புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சி


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 22, 2012 9:37 pm

தொலைக்காட்சி

ன்று ஆகாஷும், ஆர்த்தியும் மிக மகிழ்ச்சியுடனும் ஒரு விதமான படபடப்புடனும் இருந்தனர். வீட்டிற்கு முதல் முறையாக தொலைக்காட்சி பெட்டி வர போகிறது என்பதால் தான் இந்த மகிழ்ச்சியும், படபடப்பும். அது வரை ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கான கட்டிடத்தில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சியை மட்டுமே பார்த்திருந்த ஆர்த்திக்கும், ஆகாஷுக்கும் இது பெரிய விஷயம் தானே.

தொலைக்காட்சி வீட்டிற்கு வந்தது வெள்ளிக்கிழமை என்பதால் அன்று எப்படியாவது வீட்டிலேயே ஒளியும் ஒலியும் பார்த்து விடலாம் என்று நம்பி இருந்தனர் ஆகாஷும், ஆர்த்தியும். அவர்களின் அப்பா ஆதிகேசவன் தொலைக்காட்சி இருந்த பெட்டியையும்,தெர்மோகோலையும் அகற்ற ஒரு அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


தொலைக்காட்சி 4140925952_8277c54be0_z


தன் பிள்ளைகளிடம் மாடியில் உணர்க்கொம்புகள்(ஆன்டெனா) மாட்ட ஆள் கூட்டி வருகிறேன் என்று கூறி விட்டு ஆதிகேசவன் கிளம்பினான். ஊரிலேயே உணர்க்கொம்புகள் மாட்ட தெரிந்தவன் என்றால் அது பஞ்சாயத்து அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்க்கும் செல்வேந்திரன் மட்டுமே.

எவ்வளவு தேடியும் செல்வேந்திரன் கிடைக்கவில்லை என்பதால் அவன் வீட்டிற்கே சென்றான் ஆதி. வீட்டில் விசாரித்த போது தான் தெரிந்தது செல்வேந்திரன் பஞ்சாயத்து தலைவருடன் அலுவல் விடயமாக மதுரை சென்றிருக்கிறான் என்பது. அப்போது பொழுதும் இறங்கி இருந்தது. இதற்கு மேல் பக்கத்து ஊருக்கு சென்று ஆள் கூட்டி வருவது என்றால் கூட சிரமம் என்பதால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினான்.

வீட்டில் வந்து நடந்ததை சொல்ல ஆகாஷும், ஆர்த்தியும் சோகத்தில் ஆழ்ந்தனர். இருவரையும் அன்றிரவு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கிருக்கும் தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்க்கும்படி செய்தான். மீண்டும் வீட்டிற்கு திரும்பியிருந்த ஆகாஷுக்கும், ஆர்த்திக்கும் அவர்கள் அம்மா அகிலா கோழி அடித்து குழம்பு வைத்திருந்தாள்.

சாப்பாடு போட்டு தட்டில் வைக்கப்பட்ட பின்னரும் ஆகாஷும், ஆர்த்தியும் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு ஆதி வந்து இருவரையும் சமாதானப்படுத்த, ஏதோ அரை குறையாக சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி திரைக்கு அருகில் சென்று இருவரும் படுத்து கொண்டனர்.

மறுநாள் காலை பொழுது விடிந்ததும் செல்வேந்திரனை அழைத்து வந்து உணர்கொம்புகளை மாட்ட செய்தான் ஆதி. உணர்க்கொம்புகளை செல்வேந்திரன் லேஸ் லேசாக திருப்ப திரையில் படம் தெரிய ஆரம்பித்தது. திரையில் ஷோபனா ரவி செய்திகள் வாசித்து கொண்டிருக்க, அவர் சொல்லும் விஷயம் என்னவென்று புரியாவிட்டாலும் ஆகாஷும், ஆர்த்தியும் இரு கண் மாறாமல் அந்த நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு செல்வதற்கான நேரமாகியும் இருவரும் கிளம்புவதாய் இல்லை. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அன்று பள்ளிக்கு விடுப்பே எடுத்து விட்டனர்.

பின்னர் அந்த தொலைக்காட்சி அவர்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி இருந்தது. பத்து வருடங்களாய் தொலைக்காட்சியை ஒரு பொக்கிஷமாகவே பார்த்துக் கொண்டனர் ஆர்த்தியும், ஆகாஷும். ஒரு சமயத்தில் தொலைக்காட்சி சரியாக வேலை செய்யாமல் போக தொலைக்காட்சியை லேசாக மேலே இருந்து தட்டினாலே (அடித்தாலே) வேலை செய்ய ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல தட்டலின் பலத்தை அதிகப் படுத்த வேண்டியிருந்தது. ஒரு சமயத்தில் எப்படி தட்டினாலும் வேலை செய்யாமலே போக அந்த தொலைக்காட்சியை தூக்கி எறிய வேண்டிய கட்டாயம் வந்தது.

இருந்தாலும் ஆகாஷுக்கு தூக்கிப்போட மனமில்லை என்பதால் அதை வீட்டு பரணின் மீது தூக்கி வைத்தனர். இப்போது நவீன அமைப்புகள் நிறைந்த புதிய வண்ண தொலைக்காட்சி வீட்டிற்கு வந்தாலும் எத்தனை துல்லியமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டாலும் ஆகாஷுக்கு அந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சியை பார்த்த திருப்தி ஏற்படவில்லை. இப்போதும் கூட சில நேரங்களில் எதையோ நினைத்தவனாய் புதிய தொலைக்காட்சியின் மேல் கைகளால் தட்டி (அடித்து) விடுவான்.




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:45 pm

இதுபோன்ற அனுபவம் எங்கள் வீட்டினிலும் நடந்தேறி இருக்கிறது ராம்குமார். மீண்டும் பழைய நினைவுகள் வந்து சென்றன

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:33 pm

அந்த கால நினைவுகள் மீண்டும் நினைத்து பார்க்க வைத்த அருமையான சிறுகதை.. நண்பரே சிறுகதைகளை எழுதுவதில் நீங்கள் சிறந்தவராக விளங்குகிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:45 pm

///உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே.///

அடடா...அற்புதம் ராம்குமார்...இப்படி ஒரு எண்ண வெளிப்பாட்டை எந்தப் பதிவரும்
எழுத்தில் இப்படி சொன்னதாய் நான் பார்த்ததாக நினைவில்லை...மிக அருமையான ஒரு வெளிப்பாடு...

இதை அப்படியே உங்கள் எழுத்தும் அடைகாக்கிறது...ஆகச் சிறந்த எழுத்தும் படைப்புகளும் உங்களிடமிருந்து தொடர்ந்து வெளிவரட்டும்...வெல்லட்டும்...வாழ்த்துகள்...

ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 22, 2012 11:06 pm

அசுரன் wrote:அந்த கால நினைவுகள் மீண்டும் நினைத்து பார்க்க வைத்த அருமையான சிறுகதை.. நண்பரே சிறுகதைகளை எழுதுவதில் நீங்கள் சிறந்தவராக விளங்குகிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

மிக்க நன்றி.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 22, 2012 11:11 pm

ரா.ரா3275 wrote:
அடடா...அற்புதம் ராம்குமார்...இப்படி ஒரு எண்ண வெளிப்பாட்டை எந்தப் பதிவரும்
எழுத்தில் இப்படி சொன்னதாய் நான் பார்த்ததாக நினைவில்லை...மிக அருமையான ஒரு வெளிப்பாடு...

இதை அப்படியே உங்கள் எழுத்தும் அடைகாக்கிறது...ஆகச் சிறந்த எழுத்தும் படைப்புகளும் உங்களிடமிருந்து தொடர்ந்து வெளிவரட்டும்...வெல்லட்டும்...வாழ்த்துகள்...


நன்றி ரா.ரா.
இன்னும் பல நல்ல படைப்புகளை தர இது ஒரு நல்ல ஊக்கம்.
வெல்லட்டும் தமிழ்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 11:18 pm

ramkumark5 wrote:
ரா.ரா3275 wrote:
அடடா...அற்புதம் ராம்குமார்...இப்படி ஒரு எண்ண வெளிப்பாட்டை எந்தப் பதிவரும்
எழுத்தில் இப்படி சொன்னதாய் நான் பார்த்ததாக நினைவில்லை...மிக அருமையான ஒரு வெளிப்பாடு...

இதை அப்படியே உங்கள் எழுத்தும் அடைகாக்கிறது...ஆகச் சிறந்த எழுத்தும் படைப்புகளும் உங்களிடமிருந்து தொடர்ந்து வெளிவரட்டும்...வெல்லட்டும்...வாழ்த்துகள்...


நன்றி ரா.ரா.
இன்னும் பல நல்ல படைப்புகளை தர இது ஒரு நல்ல ஊக்கம்.
வெல்லட்டும் தமிழ்.

ஊக்கம் தர நம் தளமும் உறவுகளும் இருக்கிறது...அப்புறம் திறமை எப்போதும் புதைக்கப்பட்டாலும் முளைத்தே தீரும்...
"வீரியமுள்ள விதை பாறையிலும் முளைக்கும்"...தொடர்ந்து படியுங்கள்...படையுங்கள்...வெற்றி வெகு தூரமில்லை...



தொலைக்காட்சி 224747944

தொலைக்காட்சி Rதொலைக்காட்சி Aதொலைக்காட்சி Emptyதொலைக்காட்சி Rதொலைக்காட்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 12:38 am

மிக அருமை ராம் குமார்;
உணர்வு பூர்வமான கதை ..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக