புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
251 Posts - 52%
heezulia
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சொல் வேட்டை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:39 am

First topic message reminder :

தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...

(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)

இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 11:35 am

பதினாறு
அருகருகே வைத்துக் காட்டுவது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "பாரடிக்மா' என்ற பழைய லத்தீன் சொல்லில் இருந்தும், "பாரடீக்மா' என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தும், 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சொல் "பாரடைம்' ஆகும். இந்தச் சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகர முதலி "உதாரணம்' மற்றும் 'முன் மாதிரி' என்ற பொருள்களைத் தருகிறது. ஆக்ஸ்ஃபோர்ட் அகர முதலியும் கிட்டதட்ட அதே பொருள்களைத் தருகிறது. அறிவியல் வளர்ச்சியின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றாசிரியர் "தாமஸ் குன்' தன்னுடைய "அறிவியல் புரட்சியின் வடிவங்கள்' என்ற நூலில் அறிவியல் சார்ந்த "பாரடைம்' என்ற சொல்லுக்கு "ஆய்வாளர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் பிரச்னைகளையும், தீர்வுகளையும் வடித்துக் கொடுக்கும் அறிவியல் சாதனைகள்' என்று விளக்கம் அளித்துள்ளார். அறிவியல் உலகத்தில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட படிமங்கள், புதுப்புது சோதனைகளால் அடியோடு மாறிவிடும் மாற்றத்தை, தாமஸ் குன் "பாரடைம் ஷிஃப்ட்' என்று குறிப்பிட்டார். ஒரே விஷயத்தை வேறோர் கோணத்தில் பார்க்க வைக்கும் "பாரடைம் ஷிஃப்ட்' என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிய தாமஸ் குன், இதை விளக்க ஒரு தோற்ற மயக்கத்தை (ர்ல்ற்ண்ஸ்ரீஹப் ண்ப்ப்ன்ள்ண்ர்ய்) உருவாக்கினார். அதனை உருவகப்படுத்தி வரையப்பட்ட படம், ஒரு புறம் பார்க்கும் போது முயலைப் போல் தோற்றமளிப்பதாகவும், இன்னொரு புறம் பார்க்கும் போது வாத்தைப் போலத் தோற்றமளிப்பதாகவும் அமைந்தது. அதற்கு அறிவியல் வரலாற்றாசிரியர் தாமஸ் குன், வாத்து-முயல் தோற்ற மயக்கம் (க்ன்ஸ்ரீந்-ழ்ஹக்ஷக்ஷண்ற் ர்ல்ற்ண்ஸ்ரீஹப் ண்ப்ப்ன்ள்ண்ர்ய்) என்று பெயரிட்டார். இப்படித்தான் பாரடைம் ஷிஃப்ட் என்ற சொற்றொடர் முதன் முதலில் தாமஸ் குன் அவர்களால் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முன்னுரையையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

÷முனைவர் பா.ஜம்புலிங்கம், "பாரடைம்' என்ற சொல்லுக்கு மாதிரி, நிலை, படிநிலை அல்லது முறை என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லுக்கு மாதிரி மாற்றம், நிலை மாற்றம், முறை மாற்றம், படிநிலை மாற்றம் என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

புலவர் உ.தேவதாசு, வழிமொழி, மேற்கோள் என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

÷சோலை.கருப்பையா, உவமை, ஒப்புமை, உதாரணம், முன்மாதிரி, இணையம், உவமானம். அசல், அதே மாதிரி, அதே போல போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, "நியமனப் பொருத்தம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஆனந்த கிருஷ்ணன், தமிழ் இலக்கணப்படி "மேற்கோள் சொல்' என்பது பொருந்தும் என்றும், வாய்ப்பாடு, முன்மாதிரி, முன்னோடி, உதாரணம், எடுத்துக்காட்டு, மேற்கோள், உள்ளுறை உவமம், உவமேயம் போன்ற சொற்களையும் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷"பாரடைம்' என்ற சொல்லைக் கருத்தியல், அடிப்படைக் கருத்து, கருத்துரு, வடிவம், அடிப்படை எண்ணம் மற்றும் மனவுரு என்றும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லை "அடிப்படை மாற்றம்' என்றும் கூறலாம் என்று டாக்டர் ஜி.ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

÷சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி "பாரடைம்' என்ற சொல்லுக்குக் கட்டளைப்படிவ வாய்ப்பாடு, மேற்கோள் வாய்ப்பாடு என்ற பொருள்களைக் கூறுகிறது. அதே சமயம் மாடல் (ம்ர்க்ங்ப்) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உருப்படிவம் என்ற பொருளையும், ஆர்ச்டைப் (ஹழ்ஸ்ரீட்ங்ற்ஹ்ல்ங்) என்ற சொல்லுக்கு மூலப்படிவம் என்ற பொருளையும் அதே அகரமுதலி அளிக்கிறது. ஆங்கில அகரமுதலிகள் அனைத்தும் "பாரடைம்' என்ற சொல்லுக்கு, "மாடல்ட' என்ற பொருளையும் அளிக்கின்றன.

÷மேற்கூறிய அடிப்படையில் வாசகர்களின் கருத்துகளை, பாரடைம் என்ற சொல்லும், பாரடைம் ஷிஃப்ட் என்ற சொல்லும் உருவான வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது, "பாரடைம்' என்ற சொல்லுக்குப் "படிவம்' என்பதும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லுக்குப் "படிவ மாற்றம்' என்ற சொல்லும் பொருந்தி வரும் என்று தோன்றுகிறது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 11:37 am

பதினேழு
மொழியியலின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் பல நேரங்களில் பல சொற்கள் ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, காலப்போக்கில் அதன் பயன்பாட்டின் காரணமாக வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக அமைந்துவிடும் என்பதை நாம் உணரலாம். "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லும் இந்த வகையைச் சேர்ந்ததேயாகும்.

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டையோ, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தையோ சார்ந்து அமைந்துவிடும் பல பொருள்களின் சேர்க்கை "பாராஃபெர்நேலியா' என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஆனால், 1650-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இடைக்கால லத்தீன் மொழியிலிருந்தும், கிரேக்க மொழியிலிருந்தும் "பாராஃபெர்நா' என்ற சொல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டபோது, அச்சொல் வரதட்சிணையைத் தாண்டி ஒரு மணப்பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. ரோமானியர்களின் குடும்பச் சட்டங்களின்படி, திருமணமான ஒரு பெண்ணுக்கு அவளுடைய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மேல் முழுச்சொத்துரிமை அளிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி, ஒரு பெண்ணின் ஆடை மற்றும் ஆபரணங்களை விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ அவளுடைய கணவனுக்கு அதிகாரமில்லை. அவள் தன் விருப்பப்படி தன்னுடைய ஆடைகளையும், அணிகலன்களையும் உயில் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் அளித்துவிடலாம். இப்படி ஒரு பெண்ணின் சொத்துரிமைப் பொருள்களைக் குறிக்கும் சொல்லாக ஆதியில் தோன்றிய இச்சொல் தற்போது அதைத்தாண்டி எங்கோ போய்விட்டது. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியைப் புரட்டினால், "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு இரண்டு விதமான பொருள்கள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை அல்லது செயல்பாட்டை நடத்துவதற்குத் தேவையான பல்வேறு பொருள்கள் என்பது. இன்னொன்று, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தோடோ அல்லது செயல்பாட்டோடோ எப்பொழுதும் அடையாளம் காணப்படும் பல சடங்குப் பொருள்கள் என்பதாகும். எனவே, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியைப் பொருத்தளவில் பாராஃபெர்நேலியா என்ற சொல், திருமணப் பெண்ணின் சொத்து (வரதட்சிணையைத் தவிர) என்ற பொருளிலிருந்து மாறி வெகுதூரம் வந்துவிட்டது. ஆனால், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருள்களைத் தருகிறது. அவை (1) திருமணமான ஒரு பெண்ணுக்குச் சொந்தமான, அவளால் உயிலின் மூலம் உரிமை மாற்றம் செய்யக்கூடிய அதிகாரத்திலமைந்த தனிப்பட்ட சொத்து (2) தனிப்பட்ட உடைமைகள் (3) மேசை, நாற்காலி போன்ற உடைமைகள் மற்றும் துணைப்பொருள்கள். இந்த முன்னுரையோடு இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, "பாராஃபெர்நேலியா' என்ற சொல் ஒரு நிறுவன அமைப்பின் தலைமைப் பீடத்தையும், அதிகார அடையாளங்களையும் காட்டக்கூடிய சின்னங்களைக் குறிப்பதாகும் என்றும், அதற்குச் சான்றாக அமைச்சர், கலெக்டர், நீதிபதி போன்றோரின் அலுவலக அடையாளங்களாக வாகன முத்திரை, கொடி, சுழல் விளக்கு, ஆயுதமேந்திய காவலர்கள், குறுக்குப்பட்டை அணிந்த பணியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, அதன்காரணமாக இச்சொல்லுக்கு "அதிகாரக் குறியீடுகள்' அல்லது "அதிகாரச் சின்னங்கள்' என்னும் இணைச்சொல் பொருத்தமாக இருக்குமென்கிறார்.

பாபாராஜ், சென்னை பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தில் "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு பரிவாரம், எடுபிடி, இடைத்துணுக்குகள் ஆகிய பொருள்களும்; ஆங்கில-தமிழ் அகரமுதலியில் "உடைமைப்பொருள்' என்ற சொல்லும் கொடுக்கப்பட்டிருப்பதால், இச்சொல்லுக்கு, "பணிக்களத்துணைப்பொருள்' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார்.

சோலை.கருப்பையா, "உரிமை கொண்டாடுவது அல்லது உரித்தானது' என்ற சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார். ஆனந்தகிருஷ்ணன், "ஒருவரது உடைமைப்பொருள் தொகுதி அல்லது துணைத்தொகுதி' என்ற சொல்லைக் கையாளலாம் என்றும், "அரசர்கள் குதிரையிலோ, யானையிலோ பவனிவரும் போது அவைகளுக்குச் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனைகள் இந்த வகையில் அடங்கும்" என்றும் குறிப்பிடுகிறார். முனைவர் ஜி.ரமேஷ், தன்குறிதானவைகள், தனம், பணிப்பொருள்கள், உபகரணங்கள், செயல்பாட்டுக்கருவிகள் மற்றும் சிறுகருவிகள் என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தைக் குறிக்கும் ஸ்ரீதனம் என்பதும் இச்சொல்லுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பொருளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "ஒரு மருத்துவருக்கு ஸ்டெதஸ்கோப், தெர்மாமீட்டர் போன்ற கருவிகள் தொழில்சார் கருவிகளாக விளங்குவதைப் போலவும், ஒரு மன்னருக்கு கிரீடம், செங்கோல் போன்றவை பதவிசார் பொருள்களாக பயன்படுவதைப் போலவும், ஒரு தொழிலையோ, ஒரு பதவியையோ குறிக்கும் அடையாளப் பொருள்களை "பாராஃபெர்நேலியா' என்று குறிக்கலாம்' என்று கூறி, இச்சொல்லுக்கு தொழில்சார் கருவிகள் அல்லது பதவிசார் பொருள்கள் என்ற இணைச்சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

வாசகர்களில் சிலர் குறிப்பிட்டது போல், ஆட்சியாளர்களோடு தொடர்புபடுத்தி இச்சொல் கையாளப்படும்போது, ஒரு காலத்தில் வடமொழியில் ரத, கஜ, துரக பதாதிகள் என்றும், தமிழில், படை-பரிவாரங்கள் என்றும் பயன்படுத்தப்பட்ட சொற்கள், கிட்டத்தட்ட "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்குப் பொருத்தமானவையாக இருந்தன. ஆனால், ஒரு தொழிலோடு அல்லது செயல்பாட்டோடு தொடர்புடைய கருவிகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படும் காரணத்தால் படை-பரிவாரம் போன்ற பழைய சொற்கள் முற்றிலும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

முறையாகச் சொல்லப்போனால், வீடுகட்டும் கொத்தனார் கொண்டுபோகும் மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருள்களும், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் ஒருவர் கொண்டுபோகும் கத்தரிக்கோல், கத்தி, பஞ்சு, பாண்டேஜ் துணி போன்ற பொருள்களும், திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர் வழக்கமாகக் கொண்டுபோகும் பொருள்களும், ஒரு மடாதிபதியோடு எடுத்துச்செல்லப்படும் பசைக்கான பொருள்கள், தண்டம் ஆகியனகூட "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லில் அடங்கும்.

எனவே, இச்சொல்லுக்கு இணையான சொல், அதிகாரம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், தொழில் செயல்பாடு சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் "அடையாளச் சின்னங்கள்' அல்லது "அடையாளப் பொருள்கள்' என்பதே பொருந்தும். ஆனால் ஒரு தொழில் அல்லது செயல்பாடு அல்லது அதிகாரம் அல்லது ஒரு நிறுவனம் சார்ந்த அடையாளப் பொருள்கள் காலப்போக்கில், அவற்றை அடையாளம் காட்டும் சின்னங்களாகவே மாறிப்போவதை நாம் பார்க்கிறோம். ஸ்டெதஸ்கோப் மருத்துவருக்கும், ஏர் மற்றும் கலப்பை உழவனுக்கும் அடையாளச் சின்னம் ஆனதைப்போல். எனவே, "பாராஃபெர்நேலியா' வுக்கான தமிழ்ச்சொல் "அடையாளச் சின்னங்கள்'.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 10:54 pm

பதினெட்டு)
மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ஆகிய பொருள்களும், சுரா ஆங்கிலத் தமிழ் அகரமுதலியில் "குருக்களின் படிநிலைக் குழுமம்' என்றும் பொருள் தரப்பட்டுள்ளதால், "தரவரிசை' அல்லது "நிலை வரிசை' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

எழில் சோம.பொன்னுசாமி, அதிகார மரபு, அதிகார வரிசை, அதிகார அமைப்பு நிலை, அதிகாரப் படிநிலை என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, அருங்கலைச் சொல்லகராதியில், "படிமரபு' என்ற பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் ஜி.ரமேஷ், படிநிலை, பதவிப்படிநிலை, பொருள் படிநிலை, குருமரபு ஆகிய பொருள்கள் காணப்படுவதால், பல்வேறு சமூக அமைப்புகளைக் குறிக்கும் வகையில் கையாளப்படும்போது, இச்சொல்லுக்கு "வகுப்புப் படிநிலை' என்ற சொல்லையும் அதிகாரத்தின் பொருட்டு கையாளப்படும்போது, "அதிகாரப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார். முனைவர் ப.ஜம்புலிங்கம் வம்சாவளி, வழிவழியாக, பரம்பரை பரம்பரையாய், தலைமுறை தலைமுறையாய் என்னும் சொற்களையும், அலுவல் நிலை பயன்பாட்டில் பதவி நிலையைக் குறிக்கும்போது, "பதவிப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "ஹைரார்கி' என்ற சொல் சமூக தளத்தில் அல்லது நிறுவன மற்றும் ஆட்சியமைப்பில் காணப்படும் உயர்வு, தாழ்வு அடிப்படையிலான கட்டமைப்பைக் குறிக்கும் என்பதாலும், பதவி, பணம், இனம் போன்றவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும் தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடைய ஓர் அடுக்குமுறை அமைப்பு உருவாவதாலும், இச் சொல்லுக்கு அடுக்குமுறை அமைப்பு' அல்லது "படிநிலை அமைப்பு' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு ஓர் அமைப்பிலோ அல்லது நிறுவனத்திலோ அதைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்கள் அவர்களது அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ ஒட்டி ஒருவர் மேல் ஒருவராக அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்படுவது என்ற பொருளைக் குறிக்கிறது. இவை தவிரவும், சில பொருள்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியோ, பல பிரிவுகளாகப் பிரித்தோ வைப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது. மேலும், கிறிஸ்தவ மெய்யியலில் தேவதைகளும், வானவர்களும், பாரம்பரியமாய் குறிக்கப்படும் "வரிசை' என்ற பொருளையும், கத்தோலிக்க திருச்சபையின் குருமார்களின் வரிசை அல்லது மரபு என்னும் பொருளையும் கூட ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி அளிக்கிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி ஐந்து விதமான பொருள்களைக் கூறுகிறது. அவை: (1) தேவதைகளின் வரிசை அல்லது பிரிவுகள், (2) குருமார்களின் மரபு, (3) அதிகாரத்தில் இருப்பவர்களின் வரிசை, (4) திறமை அல்லது சமூக, பொருளாதார அல்லது தொழில் மேம்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவைச் சார்ந்த மக்களை வரிசைப்படுத்துவது, (5) மதிப்பீடுகளை வரிசைப்படுத்துவது.

"ஹைரார்கி' என்ற சொல் ஆதியில் கிரேக்க மொழியில் விண்ணகவரிசை அல்லது வான்வெளிவரிசை ((Celestial Hierarchy)) என்ற பொருளிலும், கிறிஸ்தவ திருச்சபையின் குருமார் மரபு (Ecclesiastical) என்ற பொருளிலேயும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் 14, 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. முதன் முதலில் இச்சொல்லை கிறிஸ்தவ மெய்யியல் அறிஞர் சூடோ-டெனிஸ் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி கோள்கள், வானவர்கள், தேவதைகள், மதகுருமார்களின் படிவரிசையைக் குறிப்பிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இச்சொல், காலப்போக்கில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் அதிகார வரிசையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்சியல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் பரவியது. பின்னாளில், பொருளின் தரவரிசை அல்லது படிவரிசையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவற்றையும் தாண்டி, உளவியலில் ஒரு மனிதனின் தேவைகளை முக்கோண பிரமிடு வடிவில் வரிசைப்படுத்தி ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் மாஸ்லோவின் தேவைகளின் வரிசை (Maslow's Hierarchy of Needs) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இப்படி இச்சொல் எங்கோ தொடங்கி, எங்கெங்கோ போய், இன்று பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், "ஹைரார்கி' என்ற சொல்லின் வேர்ச்சொல்லிருந்து தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம் மற்றும் ஒரு சிறுகுழு ஆட்சி (Matriarchy, Patriarchy and Oligarchy) என்ற சொற்களெல்லாம் உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஹைரார்கி என்ற சொல்லின் அடிப்படை வீச்சு அதிகாரம், படி, வரிசை ஆகியவற்றைச் சுற்றிச்சுற்றி அமைவதைப் பார்க்கிறோம். அது அந்த வரிசையிலுள்ள மக்களைக் குறிக்கத் தொடங்கிய காலத்தைத் தாண்டி, பொருள்களையும், தேவைகளையும் கூட உள்ளடக்கும் நிலைக்கு வந்து விட்டதால், பெருவாரியான வாசகர்கள் குறிப்பிட்டுள்ள "படிநிலை வரிசை' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். ஆனால், படிநிலை என்பதும் வரிசை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமென்பதால் "படிநிலை அமைப்பு' என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 10:55 pm

பதினெட்டு)
மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ஆகிய பொருள்களும், சுரா ஆங்கிலத் தமிழ் அகரமுதலியில் "குருக்களின் படிநிலைக் குழுமம்' என்றும் பொருள் தரப்பட்டுள்ளதால், "தரவரிசை' அல்லது "நிலை வரிசை' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

எழில் சோம.பொன்னுசாமி, அதிகார மரபு, அதிகார வரிசை, அதிகார அமைப்பு நிலை, அதிகாரப் படிநிலை என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, அருங்கலைச் சொல்லகராதியில், "படிமரபு' என்ற பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் ஜி.ரமேஷ், படிநிலை, பதவிப்படிநிலை, பொருள் படிநிலை, குருமரபு ஆகிய பொருள்கள் காணப்படுவதால், பல்வேறு சமூக அமைப்புகளைக் குறிக்கும் வகையில் கையாளப்படும்போது, இச்சொல்லுக்கு "வகுப்புப் படிநிலை' என்ற சொல்லையும் அதிகாரத்தின் பொருட்டு கையாளப்படும்போது, "அதிகாரப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார். முனைவர் ப.ஜம்புலிங்கம் வம்சாவளி, வழிவழியாக, பரம்பரை பரம்பரையாய், தலைமுறை தலைமுறையாய் என்னும் சொற்களையும், அலுவல் நிலை பயன்பாட்டில் பதவி நிலையைக் குறிக்கும்போது, "பதவிப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "ஹைரார்கி' என்ற சொல் சமூக தளத்தில் அல்லது நிறுவன மற்றும் ஆட்சியமைப்பில் காணப்படும் உயர்வு, தாழ்வு அடிப்படையிலான கட்டமைப்பைக் குறிக்கும் என்பதாலும், பதவி, பணம், இனம் போன்றவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும் தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடைய ஓர் அடுக்குமுறை அமைப்பு உருவாவதாலும், இச் சொல்லுக்கு அடுக்குமுறை அமைப்பு' அல்லது "படிநிலை அமைப்பு' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு ஓர் அமைப்பிலோ அல்லது நிறுவனத்திலோ அதைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்கள் அவர்களது அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ ஒட்டி ஒருவர் மேல் ஒருவராக அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்படுவது என்ற பொருளைக் குறிக்கிறது. இவை தவிரவும், சில பொருள்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியோ, பல பிரிவுகளாகப் பிரித்தோ வைப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது. மேலும், கிறிஸ்தவ மெய்யியலில் தேவதைகளும், வானவர்களும், பாரம்பரியமாய் குறிக்கப்படும் "வரிசை' என்ற பொருளையும், கத்தோலிக்க திருச்சபையின் குருமார்களின் வரிசை அல்லது மரபு என்னும் பொருளையும் கூட ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி அளிக்கிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி ஐந்து விதமான பொருள்களைக் கூறுகிறது. அவை: (1) தேவதைகளின் வரிசை அல்லது பிரிவுகள், (2) குருமார்களின் மரபு, (3) அதிகாரத்தில் இருப்பவர்களின் வரிசை, (4) திறமை அல்லது சமூக, பொருளாதார அல்லது தொழில் மேம்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவைச் சார்ந்த மக்களை வரிசைப்படுத்துவது, (5) மதிப்பீடுகளை வரிசைப்படுத்துவது.

"ஹைரார்கி' என்ற சொல் ஆதியில் கிரேக்க மொழியில் விண்ணகவரிசை அல்லது வான்வெளிவரிசை ((Celestial Hierarchy)) என்ற பொருளிலும், கிறிஸ்தவ திருச்சபையின் குருமார் மரபு (Ecclesiastical) என்ற பொருளிலேயும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் 14, 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. முதன் முதலில் இச்சொல்லை கிறிஸ்தவ மெய்யியல் அறிஞர் சூடோ-டெனிஸ் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி கோள்கள், வானவர்கள், தேவதைகள், மதகுருமார்களின் படிவரிசையைக் குறிப்பிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இச்சொல், காலப்போக்கில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் அதிகார வரிசையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்சியல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் பரவியது. பின்னாளில், பொருளின் தரவரிசை அல்லது படிவரிசையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவற்றையும் தாண்டி, உளவியலில் ஒரு மனிதனின் தேவைகளை முக்கோண பிரமிடு வடிவில் வரிசைப்படுத்தி ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் மாஸ்லோவின் தேவைகளின் வரிசை (Maslow's Hierarchy of Needs) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இப்படி இச்சொல் எங்கோ தொடங்கி, எங்கெங்கோ போய், இன்று பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், "ஹைரார்கி' என்ற சொல்லின் வேர்ச்சொல்லிருந்து தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம் மற்றும் ஒரு சிறுகுழு ஆட்சி (Matriarchy, Patriarchy and Oligarchy) என்ற சொற்களெல்லாம் உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஹைரார்கி என்ற சொல்லின் அடிப்படை வீச்சு அதிகாரம், படி, வரிசை ஆகியவற்றைச் சுற்றிச்சுற்றி அமைவதைப் பார்க்கிறோம். அது அந்த வரிசையிலுள்ள மக்களைக் குறிக்கத் தொடங்கிய காலத்தைத் தாண்டி, பொருள்களையும், தேவைகளையும் கூட உள்ளடக்கும் நிலைக்கு வந்து விட்டதால், பெருவாரியான வாசகர்கள் குறிப்பிட்டுள்ள "படிநிலை வரிசை' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். ஆனால், படிநிலை என்பதும் வரிசை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமென்பதால் "படிநிலை அமைப்பு' என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 11:00 pm

பத்தொன்பது)
எழில் சோம.பொன்னுசாமி "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு செம்மாந்தன், செம்மாந்த மறவன், பகட்டுவண்ணன் போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். சோலை.கருப்பையா, கெட்டிக்காரன், துறுதுறுப்பானவன், சுறுசுறுப்பானவன் என்னும் சொற்களையும், "சகலகலை வல்லவன்' என்பது பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

புலவர் பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், "கடலூர் மின்வாரிய தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை' வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் பகட்டான, ஆரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், ஆங்கில அகரமுதலி தரும் பொருள்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், பெயரெச்சமான இச்சொல் பிறர் நாட்டத்தைக் கவரும் தன்மை உடையதால், "கவர்கவின்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயண வாக்கியமான ""பொற்பின் நின்றன பொலிவு'' என்பதை அடிப்படையாகக் கொண்டு, "பொங்கும் பொலிவு' அல்லது "பொலிவு' என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். ஆனந்தகிருஷ்ணன், பகட்டான, வேலைப்பாட்டுடன் கூடிய, ஒளிர்வான, நிறமுள்ள, அலங்காரத்துடன் பிறரைக் கவரும் தன்மை, கவரழகு, கவர்ச்சி அரசியல், ஆர்வத்துடன் இயங்கும் சுறுசுறுப்பு முதலியவற்றைக் கொண்ட ஒருவனைக் குறிப்பதால், "பன்முகப் பண்பாளன்' என்ற பொருள் பொருந்தும் என்கிறார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "ஃப்ளாம்பாயன்சி' என்ற இச்சொல், வள்ளுவர் பொருட்பாலில் குறிப்பிடும் ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை, சொல்வன்மை, அவையஞ்சாமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும் என்றும், இச்சொல்லுக்கு ""இணையாக உரமொருவற்கு'' என்று தொடங்கும் குறளில் உள்ள "உள்ளவெறுக்கை' அல்லது "ஊக்கமிகுதி' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

"ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைக் குறிக்கிறது. ஒன்று, தீப்பிழப்புகளைக் குறிக்கும் "ஃப்ளேம்' என்ற சொல்லை வேராகக் கொண்டமைந்த "அலையலையாய் எழும் மடிப்புகள்' என்ற பொருள். மற்றொன்று, பளிச்சென்று கண்ணில் தென்படும் "வண்ணமயமான காட்சி' அல்லது "நடத்தை'. பிரெஞ்சு மொழியில் உள்ள "ஃப்ளாம்பாயர்' என்ற சொல்லிலிருந்து 1832-இல் இச்சொல் ஆங்கிலத்திற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இச்சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகர முதலி, பகட்டு, தன்னம்பிக்கை, துடிப்பு இவற்றின் மூலமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் நபர் அல்லது நடவடிக்கை என்றும்; பிரெஞ்சு கோதிக் கட்டடக்கலையில் (எர்ற்ட்ண் ஹழ்ஸ்ரீட்ண்ற்ங்ஸ்ரீற்ன்ழ்ங்) அலையலையாய்த் தீப்பிழம்புகள் எழும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்காரம் என்றும் இரு வகையான பொருள்களைத் தருகிறது. இந்தச் சொல் உருவான வரலாற்றைப் பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டடக்கலை (ழ்ங்ய்ஹண்ள்ள்ஹய்ஸ்ரீங் ஹழ்ஸ்ரீட்ண்ற்ங்ஸ்ரீற்ன்ழ்ங்) தோன்றும் வரை, பிரெஞ்சு நாட்டில் கோதிக் கட்டடக்கலையின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைக் குறிக்கும் சொல்லிலிருந்து இது தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், கோதிக் கட்டடக்கலை என்று அழைக்கப்படும் கட்டடக்கலையில் உள்ள "கோத்' என்ற சொல் ஆங்கிலத்தில் கீழ்மகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. மிகப் பழைமையான கிறிஸ்தவ கோயில்கள், கோதிக் கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்டவை என்பதும், அவை மற்ற கட்டடங்களிலிருந்து மாறுபட்டவைகளாகக் காட்டும் வகையில் கட்டப்பட்டவை என்பதையும் வரலாறு கூறுகிறது. மிக நீண்ட கூர்மையான கோபுரம் இக்கட்டடங்களின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

சென்னையில் உள்ள சாந்தோம் கத்தோலிக்க தேவாலயம், நவீன கோதிக் அடிப்படையில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கட்டடக்கலையின் ஒரு வடிவத்தைக் குறிக்கும் பிரெஞ்சு சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட இச்சொல், காலப்போக்கில் தடம்மாறி நம்முடைய வழக்கில் மனிதர்களையோ, அவர்களுடைய நடத்தையையோ குறிப்பதற்காகவே பெரும்பாலும் பயன்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாம் இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைத்துள்ள "கவர்கவின்' என்ற சொல்லைப் பயன்பாட்டில் கொண்டு வருவதில் சில சிக்கல்கள் உள்ளன. காரணம், "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல், ஒரு நபர் அல்லது நடத்தை இரண்டிற்கும் பொதுவானதாக அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, "கவர்திறன்' என்ற சொல் இரண்டுக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 11:02 pm

இருபது)
நான் நினைத்ததைப் போலவே, ஒரு சிலர் "சப்லிமினல்' என்ற சொல்லுக்கும், "சப்ளைம்' என்ற சொல்லுக்கும் தொடர்பிருப்பதாக எண்ணிவிட்டார்கள். ஆனால், சில நேரங்களில் மொழியியலில், அதிலும் குறிப்பாக ஆங்கிலச் சொற்பிறப்பியலில் (எடிமாலஜி) நம்முடைய தர்க்கம் (லாஜிக்) வேலை செய்வதில்லை. "சப்ளைம்' என்ற சொல் மேன்மையான, உயர்வான, சிறப்பான, பெருமையான என்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், "சப்லிமினல்' என்ற சொல் நம் புலனுணர்வு அல்லது உணர்ச்சி நிலையின் நுழைவாயிலில் தூண்டப்படும் அல்லது நிகழும் ஒரு மனப்போக்கு அல்லது உளவியக்கம் என்று ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி பொருளுரைக்கிறது. அப்படித் தூண்டப்படும் மனப்போக்கு நம்மால் உணர முடியாததாகவும், அதே சமயம், நம்முடைய மனப்பாங்கை மாற்றக்கூடியதாகவும் இருக்குமென்றும், அந்த அகரமுதலி குறிக்கிறது.

÷இதே சொல்லுக்கு மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி, உணர்ச்சியை (சென்சேஷன்) அல்லது புலப்பாட்டைத் (பெர்சப்ஷன்) தூண்டுவதற்கியலாத என்ற பொருளையும் கொடுக்கிறது. இச்சொல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நுழைவாயில் என்ற சொல்லைக் குறிக்கும் "சப்-லிமன்' என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று பெரும்பாலும் உளவியலில் பயன்படுத்தப்படும் இச்சொல், பல நுகர் பொருள்களுக்கு நம்மை அடிமையாக்குவதற்கு விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் சில யுக்திகளைக் குறிக்கும் சொல்லாகப் பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

÷1959-ஆம் ஆண்டு சந்தை - அங்காடிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஜேம்ஸ் வைகரி என்பவர், ஒரு திரைப்படத்தின் இடையில் ""பசியா? பாப்கார்ன் உண்ணுங்கள்; தாகமா? கொகொகோலா பருகுங்கள்'' என்ற விளம்பரத்தை நுழைத்தார். அந்த விளம்பரம் ஒளிபரப்பாகிய கால அளவு பொதுவாக ஒரு மனிதனின் கவனத்தை ஈர்ப்பதற்குத் தேவையான கால அளவைவிடக் குறைவானதாகவும், ஆனால் உள்மனதின் அல்லது ஆழ்மனதின் (சப்கான்ஷியஸ்) கவனத்தை ஈர்ப்பதற்குப் போதுமானதாகவும் இருந்தது. ஆனால், இந்த விளம்பரம் பாப்கார்ன் விற்பனையை 57.8 சதவிகிதமும், கொகொகோலா விற்பனையை 18 சதவிகிதமும் அதிகரித்தது. 1999-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு மனிதனின் ஆழ்மனதில், அவனுக்கு வெளிப்படையாகத் தெரியாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில கருத்துகளை விளம்பரங்கள் மூலம் செலுத்திவிட முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். அதன் விளைவு, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தற்பொழுது புலன் உணர்வுகளைத் தூண்டும் கிளர்ச்சியூட்டும் செய்திகளையும், படிவங்களையும் தங்களுடைய விளம்பரங்களில், யாரும் வெளிப்படையாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளே புகுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், இவை இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை, அவர்கள் அறியாமலேயே அவர்களது அடிமனதில் ஏற்படுத்தி விடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பல போட்டி நிறுவனங்களுக்கிடையே நிகழும் விளம்பரப் போரிலும், "சப்லிமினல் மெசேஜ்' என்ற உத்தி தற்போது கையாளப்படுகிறது. இந்த முன்னுரையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, "சப்ளைம் என்ற சொல்லின் பொருளை வைத்து நோக்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிலும் அடக்கமானதாகவும், மேலானதாகவும் இருப்பதாகும். எனவே, இதற்கு இணையான தமிழ்ச்சொல் "மேல் அடங்கல்' என்று எழுதியுள்ளார்.

÷புலவர் உ.தேவதாசு, "ஆங்கில அகராதிகள் தரும் பொருள்களின் அடிப்படையில், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில தமிழகராதி உணர்வு நிலையின் அடி எல்லை, உணர்வுக்கருநிலை என்னும் பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், "ஆழ் மனநிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கலாம்' என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சங்க இலக்கியங்களில் காணப்படும் "உள்ளுறை உவமம்' என்ற சொல்லும் பொருத்தமாகலாம் என்பதனால் "உள்ளுறை உணர்நிலை' என்ற சொல்லையும் பரிந்துரைத்துள்ளார்.

÷ஷா.கமால் அப்துல் நாசர், "நம் உள்ளுணர்வில் ஒளிந்திருக்கிற அல்லது உணர முடிகிற சப்லிமினல் கிரேட்னஸ், சப்லிமினல் ட்ரூத் என்ற தொடர்புடைய பயன்பாடுகளை எண்ணிப் பார்க்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு "உணர்வுக்கப்பாலான' என்ற சொல் பொருந்தலாம் என்கிறார். முனைவர் வே.குழந்தைசாமி, "ஒருவரது எண்ண ஓட்டத்தில் அவரை அறியாமல் ஏற்படும் அகமாற்றத்தை இச்சொல் குறிப்பதாலும், வெளியிடா எண்ணங்களைத் திருவள்ளுவர் "கரந்து - கரப்பு' என்ற சொற்களால் குறிப்பிடுவதாலும், இதற்கு "கரந்துபடு மாற்றம்' அல்லது "புலனுணரா மாற்றம்' என்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.

"உளவியலில் இச்சொல் நாம் விழிப்புணர்வோடு அறியமுடியாத வகையில் ஏற்படும் ஒரு மனநிகழ்வைக் குறிக்கும் என்பதால், இச்சொல்லுக்கு மேலோட்டமான முயற்சி, செயற்கையான, ஊக்கமளிக்காத, உணர்வுகளைத் தூண்டாத, உணர்ச்சியை எழுப்பாத, திடமான ஞானமிலாத என்னும் சொற்களை ஜ.ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.

÷புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "இச்சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி தூண்டுதல் புலப்பாட்டு எல்லைக்குக் கீழ்ப்பட்ட, புலப்படாத தூண்டுதல் நெய்மையுடைய என்ற இரண்டு பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ஆழ்மன உணர்நிலை, அறிதுயில்நிலை என்னும் தொடர்கள் கிட்டத்தட்ட பொருந்துவது போல் தோன்றினாலும், அவை ஏற்புடைத்தாய் அமையாது' என்றும், "விளிம்பிரு உள்மறை உணர்நிலை' என்றோ, "விளிம்புறை உணர்மறைநிலை' என்றோ பொருள் கொள்ளலாம் என்றும் கூறியுள்றார்.

÷வெ.ஆனந்தகிருஷ்ணன், "சப்லிமினல் என்ற சொல்லுக்கு ஒருவர் அறியாமலேயே உள்ளம் நெய்மை அடையும் நிலை என்று அகராதியில் காணப்படுவதாலும், இச்சொல் கனவுக்கும், நனவுள்ளத்திற்கும் இடையில் இருக்கும் காரணத்தால், "துணை நனவுள்ளம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியுள்ளார்.

÷இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்குங்கால், விழிப்புணர்வின் அடிமட்டத்தில் அல்லது நுழைவாயிலில் நாம் உணராமலேயே நம்மைத் தாக்கும் மனப்போக்கை இச்சொல் குறிப்பதால் "உணர்வறியாப் போக்கு' என்பது பொருத்தமாகலாம். அதைவிட, புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைக்கும் "உள்மறை உணர்நிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாகும்.

"சப்லிமினல்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் தரும் இணைச் சொல் "உள்மறை உணர்நிலை'.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:27 pm

சூப்பருங்க

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 20, 2013 10:05 pm

இருபத்தொன்று)
நாம் அன்றாடம் ஆங்கிலப் பேச்சு வழக்கில் "ஃபுல் - ஃப்ளெட்ஜ்டு' (full-fledged) என்ற சொல்லை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல் "ஃப்ளெட்ஜ்' என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதே. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில், இச் சொல்லுக்கு "பறப்பதற்குப் போதுமான அளவுக்குச் சிறகுகள் வளர்தல்' என்ற பொருளும், "ஃபுல்-ஃப்ளெட்ஜ்டு' என்ற சொல்லுக்கு "முழுமையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட அல்லது முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட' என்ற பொருள்களும் உள்ளன.

ஆங்கிலத்தில் பல சொற்கள் லத்தீன், கிரேக்க மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து தழுவப்பட்டிருந்தாலும், "ப்ளெட்ஜ்' என்ற சொல், "பறக்கும் திறன் கொண்ட' என்ற பொருளுடைய தொன்மையான ஜெர்மானியச் சொல்லான "ஃப்ளக்கி' (flucki) என்ற சொல்லிலிருந்து தொன்மையான ஆங்கிலத்திற்கு "ஃப்ளைஜ்' என்ற சொல்லாகவும், இடைக்கால ஆங்கிலத்தில் "ஃப்ளெஜி' என்ற சொல்லாகவும் மருவி வந்தது என்றும், அப்படி வந்த காலம் 1566 என்றும், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தெரிவிக்கிறது.

ஆர்னிதாலஜி (ornithology) என்று அழைக்கப்படும் பறவையியலில், பறவைகளுக்குச் சிறகு முளைப்பதைப் பற்றியும், தாய்ப் பறவைகள் தன் குஞ்சுகளை சிறகு முளைக்கும் வரை எப்படிப் பாதுகாக்கின்றன; அதன் பின், அவை எப்படிப் பிரிந்து விடுகின்றன என்பதைப் பற்றியும் பல சுவையான தகவல்கள் உண்டு. மூர் அல்லது முர்ரெலெட் என்று அழைக்கப்படும் ஒருவகை கடற்பறவை, தன் இனத்தோடு கூட்டமாக கடற்கரையில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலோ, பொந்துகளிலோ, வளைகளிலோ முட்டையிட்டு விட்டுப் போய்விடும். பின்னர், அப்பறவைகளின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும், அவை தாமாகவே கடல் அருகில் வந்து குரல் எழுப்பும். உடனே தாய்ப் பறவைகள் கூட்டமாகக் கரைக்கு அருகில் வந்து, அதனதன் குஞ்சுகளை அவற்றின் குரலில் இருந்தே அடையாளம் கண்டு, கடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். மனித இனத்தில் கூட, எந்தத் தாயாலும் குரலை வைத்தே பிறந்த குழந்தையை அடையாளம் காண முடியுமா? என்பது சந்தேகம்தான். இந்தச் சுவையான தகவலோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஷா.கமால் அப்துல் நாசர், கம்பராமாயணத்தில் சடாயுகாண் படலத்தில், "உருக்கிய சுவணம் ஒத்து' என்று தொடங்கும் பாடலில் வரும் "தெரிப்புறு செறி சுடர் சிறை விரித்து' என்ற வரியையும், "பெரிதும் நன்று' என்று தொடங்கும் பாடலில் வரும் "திண்சிறை விரியும் நீழலில் செல்ல' என்ற வரியையும், "மழைபுரை பங்குழல்' என்று தொடங்கும் பாடலில் வரும் "தழை புரையும் சிறைக்கூகை, பாறுமுதல் பெரும் பறவை' என்னும் வரிகளையும் மேற்கோள்காட்டி, "சிறைவிரி' என்ற சொல்லைப் பரிசீலனை செய்யலாம் என்கிறார்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, பறவைக்குச் சிறகுகள் முளைப்பதைக் குறிக்கும் என்றும், இடியமாடிக்காகப் (idiom) பயன்படுத்தும் போதுகூட, சிட்டுக்குச் சிறகு முளைத்துவிட்டது எனக் கூறுகிறோம் என்றும், இப்பயன்பாடு, ஒருவன் தன் காலிலேயே நிற்கும் நிலையை எய்துவதைக் குறிப்பிடவும் கையாளப்படுகிறது என்றும், எனவே இதை "தன் கால்நிலை' என்று குறிப்பிடலாம் என்கிறார். அவ்வாறு குறிப்பிடுகையில், தன் காலிலேயே நிற்கும் நிலை என ஏழாம்வேற்றுமை உருபும், பயனும் உடந்தொக்கத்தொகையாக விரியும் என்பதால் "தளிர்நிலை' என்றும் சொல்லலாம் என்கிறார். மேலும் ப்ளெட்ஜ்லிங்க் என்பது ஓர் இளம் பறவையையோ அல்லது அனுபவமற்ற ஒரு மனிதனையோ குறிக்கும் என்றும் கூறுகிறார்.

எம்.எஸ்.இப்ராகிம், "சிறகடிப்பு' என்ற சொல்லையும், சோலை.கருப்பையா, சிறகு முளைத்து, துளிர்விட்டு, பருவமெய்தி போன்ற சொற்களையும், தெ.முருகசாமி, "பக்கத்துணை' என்ற சொல்லையும் பரிந்துரைக்கின்றனர்.

அ.கு.மான்விழி, வழக்கமான பொருள்களைத் தாண்டி, சார்பற்றத் தன்மை (indipendent nature) என்ற ஒரு பொருள் உள்ளதாகவும், இச்சொல்லின் நீட்சி நிலைகளான வினைச்சொல், பெயர்ச்சொல், பெயர் உரிச்சொல், அடைமொழி ஆகியவற்றிலேயே நிறைய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்றும், அவை ஆரம்ப நிலையில் உள்ளவர், அனுபவமில்லாத ஒருவர் என்ற பொருள்களிலேயும் பயன்படுத்தப்படலாம் என்றும், இச்சொல்லின் பயன்பாட்டை நாம் வழக்கில் கொண்டுவரும் பொழுது, தனிநபர் சார்ந்த செய்திகளுக்கு, துவக்க நிலை (யாளர்), முதல் முயற்சியாளர், அனுபவத்தேடல், புதிய அனுபவம் போன்ற சொற்களையும், வணிக அமைப்பு, வணிக நிறுவனம் அல்லது பொது அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றின் செய்திகளுக்கு தடம்பதித்தல், காலூன்றல், அடியெடுத்துவைத்தல் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "அணியமாதல்' என்ற சொல்லும் பொருந்தலாம் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் மனிதர்களுக்கான பயன்பாட்டை மட்டுமே வைத்து உருவாக்கப்படும்போது, அதன் வீச்சு குறைவாகவும், பறக்கும் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும்போது, பொதுத்தன்மை உடையதாகவும் மாறுவதை உணரலாம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இச்சொல்லுக்குப் பொருத்தமான இணைச்சொல் "சிறகு வளர்தல்' என்றே எண்ணுகிறேன். சிறகு என்ற சொல் இலக்கியத் தமிழில் சிறை என்றும் காணப்படுகிறது. எனவே, சிறைவிரி அல்லது சிறகுவிரி என்ற சொற்கள் சுருக்கமாகவும், அழகாகவும் இருப்பினும், அவை வளர்தல் அல்லது முளைத்தல் என்னும் செயல்பாட்டைக் குறிக்காது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 20, 2013 10:07 pm

இருபத்திரண்டு)
"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைத் தருகிறது. ஒன்று, தற்பெருமை அல்லது வீண் கர்வத்திலிருந்து விடுபட்டவர் என்பது. இன்னொன்று உடை, பேச்சு அல்லது நடத்தையில் ஒரு ஒழுங்கு அல்லது மேம்பாடு என்பது. ஆனால், குற்றவியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இல் மாடஸ்டி என்ற சொல், ஒரு பெண்ணின் மானத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு, மானபங்கம் என்பது (outraging the modesty) தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சொல் ஆதியில் எப்படித் தோன்றியது என்று வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மனித குலம், சமயம்-மதம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றான உடைக் கட்டுப்பாடு தோன்றியபோது உருவானதாகத் தெரிகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சட்ட விதிமுறைகள் (canon law) நான்கு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது என்றும், அதில் முதல் காலகட்டம் கி.பி.12-ஆம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியிலும், இரண்டாவது காலகட்டம் கி.பி.1100-ஆம் ஆண்டு முதல் 1500-ஆம் ஆண்டு வரையும், மூன்றாவது காலகட்டம் 1917-ஆம் ஆண்டு வரையும், நான்காவது காலகட்டம் 1917க்குப் பின்னும், உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1917-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் விதிமுறைகளில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரும்பொழுது, தலை மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் தளர்வு படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யத மதம், ஜொராஸ்டிரிய மதம், இஸ்லாம், சீக்கிய மதம் போன்ற பல மதங்கள் வழிபாட்டிற்குச் செல்லும்போது, தலையைத் துணியால் மூடிக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பொருள், இறைவன் சந்நிதியில் அடக்கமும், பணிவும் அவசியம் என்பதை வலியுறுத்துவதாகும் என்று ஒரு கருத்து உண்டு. எனவே, பெரும்பாலும் ஒருவரின் நடத்தை மற்றும் தோற்றத்தில் காணப்படும் ஒழுங்கை அடிப்படையாக வைத்து இச்சொல் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான், 1867-இல் தொடங்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணிகளுக்கான நவநாகரிகப் பத்திரிக்கையான "ஹார்பர்ஸ் பஜார்' என்ற பத்திரிக்கை ஒரு காலத்தில் பெண்களின் வயது கூடக்கூட, அவர்கள் அணியும் கவுனின் நீளமும் கூடவேண்டும் என்பதை ஒரு சித்திரமாக வரைந்து காட்டியது. இத்தகைய தகவல்களோடு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மாடஸ்டி' என்ற ஆங்கிலச்சொல் அடக்கம், நிதானம் என்ற நல்ல பண்புகளைக் குறிக்கிறது என்றும், அச்சொல் மாடஸ்ட், மாடரேட் என்பவற்றிலிருந்து வந்ததாகவும் கருதலாம் என்றும் கூறியுள்ளார். தெ.முருகசாமி, "நடைத்தூய்மை' என்ற இணைச் சொல்லைப் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில் தன்னுடைய தகுதிகள், சாதனைகள் பற்றிய பணிவான அல்லது அடக்கமான மதிப்பீடுகளைக் கொள்ளுதல் என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், சேம்பர்ஸ் அகரமுதலியில் தூய்மையுள்ள, கற்புள்ள என்னும் பொருள்கள் உள்ளதாகவும், பெண்கள் குறித்துப் பயன்படுத்தப்படும்போது, "கற்பு' என்ற பொருளிலும், இருபாலருக்கும் பயன்படுத்தப்படும்போது, அடக்கம், எளிமை, பணிவு என்னும் பொருள்களைத் தரலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், "அடக்கம்' என்றும், வே. குழந்தைசாமி "அடக்கமுடைமை' என்றும் கூறியுள்ளனர். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ்ச்சொல் அகராதியில் நாணம், தன்னடக்கம் என்ற பொருள்கள் தரப்பட்டிருப்பதாகவும், வள்ளுவப் பெருந்தகை இருவகைப் பொருள்களில் "நாண்' என்ற சொல்லைக் கையாள்வதால், "நாணம்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், மாடஸ்டி என்ற சொல்லைப் பெரும்பாலும் மகளிரோடு தொடர்புபடுத்தியே கூறமுடியும் என்றும், அதனால் பெண்மை, அடக்கம், தன்னடக்கம், பணிவு, நாணம். தனித்தன்மை என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். புலவர் சத்தியசீலன், "ஒழுக்கத்தின் தன்மையே பணிவு' என்ற கிரேக்க அறிஞரின் கூற்றை அடிப்படையாக வைத்தும், வள்ளுவரின் "பணிவுடையன் இன்சொலன்' என்ற குறளை ஒத்தும், மாடஸ்டி என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் "பணிவு' என்கிறார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணிமன்ற அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் இச்சொல்லுக்கு தன்னடக்கம், நாணம், எளிமை என்ற பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், குறள்வழி நோக்கின் "ஐந்தடக்கல்' என்ற தொடரும் பொருந்தி வரலாம் என்கிறார்.

முனைவர் அ.சிதம்பரநாத செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பித்த, ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு நாணம், தன்னடக்கம், பணிவு நயம் என்ற பொருள்களோடு, பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தை சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில் (ஸ்கார்ஃப் ஆக இருக்கலாம்) என்ற பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, மாடஸ்டி என்ற சொல் ஒருவரது ஆடை, தோற்றம், நடத்தை, இப்படிப் பல பொருள்களில் விரிவது தெரிகிறது. இதனடிப்படையில் நோக்கும்போது, இச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒரு மேன்மையான நடத்தையைக் குறிக்க வேண்டும், அதே சமயம் கண்ணியமான ஆடை அலங்காரத்தையும் குறிக்க வேண்டும். இது இருபாலருக்கும் பொருந்தும் என்பதையே வரலாறு காட்டுகிறது. ஆகவே, இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் "கண்ணியத் தோற்றம்'.

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "கண்ணியத் தோற்றம்'.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 20, 2013 10:10 pm

இருபத்து மூன்று)
தி.அன்பழகன், தம் கூட்டத்தாருக்கு மட்டுமே பொருள் விளங்கும் அடையாளச் சொல் தமிழ் இலக்கணத்தில் "குழுஉக்குறி' எனப்படும் என்றும், இதன் அடிப்படையில், "குறிக்குழுக்கூடல்' (சந்திப்பு) என்று கூறலாம் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், காலமும், பொழுதும் கனியும் வரை காத்திருப்பதும்; இடம், பொருள், காலம் அறிந்து சந்திப்புக்கள் நிகழ்வதும்; குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பல அரசு மற்றும் அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவதும் திட்டமிட்ட சந்திப்பு என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதால், அதையே சரியான இணைச்சொல்லாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ட்ரிஸ்ட் என்ற சொல்லை இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தலாம் என்றும், இச்சொல்லுக்கு நட்புறவு, பரீட்சயம், அனுபவம், நெருக்கம், பழக்கம், சந்திப்பு, உறவாடல், உரையாடல் முதலிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, ஜவஹர்லால் நேரு, இச்சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து, இச்சொல் புதுமையும், பொலிவும் பெற்றது என்றும், ஸ்காட்டிஷ் சொல்லான (பதஐநபஉ) என்ற சொல்லிலிருந்து இச்சொல் தோற்றமெடுத்தது என்றும், இச்சொல்லின் பொருளை இது அடித்தளமாகக் கொண்டது என்றும், தொடக்கத்தில் வேடுவர்கள் சந்திப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இச்சொல், பின்னர் காலப்போக்கில் காதலர்கள் தாங்கள் சந்திப்பதற்காக முன்னரே ஏற்பாடு செய்துகொண்ட இடம், நேரம் இவற்றைக் குறிப்பதாக அமைந்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் முன்னரே குறித்தபடி நடக்கும் சந்திப்பு இச்சொல்லால் அறியப்படும் என்றும், இத்தகைய சந்திப்புக்கான ஒப்பந்தம், சந்திப்பு, சந்திப்பிடம் ஆகியவைகளையும் இச்சொல்லின் பொருளாகக் கொள்ளலாம் என்றும் எழுதியுள்ளார். மேலும், தேச விடுதலையை ஒட்டி நேரு ஆற்றிய சொற்பொழிவின் காரணமாக இச்சொல் உலகப்புகழ் பெற்றது என்பதால், மேற்கூறிய வழக்கமான பொருள்களைத் தாண்டி, நாட்டு மக்களின் வறுமை, படிப்பின்மை, வேலையின்மை போன்ற சவால்களைச் சந்திப்பது முதலிய பொருள்களில் பயன்படுத்தப்படுவதால், "ட்ரிஸ்ட்' என்ற சொல்லில் உட்பொதிந்துள்ள ஒளிவுமறைவுத் தன்மையை நீக்கி ஓர் உத்வேகமும், தன்மையும் உள்ள சொல்லாக இதை நேரு மாற்றியதைக் கருத்தில் கொண்டு, "சவால்களுடன் சலியாச் சந்திப்பு' என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். இதைத் தவிர, முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பு ஒப்பம், காதலர் முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பிடம் முதலிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாசிரியர் சிவ.எம்கோ, "அமர்த்தப்பட்ட நிகழ்வு' (அய் ஹல்ல்ர்ண்ய்ற்ங்க் ம்ங்ங்ற்ண்ய்ஞ்), "மதிவுடம்படுத்தல்' (ஙங்ங்ற்ண்ய்ஞ் க்ஷங்ற்ஜ்ங்ங்ய் ப்ர்ஸ்ங்ழ்ள்) என்னும் சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், திட்டமிட்ட சந்திப்பு, சந்திக்கும் நேரம், சந்திக்கும் இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார். தெ.முருகசாமி, "திட்டமிட்டுச் செய்தல்' என்றும், ச.மு.விமலானந்தன் பணிவு அல்லது அடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, இச் சொல்லுக்கு காதலர்களின் ரகசியமான சந்திப்பு என்ற பொருளைக் கொடுக்கிறது. அதைப்போல், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி காதலர்கள் சந்திப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம் ஆகிய பொருள்களைத் தருகிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியாரால், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக வெளியிடப்பட்ட ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், "இடந் தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, குறியிடந் தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறியீடு, குறியிடஞ் சந்திக்க உறுதிகொடு' ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கான பொருள் குறித்த இடம், நேரம், சந்திப்பு ஆகிய முப்பொருள்களையும் அடக்கியதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக அது அமையவில்லை. என்.ஆர்.ஸத்யமூர்த்தி குறிப்பிட்டதைப் போல், இச்சொல்லின் வீச்சு, நேருவின் பேச்சுக்குப்பின் வீரியமுள்ளதாக மாறிப் போனாலும், அதன் அடிப்படைப் பொருள் சந்திப்பு என்பதே. காதல், போர், சோதனைகள், சவால்கள், நெருக்கடியான சூழ்நிலைகள் இவையனைத்தையும் நேர்கொள்ளும் செயல்பாடும் சந்திப்பே ஆகும்.

எனவே, ட்ரிஸ்ட் என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் முன்குறி சந்திப்பு.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக