புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
426 Posts - 48%
heezulia
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
29 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10கவிதையில் யாப்பு - Page 12 Poll_m10கவிதையில் யாப்பு - Page 12 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jan 21, 2013 6:40 pm

4.64. சிந்தடிப் பயிற்சி
http://kavithaiyilyappu.blogspot.in/

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நினைவிற் கொள்ள:
இருதளை யடுத்தே இயலும் சிந்தடி
சீர்வகை யாயின் முச்சீர் அமையும்
எழுத்தடி யாயின் ஏழெட் டொன்பதே.

பயிற்சி 1. கட்டளைச் சிந்தடி அமைத்தல்

விடுபட்ட ஒற்றுகளைப் பூர்த்தி செய்து
அடிதோறும் ஏழெழுத்தில் முடியு மாறு
கீழ்வரும் அடிகளை அமைத்தே எழுதுக.

க-ணு- கினிய தெ-லாம்
உ-ண- குக-த தாமோ?
எ-ண- குரிய தெ-லாம்
ந-ண- குரிய தாமோ?


பயிற்சி 2. சீர்வகைச் சிந்தடி அமைத்தல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
சீர்வகைச் சிந்தடி ஆறில் வரவே
வாசலிலே என்ற சொல்லில் தொடங்கி
கதவை என்ற சொல்லில் முடிக்கவும்.

ஆசாமி கேட்கும் பார்க்க
வந்து காசு கதைவை!
ஓசி பேசாமல் ஆசாமி
யாரெனப் கேட்கும் வாசலிலே
என்று அல்லது எதிர்வீட்டு
அறிந்து நிற்கும் மூடினேன்


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 23, 2013 8:39 am

4.64. சிந்தடிப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. கட்டளைச் சிந்தடி அமைத்தல்: விடை

கண்ணுக் கினிய தெல்லாம்
உண்ணற் குகந்த தாமோ?
எண்ணற் குரிய தெல்லாம்
நண்ணற் குரிய தாமோ?

பயிற்சி 2. சீர்வகைச் சிந்தடி அமைத்தல்: விடை

வாசலிலே வந்து நிற்கும்
ஆசாமி யாரெனப் பார்க்க
காசு கேட்கும் அல்லது
ஓசி கேட்கும் எதிர்வீட்டு
ஆசாமி என்று அறிந்து
பேசாமல் மூடினேன் கதைவை!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 24, 2013 8:08 pm

4.65. அளவடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாற்சீர் அமைந்து முடிவது அளவடி
அடியின் இயல்பு நாற்சீர் என்பதால்
அளவடி யென்று அழைக்கப் பட்டது
நேரடி என்றும் இதனை அழைப்பரே.


பழந்தமிழ் இலக்கியப் பனுவல் பலவும்
அளவடி கொண்டே அமைந்து வருவன.
அகவற்பா வெண்பா கலிப்பா என்னும் ... ... ... [அகவற்பா=ஆசிரியப்பா]
மூவகைப் பாக்களில் அளவடி வருமே.

அளவடிச் சான்றுகள் எளிதில் காணலாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ(டு) இணங்க வேண்டாம்.
--உலகநாதர், உலகநீதி

ஆசிரியப்பா சான்றுகள்:
(நேரிசை ஆசிரியப்பா)
பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.
--கபிலர், புறநானூறு 107

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ
--சிலப்பதிகாரம், 1.2.73-79

தானமும் தருமமும் தவமும் தன்மைசேர்
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும்
மானவ வையம் நின்மகற்கு வைகலும்
ஈனமில் செல்வம் வந்தியைக என்னே
--கம்பராமாயணம் 2.1.80

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
--மஹாகவி பாரதியார்

வெண்பாச் சான்றுகள் (ஈற்றடி தவிர்த்து):
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--திருக்குறள் 1

(நேரிசை வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

(இன்னிசை வெண்பா)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
--நாலடியார் 36

கலிப்பா சான்றுகள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
--மாணிக்கவாசகர், திருவாசகம் 19

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.
--இராமலிங்க அடிகள், ஆளுடைய அடிகள் அருள்மாலை 7

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 25, 2013 7:58 pm

4.65. அளவடி முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி நாமும் முயன்றிடு வோமா?
அளவடி பயிலும் பாவகை அனைத்தும்
ஒருகை பார்ப்போம் சிறுகை யாயினும்!

ஆசிரியப்பா முயற்சி:
அகவற் பாவொன்று தகவுடன் புனைய
குறைந்தது மூன்று அடிகள் தன்னில்
மாமுன் நேரும் விளமுன் நிரைவரும்
ஆசிரியத் தளைகள் சீரிடை அடியிடை
மாசற ஒன்றிப் பிறதளை விரவுமே!


உள்ளுவ தனைத்திலு முயர்ந்ததே உறைந்து
தள்ளுவ தனைத்தும் தள்ளி வாழ்ந்தால்
விள்ள லின்றி வாழ்க்கை நடக்குமே.


கூவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா தேமா
தேமா தேமா தேமா கருவிளம்

உள்/ளுவ(து) (நிஆ) அனைத்/திலு(ம்) (நிஆ) உயர்ந்/ததே (நிஆ) உறைந்/து (நேஆ)
தள்/ளுவ(து) (நிஆ) அனைத்/தும் (நேஆ) தள்/ளி (நேஆ) வாழ்ந்/தால் (நேஆ)
விள்/ள(ல்) (நேஆ) இன்/றி (நேஆ) வாழ்க்/கை (இவெ) நடக்/குமே.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 26, 2013 6:27 pm

வெண்பா முயற்சி:
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்;
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.


அடிகள் இரண்டில் குறள்வெண்பா மற்றும்
அடிகளில் நாலாம் அளவியல் வெண்பா
வடித்துத்தான் பார்ப்போமே நாம்.

குறள் வெண்பா முயற்சி:
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ ஐயா!

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா

ஏற்ற வகைகளில் வெண்டளை வந்தாலும்
ஈற்றசையின் வாய்பாடு தப்பு.

திருத்தியது:
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்.

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

இன்னும் இயல்பாக:
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்லு?


தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

எல்/லோ/ரும் (வெவெ) நல்/லவர் (இவெ) என்/றா/கிப் (வெவெ) போ/னா/லே (வெவெ)
தொல்/லுல/கம் (வெவெ) தாங்/குமோ (இவெ) சொல்/லு.

இன்னிசை வெண்பா (அலகிட்டுத் தளைகளை அறிக):
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலப் பல்வகையில் சேர்ந்துவந்து
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு.


நேரிசை வெண்பா (இப்படி எழுதுவது இன்னும் சிறப்பு):
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலச் சேர்ந்துவந்து - பல்வகையில்
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு.


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jan 28, 2013 7:56 pm

கலிப்பா முயற்சி:
(குறள் வெண்செந்துறை)
கலித்தளையே பெரிதுவரப் பிறதளைகள் விரவிவந்தால்
கலிப்பாவின் அடிகளாகி ஒலித்துள்ளல் பயின்றுவரும்.


(கலிவிருத்தம்)
நீலவானப் பெருவெளியில் கோலமிடும் நிறவகைகள்
மாலையிலே தொடுத்திட்ட மலர்கள்போல் பலநிறங்கள்
காலையிலே எழுந்ததுமே கண்ணிறைக்கும் சிவந்தவானில்
ஆலயமணி செவியினிலே மிதந்துவந்து அமைதிதரும்.


கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்

நீ/லவா/னப் (கத) பெரு/வெளி/யில் (வெவெ) கோ/லமி/டும் (கத) நிற/வகை/கள் (வெவெ)
மா/லையி/லே (கத) தொடுத்/திட்/ட (கத) மலர்/கள்/போல் (கத) பல/நிறங்/கள் (வெவெ)
கா/லையி/லே (கத) எழுந்/தது/மே (வெவெ) கண்/ணிறைக்/கும் (கத) சிவந்/தவா/னில் (வெவெ)
ஆ/லய/மணி (வறி) செவி/யினி/லே (கத) மிதந்/துவந்/து (கத) அமை/தித/ரும்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 31, 2013 10:18 am

4.65. அளவடி பயிற்சி
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாற்சீர் அமைந்து முடிவது அளவடி
அகவற்பா வெண்பா கலிப்பா என்னும் ... ... ... [அகவற்பா=ஆசிரியப்பா]
மூவகைப் பாக்களில் அளவடி வருமே.


பயிற்சி 1. அகவற் பாவின் அடிகள் அமைத்தல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஔவையின் புகழ்மிகு அகவலில் வருகிற
அளவடி நான்கினைக் கண்டறிந் தெழுதுக.

வன்ன ஆடையும் கெறிப்பப் மருங்கில்
செந்தா பாடப் பொன்னரை பாதச்
ஞாணும் பலவிசை வளர்ந்தழ சீதக்
சிலம்பு பூந்துகில் களபச் மரைப்பூம்


பயிற்சி 2. வெண்பாவின் அடிகள் அமைத்தல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஔவையின் புகழ்மிகு வெண்பா வருகிற
அளவடி நான்கினைக் கண்டறிந் தெழுதுக.

என்வயிறே ஒருநாள் ஒழியாய் வாழ்தல்
ஏலாய் - ஒருநாளும் ஒழியென்றால் அறிது.
இடும்பைகூர் உன்னோடு என்நோ ஏலென்றால்
வறியாய் இருநாளுக்கு உணவை


பயிற்சி 3. கலிப்பாவின் அடிகள் அமைத்தல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
யா.கா. மே.கோ. கலிப்பா வருகிற
அளவடி நான்கினைக் கண்டறிந் தெழுதுக.

மறமன்னர் செயிர்த்தெறிந்த முல்லைத்தார் கதக்கண்ணன்
செல்வப்போர்க் முடித்தலையை சினஆழி முருக்கிப்போய்


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 01, 2013 7:15 pm

4.66. நெடிலடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐந்துசீர் கொண்டு முடிவது நெடிலடி
அளவடி விஞ்சும் சீர்கள் வருதலால்
நெடிலடி என்று பெயர்பெற் றிடுமே
நெடிலடி மற்றும் கழிநெடி லடிகள்
பாவினங் களிலே பெரிதும் வருமே.


சான்று 1.
(கலித்துறை)
வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினைநீங்கி நின்றார்
--தோலாமொழித் தேவர், சூளாமணி, கடவுள் வாழ்த்து

சான்று 2.
(கலித்துறை)
செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயி னோடும்
சந்தார்தடந் தோளடும் தாழ்தடக் கைக ளோடும்
அந்தாரக லத்தொடும் அஞ்சனக் குன்ற மென்ன
வந்தானிவன் ஆகுமவ் வல்விலி ராம னென்றாள்.
--கம்பராமாயணம், 3.7.3215

சான்று 2.
(கலித்துறை)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
--அருணகிரிநாதர், கந்தலரங்காரம் 72

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 04, 2013 6:31 pm

4.66. நெடிலடி முயற்சி

(குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் ஐந்துசீரில் முடியும்
நெடிலடி இயற்ற நாமும் முயல்வோம்

அளவொத்த எவ்வகை அடியும் எத்தளையும் கொண்டு
அடிகள் இரண்டுவரும் குறள்வெண் செந்துறையில் முனைவோம்.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)

கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.

வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.

மூச்சினை அடக்கி யாண்டு எண்ணுவது ஒருமைப்பட்டு
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?

முயற்சி 2.
(கலித்துறை)
வந்ததும் இருப்பதும் தெரியும் வருவது தெரியுமோ?
நொந்ததும் நிகழ்ந்ததும் தெரியும் நாளையென் தெரியுமோ?
பந்தைய எலிகள் வாழ்வில் விந்தைகள் ஏதுமுண்டோ?
சிந்தனை தறிகெட் டோடும் சிறுமதிதான் சாதனையோ?

முயற்சி 3.
(கலித்துறை)
தென்றலின் அலையில் தலைசாயும் நெற்பயிர் வயல்கள்
கன்றுடன் பசுக்கள் தொழுவம் திரும்பிடும் மாலை
மேற்கினில் மறையும் கதிரவன் ஒளியின் கீற்றுகள்
காற்றிலே ஊடுருவிக் கண்களில் பட்டு வழியும்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Feb 05, 2013 12:35 pm

4.66. நெடிலடிப் பெயிற்சி
பயிற்சி 1. நெடிலடிச் செய்யுள் அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
அடிமுதற் சீரினில் எதுகை அமைய
அடிகளின் சீரிரண்டு ’கோட்டு’ எனவர
நான்கு அடிவரும் நெடிலடி அமைக்கவும்.

புரந்தருளும் வயல்சூழ் கோட்டு லெழுதிய றிறையவனைப்
முதுகுன் மலையானைப் பண்ணவனே. நூற்படி ஏரதங்
பாரதங் கோட்டு செங்கரும்பால் கோட்டு பூரதங்
கோட்டு பாடப் முனிகேட்ட சீரதங் நுதியா


பயிற்சி 2. நெடிலடிச் செய்யுள் புனைதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களை நிரல் மாறாமல்
பின்வரும் சீர்கள் வருமாறு அமைத்து
நான்கு அடிவரும் நெடிலடி எழுதவும்.

தங்கம் மாசிருந்தால் தீ புடம் களைதல்
அங்கம் மாசிருந்தால் அரைகுறை வாழ்வு வாழுதல்
மனது மாசிருந்து மற்றவர் குடிகெடுத்தல் தானொங்கல்
தினம்வாழும் காசுள்ள தீயோர் நலிவுறுதல் கலிகாலமே.


தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் புளிமாங்காய் கருவிளம்
தேமாங்காய் கூவிளங்காய் கருவிளம் தேமாங்காய் கூவிளம்
கருவிளம் கூவிளங்காய் கூவிளம் கருவிளங்காய் தேமாங்காய்
புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கருவிளம் புளிமாங்கனி

*****


Sponsored content

PostSponsored content



Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக