புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 13 of 29 •
Page 13 of 29 • 1 ... 8 ... 12, 13, 14 ... 21 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

4.65. அளவடிப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. அகவற் பாவின் அடிகள் அமைத்தல்: விடை
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
--ஔவையார், விநாயகர் அகவல் 1-4
பயிற்சி 2. வெண்பாவின் அடிகள் அமைத்தல்: விடை
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.
--ஔவையார், நல்வழி 11
பயிற்சி 3. கலிப்பாவின் அடிகள் அமைத்தல்: விடை
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
*****

4.66. நெடிலடிப் பெயிற்சி விடைகள்
பயிற்சி 1. நெடிலடிச் செய்யுள் அமைத்தல்: விடை
(கட்டளைக் கலித்துறை)
சீரதங் கோட்டு முனிகேட்ட நூற்படி செங்கரும்பால்
ஏரதங் கோட்டு வயல்சூழ் முதுகுன் றிறையவனைப்
பூரதங் கோட்டு மலையானைப் பாடப் புரந்தருளும்
பாரதங் கோட்டு நுதியா லெழுதிய பண்ணவனே.
--சிவப்பிரகாச சுவாமிகள், பழமலையந்தாதி காப்புச் செய்யுள்
பயிற்சி 2. நெடிலடிச் செய்யுள் புனைதல்: விடை
(கலித்துறை)
தங்கத்தில் மாசிருந்தால் தீயினிற் புடமிட்டுக் களையலாம்
அங்கத்தில் மாசிருந்தால் அரைகுறை வாழ்வேனும் வாழலாம்
மனதினில் மாசிருந்து மற்றவர் குடிகெடுத்துத் தானோங்கி
தினம்வாழும் காசுள்ள தீயோரால் நலிவுறும் கலிகாலமே.

4.67. கழிநெடிலடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆறும் அதற்கு மேற்படும் சீர்கள்
அமைந்து முடிவது கழிநெடி லடியாம்.
கழிநெடி லடிகளை நீளம் நோக்கிப்
பலவரி களிலே எழுதுதல் வழக்கமே.
சீர்கள் மிகுவதால் சரியாய் அளவிட
அடியெது கையினை அமைப்பது வழக்கம்.
அடியெது கையினில் ஒவ்வோர் அடியிலும்
முதலாம் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வருமே.
அடிகள் தோறும் சீர்களின் நடுவில்
முதலெழுத் தொன்றும் மோனை யமைத்தால்
செய்யுளின் ஓசை சீர்த்து வருமே.
சான்று 1.: அறுசீர்க் கழிநெடிலடி
(அடியெதுகை, சீர் மோனை 1-4)
நீரிடை உறங்கும் சங்கம்
... நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு
...தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை
...துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்
...பொழிலிடை உறங்கும் தோகை.
--கம்பராமாயணம் 1.2.6.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
...
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
--மஹாகவி பாரதியார், தமிழ்
சான்று 2.: எழுசீர்க் கழிநெடிலடி
சீரணி திகழ்திரு மார்பின் வெண்ணூலார்
...திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையொர் பங்கர்
...மான்மறி ஏந்திய மைந்தர்
--திருஞானசம்பந்தர், திருப்பாம்புரம் தேவாரத் திருப்பதிகம்
சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதிலும்
--மஹாகவி பாரதியார், ஜய பாரத!
சான்று 3.: எண்சீர்க் கழிநெடிலடி
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
...ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
...வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
--உலகநாதர், உலகநீதி
மங்கியதோர் நிலவினிலே கனவவிலிது கண்டேன்
...வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
...புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
--மஹாகவி பாரதியார், அழகுத் தெய்வம்
சான்று 4.: ஒன்பதின் சீரடி விருத்தம்
இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின்
...எதிர்ந்த தானையை இலங்கும் ஆழியின் விலங்கியோன்
முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை
...முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோன்
--யாப்பருங்கலக் காரிகை
இடியது விழுந்த தோதான்
...இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி
...இருசெவி நுழைத்த தோதான்
தடியது கொண்டே எங்கள்
...தலையினில் அடித்த தோதான்
...தைரியம் பிறந்த தோதான்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, திலகர்

சான்று 5. பதின் சீரடி விருத்தம்
கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு
கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத
நாத என்று நின்று தாழ
--யாப்பருங்கலம்
கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
முத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்
முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட்கோவை 56
சான்று 6. பதினொரு சீரடி விருத்தம்
அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும்
. அவிர்சோதி மூன்றொ டணியொரு நான்கும்
. . மதமைந்தும் ஆறு பொருண்மேல்
மருளாழி போழும் நயமேழும் மேவி
. நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்ற
. . வரதற்கோ பத்தின் மகிழ
--யாப்பருங்கலம்
வீடு கொண்ட நல்லறம் பகர்ந்த மன்ப தைக்கெல்லாம்
. விளங்கு திங்க ணீர்மையால் விரிந்திலங்கும் வன்பினோன்
மோடு கொண்ட வெண்ணு ரைக்க ருங்கடற் செழுஞ்சுடர்
. முளைத் தெழுந்த தென்னவாய் முகிழ்த்திலங்கு போதியின்
--புத்தமித்திரனார், வீரசோழியம்
சான்று 7. பன்னிரு சீரடி விருத்தம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எண்சீர் விருத்தம் மேலாக இற்றைநாள்
எழுதப் படுகிற விருத்தங்கள் பொதுவாகப்
பன்னிரு பதினான்கு பதினாறு வகையே.
கருணையின் முழுகிய கயறிரி பசியக ரும்பே வெண்சோதிக்
. கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர் கன்றே யென்றோதும்
திருமகள் கலைகமக டலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை
. தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில் செங்கோ செங்கீரை.
--குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மைப் பிள்லைத் தமிழ் 9
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
. வான மளந்த தனைத்து மளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே.
--மஹாகவி பாரதியார், தமிழ்மொழி வாழ்த்து

சான்று 8. பதினான்கு சீரடி விருத்தம்
எய்த வம்பு தைக்கு முன்ன மற்றொர் பகழி தொட்டுவேள்
. ஏழை யங்க நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான்
செய்த வம்பு ரிந்தி லாதெ னுய்யு மாறு முண்டுகொல்
. திகழு மாட மதியு ரிஞ்சு கச்சி மேய செம்மலார்
--பூண்டி அரங்கநாத முதலியார், கச்சிக்கலம்பகம் 76
தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா!
...தரணி யெங்கும் இணையி லாத சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம்
...அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, 20. இளந்தமிழனுக்கு
சான்று 9. பதினாறு சீரடி விருத்தம்
ஓங்குகயி லாயபரம் பரைநந்தி யடிகட்
. குறுமரபெட் டாவதுபிற் றோன்றலா யெங்கள்
. . உயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற்
. . . குற்றபத்தொன் பதாவதுமுற் றோன்றலாய்ப் பொலிந்து
தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து
. திகழுமா பதிசிவனே குன்றையுற மேவித்
. . திரிந்துமேர் வளங்கொண்டு பெருமையின்மே லாகித்
. . . சிறத்தலாற் செம்மேனிக் குமரவே ளத்தும்
--தி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழார்ப் பிள்லைத்தமிழ் 723
சந்தவிருத்தம்
பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள்
. பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
. . பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள்
. . . படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள்
. எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
. . இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள்
. . . எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்
--குமரகுருபரர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 1.9

4.67. கழிநெடிலடி முயற்சி
(குறள் வெண்செந்துறை)
அளவொத்த அடியிரண்டில் எவ்வடியும் எச்சீரும்
தளையெதுவும் வருவதுவே குறள்வெண்செந் துறைப்பாவினம்.
(ஆசிரியத் தாழிசை)
அளவொத்த அடிமூன்றில் எவ்வடியும் எச்சீரும்
தளையெதுவும் வருகின்ற ஆசிரியத் தாழிசையே
எளிதாக நாமெழுத இன்னொருபா வினமாகும்.
(குறள் வெண்செந்துறை)
இவ்விரு பாவினம் எளிதாய் இயற்றி
செவ்விதின் முயல்வோம் கழிநெடில் அடிவகை.
அறுசீர்:
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே ஒன்றே
இன்றே நாமிதை உணர்ந்து கொள்வது நன்றே நன்றே.
எழுசீர்:
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே யாகும் பரமே
இன்றே நாமிதை உணர்ந்து கொளவது நன்றே யாகும் நமக்கு.
எண்சீர்:
மாடு மனையாள் வீடு செல்வம் கல்வி யெல்லாம் இருந்தும் கூட
பாடு படுவது குறைவது இல்லை பிள்ளை ஒன்று பெண்கள் ஐந்து.
ஒன்பதின் சீர்:
காலை எழுந்து ஆவி மணக்கும் காப்பி குடித்து
. பேப்பர் படித்துக் குளித்து
சாலை ஓய்ந்து காலி யானதும் மெல்ல நடந்து
. கோவில் செல்லும் முன்னே
வேலை எல்லாம் வழியில் முடிக்க வங்கி சென்றிட
. ஞாபகப் படுத்து பெண்ணே.
பதின் சீர்:
முகத்தில் சந்திரன் விழிகளில் சூரியன்
. நடையில் அன்னம் இடையில் மின்னல்
. . கால்களில் சலங்கை கொஞ்ச
அகத்தில் நினைத்ததை விரல்களில் அபிநயித்து
. விழிகளில் தருவித்து மேடையில் ஆடுவாள்
. . நாட்டிய மேதையாம் நங்கை.
பதினொரு சீர்:
வானம் பொழிந்து பூமி விளைந்து
. செல்வம் செழித்து நன்மை விளைந்து
. . மனிதர் யாவரும் மகிழ்ந்து
தானம் கொடுத்து நெறிகள் தழைத்து
. அன்புடன் வாழும் வழிவகை கற்றிட
. . உன்னருள் தந்திடு இறைவா!
பன்னிரு சீர்:
கேட்டது கிடைத்த குழந்தைப் பருவம்!
. முனைந்து படித்த பள்ளிப் பருவம்!
. . நினைத்தது செய்த இளமைப் பருவம்!
வேட்டது கிடைக்கும் வழிதெரி யாமல்
. நாளொரு கனவும் பொழுதொரு கவலையும்
. . சூழ்ந்திட வாழ்ந்திடும் இல்லறப் பருவம்!
பதினான்கு சீர்:
வருவது ஏற்றுக் கவலைகள் குறைத்து வந்தது போதும் என்றும்
. விழைவது சுருக்கித் தன்நெறி பார்த்து நடந்திட வேண்டும் என்றும்
குருவின் வார்த்தை கீதையில் கேட்டு, செய்வது நானல்ல நீயே
. பலன்கள் உனக்கே கண்ணா என்று வாழ்ந்திட ஞானம் பிறக்கும்.
பதினாறு சீர்:
வந்தது ஒன்று போனது வேறு
. படித்தது ஒன்று கிடைத்தது வேறு
. . சொன்னது ஒன்று செய்தது வேறு
. . . நினைத்தது ஒன்று நடந்தது வேறு
பந்தது போலக் கால்களில் சிக்கி
. அங்கும் இங்கும் உதைக்கப் பட்டு
. . இலக்கெது என்று புரிந்தி டாமல்
. . . காலச் சுழலில் உழல்கின் றேனே!

4.67. கழிநெடிலடிப் பயிற்சி
பயிற்சி 1.: அறுசீர் எழுசீர் பிரித்தெழுதுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அறுசீர் எழுசீர்க் கழிநெடி லடிகளில்
உறுசீர் யாவும் கலந்ததைப் பிரித்து
அறுசீர் இரண்டடி எழுசீர் இரண்டடி
வருமா றமைத்துச் சரியா யெழுதுக.
காலை மேனி கமலம் மற்றுநான் அடித்தது றேயுன்
ஆற்றேன் மளந்த புறம்போ வேண்டும் போதும் ஆதலால்
தாடும் பெற்றேன் அம்மையப் பாவினி புனிதநீ என்னை சொல்லாய்
மண்டல கொண்டல்வண் குரைகழற் ணாவன் பொடித்திரு அணைத்திடல் அம்பலத்
பயிற்சி 2. எண்சீர் விருத்தம் பூர்த்தி செய்தல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சீர்களைக் கோட்டில் அமைத்துப்
பின்வரும் செய்யுளின் அடிகளை நிறைத்து
எண்சீர் விருத்தம் சரிவர எழுதுக.
மருள்வார்க் மயில்வா அமலா கந்தா பொருளா பொன்னே லயனே அமுதே
அருளார் --- சரணம் சரணம் அழகா --- சரணம் சரணம்
--- எனையாள் புனிதா சரணம் --- மணியே சரணம் சரணம்
--- கரியாய் சரணம் சரணம் --- கனனே சரணம் சரணம்
கருணா --- சரணம் சரணம் --- சரணம் சரணம் சரணம்

பயிற்சி 3. 9-11 சீர்வரும் விருத்த அடிகள் பூர்த்தி செய்தல்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஒன்பது பத்து பதினொரு சீர்வரும்
ஓரோர் அடியில் சீர்கள்
இரண்டும் ஐந்தும் எட்டும்
தம்முட் கலந்து கீழ்வரும் நிரலில்
உள்ளதில் இருந்து உகந்த சீர்களைத்
தேர்ந்து எடுத்துத் தக்க முறையில்
கோடிட்ட இடங்களில் எழுதுக அமைத்தே.
பொறிமுகக் கழைமருப் பயனும் யோடும் ஒருவே கரிகளைக் தமிழர் புவ்வம் ஆதி
கருநிறப் --- கடதடத் தமிழ்செவிக் --- புறுவலிக் கவினுடைக் --- கனவரைக்கட்
அங்க --- ஆதி யாய --- நூலின் நீதி --- ஆதி யாய
பண்டைத் --- போலப் பண்பும் --- இயலப் பலரும் --- மாகப் பயின்றிங் கினிநாமே
பயிற்சி 4. பன்னிரு சீர் விருத்த அடிகள் பூர்த்தி செய்தல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் திருவருட் பாவடிகள் இரண்டில்
கோடிட்ட இடங்களில் சீர்களின் பகுதியைக்
கீழுள்ள கலந்த சீர்களை வைத்துப்
பூர்த்தி செய்து சரிவர அமைக்கவும்.
வடிவும் குவளை விழியும் மிடமும் துணைப் வளை
னமும் மலரும் வளை மலை சடையும் யுமோர்
திருவண்ண நதியும்-- ஒருவண்ண மதியும்-- செவ்வண்ணம் நண்ணு--
. தெருள்வண்ண நுதல்-- அருள்வண்ண வத-- திகழ்வண்ண வெண்ணகை--
மருவண்ண மணி-- மலர்வண்ண மிடறும்-- மகள்வண்ண மருவு--
. மன்வண்ண மிகு-- பொன்வண்ண அடி-- மாணிக்க வண்ண--

பயிற்சி 1. அறுசீர் எழுசீர் பிரித்தெழுதுதல்: விடை
கொண்டல்வண் ணாவன் றேயுன் குரைகழற் கமலம் பெற்றேன்
மண்டல மளந்த காலை மற்றுநான் புறம்போ சொல்லாய்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப் பாவினி ஆற்றேன்
பயிற்சி 2. எண்சீர் விருத்தம் பூர்த்தி செய்தல்: விடை
அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனையாள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

4.70. அடிப்படை உறுப்புகள்: பா: பாவும் செய்யுளும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாவெனும் சொல்லின் பலவித பொருட்களைப்
பாவினை விளக்கப் புரிந்து கொள்வோம்
பாவெனில் முதலில் வருவது நெசவு
பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே
பாவெனும் சொல்லின் ஒருபொருள் பரப்பு
பாவுதல் என்பது பரவுதல் படர்தல்
பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தலே.
இத்தனை பொருளும் நெசவினில் அடக்கம்
நெய்வது நெசவு செய்வது செய்யுள்
செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம்.
(குறள் வெண்செந்துறை)
ஆடை என்பது நெய்யப் படுவது.
செய்யுள் என்பது செய்யப் படுவது.
ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச்
செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு.
ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச்
செய்யுளில் ஒருவகைப் பாவே வருவது உண்டு.
ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி]
செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... [வண்ணம்=தாளம்]
நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும்.
செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும்.
நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும்.
செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும்.
ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில்.
செய்யுளின் வனப்பு சீர்தளை ஓசையில்.
அந்நூல் பாவி நடத்தலின் ஆடை.
’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’ ... [இலக்கண விளக்கம் 711]
அறமும் பொருளும் இன்பமும் வீடும்
என்றே பாவி நடத்தலின் பாவென. ... [யாப்பருங்கலம் உரை]
பாவும் நெசவும் பிணைந்தது போல
நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர்.
நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல்.
நூற்றல் என்பதே செய்யுள் இயற்றலும்.
ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது.
பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது.
ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட.
பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... [வண்ணம்=தாளம்]
ஆடையின் அழகு அணிந்திட வருமே.
பாவின் அழகு பாடிட வருமே.
4.71. பாவென்பது சீர், தளை, ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாவெனில் முதலில் சீரினைக் குறிக்கும்
பாடலைக் குறிப்ப(து) ஆகுபெயர் மூலமே
பாடலை இயற்றும் ஊடகம் செய்யுளே.
பாவும் சீரும்
பாவின் உட்பொருள் சீரே என்பதால்
பாவகை உள்ளது சீர்களின் பெயரில்.
பாவின் வகைகள் நான்கினில் அடக்கம்
’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... [தொல்.செய்.104]
மாச்சீரும் விளச்சீரும் ஆசிரிய வுரிச்சீர் ... [தேமா புளிமா கருவிளம் கூவிளம்]
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் ... [மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு]
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர் ... [மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு]
என்றிவ் வாறு பெயர்கள் பெற்று
நான்கில் மூன்று பாவகை சுட்டுமே.
பாவும் தளையும்
சீரினும் மேலாய்ச் சீர்களால் இயன்று
சீரிடை நின்று ஓசை எழுப்பும்
தளைகள் நன்கு பாவகை காட்டுமே.
மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியம் ... [நானும் நீயும்]
விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியம் .. [அவனும் அவளும்]
ஆசிரியப் பெயர்பெறும் இவ்விரு தளைகளும்
ஆசிரியப் பாவகைக் குரிய தளைகளே.
மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், அவளும் நானும்]
பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்]
இவ்விரு தளைகளும் வெண்பா வகையின.
காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்]
கலிப்பா வகைக்கு உரிய தளையாம்.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்]
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்]
வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளாம்.
பாவும் ஓசையும்
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்குமே
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்குமே
கலித்தளை யதனில் துள்ளல் கேட்குமே
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்குமே
தளைகள் தட்டினால் ஓசை கெட்டு
பாவரும் செய்யுள் உரைநடை யாய்விடும்.

- Sponsored content
Page 13 of 29 • 1 ... 8 ... 12, 13, 14 ... 21 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 29