புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
2 Posts - 1%
prajai
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%
mohamed nizamudeen
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
30 Posts - 3%
prajai
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_lcapதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_voting_barதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:51 am

குழப்புவது எப்படி?

இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.

அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

ஒரு பெரிய திடல்.

அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

அவற்றில் கருப்பு ஆடுகளும் இருந்தன.

வெள்ளை ஆடுகளும் இருந்தன.

அங்கே ஆடு மேய்க்கிறவன் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

குழப்பப்படுவது - குழம்புவது இரண்டுமே அவனுக்கு பிடிக்காது.

அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.

தம்பி இங்கே ஆடு மேய்க்கிறீயா...?

ஆமாம்

உன்கிட்டே சில விவரம் கேட்டு தெரிஞ்சிக்கலாம். எதுவா இருந்தாலும் தெளிவாக கேளுங்க... பதில் சால்றேன்...!

இந்த மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள்....?

பார்த்தீங்களா? குழப்பமாக கேக்கறீங்க....!

வேற எப்படிக் கேட்கணும்ங்கறே?

நீங்க. கறுப்பு ஆட்டை கேக்கறீங்களா? வெள்ளை ஆட்டை கேக்கறீங்களா?

கறுப்பு ஆடு எத்தனை?

அப்படி கேளுங்க... கறுப்பு ஆடு ஐம்பது இருக்கு

வெள்ளை ஆடு?

அதுவும் ஐம்பது தான்!.

பெரியவர் அடுத்த கேள்வியை கேட்டார்.

இந்த ஆடெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் சாப்பிடும்?

மறுபடியும் குழப்புறீங்க!

என்ன சொல்றே?

கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?

கறுப்பு ஆடு...!

10 கிலோ சாப்பிடும்.

சரி வெள்ளை ஆடு....?

அதுவும் 10 கிலோ சாப்பிடும்?

பெரியவர் லேசாக குழம்ப ஆரம்பித்தார். அடுத்த கேள்வி...

இதெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கறக்கும்?

மறுபடியும் தெளிவாக கேளுங்க.... கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?

கறுப்பு ஆடு...!

ஐந்து லிட்டர் கறக்கும்

வெள்ளை ஆடு...?

அதுவும் ஐந்து லிட்டர் கறக்கும்.

பெரியவர் கொஞ்சம் குழப்பத்தோடு யோசிக்க ஆரம்பித்தார்.

அப்புறம் கேட்டார்

தம்பி எல்லாத்துக்கும் பதில் ஒண்ணாத்தானே இருக்கு.

ஆமாம்!

அப்படி இருக்கும்போது... எதுக்கு பிரிச்சி பிரிச்சி கேக்க சொல்றே...?

ஓ,.... அதை கேக்கறீங்களா... இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க சொல்றேன்னா....

இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.

வெள்ளை ஆடுகள்....?

அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்

இதற்கு மேலும் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த அந்த பெரியவர்

சரி.. நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினார். தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? என்பதை அந்த ஆடு மேய்க்கிறவனிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, கண்ணன் and kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:51 am

இதை போலவே....

குழப்பமாய் பேசித் தெளிவு படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் சில சித்தர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள்.

சில புலவர்களும் அப்படி இருந்திருக்கிறார்கள்.

சித்தர்கள் பேசுவது குழப்பமாக தெரியும். அதன் உள்ளே பொருள் தெளிவாக இருக்கும். அதற்கு ஒரு வேடிக்கையான உதாரணம் சொல்லலாம்.

ஓர் அரசன், அவனுக்கு ... காலில் அக்கி அது ஒரு வகை படை... தேமல் மாதிரி மன்னனுக்கே ஒரு தொல்லை என்றால் மந்திரிகள் சும்மா இருப்பார்களா?

உடனே ஓடிப்போய் அரண்மனை வைத்தியரை கூப்பிட்டுகொண்டு வந்தார்கள்.

அவர் ஒரு சித்த வைத்தியர். சித்தர்களின் வைத்திய நூல்களையெல்லாம் கற்றவர்.

அவர் வந்தார்.

அரசனனின் காலை பார்த்தார்.

இதை குணப்படுத்துவது ரொம்ப சுலபம் என்றார். என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.

பொடுதலையை வச்சி கட்டினா சரியாயப்போயிடும். என்று சொன்னார். அது ஒரு வகை பச்சிலை. சொல்லிவிட்டு போய்விட்டார். அவசரமாக அடுத்த தேசத்துக்கு போக வேண்டியிருந்தது. அமைச்சர் உடனே அரண்மனை சேவகர்களை கூப்பிட்டார்.

பொடுதலை எங்கிருந்தாலும் உடனே கொண்டு வாருங்கள் என்றார்.

பொடுதலையா... அப்படின்னா... என்ன என்று தலையை சொறிய

அமைச்சருக்கு புரியவில்லை

அதனால் என்ன?

இருக்கவே இருக்கிறார்கள். அரசவை புலவர்கள். அவர்களை கூப்பிட்டு கேட்டார்.

அவரகள் உடனே அகராதியை எடுத்து புரட்டினார்கள். அதிலே அர்த்தம் போட்டிருந்தது.

அமைச்சர் யோசித்தார்.

உடனே கூப்பிட்டார் காவலாளிகளை

நம்ம தேசத்தில் முடியே இல்லாத தலை இருக்கிற ஒருத்தனைக் கண்டு பிடித்து கொண்டு வாருங்கள்.

காவலாளிகள் நாலாபக்கமும் ஓடினார்கள். ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபம். அங்கே அப்பாவியாக ஒருத்தன் உட்கார்ந்திருந்தான்.

இவன் தான் சரி என்றான் ஒருவன்.

அவனை வெருங்கினார்கள்.

புறப்படு என்றார்கள்

எங்கே? என்றான்.

அரண்மனைக்கு!
எதுக்கு..?

ராஜா கூப்பிட்டார் உன்னை

அவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏதோ ராஜ உபசாரம் நடக்கப்போகிறது என்று முடிவு செய்து கொண்டான்.

உடனே புறப்பட்டான்.

அரண்மனை மேல் பகுதிக்கு போனவுடன் இவன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டான். எதிரே வந்த அமைச்சரிடம், இப்பவாவது சொல்லக்கூடாதா...? எதுக்காக என்னை இவ்வளவு தூரம்...?

அமைச்சர் சொன்னார்.

ஓ.... அதுவா வேறே ஒண்ணுமில்லே நம்ம மன்னருக்கு கால்லே அக்கி. அரண்மனை வைத்தியர் வந்து பார்த்தார். பொடுதலையை வச்சிக் கட்டச் சொன்னார். பொடுதலையின்னா முடி இல்லாத தலை அதுக்கு உன் தலை தான் பொருத்தம்....

வந்தவன் அதிர்ச்சியடைந்தான்.

இப்போ... என்ன செய்யப்போறீங்க...?

உன்னோட தலையை ராஜா கால்லே வச்சி கட்டப்போறோம்.

அவன் கண்ணை மூடி எல்லா தெய்வங்களையும் வணங்கினான். கடைசியாக கேட்டான்...

சரிங்க... இந்த யோசனையை உங்களுக்கு சொன்ன அந்த அரண்மனை வைத்தியர் இப்போ எங்கே?

அவர் இப்போ இங்கே இல்லை... வெளி தேசம் போயிருக்கார்.

சரி பரவாயில்லை. அவரோட வீடு எங்கே இருக்கு... அதையாவது சொல்ல முடியுமா?

அதோ வடக்கே பார்... அங்கே தெரிகிறதே ஒரு குடிசை.. அது தான் அவர் குடி இருக்கிற இடம்.

வந்தவன் அந்த குடிசை இருக்கிற திசையை நோக்கி இரு கைகளையும் கூப்பியவாளே நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினான்.

அமைச்சர் குழம்பினார்.

எதுக்காக இப்படி செய்யறே?

இப்போதைக்கு எனக்கு கண்கண்ட தெய்வம் அந்த வைத்தியர் தான்.

என்ன சொல்றே?

உண்மையை தான் சொல்றேன்.

அந்த வைத்தியர் கருணையாகலே தான் இப்போநான் உயிரோடு உங்க முன்னாடி நின்னுக்கிட்டிருக்கேன். எனக்கு உயிர் பிச்சை போதெல்லாம் தெய்வம் அவர்.

ஒண்ணும் புரியலையே...?

ஐயா... நல்லவேளையாக அந்த வைத்தியர் பொடுதலையை வச்சிக்கட்டுக்கன்னு நசுக்கி வச்சு கட்டுங்கன்னு சொல்லியிருந்தா இந்நேரம் என் கதி என்னவாயிருக்கும்?

அர்த்தம் புரியாமல் போனால் எந்த அளவுக்கு ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள். சில குழப்பங்கள் தலையை பிய்த்துக்கொள்கிற அளவுக்கு கூட கொண்டு போய் விட்டுடும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:52 am

மார்க் ட்வைன் உங்களுக்கு தெரியும். புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். ஒரு நாள் ஒரு பத்திரிகை நிருபர் அவரை பேட்டி காணவந்தார்.

அந்த எழுத்தாளருக்கு பேட்டி என்றால் பிடிக்காது. எதையாவது சொல்லி தப்பித்து விடுவார். ஆனால் அவரை தேடி வந்த பத்திரிகை நிருபர் அவரை விட கில்லாடி. விடாக்கண்டன். எதையாவது பேசி எப்படியாவது ஆசாமிகளை கெட்டியாக பிடித்து கொள்வார். வேறு வழியில்லாமல் மார்க் ட்வைன் இவரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. வேறு என்ன செய்யலாம்? குழப்புவ9து தான் சரியான வழி என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.

சரி.. கேளுங்கள்... சால்கிறேன். என்று அவர் முன்னால் உட்கார்ந்தார். பத்திரிகை நிருபர் மெல்ல ஆரம்பித்தார்.

ஏன் சார்.... உங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாராவது இருக்காங்களா?

என்னகேக்கறீங்க...?

உதாரணத்துக்கு ஒரு சகோதரர்...?

ஆமாம்... ஆமாம்... ஒருத்தன் இருந்தான் என்று கூறி பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். நிருபர் அவரை கூர்ந்து கவனித்தார்.

ஏன் சார்... ஏதாவது கெட்ட செய்தியா...?

ஆமாம் அது ஒரு துயரம்

ஏங்க.... என்ன ஆச்சு அவருக்கு?

அதை ஏன் கேக்கறீங்க... அது ஒரு சோக கதை

அப்படின்னா...?

அவன் செத்துட்டான்..!

ஐயோ பாவம்...எப்படிச் செத்தார்?

அது தானே இன்னமும் எங்களுக்கு நிச்சயமாக தெரியலே...

என்ன சொல்றீங்க... எப்படி இறந்தார்ன்னு தெரியலையா...?

அப்படி இல்லே.. எங்களுக்கு சந்தேகம் என்ன... ன்னா அவர் இறந்துட்டாரா... அப்படிங்கறது தான்.

அப்படின்னா அவர் எங்காவது மறைஞ்சுட்டாரா....அல்லது அவரை இழந்துட்டீங்களா?

அப்படியும் அதை தீர்மானமாச் சொல்ல முடியாது. ஒரு வேளை அப்படியும் இருக்கலாம். ஏன்னா மரணம்ங்றதும் ஒரு“ இழப்பு தானே... அந்த வகையிலே பார்த்தா அது மரணம் தானே நிருபர் குழம்பினார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பாக்கி இருந்து அவரிடம் ஆகவே தொடர்ந்துகேட்டார்.

நீங்க ன்ன சொல்றீங்க..? அவர் இறந்து போனதே நிச்சயமில்லலேங்கறீங்களா?

சரி.. அவ்வளவு தூரத்துக்கு ஏன்... நடந்தது என்னங்கறதை விவரமாவே சொல்லிப்புடறேன் கேட்டுக்குங்களேன்.

நிருபர் நம்பிக்கை யோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். கையில் இருந்த குறிப்பு புத்தகமும் பென்சிலும் சுறுசுறுப்பாக இயங்க காத்திருந்தன. அவுர் சொல்ல ஆரம்பித்தார்.

நாங்க ரெண்டுபேர்... இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஒருத்தர் பெயர் பில் இன்னொருத்தர் பெயர் ட்வைன் ஒரு நாள் குளித்து கொண்டிருக்கும்போது அந்த விபத்து நடந்தது. சின்னப்பையன் தொட்டியிலே மூழ்கி விட்டான்.

ஓ... அப்படியா? இப்பத்தான் எனக்கு புரியுது... உங்க சகோதரர் குழந்தையா இருக்கும்போதே செத்துட்டார்ங்கறீங்க

அப்படியும் சொல்ல முடியாது

என்ன சொல்றீங்க?

நாங்க இரட்டை குழந்தைங்க... எங்களில் யாரோ ஒருத்தர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். அது மார்க் ட்வைனா.... அல்லது பில்லாங்களது நிச்சயமாத் தெரியாது.

அப்படின்னா?

அதுதான் ஆரம்பத்துலேயே சொன்னேன்..

பில் இறந்து விட்டது சந்தேகம்..ன்னு

பேட்டி காண வந்த நிருபர் பேய் அறைந்தது போல் அதிர்ச்சிகுள்ளாகி.. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிப்போனாராம். அதன்பிறகு அவர் பத்திரிகை தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டதாக கேள்வி.

-தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 11, 2012 1:59 pm

குழப்புவதில் சிறந்த வல்லவரா இருப்பார் போல! மார்க் ட்வைன்!

அனைத்து குழப்பமும் ரசிக்க படியாய் இருந்தது அண்ணா!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 11, 2012 2:26 pm

சிவா wrote:ஓ,.... அதை கேக்கறீங்களா... இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க சொல்றேன்னா....

இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.

வெள்ளை ஆடுகள்....?

அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்

ஹா.. விழுந்து விழுந்து சிரித்து விட்டேன்.. அருமை தல

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 11, 2012 7:00 pm

நல்லா இருந்தது.
நன்றிகள்.

நீங்களும் சிறிதாக குழப்பியிருக்கிரீர்கள்.
சிவா wrote:வேறு என்ன செய்யலாம்? குழப்புவ9து தான் சரியான வழி என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 11, 2012 7:04 pm

அத்துனையும் அருமை அண்ணா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Nov 12, 2012 7:56 am

இல்ல, தெரியாமத்தான் கேக்குறன்,
நீங்க எங்கள குழப்புரீங்களா, இல்ல நீங்க குழம்பிப் போய் இருக்கீங்களா?
நேத்து போட்டதுல இன்னிக்கு எனக்கு எல்லாமே குழப்பமா இருக்கு.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 7:57 am

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் பாணியில் அவர் படிப்பது அல்லது சொல்வது போலவே யோசித்து வாசித்தேன்.இப்படியும் குழப்பலமா எனத்தோன்றியது.பகிர்விற்கு நன்றி அண்ணா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 1:42 pm

தென்கச்சி அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை! அவரது குழப்பத்தைக் குழப்பமின்றிப் படித்த உள்ளங்களுக்கு நன்றி!

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக