புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_lcapஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_voting_barஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_lcapஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_voting_barஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_lcapஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_voting_barஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_lcapஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_voting_barஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_lcapஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_voting_barஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 3:57 am

First topic message reminder :

ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.

அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.

மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க

சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.

மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.

சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.

அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 30, 2012 11:20 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-6) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-5 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெற வேண்டும் என்றும் சொல்கிறார். இரண்டு நாட்களில் அசோக்கிடம் இருந்து கைப்பேசி அழைக்கிறது.

இனி ......//

சந்திரன் அலுவகத்தில் இருக்கும்போது அசோக்கிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு வருகிறது.

சந்திரன்: சொல்லுங்க அசோக். நலமா?
அசோக்: என் நிலை நீங்கள் அறிந்ததே. அம்மா விவரம் சொன்னார்கள். எனக்கு என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை. உங்களை சந்திக்க வேண்டும். இது குறித்து நிறைய பேச வேண்டும். எப்போது சந்திக்கலாம்?
சந்திரன்: இன்று மதியம் 1.00 மணியளவில் எனது அலுவலகத்துக்கு நீங்கள் வர முடியுமானால், இன்றே பேசலாம்.
அசோக்: கண்டிப்பாக வருகிறேன். சந்திப்போம்.

சந்திரனின் அலுவலகத்தின் முன்புறத்தில் ஒரு ஆலமர நிழலில் மதியம் 1.10 மணியளவில் அசோக் சந்திரனை சந்திக்கிறார்.
சந்திரன்: வாருங்கள் அசோக். அம்மா விவரம் சொன்னார்களா? அம்மாவின் அபிப்பிராயம் என்ன?
அசோக்: அம்மா குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கல்யாணம் நடைபெற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், அதே கருத்தை மனதில் வைத்துப் பார்க்கும் போது, எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று தோன்றுகிறது. ஏனெனில், என் மனைவியாக வருபவர் குழந்தைகளை அன்பாக நேசிப்பாரா? என்ற சந்தேகம் தான்.
சந்திரன்: அசோக், சீதாவிற்கும் இதே சூழல் தான். அவருக்கும் ஒரு மகன் இருக்கிறான். அந்த மகனை நீங்கள் சொந்த மகனாக ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்வி அவர் மனத்திலும் எழும். எனவே இருவரும் பரந்த மனப்பான்மையோடு குழந்தைகளை ஏற்றுக் கொள்வீர்களானால் நீங்களும் நன்றாக இருக்கலாம். குழந்தைகளும் நலமாக இருப்பார்கள்.
அசோக்: எனக்கு என் சந்தோஷத்தை விட குழந்தைகளின் சந்தோஷம் தான் முக்கியம். இன்னொரு கேள்வி என்னவென்றால் குழந்தைகள் எங்களை அப்பா அம்மாவாக ஏற்றுக் கொள்வார்களா? என்பதுதான்.
சந்திரன்: அவர்களிடம் நாங்கள் அனைவரும் பேசுவோம். அவர்கள் சம்மதித்தாலே நாம் இந்த ஏற்பாட்டை செய்யப் போகிறோம். அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துத் தான் இந்த ஏற்பாடே. எனவே, நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக, நாம் ஒன்றும் செய்யப் போவதில்லை. நீங்கள் வயது வந்த பெண்ணை வைத்திருக்கிறீர்கள். அவளுக்கு கட்டாயம் ஒரு அம்மாவின் அரவணைப்பும், அறிவுரையும், அனுசரணையும் கட்டாயம் தேவைப்படும். அதை உங்களால் ஒரு போதும் கொடுக்க இயலாது என்பது என் கருத்து.
அசோக்: நீங்கள் சொல்வதும் சரி தான். அந்த சூழலை நான் இப்போது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதை மனதில் வைத்துத் தான் நானும் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கு சம்மதம் தான். சரி, சீதா இந்த கல்யாணம் குறித்து என்ன சொல்கிறார்?
சந்திரன்: அதை சீதாவின் அண்ணன் மகேஷ் பார்த்துக் கொள்வார். நீங்கள் சம்மதம் தெரிவித்தது சந்தோஷமாக உள்ளது. சீதாவின் சம்மதம் கிடைத்ததும் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். நீங்கள் நிம்மதியாகச் சென்று வாருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆண்டவன் இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான்.

சீதாவின் வீடு. சீதாவின் அண்ணன் மகேஷ் வந்திருக்கிறார். நேரம் மாலை 7.10 மணி.

மகேஷ்: என்னம்மா, வைத்யா ஸ்கூலுக்கு போனானா?

சீதா: போயிட்டு வந்துட்டு, இப்ப டியூஷன் போய் இருக்கான் அண்ணா. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. படிப்பிலேயே கவனம் இருப்பதால், அப்பாவைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. ஸ்கூல், டியூஷன் என்ற நேரம் சரியாக இருக்கிறது.

மகேஷ்: டியூஷனில் இருந்து எப்போ வருவான்?

சீதா: ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். வந்து சாப்பிட்டுட்டு ஒரு மணி நேரம் படிப்பான். பின்னர், 11.00 மணிக்கு படுப்பான். என்னண்ணா? அவன பாக்கணுமா?

மகேஷ்: இல்லம்மா. அவன் இல்லாத நேரத்தில் உன்னிடம்தான் ஒரு விஷயம் பேசணும்.

சீதா: என்ன விஷயம் அண்ணா?

மகேஷ் மெல்ல மறுமணம் பற்றி பேச ஆரம்பித்தார். சீதாவின் முகத்தில் ஒருவித இனம் புரியாத கேள்வி படர ஆரம்பித்தது.

(தொடரும் )

உறவுகளின் விமர்சனத்திற்கேற்ப கதை செல்லும்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 06, 2013 6:58 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-7) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-6 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.

இனி ......//

சீதா: அண்ணா என் நிலை என்ன என்பது உங்களுக்கு புரிகிறதா? நாங்கள் இருவரும் எவ்வளவு அந்நியோன்னியமாக வாழ்ந்தோம் என்று உங்களுக்கே தெரியும். அவர் என்னை எப்படியெல்லாம் வைத்திருந்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். இப்போது என் மகன் +2 படிக்கிறான். இந்த நிலையில் எனக்கு திருமணம் என்றால்.... என்னால் நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை. தயவு செய்து இந்த பேச்சை இப்படியே விட்டுவிடுங்கள். அவரை இழந்து நான் படும் துன்பங்கள் போதும். ஊரும் என்னைப் பார்த்து காரி உமிழும்படி ஆகிவிட்டால் அந்த துன்பத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

மகேஷ்: நான் நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். தீர ஆலோசித்துத்தான் உன்னிடம் பேச வந்திருக்கிறேன். இதில் உள்ள நல்லது கெட்டது பற்றி நாம் பேசுவோம். பின்னர் ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்.

சீதா: இந்த கல்யாணத்தின் மூலம் 'நல்லது' ஒன்றும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. உறவினர்கள் மத்தியில் என்னைப் பற்றிய கருத்து மோசமாகும். என்னை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் என்னை மட்டமாகத்தான் எண்ணத் தோன்றுமே ஒழிய என்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வர வாய்ப்பே இல்லை. நான் அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன்? அதையெல்லாம் நினைக்க நினைக்க எனக்கு தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பேச்சை இதோடு விட்டு விடுங்கள். ஏற்கனவே நான் படும் அவஸ்தைகள் போதும். இந்த அவஸ்தைகளும் சேர்ந்தால் நானும் அவரோடு போய் சேர்ந்துவிடுவேன்.

மகேஷ்: நிறுத்தம்மா. அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவேண்டாம். நீ நல்லா வாழணும்னு நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ உள்ள வாழ்க்கையையும் உதறித்தள்ளிவிட்டு சாகறேன்னு சொல்றியே. அப்படி ஒரு சூழலை ஒருபோதும் இந்த அண்ணன் உனக்கு ஏற்படுத்த மாட்டான். நான் இனிமேல் இதுபற்றி ஒன்றும் பேசமாட்டேன். நீ நல்லா இருக்கணும். அதுதான் இந்த அண்ணனுக்கு வேண்டும். நான் கிளம்பறேம்மா.

சீதா: ரொம்ப நன்றிண்ணா, என் நிலையை புரிந்து கொண்டதற்கு. சாப்பாடு தயாராயிடுச்சு. ஒரு வாய் சூடா சாப்பிட்டுட்டு போங்கண்ணா.

மகேஷ்: சரிம்மா. போடு. நாம ரெண்டுபேரும் ஒண்ணா சாப்பிடலாம்.

சீதா அண்ணனுக்கும் பரிமாறிவிட்டு, தானும் சாப்பிட ஆரம்பித்தாள். சாதம் தங்கையின் தொண்டைக்குழிக்குள் கஷ்டப்பட்டு இறங்குவதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டே மகேஷ் சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு கிளம்பினார்.

நேரம் இரவு 09.50 மணி. சந்திரன் மகேஷை கைப்பேசியில் அழைத்தார்.

சந்திரன்: என்ன மகேஷ். சீதாவிடம் பேசினீர்களா? என்ன சொன்னாள்?

மகேஷ்: அண்ணா. என்னால் அவளிடம் ஒன்றுமே பேசமுடியவில்லை. விஷயத்தை தொடங்கிய உடனே கணவரிடம் இருந்த தன் அந்நியோன்னியமான உறவு பற்றிக் கூறி என் வாயை அடைத்து விட்டாள். மேலும், உறவினரின் குத்தலான பேச்சையெல்லாம் தாங்கும் பக்குவம் அவளுக்கு இன்னும் வரவில்லை. அப்படி ஒருவேளை யாராவது ஏதாவது தரக்குறைவாகச் சொன்னால் தான் இறந்துவிடுவதாகவும் கூறுகிறாள்.

சந்திரன்: குழந்தை வைத்யாவின் எதிர்காலத்தை பற்றி பேசினீர்களா?

மகேஷ்: அதையெல்லாம் பேசவே ஆரம்பிக்க வில்லை. என்னை அதற்கு முன்பே அவள் தடுத்து நிறுத்தி விட்டாள். என்னை இதற்குமேல் இதுகுறித்து பேசவே வேண்டாம் என கட்டாயமாகக் கூறிவிட்டாள். நான் என்ன செய்வதென்றே தெரியாமல் கிளம்பி வந்துவிட்டேன். அவளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று எனக்கு பயமாக உள்ளது.

சந்திரன்: அவளின் இந்த பதில் நான் எதிர்பார்த்தது தான். நான் நினைத்ததுபோல் தான் நடந்துள்ளது. நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். நாம் அவளிடம் பேச சரியான ஆளைத் தேர்ந்தெடுப்போம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

மகேஷ்: எல்லாம் நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இந்த காரியத்தில் இறங்கியிருக்கிறேன். ஒரு நல்ல முடிவு எடுங்கள். நான் வைக்காட்டுமா? எனக்கூறி மகேஷ் தொலைபேசியை வைத்தார்.

சந்திரனின் வீடு. நேரம் இரவு 10.45 மணி.

மித்ரா: என்னங்க, மகேஷ் சீதாவிடம் பேசினாரா? சீதா என்ன சொன்னாங்க? விஷயம் காயா? பழமா?

சந்திரன்: இப்போதைய நிலையில் விஷயம் காய்தான். ஆனால் கூடிய விரைவில் பழுக்கும். சீதா மறுமணத்திற்கு சம்மதிக்கவே இல்லை.

என்று கூறிய சந்திரன் மொத்த விஷயத்தையும் மித்ராவிடம் தெளிவாக விளக்கினார். இதைக் கூறியதும், மித்ரா "சீதாவிடம் பேச சரியான நபர் ஒருவரை நான் சொல்லட்டுமா?" எனக் கூறியதும், சந்திரன் "இதற்குத்தான், ஒவ்வொருவருக்கும் மித்ரா மாதிரி ஒரு மனைவி வைக்க வேண்டும் என்று" என்று கூறிக் கொண்டே மித்ராவை வாரி அணைத்தார். மித்ரா கூறிய அந்தப் பெயர் சந்திரனை மேலும் உற்சாகப்படுத்தியது.

(தொடரும் )

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Mon Jan 07, 2013 12:28 pm

நல்ல தொடர். அடுத்த வாரம் என்ன வரும் என்று யோசிக்க வைக்கும் தொடர். அருமையிருக்கு சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 12:08 am

slmkarthi wrote:நல்ல தொடர். அடுத்த வாரம் என்ன வரும் என்று யோசிக்க வைக்கும் தொடர். அருமையிருக்கு சூப்பருங்க
நன்றி கார்த்தி, ஏழு வார கதையையும் படித்துவிட்டீர்கள் அல்லவா?

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Jan 09, 2013 2:45 pm

ச. சந்திரசேகரன் wrote:
slmkarthi wrote:நல்ல தொடர். அடுத்த வாரம் என்ன வரும் என்று யோசிக்க வைக்கும் தொடர். அருமையிருக்கு சூப்பருங்க
நன்றி கார்த்தி, ஏழு வார கதையையும் படித்துவிட்டீர்கள் அல்லவா?

ஆம். படித்துவிட்டேன்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 6:35 pm

slmkarthi wrote:
ச. சந்திரசேகரன் wrote:
slmkarthi wrote:நல்ல தொடர். அடுத்த வாரம் என்ன வரும் என்று யோசிக்க வைக்கும் தொடர். அருமையிருக்கு சூப்பருங்க
நன்றி கார்த்தி, ஏழு வார கதையையும் படித்துவிட்டீர்கள் அல்லவா?

ஆம். படித்துவிட்டேன்.
நன்றி. தொடர்ந்து படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கட்டாயம் எழுதுங்கள்.

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 13, 2013 11:16 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-8) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-7 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச ஒரு நல்ல நபரை மித்ரா தேர்ந்தெடுத்து சந்திரனிடம் சொல்கிறார்.

இனி ......//

சந்திரன் : (மிகுந்த ஆவலுடன்) சொல்லு, சொல்லு, யார் சீதாவிடம் மறுமணம் பற்றிப் பேச சரியான நபர்?

மித்ரா : வேறு யார். உங்கள் அக்காதான்.

சந்திரன்: நீ சொல்வது சரிதான். இருந்தாலும் அவருக்கும் சீதாவிற்கும் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இடைவெளி உள்ளதே?

மித்ரா: ஒரு தலைமுறை இடைவெளி இருந்தாலும், பிரச்சனை ஒன்று தான். சூழலும் ஒரேமாதிரிதான். ஒரு தலைமுறை இடைவெளி வந்தும், கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்தும் நாம் இன்னும் முன்னேறாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. அப்போது உள்ளது போலவே, இப்போதும் விதவைகள் மறுமணம் இன்னும் முழுமையாக ஏற்கப் படாதது வருத்தம் அளிக்கிறது.

சந்திரன்: நீ சொல்வது முற்றிலும் சரி. நாம் இன்னும் பின்னோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம். கட்டாயம் ஒரு நல்ல தீர்வை நாம் இம்முறை கண்டாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சரி, கலா அக்கா எவ்வாறு சீதாவிற்கு விளக்குவார்?

மித்ரா: அவருக்குத் தான் சீதாவின் தற்போதைய மனநிலை ஆழமாகப் புரிந்திருக்கும். மேலும், தான் மறுமணம் செய்யாததால் பட்ட மன ரீதியான, உடல் ரீதியான துன்பங்கள் பற்றி சீதாவிடம் விளக்கமாகக் கூற உங்கள் அக்கா கலா அவர்களால் மட்டுமே முடியும்.

சந்திரன்: சரியான முடிவு. நான் அக்காவிடம் பேசி, சீதாவிடம் பேசச் சொல்கிறேன்.

பிரச்னைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் சந்திரன் அக்காவிடம் பேச கைப்பேசியை எடுத்தார். மறுமுனையில் கலா அக்கா.

கலா (சந்திரனின் அக்கா) : என்னடா சௌக்கியமா? வீட்டில் அனைவரும் சௌக்கியமா?

சந்திரன்: அனைவரும் சௌக்கியம். நீ எப்படி அக்கா இருக்கே? பொண்ணு எப்படி இருக்கா? காலேஜ் போறாளா?

கலா : கனகாவையா கேட்கிறாய். அவ காலேஜிக்கு போய்க்கிட்டிருக்கா.

சந்திரன்: (மனதிற்குள் "மாமா இறந்த போது, கனகாவிற்கு 3 வயது. இப்போது 19 வயது. கல்லூரியில் படிக்கிறாள். அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்" என்று நினைத்துக்கொண்டே) அக்கா, என் சகலை மகேஷ் இருக்காரே. அவரோட தங்கை சீதாவைப் பற்றி உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.

கலா: ஆமாண்டா, நானே கேட்கணும்னு இருந்தேன். அவ எப்படி இருக்கா? பையன் எப்படி இருக்கான்? அன்னைக்கு சாவிலே பார்த்தபோது என்னால தாங்கிக்கவே முடியல.

சந்திரன்: இன்னும் கவலையாத் தான் இருக்காங்க.

கலா: எப்படித்தான் மீதமுள்ள காலத்த கழிப்பாங்களோ. நினைச்சாலே பகீர்னு இருக்கு.

சந்திரன்: இப்படி உனக்கு நேர்ந்தபோது, கவலைப்பட யாரும் இல்லாமல் இருந்தத நினைச்சா எனக்கு இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா.

கலா: அப்போ நீ சின்ன பையன். காலமே வேறே. கவலைப்பட்டாங்களே தவிர, வேறு ஒண்ணும் செய்ய வழி இல்லை.

சந்திரன்: அக்கா, உன்னோட அதே நிலையில் இருக்கும் சீதாவிற்கு உன்னைப்போல் துன்பங்கள் வராதிருக்க எனக்கு ஒரு யோசனை. அவளுக்கு மறுமணம் செய்விக்க எண்ணியிருக்கிறோம். ஆனால், அதற்கு அவள் ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். எனவே, நீதான் அவளிடம் மறுமணம் குறித்து பேச வேண்டும்.

கலா: மறுமணம் நல்ல முடிவுதான். அவளின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக இருக்கும். ஆனால், அவளின் இப்போதைய மனநிலை அதற்கு சம்மதிக்காதே.

சந்திரன்: ஆனால், விஷயத்தை தள்ளிப் போட முடியாது. முடிந்தவரை சீக்கிரம் செய்தாக வேண்டும்.
(என்று கூறியவாறே எல்லா விஷயத்தையும் கூறி முடித்தார்).

கலா: அவளுக்காக இல்லாவிடினும், மகனுக்காக அவள் சம்மதிக்கத்தான் வேண்டும். சரி, நான் பேசுகிறேன்.

சந்திரன் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கைப்பேசியை வைத்தார்.

(தொடரும்)

உறவுகளின் ஆதரவுகளுடன் கதை நகரும்.

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 1:33 am

slmkarthi wrote:
ச. சந்திரசேகரன் wrote:
slmkarthi wrote:நல்ல தொடர். அடுத்த வாரம் என்ன வரும் என்று யோசிக்க வைக்கும் தொடர். அருமையிருக்கு சூப்பருங்க
நன்றி கார்த்தி, ஏழு வார கதையையும் படித்துவிட்டீர்கள் அல்லவா?

ஆம். படித்துவிட்டேன்.
எட்டாம் வாரம்?

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 3 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Jan 18, 2013 1:11 pm

கலக்குறிங்க. கதை சூப்பர். தொடரட்டும் உங்கள் இந்த சேவை. நிறைய பேருக்கு எழுத பிடிக்கும் அனால் எழுத வராது. வார்த்தை கோர்வை மற்றும் இது போல் நிறைய கதைக்கு தேவையான விஷயங்கள் வரத்து. அது உங்களுக்கு வருது. கலக்குங்க. 🐰 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 18, 2013 2:42 pm

முழுதாக படித்துவிட்டு பின்னூட்டம் போடுறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக