ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


இறுதி அஞ்சலி

+6
றினா
ச. சந்திரசேகரன்
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
பூவன்
T.N.Balasubramanian
10 posters

இறுதி அஞ்சலி Empty இறுதி அஞ்சலி

Post by T.N.Balasubramanian Wed Nov 14, 2012 9:57 amஈகரை இனியவர்களே , அக்கறை கொண்ட அன்பர்களே, உற்றார் உறவினர்கள் கூடி தீபாவளி திருநாளை இன்பமாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்
.இன்பமாக இருக்கும் இனிய நேரத்தில் இறுக்கும் செய்திகள் தரவேண்டாமென கருதி ,எந்த என்னுடைய நண்பர் ராகவனுக்காக நீங்கள் யாவரும் பிரார்த்தனை செய்தீர்களோ,அவர் 11/11/12 அன்று ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை 11/11/12 உங்களுடன் பகிரவில்லை.
13/11/12 அன்று கொண்டாடும் தீபாவளி இன்பத்தில் துன்பத்தை இணைக்க விரும்பவில்லை.
10/11/12 மாலை ஒரு மணி அவகாசம் அவருடன் இருந்து பழைய நினைவுகளை மீட்டு ,மகிழ்ந்த, இனிமேல் மறக்கவே முடியாத நேரம் . அன்புடன் அவன் தருவித்த காபியும் , அனுபவித்து நான் அருந்தியதை அவன் ரசித்ததை ,நான் ரசித்ததும் இனி மலரும் நினைவுகளில் மாத்திரமே மலரும்.
புற்று , நிச்சய கொல்லி என நாம் அறிவோம். பல வருடங்கள் பலர் கஷ்டப்படுவதை கண்டுள்ளேன். 5 மாதங்களாக வலியை பொறுத்துக்கொண்டு இன்முகம் காட்டிய அவன் கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டது மிகவும் வருத்ததை தந்தது.

நண்பனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் என் சார்பாகவும் நண்பன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அவனுக்கான இறுதி அஞ்சலி இதோ.

ஐந்தாறு வருட பழக்கமில்லை
ஐந்தும் ஆறும் "மாற்றான்" இங்கே
1956 இல் ஆரம்பமான அறிமுகம்
---56 வருடம் தொடர்ந்தது
நட்பெனும் இன்முகம்.

இல்லையடா இன்று நீ !
"இல்லை " என்பதை
இல்லையாக்க முடியாதே
இம்மையில் இவ்விஷயத்தில்.

இருக்கும் வரைக்கும்
இருக்கும் நினைவலைகள்
நான் இருக்கும் வரைக்கும்
உன் நினைவுகள் இருக்கும்.


நான் செய்ததை நீ செய்ததும்
நீ செய்ததை நான் செய்ததும்
.பகிர்ந்து கொள்வதில்
பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.
ஒரு முறை நான் செலவிட
மறுமுறை நீ செலவிடுவாய்.
ஒரு முறை நான் வர
மறுமுறை நீ வருவாய்.

Bye சொல்ல வந்துளேனடா ,
ஆனால் ,
இம்முறை ,
உன்னால்
-----------------
---------------
ரமணியன்
(11/11/12 )
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by பூவன் Wed Nov 14, 2012 10:03 am

அய்யா வருத்தமிக்க செய்தி ,என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் , அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 14, 2012 10:26 am

நீண்ட நாட்களுக்குப்பின் ஈகரையில் வந்துள்ளேன். ஐயா நலமா? தங்கள் நண்பரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. தங்களின் கவிதை வழி நட்பின் ஆழத்தை புரிந்துகொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by Guest Wed Nov 14, 2012 10:29 am

அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by ராஜா Wed Nov 14, 2012 11:36 am

அழுகை 56 வருட பழக்கத்தை வெறும் இரண்டு வரிகளில் ஆறுதல் சொல்லிட முடியாது ஐயா. இது போன்ற நட்பு இப்போதைய காலத்தில் சாத்தியமாகுமா என்றால் இயலாது என்றே நினைக்கிறேன்.
ராகவன் அவர்களின் ஆத்மா இறைவனை சேர மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by ச. சந்திரசேகரன் Wed Nov 14, 2012 7:52 pm

அவரின் ஆன்மா ஆண்டவன் பாதம் சேர அனைவரும் பிரார்த்திப்போம்.
ச. சந்திரசேகரன் குடும்பத்தார்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by றினா Wed Nov 14, 2012 8:14 pm

மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
அத்துடன் அவர் பிரிவால் துயருறும் அவருடையை குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதி அஞ்சலி 1386-0904-3008-1257
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by ரா.ரா3275 Wed Nov 14, 2012 11:06 pm

அய்யா...உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்...
உங்களுக்கு எங்கள் ஆறுதலும் ஆழ்ந்த வருத்தமும் பகிர்வுடன் பரிவுடன்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:49 pm

மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதிப்பீடுகள் : 1121

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by kirikasan Thu Nov 15, 2012 2:55 pm

என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு இந்தப் பாமலர்களை தூவுகிறேன்

தெளிவிலா வாழ்நிலை தெரியாத உண்மைகள்
திசையற்ற வாழ்வு கொண்டு
அழிவெலாம் இன்பமும் அறியாமை துன்பமும்
அகத்திடை தந்த இறைவன்
மொழியெலாம் பிறிதாக்கி முரண்படு அழியென்று
முன்விதி போட்டும் இங்கே
கழிஎன்று பூமியில் காலத்தை ஓட்டிடக் கடமைக்கு
அனுப்பி வைத்தான்

தொழிலெலாம் கயமையும் துணையென்று பிணியையும்
துயரத்தைப் பரிசுதந்து
பழியெலாம் உனதென்று பாசத்தை இடை வைத்துப்
பரம்பொருள் இங்குவிட்டான்
குழியெல்லாம் பாதைகள் கொடுமைகள் தடைகல்லாய்
குவலயம் இருந்தபோது
ஒளியெலாம் கொண்டவன் இறையடி பாதமும்
இருந்திடும் அமைதிவேண்டி

விழியெல்லாம் ஒழுகிட விட்டெமைப் பிரிந்தவர்
விரைந்துசென் றிடினுமங்கு
பொழிவது சுகமெனும் புதிதான பிறவியாம்
போலுமோர் உணர்வுகாணின்
எழிலுறு உவகையும் இன்பமும் காணுவர்
என்பது திண்ணமென்று
துளியல்ல இன்பமும் தொகைபெற வாழ்த்தியே
துயர்நீக்கி அனுப்பிவைப்போம்

துயருடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by T.N.Balasubramanian Fri Nov 16, 2012 8:04 am

பங்கு கொண்டு ஆறுதல் கூறிய
பூவன்
கா.ந.க
புரட்சி
ராஜா
சந்திரசேகரன்
றீனா
ராரா 3275
அச்சலா
கிரிகாசன்
அனைவருக்கும் எந்தன் நன்றி.
நண்பரின் உறவுகளுக்கு தெரியபடுத்துகிறேன்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by T.N.Balasubramanian Fri Nov 16, 2012 8:09 am

kirikasan wrote:என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு இந்தப் பாமலர்களை தூவுகிறேன்

தெளிவிலா வாழ்நிலை தெரியாத உண்மைகள்
திசையற்ற வாழ்வு கொண்டு
அழிவெலாம் இன்பமும் அறியாமை துன்பமும்
அகத்திடை தந்த இறைவன்
மொழியெலாம் பிறிதாக்கி முரண்படு அழியென்று
முன்விதி போட்டும் இங்கே
கழிஎன்று பூமியில் காலத்தை ஓட்டிடக் கடமைக்கு
அனுப்பி வைத்தான்

தொழிலெலாம் கயமையும் துணையென்று பிணியையும்
துயரத்தைப் பரிசுதந்து
பழியெலாம் உனதென்று பாசத்தை இடை வைத்துப்
பரம்பொருள் இங்குவிட்டான்
குழியெல்லாம் பாதைகள் கொடுமைகள் தடைகல்லாய்
குவலயம் இருந்தபோது
ஒளியெலாம் கொண்டவன் இறையடி பாதமும்
இருந்திடும் அமைதிவேண்டி

விழியெல்லாம் ஒழுகிட விட்டெமைப் பிரிந்தவர்
விரைந்துசென் றிடினுமங்கு
பொழிவது சுகமெனும் புதிதான பிறவியாம்
போலுமோர் உணர்வுகாணின்
எழிலுறு உவகையும் இன்பமும் காணுவர்
என்பது திண்ணமென்று
துளியல்ல இன்பமும் தொகைபெற வாழ்த்தியே
துயர்நீக்கி அனுப்பிவைப்போம்

துயருடன் கிரிகாசன்

நன்றி நன்றி கிரிகாசன்,
நெகிழ வைத்த பாமாலை.
முதல் பாரா, தத்துவ மாலை.
இறுக்கத்தை தளர்த்தியது.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by T.N.Balasubramanian Fri Nov 16, 2012 8:14 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நீண்ட நாட்களுக்குப்பின் ஈகரையில் வந்துள்ளேன். ஐயா நலமா? தங்கள் நண்பரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. தங்களின் கவிதை வழி நட்பின் ஆழத்தை புரிந்துகொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.

நன்றி கா.ந .க. சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. கவிதை பரிசளிப்பில் கலந்து கொண்டது.
நலமாக உள்ளேன். தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். தங்கள் வலைப்பூ மும்முரமாக வைத்துள்ளதோ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 16, 2012 8:15 am

எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by T.N.Balasubramanian Tue Nov 27, 2012 7:21 pm

நண்பரின் செல்வங்கள் எழுதிய , நன்றி மடலை இணைத்துள்ளேன். அவர்கள் ஈகரையின் உறுப்பினர் இல்லா காரணத்தினால், நேரிடையாக நன்றி கூற முடியா நிலை. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இணைத்துள்ளேன். என் சார்பாகவும் மீண்டும் நன்றிகள்

ரமணியன்

இணைப்பு :
" எங்கள் தந்தைக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
இந்த கூட்டு பிரார்த்தனையால் தானோ , எங்கள் தந்தையின் முடிவு குறைவான வலியோடும் மற்றும் அவர் சுற்றம் சூழ ஏற்பட்டது .
இவ்வாறு தன் குடும்பத்தார் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்பது அவருடைய ஆசையும் கூட .
எங்கள் தந்தையின் மறைவிற்க்கு அஞ்சலி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
வாழ்க வளமுடன்
கீதா ஸ்ரீகாந்த் , ஸ்ரீதர் ராகவன் , ஹேமா கோகுல் "
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

இறுதி அஞ்சலி Empty Re: இறுதி அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை