புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:52

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
105 Posts - 73%
heezulia
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
270 Posts - 76%
heezulia
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கவிதையில் யாப்பு - Page 17 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 17 I_voting_barகவிதையில் யாப்பு - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 17 of 29 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 23 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 8 Nov 2012 - 10:08

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 19 May 2013 - 19:49

5.35. இன மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வல்லினம் என்பது கசட தபற
மெல்லினம் என்பது ஙஞண நமன
இடையினம் என்பது யரல வழள
வல்லின மெல்லின இடையின வகைத்த
இனத்தில் ஒன்றுவ(து) இனமோனை யாகுமே.


சான்றுகள்
ஔவை அருளிய கொன்றை வேந்தனில்
வல்லின மோனை வருகிற அடிகள்:
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
காவல்தானே பாவையர்க் கழகு.


ஆத்திச் சூடியில் ஔவை தருகிற
மெல்லின மோனை வருகிற சான்றிது:
மோனம் என்பது ஞான வரம்பு.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
---திருக்குறள் 100:09

’நகல்வல்லார்’ ’மாயிரு’ ’ஞாலம்’ மோனைகள்.

இடையின மோனை வருகிற குறட்பா:
வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல.
---திருக்குறள் 030:01


இந்தக் குறளில் இடையின மோனை
’வாய்மை யாதெனின்’ தொடரிலா அல்லது
’வாய்மை யாதொன்றும்’ தொடரிலா சொல்வீர்!
முன்னது தவறு பின்னதே சரியாம்.
’யெனப்படுவது யாதெனின்’ என்பது புணர்ந்து
’யெனப்படுவ தியானெனின்’ என்று ஆவதால்.

மோனை எதுகை அலகிடும் போது
சொற்களைப் புணர்ந்தபின் அலகிடல் வேண்டும்.
என்பது முக்கிய மான நியதி.

யாண்டுச்சென் றியாண்டும் உளராகில், வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
---திருக்குறள் 090:05

’யாண்டு’ ’வெந்து’ இடையின மோனை.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon 20 May 2013 - 20:10

5.36. உயிர், நெடில் மோனைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒத்த குறிலொலி யொன்றுவ துயிர்மோனை,
ஒத்த நெடிலொலி யொன்றுவது நெடில்மோனை.
ஏதேனும் குறில்நெடில் ஒலிகளும் ஒன்றலாம்.


ஆத்திச் சூடியில் ஔவை தருகிற
உயிர்நெடில் மோனைகள் பின்வரு மாறு:
’கண்டொன்று சொல்லேல்’ ’தையற்சொற் கேளேல்’
’குணமது கைவிடேல்’ ’கேள்வி முயல்’

5.37. இருவிகற்ப மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாலடிச் செய்யுளில் முன்னிரு அடிகளில்
மோனை யொன்றும் பின்னிரு அடிகளில்
மோனை வேறும் வந்திட அமைவது
இருவிகற்ப மோனை இரண்டடி மோனை
என்றிரு பெயர்களில் அழைக்கப் படுமே.


சான்றுகள்
இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி
மந்திரம் போல்வேண் டுமடா சொல்லின்பம்---நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித் (தகத்)
---பாரதியார், சக்திக் கூத்து

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா---நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
---ஔவையார், மூதுரை 1

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்
டாவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
---ஔவையார், நல்வழி 22

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue 21 May 2013 - 8:42

5.38. இடையிட்ட மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் தோறும் தொடர்ந்தோ அல்லது
அடிகள் இரண்டுக் கொருமுறை யென்றோ
அடிகளில் மோனை தொடர்ந்து வராமல்
அடிகளில் இடையிடை மட்டுமே வருகிற
மோனை இடையிட்ட மோனை யாகும்.


சத்திமுற்றப் புலவரின் புகழ்மிகு செய்யுளில்
இடையிட்ட மோனை காண்க
நா-நீ-ந ப-பா-பே வருகிற வரிகளில்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீ‌இப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.
---தனிப்பாடல், சத்திமுற்றப் புலவர்

(குறள் வெண்செந்துறை)
ஏழைப் புலவர் ஊர்வந்தது பின்மாலைப் பனிக்காலம்.
மேலிடும் குளிரில் நடுங்கினார் மேலாடை யின்றி.

குட்டிச் சுவரொன்று பார்த்து அடியில் ஒட்டி அமர்ந்தார்.
வழியறி யாமல் மேலே வானைப் பார்த்தார்.

நாரை யொன்று கூடுநோக்கிப் பறப்பது கண்டார்.
வந்தது கவிதை அந்தக் குளிரிலும் நிலையிலும்.

பாடினார் வாய்விட்டு உரக்க நாரைக்குச் செய்தியாக.
பாடலைக் கேட்டான் ஊர்வலம் வந்த பாண்டியன்.

அரண்மனைக் கழைத்துப் பண்புடன் நல்கினான் பரிசில்.
வறுமையும் குளிரும் நீங்கிடப் புலவர் மகிழ்ந்தார்.

தமிழே மூச்செனக் கவிதையே பேச்செனப்
புலவோர் புரவலர் வாழ்ந்த காலத்தில்
வேனிலில் குளிரில் வறுமையில் கவிதைகள்
ஒல்காப் புகழ்பெற உதித்தது வியப்போ?

5.3.9. வழி மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் துடனே
அடியின் சீர்களில் இடைவெளி யின்றி
மோனை தொடர்ந்து வருவது வழிமோனை.


வழிமோ னைக்கு வள்ளுவர் சான்று:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

பாரதி வரிகளில் வல்லின மோனைகள்:
பயமெனும் பேய்தனை யடித்தோம்--பொய்ம்மைப்
. பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
---பாரதியார், ஜய பேரிகை

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 26 May 2013 - 9:33

5.40. அணு மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
உயிரோ உயிர்மெய்யோ ஓசையில் எழுத்தில்
முழுதும் ஒன்றாமல் இனவகை ஒலிகளில்
ஒன்றிட வருவது அணுமோனை ஆகுமே.

முன்னோர் தந்த அணுமோனை எழுத்துகள்:
அஆ-ஐஔ இஈ-எஏ உஊ-ஒஓ உயிரெழுத்துகள்.
இவ்வுயிர் ஏறிய உயிர்மெய் எழுத்துகள்:
ககா-கைகௌ கிகீ-கெகே குகூ-கொகோ போல.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சிலமெய் எழுத்துகள் சலுகை பெறுவன,
அவற்றில் தொடங்கும் சொற்களின் குறைவால்:
ச-வும் த-வும் ஓரினம்.
ம-வும் வ-வும் ஓரினம்.
ந-வும் ஞ-வும் ஓரினம்.
யாவிற்கு இஈஎஏ மோனை என்பரே.

புலவர் குழந்தை, பசுபதி யவர்கள்
பரிவது போல இன்றைய வழக்கில்
ய,ஜ,ர,ஹ,ல முதலாக
சொற்கள் பற்பல வருவத னாலே
யா-விற்கு அஆ-ஐஔ மோனை என்றும்
ஜ-வுக்கு ச-த-மோனை என்றும்
ர-ல-விற்கு இ-ஈ-எ-ஏ-மோனை என்றும்
ஹ-விற்கு அ-ஆ-ஐ-ஔ மோனை என்றும்
இன்றைய பாக்களில் கொள்ளப் படுமே.

அணுமோனை வாய்ப்பா டாகப் பழைய வெண்பா:
அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகாண்
இகரமொடு ஈகாரம் எஏ -- உகரமோ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ தச்சகரம்
ஆகாத அல்ல அநு. [அநு=பின், வழி]

5.40. அணு மோனைச் சான்றுகள்: உயிர் எழுத்துகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேற்சொன்ன அணுமோனை வகைகள் யாவும்
கீழுள்ள சான்றுகள் விளக்குவது காண்க
மோனை எழுத்துகள் அடைப்புக் குறிகளில்.

அகதிக்கு ஆகாயம் துணையாகும். [அ-ஆ]
அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா? [அ-ஐ]
அஞ்சில் படித்தாலே ஔவைசொல் புரியும். [அ-ஔ]

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் [ஆ-அ]
ஆடுமாடு கொம்பிரண்டு ஐயம் பிடாரிக்கு மூன்று. [ஆ-ஐ]
ஆகாரம் குறைப்பதே தன்னில் ஔடதம். [ஆ-ஔ]

இரந்தோர்க்கு ஈவது உடையார் கடனே. [இ-ஈ]
இடுகிற தெய்வம் எங்கும் இடுமே. [இ-எ]
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் [இ-ஏ]

ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். [ஈ-இ]
ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. [ஈ-எ]
ஈயம் பிடித்தவன் ஏது சொல்லினும் கேளான். [ஈ-ஏ]

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாமோ? [உ-ஊ]
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர் சுகமே. [உ-ஒ]
உறுதியான காரியும் ஓர்போதும் கெடாது. [உ-ஓ]

ஊனினால் உறவு பூணினால் அழகு. [ஊ-உ]
ஊசி ஒருமுழத் துணியாவது கொடுக்கும். [ஊ-ஒ]
ஊருக்கெல்லாம் ஓர்வழி உனக்கோர் வழியா? [ஊ-ஓ]

எங்கும் மடமிருக்க இருக்க இடமில்லை. [எ-இ]
என்ணம் இருந்தால் ஈவது இயலும். [எ-ஈ]
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லாக்கு. [எ-ஏ]

ஏது பிரியம்? இல்லாதது பிரியம். [ஏ-இ]
ஏழை நெஞ்சில் ஈரம் உண்டு. [ஏ-ஈ]
ஏரி பெருகினால் எங்கும் பெருக்கு. [ஏ-எ]

ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக்காசு. [ஐ-அ]
ஐம்பொறி ஆட்சிகொள். [ஐ-ஆ]
ஐப்பசி முதல்நான் ஔவைநோன்பு. [ஐ-ஔ]

ஒருவன் அறிந்தால் உலகம் அறியும். [ஒ-உ]
ஒருபிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம். [ஒ-ஊ]
ஒருகை தட்டினால் ஓசை எழும்புமோ? [ஒ-ஓ]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் [ஓ-உ]
ஓதுவார்க்கு ஊரும் உழுவார்க்கு நிலமும் இல்லையா? [ஓ-ஊ]
ஓயா மழையும் ஒழியாக் காற்றும். [ஓ-ஒ]

ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை. [ஔ-அ]
ஔவையின் ஆத்திச் சூடி குழந்தைகள் அறியும். [ஔ-ஆ]
ஔவை படித்து ஐயம் நீக்குவோம். [ஔ-ஐ]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 30 May 2013 - 20:02

5.40. அணு மோனைச் சான்றுகள்: உயிர்மெய் எழுத்துகள்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே [க-கா]
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் [க-கை]
கந்தனின் மதமே கௌமாரம் என்பது. [க-கௌ]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் [கா-க]
காக்கை கையில் வந்து அமருமோ? [கா-கை]
காக்கை கௌவிச் சென்ற வறுவல். [கா-கௌ]

கிளியும் கீரியும் ஒன்றாய்க் காணுமோ? [கி-கீ]
கிளியின் பேச்சால் கெட்டது காரியம். [கி-கெ]
கிளியின் பேச்சைக் கேட்பாயோ மன்னா? [கி-கே]

கீழே விழுந்த கிழவன் மாண்டான். [கீ-கி]
கீழே விழுந்தும் கெடுப்பதை விடாதவன். [கீ-கெ]
கீழே விழுந்தால் கேட்பார் இல்லை. [கீ-கே]

குறும்பு செய்தாள் கூடைக் காரி. [கு-கூ]
குலமகட் கழகு கொழுநனைப் பேணுதல். [கு-கொ]
குடந்தை நகரில் கோயில்கள் பலவுண்டு. [கு-கோ]

கூட்டுக் குடும்பத்தில் உள்ளது நன்மை. [கூ-கு]
கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் தெய்வம். [கூ-கொ]
கூடி வாந்தால் கோடி நன்மை. [கூ-கோ]

கெடுவான் கேடு நினைப்பான். [கெ-கே]
கெஞ்சிய கிழவிக்குக் கொடுத்தால் குறையுமோ? [கெ-கி]
கெட்டுப் போன கீரையைத் தூக்கியெறி. [கெ-கீ]

கேணி வெட்டக் கிரையம் என்ன? [கே-கி]
கேள்வி கேட்காமல் கீழ்ப்படி வாயா? [கே-கீ]
கேட்டு அறிவது கெடுதல் ஆகுமோ? [கே-கெ]

கைவினை கரவேல். [கை-க]
கையால் இயல்வது காலால் முடியுமோ? [கை-கா]
கைமாற்று வாங்கில் கௌரவம் குறையும். [கை-கௌ]

கொற்றவன் குடியே கோபத்தால் கெடுமே. [கொ-கு]
கொற்றவன் கூற்றுக்கு மறுபேச் சில்லை. [கொ-கூ]
கொண்டதே கோலமென அலைவார் சிலபேர். [கொ-கோ]

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். [கோ-கு]
கோவிலில் கூடி விழாவினை நடத்துவோம். [கோ-கூ]
கோவிலில் கூட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. [கோ-கொ]

கௌரவருடன் சேர்ந்தாலும் கர்ணனின் கீர்த்தி குன்றவில்லை. [கௌ-க]
கௌவை காணாது வாழ்தல் இனிது. [கௌ-கா]
கௌவருக்கு சூது கைவந்த கலையாம். [கௌ-கை]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 1 Jun 2013 - 10:47

5.40. அணு மோனைச் சான்றுகள்: இதர ஓரின எழுத்துகள்

சட்டி கெட்டியா என்று தட்டிப் பார்த்தான். [ச-த]
தள்ளிட முடியாது, சட்டம் கழுதையென்று. [த-ச]

மயிலவள் நடந்தாள் வயல்வழி யாக. [ம-வ]
வந்தான் மன்னன் போரினில் வாகைசூடி. [வ-ம]

நன்றி உள்ள விலங்கு ஞுமலி. [ந-ஞு][ஞுமலி=நாய்]
ஞானம் கூடிட நாடுவோம் குருவினை. [ஞா-நா]

யவனர் இல்லாது சரித்திரம் உண்டா? [ய-இ]
இவனே அவனது யசமானன். [இ-ய]

யக்ஞத்தில் முனிவருக்கு ஈடுபாடு அதிகம். [ய-ஈ]
ஈமக் கடனுக்கோர் யஜ்ஞம் உண்டு. [ஈ-ய]

யவனர் எப்படி நுழைந்தனர் தெரியுமா? [ய-எ]
எவ்வளவு பெருமை யசோதைக்குக் கண்ணனால்! [எ-ய]

யக்ஞம் ஏது தருமம் குன்றிட? [ய-ஏ]
ஏரினால் உழுதவன் யந்திரத்தால் உழுகிறான். [ஏ-ய]

ஜப்பான் நாட்டார் சட்டப்படி நடப்பர். [ஜ-ச]
சத்ரம் சாமரத்துடன் ஜனித்தது குழந்தை. [ச-ஜ]

ஜப்பான் நாட்டில் தஞ்சம் புகுந்தான். [ஜ-த]
தங்கல் நேரிட்டது ஜனனியின் தந்தைக்கு. [த-ஜ]

ரணகளத்தில் இவனோ கூற்றுவன் போல. [ர-இ]
இவனது ரத்தம் என்னவகை தெரியுமா? [இ-ர]

ரத்தம் ஈந்தால் உயிர்கள் பிழிக்கும். [ர-ஈ]
ஈச்சம் பழத்தால் ரத்தம் பெருகும். [ஈ-ர]

ரங்க சுவாமி எங்குதான் இல்லை? [ர-எ]
எழுந்தாள் தேவலோக ரம்பை போல. [எ-ர]

ரவாதோசைக்கு ஏது பணமென் பையில்? [ர-ஏ]
ஏனென்பேனோ ரயிலில் பயணிக்க? [ஏ-ர]

ஹரியென்றும் எழுதலாம் அரியென்றும் எழுதலாம். [ஹ-அ]
ஹரஹர என்பது பெரிதோ ஆண்டிக்கு இடுவது பெரிதோ? [ஹ-ஆ]
ஹரிக்கும் உண்டு ஐவகைத் தொழில்கள். [ஹ-ஐ]
ஹரிபற்றி உண்டோ ஔவையின் பாட்டில்? [ஹ-ஔ]

இத்தனை சலுகைகள் தொடைகளில் இருந்திட
மரபுக் கவிதையில் எதுவும் இயன்றிட
புதுமைக் கவிதை மோகம் ஏனோ?
ஆதனாலினால் மரபினிலே ஆக்குவோம் புதுமை!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 5 Jun 2013 - 11:04

5.41. மோனைப் பயிற்சி

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாகுமே.

1 என்பது அடிவிகற்ப மாகுமே
1 2 இணைவிகற்ப மாகுமே
1 3 பொழிப்பெனப் படுமே
1 4 ஒரூஉவெனப் படுமே
1 2 3 கூழையே
1 3 4 மேற்கதுவாய்
1 2 4 கீழ்க்கதுவாய்
1 2 3 4
முற்றெனும் விகற்பம் பெற்று வருமே.

பயிற்சி 1. முதல்தர மோனை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் பாடலின் முதலே ழடிகளில்
ஏழ்விகற் பத்தில் வருகிற மோனைகள்
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.

அல்குல் அகற்றி அனுக்கி அம்பலைத்
அரிவை அமைத்தோன் அவ்வளை அம்நுண்
அனைய அசோகின் அரற்றும் தமர்த்த

அணிமலர் ----- தளிர்நலம் கவற்றி
அரிற்குரற் கிண்கிணி ----- சீரடி
அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் -----
அகன்ற ----- ----- மருங்குல்
அரும்பிய கொங்கை ----- -----
அவிர்மதி ----- திருநுதல் -----
அயில்வேல் ----- ----- -----
கருங்கயல் நெடுங்கண் நோக்கமென்
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே!
--யா.கா.மேற்கோள்


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 6 Jun 2013 - 18:39

பயிற்சி 2. வருக்க மோனை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் பாடலின் முதலே ழடிகளில்
ஏழ்விகற் பத்தில் வருகிற மோனைகள்
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.

பொங்கிச் கலகம் நில்லாது உவப்பான்
கொஞ்சுத விழுந்த பைத்தியக் சினப்பான்
பலமுறை நடப்பான் விம்முவான் விலாங்கென

பலவகை யில்லவன் ----- காரன்
உலவுதல் ----- நிலவினைப் பழிப்பான்
சிலரிடம் பேசுவான் பலரிடம் -----
குலவுதல் ----- ----- உண்டு
நிலத்தினில் கால்கள் ----- -----
புலம்புவான் ----- சிரிப்பான் -----
வலையினில் ----- ----- -----
சிலசம யம்சிறு கவிதையும் சொல்லுவான்!


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 7 Jun 2013 - 10:28

பயிற்சி 3. மோனைப் புறனடை அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் அடிகள் ஐந்தினில் பயிலும்
மோனைப் புறனடை யாவும் அதன்பின்
கலைந்த நிரலில் அமைந்து உள்ளதைச்
சரிவர அமைத்து அடிகளின் வரிசையில்
பயின்று வந்திடும் எதுகை குறிக்கவும்.

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
கெட்டாலும் கலைஞனுக்குப் பட்டணத்தில் வாழ்வு
பட்டாலும் அவனதைச் சட்டை செய்யான்
சுட்டாலும் குழம்பில் காரம் போதாது
தையலிடம் தஞ்சம் கைராசி மருத்துவன்
சேயும் தாயும் நலமாய் உள்ளனர்.

உயிர் இன அணு நெடில் வருக்க


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 8 Jun 2013 - 10:35

5.41. மோனைப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. முதல்தர மோனை விகற்பங்கள் அறிதல்: விடை


அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி ... ... இணை
அரிற்குரற் கிண்கிணி அரற்றும் சீரடி ... ... பொழிப்பு
அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி ... ... ஒரூஉ
அகன்ற அல்குல் அம்நுண் மருங்குல் ... ... கூழை
அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோன் ... ... மேற்கதுவாய்
அவிர்மதி அனைய திருநுதல் அரிவை ... ... கீழ்க்கதுவாய்
அயில்வேல் அனுக்கி அம்பலைத் தமர்த்த ... ... முற்று
கருங்கயல் நெடுங்கண் நோக்கமென்
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே!
--யா.கா.மேற்கோள்


Sponsored content

PostSponsored content



Page 17 of 29 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 23 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக