புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
6 Posts - 18%
i6appar
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
3 Posts - 9%
Jenila
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
88 Posts - 35%
i6appar
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
2 Posts - 1%
prajai
மண் குதிரை Poll_c10மண் குதிரை Poll_m10மண் குதிரை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண் குதிரை


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 5:05 pm

பெரியன்ன கருப்பசாமி கோவில் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள மந்தையில் இருக்கும் மண்குதிரை தான். கோவிலுக்கும் எனக்குமான உறவு சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கோவிலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் பல மாறுதலுக்கு உட்பட்டாலும் மண்குதிரை மட்டும் தான் நான் சிறு வயதில் பார்த்ததை போலவே இப்போதும் கம்பீரமாய் தோற்றமளித்து கொண்டிருக்கிறது. ஊரில் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான ஒரு இடம் என்றால் கருப்பசாமி கோவில் மந்தை தான் என்று கூற வேண்டும்.

மண் குதிரை 2647643415_9459b9418b

எறி பந்து, கபடி, கிட்டி(கில்லி), கோ கோ, குண்டு உருட்டல், பம்பரம் சுத்துறது என்று பல விதமான விளையாட்டுகளும் அரங்கேறும். ஜாதி பாகுபாடின்றி ஊரின் அத்தனை சிறுவர்களும் ஒன்றாய் கூடி விளையாடும் இடம் என்றால் அது மந்தை மைதானம் தான். வயதிற்கு ஏற்றார் போல இரண்டு, மூன்று குழுக்களாய் விளையாடுவோம்.

சுமார் 17,18 வருடங்களுக்கு முன் ஒரு நாள், அன்று விடுமுறை என்பதால் காலையிலேயே மந்தையை அடைந்து இருந்தேன். அன்றும் மந்தை மிகவும் கலகலப்பாகவே இருந்தது. காலையிலேயே கபடி போட்டி தொடங்கி இருந்தது. பொதுவாக கபடி போட்டியில் சிறுவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நானும், லோகநாதனும் கபடி போட்டியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எனது வேடிக்கை அப்படியே மண் குதிரையின் பக்கம் திரும்பியது.

ஊரில் கோவிலின் மீதும் மண் குதிரையின் மீதும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அமாவாசை தினத்தில் கருப்பசாமி இந்த குதிரையில் ஊரையே வலம் வருவார் என்பதும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என்பது தான் அந்த நம்பிக்கை. பல வருடங்களாகவே இன்றளவிலும் இந்த நம்பிக்கை ஊரில் இருந்து வருகிறது.

அப்போது லோகநாதனின் அண்ணன் யோகநாதனும் மந்தைக்குள் நுழைந்தான். எங்களை விட இரு வயதே மூத்தவன் என்பதால் அவனுக்கும் கபடி போட்டியில் இடம் மறுக்கப்பட்டது. இப்போது மூன்று பேர் சும்மா இருக்கிறோம் என்பதால் ஒரு யோசனை தோன்றியது. மூவரும் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி லோகநாதன் சென்று மந்தையில் இருக்கும் கலையரங்க தூணினை நோக்கி ஒன்று, இரண்டு என என்ன ஆரம்பித்தான். யோகநாதன் கோவிலுக்குள் ஓடி ஒளிந்து விட்டான். சிறிது யோசித்தவனாய் நான் மண் குதிரையின் புற பக்கம் சென்று ஒளிந்து கொண்டேன்.

லோகநாதன் தன் தேடல் படலத்தை ஆரம்பித்தான். கோவிலின் ஒவ்வொரு பகுதியாக தேடினான். முதலில் யோகநாதனை கண்டுவிட்டான். எப்படியாவது அவனிடம் மாட்டக் கூடாது என்ற எண்ணத்தில் மண் குதிரையின் பின் பக்கம் சென்றேன். அப்போது தெரியாமல் நான் குதிரையின் வாலில் இடித்து விட்டேன். வலியுடன் திரும்பி பார்த்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. நான் இடித்ததில் குதிரை வாலின் முனை இரண்டு அங்குலம் அளவிற்கு உடைந்து விட்டது.

பயத்தில் நான் வாலின் உடைந்த சிறு பகுதியை எடுத்து தூரமாய் தூக்கி எறிந்து விட்டேன். பயத்தில் என்ன செய்வதென்று அறியாத நான் மந்தையில் இருந்து ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

வீட்டுக்குள் நுழையவும் ஆத்தா என்னிடம் வந்து “என்னடா ராசா அதுக்குள்ள வந்துட்ட. மந்தையில பயலுக யாரும் இல்லையா” என கேட்டது. “இல்லை ஆத்தா எல்லாம் பெரிய பசங்களா இருக்காங்க. என்னை ஆட்டத்துக்கு சேத்துகிற மாட்டேன்கிறாங்க. அது சரி அடுத்து என்னிக்கி அமாவாசை வரும்” என்று கேட்டேன்.

“இன்னிக்கு தான் ராசா அமாவாசை. அடுத்து ஒரு மாசம் கழிச்சு வரும். இன்னிக்கு பொழுது இறங்கின அப்புறம் வெளிய எங்கேயும் போகாத ராசா. கருப்பன் குதிரையில தீர்ப்பு கொடுக்க வருவாரு” என ஆத்தா கூறியது. எனக்கு உடல் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. நேராக சென்று பாயை எடுத்து விரித்து படுத்து கொண்டேன். ஆத்தா நேராக வந்து என் கழுத்தையும், நெஞ்சையும் தொட்டு பார்த்துவிட்டு “அடி ஆத்தி புள்ளைக்கு இப்பிடி காய்ச்சல் அடிக்குதே” என்று புலம்பியது. அந்த நேரம் அங்கு வந்த என் அப்பத்தா “புள்ளை எதையாச்சும் பாத்து பயந்திருக்கும் போல. இளங்கி பூசாரிகிட்ட கூட்டிட்டு போய் திருநீறு வாங்கி கொடு என்று சொல்லிவிட்டு சென்றது. பூசாரியிடம் சென்று திருநீறு வாங்கி வந்த பிறகும் காய்ச்சல் குறைவதாய் இல்லை. இரவு கருப்பசாமி வந்து என்னை தண்டிப்பார் என்று பயம் என் மனதை ஆழ்த்தியது.

அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. ஆறு முறை எழுந்து அடுப்படிக்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தேன். தண்ணீர் 6 முறை என்றால் அதை பயத்தில் பதினைந்து முறையாவது வெளியேற்றம் செய்திருந்தேன். அதையும் மீறி நள்ளிரவு இரண்டு மணி அளவில் சற்று கண் அசர்ந்தேன். கருப்பன் அருவாளுடன் வந்து என்னை வெட்டும் கனவுகள் நிரம்பியதாய் இருந்தது அந்த தூக்கம். மறுநாள் காலை விடிந்த பின் தான் எனக்கு காய்ச்சல் சற்று குறைந்திருந்தது.

வாழ்க்கையின் தேடலுக்காக இன்று வெளி மாநிலத்தில் வந்து குடியேறி விட்டாலும், ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று மண் குதிரையும் அதன் உடைந்த வாலையும் சிறிது நேரம் நின்று ஆழ்ந்து நோக்கிய பின்னே வீட்டிற்கு திரும்புவேன். இன்றளவிலும் கூட அமாவாசை நாட்கள் என்றால் மனதில் சிறிதளவும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். இருக்காதா பின்னே!!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 8:35 pm

கிராமத்து நம்பிக்கையின் பின்னணியில் நெய்த கதை நன்று ராம்குமார்.

குஜராத்தில் அய்யனார் இல்லேன்னு தான் அங்க போயிட்டீங்களோ!!! புன்னகை




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 06, 2012 8:42 pm

கதை நன்று. உண்மை கதையில் உம்மை கதையின் நாயகனாக கண்டோம் நன்றிகள்.



மண் குதிரை 425716_444270338969161_1637635055_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 8:59 pm

மண்வாசனை வீசும் கதை, நன்றாக உள்ளது!



மண் குதிரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 9:08 pm

சிறுகதையின் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்க நானும் உங்களுடன் இணைந்துவிட்டேன் விளையாட்டில்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 11:29 pm

யினியவன் wrote:கிராமத்து நம்பிக்கையின் பின்னணியில் நெய்த கதை நன்று ராம்குமார்.

குஜராத்தில் அய்யனார் இல்லேன்னு தான் அங்க போயிட்டீங்களோ!!! புன்னகை

கதைகள் அனைத்தும் என் கற்பனை மட்டுமே. சில நேரங்களில் கதையின் நாயகனாக என்னை இணைத்து கொண்டு எழுதுகிறேன். 🐰



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 11:30 pm

ச. சந்திரசேகரன் wrote:கதை நன்று. உண்மை கதையில் உம்மை கதையின் நாயகனாக கண்டோம் நன்றிகள்.

கதைகள் அனைத்தும் என் கற்பனை மட்டுமே. எதுவும் உண்மை சம்பவம் இல்லை. சில நேரங்களில் கதையின் நாயகனாக என்னை இணைத்து கொண்டு எழுதுகிறேன்.

Original source: http://www.eegarai.net/t89972-topic#ixzz28XjQs5Sj



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 11:31 pm

கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக