புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுந்தர காண்டம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
| |||||||
| |||||||
இந்நிலையில், புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தாள். இந்த பூமியில் பிறக்கும் எல்லோரும் அழகாக இருப்பதில்லை. குறிப்பாக கருத்த பெண்களை மாப்பிள்ளைகள் ஒதுக்குவதும், கருத்த ஆண்களை பெண்கள் ஒதுக்குவதுமான சூழ்நிலையால் பலரது வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது. ஒருவேளை நிர்ப்பந்தம் காரணமாக இவர்கள் வாழ்வில் இணைந்திருந்தாலும் கூட, எதையோ இழந்தது போல துக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்படி ஒரு பழக்கம் கூடவே கூடாது. அழகு, நிறம் ஆகியவற்றை விட மனதை உற்றுப் பார்க்க வேண்டும். மகரிஷியின் தோற்றத்தைப் பார்த்து சிரித்து கேலி செய்த புஞ்ஜிகஸ்தலைக்கு அவருக்குள் உறைந்து கிடந்த தவவலிமை புரியாமல் போய்விட்டது. ""ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டு விட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். ரிஷியின் சாபம் எப்படி மாறும்? மேலும், எல்லாமே காரண காரியத்துடனேயே அல்லவா நடக்கிறது. அவள் சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீரைக் கண்டு கலங்கிய ரிஷி, கோபம் காரணமாக அவள் முகத்தை மாற்றி விட்டோமே என வருந்தி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற விதிவிலக்கையும் அளித்தார். அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு "அஞ்ஜனை' என்ற பெயர் அமைந்தது. "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "பேரழகு'. ஒருநாள், தன் வடிவை மறைத்து, அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். ""இப்படி ஒரு சுந்தரியா?'' அவன் அவளை நெருங்கி ஆலிங்கனம் செய்தான். யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த அந்தப்பெண், எந்த ஒரு உருவத்தையும் காண முடியாமல், ""ஒரு ஸ்திரீயிடம் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வது யார்?'' எனக் கதறினாள். அப்போது வாயு பகவான் அவளுக்கு தரிசனம் தந்தார்.""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் ஆலிங்கனம் செய்யவில்லை. உன் அழகில் மெய்மறந்து மனதால் மட்டுமே உன்னை ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. அன்பு ததும்பும் முகம் கொண்டவளே! நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார். அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுபுத்திரன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறக்கத் துவங்கி விட்டான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை. அவன் வேகமாக வான மண்டலத்தை சுற்றி வந்தான். அப்போது சூரியன் வெளிப்பட்டான். சிவந்த பழம் போல் அது காட்சியளித்தது. வானரமாயிற்றே! பழமென்றால் விட்டு வைக்குமா? அதிலும், சாதாரண வானரமே எண்பதடி பாயும். இவன் வாயு செல்வன்! கேட்கவா வேண்டும். சூரியனை நோக்கிப் பறந்தான். அன்று கிரகணம். ராகு என்னும் நாகம் சூரியனைக் கவ்விப்பிடிக்க எத்தனித்து அவனை விரட்டிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனைக் கவ்விப்பிடிக்கவும், மாருதி அங்கே வரவும் சரியாக இருந்தது. ராகுவை ஓட ஓட விரட்டி யடித்தான். குரங்குகளுக்கு பிறர் கையிலுள்ளதை பிடுங்குவது ஜென்ம சுபாவம். விடுவானா நம் சின்ன மாருதி? ராகுவை விரட்டிக்கொண்டே இருந்தான்.""இந்திரா! தேவேந்திரா! என்னைக் காப்பாற்று, இந்தக் குரங்கு என்னை விரட்டுகிறது,'' எனக் கதறிக் கொண்டே இந்திரலோகத் திற்குள் புகுந்தான் ராகு. அங்கே இந்திராணியுடன் ஜெகஜோதியாக வீற்றிருந்த தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தை எடுத்து மாருதியின் மீது வீசினான். அது சக்தி வாய்ந்த ஆயுதம். மாருதி பச்சைப் பிள்ளையல்லவா! தாங்குவானா? அந்த ஆயுதம் அவன் மேல் பட்டு, கதறியபடியே கீழே விழுந்தான். ஒரு மலை முகட்டில் அவன் விழுந்த போது, தோள்பட்டை எலும்பு முறிந்து விட்டது. குழந்தை கதறுகின்ற சப்தம் கேட்டு அஞ்ஜனை ஓடோடி வந்தாள். ""ஏ தேவேந்திரா! இது உனக்கே அடுக்குமா? உன் துன்புறுத்தலுக்கு என் பச்சைக்குழந்தை தானா கிடைத்தான்? பார்...பார்...ஒரு வழி செய்கிறேன்,'' என்றவள் வாயு பகவானைப் பிரார்த்தித்தாள். ""நடந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளை அடிபட்டுக் கிடக்கிறான். நீங்கள் அமைதியாக நிற்கிறீர்களே!'' என்றாள். வாயுவுக்கும் கடும் கோபம். மகனை அன்போடு அணைத்தான். அந்த மலையில் இருந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். வாயு உடலுக்குள் நின்றாலும் கஷ்டம்... வெளியில் நின்றாலும் கஷ்டம்...உலக ஜீவன்களெல்லாம் திணறின. தேவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். தேவேந்திரன் உட்பட...!
|
| ||
அந்தளவுக்கு அதில் வாழ்க்கைக்கு ஒளியூட்டும், நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் அடங்கிக் கிடக்கின்றன. ஆஞ்சநேயர் கிளம்பிவிட்டார். அப்போது, அவரது மனதில் ஒரு எண்ணம். "சுக்ரீவன் கொடுத்த வேலையைச் செய்தாயிற்று. சீதையைக் கண்டு பிடித்தாயிற்று. அடையாளத்துக்கு சூடாமணியை வாங்கியாயிற்று. இலங்கையைச் சுற்றிப்பார்த்து நகர அமைப்பைத் தெரிந்தாயிற்று. ஆனால், இந்த ராட்சஷப் பதர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்களே. இவர்களது பலத்தை சோதித்து பார்க்க வேண்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக ராவணனின் இருப்பிடத்தை பார்த்த நான், அவனது பராக்கிரமத்தை அறிந்து போக வேண்டுமே. சரி..அவனுடைய பராக்கிரமத்தை அறிய வேண்டுமானால், அவனுடன் இப்போதே போரிட்டாக வேண்டும். அவன் ஒன்றும் சாதாரணமாக வெளியே வருபவனல்ல. தன் கைத்தடிகளைத் தான் என் மீது ஏவுவான். அவர்கள் என்னுடன் போர் செய்வார்கள். போர் என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி யாருக்கு என்பது உறுதியில்லை என்று பெரியவர்களெல்லாம் சொல்கிறார்கள். அது நிஜமும் கூட. ஒருவேளை அவர்கள் என்னை விட வீரமுள்ளவர்களாக இருந்தால் நான் தோற்றுப்போவேன். பின்னர், இங்கே சீதை இருக்கும் விஷயம் ராமனுக்கு தெரியாமலே போய்விடும். என்ன செய்யலாம்?'' என்று தீவிரமாக யோசித்தார். முடிவில், "போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பலசாலிக்கு எப்போதுமே வெற்றி உறுதி என்பதும் போர் சாஸ்திரம் சொல்வது தானே! நான் ஒப்பற்ற வீரமுள்ளவன் என்று நம்புகிறேன். அதனால் எனக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே, இந்த ராட்சஷர்களுடன் போரிடுவதில் தப்பே இல்லை' என்று முடிவெடுத்தார். ஆஞ்சநேயர் இப்படி எண்ணியதை, ஆணவம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நம்பிக்கை. ஒரே பாடத்தை பல மாணவர்கள் படிக்கிறார்கள். சிலர் அதைக் கடினமாகக் கருதி திண்டாடி குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள். வேறு சிலர் அதை எளிதாக எடுத்துக் கொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி பெற்றவர் களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆஞ்சநேயர் இதில் இரண்டாவது ரகமாக இருந்தார். "நான் நிச்சயம் ஜெயிப்பேன், மகாராஜா சுக்ரீவனுக்கு பெருமை சேர்ப்பேன்' என்று நம்பினார். இப்போது புரிந்ததா? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். தன்னை நம்புபவன் எதிலும் வெற்றிவாகை சூடுவான். எவ்வளவு பெரிய தத்துவத்தை சுந்தரகாண்டம் நமக்குச் சொல்கிறது பாருங்களேன்! இப்படி அணுஅணுவாக ஆய்வு செய்து சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களே வெற்றி வாகை சூட முடியும். "சரி..வம்புக்குத்தான் போகக்கூடாது. ஆனால், வந்த சண்டையை எப்படி விடுவது? ராவணன் தான் இந்த சண்டைக்கு மூலகர்த்தா. அவன் இப்போது மாளிகையில் இருக்கிறான். அவனது கவனத்தை ஈர்ப்பது எப்படி?' என்று சிந்தித்தார். தன் கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்த அசோகவனத்தைப் பார்த்தார். இதை அழித்து விட வேண்டும். இதை அழித்தால் சீதை இருக்குமிடத்தை யாரோ அழிப்பதாக ராவணனின் கவனத்துக்குச் செல்லும். அவனுடைய ஆட்களை அனுப்புவான். அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். பின்னர் ராவணனே வருவான்,'' என்று சிந்தித்தார். தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தி விட்டார். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல என்பார்களே...அதுபோல், அந்த அழகிய அசோகவனம் களையிழந்து போய்விட்டது. மரங்களைச் சாய்த்து, அங்கிருந்த தடாகக்கரைகளை நொறுக்கி அடையாளமே தெரியாமல் செய்துவிட்டார். சீதாதேவி அமர்ந்திருந்த சிம்சுபா மரத்தின் பக்கம் மட்டும் அவர் செல்லவில்லை. ராட்சஷிகள் இந்த சப்தம் கேட்டு எழுந்தனர். தாங்கள் இருப்பது அசோகவனத்தில் தானா அல்லது வேறு ஊரிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சீதை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, ""யார் இவன்? உனக்குத் தெரிந்தவனா?'' என்று கேட்டார்கள். ""எனக்கு அவனை யாரென்றே தெரியாதே. இது ராட்சஷர்கள் வாழும் நாடு. யாரோ ஒரு சக்திவாய்ந்த ராட்சஷன் தான் இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயமா? பாம்பின் பால் பாம்பறியுமே,'' என்று சொல்லிவிட்டாள். ஒருவருக்கு நன்மை விளைகிறதென்றால் அப்போது பொய் பேசுவதில் தவறில்லை. சாட்சாத் மகாலட்சுமியே பூமிக்கு வந்து விட்டாலும், சில நன்மைகள் கருதி பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்லவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி அவள் சொல்லிவிட்டாள். ராட்சஷிகள் ராவணனிடம் ஓடினார்கள்.""மகாராஜா! நம் அசோகவனத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு வனத்தை பாழ்படுத்தி விட்டது. அது நீர் விரும்பும் சீதையிடம் பேசியதாக நாங்கள் அறிகிறோம். உமக்கு சொந்தமாக உள்ள ஒருத்தியிடம் பிறர் பேச நீர் அனுமதிக்கலாமா? அதை உடனே பிடித்து விசாரிக்க வேண்டும். அது ராமனால் அனுப்பப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம்,'' என்றனர். ராவணனின் கண்கள் சிவந்தன. |
| ||
விஸ்வரூபம் தரித்தார்.எவ்வளவோ பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் நாம் மாருதியின் தரிசனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா! குடிகெடுக்கும் ராட்சஷர்கள் கண்களுக்கு அவர் தெரிகிறார். அதிலும் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். ஏன் தெரியுமா? அவர்களுடைய தலைவன் கெட்டவனே ஆயினும் சிவபக்தன். அந்த சிவனே ராமனுக்கு சேவை செய்ய வானரமாய் அவதரித்துள்ளார். ஒருவன் செய்த பிரார்த்தனையால், அவனது நாட்டிலுள்ள எல்லோருக்கும் இறை தரிசனம் கிடைக்கிறது. ஒருவேளை கலியுகத்தில் இருப்பதால், நம் பிரார்த்தனைக்கு அவர் செவி கொடுக்க மறுக்கிறாரோ என்னவோ? அவர்கள் வீசிய ஆயுதங்களை நொறுக்கித் தள்ளினார். இலங்கையே நடுங்கும்படி சிங்கம் போல் கர்ஜித்தார். அந்த ஓசை கேட்டு பறவைகள் எல்லாம் மயங்கி தரையில் விழுந்து விட்டன. ""அடேய் ராட்சஷப் பதர்களே! ராமன், அவர் தம்பி லட்சுமணன், என் மகாராஜா சுக்ரீவன் ஆகியோருக்கு நிகரான பலசாலிகள் இவ்வுலகில் இல்லை. நான் ராமதூதன். அவரது பக்தன். வாயுவின் புத்திரன். எதிரிகளுக்கு எமன். நீங்கள் என் காலுக்கு தூசு. உங்கள் அரசன் ராவணனைப் போல் ஆயிரம் அசுரர்கள் வந்தாலும் அவர்களைப் பந்தாடி விடுவேன். சீதையைக் கண்டேன். அவளிடம் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இனி, உங்களையெல்லாம் கொன்று இலங்கையை சர்வநாசமாக்கி விட்டு, சுகமாக என் இருப்பிடம் திரும்புவேன்,'' என சவால் விட்டார். நம் ஊரில் ஜெயிப்பது முக்கியமல்ல. பக்கத்து ஊரில் போய் ஜெயிக்க வேண்டும். அப்படி செய்யாமல், நம்மை நம்பர் ஒன்று என சொல்லிக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ, அது போல் இல்லாமல், மாருதி பக்கத்து நாட்டில் போய் சவால் விட்டார். ராட்சஷர்கள் அந்தக் குரல் கேட்டே நடுங்கி விட்டார்கள். மாருதியின் பார்வையில் ஒரு இரும்பு உலக்கை பட்டது. அதை உருவி எடுத்தார். களத்தின் நடுவில் அவர் நிற்க சுற்றிலும் ராட்சஷர்கள் நின்றார்கள். அவர்களை எல்லாம் அந்த உலக்கையை சுழற்றி நாசம் செய்தார். சிலருக்கு பயம் வந்து விட்டது. அவர்கள் ராவணனிடம் ஓடினார்கள். ""நாங்கள் மட்டும் தான் மிச்சம். மற்றவர்களை அந்தக் குரங்கு நாசம் செய்து விட்டது. விண்முட்ட உயர்ந்து நின்ற குரங்கிடம் இருந்து தப்பி வந்ததே பெரிய காரியம்'' என்றார்கள். ராவணன், தன் முதலமைச்சர் பிரஹஸ்தனுடைய புத்திரன் ஜம்புமாலியை அழைத்து, ""நீ போய் அந்த குரங்கைக் கொன்று வா,'' என்றான். இதற்குள் மாருதி, ""அசுரர்களைக் கொன்றால் போதுமா? அசோகவனம் அழிந்தால் போதுமா? அதோ! அங்கே தெரியும் ராவணனின் அரண்மனை மாடத்தை இடித்து தள்ள வேண்டும்,'' என முடிவு செய்தார். அந்த உப்பரிகை நவரத்தினங்களால் ஜொலித்தது. மாருதி அதன் எதிரே ஒளி பொங்க நின்றார். அதைக் காவல் காத்த அசுரர்களை நோக்கி, ""அடேய்! இந்த அரண்மனையை அழிக்க வந்திருக்கிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்,'' என சவால்விட்டார். அசுர காவலர்கள் மாருதியை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள். அந்த பலவான்களில் பலர் "ஓகம்' எனப்படும் பலமுடையவர்கள். நூறு யானை பலம், ஆயிரம் யானை பலம் என்பது போல "ஓகம்' என்பது இதையெல்லாம் விட அதிக எண்ணிக்கையுள்ள யானைகளின் பலமுடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள மாருதி தயாரான போது, ஜம்புமாலி கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வந்து சேர்ந்தான். அவனது கோரைப் பற்களைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். அவ்வளவு பெரியது. அந்த பற்களைக் காட்டியபடி கடும் கோபத்துடன் இருந்தான். வீரர்கள் உடனே யாரையும் கொல்லமாட்டார்கள். தன் சக வீரனோடு சண்டை போடுவதில் அவர்களுக்கு அலாதி இன்பம். பலவானான ஜம்புமாலியுடன் யுத்தம் செய்ய மாருதிக்கு ஆசை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல், ஜம்புமாலி தன் பாணங்களை மாருதி மேல் தொடுத்தான். மாருதி ஒரு பெரிய பாறையைப் பிடுங்கி அவன் மேல் எறிந்தார். அவன் அதை தன் அம்புகளால் தகர்த்து விட்டான். பார்த்தார் மாருதி. ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி வீசினார். அதையும் அவன் தடுத்து விட்டான். பின்னர் ஒரு மிகப்பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அவன் மீது வீசினார். அவ்வளவு தான்! ஜம்புமாலியைக் காணவில்லை. அவன் தலை ஓரிடத்தில் சிதைந்து கிடக்க, கை, கால்கள் கழன்று கிடக்க மண்ணோடு மண்ணாகி விட்டான். இதைக் கேள்விப்பட்ட ராவணன், கோபத்தில் மீசை துடிக்க, தன் மந்திரி பிரதானிகளின் குமாரர்கள் அனைவரையும் அனுப்பி, ""அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள்,'' என ஆணை பிறப்பித்தான். மின்னலென வந்த அவர்களும் மாருதியின் ஆவேசத்துக்கு பலியானார்கள். ராவணனுக்கு பயம் வந்து விட்டது. |
| ||
என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தான். ஆனால், அந்த சேனாதிபதிகளை மட்டுமல்ல, அவரது தேர்கள், உடன் சென்ற கணக்கற்ற வீரர்களை தூள்தூளாக்கி விட்டார் மாருதி.ராவணன் இதை எதிர்பார்த்தவன் போல, அடுத்து யாரை அனுப்பலாம் என ஆலோசிக்கையில் ராவணனின் மகன், அட்சயகுமாரன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான். அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ராவணன் அவனையே அனுப்ப முடிவெடுத்து ஜாடையாலேயே புறப்படும்படி உத்தரவிட்டான். அவன் வானில் பறந்து சண்டையிடும் திறமையுள்ளவன். மாருதியும் வாயு புதல்வரல்லவா! தனக்கு சரியான ஜோடி சண்டையிட கிடைத்ததென்று மகிழ்ந்து அட்சயகுமாரனை எதிர்கொண்டார். அட்சயனின் தேரை அடித்து நொறுக்கினார். அவன் வானில் பறந்து அவருடன் சண்டையிட்டான். ஆனால், வாயுமைந்தன் அவனது கால்களை இறுகப்பிடித்தார். அவன் கிறங்கும் வகையில் சுழற்றினார். சுழற்றியே கொன்று விட்டார். பெற்ற மகனை இழந்த துக்கம் ராவணனை வருத்தியது. அவன், வேறு வழியின்றி தன் மகன் இந்திரஜித்தை அழைத்தார். தேவர், அசுரர் போரில் இந்திரனையே வென்றவன் என்பதால் இவன் "இந்திரஜித்' என்று பெயர் பெற்றவன். கடும் தவமிருந்து பிரம்மாவிடம் இருந்து அஸ்திரம் பெற்றவன். அந்த பிரம்மாஸ்திரம் உலகிலுள்ள எப்பேர்ப்பட்ட சக்தியையும் கட்டும் சக்தி பெற்றது. அவனிடம், ""அன்பு மகனே! நான் ஏற்கனவே அனுப்பிய வீரர்களிடம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், நீ மகாவீரன். தேவர்களையே வென்றவன். ஆனாலும், அந்தக் குரங்கை குறைத்து மதிப்பிடாதே. அந்த வானரனின் திறமை பற்றி சொல்கிறேன், கேள்,'' என்று ஆரம்பித்தான். ""நீ பல வீரர்களை அழைத்துச் சென்று பலனில்லை. ஏனெனில், அது கணநேரத்தில் அவர்களை ஒழித்துக் கட்டி விடுகிறது. ஆயுதங்களாலும் அவனைக் கொல்ல முடியாது. ஏனெனில், அவன் காற்றை விட வேகமாக இருப்பவன். எந்தத்திசையில் இருந்து தாக்குவான் என்றே தெரியாது. அப்படிப்பட்டவனிடம் ஆயுதம் எடுத்து பலனில்லை. எனவே, உன்னிடமுள்ள முக்கிய அஸ்திரங்களுடன், அவற்றிற்குரிய மந்திரங்களை ஜபித்துக்கொண்டே செல். இவ்வளவு சக்தி வாய்ந்த குரங்கை அழிக்க நானே போயிருப்பேன். ஆனால், நாளைய உலகம், "ஒரு சாதாரணக் குரங்கை அழிக்க ராவணனே நேரில் சென்றான்' என்று இந்த ராவணனைக் கேலி செய்யும். மேலும், வீரர்கள் இருக்கும் நிலையில் மன்னனே முதலில் நேரில் செல்வதென்பது அரசியல் தர்மமல்ல,'' என்றான். இந்திரஜித்துக்கு இப்படிப்பட்ட வீரனை எதிர்கொள்ளப் போவதில் பெரிய மகிழ்ச்சி. தனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்தமைக்காகவும், பெற்றவருக்கு மரியாதை செய்து வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தன் தந்தையை வலம் வந்து நமஸ்கரித்தான். உற்சாகமாக மாருதி இருக்குமிடம் சென்றான். மாருதிக்கோ இன்னும் சந்தோஷம். மாருதிக்கு மட்டுமா! இலங்கையில் வசித்த பறவைகளுக்கு கூட சந்தோஷமாம். யார் இறந்தாலும் வலிய உடல் ஒன்று கீழே சாயும். அவர்களின் பிணம் தங்களுக்கு பலநாள் இரையாகும் என்பது அவற்றின் கணிப்பு. இந்தக் காட்சியைக் காண வானலோகத்தில் இருந்தவர்களெல்லாம் கூடி விட்டார்கள். பிரம்மாஸ்திரம் மாருதியைக் கட்டிப்போடும் என்பது உறுதி. அதில் இருந்து அவர் எப்படி விடுபடப்போகிறார் என்பதைப் பார்த்தாக வேண்டுமே! அது மட்டுமல்ல! அழியப்போவது இந்திரஜித்தா, மாருதியா? ஒருவேளை மாருதியின் கதை முடியுமானால் சீதாராமரின் நிலை என்னாகும்? நெஞ்சம் படபடக்க அவர்கள் உயரத்தில் நின்றார்கள். இந்திரஜித் களத்திற்குள் புகுந்தான். மாருதி தன் உருவத்தைப் பெரிதாக்கினார். இந்திரஜித் தன் வில் நாணை இழுத்து விட்ட போது எழுந்த ஒலி பேரிடியையும் மிஞ்சியது. பல பாணங்களை அவன் மாருதியின் மேல் பிரயோகித்தான். மாருதி பறந்தபடியே அவற்றை விலக்கித் தள்ளினார். இதுகண்டு இந்திரஜித்தே ஆச்சரியப்பட்டான். தன் தந்தை சொன்னது போல, இவன் பராக்கிரமசாலி தான் என்பதைப் புரிந்துகொண்ட புத்திமானான இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தை ஏவி இவனைப் பிடித்து கட்டி இழுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான். பிரம்மாஸ்திரம் பறந்து வந்தது. மாருதி அந்த அஸ்திரத்துக்கு தானாகவே கட்டுப்பட்டு விட்டார். சகல அஸ்திரங்களுக்கும் கட்டுப்படாத அந்த மாவீரன் இதற்கு மட்டும் ஏன் கட்டுப்பட வேண்டும்? அது ஒரு ரகசியம்! | ||
சுந்தர காண்டம் | ||
| ||
ஆனால், ராட்சஷ முட்டாள்கள் என்ன செய்தனர் தெரியுமா? அந்த அஸ்திரத்தின் ரகசியம் தெரியாமல், அவசரப்பட்டு அவரைக் கயிறுகளாலும், விழுதுகளாலும் கட்டிவிட்டனர். இப்படி பிற பொருட்களால் கட்டினால், அந்த அஸ்திரத்தின் கட்டு அவிழ்ந்து விடும். அது மட்டுமல்ல! அதை மீண்டும் எய்யவும் முடியாது. இந்திரஜித் இந்த அவசர செயலைக் கண்டு அதிர்ந்து விட்டான். "இனி இந்தக் குரங்கைப் பிடிப்பது கஷ்டமாயிற்றே! இது இப்போது கட்டுக்களை அவிழ்த்து இங்கே நிற்பவர்களை எல்லாம் வேட்டையாடி விடுமே! நமக்கும் அதோகதிதானோ' என்று சிந்தித்த வேளையில், மாருதியோ கட்டில் இருந்து அவிழாதது போல நடித்தார். இப்போது, இந்திரஜித்துக்கு இன்னும் குழப்பம். "இந்தக் குரங்கு தன் கட்டுகள் அவிழாதது போல நாடகமாட வேண்டிய அவசியம் என்ன! அசுரர்கள் இது கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அடிக்கிறார்கள், குத்துகிறார்கள், ஆயுதங்களால் தாக்குகிறார்கள். அத்தனையையும் இது தாங்குகிறது என்றால், இது இன்னும் என்ன செய்யப்போகிறதோ!'என்பதே குழப்பத்துக்கு காரணம். மாருதி மிகுந்த பொறுமை காத்தார். "இவர்களை அடிப்பதை விட, இந்த கட்டிலேயே இருப்பதைப் போல் நடித்தால், நிச்சயம் இவர்கள் நம்மை ராவணனிடம் கொண்டு செல்வார்கள். அவனுடைய பராக்கிரமத்தை நாம் எடை போட்டு விடலாம். இது எதிர்வரும் போருக்கு உகந்ததாக இருக்கும்' எனக் கணக்குப் போட்டார். எதிரிகளின் பலம் தெரியாமல், அவர்களை எதிர்த்து யாரும் களத்தில் இறங்கக்கூடாது என்பது இதன்மூலம் தெரிய வரும் பாடம். அவர் நினைத்தது போலவே ராவணனின் முன்னால் அதைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணனை மிகவும் அருகில் பார்த்து மாருதி உண்மையிலேயே அதிசயித்தார். "எப்படிப்பட்ட மகாபுருஷன் இவன்! இவன் மட்டும் தன் மனதை தர்மத்தின் வழியில் செலுத்தினால், இந்திரனையும், பிற தேவர்களையும் நிரந்தரமாக ஆளும் பாக்கியத்தைப் பெற்றிருப்பானே!' என்று மனதுக்குள் பாராட்டினார். எதிரியை பாராட்டும் இந்த தன்மை மட்டும் அரசியலில் இருந்துவிட்டால், சண்டைகளுக்கு இடமில்லை. தேசமும் விருத்தியாகும் என்பது சுந்தரகாண்டம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து. இதே போன்ற யோசனை தான் ராவணனுக்கும் தோன்றியது. "யார் இவன்? ஒரு காலத்தில் நான் கைலாயத்தை அசைத்த போது எனக்கு சாபமிட்ட நந்தி பகவானா? அல்லது யாரேனும் அசுரனா? இப்போது, குரங்கு ரூபத்தில் வந்திருக்கிறானோ? என்னுடைய அரண்மனைக்குள் தகுதியானவர்கள் மட்டுமே நுழைய முடியும். இவன் எப்படியோ இங்கே வந்துவிட்டான் என்றால் இவன் தகுதியுடையவர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும்' என்ற யோசனையுடன், தனது மந்திரி பிரஹஸ்தனிடம் கண்ஜாடை காட்டினான். அவனது கருத்தைப் புரிந்து கொண்ட பிரஹஸ்தன், ""குரங்கே! எனது கேள்விகளுக்கு பயப்படாமல் பதில் சொல். உனக்கு நன்மை உண்டாகட்டும். உன்னை யார் இங்கே அனுப்பினார்கள்? இந்திரனா? வாயுவா? விஷ்ணுவா? குபேரனா? எமனா? பார்ப்பதற்கு குரங்கு போல் தோன்றினாலும், உன் சக்தியை மதிப்பிடும் போது அவ்வாறு நினைக்க எங்களால் முடியவில்லை. உண்மையைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவோம். பொய் சொன்னால் உன் உயிர் போய் விடும். எதற்காக இலங்கைக்கு வந்தாய்? சொல்,'' என்று கேட்டான். மாருதி அவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை. தைரியசாலியல்லவா அவர்! நேராக ராவணனை நேருக்கு நேர் பார்த்தார். அவனிடமே பதில் சொன்னார். ""எந்த தேவரும் என்னை அனுப்பவில்லை. நான் வானரன் தான். ராட்சஷர்களின் மகாராஜாவான உன்னைப் பார்க்கவே இங்கு வந்தேன். உன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே அசோகவனத்தை அழித்தேன். நீ அனுப்பிய ஆட்கள் என்னை துன்புறுத்தினார்கள். அவர்களிடம் இருந்து என் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர்களிடம் பலப்பரீட்சை செய்து கொன்றேன். எந்த அஸ்திரமும் என்னைக் கட்டுப்படுத்தாது என்ற வரத்தை நான் பிரம்மாவிடம் பெற்றுள்ளேன். ஆனாலும், ராட்சஷர்கள் என்னை உபத்திரவம் செய்ததையும் பொறுத்துக் கொண்டு, பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் நடித்ததன் காரணம், உன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேள்,'' என்று ஆரம்பித்தார். ""கிஷ்கிந்தையின் அரசன் சுக்ரீவன் என்னை இங்கே அனுப்பினார். தசரத புத்திரரான ராமனின் மனைவி சீதையை நீ கடத்தி வந்துள்ளாய். ராமபிரானும், சுக்ரீவனும் இப்போது நண்பர்கள். ராமனின் மனைவியை மீட்டுத்தருவதாக சுக்ரீவனும், சுக்ரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று வானர ராஜ்யத்திற்கு சுக்ரீவனை அதிபதியாக்குவதாக ராமனும் உடன்பாடு செய்து கொண்டனர். ராமன் தான் சொன்னதை நிறைவேற்றி விட்டார். சுக்ரீவன் தன் பங்கை நிறைவேற்றும் நடவடிக்கை எடுத்துள்ளார். நீயாகவே, சீதையைக் கொண்டு போய் ராமனிடம் ஒப்படைத்து விட்டால் உன் பத்து தலைகளும் பிழைக்கும். இங்கிருக்கும் சீதாபிராட்டி சாதாரணமானவள் அல்ல. அவள் இலங்கையை அழிக்க வந்திருக்கும் காளராத்ரி என்ற சக்தி. கவனம்,'' என்றவர் மேலும் தொடர்ந்தார். | ||
| ||
அந்த பிரம்மனும் நல்லவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து வந்தாலும் அவரை அழிக்க முடியாது. அதனால், எங்கள் ராமனைச் சரணடைந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்,'' என்றார். மாருதியின் இந்தச் சொற்கள் ராவணனை மிகுந்த ஆத்திரமடையச் செய்தன. கோபத்தில் அந்த அசுரன், ""இந்தக் குரங்கைக் கொன்று விடுங்கள்,'' என்று ஒரேயடியாக உத்தரவு போட்டுவிட்டான். அப்போது விபீஷணன் எழுந்தான். ""அண்ணா! இது முறையல்ல. தனது எஜமானன் சொல்லியனுப்பியதை தூதனாகிய இவன் வந்து சொன்னான். அது ஒன்றும் தவறல்ல, அதற்காக, இவனைக் கொல்வது என்பது தங்களது புகழுக்கு இழுக்கைத் தரும். நியாயத்தைக் கடைபிடிக்கும் எந்த அரசனும் தூதர்களைக் கொல்வதில்லை. தங்களை வெல்வதற்கு இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். எனவே, இந்தக் குரங்கு இப்படி சொல்லிவிட்டதே என்பதற்காக கலங்க வேண்டாம். தாங்கள் இந்த தூதனை விடுவித்து விடுங்கள்,'' என்றான். ராவணனோ ஆத்திரம் அடங்காமல், ""விபீஷணா! இவன் பாவி. பாவிகளைக் கொல்வது தவறல்ல,'' என்றதும், இடைமறித்த விபீஷணன், ""அண்ணா! வேண்டாம்! இவன் நமது படையினரைக் கொன்றிருக்கிறான் என்பது நிஜமே. இருப்பினும், தூதன் என்ற நிலையில் வந்திருப்பதால், தூதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதற்கு பெரியோர்கள் வகுத்து வைத்துள்ள விதிகளின்படி, அங்கஹீனம் செய்தல், சாட்டையடி கொடுத்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகளைக் கொடுக்கலாம். இது எதிரிகளை அவமானப்படுத்தியதற்கு சமம். நம் பராக்கிரமத்தை அவர்கள் உணர்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அமையும். இதில் எந்த தண்டனையைக் கொடுப்பது என்ற முடிவைத் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம்,'' என்று யோசனை சொன்னான். ராவணன் இதை ஏற்றுக்கொண்டான்.""விபீஷணா! தக்க சமயத்தில் சரியான யோசனை சொன்னாய். இந்த தூதனுக்கு மறக்க முடியாத தண்டனை ஒன்றைக் கொடுக்க வேண்டும். குரங்குகளுக்கு அழகும் ஆபரணமுமாக இருப்பது வால் தான். இந்தக் குரங்கின் வாலில் நெருப்பு வைத்து இந்த பட்டணம் முழுவதும் இழுத்துச் செல்லுங்கள்,'' என்றான்.வால் என்றதும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ராவணனிடம் இருந்து சீதை மீட்கப்பட்டதும், கிஷ்கிந்தையில் அவர்கள் இறங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த வானரப் பெண்களுக்கு, இந்த யுத்தத்துக்கு காரணமான சீதையைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சுக்ரீவனின் வேண்டுகோளுக்கு இணங்க, புஷ்பக விமானத்தில் வந்த ராமனும், சீதையும் தரையிறங்கினர். அப்போது, ஒரு வானரப் பெண், ""இந்த சீதாவின் அழகில் மயங்கி தான் ராவணேஸ்வரன் இவளைக் கடத்திப் போனான் என்றார்கள். இவள் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால், அதிலும் ஒரு குறை. இவளுக்கு நம்மைப் போல் வால் இல்லையே!'' என்றாளாம். அவரவருக்கு அவரவர் இயல்பு அழகு. அதிலும் குரங்குகளுக்கு நீண்ட வால் தான் அழகு. அதனால் தான் வாலுக்கு தீ வைக்கச் சொன்னான் ராவணன். நாம் கூட குழந்தைகள் சேஷ்டை செய்தால், "இவன் சரியான வாலு' என்போம். காரணம், அந்த வால் எத்தகைய சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பதை இனிமேல் தானே பார்க்கப் போகிறோம். அசுரர்களுக்கு மிகுந்த சந்தோஷம். ""அடேய்! சரியான சந்தர்ப்பம். இந்தக் குரங்கு நம் உறவினர்களில் பலரைக் கொன்று விட்டது. அதற்கு பழிவாங்க சரியான சந்தர்ப்பம். இதன் வாலில் துணிகளைச் சுற்றுங்கள். எண்ணெய்யை ஊற்றுங்கள். நெருப்பு வையுங்கள்,'' என்று கூச்சலிட்டனர். அப்போது மாருதி தன் மனதில், ""இவர்களை மட்டுமல்ல! இங்கிருக்கும் ராவணனையும் என்னால் கொல்ல முடியும். ஆனால், ராவணனைக் கொல்வதாக ராமபிரான் சபதம் எடுத்திருப்பதால், நான் அவரை மீறியதாக ஆகிவிடும். எனவே, இவர்களுக்கு உயிர் பிராணன் தருவது என் கடமையாகிறது. இப்போது, இவர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதும் நன்மைக்குத் தான்! இலங்கையை அணுஅணுவாகப் பார்த்து விடலாம். போருக்கு வரும் போது, எந்த இடத்திற்குச் செல்வது என்று முடிவு செய்ய வசதியாயிருக்கும்,'' என்று நினைத்தார். ராட்சஷர்கள் அவரது வாலுக்கு தீ வைத்தனர். அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு அவர்களுடன் நகர்வலம் வந்தார். இந்த விஷயத்தை ராட்சஷிகள் சிலர் சீதாவிடம் சென்று தெரிவித்தார்கள். அவள் உயிரே போனது போல துடித்துப் போனாள். சீதாதேவி போன்ற தாயை உலகில் பார்க்க முடியாது. நமக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அவளிடம் உடனடியாக மானசீகமாக முறையிட்டு விட்டால் போதும். அவள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வந்து விடுவாள். நமக்காக கண்ணீர் வடிக்கும் கருணை தெய்வம் அவள். ""எனக்காக இங்கு வந்தவனுக்கு இந்தக் கதியா!'' என்றவள், அக்னி பகவானிடம், ""பகவானே! நான் என் கணவருக்கு செய்த பணிவிடைகள் அனைத்தும் உண்மையானால், நான் கற்புக்கரசி என்பது நிஜமானால், மாருதிக்கு நீ எந்த துன்பத்தையும் தரக்கூடாது. வெம்மைக்கு பதிலாக குளிர்ச்சியைத் தர வேண்டும்,'' என்று பிரார்த்தித்தாள். மாருதிக்கு ஆச்சரியம். "வாலில் நெருப்பு எரிகிறது. ஆனால், உஷ்ணமே இல்லை. இது எப்படி சாத்தியம்?' என்று ஆச்சரியப்பட்டார். | ||
| ||
இனி வேலை ஏதுமில்லை. போருக்கு வரும் முன் இங்குள்ள கோட்டையையும், தடுப்பு அரண்களையும் அழித்து விட்டால் பின்னால் வசதியாக இருக்கும் என்று எண்ணியவராய், அக்னி தனக்குச் செய்த சகாயத்தைப் பயன்படுத்தி கோட்டையில் தீ வைத்தார். ராட்சஷர்களின் வீடுகளிலும், மாளிகை, தோட்டங்கள் எல்லாவற்றிலும் நெருப்பை பற்ற வைக்க இலங்கையே எரிய ஆரம்பித்தது. கும்பகர்ணன், இந்திரஜித் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தார். விபீஷணனின் வீட்டை மட்டும் விட்டுவிட்டார். எல்லாவற்றிற்கும் உச்சமாக ராவணனின் மாளிகைக்கே தீ வைத்து விட்டார். தேவர்களையெல்லாம் அவமானப்படுத்தி வந்த ராவணனின் வீட்டில் தீ வைக்கப்பட்டதோ இல்லையோ, தேவனான அக்னி பகவானுக்கு மிகுந்த கொண்டாட்டமாகி விட்டது. தன் பணியை மிகச்சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டார். அதிபயங்கரமாக கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தார். ராட்சஷர்கள் தங்களுக்கு ஏதோ கேடு காலம் இந்த குரங்கின் ரூபத்தில் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். வீடுகளில் இருந்த ராட்சஷக்குழந்தைகள் அலறின. அவர்களை தூக்கிக் கொண்டு, ராட்சஷ தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். பல ராட்சஷர்கள் தீயில் சிக்கி மரணமடைந்தனர். ஆனாலும், மாருதிக்கு திருப்தி ஏற்படவில்லை. இந்த சேதம் போதாதென்றே நினைத்தார். இலங்கை முழுவதையும் எரித்தாக வேண்டும் என்பது அவரது எண்ணம். எனவே பர்வதசிகரம் எனப்படும் திரிகூடமலையில் ஏறி தீ வைத்தார். அங்கிருந்த ராட்சஷர்களின் வீடுகள் பற்றி எரிந்தன. ராட்சஷர்கள் மிகப் பெரிய உடலை உடையவர்கள் என்பதால் அவர்களது உடல் வெடித்துச் சிதறி நெருப்புத்துண்டங்களாகி தீயை மேலும் பெருக்கியது. இந்த நேரத்தில் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி பிரிவினை ஏற்படுவது சகஜம். இதை குடும்பத்திலுள்ள பெரியவர்கள் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். பதிலாக, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினால், அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல், இலங்கையைப் போல, துன்பம் செய்தவர்களின் குடும்பத்தையே அழித்து விடும். பொன்மான் மீது கொண்ட ஆசையால், இரண்டு கொழுந்தன்மாரை சந்தேகப்பட்டாள் சீதா. ஒன்று லட்சுமணன். இன்னொருவன் பரதன்.""ஓஹோ! அந்த பரதன் ஒருவேளை என் மீது ஆசைப்பட்டு, உன் மூலமாக என்னை அபகரிக்க திட்டம் போட்டிருக்கிறானோ! அதனால் தான் உன் சகோதரர் காட்டில் ராட்சஷர்களிடையே மாட்டி, "சீதா...லட்சுமணா' என்று அபயக்குரல் கொடுத்தும் நீ செல்ல மறுக்கிறாயோ,'' என்று லட்சுமணனிடம் கேட்டாள் சீதா. இந்த சொல் நெருப்பாய் அவன் உள்ளத்தைச் சுட்டது. அம்புகளாய் பாய்ந்தது. ஆனாலும், பொறுமையுடன், ""தாயே! எனது சகோதரர் சாதாரணமான வீரர் அல்ல. எந்தச் சூழலிலும், அவருக்கு என்ன துன்பம் வந்தாலும், பிறர் உதவியை அவர் நாடவே மாட்டார். தன் பிரச்னையை தானே தீர்த்துக் கொள்ளும் சூராதி சூரர் அவர். அவருக்காவது ஆபத்தாவது... எல்லாம் அந்த மாரீசனின் மாயச்செயல், தாங்கள் கலங்காதீர்கள், நான் அண்ணனின் கட்டளையை மீறி இங்கிருந்து செல்லவே மாட்டேன்,'' என்றான். ஆனாலும், மேற்கண்ட சொல்லம்பு அவனை அங்கிருந்து அகலும்படி செய்தது. அவள் துன்பப்பட்டாள். ஆனால், இந்த செய்கைகளுக்கெல்லாம் மூலகாரணம் யார்? ராவணன். அவன் ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்தான். பெண்களின் சாபம், அவளைப் பாதிப்புக்குள்ளாக்கியவரின் குடும்பத்தை மட்டுமல்ல! அவளைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களையும் அழித்து விடும். ராவணன் செய்த பாவம், அவன் தேசத்திலுள்ள மக்களையும் சேர்த்து எரிப்பதைப் போல! சுந்தரகாண்டம் படிக்கும் அன்பர்கள் தங்கள் மனைவியை எந்தக் காரணத்தால் பிரிந்திருந்தாலும் சரி...அதையெல்லாம் மறந்து விட்டு, ஒன்று சேர வேண்டும். எப்படியோ, ஒட்டுமொத்தமாக இலங்கையை நாசமாக்கி விட்டார் மாருதி. தேவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நம்மால் ஏறெடுத்தும் பார்க்க முடியாத லங்காபுரியை இவன் ஒருவனே நாசமாக்கி விட்டானே என்று! நாம் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றால், வாலில் வெண்ணெய் பூசி வழிபடுகிறோம். அவரது வாலில் சூடுபட்டதால் வலிக்கும் என்ற அன்பின் காரணத்தால் செய்யப்படும் வழிபாடு அது. நிஜத்தில், அவருக்கு வலிக்கவில்லை. எந்த வால், சீதாபிராட்டியைக் காத்ததோ, அந்த வால் தங்களையும் காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் வழிபாடே அது. அதனால் தான் வாலில் மணியைக் கட்டி அதை தெய்வாம்சமானதாகவும் கருதுகிறோம். இலங்கை பற்றி எரிந்த பிறகு தான், மாருதிக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. "பகீர்' என மனதை வாட்டியது அந்த நினைவு. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், ராமபிரானுக்கு என்ன பதில் சொல்வது! அவசரப்பட்டு விட்டோமே' என கலங்கினார் அவர். அந்தக் கலக்கத்துக்கு என்ன காரணம்? |
| ||
பாம்பு சட்டையை உரிப்பது போல, கோபக்காரன் கோபத்தை புத்தியால் அடக்க வேண்டும். நான் கொடிய பாவி, என் புத்தியை தீயால் சுட வேண்டும், ஒருவேளை சீதாதேவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கு மானால், நானும் இந்த அக்னியில் விழுந்து இறப்பேன். கோபக்காரனான என்னை "அது குரங்கு தானே! அதற்கென்ன புத்தியிருக்கும்' என்று பலரும் என்னைப் பழிப்பதற்கு முன் மரணத்தை ஏற்பேன்,'' என புலம்பினார். பார்த்தீர்களா! ஒரு நிமிட கோபம் பிறரை மட்டுமின்றி, தன்னையே அழித்து விடும் தன்மையுடையது. கோபம் காரணமாக பெற்றவர்களை பிரிந்திருக்கும் பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் பெற்றோர், வாழ்க்கைத் துணையைப் பிரிந்திருப்பவர்கள் எல்லாம் இதைப் படித்த பிறகாவது, அந்தக் கோபத்தால் இதுவரை தங்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்த்து சேர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தான் சுந்தரகாண்டம் ஆயுள் முழுவதும் படிக்க வேண்டிய அருமருந்தாக திகழ்கிறது. ஆனால், மாருதி நினைத்தது போல் ஏதும் நடக்கவில்லை. இலங்கையில் நெருப்பில் அகப்பட்டு இறக்கும் நிலையில் முனகிய ராட்சஷர்களில் சிலர், ""நாம் அழிகிறோம், ஆனால், ராமனின் துணைவியான அந்த சீதாவை மட்டும் இந்த நெருப்பு ஏதும் செய்யவில்லையே,'' என்று சொல்லி உயிர்விட்டார்கள். இதைக் கேட்ட ஆஞ்சநேயருக்கு போன உயிர் திரும்பியது போல் இருந்தது. சீதாதேவி தன் மகிமையால் பிழைத்தாள் என்று எண்ணியவராய், பாக்கியிருந்த அசுரர் வீடுகளையும் அழித்தார். பின்னர் சீதாதேவியை சந்தித்தார். ""மாருதி! நீயே இங்கிருக்கும் மிச்சம் மீதி ராட்சஷர்களையும்...ஏன், ராவணனையே அழித்து என்னை மீட்டுச் சென்று விடுவாய் என்பதை பரிபூரணமாக நம்புகிறேன். நீ மகாதீரன். ஆனால், என் பர்த்தாவே என்னை மீட்டுச் செல்ல வேண்டும். அதுவே அவரது புகழுக்கும், ராவணன் செய்த தீங்கிற்கு பதிலடி கொடுப்பதாகவும் அமையும்,'' என்றாள். அவளைப் பணிந்து வணங்கிய மாருதி, அரிஷ்டம் என்று பெயர் கொண்ட மலையில் ஏறி கிஷ்கிந்தை கிளம்பினார். அந்த மலையை அவர் அழுத்திய வேகத்தில் பூமிக்குள் புதைந்து போனது. பின்னர் மின்னல் வேகத்தில் பறந்து கடலின் அடுத்த கரையை அடைந்தார். அவர் வரும் வேகத்தைப் பார்த்தவுடனேயே, ஜெயத்துடன் திரும்பி வருகிறார் என்பதை வானர வீரர்கள் புரிந்து கொண்டனர். அவர் வந்து இறங்கியதும், அவருக்கு கிழங்கு, பழங்களை சாப்பிடக் கொடுத்தார்கள். அவசர வேலையாக சென்றிருக்கும் நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டுக்குள் நுழைகிறார். அவர் மகிழ்ச்சியான சூழலில் வந்தாலும் கூட, அவரிடம் உடனே என்ன நடந்தது என்று கேட்கக்கூடாது. வந்தவருக்கு ஒரு டம்ளர் தண்ணீராவது கொடுக்க வேண்டும். அவர் ஆசுவாசமானவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். அதே போல வீட்டுக்குள் நுழைபவரும் அவசர அவசரமாக பேச்சைத் துவங்கக்கூடாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும். மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலும் கூட நிதானம் இழக்காமல் இருப்பது நமது உடல்நிலைக்கு நல்லது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பின்னர் மாருதி, தான் சென்று வந்த விபரத்தை வானர வீரர்களிடம் சொன்னார். அவர்கள் மகிழ்ச்சியுடன், அங்கதனின் அனுமதியுடன் சுக்ரீவனுக்குச் சொந்தமான மதுவனத்தில் தேன் குடித்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுக்ரீவனின் அனுமதியின்றி யாரும் அங்கு செல்லக்கூடாது என்பதால், வனத்தின் பாதுகாவலனான ததிமுகன் சுக்ரீவனிடம் சென்று முறையிட்டான். அவனது சொல்லில் இருந்தே, மாருதி சென்ற காரியம் ஜெயமாயிற்று என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டான். பின்னர், வானரர்களும் வந்து சேர்ந்தனர். மாருதி அடைந்த வெற்றியின் காரணமாக, அனுமதியின்றி மதுவனத்தை அழித்து தேன்குடித்த வானரர்களை சுக்ரீவன் மன்னித்து விட்டான். அவர்கள் செய்த வேலைக்கு என்ன கூலி கொடுத்தாலும் தகும் என்பதே அவனது இந்த பெருந்தன்மைக்கு காரணம். பின்னர் மாருதி, சீதையைக் கண்டு வந்த வரலாற்றை ராமனை நமஸ்கரித்து சொல்ல ஆரம்பித்தார். "கண்டனென் கற்பினுக்கு அணியை என் கண்களால்' என்றார். "சொல்லின் செல்வர்' அல்லவா? "சீதையைப் பார்த்தேன்' என்று சொல்ல ஆரம்பித்தால், சீதையை என்றவுடனேயே "பார்க்கவில்லை' என்று அடுத்த வார்த்தை வந்துவிடுமோ என்ற பயத்தில், ராமனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அதனால் "பார்த்தேன் சீதையை' என பவ்யமாக உரைத்தார். அங்கு நடந்த எல்லா விபரங்களையும், சீதாபிராட்டி அசுரர்களிடம் படும் வேதனையையும் விவரித்து, அவள் தந்த சூடாமணியை வணக்கத்துடன் சமர்ப்பித்தார். அதைப் பார்த்து ராமன் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை. ""லட்சுமணா! இந்த ஆபரணத்தை என் சீதையின் சிரசில் பார்த்துள்ளேன். ஆனால், இப்போது தனியாகப் பார்க்கிறேன்,'' என்று சொல்லி வருந்தினார். ஏன் லட்சுமணன் இதைப் பார்த்திருக்க மாட்டானா என்றால், பார்த்ததே இல்லை. அவனுக்கு அண்ணியின் முகம் இப்போது வரை தெரியாது. அவளது திருவடி மட்டுமே அவனுக்குத் தெரியும். தமையன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலனாக அவன் விளங்கினான். பின்னர், ""ஸ்ரீராமா! நான் ஜனகபுத்திரியிடம் நீங்கள் உடனடியாக வந்து மீட்டுச் செல்வீர்கள் என தைரியமூட்டி, ஜீவனை விட இருந்த அவர்களுக்கு நம்பிக்கையூட்டினேன். தாங்கள் இட்ட கட்டளையை என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகச் செய்தேன்,'' என அடக்கத்துடன் சொன்னார். நிஜ வீரன் ஆர்ப்பரிப்பதில்லை அல்லவா? ஆஞ்சநேயரின் இந்த இலங்கைப் பயணம் பல பாடங்களை நமக்கு தந்திருக்கிறது. யார் ஒருவருக்கு உயிர்க்கண்டம் இருக்கிறதோ, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. நாமும், பிறர் நலம் கருதி வாழ்ந்து ஆஞ்சநேயரின் திருவருள் பெறுவோம். ஸ்ரீராம ஜெயம். |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு நன்றி!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2