புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_m10தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 11:50 pm



தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், குறிப்பாக - பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்.

கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!

இந்த தீபாவளி சூப்பர் டூப்பர் தீபாவளியாக, ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக கொண்டாடுவதற்க்கு உங்களுக்கு சில டிப்ஸ்:

1. முதல்லே நல்ல தரமான கடைகளிலே பட்டாசுகளை வாங்குங்கள். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள், நீங்கள் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் தீபாவளி பாக்கெட் மணிக்கு வேட்டு வைச்சிரும் அல்லது, எதிர்பாராத நேரத்தில் வெடித்து உங்க மூடை டாமேஜ் பண்ணிடும்.

2. ரொம்ப சப்தம் எழுப்பும் வெடிகளை அவாய்ட் பண்ணிடுங்களேன். அது உங்கள் காதையும் டாமேஜ் பண்ணிடும். பாவம் உங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற தாத்தா, பாட்டி, உடம்பு சுகமில்லாதவங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணிடும். அது மட்டுமில்லே, வாயில்லா ஜீவன்களான நாய், மாடு, பறவைகள் எல்லாம் ரொம்ப பயந்து போய்விடும். குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் வெடிச் சத்தம் கேட்டு பாவம் தீபாவளி முழுக்க ரொம்ப பயந்து அழுதுகிட்டே இருப்பாங்க.

3. மிக அதிகமான சப்தத்தையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால், அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும். செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

4. புது வகை பட்டாசு வாங்கியிருந்தால், அதோட அட்டைப்பெட்டியிலே எப்படி பத்த வைக்கணும், என்னல்லாம் செய்யக் கூடாதுன்னு போட்டிருப்பாங்க, அதை முதலில் படிச்சுட்டு அதன்படி கொளுத்துங்க. ஏன்னா ஒவ்வொரு பட்டாசையும் பயன்படுத்தும் முறை வேற வேறயாக இருக்கலாம்.அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.

5. ஓ.கே. பட்டாசு எங்கே வைத்து வெடிக்கப் போறீங்க? தொழிற்சாலைகள், குடிசைப் பகுதிகள், பெட்ரோல் பங்க்குகள், ஹாஸ்பிட்டல்கள் உள்ள இடங்கள், மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது தயாரிக்கப்படும் இடங்களிலெல்லாம் பட்டாசு வெடிக்கக்கூடாது. அதே மாதிரி வாகனங்கள் வரும் சாலைகளில், அல்லது வாகனங்கள் வரும் போதும், போகும் போதும் அங்கே பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. அதனாலே வீட்டு வாசலிலே அல்லது விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே நல்லது.

6. அப்புறம் ஒரு பக்கெட்லே தண்ணீர் எடுத்து எங்கே பட்டாசு கொளுத்தி விளையாடப் போறீங்களோ, அங்கே பக்கத்திலே வைச்சுக்குங்கோ. அந்த தண்ணீர் நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல; ஒருவேளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட.

7. ரொம்ப லூசான டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு பட்டாசு கொளுத்த வேண்டாம். நைலான்,பட்டுத்துணிகளால் நெய்த ஆடைகள், காற்றில் பறக்கும் ஆடைகள், எல்லாம் வேண்டாம். சல்வார் போட்டுக்கிட்டு இருக்கிற அக்காக்களை எல்லாம் சல்வார் துப்பாட்டாவை இறுக்கிக் கட்டிக்கிட்டு வரச் சொல்லுங்கோ, சாரீ கட்டியிருக்கிற அம்மா, ஆண்ட்டியெல்லாம் முந்தானையை நல்லா இறுக்கமாக சொருகிக் கிட்டு வரச் சொல்லுங்க.பட்டாசு கொளுத்தும்போது காற்றடித்தால், அல்லது மத்தாப்பு தெறித்து லூசாக இருக்கும் ஆடைகளில் தீப்பிடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

8. கண்டிப்பாக காலில் செருப்பு அல்லது ஷு போட்டுக்குங்கோ. எந்த வெடியையும் கையில் வைத்துக் கொளுத்தக்கூடாது.ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே. சில நேரங்களில் பாட்டிலும் சேர்ந்து வெடித்து விடலாம்.

9. ஒரேநேரத்தில் ஒரே ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். ஒரு த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது ஒரே டல் தீபாவளியாக ஆக்கிவிடும்.

10. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், அதை வடிவேலு மாமா ஸ்டைலிலே அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம். புஸ்வானம் எரியவில்லை என்றால், கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

11. நீங்கள் ரொம்ப்ப்ப தைரியசாலிகள்தான். ஆனாலும் நீங்க பட்டாசு வெடிக்கும் போது வீட்டிலே பெரியவங்க யாரையாவது உங்க கூட வந்து சூப்பர்வைஸ் பண்ணச்சொல்லுங்க.

12. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும்.

13. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி 'ஸ்டாக்' வைப்பது ஆபத்தானது. தீபாவளி பட்டாசுகளில் எஞ்சியவற்றை சிலர் கார்த்திகைக்காக வைத்திருப்பது வழக்கம். இந்த பழக்கத்தை கைவிடுங்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில், அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில், குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

14. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் உள்ள தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியிலே போட்டுவிடுங்கள். இப்படிச் செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

15. பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றுக்குரிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசை மட்டுமே பற்றவைக்க வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.

16. ஒரு பட்டாசை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது இல்லை.

17. நீங்கள் பட்டாசை பற்றவைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.

18. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது. வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது. ஏனெனில், விபத்து ஏற்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

19. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

20. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்களைத் தவிர்ப்பது, உங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. டாஸ்மாக் கடைகள் அருகே பட்டாசு வெடித்து விளையாடாதீர்கள். மிகப் பயங்கரமான விபத்துகள் நேரிட வாய்ப்புகள் உள்ளது.




தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 11:50 pm

முதல் உதவி... செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

1. எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிக்கும்போது நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர், ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச், அழுத்தாமல் சுற்றி உடனடியாக காயம்பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.

4. நீங்க போட்டிருக்கிற டிரஸ்லே தீப்பிடித்தால் ஓடாதீங்க, தரையில் உருண்டு தீயை அணைக்க வேண்டும்.




தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 11:51 pm



தீபாவளி கண் பாதுகாப்பு...

பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையயும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.

1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது.ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிற்ந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை. உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

2. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கண்களைக் கசக்குவதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.

3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தாப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

4. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தையை மருத்துவமனைகு அழைத்துச் செல்வதற்கு முன்பு வலி நிவாரணியாக எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக் குழாய்களை மென்மையானதாக்கி விடும். எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே, ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.

5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்துவார்கள். இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல; மன நலம் சார்ந்த பிரச்னையும் கூட. ஆம், பாதுகாப்பான தீபாவளியே. அனைவரும் விரும்புவது! பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான, ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

(கட்டுரையாசிரியர் - மருத்துவ சமூகவியலாளர் - நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை, சங்கர நேத்ராலயா, சென்னை - 600006.)



தீபாவளி - பகிரப்பட வேண்டிய பாதுகாப்புக்குக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 7:47 am

அவசியமான பதிவு அண்ணா இந்த தீபாவளி பாதுகாப்பாக அமையட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக