புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10கவிதையில் யாப்பு - Page 2 Poll_m10கவிதையில் யாப்பு - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 09, 2012 11:56 am

நண்பர் சதாசிவம் அவர்களே!

முதலில் என் முயற்சி உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.

நான் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் இன்னும் நான் யாப்பிலக்கணம் படித்துக் கொண்டிருக்கும்போதே, நான் கற்றதை அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் ஒரு அவசர முயற்சிதான் ’கவிதையில் யாப்பு’த் தொடர். செய்யுளின் அடிப்படை உறுப்புகளான ஓசை, எழுத்து, அசை, சீர், அடி, தளை, தொடை மற்றும் பா இவற்றை நான் அறியும்வரை விரிவாக விளக்கிட முயல்வேன். இவற்றிலேயே நான் இன்னும் பா வகைகள், பாவினங்கள் பற்றிப் படிக்கவேண்டும்!

இதன் பிறகே நான் செய்யுளின் செயல்வகை, பொருள்வகை உறுப்புகள் பற்றி அறிந்துகொண்டு அதைக் கவிதையில் தர முயற்சி செய்ய முடியும். இதற்கு நிச்சயம் நாளாகும். எனவே, உடனடியாக இவை பற்றி அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட நூலினை நாடலாம்:

A Reference Grammar of Classical Tamil Poetry by V.S.Rajam
https://groups.google.com/forum/?fromgroups=#!msg/mintamil/fIGD3k8PQPo/7QUqGoZCreQJ

இந்தத் தொடரைப் படிக்கும் வாசகர்களும் ஆர்வலர்களும் ஆங்காங்கு நான் தர முயலும் பயிற்சிகளைச் செய்துபார்த்து விடைகளை இங்கு பதிந்தால், அது என்னை மேலும் ஊக்குவிப்பதோடு, இருக்கும் பிழைகளைத் திருத்திக்கொள்ளவும் உதவும்.



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 09, 2012 12:10 pm

3.4. அகவல் முயற்சி
நாமும் அகவல் புனைந்திடு வோமா?
அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

நேர்முன் நேரோ நிரையோ
நிரைமுன் நிரையோ நேரோ
ஈரசைச் சீர்கள் எப்படி வரினும்
சீரிடை அடியிடை பொருந்தி வந்திட
அகவல் ஓசை கேட்குமென் றறிந்தோம்.
(மூவசைச் சீர்கள் இப்போது வேண்டாம்.)

வாசலில் யாரெனப் பாரடி மகளே!
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
வே/றுயார், உங்/கள் அறு/வை நண்/பரே!

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நிரை நேர்-நிரை நேர்-நிரை நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர் நிரை-நேர் நேர்-நிரை

தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
அசைகள் யாவும் இப்படிப் பொருந்திட
அகவல் ஓசை வருவது தப்புமோ?

தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
வாசலில் யாரெனப் பாரடி மகளே!

மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த வரிகளை இப்படி எழுதினால்
வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:

வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
வேறுயார், உங்களது அறுத்திடும் நண்பரே!


அகவல் குறைந்து வினவலாக மாறி
செப்பலும் துள்ளலும் சேர்வது காண்பீர்.

கவிதையைச் செய்யுளில் புனையும் போது
இத்தனை அழகுகள், அணிகள் நோக்கி
மனதில் வருவதை வந்தபடி கொட்டாமல்
யோசித்துக் கவினுடன் எழுத முனைந்தால்
கவிதையின் விதைகள் படிப்போர் மனதில்
மெல்லத் துளிர்விட்டு நின்று நிலைக்கும்.
மத்தாப் பாக எரிந்து மறையாது!

எனவே கவிதை முனையும் அன்பர்காள்!
செய்யுள் நன்கு புனையக் கற்பீர்.

தறியின் பாவு ஊடுவது போலப்
பாவி நடப்பதே பாட்டென் றுணர்க.

ஓசை உணர்ந்து அசைகளைப் பிணைத்தால்
தளைகள் தாமே பொருந்திட
பாவகை எப்படி ஆயினும்
எழுதும் பாட்டு சிறப்பது நிச்சயம்.

3.5. அகவற் பயிற்சி

அகவல் இயற்றக் கீழ்வரும் தளைகள்.
மாமுன் நேரும் விளம்முன் நிரையும்
வருகிற ஆசிரியத் தளைகள் இரண்டு.
மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருகிற வெண்டளைகள் இரண்டு என்று.

பயிற்சி 1. எல்லாம் நேரசை: நேர்முன்நேர்

கீழ்வரும் வரிகளின் மூவசைச் சீர்களை
ஈரசைச் சீர்கள் ஆக்கி, நேர்முன் நேர்வர
எழுதி அகவல் கேட்பது அறிக.

கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
நல்லவர் இந்நாளில் கானலின் நீர்போல.


பயிற்சி 2. எல்லாம் நிரையசை: நிரைமுன்நிரை

கீழ்வரும் உரைநடை வரிகளில் உள்ள
சீர்கள் எல்லாம் நிரை-நிரைச் சீர்களென
மாற்றி செய்யுள் வரிகள் இரண்டு
அமைத்துப் பயிலும் அகவல் அறிக.

பின்வருவதைச் சொல்லும் ஓர் அரிய கலையில்
கரையில்லாத புலமையைக் கொண்டவர் மிகச் சில பேர்கள்.


பயிற்சி 3. எல்லாம் நேர்நிரை/நிரைநேர்

கீழ்வரும் சொற்களை விகுதிகள் சேர்த்து
ஈரசைச் சீர்களில் இரண்டு வரிகள்
அகவல் ஓசை பயில எழுதுக.

காற்று, கடுகு, செல், புரவி,
பாட்டு, அது, சொல், எளிது?


பயிற்சி 4. மாறிய பெயர்கள்

கீழ்வரும் பாட்டில் காற்றின் பெயர்கள்
மாறி உள்ளதைத் திருத்தி எழுதுக.

குளிர்பனிக் காற்றின் பெயராம் சாரிகை
வடக்கில் இருந்து வருவது கோடை
கிழக்கில் வாடை மேற்கில் கொண்டல்
தெற்கில் ஊதை சுழன்றால் தென்றல்.





சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 09, 2012 3:25 pm

ரமணி wrote:நண்பர் சதாசிவம் அவர்களே!

முதலில் என் முயற்சி உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.

நான் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் இன்னும் நான் யாப்பிலக்கணம் படித்துக் கொண்டிருக்கும்போதே, நான் கற்றதை அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் ஒரு அவசர முயற்சிதான் ’கவிதையில் யாப்பு’த் தொடர். செய்யுளின் அடிப்படை உறுப்புகளான ஓசை, எழுத்து, அசை, சீர், அடி, தளை, தொடை மற்றும் பா இவற்றை நான் அறியும்வரை விரிவாக விளக்கிட முயல்வேன். இவற்றிலேயே நான் இன்னும் பா வகைகள், பாவினங்கள் பற்றிப் படிக்கவேண்டும்!

இதன் பிறகே நான் செய்யுளின் செயல்வகை, பொருள்வகை உறுப்புகள் பற்றி அறிந்துகொண்டு அதைக் கவிதையில் தர முயற்சி செய்ய முடியும். இதற்கு நிச்சயம் நாளாகும். எனவே, உடனடியாக இவை பற்றி அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட நூலினை நாடலாம்:

A Reference Grammar of Classical Tamil Poetry by V.S.Rajam
https://groups.google.com/forum/?fromgroups=#!msg/mintamil/fIGD3k8PQPo/7QUqGoZCreQJ

இந்தத் தொடரைப் படிக்கும் வாசகர்களும் ஆர்வலர்களும் ஆங்காங்கு நான் தர முயலும் பயிற்சிகளைச் செய்துபார்த்து விடைகளை இங்கு பதிந்தால், அது என்னை மேலும் ஊக்குவிப்பதோடு, இருக்கும் பிழைகளைத் திருத்திக்கொள்ளவும் உதவும்.


தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.... தங்களின் கவிதைகளில் யாப்பின் ஆழம் அறிய முடிகிறது. ஈகரையில் மரப்புப்பா பயிலுவோம் என்று திரி இருக்கிறது. அதில் அசை, சீர், பா வகைகளை விளக்கி, உறவுகளின் முயற்சியும் இடம் பெற்றுள்ளது......அத்திரியிலும் பாவின் உறுப்புகளை பற்றி விரிவாக விளக்கப்படவில்லை.

மரப்புபா எழுதுவற்கு அசை, சீர், தளை, பாவின் அடி இலக்கணம் தெரிந்தால் போதும் என்று எண்ணுகிறேன், ஆனால் சுவையான பா அமைக்க அல்லது ருசிக்க பாவின் உறுப்புகளும், அவற்றின் முக்கியத்துவமும் தெரிய வேண்டும்...உங்கள் கவிதைகளை படிக்கும் போது ஒரு பாவின் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று எண்ணி வியக்கத் தோன்றுகிறது.

தமிழின் பெருமையும், தங்களின் பணியும் தொடரட்டும்...









சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 09, 2012 4:14 pm

பயிற்சி 1. எல்லாம் நேரசை: நேர்முன்நேர்

கீழ்வரும் வரிகளின் மூவசைச் சீர்களை
ஈரசைச் சீர்கள் ஆக்கி, நேர்முன் நேர்வர
எழுதி அகவல் கேட்பது அறிக.

கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
நல்லவர் இந்நாளில் கானலின் நீர்போல.

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லவர் இந்நாள் கானல் நீர்போல்






சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 09, 2012 7:04 pm

நண்பர் சதாசிவம் அவர்களே!

உங்கள் அஞ்சல் எண் 14 குறித்து:

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லவர் இந்நாள் கானல் நீர்போல்.


இந்த வரிகளில் முதல் அடி முழுவதும் சரியே.
ஆனால், இரண்டாம் அடியில் ’நல்லவர்’ என்ற சொல் ’நேர்-நிரை’ என்று வருகிறது.
நமக்கு வேண்டுவது ’நேர்-நேர்’ ஆகும்.
அப்போதுதான் எல்லாச் சீர்களும் நேரசைகள் மட்டும் பயின்றுவர அமையும்.
இந்தச் சொல்லைத் தக்கபடி மாற்றி மீண்டும் அஞ்சலிடுங்கள்.



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 10, 2012 12:00 pm

கவிதையில் யாப்பு: பயிற்சி விடைகள்
3.4. அகவற் பயிற்சி
பயிற்சி 1. விடை

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.


கல்/வி செல்/வம் வீ/ரம் கொண்/ட
நல்/லோர் இன்/று கா/னல் நீ/ரே.

நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்
நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்

பயிற்சி 2. விடை

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


வரு/வது உரைத்/திடும் அரி/யதோர் கலை/தனில்
கரை/யறு புல/மையை உடை/யவர் மிகச்/சிலர்.

நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை
நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை

’புலமையை’ என்பதில் ஐகாரக் குறுக்கம்
பயில ஈரசைச் சீராகும் அறிக. ... [புலமையை -> புலமயை]

பயிற்சி 3. விடை

காற்றினும் கடுகிச் சென்றது புரவி.
பாட்டினில் அதனைச் சொல்வது எளிதோ?


காற்/றினும் கடு/கிச் சென்/றது புர/வி.
பாட்/டினில் அத/னைச் சொல்/வது எளி/தோ?

நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்
நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்

பயிற்சி 4. விடை

குளிர்பனிக் காற்றின் பெயராம் ஊதை
வடக்கில் இருந்து வருவது வாடை
கிழக்கில் கொண்டல் மேற்கில் கோடை
தெற்கில் தென்றல் சுழன்றால் சாரிகை.


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 10, 2012 1:41 pm

பயிற்சி 5. செப்பலிலிருந்து அகவல்

செப்பல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
முதற்சீர் எதுகையும் பொருளும் தங்கி
அகவல் ஓசை கேட்க எழுதுக.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட
மாடியில் போட்ட வடாம்.


பயிற்சி 6. துள்ளலிலிருந்து அகவல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


பயிற்சி 7. உரைநடை வாக்கியத்திலிருந்து அகவல்

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
ஈரசைச் சீர்கள் மட்டுமே பயின்று
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து அகவல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

மகிழ்ந்த துள்ளலில் கேட்டு சிரித்து துள்ளிய குட்டி பாப்பா பயந்தது கன்றுக் உறுமல் நன்றாய்ச் பன்றியின்

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 11, 2012 7:41 am

பயிற்சி 5. விடை

கண்ணால் பார்த்தால் காக்கை பறக்குமா?
மண்காற் றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடு பட்டு வாழ்க்கை நடக்க
மாடியில் உலர்த்திய வடகம் அன்றோ?

பயிற்சி 6. விடை

குறைந்தது மூன்று விதத்தில் எழுதலாம்.
இறுதி அடியினில் அகவல் ஓசை
சொற்கள் சுருங்க மாறுதல் காண்க.

வீட்டின் உள்ளே ஓடிடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவினைக் காட்டியே உணவினை ஊட்டினாள்.

வீட்டின் உள்ளே ஓடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவைக் காட்டி உணவை ஊட்டினாள்.

வீட்டின் உள்ளே ஓடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவு காட்டி உணவூட் டினாள்.

பயிற்சி 7. விடை

இரண்டு பக்கமும் மணலே பரந்து
கரையின் ஓரம் ஒருகை அகலமே
நீரென நிற்கும் வரண்ட காவிரி.

இருபுறம் மணலே பரந்து இருக்கக்
கரையின் விளிம்பில் கோவண அகலமே ... [’கையின் அகலமே’]
நீரது நிற்கும் வரண்ட காவிரி.

பயிற்சி 8. விடை

கன்றுக் குட்டி துள்ளிய துள்ளலில்
நன்றாய்ச் சிரித்து மகிழ்ந்த பாப்பா
பன்றியின் உறுமல் கேட்டு பயந்தது.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 11, 2012 7:11 pm

பயிற்சி 9. மறைந்துள்ள பழமொழிகள்
கீழ்வரும் பெயர்வினைச் சொற்களில் நான்கு
பழமொழிகள் உள்ளன மறைந்து. அவற்றைத்
தேடி அந்தாதி போலமைத்து நான்கு
அடிகளில் அகவல் ஒலிவர எழுதுக.

மலை, பனி, குளம், கிணறு, தவளை, உலகு
வந்தது, நீங்கும், பெய்தால், நிரம்பும், போட்டு, தேடினான், அறியுமோ


பயிற்சி 10. காளமேகத்தின் சிலேடை அகவலில்

எள்ளும் பாம்பும் ஒன்றெனக் காளமேகம்
வெள்ளிய பாவில் சிலேடையாய்ச் சொன்னதை
அடிகளின் சீர்களில் ஈரசை பயின்று
அகவல் ஓசை கேட்க எழுதுக.

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் -- தேடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.
---காளமேகப் புலவர், பாம்பும் எள்ளும் சிலேடை


*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 12, 2012 7:20 am

3.6. செப்பல் ஓசை

செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.

"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையில்.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையில்.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
வெண்பாவில் வராது அகவல் ஓசை
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

செப்பல் ஓசை பயின்று வருகிற
வெண்பா வுக்கோர் உதாரணம் காண்போம்:

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை ௧௧


இன்னொரு உதாரணம் பாரதி தருவது:

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.

---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை ௨௫

3.7. செப்பல் முயற்சி

நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?

மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலும்.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.

தானே இயல்பாக மொழிவது மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.


(இந்த அடிகளில் வருவது வெண்பா.
வெண்பாவின் தேவைகள் பின்னர்க் காண்போம்.)

இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நேர்-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நிரை-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர-நேர் மலர்.

மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.


எதுகை மோனை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்கள் பயன்படுத்தி இன்னொரு வெண்பா.

இந்த வரிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.

நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!


*****


Sponsored content

PostSponsored content



Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக