புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
100 Posts - 48%
heezulia
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
7 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
227 Posts - 51%
heezulia
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10கவிதையில் யாப்பு - Page 5 Poll_m10கவிதையில் யாப்பு - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 5 of 29 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 17 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 23, 2012 7:43 am

பயிற்சி 8. விடை

கடுகடுக்கும் முகத்தோற்றம் உதட்டினிலே சுடுபேச்சு
எஞ்ஞான்றும் மனம்நீங்கா தசந்தேகம் மணமுறிவு
வாழ்வினிலே உயர்ந்தாலும் வளமில்லா நிழல்வாழ்வு.

பயிற்சி 9. விடை

மீன்துள்ளும் குளத்தினிலே கயல்விழியாள் துள்ளுவதும்
மான்துள்ளும் வனத்தினிலே மறியெனவே துள்ளுவதும் ... [மறி = மான்குட்டி]
ஊன்துள்ளும் உடல்துள்ளப் பதம்துள்ள ஆடுவதை
மனம்துள்ள நாத்துள்ள நானுரைக்க நாணுவதேன்?

மீன்/துள்/ளும் குளத்/தினி/லே கயல்/விழி/யாள் துள்/ளுவ/தும்
மான்/துள்/ளும் வனத்/தினி/லே மறி/யென/வே துள்/ளுவ/தும் ... [மறி = மான்குட்டி]
ஊன்/துள்/ளும் உடல்/துள்/ளப் பதம்/துள்/ள ஆ/டுவ/தை
மனம்/துள்/ள நாத்/துள்/ள நா/னுரைக்/க நா/ணுவ/தேன்?

நேர்நேர்நேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
நேர்நேர்நேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நேர் நிரைநேர்
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர

தேமாங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய்
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்

கலித்தளை கலித்தளை வெண்சீர்வெண்டளை / வெண்சீர்வெண்டளை
கலித்தளை கலித்தளை வெண்சீர்வெண்டளை / வெண்சீர்வெண்டளை
கலித்தளை கலித்தளை வெண்சீர்வெண்டளை / கலித்தளை
வெண்சீர்வெண்டளை வெண்சீர்வெண்டளை வெண்சீர்வெண்டளை
[வெண்சீர்வெண்டளை = 8 கலித்தளை = 7]

மோனைகள்:
அடி 2 மா வ ம -- கூழை மோனை
அடி 3 ஊ உ -- -- இணை மோனை
அடி 4 -- நா நா நா -- முதற்சீரில் மோனையில்லாததால் இவை மோனையாகாதெனினும் ஓசை வலியுறுத்தும்.

எதுகைகள்:
மீன் மான் ஊன் -- அடியெதுகை முதல் மூன்று அடிகளில்

முடிவாக:
1. வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வருவதால்
இந்தச் செய்யுளில் வரும் ஓசை தூங்கிசைத் துள்ளல் எனப்படும்.
2. எதுகையும் மோனையும் ’துள்ளு’ என்று வரும் இயைபும் ஓசை சிறக்க உதவுகின்றன.
3. இடையினமும் மெல்லினமும் பயிலும் சொற்கள் மேலும் உதவுகின்றன.

பயிற்சி 10. விடை

உருளைபல வளைந்தோடும் தடங்களிலே விரைந்தோடி
இருப்புவழி இணைத்தடத்தில் தொடர்வண்டி ஒலிக்குழப்பம்
சுருதிகளை அறைந்திடவே கலங்கிடுமென் மனமதுவே
ஊர்ந்துமெல்லச் செலும்பொழுது ஒலியிசைவில் குதூகலிக்கும்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 24, 2012 7:30 am

3.14. தூங்கல் பயிற்சி

நினைவிற் கொள்ள:
தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.

வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்‍ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.

பயிற்சி 1. அகவலில் இருந்து தூங்கல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றி
இருசீர் அடிகளில் வஞ்சித் தளைபயின்று
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


பயிற்சி 2. செப்பலில் இருந்து தூங்கல்

எள்ளும் பாம்பும் ஒன்றெனக் காளமேகம்
வெள்ளிய பாவில் சிலேடையாய்ச் சொன்னதை
இருசீர் அடிகளில் வஞ்சித் தளைபயின்று
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் -- தேடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.
---காளமேகப் புலவர், பாம்பும் எள்ளும் சிலேடை


பயிற்சி 3. துள்ளலில் இருந்து தூங்கல்

கீழ்வரும் தூங்கல் அடிகளை மாற்றி
இருசீரடி ஒன்றிய வஞ்சித் தளைபயின்று
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


பயிற்சி 4. உரைநடை வாக்கியத்திலிருந்து தூங்கல்

1. நெல் கதிர்களின் தலைகளை தென்றல் காற்று கொய்து சென்றது!
2. இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.
3. பெருமாள் படி அளந்ததால் தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 24, 2012 10:35 pm

3.14. தூங்கல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. அகவலில் இருந்து தூங்கல்: விடை

பின்வருவதை முன்சொல்லிடும்
அரியதாகிய கலையதனிலே
கரையறுகிற வல்லமையினைக்
கொண்டுள்ளவர் மிகச்சிலருளர்.

பயிற்சி 2. செப்பலில் இருந்து தூங்கல்: விடை

ஆடியபடியது குடத்திலடையும்
ஆடுமதுவே இரைந்தாடிடும்
மூடியதனைத் திறந்துபார்த்திட
முகங்காட்டிடும் -- தேடிமண்டயைப்
பற்றினாலது பரபரவெனும்
பாரதுவினில் பிண்ணாக்குள
உற்றிதுவென பாம்புமெள்ளுமே
ஒன்றாவது ஓதுதல்தகும்.

பயிற்சி 3. துள்ளலில் இருந்து தூங்கல்: விடை

படியளந்திடப் பெருமாளது
வரம்தரும்கரம் இருக்கின்றதே!
அடிநோக்கிட நதிகங்கையும்
அமுதூற்றெனப் பொழிகின்றதே!

பயிற்சி 4. உரைநடை வாக்கியத்திலிருந்து தூங்கல்: விடை

1. நெல் கதிர்களின் தலைகளை தென்றல் காற்று கொய்து சென்றது!

நெற்கதிர்களின் தலைமுழுவதும்
கொய்துசென்றது தென்காற்று!

2. இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

இருமருங்கிலும் மணல்பரந்திடக்
கரைவிளிம்பினில் கையகலமே
நீராடிடும் வறள்காவிரி.

3. பெருமாள் படி அளந்ததால் தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!

படியளந்திடும் பெருமாளிடம்
பாவங்களைப் பணமாக்கியே
போட்டனரவர் உண்டியலில்!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 25, 2012 7:08 am

பயிற்சி 5. புளிமாங்கனிகளில் வரும் தூக்கம்!

பெயர்ச்சொற்கள் முதல்வரியில் வினைச்சொற்கள் அடுத்து.
இரண்டும் இணைத்து அந்தாதி போல்வர
இருசீர்களில் புளிமாங்கனி மட்டும் பயின்று
ஐந்து அடிகளில் வஞ்சித்தளை ஒன்றித்
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

உடல் மனம் நினைவு உறக்கம் விழி இமை
வருதல் ஓய்தல் மூடுதல் சோர்தல்


பயிற்சி 6. வஞ்சித் தளை விளைக்கும் தூங்கலோசை

கீழ்வரும் ஒன்பது சொற்களை வைத்துக்
கோடிட்ட இடங்கள் பூர்த்தி செய்து
அடிகள் அனைத்திலும் வஞ்சித் தளைகண்டு
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

மயங்கிடும்நிலை திரள்வந்திடும் மூச்சிரைத்திட முரல்வண்டினம் தெருநாயது
காத்திருக்கிற கையறுநிலை கடற்கரையினில் மழைபெய்யுமுன்

மலரமர்ந்திடும் -----
மதுவுண்டிட -----
----- கருமேகமாய்த்
----- மந்தவான்நிலை
தினமலைந்திடும் -----
----- ஓய்ந்திடும்நிலை
----- -----
காதலியது -----
மேல்வந்திடும் அடிகளிற்பயில்
வஞ்சித்தளை விளைத்திடுவது
தூங்கலோசையென் றறிவோம்நாம்.


பயிற்சி 7. ஒன்றா வஞ்சித் தளையில் தூங்கலோசை

சீரிடை மட்டும் அடியிடை யின்றி
ஒன்றா வஞ்சித் தளைபயிலச் சொற்களை
முச்சீர் அடிகள் நான்கில் அமைத்துத்
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

அகமுடையவன் சாப்பிடுவது காலையாகிடக் பகலிரவினில் கிட்டலிவடை ஆவதற்குமுன்
வாழ்க்கைமணம். வில்வாத்திரி பத்மாகபே காலையுணவுக் கண்விழித்தபின் சட்டினியுடன்


*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 25, 2012 5:59 pm

பயிற்சி 5. புளிமாங்கனிகளில் வரும் தூக்கம்!: விடை

இமைசோர்ந்திட விழிமூடிடும்
விழிமூடிட மனம்சோர்ந்திடும்
மனம்சோர்ந்திட நினைவோய்ந்திடும்
நினைவோய்ந்திட உடல்சோர்ந்திடும்
உடல்சோர்ந்திட உறக்கம்வரும்.

பயிற்சி 6. வஞ்சித் தளை விளைக்கும் தூங்கலோசை: விடை

மலரமர்ந்திடும் முரல்வண்டினம்
மதுவுண்டிட மயங்கிடும்நிலை
மழைபெய்யுமுன் கருமேகமாய்த்
திரள்வந்திடும் மந்தவான்நிலை
தினமலைந்திடும் தெருநாயது
மூச்சிரைத்திட ஓய்ந்திடும்நிலை
கடற்கரையினில் காத்திருக்கிற
காதலியது கையறுநிலை
மேல்வந்திடும் அடிகளிற்பயில்
வஞ்சித்தளை விளைத்திடுவது
தூங்கலோசையென் றறிவோம்நாம்.

பயிற்சி 7. ஒன்றா வஞ்சித் தளையில் தூங்கலோசை: விடை

காலையாகிடக் கண்விழித்தபின் பத்மாகபே
காலையுணவுக் கிட்டலிவடை சட்டினியுடன்
பகலிரவினில் சாப்பிடுவது வில்வாத்திரி
அகமுடையவன் ஆவதற்குமுன் வாழ்க்கைமணம்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 7:15 am

பயிற்சி 8. குறளடி வஞ்சிப்பாவில் தூங்கல்

கீழ்வரும் இருசீர்க் குறளடி
வஞ்சிப் பாவில் தனிச்சொல்லின் மேலுள்ள
மூன்று அடிகளை அளவிட்டுத் தளையும்
தூங்கள் ஓசையும் பயில்வது அறிக.
தனிச்சொல்லும் பின்வரும் சுரிதகம் பற்றியும்
வேறோர் இயலில் விரித்துக் காண்போம்.

வெண்டாமரை மலரிருப்பவள்
வெண்பட்டுடை அணிந்திருப்பவள்
வாக்தேவியாம் கலைமகளவள்
அதனால்
கல்வியில் சிறந்து ஞானம் எய்திடக்
கலைமகள் அருளை வேண்டு வோமே.


பயிற்சி 9. சிந்தடி வஞ்சிப்பாவில் தூங்கல்

கீழ்வரும் எட்டு சொற்களை வைத்துக்
கோடிட்ட இடங்கள் பூர்த்தி செய்து
பின்வரும் சிந்தடி வஞ்சிப் பாவின்
முதலடி நான்கில் வஞ்சித் தளைகண்டு
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

மகளிர்தலை தனியனுபவம். கதிரவனொளி மினுமினுத்திடும்.
மெருகேற்றிடக் விசும்பில்கதிர் கண்வழிந்திடச் நடந்துசெல்வது

காலையினிளம் ----- -----
சாலையின்வழி ----- -----
நீலம்நிறை ----- -----
கோலம்விரி ----- -----
எனவே
காலையில் எழுந்தூர்ச் சாலையில் நடந்தால்
கோலப் பெண்டிர் கைவினை விழிபடும்.


பயிற்சி 1௦. வஞ்சித் தளைவர மாற்றுதல்

கீழ்வரும் பட்டினப் பாலை அடிகளில்
வேற்றுத் தளைகளை வஞ்சித் தளகளாக்கித்
தூங்கல் ஓசை கேட்க எழுதுக.

வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
---கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை 5-7


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 27, 2012 7:08 am

3.15. செய்யுள் ஓசை வகைகள்

அகவல் செப்பல் துள்ளல் தூங்கலென்று
செய்யுள் ஓசைகள் நான்கென அறிந்தபின்
ஒவ்வொரு ஓசையின் வகைகள் அறிவோம்.

ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை என்று
அகவலும் செப்பலும் மூவகை வருமே.
ஏந்திசை அகவல் பிரிந்திசை என்று
துள்ளலும் தூங்கலும் மூவகை வருமே.

ஏந்திசை அகவலில் மாமுன் நேர்வரும்
நேரொன் றாசிரியத் தளைதான் அமையும்.
தூங்கிசை அகவலில் விளம்முன் நிரைவரும்
நிரையொன் றாசிரியத் தளைதான் அமையும்.
ஒழுகிசை அகவலில் இரண்டும் பிறவும்.

ஏந்திசைச் செப்பலில் காய்முன் நேர்வரும்
வெண்சீர் வெண்டளை மட்டுமே அமையும்.
தூங்கிசைச் செப்பலில் மாமுன் நிரையும்
விளம்முன் நேர்வரும் இயற்சீர் வெண்டளை
மட்டுமே விரவும். வெண்சீர் வராது.
ஒழுகிசை செப்பலில் வெண்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளை விரவும். பிறவரா.

ஏந்திசைத் துள்ளலில் காய்முன் நிரைவரும்
கலித்தளை மட்டும் பயின்று வருமே.
அகவலில் வெண்சீர் வேண்டளை விரவும்.
பிரிந்திசையில் வேறு தளையும் விரவும்.

ஏந்திசைத் தூங்கலில் கனிமுன் நிரைவரும்
ஒன்றிய வஞ்சித் தளைதான் அமையும்.
அகவல் தூங்கலில் கனிமுன் நேர்வரும்
ஒன்றாத வஞ்சித் தளைதான் அமையும்.
பிரிந்திசைத் தூங்கலில் பிறதளை விரவும்.

*****

3.16. செய்யுள் ஓசை வகைகள் முயற்சி

கீழ்வரும் அடிகளில் ஏந்திசை அகவல்.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கள்ளும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.


தேமா தேமா தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா தேமா தேமா தேமா
[மா முன் நேர் வந்த நேரொன்றாசிரியத் தளை]

கீழ்வரும் அடிகளில் தூங்கிசை அகவல்.
படித்ததை மறந்திடு கொடுத்தது பயனுற
கடவுளின் அருள்வர உயிரொளி தெரிந்திடும்.


கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
[விளம் முன் நிரை வந்த நிரையொன்றாசிரியத் தளை]

கீழ்வரும் அடிகளில் ஒழுகிசை அகவல்.
கண்ணனின் அருளால் ஞானம் பெற்றுத்
திண்ணம் முக்தியே பிறவிகள் அகன்றிட.


கூவிளம் புளிமா தேமா தேமா
தேமா கூவிளம் கருவிளம் கருவிளம்
[ஆசிரியத் தளைகள் இரண்டும் விரவி வந்தன.]

இவ்வாறு வந்திடுமே ஏந்திசையாய்ச் செப்பலோசை.
பாழடைந்த கேணியிலே பேயொன்று ஓலமிடும்
போவோர்க்கு அவ்வழியே தீது.


கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் காசு
[காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை]

இந்த அடிகளில் தூங்கிசைச் செப்பல்.
அழிந்த கிணற்றில் ஒருபேய் கதறும்
வழியது போனால் பயம்.


புளிமா புளிமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்
[மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை]

இப்படி வந்தால் ஒழுகிசைச் செப்பல்.
அழிந்த கிணற்றினிலே பேயொன்று கத்தும்
வழியது போனாலே தீது.


புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
கருவிளம் தேமாங்காய் காசு
[இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள் விரவி வந்தன.]

கீழ்வரும் அடிகளில் ஏந்திசைத் துள்ளல்.
படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
[சீரிடை அடியிடைக் காய் முன் நிரை வந்த கலித்தளை]

கீழ்வரும் அடிகளில் அகவல் துள்ளல்.
படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை உள்ளதேகாண்!
அடிநோக்க கங்கைநதி ஊற்றமுதாய்ப் பெய்வதுகாண்!


கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
[காய் முன் நிரை வரும் கலித்தளையும்
காய் முன் நேர் வரும் வெண்சீர் வெண்டளையும் விரவின.]

கீழ்வரும் அடிகளில் பிரிந்திசைத் துள்ளல்.
நினைததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


கருவிளங்காய் கருவிளங்காய் தேமா கூவிளங்காய்
கருவிளங்காய் கருவிளங்காய் புளிமா கூவிளங்காய்
[கலித்தளையுடன் வெண்சீர் வெண்டளை, நேரொன்றாசிரியம் விரவியது.]

கீழ்வரும் அடிகளில் ஏந்திசைத் தூங்கல்.
படியளந்திடப் பெருமாளது வரம்தரும்கரம் இருக்கின்றதே!
அடிநோக்கிட நதிகங்கையும் அமுதூற்றெனப் பொழிகின்றதே!


கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி
[சீரிடை அடியிடைக் கனி முன் நிரை வந்த கலித்தளை]

இப்படி வந்தால் அகவல் தூங்கல்.
படியளந்திட மாதவனது கைவரம்தர உள்ளதுதெளி
பாதவிணையில் கங்காநதி ஊற்றமுதெனப் பெய்வதுதெளி.


கருவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
[சீரிடை அடியிடைக் கனி முன் நேர் வந்த ஒன்றா வஞ்சித்தளை]

இப்படி வருவது பிரிந்திசைத் தூங்கல்.
படியளந்திடப் பெருமாளது வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்கிட கங்காநதி ஊற்றமுதெனப் பொழிகிறதே!


கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்கனி தேமாங்கனி கூவிளங்கனி கருவிளங்காய்
[ஒன்றிய, ஒன்றா வஞ்சித்தளைகள் கலித்தளை விரவியது.]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 28, 2012 9:06 am

4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்

ஓசை ஒருங்கே அசையாய் இசைந்து
இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
ஒசை ஒருங்கே அமையத்
தளைகள் முக்கியம் என்றும்
அறிந்த பின்னர் இனிமேல்
செய்யுளின் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம்.

முன்பே சொன்னதை நினைவில் கொணர
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழெனத் தெரியும். ... [பார்க்க 3.,2.1.]

4.1. மாத்திரை

மாத்திரை என்பது கால அளவு.
கண்ணிமை கைநொடி செய்தல் காலம்
மாத்திரை யாகும் ஒன்றென்(று) அறிக.

மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்.
எழுத்தின் மாத்திரை இப்படி யாகும்:
குறிலொன்று, நெடிலிரண்டு, உயிரளபெடை மூன்று.

குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,
ஆய்தம், மெய்யிவை அரைமாத் திரையே;
உயிரின் அளவே உயிர்மெய் அளவு.

ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம் ஒன்று;
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன கால்மாத் திரையில் ஒலிக்கும்.

4.2. எழுத்து

எழுத்தெனும் சொல்லது எழுவெனும் வினையடிப்
பிறந்த பெயர்ச்சொல் லாக வருவது.
எழுதல் என்றால் உருபெற்றுத் தோன்றுதல்.
எழுதுதல் என்பது தோன்ற வைத்தல்.

எண்ணம் உருப்பெறத் தோன்றும் எழுத்து.
உருவின்றிக் ஒலியாய்க் கேட்டதை வரைந்து
உருவுடன் பார்க்க வைப்பது எழுத்து.

எண்ணங்கள் அலையுமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணங்கள் விரிந்து காணுமனம் நிறைக்கும்.
எழுத்து இன்றேல் இலக்கியம் இல்லை.

எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்கி யுள்ளன.
எழுத்தே முதலில் ஓரொலியின் வரிவடிவம்.

எழுதுதலும் எழுதியதும் குறிக்கும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்து.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போது
இலக்கணம் என்று பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்று ஔவையும் குறள்வழி கூறுவார்.

எழுதும் எழுத்து வரிவடிவு என்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரமும் சுட்டும்.

கண்ணுக்கு மையெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனதில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனதில் எழுதும்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 29, 2012 12:11 pm

4.3. எழுத்தென்பது

எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுதப் படுவது எழுத்தெனப் படும்
என்று இலக்கண நூல்கள் குறிக்கும்.

4.4. எழுத்தின் வகைகள்

எழுத்தின் என்பது மூவகைப் படும்
உயிரும் மெய்யும் சார்பும் என்று.

4.5. முதலும் சார்பும்

உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்;
முதல்சார்ந்து வந்தது சார்பெழுத் தாகும்.

4.6. முதல் முப்பது

முதலில் வருவது மொத்தம் முப்பது;
உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டும்.

4.7. உயிரின் வகைகள்

அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்;
உயிரில் வகைகள் மூன்று உண்டு
குறிலே நெடிலே அளபெடை என்று.

குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.

4.8. மெய்யின் வகைகள்

இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்;
மெய்யில் வகைகள் மூன்று உண்டு
வல்லினம், மெல்லினம், இடையினம் என்று.

கசடதபற வல்லின மாகும்;
ஙஞணநமன மெல்லின மாகும்;
யரலவழள இடையின மாகும்.
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.

4.9. சார்பின் வகைகள்

சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும்:
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
குற்றிய லுகரம், குற்றிய லிகரம்,
ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம்,
மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம்
என்பன அந்தப் பத்து வகைகள்.

முதலெழுத் துகளைச் சார்ந்து வருதலால்
மேல்வரும் பத்தும் சார்பெழுத் தெனப்படும்.

4.10. உயிர்மெய்

இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்து
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாக
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

4.11. ஆய்தம்

உயிரிலும், மெய்யிலும், உயிர்மெய் யிலும்சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்துக்கு
முப்புள்ளி, முப்பாற் புள்ளி, தனிநிலை
என்று வேறு பெயர்களும் உண்டு.

முன்னொரு குறிலும் பின்னொரு வல்லினமும்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
அதாவது, அஃது, எஃகு, எனவரும்.

தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 30, 2012 9:03 am

4.12. அளபெடை யென்பது

செய்யுளில் ஓசை குறையும் போது,
உயிர்நெடில் எழுத்துகள் ஏழும்,
ஙஞணநமன வயலள பத்தும்,
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும்,
தத்தம் மாத்திரை நீண்டு ஒலிக்கும்
அளபெடை இருவகை: உயிரும் ஒற்றும்.

4.13. உயிரளபெடை

நெடில்பின் தக்க குறிலே வந்து
ஒசை நிரப்பும் உயிரள பெடையாம்
மூன்று மாத்திரை யாக ஒலிக்கும்.
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்று.

அளபெடுக்கும் போதொரு இனவெழுத்து தோன்றும்:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

4.14. செய்யுளிசை அளபெடை

ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத்து வந்தால்
செய்யுளிசை அளபெடை என்று பெயர்பெறும்.

’ஆஅதும் என்னுமவர்’ என்று முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்று இடையிலும்,
’நல்ல படாஅ’ என்று கடையிலும்
செய்யுளிசை அளபெடுத்து வருவது காண்க.

மேல்வந்த சான்றுகளில் ’தொழாள்’எனும் ஓரசைச்
சீரே ’தொழாஅள்’ என்று அளபெடுத்து
ஈரசை யாகி இடையில் நிற்கத்
தகுதிபெற்று ஓசை நிறைத்தல் காண்க.

4.15. இன்னிசை அளபெடை

ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை என்று பெயர்பெறும்.

’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.

’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்களில்
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத்தல் காண்க.

4.16. சொல்லிசை அளபெடை

ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றாக வேறுபடுத்தி,
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை என்று பெயர்பெறும்.

சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
என்பன சொல்லிசை அளபெடைச் சான்றுகள்.

"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்று
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.

4.17. ஒற்றள பெடை

மெய்யெழுத்து மிகுந்து ஒலித்து பாட்டில்
ஒசை நிரப்புவது ஒற்றள பெடையாம்.

செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய்ய இடைகடை அளபெடுத்து
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததுகாட்ட மீண்டும் எழுதப்படும்.

குறிலின் குறிலிணையின் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வரும்.

’எஃஃகு இலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.

’எஃஃகு, இலங்கிய’ தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க.

சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளொசை நிறைத்தல் காண்க.



Sponsored content

PostSponsored content



Page 5 of 29 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக