புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
prajai
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
30 Posts - 3%
prajai
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_m10வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 11:46 am

நண்பர்களே
இந்த திரியில் நமது மாநிலத்தின் ஒவ்வெரு மாவட்டங்களையும் அதன் வரலாறு மற்றும் அதன் தனிச் சிறப்புகளை பதிவிட விழைகிறேன். மேலும் இதற்க்கு தங்களது மேலான பின்னூட்டங்களையும் எதிர்ப்பார்ப்பதோடு நீங்கள் அறிந்த இங்கு பதிவிடாத செய்திகளையும் பதிவிட வேண்டுகிறேன். இது பலரின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவுவதோடு அவரவர் சொந்த மாவட்டங்களையும், மற்ற மாவட்டங்களையும் அறிய உதவும் என நம்புகிறேன்.

நன்றி


தங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கும்,
கரூர் கவியன்பன்

குறிப்பு : இங்கு பதிவிடும் பல்வேறு செய்திகள் அத்துனையும் பல்வேறு இணையதளங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் தெரிந்தவைகளிளிருந்தும் தொகுக்கப்பட்டது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 11:58 am

அருமையான முயற்சி நண்பரே; படிக்க ஆவலாக உள்ளோம். தொடருங்கள்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:04 pm

இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது.

கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய வட மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.•

அமைவிடம்

கரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ தொலைவிலும் ஈரோடிற்குத் தென் கிழக்கே 60 கி.மீ தொலைவிலும் சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ தொலைவிலும் கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 76,336 மக்கள் வசிக்கின்றார்கள்.இவர்களில் ஆண்கள் 38,375 ,பெண்கள் 37,961 ஆவார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நகர நிர்வாகம்

கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுரகி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 36 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.

கல்லூரிகள்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 அரசு கல்லூரியும், 2 மகளிர் கல்லூரியும் அடங்கும்.மாயனூரில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் உள்ளது. மேலும் பல பொறியியல் கல்லூரிகள் தற்போது வேருன்றி இருக்கின்றன.


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:06 pm

கரூர் வரலாறு…சேரர் வரலாறு…

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின.
மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்:

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்:

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்:

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 12:10 pm




நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011ல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது . இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக
உயர்ந்துவிட்டது.

வரலாறு

"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது . பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது . அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்
இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அமைவிடம்


நாமக்கலின் அமைவிடம் 11.23° N 78.17° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. அருகிலுள்ள ஆறு காவிரி.

பொருளாதாரம்

உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.

நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது.

மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sego) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன,

சுற்றுலா இடங்கள்



இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.


அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.

மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.
நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள ஜேடரபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை.
நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.

நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டியில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது.

நைனா மலையில் அருள்மிகு வரதராச பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.

ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.

நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.

நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.


குறிப்பிடத்தக்க சிறப்புகள்

நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்புக்குப் பெயர்பெற்றது.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை யின் ஊர்.

சிலம்பொலி செல்லப்பனின் ஊர்.

டாக்டர் பி. சுப்பராயன் - முன்னாள் தமிழக முதல்வர்.

கணிதப் பேரறிஞர் இராமானு'சன் அவர்களின் தாயார் நாமக்கலில் உள்ள அருள்மிகு நாமகிரி அம்மனின் பக்தை.

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலிலுள்ள சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.
சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.
கைத்தறி நெசவு தொழில் இங்கு நடைபெறுகிறது.

ஆழ் துளையடும் வண்டி உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.
திருச்செங்கோட்டில் உள்ள சிவன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இம்மாவட்டத்தில் சற்று அதிகமான முருகன் கோவில்கள் உள்ளன .

நன்றி விக்கிப்பீடியா....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:13 pm

துவக்கத்தில் சேர, சோழ, பல்லவ, நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது. 1783இல் திப்பு சுல்தானுடன் ஏற்பட்ட போரில் பிரிட்ஷார் கரூர் கோட்டையை அழித்தனர். (ராயனூர் அருகே ஆங்கில - மைசூர் போரில் உயிரிழந்த வீர்ர்களுக்காக ஒரு நினைவில்லம் உள்ளது)
பிரிட்டீஷ் ஆட்சியில் துவக்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்துடனும் இணைந்திருந்த்து.
1995-இல் திருச்சி மாவட்டம் பெரம்பலூர், கரூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது கரூர் புதிய மாவட்டமாக உதயமானது.

முக்கிய ஆறுகள்:

காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் - 2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள் - 4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி ஒன்றியங்கள் - 8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை,
தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

பசுபதேஸ்வரர் ஆலயம்:
சிலவத் தலங்கள் ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது. ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.

கல்யான வெங்கடராமசாமி ஆலயம்:
கரூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில் 'தென் திருப்தி' என அழைக்கப்படுகிறது.

புகளூர் காகிதத் தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின் புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. 1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை - குளித்தலை, கடம்பர் கோவில், மாரியம்மன் கோவில்.

இருப்பிடமும், சிறப்புகளும்

சென்னையிலிருந்து தென்மேற்கே 371 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
குடிசைத் தொழில்கள், நவீன அரசி ஆலைகள், பருத்தி, பித்தளைப் பாத்திர தயாரிப்பு போன்றவற்றிற்கு பெயர் பெற்றது
சுண்ணாம்புக்கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண் போன்ற கனிமங்கள் நிறைந்த்து.
1942 இல் துவங்கப்பட்ட ஈஐடி பாரி நிறுவனம், சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ் நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை.
ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்திக்கு புகழ்பெற்றது.
கைத்தறியாடைகளுக்குப் புகழ்பெற்ற மாவட்டம்.
அனைத்து வாகனங்களுக்கும் தேவையான செயின் தொழிற்சாலை இங்குள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் பேருந்து பாடி கட்ட இங்கு வருகிறார்கள்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:20 pm


இறைவன் கல்யாண வெங்கடரமணர்
இறைவி லட்சுமி
கிராமம்/நகரம் கரூர்
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு


வரலாறு :

மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்த டங்கணாச்சாரி என்பவர் தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது அன்பு கொண்டவர்.வேறு எந்தக்கடவுளையும் வணங்க மாட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத சுந்தராம்பிகை திருப்பதி வெங்கடாசலபதியிடம், தனக்கு குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக பிரார்த்தித்துக் கொண்டாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள். தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சுந்தராம்பிகை குழந்தைக்காக வெங்கடா சலபதியிடம் வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது.குழந்தைக்கு "குண்டலாச்சாரி' என பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்ட படி, நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார்.""இந்த உலகில் சிவனைத் தவிர சக்தியுள்ள கடவுள் வேறு யாருமில்லை. எனக்கு சிவன் அருளால் தான் குழந்தை பிறந்தது. நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது,'' எனக்கட்டளையிட்டார்.சுந்தராம்பிகை கலங்கினாள்.தவமிருந்து பெற்ற மகனுக்கு, வேண்டுதலை நிறைவேற் றாவிட்டால், ஏதாவது ஆபத்து வருமோ எனக்கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. இதைச் சிறுவன் கவனித்தான். அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டான். அவனுக்கு புரியும்படியாக அம்மா நடந்த விபரத்தைச் சொன்னாள்."" இதற்காகவா கவலைப் படுகிறாய்.நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்,'' என்றான். அம்மா சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான்.""திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்,'' என்று அழுதான். அப்போது ஒரு துறவி அங்கு வந்தார்.அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார். காரணத்தை தெரிந்து கொண்டு, ""இதற்காகவா அழுகிறாய்,'' என்றவர் நாம் இருவரும் சேர்ந்து இங்கு கோயில் கட்டுவோம். அதில் வெங்கடாசலபதியை எழுந்தருளச் செய்வோம். நீ உன்னால் முடிந்த சிறுகற்களை எடுத்து வா. நான் பெரிய கற்களை தூக்கி வந்து கோயிலை கட்டி முடிப்போம்,'' என்றார்.சிறுவன் சிறு கற்களைத் தூக்கி வந்தான். இதற்குள் இருட்டி விட்டது.மறுநாள் வருவதாக சொல்லி விட்டு குண்டலாச்சாரி வீட்டுக்கு போய் விட்டான். அடுத்த நாள் காலையில் அங்கு வந்த போது பெரிய கோயில் உருவாகி இருந்தது. சிறுவன் ஆச்சரியப்பட்டான். துறவியைக் காணவில்லை. இந்தத் தகவல் அரசனுக்கு போயிற்று. தன்னைக் கேட்காமல் கோயில் கட்டியவனை கொன்று விட அரசன் உத்தரவிட்டான். டங்கணாச்சாரி ஆவேசப் பட்டார். ""சிவன் இருக்க வேண்டிய ஊரில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,'' என்றவர் ஆவேசத்துடன் வந்து ஆத்திரம் கண்ணை மறைக்க கோயிலில் நின்ற தன் மகனையே அவசரத்தில் வெட்டிச் சாய்த்தார். இறந்தது தன் மகன் என்று அறிந்ததும் அரற்றினார்.சுந்தராம்பிகை நடந்ததை அறிந்து தட்டுத்தடுமாறி ஓடி வந்தாள். அப்போது வெங்கடேசப் பெருமான் அங்கு தோன்றி, சிறுவனை உயிர்ப்பித்தார். இனி இந்த தலத்திலும் நான் லட்சுமியுடன் குடியிருப்பேன் என்றார்.இப்போது இக்கோயில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.


திருவிழா :
மாசி மகத்திலும், புரட்டாசி திருவோணத்திலும் இங்கு நடக்கும் தேரோட்டம் விசேஷமானது.

சிறப்பு :
பெருமாள் மீது கொண்ட அன்பின் காரணமாக சின்னஞ்சிறுவனுக்காக பெருமாள் அருள்பாலித்த தலம் கரூர்.

திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல் :
இத்தலத்திற்கு அருகில் கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், அருங்கரை அம்மன் திருக்கோயில், கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில், ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தல சிறப்பு :
பெருமாள் மீது கொண்ட அன்பின் காரணமாக சின்னஞ் சிறுவனுக்காக பெருமாள் அருள்பாலித்த தலம் கரூர்.


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:24 pm


இறைவன் மாரியம்மன் (மகாமாரி)
புராண பெயர் கருவூர்
கிராமம்/நகரம் கரூர்
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு


வரலாறு : அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.

கிரமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.

வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.


திருவிழா :
வைகாசிப் பெருந்திருவிழா - 21 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழா. தவிர ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி பெரிய கார்த்திகை பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிசேக ஆண்டுவிழா, பங்குனி உத்திர திருவிழா நாட்களின் போதும் பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

சிறப்பு : அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். பூச்சொரிதல் . இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இந்துக்கள் தவிர அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் ஆலயம்.


பிரார்த்தனை : அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


நேர்த்திக்கடன் :
அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்தல், காவடி எடுத்தல் , பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை. இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசேகம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

தல சிறப்பு : திருமண தத்துவம்:

மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித் தாயின் வயிற்றில். எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:28 pm


கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும்.இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டது. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோபுரத்தில் புராணக் கட்சிகளை விளக்கும் சுதைச் சிற்பங்கள் அழகுடன் காட்சி தருகின்றன. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இந்த சந்நிதியின் இடது புறம் க்ழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. கி.பி.

14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார் ஆகியோர் வாழ்ந்து பேறு பெற்ற பெருமையுடையது கருவூர் சிவஸ்தலம்.

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் Tamil-Daily-News-Paper_69463312626

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:37 pm

பூவன் நான் சிலம்பொலி அவர்கள் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான நாமக்கல்லார் பற்றிய கவிதை விழாவில் முதல் பரிசு பெற்ற தருணம் மறக்க முடியாதது. அப்பொழுது தான் முதல் முதலாக அவரையும் அவரது உரையையும் கேட்கும் பேறு அடைந்தேன். உண்மையிலேயே நான் மெய்சிலிர்த்து ரசித்த தருணம் அது. நீங்கள் குறிப்பிட்டதும் அந்த ஞாபகம் வந்தது எனக்கு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக