனை வைத்ததும் சீதாவிற்கு மன பாரம் சிறிது இறந்கியதுபோல் இருந்தது. அப்படியே தன் துள்ளித்திரிந்த பள்ளிப் பருவமும் தான் சரிதாவோடு கழித்த பள்ளி நாட்களும் மனதை வருடிச் சென்றன. நட்பின் மகத்துவம் புரிய ஆரம்பித்தது. எப்படிப் பட்ட துக்கத்தையும் ஆற்றும் வலிமை சொந்தங்களை விட நட்புக்குத்தான் உண்டோ என்று எண்ணத்தோன்றியது. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக இருப்பது நட்பு மட்டுமே என்பதும் புரிய, சீதா மெல்ல தன் மனதின் உடலின் சோகங்களை பகிர்ந்து கொள்ள தோழி சரிதாதான் சரியான நபர் என்று மனதார நம்பத் தொடங்கினாள்.

இரவு சரியாக 10 மணி. சீதாவிற்கு சரியாக உறக்கம் வரவில்லை. மனம் கலாக்கா சொன்ன வார்த்தைகளையும் அதன் நிஜங்களையும் மெல்ல அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவரும் விதவை என்பதால் அவர் வாழ்க்கையின் சொந்த அனுபவங்களை கூறினார். அதைப்போய் தவறாக எடுத்துக் கொண்டு, அவரை கடிந்துகொண்டோமே என நினைத்து, நாளை காலை முதல் வேலையாக கலாக்காவிடம் பேசி முதலில் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவளாக தன்னையறியாது உறங்கிப்போனாள்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Mar 17, 2013 1:37 pm

கதை மிக நன்றாக இருக்கிறது..அடுத்த ஞாயிறு எப்போது வரும் என்று இருக்கிறது...

நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Mar 18, 2013 12:54 am

2009kr wrote:கதை மிக நன்றாக இருக்கிறது..அடுத்த ஞாயிறு எப்போது வரும் என்று இருக்கிறது...

நன்றி
16 பகுதிகளும் படித்துவிட்டீர்களா?

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Mar 19, 2013 3:07 pm

சூப்பருங்க

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 3:37 pm

சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Mar 20, 2013 1:05 am

கார்த்தி wrote:+2 படிக்கும் தங்கள் மகன் எவ்வாறு தேர்வு எழுதியுள்ளான்? அவன் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தங்களின் தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றிகள்.
CBSE சிலபஸ் படிக்கிறான். PHYSICS மட்டும் கடினமாக இருந்ததாகக் கூறினான். நாளை (20/03/2013) கடைசி பரீட்சை கணிதம்.
ஆண்டவன் அருளாலும் உங்களைப் போன்ற ஈகரை உறவுகளின் ஆசீர்வாதத்தாலும் நல்ல எதிர்காலம் அமையும் என்று நம்புகிறேன். மிக்க நன்றிகள்.
கார்த்தி wrote: சூப்பருங்க
:வணக்கம்:
mbalasaravanan wrote: சூப்பருங்க
16 பகுதிகளும் படித்துவிட்டீர்களா பாலசரவணன்?

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 24, 2013 3:22 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-17) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-16 வரை நடந்தது

//கணவரை இழந்து 2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் மகேஷின் சகலை சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு உடனே, தன் அண்ணன் மகேஷிடம் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க எண்ணிய சீதா மகேஷை அழைக்க, மகேஷ் தன் குழந்தை சுகமில்லாத காரணத்தால் மறுநாள் பேசுவதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், மறுநாள் காலையிலும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதால் மகேஷ் சீதாவை கைப்பேசியில் அழைக்கவில்லை. மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார்.

இந்நிலையில் சந்திரனின் அக்கா கலா சந்திரன் வீட்டுக்கு வந்து சீதாவிடம் பேசியதையும் சீதா கோபத்தில் கைப்பேசி இணைப்பை துண்டித்ததையும் விளக்கமாக கூறுகிறார். மித்ரா சீதாவிடம் மகேஷின் சூழ்நிலையை விளக்கமாகக் கூற, சீதா அண்ணனிடம் மன்னிப்புக் கேட்க கைப்பேசியில் அழைக்கிறார். ஆனால், மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனைப்படி தங்கையிடம் கைப்பேசியில் கடிந்து பேசி அவரை உதாசீனப் படுத்துகிறார்.
இந்நிலையில் சீதா மனம் உடைந்து போகாமல் இருக்க வேண்டி, சீதாவின் பள்ளித்தோழி சரிதாவிடம் விஷயத்தைக் கூறி, சீதாவை சமாதானப் படுத்தும் முயற்சி நடக்கிறது. சரிதாவும் சீதாவிடம் பேசி சீதாவின் கவலைக்கு மருந்தாகிறாள்.
இனி ......//

சீதாவின் அண்ணன் மகேஷின் வீடு. இரவு 07.35 மணி. மகேஷின் மனைவி பார்கவி தன் குழந்தைக்கு மொட்டைமாடியில் நிலாவைக் காட்டி சோறூட்டிக் கொண்டிருக்க, மகேஷ் மாடிக்கு வந்து மனைவியிடம் சரிதா சீதாவிடம் பேசியது குறித்து தனக்கு தெரிவித்ததை சொல்ல விழைகிறார்.

மகேஷ்: பார்கவி, உன் முயற்சிக்கு ஒரு வெற்றி கிடைத்து விட்டது.

பார்கவி: என்ன சொல்லுங்க. நான் முதல் முதலாக செய்து கொடுத்த புடலங்காய் புட்டு நன்றாக இருந்ததா?

மகேஷ்: நீ இன்னும் சமையலறையை விட்டு வெளியே வரவில்லை போல் தெரிகிறது. நான் சொன்னது வேறு விஷயம். சரிதா சீதாவிடம் பேசியது குறித்து.

பார்கவி: என்ன காயா? பழமா?

மகேஷ்: நீ முயற்சித்தது காயாகுமா, எல்லாம் பழம்தான். சரிதா சீதாவிடம் ஆறுதலாகப் பேச, சீதா சகஜ நிலைக்கு வந்து விட்டாளாம். மேலும், கலா அக்காவிடம் கோபம் கொண்டது கூட தன்னுடைய பெரும் தவறு என்று கூறி இருக்கிறாள்.

பார்கவி: அப்படியானால், சரிதாவை தொடர்ந்து சீதாவிடம் அடிக்கடி பேசச் சொல்லுங்க. அப்போதுதான் நீங்கள் தொடர்ந்து நிராகரிக்கும்போது சீதாவிற்கு தன் துயரங்களை சரிதாவிடம் கொட்டித் தீர்க்க ஒரு தளம் அமையும்.

மகேஷ்: சரிதாவே சொல்லிவிட்டாள். தன் தோழி சீதாவிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கப் போவதாகவும் நம் திட்டம் வெற்றி பெறும்வரை நமக்குத் துணையாய் இருந்து சீதாவின் மறுமணத்தை நடத்தி முடிப்பதாகவும் வாக்கு கொடுத்துவிட்டாள்.

பார்கவி: வான்புகழ் கொண்ட வள்ளுவரின் குறள்படி "தோழியின் இடுக்கண் களைய துணையாய் நிற்கும் சரிதா நீ வாழ்க வாழ்க.

மகேஷ்: இந்த நல்ல விஷயத்தை நான் முதலில் சகளையிடம் இப்போதே கூறிவிடுகிறேன்.
(என்று கூறிக் கொண்டே சகலை சந்திரனை கைப்பேசியில் அழைத்தார். மறுமுனையில் சந்திரன்)

சந்திரன்: ஹலோ, சொல்லுங்க மகேஷ்.

மகேஷ்: அண்ணா, ஒரு நல்ல செய்தி. (என்று கூறியபடி சரிதா சீதா உரையாடலை விளக்கிக் கூறினார்.)

சந்திரன்: நானும் உங்களிடம் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும். கொஞ்சம் முன்புதான் என் அக்கா கலா என்னிடம் சீதாவிடம் இன்று மாலை பேசியதைக் கூறினார்கள்.

மகேஷ்: என்ன பேசினார்களாம்? ஏற்கனவே, சீதா அவர்கள் மேல் கோபப்பட்டு கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டாளே, மீண்டும் ஏன் பேச வேண்டும்?

சந்திரன்: கலா அக்கா அழைக்கவில்லை. சீதாதான், கலா அக்காவை வீட்டிற்கு அழைத்து, பேசி, தான் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டாளாம்.

மகேஷ்: என்ன சொல்கிறீர்கள், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்.

சந்திரன்: நேற்று, மாலை சீதா கலா அக்காவிற்கு போன் போட்டு, உடனே, வீட்டிற்கு வரச்சொல்லி ஒரு மணி நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்து விட்டு, தான் கோபப்பட்டதற்கு மன்னிப்பும் கேட்டாளாம். கலா அக்காவும் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, சீதாவை வரும் ஞாயிறன்று மீண்டும் சந்திப்பதாகக் கூறி உள்ளார்களாம். அப்போது என்ன பேசி சீதாவிடம் மறுமணத்திற்கான சம்மதத்தை வாங்குவது என்று கேட்டார்கள். நான், நாளை மாலை அக்காவை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறேன். நீங்களும் வந்தால், நாம் கலந்து பேசி ஒரு நல்ல திட்டம் தீட்டி கலா அக்காவிடம் சொல்லி அனுப்ப வேண்டும். மிக முக்கியமான திட்டம் தீட்டவேண்டி இருப்பதால், முடிந்தால் உங்களை பார்கவியையும் உடன் அழைத்து வரச் சொல்லி மித்ரா சொல்லச் சொன்னாள்.

மகேஷ்: கண்டிப்பாக அழைத்து வருகிறேன். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் நானும் காத்திருந்தேன். நாளை எத்தனை மணிக்கு வர வேண்டும்?

சந்திரன்: நீங்கள் ஏழு மணிக்குள் வந்துவிடுங்கள். நான் நண்பன் வெங்கியையும் வரச் சொல்லியிருக்கிறேன். நாம் அனைவரும் கூடி ஒரு நல்லத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மகேஷ்: சரியண்ணா, நாளை மாலை சந்திப்போம். (என்று கூறி கைப்பேசியை துண்டித்தார்).

சந்திரனின் வீடு. மகேஷிடம் பேசிய கையோடு மித்ராவிடம் சந்திரன் விவரத்தைக் கூறி முடித்தார். மறுகணம், சந்திரனின் கைப்பேசியில் நண்பன் வெங்கி அழைக்க,

சந்திரன்: ஹலோ, சொல்லு வெங்கி. நாளை வந்துடுவயில்ல.

வெங்கி: கண்டிப்பா. நீ நாம பேசினப் படி எல்லோரையும் வரச் சொல்லி சொல்லிட்டியா?

சந்திரன்: திட்டப்படி எல்லோரும் வருவார்கள்.

வெங்கி: நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகும். ஆனாலும் 8 மணிக்கு டான்னு வந்து நிப்பேன்.

சந்திரன்: எவ்வளவு லேட்டானாலும் வந்துவிடு. ஏன் தாமதமாகும்? அலுவலகத்தில் ஏதாவது?

வெங்கி: அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் கூட ஒருத்தரைக் கூட்டிக் கிட்டு வரணும். அதான் தாமதமாகும்னு சொன்னேன்.

சந்திரன்: யாரது? யாரும் வேற்று ஆள் இல்லையே?

வெங்கி: அதெல்லாம் இல்லை. ஆனால் மிக மிக முக்கியமான நபர். அவர் வந்தால், நமக்கு பாதி வேலை முடிந்தது போலாகும். ஏனெனில், கலா அக்கா பேசிய பிறகு சீதாவின் மனதில் எழும் ஐயங்களை தீர்த்து வைத்து, சீதாவை மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கப் போகிறவரே அவர்தான்.

சந்திரன்: புதிர் போடாமல் பதிலைச் சொல்லு. யாரை கூட்டிவரப்போற?

வெங்கி: அதுதான் சஸ்பென்ஸ். சொன்னா எல்லோரும் அவருக்காக திட்டத்தை மாற்ற முயல்வீர்கள். அதனால், கூட்டிக் கொண்டு வரும்போது பார்க்கத்தானே போகிறாய். அவசரப்படாதே.

சந்திரன்: நீ ஒரு விஷயம் செய்தால், கண்டிப்பாக நல்லதாகத்தான் இருக்கும். சரி நான் யூகித்துப் பார்த்து யாராக இருக்கும் என கண்டுபிடிக்கிறேன்.

வெங்கி: நல்லா யூகி. நான் போனை வைக்கிறேன். (என்று கூறி வெங்கி கைப்பேசி இணைப்பை துண்டிக்கிறார்.)

சந்திரன்: (மித்ராவிடம் வெங்கி பேசியதைக் கூறி அவர் அழைத்து வரப்போவது யாராக இருக்கும் எனக் கேட்க மித்ராவும் ஒன்றும் புரியாமல் விழிக்க இருவரும் இன்று இரவு சஸ்பென்ஸ் தாங்காமல் இன்று இரவு தூங்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. சந்திரனும் மித்ராவும் தூக்கம் வராமல் மனதிற்குள் "சீதாவிடம் பேசி சம்மதம் வாங்கப்போகிறவர் எனில், சீதாவிற்கு நெருங்கியவராகத்தான் இருக்க வேண்டும். அது யாராக இருக்கும்?" என கேள்வி கேட்டுக் கொண்டே மெத்தையில் புரண்டு கொண்டிருந்தனர்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Mar 28, 2013 5:47 pm

இந்த தொடர்கதையை வெற்றிகரமாக்கி 4000 பார்வைகள் நோக்கி கொண்டு சென்ற அனைவருக்கும் அடியேனின் ஆரோக்கியமான நன்றிகள்.

ச. சந்திரசேகரன்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 31, 2013 10:36 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-18) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
போன வாரம்-17 வரை நடந்தது

//கணவரை இழந்து +2
படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து
கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா
ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் மகேஷின் சகலை
சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து
முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று
அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம்
பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி
சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின்
விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்துப் பேச அதையும் சீதா மறுத்து கலாவின் மேல் உள்ள கோபத்தை மகேஷிடம் கொட்டித்தீர்க்க சீதா மகேஷை அழைக்க மகேஷ் சரியாகப் பேசாததால், மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார். பின்னர் உண்மை அறிந்து அண்ணனிடம் கோபம் கொண்டதற்கு மன்னிப்புக் கேட்கிறார். ஆனால், மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனைப்படி தங்கையிடம் கைப்பேசியில் கடிந்து பேசி அவரை உதாசீனப் படுத்துகிறார்.

இந்நிலையில் சீதா மனம் உடைந்து போகாமல் இருக்க வேண்டி, சீதாவின் பள்ளித்தோழி
சரிதாவிடம் விஷயத்தைக் கூறி, சீதாவை சமாதானப் படுத்தும் முயற்சி நடக்கிறது.
சரிதாவும் சீதாவிடம் பேசி சீதாவின் கவலைக்கு மருந்தாகிறாள்.
அதே தினம் சீதா கலா அக்காவிடம் மன்னிப்பு கேட்கிறாள். கலா அக்காவும் அடுத்த ஞாயிறன்று மீண்டும் சீதாவை சந்திப்பதாக இருக்கிறார். அந்த சந்திப்பில் கலா அக்கா சீதாவிடம் மறுமணம் குறித்து என்ன பேச வேண்டும் என தீர்மானிக்க வெங்கி சந்திரன் இருவரும் மகேஷை குடும்ப சமேதராய் சந்திரன் வீட்டுக்கு வரச் சொல்கிறார்கள்.
அந்த சந்திப்பிற்கு வெங்கி ஒரு புதிய நபரை அழைத்துவரப்போவதாகக் கூற அந்த நபர் யாராக இருக்கும் என அனைவரும் ஆவலாய் உள்ளனர்.
இனி.....//

திட்டமிட்ட தினத்தன்று திட்டமிட்ட நேரத்தில் அனைவரும் வெங்கியின் வரவுக்காகவும் அவர் அழைத்துவரப்போவது யார் எனத் தெரிந்துகொள்வதர்க்காகவும் ஆவலோடு வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனர்.

வெங்கி சம்மந்தப்பட்ட நபரோடு வந்து சேர்ந்தார். அந்த நபரைக் கண்ட மாத்திரத்தில் அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. அது வேறு யாருமில்லை. சீதாவின் மகன் வைத்யா. வெங்கியின் வண்டியிலிருந்து இறங்கிய வைத்யா நேராக மாமா மகேஷிடம் சென்று கண்ணீர் மல்க கட்டிப்பிடித்துக் கொண்டான்.

மகேஷ்: (கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே, வைத்யாவை ஆறுதலோடு முதுகில் தட்டியவாறு) வைத்யா, எப்படிடா இருக்கே? அம்மா என்மேல் கோபமாக இருக்கிறாளா?

வைத்யா: கொஞ்ச நஞ்ச கோபம் இல்லை மாமா. டன் கணக்கில் கோபமா இருக்காங்க. நீங்க வந்தா உங்கள கடிச்சு குதறிடுவாங்க.

மகேஷ்: என்ன செய்வது? எல்லாம், சந்திரன் மாமாவால வந்ததுதான். அவர்தான் என்னை இப்படி நடந்துக்கச் சொன்னார்.

வைத்யா: எல்லாம் வெங்கி அங்கிள் விவரமாச் சொன்னார்.

மகேஷ்: ரொம்ப நன்றி வெங்கி சார்.

வெங்கி: எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லிக்கலாம் மகேஷ் சார். முதலில் வந்த விஷயத்தை பேசுவோமா சந்திரன்?

சந்திரன்: பேசுவோம். முதலில் வைத்யாவை நீ சந்தித்த விவரத்தைச் சொல். நாங்கள் அது தெரிந்த பின்னர் தான், மற்றதைப் பேசுவோம்.

வெங்கி: அது ஒரு பெரிய கதை. நான் சந்திரன் போட்ட திட்டத்தை எப்படி செயலாக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது, சீதா மற்றும் அசோக்கின் குழந்தைகளின் சம்மதம்தான். எனவே, நான் முதலில் சந்திக்க நினைத்தது வைத்யாவைத்தான். ஏனெனில், மூன்று குழந்தைகளில் மிகவும் வாடியிருப்பது வைத்யாவாகத்தான் இருக்க வேண்டும். எப்படியென்றால், அவன் ஒரே பிள்ளையாதலால், வருத்தம் ஆற அவனுக்கு சரியான நபர் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், மற்ற குழந்தைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கவலையை மறக்க வாய்ப்புள்ளது. எனவே, வைத்யாவை சந்திக்க நேராக அவனுடைய பள்ளிக்கே சென்றேன். ஒருநாள் மாலை வேளையில் சந்தித்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவனை பக்கத்தில் உள்ள ஒரு காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றேன். அங்கு நாங்கள் பேசியது என்னவென்றால் ..........

காபி ஷாப்பில் வெங்கி மற்றும் வைத்யாவின் சந்திப்பில் நடந்த உரையாடல்

வைத்யா: அங்கிள், என்னை ஏன் இங்க கூட்டி வந்திருக்கீங்க?

வெங்கி: உன் அப்பா இறந்தபோது நான் சந்திரனோடு வந்திருந்தேன். ஆனால், அன்று உன்னை பார்க்கவோ, உனக்கு ஆறுதல் சொல்லவோ, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், உன்னைப் பார்த்து நாலு வார்த்தை பேசிவிட்டு, உன் படிப்புக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்ல விரும்பியதால், இங்கு அழைத்தேன்.

வைத்யா: என்ன ஆறுதல் கூறி என்ன பயன்? போன அப்பா திரும்பியா வந்துடப்போறார்?

வெங்கி: அவர் வரப்போவது இல்லைதான். அதற்காக ஆறுதல் சொல்லாமல் இருக்க முடியுமா? அதையெல்லாம், போட்டு மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. சரி, உன்னுடைய படிப்பு எப்படி போய்க்கொண்டிருக்கு?

வைத்யா: படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அடிக்கடி அப்பாவின் நினைவுதான் வாட்டுகிறது.

வெங்கி: நீ +2 தானே படிக்கிறாய். என்ன குரூப் எடுத்திருக்கிறாய்?

வைத்யா: மேத்ஸ் & சைன்ஸ் குரூப் அங்கிள். அப்பாவோட விருப்பம் நான் டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான்.

வெங்கி: உன் விருப்பம் என்ன? நீ என்னவாகப்போகிறாய்?

வைத்யா: முதலில் நான் எஞ்சினியர் ஆக விரும்பினேன். பின்னர் அப்பா மருத்துவப் படிப்பின் மகத்துவத்தை விளக்கியப்பின் மும்முரமாக டாக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்துக் கொண்டிருக்கிறேன்.

வெங்கி: அப்பா சொன்னதற்காக படிக்கும் போது மிகவும் கடினமாக இருக்குமே.

வைத்யா: அப்படியில்லை. எனக்கும் அடிமனதில் டாக்டராக விருப்பம் இருந்திருக்கும் போல் தெரிகிறது. அந்த ஆசை என் அப்பாவால் வெளிக் கொணரப் பட்டிருக்கும் என நினைக்கிறேன். அதனால், அப்படி ஒன்றும் கஷ்டம் தெரியவில்லை.

வெங்கி: நீ டாக்டராக என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீ இன்டர்நெட் உபயோகிப்பது உண்டா? உனக்கு ஈமெயில் ஐடி இருக்கிறதா?

வைத்யா: எஸ் அங்கிள். என் ஈமெயில் ஐடி vaidhyaaseethaa @gmail . com

வெங்கி: என்னோட ஈமெயில் ஐடி venki 1968@gmail . com நாம் அடிக்கடி நேராக சந்தித்துக்கொள்ள முடியாதல்லவா. எனவே, அடிக்கடி ஈமெயில் அனுப்பிக் கொள்ளலாமல்லவா?

வைத்யா: கண்டிப்பாக அங்கிள். எனக்கும் ஆறுதலாக இருக்கும். ஏனெனில், என் மாமா கூட இப்போ என் வீட்டுக்கு வருவதில்லை. என் அம்மாவுக்கும் மாமாவுக்கும் சண்டை போல. இந்த நிலையில், உங்கள் சந்திப்பு உறவு எனக்கும் ஆறுதலாக இருக்கும்.

வெங்கி: உன் மாமாவுக்கும் உன் அம்மாவுக்கும் என்ன சண்டை என்று உனக்குத் தெரியுமா?

வைத்யா: தெரியாது அங்கிள்.

வெங்கி: நீ விரும்பினால், நான் சொல்லட்டுமா?

வைத்யா: சொல்லுங்கள் அங்கிள்.

வெங்கி: மகேஷ் அங்கிள், உனக்கு வீட்டிலேயே பெர்மனெண்டா இருக்க ஒரு நல்ல கம்பெனியா இருக்க உன் அப்பாவைப் போல் ஒரு மனிதரை சிபாரிசு செய்தார். அதனால், உன் அம்மாவுக்கு கோபம்.

வைத்யா: பெர்மனெண்டா இருக்க மாதிரியா, அப்படீன்னா?

வெங்கி: உன் வீட்டில் இப்போது நீயும் உன் அம்மாவும் மாத்திரம் இருக்கீங்க. வீட்டுக்கு ஒரு நல்ல ஆண் துணை வேண்டும் அல்லவா, அதற்காக, ஒரு நல்ல guardian -ஐ வீட்டில் தங்க வைக்க மாமா முடிவு செய்து, அம்மாவிடம் சொன்னபோது, அம்மா மறுத்து விட்டார்.

வைத்யா: guardian என்றால்?

வெங்கி: guardian என்றால் உங்கள் வீட்டில் உனக்கு உதவியாய் இருக்க, உனக்கு நல்லது கேட்டது சொல்ல, உன் அப்பா ஸ்தானத்தில் இருந்து உனக்கு உதவி செய்பவர்.

வைத்யா: அப்படியா?

வெங்கி: அப்படி ஒருவர் இப்போது இருந்தால் உனக்கு உதவியாக இருக்குமா? இல்லையெனில்.....

வைத்யா: உதவியாகத்தான் இருக்கும். ஆனால், அவர் யார்? அவர் எப்படி எங்கள் வீட்டிலேயே இருப்பார்? அவர் வருவதால் என் அம்மா ஏன் கோபப்படுகிறார்? என்று தொடர்ந்து கேள்விகளை வைத்யா அடுக்கிக் கொண்டே போக, வெங்கி நிதானமாக பதில் சொல்லத் தொடங்கினார்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 7 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக