புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்


   
   

Page 5 of 24 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 6:20 pm

என் நண்பன் "நெட்' டில் நோய்களைப் பற்றி எல்லாம் படித்துவிட்டு எல்லா நோய்களும் தனக்கு இருப்பதாகப் பயந்து போயிருக்கிறான். தினமும் டாக்டரை ஒருமுறையாவது இவனுக்குப் பார்த்தாக வேண்டும்! இது மனோ வியாதியா?

ஒரு வகையில் ஆமாம்! இதற்கு "ஹைப்ப காண்ட்ரீயா' என்று பெயர். அப்படிப்பட்ட ஒருவர் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் டாக்டரின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார். "டாக்டர்! அப்படியே நான் இறந்துவிட்டால் ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் ஓர் இடத்தில் என்னைப் புதைத்துவிடுங்கள்... அருகில் டாக்டர்கள் இல்லாவிட்டால் என்னால் முடியாது!'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 6:38 pm

மகாபாரதப் போரில் எல்லாருமே அம்பரா தூணியில் மூன்று நான்கு அம்புகளே வைத்துள்ளார்கள். 18 நாட்களுக்கு இத்தனை அம்புகள் போதுமா?


எப்படி போதும்! ஓவியங்களில் "சிம்பாலிக்' ஆகக் காட்டுகிறார்கள்! உண்மையில் ரதத்தின் பின்னால் கூடை கூடையாக அம்புகள் ரெடியாக இருக்கும். பியான்ஸே நோல்ஸ் என்னும் பிரபல பாப் இசைப் பாடகி, மேடையில் டான்ஸ் ஆடும்போது சூயிங்கம் மெல்வார். பிறகு, பாட ஆரம்பிக்கும்போது அதைத் துப்புவார். துப்பிய சூயிங்கத்தைக் கையில் ஏந்திக் கொள்வதற்காகவே ஒருவர் உண்டு! அப்படி இருக்க, அர்ஜுனனுக்குத் தொடர்ந்து அம்புகள் எடுத்துக்கொடுக்க ஒரு வீரர் அவர் பின்னாலே இருக்கமாட்டாரா என்ன? (எதையும் ஒப்பிடுவது என்பதில் ஒரு விவஸ்தை கிடையாதா என்கிறீர்களா?!)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:46 pm

தத்துவ ஞானிகளில் பெரும்பாலானோர் நாத்திகர்களாக இருப்பது ஏன்?

சிந்திப்பவன் நாத்திகனாக இருக்க முடியும். சிந்திக்காதவன் மூட நம்பிக்கையில் மட்டுமே உழன்றுகொண்டு இருப்பான். தத்துவவாதிகள் தீவிரமாகச் சிந்திப்பார்கள். அவர்கள் "கடவுள் யார்?' என்றுகூடக் கேட்க மாட்டார்கள். "கடவுள் என்ன? ,"கடவுள் எதற்கு?' என்றுதான் சிந்திப்பார்கள், சாக்ரடீஸ், ஸெனேகா, மான்ட்டேய்ன், ரஸ்ஸல் எல்லோருமே நாத்திகவாதிகள்தான். அதாவது நீங்கள் சுட்டிக்காட்டுகிற கடவுளை நம்பாத பகுத்தறிவாளர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:47 pm

தன்னம்பிக்கை நூல்கள் வாழ்க்கைக்கு உதவாது. அவை. சோர்வாக இருக்கும்போது ஒரு டீ குடிப்பது போலத்தான் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?


அது படிப்பவரைப் பொருத்து! தன்னம்பிக்கை நூல்கள் "செய்முறைப் புத்தங்கள்'தான்.அது உங்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தராது. அதற்காக ஆர்வத்தை வேண்டுமானால் ஏற்படுத்த முடியும். நீங்கள்தான் சைக்கிள் ஓட்டிப் பழகிக்கொள்ள வேண்டும். சில சிமயம், எவரெஸ்ட் உச்சி 100 அடிகள் தொலைவில் இருக்கும்போது, இனிமேல் முடியாது என்று நீங்கள் தி க்கும் நேரத்தில் "ஸ்டிராங்' ஆக ஒரு டீ அடித்து விட்டு, கிடுகிடுவென்று சிகரத்தைத் தொட்டுவிட முடியும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:47 pm

குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் நோய் தொற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?


குழந்தைக்கு நோய் தொற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


வியாதிகள் பரம்பரையாக வரும் போது அறிவு மட்டும் பாரம்பரியமக வராதா?



வியாதிகள் உடல் சம்பந்தப்பட்ட. உதாரணமாக, பெற்றோரிடம் இருந்து "ஜெனடிக்' ஆக சர்க்கரை நோய் குழந்தைக்கு வரும் வாய்ப்பு அதிகம். மூளை (மற்றும் அதன் "கனெக்ஷன்'கள்) சம்பந்தப்பட்டது அறிவு. அது கொள்ளுத் தாத்தாவிடம் இருந்துக்கூட பேரனுக்கு "ஜம்ப்' ஆகும். அல்லது கொள்ளுத்தாதாத்தா முட்டளாக இருந்தால், கொள்ளுப் பேரனும் அப்படியே இருக்கக்கூடும். ஆகவேதான், மேதைகளுக்கு அறிவு குறைந்த பிள்ளைகள் பிறப்பது உண்டு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:48 pm

பொதுவாக, நாம் பூங்காவில் காண்பது; புல், மரம், செடி, மலர்கள் போன்றவையே. அவ்வாறு இவை அனைத்தும் இருக்க எதற்காக அதை பார்க் என அழைக்கிறோம்?

அது பண்டைய ஜெர்மானிய வார்த்தை. "பார்க்' என்றால் "பாதுகாப்பான தனி இடம்' என்று பொருள் 19-ம் நூற்றாண்டில்தான் வாகனங்களை நிறுத்தும் இடத்துக்கு அந்தப் பெயர் வந்தது. மற்றபடி பூங்கா என்பதும் தனி இடம்தானே?! இப்போது சென்னையில் ஏராளமான பூங்காக்களை மாநகராட்சி உருவாக்கிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவற்றைப் பாதுகாப்பான இடங்களாவும் எப்போதும் வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:49 pm


கறுப்பு விதவைச் சிலந்தியிடமிருந்து அவற்றின் கணவர்கள் தப்பித்தது உண்டா?



அநேகமாகக் கிடையாது. கறுப்பு நிறம் கொண்ட பெண் சிலந்தி உடலுறுப்பு கொள்ளும்போதே ஆணைச் சாப்பிட்டுவிட்டு விதவையாகவும் ஆகிவிடுவதால்தான் அதற்கு விதவைச் சிலந்தி என்று பெயர்!


ஆங்கில அரசு ஆண்களுக்கு "சர்' பட்டம் வழங்கியதே. இதுபோல பெண்களுக்கு ஏதாவது...?



ஆகா! "மர்ம நாவலின் மகாராணி' என்று அழைக்கப்பட்ட அகதாகிறிஸ்டி கூட அந்தப் பட்டத்தை (பிரிட்டிஷ் மகாராணியிடம் இருந்து!) 1971-ல் வாங்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:50 pm

அவ்வளவு உறுதியான ஓட்டுக்கள் இருக்கும் ஆமைகள் எவ்வாறு செக்ஸ் வைத்துக்கொள்ளும்? ரொம்பவும் மெதுவாக, நிதானமாக அவைகளின் செக்ஸ் வாழ்க்கை இருக்குமோ?

அதான் நீங்களே கரெக்டா சொல்லிட்டீங்களே! ஆமைகள் சாதாரணமாகவே 100 வயதுக்கு மேல் வாழும் என்பதால் நீண்ட கால செக்ஸ் வாழ்க்கை! ஆமைகளுக்கு ரெண்டு மூக்குகள் உண்டு. ஒன்று முகத்தில். மற்றது, மலத்துவாரத்தில். இரண்டு பக்கங்களும் ஆமை மூச்சுவிடும்!


விவாகரத்து விஷயத்தில் (பாதிக்கப்பட்ட, ஆணோ, பெண்ணோ) வக்கீல் இல்லாமல் வழக்கை நடத்த முடியுமா?



ரொம்ப அவசியம் ஏற்பட்டால் ஒழிய விவாகரத்து வழக்கில் வக்கீல் ஆஜர் ஆகாமல் கணவன் - மனைவி மட்டுமே வந்தால் போதும் என்று அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், தீர்ப்பில் கூறியிருக்கிறார். ஒரு காரணம் - இடப்பற்றாக்குறை, ஜன நெரிசல்!


விவாகரத்து வழக்குகள் ரொம்ப அதிகமாகிவிட்டதால் புதிதாக கோர்ட்டுகள் கட்டப்பட இருக்கின்றன. புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று "கட்டி வைப்பதால்' ஏராளமான தம்பதிகளுக்கு ஓரிரு வருஷத்திலேயே மணவாழ்க்கை கசந்து விடுகிறது. "காதல்' திருமணங்களிலும் இப்படி ஆவதுதான் ஆச்சர்யம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:50 pm


ஒரு மாறுதலுக்காக சியர் லீடர்ஸ் நம்மூர் பரதம், குச்சுபிடி, கதகளி, மணிப்புரி ஆடினால் எப்படி இருக்கும்?



"கிரிக்கெட்'டே இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வெள்ளைக்கார விளையாட்டு. இதை எல்லாம் எப்படி அனுமதிப்பார்கள்? தவிர, பவுண்டரி அருகே பரதம், குச்சிப்புடி, எல்லாம் ஆடினால் (வெறுமனே கலர் கலராக கதகளி உடையோடு அவர்கள் நின்றாலே) கவனம் சிதறுகிறது என்று ஆட்ட வீரர்கள் ஆட்சேபிப்பார்கள். சியர் லீடர்ஸுக்கு டிரஸ் அவசியம் இல்லை!



நடிகைகளின் அழகு எதில் இருக்கிறது?

கேமரா லென்ஸில் அல்லது கேமரா கலைஞனின் திறமையில்! ரசிகர்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாக இருக்கும். நீங்கள் அழகைப் பார்ப்பது எதில்?!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 19, 2009 1:30 pm

அருமையான தகவல்கள் ,மிக்க நன்றி :suspect:

Sponsored content

PostSponsored content



Page 5 of 24 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக