புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 8 of 36 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Sep 10, 2013 10:13 am

44. ஒன்றெனும் பரம்பொருள் உயிர்ப்பு
(அறுசீர் விருத்தம்: மா மா விளம் மா மா விளம்)

அணுவுக் குள்ளே உறைவதே
. அண்டம் எங்கும் நிறைவது
நுணுகிக் கண்டால் ஒளிர்ந்திடும்
. உண்மை யதுவே தெரிந்திடும்
கணுவும் தசையும் ஆவதும்
. காலம் கடந்தே இருப்பதும்
குணமில் உயிர்ப்பாய் இயங்கிடும்
. மூலம் அதுவாம் பரம்பொருள்.

ஒன்றாய் இலங்கும் பரம்பொருள்
. தன்னை அறிய விழைந்திடும்
தன்னை அறியும் தவத்திலே
. மன்னும் ஒலியை மேலிடும்
மன்னும் ஓங்கா ரவொலியே
. மனதில் பொருளை விதைத்திடும்
ஒன்று பலவாய் ஆகிடும்
. ஒன்றே பலவென மயங்கிடும்.

பலவாய்த் தோன்றும் உயிரெலாம்
. அலையும் ஒன்றைக் காணவே
அலையும் ஒன்றே இதுவென
. அறியா மாயை மருளிலே
சிலையும் உருவும் வழிபடும்
. வினைகள் செய்தே வீழ்ந்தெழும்
நிலையை அறியா மனத்துளே
. நிற்கும் ஒன்றோ நகைத்திடும்.

--ரமணி, 19/08/2013,  கலி.03/05/5114

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 13, 2013 7:51 am

61. ஆதி சங்கரர் அருளிய ’மஹாகணேச பஞ்சரத்னம்’
ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு


(அறுசீர் விருத்தம்: புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா கூவிளம்)
[முதாக ராத்த மோதகம் .. சதாவி முக்தி சாதகம்]

[மூலத்தில் உள்ளது போலவே சீர்கள் ஒன்றிலும் நான்கிலும்
முதலசையில் அழுத்தம் கொடுத்துப் படிக்க வேண்டும்.]

களித்-துக் கையில் மோதகம் .. அளிக்-கும் முத்தி சாதனை
துளித்-த திங்கள் சூடிடும் .. உல-கம் ஆடிக்(1) காத்திடும்
தளத்-தில் யாரும் நேரிலம் .. களி-ற்ற ரக்கன் மாய்த்திடும்
விளிக்-கத் தீமை யாற்றிடும் .. விநா-ய கன்நான் போற்றுவேன்! ... 1

இறைஞ்-சி டார்க்கே அச்சமா .. யெழுச்-சி பானு சோதியாய்
இறைஞ்-சும் தேவர் தானவர் .. இறை-யின் கேடு நீக்கியே
இறை-வன் தேவர் செல்வமா .. யிப-மு கக்க ணேசனாய்(2)
இறை-ம கேசன் போற்றுவே .. னிறை-ப ரன்நி ரந்தரன்! ... 2

அனைத்-து ஞால இன்பமா .. யரக்-கர் மாய்த்த ஆனையாய்
கனத்-த துத்தச்(3) செம்மலாய்க் .. கஜ-மு கன்நி ரந்தமாய்
கனி-வு ளோன்பொ றுப்பவன் .. மகிழ்ச்-சி கீர்த்தி யத்துடன்
இனி-ய உள்ளம் ஏத்துவோர்க் .. கிறை-யின் சோதி வாழ்த்துவேன். ... 3

வறி-யோ ரின்னல் நீக்கிடும் .. பழ-மைச் சொற்கள் தாங்கிடும்(4)
புர-ம ழீத்த(5) லைச்சனாம் .. சுரர்-ப கையை நீக்கிடும்
பிர-ள யத்தி லச்சமாம் .. விட-வ ரத்தைப் பூண்டிடும்
பெரு-கு மத்தக் கன்னமாம் .. கிழ-மை வேழம் போற்றுவேன். ... 4

வரை-யில் காந்தி தந்தமாம் .. யம-னுக் கேய மன்மகன்(6)
உரை-யை விஞ்சும் ரூபமாம் .. துமித்-த ழிக்கும் ஊறுகள்(7)
இரு-த யத்துள் யோகியர் .. இனி-தி ருக்கும் என்றுமே
ஒரு-வன் ஏக தந்தனை .. யுளத்-தில் வைப்பேன் என்றுமே. ... 5

பலன்மொழி
மகா-க ணேச ரத்தினம் .. பரா-ய ணம்செய் நாளுமே
வகை-யில் காலைப் போதினில் .. கணே-ச ரின்நி னைவுடன்
தகைக்-கும் வாதை தோஷமில் .. மக-னும் கல்விச் செல்வமும்
உகைத்-த ஆயு ளெண்தனம்(8) .. உறுத்-தி டும்வி ரைவிலே.

இவ்வாறு ஶ்ரீ சங்கர பகவத் பாதர் செய்த
ஶ்ரீ கணேச பஞ்சரத்தினம் முடிவுறுமே.
தமிழாக்கம்: ரமணி, 12/09/2013, கலி.27/05/5114

ஒலிக்கோப்பு:
ஆதி சங்கரரின் மஹாகணேச பஞ்சரத்னம் ஸ்தோத்திரத்தைக் கேட்க:
மாரேபள்ளி நாக வெங்கட சாஸ்திரி பாடியது
http://www.vedamantram.com/

எம்.எஸ்., உமா மோகன் குழுவினர் பாடியது:
http://www.fullsongs.net/search/mp3/1/maha-ganesha-pancharatnam.html

சமஸ்கிருத மூலம்:
http://sanskrit.gde.to/all_pdf/ganesha5.pdf

குறிப்பு:
1. ’உலகம் ஆடிக் காத்திடும்’ -- உலகினைக் காப்பது ஒரு லீலையாக.
2. ’இப முகம்’ -- யானை முகம்.
3. ’துத்தம்’ -- வயிறு.
4. ’பழமைச் சொற்கள் தாங்கிடும்’ -- வேதம் மற்றும் புராதனத் துதிகளின் சொற்கள்.
5. ’புரமழீத் தலைச்சனாம்’ -- புரமழீ என்பது நீட்டல் விகாரமாகச் சிவனைக் குறிப்பது;
தலைச்சன் -- மூத்த பிள்ளை.
6. ’யமனுக்கே யமன்’ -- மார்க்கண்டேயனைக் காக்க சிவன் யமனை அழித்து மீண்டும் உயிர்ப்பித்ததால்.
7. ’துமித்து’ -- துண்டித்து, அறுத்து.
8. ’உகைத்த’ -- உயர்ந்தெழும்; ’எண்தனம்’ -- அட்ட ஐஸ்வரியம், எட்டு வகைச் செல்வங்கள்.

*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 10:55 am

என்னை போல் மர மண்டைக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் இன்னும் எளிமையாக போடவும்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 13, 2013 11:48 am

ஒரு முறை உமா மோகன் குழுவினர் பாடும் மூலத்தைக் கேட்டு அதே ராகத்தை மனதிற் கொண்டு இந்தச் செய்யுளைப் படியுங்கள். இசையின் பொருட்டு அமைத்ததால் சொற்களைப் பிரிப்பது அவசியமாகிறது. பொருள் விளங்காத இடங்களைச் சொன்னால் விளக்குறேன், என்னால் இயன்ற அளவில்.

mbalasaravanan wrote:என்னை போல் மர மண்டைக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் இன்னும் எளிமையாக போடவும்


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 11:52 am

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நன்றி கவிஞர் அவர்களே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 13, 2013 11:55 am

mbalasaravanan wrote:என்னை போல் மர மண்டைக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் இன்னும் எளிமையாக போடவும்
ஆமாம் அய்யா ....அல்லது (அறுசீர் விருத்தம்: புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா கூவிளம்) பற்றியும் ...அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்ல இயலுமா ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 13, 2013 2:55 pm

மரபின் யாப்பில் செய்யுள் புனைவதில் இருவகைகள் உண்டு: பா, பாவினம். பாக்கள் நால்வகை: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா. ஓவ்வொரு பாவிற்கும் துறை, தாழிசை, விருத்தம் என்று மூன்று இனங்கள் உண்டு. எனவே மொத்தப் பாவினங்கள் பன்னிரண்டு.

பாக்களுக்கும் பாவினங்களுக்கும் என்ன வேறுபாடு? பாக்களின் ஓசை தளஈயால் வரும், இலக்கணக் கட்டுப் பாடுகள் அதிகம். பாவினங்களின் ஓசை ஒரே மாதிரியான சீர்களின் அமைப்பால் வரும், தளை முக்கியமில்லை. ஆனால், பா, பாவினம் இரண்டிலும் எதுகை மோனைகள் உரிய இடங்களில் அமையவேண்டும். பாவினங்களில் பல நான்கு அடிகளில் ஒரே எதுகை பெற்றும் பொழிப்பு மோனை பெற்றும் வரும்.

உதாரணமாக, குறள் வெண்செந்துறை என்பது வெண்பாவின் பாவினம். இது அளவொத்த இரண்டு அடிகளால் இயங்குகிறது. அளவு நான்கு முதல் பல சீர்கள் இருக்கலாம். முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் சீர்கள் ஒரே எண்ணிக்கையில் அமையவேண்டும், அவ்வளவே. சீர்கள் ஒன்றே போல் அமைய வேண்டுவதில்லை.

கீழே வருவது ஐந்துசீர்க் குறள் வெண்செந்துறை. இதுபோல் யாரும் எளிதில் புனையலாம்.

மாலையிளம் வெய்யிலிலே காலாற நடந்தபோது கேட்டேன்
சோலையிலே சளசளக்கும் குரல்களிலே பறவைகளின் பண்களே.

ஐந்து அல்லது ஆறு சீர்களில் எழுதும் போது முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வரவேண்டும்.

அறுசீர் விருத்தம் என்பதன் முழுப் பெயர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இது ஆசிரியப் பாவின் இனம். இவ்வகை விருத்தத்தில் ஒரு பாடல் நான்கு அறுசீர் அடிகளில், ஒரே எதுகை பெற்று, சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் பொழிப்பு மோனை வர அமையும். இன்னொரு முக்கியத் தேவை அறுசீர் விருத்தத்தில் (பொதுவாக எல்லா விருத்தங்களிலும்) சீர்களின் அமைப்பு ஒன்றேபோல் இருக்கவேண்டும். அதாவது, முதற்சீரின் ஆறு சீர்களும் எந்த வகைகளில் அமைகிறதோ அதே வகையில் மற்ற அடிகளின் சீரும் அமையவேண்டும். அப்போதுதான் அது அறுசீர் விருத்தம் என்னும் பெயர் பெறும்.

கீழுள்ள  அடிகளின் சீர் அமைப்பை நோக்கினால் எல்லாம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா கூவிளம் என்ற நிரலில் அமைவது தெரியும். அடியெதுகை ஒன்றாக, சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் பொழிப்பொ மோனை அமைந்துள்ளதும் தெரியும். இந்த அமைப்பே செய்யுளின் ஓசையை நிர்ணயிக்கிறது.

களித்-துக் கையில் மோதகம் .. அளிக்-கும் முத்தி சாதனை
துளித்-த திங்கள் சூடிடும் .. உல-கம் ஆடிக்(1) காத்திடும்
தளத்-தில் யாரும் நேரிலம் .. களி-ற்ற ரக்கன் மாய்த்திடும்
விளிக்-கத் தீமை யாற்றிடும் .. விநா-ய கன்நான் போற்றுவேன்! ... 1

நான் தமிழ்ப்படுத்திய ஆதி சங்கரர் ஸ்தோத்திர மூலத்தின் முதலடி இப்படி யுள்ளது:
முதாக ராத்த மோதகம் .. சதாவி முக்தி சாதகம்

இந்தச் சீர்களின் தமிழ் வடிவமும் புளிமா தேமா கூவிளம் என்ற நிரலில் வருவது காணலாம். மூலத்தின் புளிமாச் சீர்களில் முதலசை பெரும்பாலும் குறில்-நெடில் சேர்க்கையாக உள்லது: முதா, சதா. தமிழில் இந்த வசதி இல்லாததால் அழுத்திச் சொல்ல ஏதுவாக உள்ள எழுத்துகளைப் பெரிதும் பயன்படுத்தி என் புளிமாச் சீர்களை அமைத்தேன்: களித்து, அளிக்கும், துளித்த, உலகம், தளத்தில், களிற்ற, விளிக்க.

அறுசீர் விருத்தச் சீர்களில் பற்பல நிரல்கள் உண்டு. வேறு சில நிரல்களை இந்தத் திரியில் உள்ள என் மற்ற அறுசீர் விருத்தப் பாக்களில் காணலாம். ஒருமுறை அவற்றைக் கண்டு சீர் நிரல்களை நோக்குங்கள்.

இப்படியாக, அறுசீர் விருத்தத்தில் தளைகள் பற்றிய கவலை யில்லாததால் சீர்கள் நிரல்பட யாரும் எளிதில் புனையலாம், சில பாடல்களை மட்டும் பார்த்துவிட்டே!

மேல் விவரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/ஆசிரிய_விருத்தம்

*****

பாலாஜி wrote:
mbalasaravanan wrote:என்னை போல் மர மண்டைக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் இன்னும் எளிமையாக போடவும்
ஆமாம் அய்யா ....அல்லது (அறுசீர் விருத்தம்: புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா கூவிளம்) பற்றியும் ...அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்ல இயலுமா ....


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 9:01 am

62. கரிமுகன் மீதொரு குறட்பஃது

இன்னல் களிற்றிரு நேத்திரம் நோக்கியே
இன்னல் களிற்றிருப் பேன். ... 1

கரித்தலையு ருத்தே அமர்ந்திருக்கும் தேவா
கரித்தலையு ருத்தே அருள். ... 2

கன்னங் கருவுரு வானை வழிபடில்
கன்னங் கருவுருவா காது. ... 3

கன்னங் கருவுரு வானை வழிபடில்
கன்னங் கருவுருவா கும். ... 4

குஞ்சரம் நெஞ்சக முற்றால் உருவாகும்
குஞ்சரம் நெஞ்சக மின்று. ... 5

துதிக்கையைத் தூக்கியே துன்பம் துமிப்பான்
துதிக்கையைத் தூக்கியே மேல். ... 6

தும்பிக்கை பற்றுவது மோதகம்நாம் பற்றுவோம்
தும்பிக்கை பற்றுவது போல். ... 7

பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடு முகந்த தனைத்து. ... 8

பின்னல் விளைத்தே இடையூறு நீக்குவோனே
பின்னல் விளைத்தே யிரங்கு. ... 9

மோதகம் கன்னல் உகப்போன் வழிபடில்
மோதகம் கன்னல் சுனை. ... 10

*****
பதம் பிரித்து, விளக்கம்

இன்னல் களிற்றிரு நேத்திரம் நோக்கியே
இன்னல்கள் இற்றிருப் பேன். ... 1
[இன்னல் = இனிய, நல்ல; துன்பம்]

கரித்தலை உருத்தே அமர்ந்திருக்கும் தேவா
கரித்தலை உருத்தே அருள். ... 2
[கரித்தலை = யானையின் தலை; வெறுப்பு, குற்றம் குறை கூறுதல்
உருத்து = உருவெடுத்து; சினந்து அழித்து]

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகாது. ... 3
[கன்னங் கருவுரு = கன்னங்கரிய உருவ; கன்னம் = களவு;
கருவுரு = கருவாக உருவாதல் ]

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ... 4
[கன்னம் = பெருமை; கரு=பொன் அல்லது உயிர்க்கரு]

குஞ்சரம் நெஞ்சகம் உற்றால் உருவாகும்
குஞ்சரம் நெஞ்சகம் இன்று. ... 5
[குஞ்சரம் = ஆனை; உச்சிதம், மேன்மை]

துதிக்கையைத் தூக்கியே துன்பம் துமிப்பான்
துதிக்கையைத் தூக்கியே மேல். ... 6
[துமிப்பான் = துண்டித்து நீக்குவான்]

தும்பிக்கை பற்றுவது மோதகம்நாம் பற்றுவோம்
தும்பிக்கை பற்றுவது போல். ... 7
[தும்பிக்கை = ஆனையின் கை; தட்டாரப்பூச்சியின் உணர்விழை]

பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்தது அனைத்து(ம்). ... 8
[பகடு = ஆண் யானை; பெருமை, வலிமை]

பின்னல் விளைத்தே இடையூறு நீக்குவோனே
பின்னல் விளைத்தே இரங்கு. ... 9
[பின்னல் = சிக்கல்; பின்னர் நல்லது]

மோதகம் கன்னல் உகப்போன் வழிபடில்
மோதகம் கன்னல் சுனை. ... 10
[மோதகம் = கொழுக்கட்டை; (அலை) மோதும் உள்ளம்]

--ரமணி, 12/09/2013,  கலி.27/05/5114

*****

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 10:21 am

ரமணியின் கவிதைகள் - Page 8 3838410834  ஆனால் சில வரிகள் எனக்கு புரியவில்லை புரிந்தவரை நன்றாக உள்ளது

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 11:53 am

புரியாத வரிகளைச் சொன்னால் விளக்க முயல்கிறேன்.

mbalasaravanan wrote:ரமணியின் கவிதைகள் - Page 8 3838410834  ஆனால் சில வரிகள் எனக்கு புரியவில்லை புரிந்தவரை நன்றாக உள்ளது


Sponsored content

PostSponsored content



Page 8 of 36 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக