புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 20 of 29 •
Page 20 of 29 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

5.72 அளபெடைத் தொடைப் பயிற்சி
பயிற்சி 1. அளபெடைத் தொகை விகற்பம் அறிதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் பாடலின் முதலே ழடிகளில்
ஏழ்விகற் பத்தில் வருகிற அளபெடை
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.
கூழை ஒரூஉ கீழ்க்கதுவாய் பொழிப்பு
மேற்கதுவாய் முற்று இணை
தாஅட் டாஅ மரைமல ருழக்கிப் ----------
பூஉக் குவளைப் போஒ தருந்திக் ----------
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் ----------
மாஅத் தாஅண் மோஒட் டெருமை ----------
தேஎம் புனலிடைச் சோஒர் பாஅன் ----------
மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர் ----------
ஈ ராஅர் நீஇ ணீஇர் ----------
ஊரன் செய்த கேண்மை
ஆய்வளைத் தோளிக் கலரா னாதே.
*****

பயிற்சி 1. அளபெடைத் தொகை விகற்பம் அறிதல்: விடை
தாஅட் டாஅ மரைமல ருழக்கிப் ... ... (இணையளபெடை)
பூஉக் குவளைப் போஒ தருந்திக் ... ... (பொழிப்பு)
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் ... ... (ஒரூஉ)
மாஅத் தாஅண் மோஒட் டெருமை ... ... (கூழை)
தேஎம் புனலிடைச் சோஒர் பாஅன் ... ... (மேற்கது)
மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர் ... ... (கீழ்க்கது)
ஈ ராஅர் நீஇ ணீஇர் ... ... (முற்று)

5.75 விகற்பமிலாத் தொடைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடைகள் எட்டு வருவன வற்றில்
மோனை எதுகை முரணியை(பு) அளபெடை
ஆனயிவ் வைந்தும் எண்வகை விகற்பம்
பெற்று வருமென உற்று நோக்கினோம்
எஞ்சி நிற்கும் தொடைகள் மூன்றும்
அந்தாதி இரட்டைச் செந்தொடை யாகும்
இவற்றின் இயல்பு நோக்கும் போது
விகற்பம் ஏதும் பெறவிய லாதென
எளிதில் அறிந்து கொள்வோம் நாமே.
அந்தாதி இரட்டைச் செந்தொடை மூன்றும்
விகற்பம் ஏதும் இல்லா திருப்பதால்
விகற்ப மில்லாத் தொடையெனப் படுமே.
அந்தம் முதலாத் தொடுப்ப(து) அந்தாதி
வந்தமொழி அடிமுழுதும் வருவது இரட்டை
எந்தத் தொடையும் இல்லாதது செந்தொடை.
5.76 அந்தாதித் தொடை
(குறள் வெண்செந்துறை)
அந்தம் முதலாத் தொடுப்ப தந்தாதி
வந்தது திரும்பவும் வகையாய் வருமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியொன்றின் அந்தமென முடியும் எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ அடியோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே.
அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே.
சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே.

5.77 அந்தாதித் தொடை முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி கொஞ்சம் எழுதி நாமும்
அடிதோறும் வருகிற அந்தாதி முயன்று
விடியும் காலையில் வேலைகள் உரைப்போம்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
காலையில் எழுந்து காப்பி குடித்து
குடித்த காப்பிமணம் உளத்தில் அமர
அமர்ந்து செய்திகள் ஆறப் படித்து
படித்த பேப்பரை மடித்து விட்டு
விட்டு ஒலிக்கும் வினாடியின் ஒலிகள்
ஒலித்து மனதில் ஓலம் எழுப்ப
எழுந்து குளியல் விரைவாய் முடித்து
முடியைத் துவட்டி உடைகள் அணிந்து
அணிந்து மேசையில் அமர்ந்து கொரித்து
கொரித்ததும் கால்கள் ஓட நடந்து
நடனம் இட்டு சாலை கடந்து
கடையரு கில்லொரு பஸ்ஸில் ஏறி
ஏறி நின்றே பயணம் செய்து
செய்ய வேண்டிடும் வேலைகள் நினைத்து
நினைவுகள் விரட்ட லிஃப்டில் உயர்ந்து
உயரதி காரியின் முகம்சொல் விரட்டுமுன்
விரட்டும் கணிணியில் வேலை முடிக்க
முடியைப் பிய்த்து ஓயவரும் மாலை!
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி கொஞ்சம் எழுதி நாமும்
அடிதோறும் வருகிற அந்தாதி முயன்று
விடியும் காலையில் வேலைகள் உரைப்போம்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
காலையில் எழுந்து காப்பி குடித்து
குடித்த காப்பிமணம் உளத்தில் அமர
அமர்ந்து செய்திகள் ஆறப் படித்து
படித்த பேப்பரை மடித்து விட்டு
விட்டு ஒலிக்கும் வினாடியின் ஒலிகள்
ஒலித்து மனதில் ஓலம் எழுப்ப
எழுந்து குளியல் விரைவாய் முடித்து
முடியைத் துவட்டி உடைகள் அணிந்து
அணிந்து மேசையில் அமர்ந்து கொரித்து
கொரித்ததும் கால்கள் ஓட நடந்து
நடனம் இட்டு சாலை கடந்து
கடையரு கில்லொரு பஸ்ஸில் ஏறி
ஏறி நின்றே பயணம் செய்து
செய்ய வேண்டிடும் வேலைகள் நினைத்து
நினைவுகள் விரட்ட லிஃப்டில் உயர்ந்து
உயரதி காரியின் முகம்சொல் விரட்டுமுன்
விரட்டும் கணிணியில் வேலை முடிக்க
முடியைப் பிய்த்து ஓயவரும் மாலை!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5.78 அந்தாதித் தொடைப் பயிற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் கலைந்த அந்தாதிச் சீர்களை
பின்வரும் பத்து அடிகளில் கோட்டினில்
சரிவர அமைத்து அந்தாதி கண்டு
பத்து நேரிசை வெண்பா பயிலும்
வெண்பா மாலையின் ஈற்றடி முதலடி
தக்க முறையில் அமைவது காண்க.
பறந்தும் கிளைவளர் கடுகன்ன அழிவு குரல்கள்
அழியுமே தெங்கு கழிப்பில் கடுகு
கிளைத்து கொக்குகள் பறந்து நலிந்தெழும் தெங்கு
நலிவு குரல் கொக்கு கழிப்பு
ஆனந்த வாழ்வின் -----. ... 1
----- வானுயிர் ஆக்கமும் பண்ணும்
கிந்தும்நம் சிந்தை -----. ... 2
----- வேம்பினில் கீழ்வரும் ஓசை
பருமரம் ஏறும் -----. ... 3
----- துரத்தியும் பார்க்கும் குருவி
நண்ணும் குருவி -----. ... 4
----- ஊதா நிறத்தில்மீன் கொத்தி
கரண்டும் அணிற்கண் -----! ... 5
----- மேனியில் காதுறு சீழ்க்கை
கோவினம் காலிடைக் -----. ... 6
----- மாட்டின்கால் கொத்தியே பூச்சிகள்
தென்றல் கலைத்தலை -----. ... 7
----- நிலத்திடைத் தேங்கும் மழைநீரில்
குழந்தை மிழற்றும் -----! ... 8
----- ஒலிகள் குறைந்திடும் வண்ணம்
கண்ணிமைப் போதில் -----. ... 9
----- அறிவியல் கண்டிடும் மாண்பில்

5.78 அந்தாதித் தொடைப் பயிற்சி: விடை
ஆனந்த வாழ்வின் அழிவு. ... 1
அழியுமே வானுயிர் ஆக்கமும் பண்ணும்
கிந்தும்நம் சிந்தை கிளைத்து. ... 2
கிளைவளர் வேம்பினில் கீழ்வரும் ஓசை
பருமரம் ஏறும் பறந்து. ... 3
பறந்தும் துரத்தியும் பார்க்கும் குருவி
நண்ணும் குருவி நலிவு. ... 4
நலிந்தெழும் ஊதா நிறத்தில்மீன் கொத்தி
கரண்டும் அணிற்கண் கடுகு! ... 5
கடுகன்ன மேனியில் காதுறு சீழ்க்கை
கோவினம் காலிடைக் கொக்கு. ... 6
கொக்குகள் மாட்டின்கால் கொத்தியே பூச்சிகள்
தென்றல் கலைத்தலை தெங்கு. ... 7
தெங்கு நிலத்திடைத் தேங்கும் மழைநீரில்
குழந்தை மிழற்றும் குரல்! ... 8
குரல்கள் ஒலிகள் குறைந்திடும் வண்ணம்
கண்ணிமைப் போதில் கழிப்பு. ... 9
கழிப்பில் அறிவியல் கண்டிடும் மாண்பில்

5.80 இரட்டைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே ... (யாப்பருங்கலம்)
இரட்டை வருமொழி அடிமுழு தும்வரும்
அடிமுதற் சீரே அடிபிற சீர்களில்
அதுவே யாகப் பயிலுதல் இரட்டை.
சான்றுகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீரெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்.
நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்
மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்.
--யாப்பருங்கலம்
(இன்னிசை வெண்பா)
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
கோவீற் றிருந்தான் கொடை.
--நேமிநாதம், பக்.30
மேல்வந்த சான்றுகளில் சொல்லும் பொருளும்
வேறு படாது வருதல் காண்க.
சொல்வேறு படாது பொருள்வேறு பட்டு
வருவதும் இரட்டைத் தொகைவகைச் சேரும்.
சான்று:
ஓடையே ஓடையே ஓடையே ஓடையே
கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்
மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்
கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்!
நாடி உணர்வார்ப் பெறின்.
--யாப்பருங்கலம்
[ஓடை - குடை வேலமரம், மலைவழி,
யானை நெற்றிப் பட்டம், நீரோடை எனக் கொள்க.]
இருசீர் திரும்புதல் இரட்டை யல்ல
ஒருசீர் மாறியும் திரும்புதல் இல்லை
ஒருசீர் அதுவே அடிபிற சீர்களில்
திரும்புதல் இரட்டைத் தொடையின் இலக்கணம்.
கீழ்வரும் சான்றுகள் இரட்டை யல்ல.
இரட்டைத் தொடை யல்ல:
பல்சான்றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
--புறநானூறு 247
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதிலும்
--பாரதியார்
5.81 இரட்டைத் தொடை முயற்சி
(குறள் வெண்செந்துறை)
சீரொன்று அதுவே திரும்பிடும் முதலடி
இரட்டைகள் முயல்வோம் இன்றைய வழக்கில்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
காப்பிக் காப்பிக் காப்பிக் காப்பி!
காப்பி சூடான காப்பி! காப்பிசார்?
எத்தனை கப்புங்க? ரெண்டு கப்கொடு
பத்து ரூவா தாங்க சார்,காப்பீ!
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
இல்லீங்க இல்லீங்க இல்லீங்க இல்லீங்க!
பல்லை உடைப்பேன் பரதேசி! - சொல்லுறதச்
செய்யற தைவிட என்னடா வேலை,உம்?
கையோடு கூட்டிவா ஓடு!
(குறள் வெண்செந்துறை)
சீரொன்று அதுவே வேறு பொருள்களில்
திரும்பிடும் இரட்டைத் தொடையது கீழே.
ஒருகால் ஒருகால் ஒருகால் ஒருகால்
உருவினில் பேயது வந்ததும் உண்டு
தெருவினில் உள்ளோர் திகிலுடன் நோக்கப்
பெருமிதம் பொங்கிய பேய்.
[முதலடி ஒருகால் சீர்ப் பொருள்கள்:
ஒருமுறை, ஒருவேளை, சிலவேளை, ஒரு காலுடன்]

5.85 செந்தொடை
(தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றிய தொடையொடும் விகற்பம் தம்மொடும்
ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே. ... (யாப்பருங்கல விருத்தி)
செவ்விய தொடையொடு வேறுபட் டியலின்
சொல்லியற் புலவரது செந்தொடை என்ப. ... (தொல்காப்பியம்)
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையா தாவது செந்தொடை தானே. ... (பல்காயனார்)
இங்ஙனம்
எவ்விதத் தொடையும் இல்லா திருந்தும்
செவ்விதின் அமைந்து செய்யுளாய்ச் சீர்த்து
நவ்விடும் ஓசை நலன்கள் விளையச்
செய்வது செந்தொடை இலக்கணம் என்போம்.
(ஆசிரியத் தாழிசை)
இயல்பில் மாலையாய் இலங்கும்
. கடம்பக் கொன்றை மலர்கள் போலச்
செயற்கைத் தொடையேதும் வேண்டாது
. செய்யுளைச் சிறப்பித்து நிற்றலால் இத்தொடை
செந்தொடை யென்னும் பெயர்தனைப்
. பெற்றுச் செம்மையாய் நின்றிடும் தொடையாம்.
--யாப்பருங்கலக் காரிகை, குமாரசாமிப் புலவர் உரை, பக்.40
சான்று
பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.
--யா.கா.மேற்கோள்
விளக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பொன்னிறப் பூக்களை உடையது வேங்கைமரம்
அந்த மரத்தின் உயர்ந்தவொரு கிளையில்
ஏறிநின்று அகவும் வண்ணமயில் நாடன்
அழகிய நெற்றிக் குறிஞ்சிப் பெண்ணின்
உள்ளத்தில் நிறைந்து நிற்பவன் ஆவானே.
மேல்வரும் விளக்கம் செய்யுள் ஆயினும்
உரைநடை வழக்கின் சீர்தளை நிறைந்து
ஓசை சிதறி ஒழுங்கற்று நிற்பதால்
செந்தொடை பயிலும் செய்யுள் ஆகாது;
ஆக்குவோம் இதனைச் செந்தொடைச் செய்யுளாய்.
பொன்னிறப் பூநிறை வேங்கை மரத்தின்
வான்கிளை ஏறிநின்று வண்ணமயில் அகவும்
நாடனே எழில்நுதல் குறிஞ்சி மகளின்
மனத்தகத் துறையும் தலைவ னாவான்.
5.86 செந்தொடை முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவறை இருட்டு. குத்து விளக்கின்
சுடர் எதற்கோ உன்னிக் குதிக்கிறது.
அம்பாள் முகத்தில் புன்னகை கண்டோ?
தாயன்பில் சேய்க்கை நீளுதல் போலவோ?
(ஆசிரியத்துறை)
சர்ப்பமாய் வளைந்து செல்லும் தார்ச்சாலை.
ஆனைகள் தடுக்க ஒருபுறம் பள்ளம்.
மறுபுறம் மின்கம்பி வேலி.
வெள்ளியங் கிரிமலை நோக்கி யொருகார்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சலையில் காதொற்றும் செல்போன் இடக்கையில்.
வலக்கை பற்றி நடக்கும் குழந்தை.
காட்டாறு வெள்ளமாய் விரையும் வாகனங்கள்.
கணங்கள் ஓடும் நிகழும் உறையுமே.
எதிரே மாரியம்மன் கோவில் திண்ணை.
இடப்புறம் ஊராட்சிப் பொதுமேடை. கொடிக்கம்பம்.
பின்புறம் பூங்காவில் வானொலிச் செய்தி.
மணலில் துப்புரவுத் துடைப்பக் கீற்றுகள்.

6. வெண்பா
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வேறேதும் வண்ணம் விரவாத வெள்ளையே
மாறாது நிற்பது மாண்பாகும் - வேறு
தளையால் அடியினால் ஆகாது நின்று
விளைந்திடும் வெண்பாச் சிறப்பு.
(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்மையே வெள்ளையின் இன்னோர்பேர் ஆவதுபோல்
வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு
வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே
உண்மையில் அத்தனை பொற்பு!
[ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு; பொற்பு=பொலிவு]
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால்
வெண்பாவோர் வன்பா எனப்படும் - ஒண்ணா
விலக்கும் அயற்றளைச் சீரடியால் வெண்பா
புலவர்க்கு ஆகும் புலி.
ஔவை சொன்னது:
காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்
பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் பாடுவது புலியாம் (அரிய செயல்);
சிறப்பாகப் பேசப்படும் உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது புலியாம்;
ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்;
மற்றெல்லாப் பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் (முயற்சி மிக்க செயலாகும்).
கி.வா.ஜ. சொன்னது:
வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
--’கவி பாடலாம்’, பக்.69
விளக்கம்:
வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் கல்லானையும்;
வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்;
பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே;
பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, என்னை ஏன் தாக்குகிறாய்?
பாடல் பின்னுள்ள கதை:
https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/amCdNYlwJxo

6.1. வெண்பாவின் பொது இலக்கணம்
பொதுவிலக்கணம்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
ஈற்றடி சிந்தடி ஏனை அளவடி
ஏற்பது வெண்டளை செப்பலின் ஓசையில்
நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாய்
நாள்மலர் காசு பிறப்பு.
விளங்காய்ச்சீரும் விளாங்காய்ச்சீரும்
(பஃறொடை வெண்பா)
விளாங்காயின் சீர்பயிலும் வெண்டளை வந்தால்
வளாவிடும் செப்பலொலி வண்ணம் குறையும்
கருவிளங்காய் கூவிளங்காய் நாமங்கள் தாங்கி
நிரைநடு வாகும் விளங்காய் வகையில்
குறிலிணை ஒன்றெனவோ ஒற்றுடனோ வந்தால்
குறையாது செப்பல் ஒலி.
விளங்காய்ச்சீர் சான்று
(இருவிகற்பக் குறள்வெண்பா)
’நல்வரவில் நால்வரும்பெண்’ போலக் குறிலிணை,
ஒற்றுடன் கூவிளங்காய்ச் சீர்,
’பலர்நடுவில்’ என்றோ ’இனிவரும்பெண்’ என்றோ
கருவிளங் காய்ச்சீர் களும்,
இதுபோல் விளங்காய்கள் ஓசை குறைப்பதில்லை
வெண்பாவில் கூடும் இவை.
விளாங்காய்ச்சீர்
(பஃறொடை வெண்பா)
குறில்நெடில் ஒன்றெனவோ ஒற்றுடனோ வந்தால்
விளாங்காய் எனச்சொல்வர் இற்றைநாள் யாப்பில்*
விளாங்காய் நெடில்களால் சீர்கள் பிரிய
வளம்குன்றும் செப்பலொலி; வெண்பாவில் இங்ஙன்
விளாங்காய் தவிர்த்தல் இனிது.
[*’கவிதை இயற்றிக் கலக்கு’, பேராசிரியர் பசுபதி]
சான்று
(இருவிகற்பக் குறள்வெண்பா)
’மூவரேகாண் வேர்ப்பலாக்கண்’ போலக் குறில்நெடில்,
ஒற்றுடன் கூவிளங்காய்ச் சீர்,
’வருவரேகாண்’ என்றோ ’கிளைப்பலாக்கண்’ என்றோ
கருவிளங் காய்ச்சீர் களும்,
இதுபோல் விளாங்காய்கள் ஓசை குறைப்பதால்
வெண்பாவில் கூடா திவை.
ஈற்றடி
(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம்
ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம்
ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம்
ஈற்றடியே வெண்பா உயிர்.
ஈற்றுச்சீர்
(ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில் ... (இறுதல்=முடிதல்)
குற்றுகரம் வந்து முடிதல் அவசியம்
மற்ற உகரம் அரிது.
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வராதன
வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது
வெண்பாவில் வேறு தளைகள் வராது
அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா
உளத்தினில் வைப்பீர் உகந்து.
பொழிப்பு மோனை
பொழிப்பெனும் மோனையே ஒவ்வோர் அடியும்
எழில்கூட்ட ஓசைகூட்ட வேண்டும்வெண் பாவினில்
அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது
சிற்சில பாக்க ளிலே.
பொழிப்பு எதுகை
பொருளின் செறிவில் பொழிப்பெனும் மோனை
வருதல் சிரமம் பொருளது குன்றுமெனில்
அந்த அடியில் பொழிப்பு எதுகையென
வந்தது செய்திடும் ஈடு.
வகையுளி
வகையுளி பாவில் வருதல் பொதுவாய்த்
தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம்
சிற்சில போதுகள் ஏலும் வகையுளி
முற்றப் பொருளின் நுகம். ... ... (நுகம்=நுகத்தடி)
சான்று
(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும்
மேற்கொண்ட வெண்பா இனி.
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12
அலகிடல்: சீர்கள்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு
தளைகள்
இவெ இவெ இவெ வெவெ
வெவெ இவெ வெவெ இவெ
வெவெ வெவெ வெவெ இவெ
வெவெ இவெ
அடிகள்
அளவடி அளவடி அளவடி சிந்தடி
மோனை
பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும்
எதுகை
இருவிகற்ப அடியெதுகை
வகையுளி
ஏதும் எங்கும் இல்லை
இதர சான்றுகள்
(மேலுள்ளது போல அலகிட்டு அறிக)
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
--பாரதியார், மஹாசக்தி வெண்பா

- Sponsored content
Page 20 of 29 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 29
|
|