புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
49 Posts - 60%
heezulia
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
44 Posts - 60%
heezulia
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10கவிதையில் யாப்பு - Page 19 Poll_m10கவிதையில் யாப்பு - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 19 of 29 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jul 07, 2013 9:07 am

5.60 இயைபு

(நிலைமண்டில ஆசிரியப்பா)
புணர்ச்சி இணக்கம் பொருத்தமே இயைபு
இணங்கும் சொற்கள் இசைப்பது இயைபு
இதுகேட் டபின்னே இதுகேட்கத் தக்கது
என்னும் தொடர்பு முறையாம் இயைபே.

5.61 இயைபு என்பது

அடியின் கடைச்சீர் எழுத்தோ சொல்லோ
அடியின் பிறசீர் எழுத்துடன் சொல்லுடன்
பிறவடி கடைச்சீர் எழுத்துடன் சொல்லுடன்
இயைந்து வருவது இயைபெனப் படுமே.


இறுவாய் ஒப்பினஃ(து) இயைபெனப் படுமென
உறைத்துச் சொல்லும் யாப்பருங் கலமே
இறுதியில் எழுத்தோ சொல்லோ ஒன்றுதல்
இயைபுத் தொடையென விளக்கம் கூறும்.

’கடலே மணலே’ ஓரெழுத் தியைபு
’காவிரி பூவிரி’ எழுத்துக ளியைபு
’காலை மாலை’ சொல்லின் இயைபு
’சடசட வென்று தடதட வென்று’
என்னும் அடியில் சொற்களின் இயைபே.

’காலை வேலை’ சொல்லியல்(பு) அல்ல
ஆ-வின் மோனை ’ஐ-ஔ’ ஆவதால்
’காலை வேலை’ எழுத்தியல் பாகுமே.

5.62 இயைபு விகற்பங்கள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை போலவே இயைபுத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே
இயைபின் விகற்பம் என்னென் றறிய
இறுதியி லிருந்து எண்ணுதல் வேண்டுமே.

இயைபுத் தொடைச் சான்றுகள்

அடிதோறும் சொல்லியைபு
நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க
--மாணிக்கவாசகர், திருவாசகம் 1-2

அடிதோறும் ஓரெழுத்து இயைபு
ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே.
--மாணிக்கவாசகர், திருவாசகம் 68-70

அடிகளில் எழுதுகள் இயைபு
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய்
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய்
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 12

ஓரடிக்குள் இயைபு விகற்பங்கள்
(இறுதிச்சீர் முதலெனக் கொண்டு எண்ண வேண்டும்.)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் ... 1-2 இணை இயைபு (சிலப்பதிகாரம் 1.8.36)
நீரில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ... 1-3 பொழிப்பியைபு (ஔவையார், நல்வழி 24)
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி ... 1-4 ஒரூஉ இயைபு (ஔவையார், மூதுரை 1)
அலைசேர் புனலன் னனலன் னமலன் ... 1-2-3 கூழை இயைபு (அப்பர் தேவாரம் 235)
மன்னனும் அமைச்சனும் இன்னுமோர் புலவனும் ... 1-3-4 மேற்கதுவாய் இயைபு
மன்னனும் இன்னுமோர் புலவனும் அமைச்சனும் ... 1-2-4 கீழ்க்கதுவாய் இயைபு
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் ... 1-2-3-4 முற்று இயைபு (ஔவையார், நல்வழி 38)

கடையியைபுகள்

இயைபு விகற்பம் எண்ணும் போது
முதற்சீர் கடைச்சீ ராவத னாலே
பிறசீர் களிலே ஒன்றும் இயைபுகள்
கடையியை பென்னும் வகையில் வருமே.

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ... 2-3 இடைப்புணர் இயைபு
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் ... 2-4 பின்னியைபு
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் ... 3-4 கடையிணை இயைபு
மன்னனும் அமைச்சனும் புலவனும் இன்னுமோர் ... 2-3-4 கடைக்கூழை இயைபு

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jul 10, 2013 9:54 am

5.63 இயைபு முயற்சி

(குறள் வெண்செந்துறை)
ஈரடிக் கொருமுறை கீழ்வரும் அடிகளில்
சீர்க்கடை தன்னில் சொல்லியல்பு காண்க.

(குறள் வெண்செந்துறை)
மாலைக்கதிர் மலைதனிலே மறைந்திறங்கி வீழும்
சாலையிலே வீடுகளின் மாலைநிழல் தாழும்
வீடுகளில் தீபச்சுடர் விளக்குகளில் ஒளிரும்
பாடுபட்டு உழைத்தமனம் வீடுவந்து குளிரும்.


(குறள் வெண்செந்துறை)
கீழ்வகை அடிகளின் சீர்களில் பயின்றிடும்
ஏழ்வகை விகற்ப இயைபுகள் அறிக.

கணவனும் மனைவியும் பிணங்குதல் நுணங்குதல் ... 1-2 இணை இயைபு
பணத்தால் உண்டு மனத்தால் உண்டு ... 1-3 பொழிப்பியைபு
மாற்றம் இன்றி உண்டோ தேற்றம்? ... 1-4 ஒரூஉ இயைபு
நேற்றுடன் சென்றது இன்றது நன்றது! ... 1-2-3 கூழை இயைபு
ஆற்றிலும் சேற்றிலும் அடித்திடும் காற்றிலும் ... 1-3-4 மேற்கதுவாய் இயைபு
மாற்றுகள் தீர்க்கவரும் நாற்றுகள் ஊற்றுகள்! ... 1-2-4 கீழ்க்கதுவாய் இயைபு
ரோசமுண்டு பாசமுண்டு வேசமுண்டு நேசமுண்டு! ... 1-2-3-4 முற்று இயைபு


(குறள் வெண்செந்துறை)
கீழ்வகை அடிகளின் சீர்களில் பயின்றிடும்
நாலவகை கடையியைபு நோக்கி அறிக.

காட்டில் குப்பனும் சுப்பனும் சென்றனர் ... 2-3 இடைப்புணர் இயைபு
குப்பன் பின்னே சுப்பன் அவன்முன் ... 2-4 பின்னியைபு
குப்பனும் சுப்பனும் புலிவரப் பார்த்தனர் ... 3-4 கடையிணை இயைபு
புலியிம் கிலியும் வலியும் துரத்தின! ... 2-3-4 கடைக்கூழை இயைபு


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jul 11, 2013 7:30 am

5.64 இயைபுப் பயிற்சி

(கலித்துறை)
இலக்கியப் பாக்களில் இயைபுகள் காண்பது அரிது
திரையிசைப் பாக்களில் இயல்புகள் பயனோ பெரிது
ஆங்கிலப் பாக்களில் ’ரைம்’-களின் ’சைம்’-கள் போல
திரையிசைப் பாக்களில் இயைபுகள் உதவிடும் சால.

(குறள் வெண்செந்துறை)
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்துக்
கீழ்வரும் திரையிசைப் பாடலைக் காண்க.

பயிற்சி 1. கலைந்த திரைப்பாடல்

அச்சம் போகுமா? பாவையா? அன்னமேநீ
தெரியாமல் கனிந்தபின்னே அன்புமனம் அஞ்சிநின்றால்
அறியாத அன்புமனம் தேவையா இன்னும்
அச்ச கனிந்தது மாகுமா அஞ்சுவதை


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 12, 2013 8:46 am

5.64 இயைபுப் பயிற்சி
பயிற்சி 1. கலைந்த திரைப்பாடல்: விடை

அன்புமனம் கனிந்தபின்னே அச்சம் தேவையா
அன்னமேநீ இன்னும் அறியாத பாவையா?
அஞ்சுவதை அஞ்சிநின்றால் அச்ச மாகுமா
அன்புமனம் கனிந்தது தெரியாமல் போகுமா?
--இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படம்: ஆளுக்கொரு வீடு

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 12, 2013 9:18 am

பயிற்சி 2. மறைந்த திரைப்பாடல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் திரையிசைப் பாடல் வரிகளைக்
கண்டறிந் தவற்றை நன்றே எழுதுக.

மையிட்டுப் எரிந்தாலும் திரண்டாலும்
தீபத்தில் வாழ்வது பன்னீரிலே
செல்வங்கள் பூஞ்சிட்டுக் பூக்களும்
பொட்டிடு உறவாடும் கண்ணாடி

----- கன்னங்கள் பொன்மணி ----- பால்பொங்கல் பொங்குது -----
பொங்கல் ----- தீபம் ----- ஏழைகள் ----- கண்ணீரிலே
மாணிக்கத் தேர்போல ----- ----- மகராசன் ----- விளையாடும்
----- வளையலும் காகிதப் ----- கண்ணேயுன் மேனியில் -----


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jul 13, 2013 5:21 pm

பயிற்சி 2. மறைந்த திரைப்பாடல்: விடை

(எழுசீர்க் குறள் வெண்செந்துறை)
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால்பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் திரண்டாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
மாணிக்கத் தேர்போல மையிட்டுப் பொட்டிடு மகராசன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணேயுன் மேனியில் உறவாடும்
--இயற்றியவர்: கண்ணதாசன் படம்: துலாபாரம்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jul 14, 2013 7:22 pm

பயிற்சி 3. திரைப்பாடல்களில் ஓரடி இயைபுகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் திரையிசைப் பாடல் வரிகளில்
ஓரடி இயைபுகள் எவையென் றறிந்து
சீரெண் பெயர்களும் குறித்தே எழுதுக.

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம்
மானாட மலராட மதியாட நதியாட

பாப்பா பாப்பா கதை கேளு
வீண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
வீடுவரை உறவு வீதிவரை மனைவி


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jul 17, 2013 6:41 am

பயிற்சி 3. திரைப்பாடல்களில் ஓரடி இயைபுகள்: விடை

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே ... 1-2 இணையியைபு
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் ... ௧-௩ பொழிப்பியைபு, 2-4 பின்னியைபு
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன ... 1-4 ஒரூஉஇயைபு
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் ... 1-3-4 மேற்கதுவாயியைபு
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் ... 1-2-4 மேற்கதுவாயியைபு
மானாட மலராட மதியாட நதியாட ... 1-2-3-4 முற்றியைபு

பாப்பா பாப்பா கதை கேளு ... 3-4 கடையிணையியைபு
வீண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ... 2-3-4 கடைக்கூழையியைபு
வீடுவரை உறவு வீதிவரை மனைவி ... 2-4 பின்னியைபு

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 19, 2013 7:10 pm

5.70 அளபெடைத் தொடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளபெடை என்பது மாத்திரை நீளுதல்
அளபெடை யிருவகை: உயிரும் ஒற்றும்
’அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே’. -- (யாப்பருங்கலம்)

உயிரள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
உயிரின் உயிர்மெய் நெடில்கள் ஏழு:
அளபெடுக் கையிலோர் இனவெழுத் தெழுமே
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

ஒற்றள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுக் கையிலௌ மீண்டும் வருமே.

உயிரளபெடை
உயிரள பெடைத்தொடை தோன்றும் இடங்கள்:
’தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென
நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே’. ... (யாப்பருங்கல விளக்கம்)

தனிநிலை
முன்பின் எழுத்தின்றி முதற்சீர் நின்று
ஒன்றே எழுத்து அளபெடுத் தொன்றுதல்
தனிநிலை உயிரள பெடையெனப் படுமே.
ஓரெழுத் திப்படி அளபெடுத் தொன்றிட
ஈரடி வேண்டும் என்பதை யறிக.

சான்று:
ஏஎ வழங்கும் சிலையாய் இரவாரல்
மாஅ வழங்கும் வரை.
--யாப்பருங்கலம்

முதனிலை
முதற்சீர் நின்று முதலெழுத் தளபெடுத்து
அதன்பின்னும் எழுத்துவந்(து) ஈரடியில் அமைவது
முதனிலை உயிரள பெடையெனப் படுமே.

சான்று
காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான்
ஆஅழி ஏந்தல் அவன்.
--யாப்பருங்கலம்

இறுதிநிலை
முதற்சீர் இறுதிவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இறுதிநிலை உயிரள பெடையெனப் படுமே.

சான்று
கடாஅக் களைற்றின்மேல் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
--யாப்பருங்கலம்

இடைநிலை
முதற்சீர் நடுவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இடைநிலை உயிரள பெடையெனப் படுமே.

சான்று
உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ
விராஅய கோதை விளர்ப்பு.
--யாப்பருங்கலம்

ஒற்றளபெடை
குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வருவதால்
இடைகடை வருமே ஒற்றள பெடைத்தொகை.

சான்று: இடைநிலை ஒற்று
வண்ண்டு வாழும் மலர்நெடுக் கூந்தலாள்
பண்ண்டை நீர்மை பரிது.
--யாப்பருங்கலம்

சான்று: இறுதிநிலை ஒற்று
உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்
அரண்ண் அவர்திறத் தில்.
--யாப்பருங்கலம்

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jul 23, 2013 5:24 pm

5.71 அளபெடைத் தொடை விகற்பங்கள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை போலவே அளபெடைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே.

அளபெடைத் தொடை விகற்பச் சான்றுகள்
அடியளபெடை தொடை


ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பினோ
டீஇர் இசையுங்கொண் டீரளைப் பள்ளியுள்
தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போல் நறநுதால்
ஓஒ உழைக்கும் துயர்.
--யாப்பருங்கலம்

ஓரடிக்குள் அளபெடைத் தொடை
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய்
சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று
நாணக் குமரியை நல்வர வேற்குமே!
சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
திக்க்கித் திக்க்கிப் பேசு! ... ஒற்றளபெடை

*****


Sponsored content

PostSponsored content



Page 19 of 29 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக