புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
31 Posts - 53%
heezulia
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
1 Post - 2%
jairam
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
1 Post - 2%
சிவா
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
13 Posts - 4%
prajai
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
3 Posts - 1%
jairam
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_m10தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி வழிபாடு செய்யும் முறை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 10:34 pm

அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் - இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி... அஷ்டலட்சுமியே போற்றி... குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நாணய வழிபாடு: தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார். சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்!

நரக சதுர்த்தசி: மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரி நாளாக எடுத்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.

அருளும் பொருளும் அள்ளித் தரும் அன்னபூர்ணா ஸ்தோத்திரம்:
அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.

நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ


பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே... அன்னபூரணியே... பிச்சையைக் கொடு.

ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து...

அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கரப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷம்தேஹி ச பார்வதி...


அதாவது... அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே... ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு என்று அன்னையைத் தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி சர்வ மங்கலங்களும் நம் வீட்டில் உண்டாகும்.

கிருஷ்ணரை வழிபடுவோம்: தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். பெருமாளுக்கு முராரி என்ற திருநாமமும் ஒரு அசுரனின் பெயரால் ஏற்பட்டது. நரகாசுரனைக் கொல்ல கிருஷ்ணர் சென்ற போது, நரகாசுரனின் தளபதியான முரன் போருக்கு வந்தான். ஐந்து தலை கொண்ட அசுரன் இவன். அவனை அழிக்க கிருஷ்ணர் சக்ராயுதத்தை ஏவினார். சக்கரம் ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தது. முரனைக் கொன்றதால் பெருமாளுக்கு முராரி என்ற பெயர் ஏற்பட்டது.

வளம் தரும் குபேரலட்சுமி: செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி.தீபாவளியன்றோ, அதற்கு முந்தியநாளோ குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். தீபாவளி திருநாள் நீங்கலாக வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிரஓரை நேரம் மற்றும் திரிதியை திதிகளில்,குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்தநன்மை தரும். வேதமந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் ஏழாம்பாடலில், லட்சுமி குபேரனோடு வீற்றிருந்து செல்வவளம் அருள்வது பற்றி கூறுவதைப் படிக்கலாம்.

அம்மையப்பனின் அருள் கிடைக்கும்: சிவபக்தரான பிருங்கி என்ற முனிவர், சக்தியாகிய தன்னை நீக்கி சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றதால், மனம் கலங்கினாள் உமையவள். சிவன் வேறு சக்தி வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பியவள், பூலோகத்தில் கவுதம மகரிஷி ஆசிரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கவுதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கவுதம மகரிஷி. உமையவளும் வெகு சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி தந்து, தனது திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். உமாதேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கவுரிதேவியாகிய உமையம்மை போற்றிய விரதம் ஆதலால் கேதார கவுரிவிரதம் என்றும் அழைப்பர். இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதை 5 வகையாக அனுஷ்டிப்பார்கள்.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது உத்தமம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமி துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் ஆகும். அதேபோன்று ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பது உண்டு. இந்த விரதத்தை சுமங்கலிகளே கடைப்பிடிக்க வேண்டும். முற்காலத்தில், நீர்நிலைகளின் கரைகளில் - ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜிப்பார்கள். விரத தினத்தன்று விநாயகரை வழிபட்டு, ஆதி ரிஷிகளான பிருங்கி, கவுதம முனிவர்களையும் வணங்கி சிவபூஜையை துவங்குவர். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்தும், 21 என்ற எண்ணிக்கையில் பட்சணங்கள் படைத்தும் வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர, தாம்பத்தியம் சிறக்க, மாங்கல்ய பலம் பெருக, நினைத்தது நினைத்தபடி நிறைவேற வரம் அருளும் வல்லமை இந்த விரத பூஜைக்கு உண்டு.



தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 13, 2012 11:21 am

நன்றி தல பகிர்வுக்கு மகிழ்ச்சி




தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 10:31 pm

விவரமான விளக்கத்திற்கு நன்றி தல

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 14, 2012 11:50 pm

நன்றி தல பகிர்வுக்கு .... :வணக்கம்:



தீபாவளி வழிபாடு செய்யும் முறை! Paard105xzதீபாவளி வழிபாடு செய்யும் முறை! Paard105xzதீபாவளி வழிபாடு செய்யும் முறை! Paard105xzதீபாவளி வழிபாடு செய்யும் முறை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக