புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
5 Posts - 2%
i6appar
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
443 Posts - 47%
heezulia
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
5 Posts - 1%
i6appar
கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10கவிதையில் யாப்பு - Page 18 Poll_m10கவிதையில் யாப்பு - Page 18 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 18 of 29 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 09, 2013 8:15 am

பயிற்சி 2. வருக்க மோனை விகற்பங்கள் அறிதல்: விடை

பலவகை யில்லவன் பைத்தியக் காரன்
உலவுதல் உவப்பான் நிலவினைப் பழிப்பான்
சிலரிடம் பேசுவான் பலரிடம் சினப்பான்
குலவுதல் கலகம் கொஞ்சுத லுண்டு
நிலத்தினில் கால்கள் நில்லாது நடப்பான்
புலம்புவான் பொங்கிச் சிரிப்பான் பலமுறை
வலையினில் விழுந்த விலாங்கென விம்முவான்
சிலசம யம்சிறு கவிதையும் சொல்லுவான்!

பயிற்சி 3. மோனைப் புறனடை அறிதல்: விடை

முறையே வருக்க இன உயிர் நெடில் அணு

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
கெட்டாலும் கலைஞனுக்குப் பட்டணத்தில் வாழ்வு ... வருக்க (கெ,க)
பட்டாலும் அவனதைச் சட்டை செய்யான் ... இன (ப,சா)
சுட்டாலும் குழம்பில் காரம் போதாது ... உயிர் (சு,கு)
தையலிடம் தஞ்சம் கைராசி மருத்துவன் ... நெடில் (தை,கை)
சேயும் தாயும் நலமாய் உள்ளனர். ... அணு (சே,தா)

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 11, 2013 9:06 am

5.50. முரண்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியியின் முதற்சீர் சொல்லோ பொருளொ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே.

சொற்பொருள் முரணே ஐவிகற் பத்தன
சொல்லொடு சொல்லும் பொருளொடு பொருளும்
சொற்பொருள் சொல்லொடும் சொற்பொருள் பொருளொடும்
சொற்பொருள் சொற்பொரு ளுடனே முரணென
இற்ற விகற்பங்க ளைந்தில் வருமே.


சான்றுகள்
செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்
[செம்மை-கருமை என்பது சொல்முரண்]

தீமேய் திறல்வரை நுழை‍இப் பரிம்,எலிந்து
நீர்நசை பெறா‍அ நெடுநல் யானை
[தீ-நீர் என்பது பொருள்முரண்]

பெருமலைக் குறுமகள் பிறிதோர்த்து நடுங்கலிற்
சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு
[பெருமை-சிறுமை என்பது சொற்பொருள் சொல்முரண்]

செந்தீ யன்ன சினந்த யானை
நீர்நசை பெறா‍அக் கானற்
[செந்தீ-நீர்நசை என்பது சொற்பொருள் பொருள்முரண்]

ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி
செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச்
[ஓங்கு-தாழ், செம்மை-பசுமை சொற்பொருள் சொற்பொருள் முரண்]

5.51. முரண் விகற்பங்கள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை போலவே முரண்வகைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே.


அடிமுரண் சான்று
இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில்
நிலவுகுவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னின் அன்ன நுண்டா திறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே.
--யா.கா.மேற்கோள்

எழுவகை முரண் விகற்பச் சான்று
பெண்ணும் ஆணும் நிகரெனக் கொள்வோம் ... [இணை]
மண்ணில் தெரியும் வானம் ஞானிக்கு ... [பொழிப்பு]
என்றோ மறந்தது நினைவில் இன்று ... [ஒரூஉ]
கிழக்கும் மேற்கும் தெற்கில் ஒடுங்கும் ... [கூழை]
அன்னை மற்றும் தந்தை குழந்தை ... [மேற்கதுவாய்]
எலியும் பூனையும் நாயிடம் அஞ்சும் ... [கீழ்க்கதுவாய்]
மனமும் வாக்கும் காயமும் உயிரும் ... [முற்று]

முதல்தர முரண்வகை தவிர வேறு
இரண்டாம் வகையின முரண்களு முண்டு:
கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென
இவையும் கூறுப ஒருசா ரோரே. ... [யாப்பருங்கலம்]

கடையிரு சீரும் முரண்படின் கடைமுரண்
கடைச்சீர் இரண்டாம் சீர்வரின் பின்முரண்
இடையிரு சீர்வரின் இடைப்புணர் முரணே
கடைச்சீர் மூன்றிலும் கடைக்கூழை முரண்வரும்.


சான்று
மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு
கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
கோதையிற் றாழ்ந்த ஓங்குவெள் ளருவி
காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
இவ்வடிகளில் கடைவகை முரண்கள் நான்கும்
செவ்விதின் பயின்று வருவது காண்க.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 19, 2013 10:19 am

5.52. வள்ளுவர் குறளில் அள்ளும் முரண் தொடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வள்ளுவர் குறள்தனில் நெஞ்சை யள்ளி
உள்ளிடச் செய்யும் முரண்தொடை காணலாம்.
கீழ்வரும் பாக்களில் ஆழ்ந்திடும் முரண்தொடை
வாழ்வினை விளக்கும் வழிவகை யறிந்து
முரண்தொடை பாக்களில் எதிர்நின்று செறிந்து
பொருள்தனை உயர்த்தும் பாங்கினை யறிந்து
முரண்படும் சொற்கள் பிறவகைத் தொடையுமாய்
உரமுடன் இழைவதை யுற்று நோக்குக.

(குறள் வெண்பா)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். ... 26

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? ... 53

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. ... 79

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது? ... 99

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். ... 104

தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். ... 114

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. ... 115

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். ... 116

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. ... 244

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். ... 280

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். ... 292

பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். ... 319

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். ... 362

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. ... 392

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். ... 410

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். ... 461

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். ... 511

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். ... 643

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். ... 742

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. ... 849

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். ... 973

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். ... 979

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். ... 1040

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ... 1091

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. ... 1122

கரத்தலும் ஆற்றேனிந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். ... 1162

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. ... 1196

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். ... 1213

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு. ... 1284

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். ... 1330

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 21, 2013 6:29 pm

5.53. முரண் தொடை முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லும் பொருளும் உறழ்ச்சியில் முரணும்
ஐவகை முரண்தொடைச் செய்யுள் அடிகள்
செய்முறை முயன்று சான்றுகள் காண்போம்.

சொல்லும் சொல்லும் முரணுதல்
செவ்வாய்ப் போரினிலே செத்து மடிந்தான்
கருங்கைக் காவலன் கொடுங்கோல் மன்னன்.

எனவரும் அடிகளில் சொல்முரண் காண்க
செவ்வாய்க் கிழமையாம் சிவந்த வாயல்ல
கருமை நிறமல்ல கொன்று வாழ்வது
சொற்களில் மட்டும் முரண்தொடை வருவதால்
சொல்லொடு சொல்முரண் ஆகும் இதுவே.

பொருளும் பொருளும் முரணுதல்
அல்லும் பகலும் அல்லல் பட்டவன்
சொல்லும் செயலும் மாறுதல் வியப்போ?

எனவரும் அடிகளில் பொருள்முரண் காண்க
பொருளில் மட்டும் முரண்தொடை வருவதால்
பொருளொடு பொருள்முரண் ஆகும் இதுவே.

சொற்பொருள் சொல்லொடு முரணுதல்
பெருமலை யெங்கும் விளையும் வாழையில்
சிறுமலைப் பழமே மலைப்பழ மாகுமே.

சிறுமலை யென்பது மலையின் பெயரே
பெருமலை யென்றதன் சொல்லும் பொருளும்
சிறுமலை யென்னும் சொல்லொடு முரணிட
சொற்பொருள் சொல்முரண் ஆகும் இதுவே.

சொற்பொருள் பொருளொடு முரணுதல்
செந்தீ காட்டில் பரவிடும் போது
நீர்வரும் நீள்குழாய் கைப்பட அணையுமா?

செந்தீ என்றதில் செம்மையும் ஜுவாலையும்
சொல்லும் பொருளுமாய்ச் சேர்ந்து வந்து
சொற்பொருள் நீரின் பொருளொடு முரணிட
சொற்பொருள் பொருள்முரண் ஆகும் இதுவே.
செந்தீ தண்ணீர் என்றே சொன்னால்
சொற்பொருள் சொற்பொருள் முரணிது வாகுமே.

சொற்பொருள் சொற்பொருளொடு முரணுதல்
ஓங்குமலை வானத்தை முத்தமிடும் காலை
தாழ்நிலம் சதுப்பில் தவிப்பது கொடுமை.

ஓங்குதல் தாழ்தல் சொற்பொருள் முரணென
மலையும் நிலமும் சொற்பொருள் முரணென
சொற்பொருள் சொற்பொருள் முரணிது வாகுமே.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 23, 2013 9:15 am

5.54. முரண் தொடைப் பயிற்சி

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியியின் முதற்சீர் சொல்லோ பொருளொ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே.

பயிற்சி 1. முதல்தர முரண்தொடை விகற்பம் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் பாடலின் முதலே ழடிகளில்
ஏழ்விகற் பத்தில் வருகிற முரண்தொடை
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.

கூழை ஒரூஉ கீழ்க்கதுவாய் பொழிப்பு மேற்கதுவாய்
முற்று இணை




சீறடிப் பேரக வல்கு வொல்குபு -----
சுருங்கிய நுகப்பிற் பெருகு வடந்தாங்கிக் -----
குவிந்து கணங்கரும் பியகொங்கை விரிந்து -----
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் -----
வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணும் -----
இருக்கையு நிலையு மேந்தெழி வியக்கமும் -----
துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை முனியா -----
தென்று மின்னண மாகுமதி
பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே.
--யா.கா.மேற்கோள்

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 26, 2013 7:02 am

5.54. முரண் தொடைப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. முதல்தர முரண்தொடை விகற்பம் அறிதல்: விடை


சீறடிப் பேரக வல்கு வொல்குபு ... ... இணை
சுருங்கிய நுகப்பிற் பெருகு வடந்தாங்கிக் ... ... பொழிப்பு
குவிந்து கணங்கரும் பியகொங்கை விரிந்து ... ... ஒரூர்
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் ... ... கூழை
வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணும் ... ... மேற்கதுவாய்
இருக்கையு நிலையு மேந்தெழி வியக்கமும் ... ... கீழ்க்கதுவாய்
துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை முனியா ... ... முற்று
தென்று மின்னண மாகுமதி
பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே.
--யா.கா.மேற்கோள்

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 26, 2013 7:04 am

பயிற்சி 2. முரண்களின் விதங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் முரண்விதம் எங்ஙனம் அதன்பின்
வருகிற அடிகளில் பொருந்தும் என்பதைக்
கோடுகள் நிரப்பிக் கூறுக அறிந்தே.

சொற்பொருள்-பொருள்-முரண் சொற்பொருள்-சொல்-முரண் சொல்முரண்
பொருள்-முரண் சொற்பொருள்-சொற்பொருள்-முரண்


வருவாய் கூட செலவில் முருகா! ... [வருவாய்-செலவு] ----------
வருவாய் குறைவு செலவோ அதிகம்! ... [வருவாய்-செலவு] ----------
வருவாய் கிடைத்தால் போவாய் அன்றோ? ... [வருவாய்-போவாய்] ----------
வருவாய்நீ இன்றேல் போவது மிச்சம்! ... [வருவாய்-செலவு] ----------
வருவாய் இன்று போவாய் நாளை! ... [வருவாய்-போவாய்] ----------

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 28, 2013 9:06 am

பயிற்சி 2. முரண்களின் விதங்கள் அறிதல்: விடை

வருவாய் கூட செலவில் முருகா!
[வருவாய்-செலவு: ’பயணத்தின் போது கூட வா முருகா!’
சொல்லில் உள்ள முரண் பொருளில் இல்லை; எனவே சொல்-முரண்]

வருவாய் குறைவு செலவோ அதிகம்!
[வருவாய்-செலவு: வருவாய் என்ற சொல்லின் சொல்-முரண் போவாய் எனக்கொண்டால், இது பொருளில் மட்டும் முரண்படப் பொருள்-முரண்.]

வருவாய் கிடைத்தால் போவாய் அன்றோ?
[வருவாய்-போவாய்: வருவாய் என்ற சொல்லும் அதன் பொருளும் போவாய் என்ற சொல்லொடு மட்டும் முரண்வதால் சொற்பொருள்-சொல்-முரண்.]

வருவாய்நீ இன்றேல் போவது மிச்சம்!
[வருவாய்-செலவு: வருவாய்நீ இன்றேல் என்பதற்கு நீ வராவிட்டால், பணவரவு இல்லாவிட்டால் என்று பொருள்கொள்ளலாம்; இப்படி வருவாய் என்ற சொல்ல்லும் பொருளும் போவது என்பதன் சொல்லுடன் முரண்பட, இது சொற்பொருள்-பொருள்-முரண்.]

வருவாய் இன்று போவாய் நாளை!
[வருவாய்-போவாய்: சொல்லும் பொருளும் இரண்டுமே முரண்படுவதால், சொற்பொருள்-சொற்பொருள் முரண்.]

*****


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 10:12 am

மிகவும் பயனுள்ள தொடர்..

இத்தொடரை இணைத்து ஈகரை நூலகத்தில் புத்தகமாக வைக்கலாம். வெகு சிறப்பாக உள்ளது..

தொடருங்கள்...




சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 18 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 28, 2013 12:01 pm

மிக்க நன்றி திரு.சதாசிவம். நான் பயிலும் வரை யாப்பினைக் கவிதை வடிவில் இங்கு பதிய முயல்கிறேன்.


Sponsored content

PostSponsored content



Page 18 of 29 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக