புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Postrathnavel Sun Sep 30, 2012 3:53 pm

First topic message reminder :

எனது முகநூல் நண்பர் Ramkumar G Krish அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்!!!” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ஆப்பிரிக்காவில். அவரது அனுமதியின் பேரில் இந்த பதிவை எனது பதிவில் வெளியிடுகிறேன்.



அதற்கு முன் எனது சில வார்த்தைகள்:

எனக்கு தமிழ் தட்டச்சு கற்றுக் கொடுத்தது இலங்கை முகநூல் நண்பர் திரு Kannan Sandralingam,



அவர் திரு Dr Mutthiah Kathiravetpillai Muruganandan, கொழும்பு அவர்களது நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கை திருமதி Kalaimahel Hidaya Risvi அவர்களும் எனது முகநூல் நண்பர்.




. இலங்கை திரு Peer Mohamed Puniameen அவர்களும் எனது முகநூல் நண்பர்.



இந்த மூவரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்கள். இவர்களது கட்டுரைகளை அவர்களது அனுமதியின் பேரில் வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.

இன்னுமொரு முகநூல் நண்பர் Malini Shravan அற்புதமான திறமை படைத்தவர், இலங்கைத் தமிழை அற்புதமாக கையாள்கிறார். இவரது பதிவுகளும் எனது பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.

எனவே இலங்கைத் தமிழ் பற்றிய நமது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய பதிவை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி நண்பர்களே, இனிமேல் Ramkumar G Krish

இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் (Indian tectonic plate ) மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைத் தொடர்களின் நடத்திய ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் (லெமுரியா) பெரியதோர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்படுகிறது. ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின், பூமியின் உள்ளே ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக இந்த பெரிய கண்டம் பிளவு படத தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் (Eurasian plate ) மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது. இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இதையெல்லாம் ஜியாலஜி சம்பந்தப்பட்ட புத்தகம் படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கை, இந்து மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய தீவாகும், இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் (Gulf of Mannar) துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது. இராமர் அணை (Adam's bridge) எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலை நிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.

இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக காணும் காட்டுப் பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளோடு (Western Ghats) நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. இப்படியெல்லாம் படித்த, கேட்டு வந்த இலங்கை பற்றி, மேலும் பள்ளி வயதில், பொன்னியின் செல்வன் படிக்கும்போது, வந்தியத் தேவன், பூங்குழலி, அருண் மொழி வரும்போதெல்லாம் அமரர் கல்கி அவர்கள், தன் எழுத்தோட்டம் வாயிலாக, இலங்கையை வர்ணிப்பார், கண் முன்னே நிறுத்துவார். கல்லூரி நாட்களில் உடன் படித்த இலங்கைத் தமிழ் நண்பர்களான மதி அமுதன், தயாளன், வைகுண்ட நாதன், முரளி மற்றும் இலங்கைத் தமிழ் நண்பர்களோடு பேசும் போது, அவர்கள் பேசும் தமிழ் என்னை ஈர்த்ததுண்டு. கவனித்துப் பார்ப்பேன், நாம் தொலைத்து விட்ட தமிழ் வார்த்தைகள் (கதைத்தல் போன்ற) அவர்கள் உரையில் காணலாம். கேட்டாலே எரிச்சல் மூட்டும் மெட்ராஸ் பாஷை கலக்காத அழகுத் தமிழ், இலங்கைத் தமிழ் என்றும் நான் பலமுறை நினத்ததுண்டு.

இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணமாக இலங்கை தமிழை எழுத முயற்சிக்கிறேன் விக்கிபீடியா உதவியோடு. சற்றே உள் நுழைவோம்,

பாரதி அப்போதே பாடிவைத்தார், அது மிகவும் உண்மையே...
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்............
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்."

உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், மற்றும் சமஸ்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை. இன்றளவிலும் உலகளவில் பேசப்படும் இலக்கிய, வரலாற்று வளம் மிக்க மொழி தமிழ் மொழி என்பதில் வியப்பில்லை.

தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வாழும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி உள்ளது. ஆனால், பேச்சுத் தமிழ், இடத்திற்கு ஏற்றார் போல, குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பழகுவதை கவனித்து இருக்கலாம். இத்தகைய மொழியினை, வட்டார மொழி வழக்குகள் என்பர். இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் என அழைக்கப்படுகின்றன.

தமிழை அதிகளவில் பேசும் மக்கள் தொகை கொண்ட தமிழகம் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்த போதும், யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண தமிழர்கள் பேசும் தமிழ், குறிப்பிடத்தக்க, தனித்துவம் கொண்ட பேச்சுத் தமிழாக உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும்.
தமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை அடைவதை கவனிக்கலாம். யாழ்ப்பாணத்துத் தமிழில் இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக் கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு.

§ யாழ்ப்பாணத்தவர் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே ழ கரமும், ளகரமும் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும், வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது. (தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதே உச்சரிப்புத்தான் உச்சரிக்கப்படுகிறது).
§ யாழ்ப்பாணத்தவர் பேசும்போது ர கர - ற கர, ல கர - ள கர, மற்றும் ன கர - ணகர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
§ ற கர மெய் இரட்டித்து வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு வடதமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து அமைவதில்லை. வடதமிழகத்தில் ற்ற, ற்றி .... என்பன t-ra, t-ri என உச்சரிக்கப்படும்போது, தென்தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல யாழ்ப்பாணத்தில் t-ta, t-ti என உச்சரிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.

சொற்கள்
பொதுவாக, எல்லா நாட்டு மக்களின் பேச்சு மொழி, எழுத்து மொழிக்கு சற்றே வித்தியாசப்படும். அது போலவே, பேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் சாதாரணமாகக் காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் சொற்களை உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம். தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும்.

எடுத்துக்காட்டாக:

§ ன், ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா. என்றும், மரம் என்பதை மர. என்றும் உச்சரிப்பதைக் காணலாம். நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான், மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.

§ இகர, உகரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ் நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே எகர, ஒகரங்களாக உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, இடம், எடம் எனவும், குடம், கொடம் எனவும் ஆவதைப் பார்க்கலாம். இந்த உச்சரிப்புத் திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.

எனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பல சொற்களில் ற கரம், ட கரமாகத் திரிபு அடைவதுண்டு.

ஒன்று என்பது ஒண்டு என்றும், வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்று, பன்றி, தின்று என்பவை முறையே கண்டு, பண்டி, திண்டு என வழங்குவதை உற்று நோக்கலாம்.

வினைசொற்கள் கையாளும் விதம்
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகை, இடைநிலை பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என வகைபடுதுகின்றனர் மொழி வல்லுனர்கள்.
இதில் மரியாதை மிகு வகை என்பது "வாருங்கள் அல்லது வாங்கோ", "சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ" என்று பன்மையாக பேசப்படும் வகையாகும். இடைநிலை பேச்சு வகை என்பது "வாரும்", "சொல்லும்" என பேசப்படும் வகையாகும். சாதாரண பேச்சு வகை "வா", "போ", "இரு" போன்று பேசப்படும் வகையாகும்.
மரியாதை அற்ற பேச்சு வகை "வாடா", "சொல்லடா" என மரியாதையற்ற பயன்பாடாகும். இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோ, இளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோ, குழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும். சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், "வாங்கோ, சொல்லுங்கோ" போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில் பேசும்போதும் பேசப்படுவதுண்டு.

இவற்றில் "இடை நிலை பேச்சு வகை" யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த இடைநிலை பேச்சு வகை, தமிழ்நாட்டு பழைய சரித்திர திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே உருவாகியுள்ளது. இந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும், சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. சில சமயங்களில் வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களையும், தொழில் நிலைகளில் உயர்நிலையில் இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன. சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து; "நீர்", "உமது", "உமக்கு" எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும், "இரும்", "வாரும்", "சொல்லும்", "கேளும்", "கதையும்", "என்ன சொன்னீர்?" என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.

உறவுமுறை யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ் வளம்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம். எழுத்துத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் புருசன், பெண்சாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன. 1707 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன.

பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள், தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும். தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, அப்பு, ஆச்சி என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை ஐயா என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என்றார்கள். இன்று அவர்கள் அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, (சில வீடுகளில் தாத்தா, பாட்டி எனவும்) என அழைக்கப்படுகிறார்கள். இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா என்றும் அழைக்கப்பட்டு, இன்று, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா அல்லது சித்தி என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.
பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, பிள்ளை என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண் பிள்ளையை ஆம்பிளைப் பிள்ளை என்றும், பெண் பிள்ளையைப் பொம்பிளைப் பிள்ளை என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு. ஆம்பிளை என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு. அதுபோலவேபொம்பிளை என்பது பெண் பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில்ஆம்பிளை என்பதும், பொம்பிளை என்பதும், ஆண், பெண் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகளைக் குறிக்கும் போது, இன்னொரு பிள்ளைஎன்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது. உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை மகன் என்றும், பெண் பிள்ளையை மகள் என்றுமே வழங்குவர். யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில், இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும், பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் தம்பி என்றும், பெண்பிள்ளையை தங்கச்சி, அல்லது பிள்ளை என்றும் அழைப்பது வழக்கம்.
பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள்அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி என்பனவாகும். மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, சிவா அண்ணா, வாணியக்கா என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

தந்தையின் உடன் பிறந்தாளை, அத்தை என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும், மாமி என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும், பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை அம்மான் என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை மாமா என்றும் குறிப்பிட்டனர். இன்று அம்மான் என்ற சொல் கைவிடப்பட்டு, மாமா என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.
மனைவி கணவனை 'இஞ்சாருங்கோ', அல்லது 'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர். தற்போது வாழும் மூத்த தலைமுறையினர் தற்போதும் இப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இளம் வயதினரில்கூட, மனைவி கணவனை 'அப்பா' என்று அழைப்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அனேகமாக குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு 'அப்பா' என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருவதனால் இம்முறை தோன்றியிருக்கலாம். தற்போது அனேகமாக கணவன் மனைவியை பெயரிட்டு அழைப்பதே வழக்கத்தில் உள்ளது. மனைவியும் கணவனை பெயரிட்டு அழைப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணமான புதிதில் மனைவி கணவனை அத்தான் என்று அழைக்கும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவ்வழக்கம் தமிழகத்துப் பழைய திரைப்படங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். அக்காவின் கணவரை அத்தான் அல்லது மைத்துனர் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் என்றும் அழைத்தனர். அண்ணி என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பான சொற்கள்
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன. இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.

பேச்சுத் தமிழ் (பொருள்)
ஆம்பிளை (ஆண்)
இளந்தாரி (இளைஞன்)
ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
கதிரை (நாற்காலி)
கமம் (விவசாயம்/வயல்)
கமக்காரன் (விவசாயி)
காசு (பணம்)
காணி (நிலம்)
கொடி (பட்டம்)
சடங்கு (விவாகம்)
திகதி (தேதி)
பலசரக்கு (மளிகை)
பெட்டை (சிறுமி)
பெடியன் (சிறுவன்)
பேந்து/பிறகு (பின்பு)
பொம்பிளை (பெண்)
முடக்கு (பாதைத் திருப்பம்)
வளவு (வீட்டு நிலம்)
வெள்ளாமை (வேளாண்மை)
-
கதை (பேசு)
பறை (பேசு)
பாவி (பயன்படுத்து)
பேசு (ஏசு)
விளங்கு (புரிந்துகொள்)
வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
ஆறுதலா (மெதுவாக)
கெதியா (விரைவாக)

பிறமொழிச் செல்வாக்கு
யாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போர்த்துக்கீசியரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும் இருந்தது. யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப் பொருட்களும், கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும். இவற்றுடன் போர்த்துக்கீசிய மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன. உதாரணமாக, அலமாரி, அன்னாசி, பீங்கான், கடுதாசி, கோப்பை முதலான வார்த்தைகள். தமிழ் நாட்டில் போர்த்துக்கீசியர் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால், யாழ்ப்பாணத்தைப்போல், தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீசிய மொழிச் சொற்கள் அதிகம் ஊடுருவவில்லை.
நெதர்லாந்து நாட்டு மக்களே, 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும், போர்த்துக்கீசியச் சொற்களைப் போல், டச்சு மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை. எனினும், சில டச்சுச் சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன. கக்கூசு (கழிப்பறை), கந்தோர் (அலுவலகம்), காமரா அல்லது காம்பறா (அறை), தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும்.
இது போன்றே, ஆங்கிலேயர் காலத்தில் வந்த பேச்சுத்தமிழ் இன்றும் தொடர்கிறது. உதாரணமா, பஸ், டயர், இன்னும் பிற.
நம் இலங்கை வாழ் நண்பர்கள் இக்கட்டுரையில் குறை இருப்பின் மன்னிக்கவும். மேலும், விடுபட்ட உங்கள் புழக்கத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை மற்றவர்களோடு பகிருங்கள்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "...
(Thanks: Wikipedia)

இனிய நண்பர்களே,
இது சற்று பெரிய பதிவு. படித்து உங்கள் பின்னூட்டங்களையும் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன். திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவை பகிர அனுமதித்த Ramkumar G Krish அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.
நன்றி நண்பர்களே.


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Oct 01, 2012 5:49 pm

ரத்தினவேல் ஐயா அவர்களே,
இலங்கைத்தமிழ் உங்களைக்கவர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. காரணம் எனது நாடு தமிழீழம், எனது ஊர் யாழ்ப்பாணம்.




நேர்மையே பலம்
என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் - Page 2 5no
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 01, 2012 6:20 pm

அகிலன் wrote:ரத்தினவேல் ஐயா அவர்களே,
இலங்கைத்தமிழ் உங்களைக்கவர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. காரணம் எனது நாடு தமிழீழம், எனது ஊர் யாழ்ப்பாணம்.

எனது நாடு இலங்கை என்று சொல்லாமல் இருப்பதே மகிழ்வு தருகிறது அகிலன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக