புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
1 Post - 2%
prajai
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
383 Posts - 49%
heezulia
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10கவிதையில் யாப்பு - Page 15 Poll_m10கவிதையில் யாப்பு - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 15 of 29 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 20, 2013 10:23 am

5.8. இணை எதுகை

(கலிவிருத்தம்)
முதலெழுத் தளவொக்க முதலிரண்டு சீர்களிலே
அதன்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றியும் ஏனைச் சீர்களில்
இதுபோல ஒன்றா திருத்தலும் இணையெதுகை.


சான்றுகள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 3:6

என்றும் என்தோள் பிரிபு அறியலரே
---கபிலர், நற்றிணை 1

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறியிட்டுத்
---நக்கீரர், நெடுநல்வாடை 76

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
---காரியாசான், சிறுபஞ்சமூலம் 8

தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
---தோலாமொழித் தேவர், சூளாமணி

கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
---இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வேட்டுவ வரி 61

மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானமளிப்பார்
ஆர்‍அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய்---ஊர்‍அறிய
---பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், அழகர் கிள்ளை விடுதூது 55


(ஆசிரியத் தாழிசை)
முதலிரண்டு சீர்தவிர வேறு சீர்களிலும்
எதுகை அமைவதால் கீழ்வரும் அடிகளில்
இணையெதுகை யில்லையென் றறிந்து கொள்க.

சொல்லிய நல்லவும் தீயவாம்---எல்லாம் ... [கீழ்க்கதுவாய் எதுகை: 124]
விழியிரண்டில் வழியிருக்கப் பழியஞ்சாள் பாவையவள் ... [கூழை யெதுகை: 123]
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் ... [முற்றெதுகை: 1234]


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 23, 2013 5:51 pm

5.9. பொழிப் பெதுகை

(கலிவிருத்தம்)
முதலெழுத் தளவொக்க முதற்சீரில் சீர்மூன்றில்
முதல்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றியும் ஏனைச் சீர்களில்
இதுபோல ஒன்றா திருத்தலும் பொழிப்பெதுகை.

சான்றுகள்
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.
---திருக்குறள் 24:6


(கலிவிருத்தம்)
பொழிப்பெது கைகள் பொலிந்து வந்திட
எழுதும் பாட்டின் ஒவ்வொரு அடியும்
எளிதில் மனதில் நிலைப்பது காணீர்
களிப்புடன் பாரதி பாடும் அடிகளில்.

ஞானத்தி லேபர மோனத்திலே---உயர்
மானத்தி லேயன்ன தானத்திலே...
தீரத்தி லேபடை வீரத்திலே--நெஞ்சில்
ஈரத்தி லேயுப காரத்திலே...
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே--புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே...
---தேசிய கீதங்கள், பாரத நாடு


5.10. ஒரூஉ எதுகை

(கலிவிருத்தம்)
முதலெழுத் தளவொக்க முதற்சீரில் சீர்நான்கில்
முதல்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றியும் ஏனைச் சீர்களில்
இதுபோல ஒன்றா திருத்தலும் ஒரூஉவெதுகை.

சான்றுகள்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
---திருக்குறள் 20:2


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கெனென் றிட்டுண்டு இரும்.
---ஔவையார், நல்வழி 11


5.11. கூழை எதுகை

(கலிவிருத்தம்)
முதலெழுத் தளவொக்க முதல்மூன்று சீர்களிலே
முதல்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றியும் ஏனைச் சீர்களில்
இதுபோல ஒன்றா திருத்தலும் கூழையெதுகை.

சான்றுகள்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்ப்பற்றைப்
பற்றுக பற்ற விடற்கு.
---திருக்குறள் 35:9


ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும் வலி குன்றா தோதுவம்.
---பாரதியார், ஜய வந்தே மாதரம்


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 25, 2013 6:39 pm

5.12. மேற்கதுவாய் எதுகை

(கலிவிருத்தம்)
முதலெழுத் தளவொக்க முதற்சீரில் மூன்றுநான்கில்
முதல்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றியும் ஏனைச் சீர்களில்
இதுபோல ஒன்றாததும் மேற்கதுவா யெதுகை.

சான்றுகள்
உதவி வரைத்தன்று உதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
---திருக்குறள் 11:5

அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
--புகழேந்திப் புலவர், நளவெண்பா 38


5.13. கீழ்க்கதுவாய் எதுகை

(கலிவிருத்தம்)
முதலெழுத் தளவொக்க முதலிரண்டு சீர்நான்கில்
முதல்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றியும் ஏனைச் சீர்களில்
இதுபோல ஒன்றாததும் கீழ்க்கதுவா யெதுகை.

சான்றுகள்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
--திருக்குறள் 43:8

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 79


5.14. முற்றெதுகை

(ஆசிரியத் தாழிசை)
முதலெழுத் தளவொக்க முதல்நான்கு சீர்களிலே
முதல்பின் வருகின்ற எழுத்து(கள்) வகையிலோ
அதுவாகவோ ஒன்றுவது முற்றெதுகை யாகுமே.

சான்றுகள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 2:2

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியி லாளியெனச்
செருமலை செம்மலை முதலியர் சிந்தச் சிந்திட நந்த்த்பிரான்
--குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 41


*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 6:56 pm

அருமையிருக்கு

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 27, 2013 7:11 pm

5.15. சொற்குறை எதுகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை விகற்பம் எட்டென வருவது
முதல்தர எதுகைகள் வகையினிற் சேரும்
முதல்தர மோனை விகற்பமும் எட்டே.

எதுகை விகற்பம் முதல்தர மாக
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்கப்
பின்வரும் எழுத்துகள் பொருந்திடும் போது
ஒன்றென வருமே பொருந்திடும் எழுத்துகள்.

’தலை’-யெனும் சொல்லின் எதுகை யானது
’மலை’யென, ’சிலை’யென, ’குலை’யென வரலாம்
இரண்டாம் எழுத்து அதுவே ஆவதால்.
’தலை’-யின் எதுகை ’மழை’யென வராது
இரன்டாம் எழுத்து மாறு படுவதால்.

மரபின் வழியில் கவிதை செய்கையில்
பொருளும் சொல்லும் பார்க்கும் போது
பொருளே சொல்லை விஞ்சுதல் கண்டு
முதல்தரத் தொடைகள் இயலா தாகில்
சற்றே தளர்ந்து தொடைகளின் இலக்கணம்
மற்ற வகைகள் வந்திட உதவுமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
இவ்வகைத் தொடைகள் இரண்டாம் தரமே
செவ்விதின் இதனை மனதிற் கொள்க.
பொருளின் முக்கியம் கருதி யிவ்வகை
மரபின் வழியில் பின்னர் அமைந்ததை
சொற்குறை, சிறப்பிலா, ஏனோதானோ,
மற்றும் பொருள்வகை, பொருள்மேல், என்று
பற்பல கற்பனைப் பெயர்கள் இட்டு
இலக்கண இலக்கிய வகைகளில் அழைக்கலாம்.

5.16. சொற்குறை எதுகை வகைகள்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சொற்குறை எதுகையிற் பற்பல வகைகளே
வருக்க எதுகை, இனவெதுகை, உயிரெதுகை,
நெடிலெதுகை, மூவகை எதுகை,
இருவிகற்ப எதுகை, இடையிட் டெதுகை,
மூன்றாம் எழுத்தொன் றெதுகை,
வழியெதுகை, ஆசிடை யிட்ட எதுகை
யெனப்பல வகைகளில் சொற்குறை அமையுமே.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Apr 03, 2013 7:19 pm

5.17. வருக்க எதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வருக்கம் என்பது வகுப்பு ஒழுங்கு
க-முதல் கௌ-வரை பன்னிரு உயிர்மெய்
க-வருக்கம் எனவே அழைக்கப் படுவது
உயிர்மெய் வருக்கம் இப்படிப் பதினெட்டே.

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபிற முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்துடன் வருக்க எழுத்தென
ஒன்றி வருதல் வருக்க எதுகையாம்.


’சிலவகைப் புலிகள்’, ’வியப்பினில் உயிர்ப்பு’,
"பாடாமல் ஆடேனே", "பலாப்பழ விலைசொல்"
தொடர்களில் வருக்க எதுகை அமைவது காண்க.
தொடர்கள் இவற்றில் குறிலொடு குறிலோ
நெடிலொடு நெடிலோ ஒன்றுதல் காண்க.

"சிலவகைச் சிலைகள்", "பாடாமல் ஓடுவேன்"
என்றும் வரலாம் குறில்நெடில் இணைந்து.
எதுகை எழுத்துகள் அளவில் ஒத்திட
எதுகை சிறக்க அமையும் என்பரே.

வருக்க எதுகையில் வருக்க ஒற்றுகள்
அதுவும் வல்லின மெய்கள் தவிர்த்தல்
வேண்டும் இலக்கணம் சரியே அமைய.
’சிற்றாடைச் சிறுமகள்’ என்பது கூடாது.
’புன்னகை மனிதன்’ என்பதும் தவிர்க்க.

இடையின மெல்லின ஒற்றுகள் வருதல்
தடையிலை அவற்றின் வருக்க எதுகையில்
என்பதைக் காட்டும் கம்பரா மாயணம்
மற்றும் வேறு சான்றுகள் கீழே.

ஈரநீர் படிந்து இன்னிலத் தேசில
கார்கள் என்ன வரும்கரு மேதிகள்
ஊரில் நின்ற கன்றுள்ளிட மென்முலை
தாரை கொள்ளத் தழைப்பன சாலியே.
--கம்பராமாயணம் 1.2.25

ஆயபேர் அன்பெனும் அளக்கர் ஆர்த்தெழ
தேய்விலா முகமதி விளங்கித் தேசுற
தூயவள் உவகை போய்மிகச் சுடர்க்கெலாம்
நாயகம் அனையதோர் மாலை நல்கினாள்.
--கம்பராமாயணம் 2.2.52

ஏணியுஞ் சீப்பு மாற்றி
மாண்விணை யானையு மணிகளைந் தனையே.
--மதுரை வேளாசன், புறநானூறு 305


சான்றுகள்
வருக்க எதுகைச் சான்றெனக் கீழே
வருகிற அடிகளில் முதற்குறள் தன்னில்
நெடில்-குறில் எதுகை அடிகளில் காண்க.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
---திருக்குறள் 81:5


எதுகை வருக்கக் குறிளிது நோக்கின்
முதலடிச் சீர்களில் நெடிலொடு குறிலும்
அடுத்ததன் சீர்களில் நெடிலொடு நெடிலும்
அடிகளில் நெடிலும் ஒன்றிடக் காண்க.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.
---திருக்குறள் 52:10


ஈது முன்னர் நிகழ்ந்த திவன்துணை
மாத வத்துயர் மாண்புடை யாரிலை;
நீதி வித்தகன் தன்னருள் நேர்ந்தனிர்
யாது உமக்கரி தென்றனன் ஈறிலான்.
--கம்பராமாயணம் 1.10.137


*****

நாமும் வருக்கம் அமைத்திடு வோமா?
’இகலில் தகித்து வகுபட்ட பகைவன் கைகொடான்’
க-வகைக் குறில்கள் தொடரில் வரிசையாய்
ஐந்தில் நான்கு வருவது காண்க.
கையெனும் நெடிலும் பகைவன் சொல்லில்
ஐகாரக் குறுக்கமாய்க் குறுகுதல் காண்க.

வராத கெ-குறில் சேர்க்கச் சொல்லினை
வகையுளி செய்து இப்படிப் பிரிக்கலாம்.
வகையுளி என்பது பேசும் சொல்லினை
சீரசை நோக்கிப் பிரித்தல் ஆகுமே.

’இகலில் தகித்து வகுபடவெறுப் புகெழுமும் பகைவன் கைகொடான்’
க-வகைக் குறில்கள் தொடரில் வரிசையாய்
ஐந்தும் வருவதன் செயற்கை காண்க.

வாராக் கெ-யெனும் குறிலினை இரண்டாம்
எழுத்தாக்கி வந்திடும் சொல்லொன் றினையே,
வகையுளி யின்றித் தொடரில் இங்குப்
’பகைவன்’ முன்பு சேர்த்திடு வோர்க்கு
வேண்டிய வரங்கள் கிட்டுவ தாக!

இதுபோல் நெடில்கள் வரிசையில் வந்திட
எதுகை வருக்கம் அமைப்பது கடினம்
பொதுவில் இயல்பாய் வராதென அறிக.

"பிசாசவள் வசீகர வசூரையினங் கசேனையின்
அசைவினி லேசோதித் தசௌமியம்’ ... ... ... [வசூரை=விலைமகள், வேசி]

என்று சொற்களைப் பிரித்து வகையுளியாக்கி
எழுதினால் செயற்கை யாகி விடுமே!

வகையுளி நீக்கிடப் புரியும் இத்தொடர்:
’பிசாசவள் வசீகர வசூரையின் அங்க சேனையின்
அசைவினிலே சோதித்த சௌமியம்’


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 07, 2013 10:29 am

5.2.17. இன எதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபிற முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்துடன் இனவெழுத் தென்று
ஒன்றி வருதல் இனவெதுகை யாகுமே
இனவெது கையிலே ஒற்றுகள் வரலாம்.


(ஆசிரியத் துறை)
இனங்களின் வகைகள் நினைவு கூர்ந்திட
கசடதபற வல்லினம் என்றும்
ஙஞணநமன மெல்லினம் என்றும்
யரலவழள இடையினம் என்றும் தெரியும்.

சான்றுகள்
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04

தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
---திருக்குறள் 013:09


(நிலைமண்டில ஆசிரியப்பா)
வல்லின ற-கரமும் இடையின ர-கரமும்
ஒலிநெருக் கத்தால் இன்றைய பாக்களில்
எதுகைகள் எனவே கருதப் படுமே.

நாமும் இனங்களில் அமைத்திடு வோமா?
கீழ்வரும் குறள்வெண் செந்துறை யடிகளில்
முதலடி தன்னில் வல்லினம் வரிசையில்.

(குறள் வெண்செந்துறை)
சேகரின் கேசம் ஆடப் பாதத் தாபம் ஆறத்
திடுமெனக் காற்றடித்(து) இடியிடித்துப் பேய்மழை பொழிந்தது.

தங்கிடத் தஞ்சம் திண்ணையில் தந்திடும் நம்மூர் நன்மக்கள்.

தொடரில் மெல்லினம் வரிசையில் வருவது காண்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அயலாரும் வரவேற்று வலம்வரும் அவளது
குழந்தையின் உளறல் கேட்க இனிமை.

முதலாறு சீர்களில் இடையினம் வரிசையில்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Apr 10, 2013 7:16 pm

5.19. உயிர், நெடில் எதுகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்துடன்
அடிபிற முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஒத்த குறிலொலி ஒன்றுவது உயிரெதுகை,
ஒத்த நெடிலொலி ஒன்றுவது நெடிலெதுகை.


’பகலும் இரவும்’, ’முகிலின் குளிர்ச்சி’
’பாகலும் பாமரனும்’, ’பாடுவது தேறுமா’
தொடர்களில் உயிரெதுகை வருவது காண்க.

’உலாவரும் கனாமகள்’, ’விதைகள் விளைந்தன’,
’பேசாமல் போகாதே’, ’பாவையும் ஆசையும்’
தொடர்களில் நெடிலெதுகை வருவது காண்க.

முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்தில்
ஏதேனும் குறிலொலி ஒன்றுவதும் உயிரெதுகை,
ஏதேனும் நெடிலொலி ஒன்றுவதும் நெடிலெதுகை.


’சுடச்சுட வருவது’, ’அனுவின் கடிதம்’
’பலாப்பழ நிவேதனம்’, ’வினாவெனில் விடையுள’
’போனது போதுமோ’, ’ஆதவன் நூதனம்’
’போகாதே பூவையே’, ’கூரையில் ஏறாதே’
தொடர்களில் ஏதேனும் குறிலிலொலி ஒன்றிட
உயிரெதுகை நெடிலெதுகை வருவது காண்க.

உயிரெதுகை நெடிலெதுகைச் சான்றுகள் கீழே:
(குறள் வெண்பா)
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
---ஔவையார்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 13, 2013 11:00 am

5.20. மூவகை எதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலெழுத் தளவொக்கப் பின்வரும் எழுத்துகள்
சீர்முழுதும் ஒன்றினால் தலையாய எதுகை.

’அடுப்பில் குவளை கழுத்தில் குவளை,
குளத்தில் குவளை’ என்னும் தொடரில்
குவளையின் பலவிதப் பொருள்கள் பயில
தலையாய எதுகை அமைவது அறிக.

ஓரெழுத்து மட்டும் ஒன்றினால் இடையெதுகை:
’அகர முதல’, ’பகவன் முதற்றே’.
மற்றவகை யாவும் கடையெது கையாம்.
சொற்குறை எதுகைகள் கீழ்நிலை யாவதால்
கடையெதுகை என்றும் அழைக்கப் படுமே.


(வஞ்சிப்பா அடிகள்)
சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்

மேலுள்ள அடிகளை அலகிடக் கிடைப்பது:
’லெல்லாம்’ என்பது தலையாய எதுகை;
சுற-இற இடையெதுகை; ’வன-பன’ கடையெதுகை
’கிடங்-பொழி’ முழுதும் ஒன்றாமல்
ஏதேனும் குறிலொலி ஒன்றிட உயிரெதுகை.

5.21. இருவிகற்ப எதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்னிரு அடிகளில் ஓரெது கையும்
பின்னிரு அடிகளில் வேறெது கையும்
நாலடிச் செய்யுளில் பெற்று வருவது
இருவிகற்(ப) எதுகை, இரண்டடி எதுகை
என்றிரு பெயர்களில் அழைக்கப் படுமே.

இருவிகற் பெதுகை வெண்பாவில் மிகுவருமே.

சான்றுகள்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
---ஔவையார், நல்வழி, கடவுள் வாழ்த்து

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதியவி உண்ணவே.
---திருமூலர், திருமந்திரம் 237

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.
------பாரதியார், கண்ணன் திருவடி

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 18, 2013 6:47 pm

5.22. இடையிட்டெதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் தோறும் வருத லின்றி
அடியொன்று விட்டு மற்றொன்றில் வருகிற
அடியெது கையே இடையிட் டெதுகையாம்
இப்படி ஒற்றைப்படை இரட்டைப்படை அடிகளில்
ஒப்ப ஓரெதுகை அமைந்து வருமே.


சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)
எட்டுத் தொகைநூல் பெயர்குறிக்கும் பழம்பாட்டில்
இடையிட் டெதுகை வருவது காணலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொ டகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.

ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
களிபடைத்த மொழியினாய் வாவாவா
கடுமை கோண்ட தோளினாய் வாவாவா
தெளிவு பெற்ற மதியினாய் வாவாவா
சிறுமை கண்டு பொங்குவாய் வாவாவா
எளிமை கண்டு இரங்குவாய் வாவாவா
ஏறுபோல் நடையினாய் வாவாவா.
---பாரதியார், போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

*****


Sponsored content

PostSponsored content



Page 15 of 29 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக