புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
32 Posts - 42%
heezulia
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
32 Posts - 42%
Manimegala
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
jothi64
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
398 Posts - 49%
heezulia
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
26 Posts - 3%
prajai
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 4:29 pm

‘அதிதி தேவோ பவ” என்பது வேதத்தில் குறிப்பிடத்தக்க வாசகம். ‘விருந்தாளிகள் கடவுளுக்கு சமம் என்பது அதன் பொருள். அதனால் தானோ என்னவோ கடவுள் சோதிப்பதுபோல், விருந்தினர்களும் திடீரென வந்து, சில நேரங்களில் திண்டாட வைத்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமுறை இருந்தது. குடும்பத்தில் நிறைய பேர் இருந்தனர். அனைத்து வேலைகளையும் நான், நீ என பகிர்ந்து இழுத்துப்போட்டு செய்வார்கள். அதனால் எந்த நேரத்தில், எந்த விருந்தாளி வந்தாலும் அது விருந்தாளிக்கும், அவர்களை வரவேற்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. அப்போதெல்லாம் குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. பள்ளி விடுமுறைக்கு யார் வீட்டுக்காவது போய் கொட்டமடிப்பதும் வழக்கமாக இருந்தது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே குடும்ப நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தபோது இதெல்லாம் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு.

கணவன் மனைவி இருவரும் பணிக்குச் சென்றுவிட்டு திரும்புவதால் இருவருமே வீடு திரும்பும்போது களைத்து விடுகிறார்கள். அலுவலகம் & வீடு இரண்டிலும் மாறி மாறி பொறுப்புகளை சுமப்பதால் வாரமுடிவில் ஓய்வு என்பது அவர்களுக்கு கட்டாயமாகிறது. அன்று ஓய்வு எடுத்து, அடுத்த ஒரு வாரத்திற்கான ஓட்டத்திற்கு அவர்கள் தயாராக வேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வந்து நிற்கும் விருந்தாளிகளை பார்த்தால், முகம் சிரித்தாலும் அகம் எரிச்சல்படத்தானே செய்யும்! விருந்தோம்பல் என்பது ஒரு நல்ல பண்பு. தமிழ் பெண்கள் இன்றும் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் வந்தாரை வரவேற்கும் மனநிலையில் அவர்களும் இருக்கவேண்டும் அல்லவா!

முந்தைய காலங்களில் தகவல் தொடர்புகள் போது மானதாக இல்லை. அதனால் அறிவித்துவிட்டு வரமுடியாது. இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை. அதனால் எங்கு செல்ல விரும்பினாலும், முன்னறிவிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் திடீரென்று போய் நிற்பது அவ்வளவு நல்லதல்ல! எதிர்பார்க்காத நேரத்தில் மற்றவர்கள் வீடுகளில் போய் நிற்பது, வேண்டாத முகச்சுளிப்பை உருவாக்குகிறது. முகச்சுளிப்பு இல்லாத நிலைதான் அன்பை வளர்த்து மேம்படுத்தும்.

வேலைக்கு போகும் குடும்பத் தலைவியான நிஷா கூறுகிறார்..

“நான் வாரம் முழுவதும் அவசர அவசரமாக வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஓடி ஓடி ஓய்ந்து போய் வார முடிவில் களைத்து உட்கார்ந்து விடுவேன். அன்று பார்த்து என் நாத்தனார், தனது பிள்ளைகளை என் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு போய்விடுவார். எங்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடிவதில்லை. அந்த குழந்தைகளின் வருகையால், எங்கள் தனிமை பாதிக்கப்படும். எங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் நெருக்கடிக்குள்ளாகி விடுகிறது. நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால் சனிக்கிழமைதான் ஆறஅமர உட்கார்ந்து பேசுவோம். வீட்டு விஷயம், அலுவலக விஷயம் எதுவானாலும் அன்று தான் பேசி முடிவெடுப்போம். மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் இரவு வெகு நேரம் கண்விழித்து பேசிக் கொண் டிருப்போம். நாத்தனாரின் பிள்ளைகள் இருவரும் எங்கள் பக்கத்தில் படுத்துக் கொள்வதால் எங்களுடைய அன்யோன்யம் குறைந்து, இருவருக்கும் இடையே இடைவெளி தோன் றுகிறது. இதனை யாரிடம் சொல்வதென்றே தெரிய வில்லை” என்று, விருந்தாளிகளால் நெருக்கடிக்குள்ளான தன் வாழ்க்கையைப் பற்றி நிஷா கூறுகிறார்.

விருந்தாளிகளுக்கு வகை வகையாக சமைத்துப் போடுவது ஒரு பக்கமிருந்தாலும் அவர்களோடு உட்கார்ந்து பேச வேண்டும். நலம் விசாரிக்க வேண்டும் என்பது ஒரு வழக்கம். இல்லையென்றால் அதற்கொரு முணுமுணுப்பு ஏற்படும். ‘இவங்க வீட்டு சாப்பாட்டுக்கா நாம வந்தோம். முகம் கொடுத்து கூட பேச மாட்டேன்கிறார்களே’ என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.

‘அதற்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? எங்கள் வயிற்றுக்கு சமைத்து சாப்பிடுவதற்கே போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால் ‘திடீர் உணவுகளை’த் தேடி நாங்கள் அலைகிறோம். உண்மை இப்படி இருக்க, விருந்தாளிகளை முகம் கோணாமல் கவனித்து உபசரிப்பது என்பது எங்களுக்கு கஷ்டமான அனுபவம்தான்’ என்கிறார்கள், சில குடும்பத் தலைவிகள்.

வீடு தேடி வருபவர்கள் அத்தனை பேரும் விருந்தாளிகள் தான். இதில் வேண்டியவர், வேண்டாதவர் என்று யாரும் இல்லை. நம் வீடு தேடி வருபவரை நல்ல முறையில் கவனித்து அனுப்புவதுதான் நம் பண்பு.

அதற்கு என்ன செய்யலாம்?

* திடீர் விருந்தாளிகளுக்கு நம் நிலைமையை தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். அவர்களை முழுமையாக வரவேற்று உபசரிக்கும் சூழ்நிலையில் நாம் இல்லை என்பதை அவர்களுக்கு எடுத்து சொல்லலாம். அப்படி எடுத்துச் சொன்னால், அவர்கள் நம்மை பற்றி மற்றவர்களிடம் தப்பாக பேசி கெட்ட பெயர் வாங்கித் தருவதை தவிர்த்துவிடலாம்.

* தங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு போகும் விருந்தாளிகள், அந்தக் குழந்தைகளை கவனிக்கும் உறவினர்கள் படும் அவதியை புரிந்துகொள்ளவேண்டும். வேலைக்குப் போகும் பெண்கள், வார இறுதி நாட்களை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவோ, முக்கியமான வேலைகளுக்கு வெளியே செல்லவோ திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள். அந்த நாட்களில் உறவினர்களின் குழந்தைகளோ, நண்பரின் குழந்தைகளோ அவர்களது பொறுப்பில் விடப்படும்போது, அவர்களால் திட்டமிட்ட வேலைகளை பார்க்க முடியாது. அதனால் டாக்டரை சந்திக்க முடியாமல் நாட்களை தள்ளிப்போட்டு நோயால் அவதிப்படும் பெண்களும் இருக்கிறார்கள். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில் விடும் தாய்மார்கள், அந்த குடும்பத்தினருக்கு அதனால் ஏதாவது கஷ்டங்கள் ஏற்படுமா என்று கேட்டு முடிவு செய்ய வேண்டும்.

* சிலருக்கு மற்றவர்களுக்கு நாம் எந்த அளவிற்கு இடைஞ்சல் தருகிறோம் என்பது புரியாமலே இருக்கும். அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறைபடுவதைவிட, அவர்களிடம் நேரடியாகவே தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை சொல்லிவிடலாம்.

* உபசரிக்கும் நிலைமையில் நாம் இல்லை என்றாலும், உறவுகளை இழக்க முடியாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் உறவுகள் அவசியம். அதனால் சிரமப்பட்டாலும் திடீர் விருந்தாளிகளுக்கு நம்மால் இயன்ற வரவேற்பு கொடுப்பதே சிறந்தது.

தினத்தந்தி

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 07, 2012 6:30 pm

எப்படி திடிர் விருந்தாளியாக சென்று மற்றவர்களை கஷ்டபடுத்த விரும்புவதில்லையோ அதேபோல் திடிர் விருந்தாளிகள் வருவதை நாகரீகமாக கருதுவது இல்லை.
மேலும் என் வீட்டிற்கு, தங்கள் வருகையை சொல்லாமல் வந்து , நாங்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றவர் உண்டு.
phone பண்ணிவிட்டு வந்திருக்கலாமே என்றதற்கு, ஒரு போன் கால் வீணடிக்க வேண்டாமே என்றார். போன் கால் ஒரு ரூபாய்.ஆனால் இவர் வந்து சென்ற விதத்தில் செலவழித்தது அதிகம். இது எப்படி இருக்கு!

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 07, 2012 6:38 pm

திடீர் விருந்தாளியை வெறுக்கக் கூடாது.. ஆனால் நல்லா போட்டு வறுக்கலாம்...ஹி ஹி

எங்கள் குழந்தையை மற்றவர்கள் வீட்டில் விட்டு செல்வதை தவிர்க்க எங்கள் வீட்டில் ஒரு தாதியை வைத்து இருக்கிறோம். அதனால்தேவையில்லாமல் உறவினர்களுக்கு தொல்லைகொடுப்பது தவிர்க்கப்படுகிறது.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 7:46 pm

நல்ல கட்டுரை அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக