புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
23 Posts - 48%
heezulia
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
1 Post - 2%
prajai
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
8 Posts - 2%
prajai
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
செங்கோட்டை !! Poll_c10செங்கோட்டை !! Poll_m10செங்கோட்டை !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கோட்டை !!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 25 Sep 2012 - 11:59





செங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் கேரள எல்லையில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை ஆகும்.

கேரளத்திலிருந்து 52 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை "நல்லூர் ராஜா" என்பவர் ஆண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரின் மேற்கு பகுதியிலுள்ள நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை போன்றவற்றை காலம் சிதைத்த அடையாளங்களாக இன்றும் காணலாம். அக்கோட்டைதான் செங்கோட்டை என அழைக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் செங்கோட்டை பல மகான்கள் அவதரித்த பூமியாகும். இங்கு நகரை சுற்றி ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் நிறைந்திருப்பதை காணலாம். இங்கு சிவனடியார்கள் அதிகமாக இருந்ததால் சிவன் கோட்டை என்ற பெயரும் இருந்தது. காலப்போக்கில் சிவன்கோட்டை மருவி செங்கோட்டை என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

பல ஆண்டு காலமாக கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம் அன்று திருவாங்கூர் மன்னர்களின் தனிக்கவனத்தை ஈர்த்தது. இந்நகரை சுற்றி 28 குளங்கள் உள்ளன. முன்பு கேரளாவோடு இருந்தபோது யாராவது திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்க சென்றால் தச்சன்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டு விட்டதா என்றுதான் முதலில் கேட்பாராம் . தச்சன்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது மகாராஜாவுக்கு தெரியுமாம்.

மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள மிக சிறிய நகரம் செங்கோட்டை. 1956ம் ஆண்டு வரை கேரள எல்லைக்குட்பட்டிருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1-11-1956ல் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இவ்வூர் தாலுகா அந்தஸ்து பெற்ற ஊராகும்.

இவ்வூரின் நுழைவு பகுதியில் ஒரு வளைவு அமைக்கபபட்டுள்ளது. அந்த வளைவின் இருபுறங்களிலும் இருகற்சிலைகள் 5 அடி உயரத்தில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் சங்குவடிவம் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

துவாரபாலகர் சிலை:
வடபுறம் துவர பாலகர் சிலை வலது கரத்தின் ஒரு விரலை காட்டியபடி இடதுகரத்தின் மடக்கி மூடிவைத்தபடியும் உள்ளது. இச்சிலை குறித்து செங்கோட்டையில் சிற்பகலை கூடம் நடத்தி வரும் சிற்பி மணி ஆசாரி கூறுகையில், துவாரபாலகர் சிலைகள் பெரிய ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு செல்லும் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும்.

அந்த சிலை போல் செங்கோட்டை நகர நுழைவு பகுதியில் வைக்கப்பட்டதின் நோக்கம் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆன்மீக பூமியாக விளங்கியது. அதன் நுழைவு பகுதியாக செங்கோட்டை இருந்ததால் ஊரின் நுழைவு பகுதியில் துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இரு சிலைகளுக்கு இரண்டு கதைகள் உண்டு.

ஊருக்குள் நுழையும்போது வலப்பக்கம் அமைந்துள்ள சிலை ஒருவிரலை காட்டியபடியும், மற்றொரு கரம் மடித்து வைத்தும் இருக்கிறது. இவ்வூருக்குள் நுழையும் நீங்கள் ஒரே நிலைப்பாட்டோடும், வேறு சிந்தனையின்றி மனதை அலைபாயவிடாமல் எண்ணங்களை அடக்கி அமைதியாக உள்ளே வாருங்கள், உங்களது பிரச்சனையை நான் தீர்க்கிறேன் என்றும், இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ள சிலை இறைவனை நம்பி இவ்வூர் வந்தவர்கள் மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுபோன்று எனக்கு தெரிய எந்த ஊரிலும் ஊரின் நுழைவு பகுதியில் இதுபோன்ற சிலைகள் அமைக்கப்படவில்லை. மாற்றாக வேறு சாமி சிலைகள் தான் காவல் தெய்வங்களாக வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார்.

செங்கோட்டை என்றழைக்கப்படும் அன்றைய சிவன்கோட்டையில் நுழைவிலேயே பழமைவாய்ந்த ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


குற்றாலம் !!




குற்றாலம் !!


தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.
பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.
சிற்றருவி (CHITRARUVI), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தா ன் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.
செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.
அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.
ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.
இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.
பழைய குற்றாலம் அருவி ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.
புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது.
ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.

அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:
தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.
பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை.
சிறு குழந்தை பூங்காக்கள்.

குற்றாலத்தின் சிறப்புகள்:
குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.
தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.
மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.

குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்:
பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில். சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும்.
பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் - குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.
இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர்கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
ஆரியன்கா ஐயப்பன்கோவில், குற்றாலத்திலிருந்து 35 கிமீ.

அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்:
பாலருவி - கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.
அகஸ்தியர் அருவி - பாபநாசம் அருகே உள்ளது.
பாணத்தீர்த்தம் அருவி - பாபநாசம் அருகே உள்ளது.
பாபநாசம் (லோயர்) அணை - பாபநாசம் அருகே உள்ளது.
பாபநாசம் (உயர்), காரையார் அணை - பாபநாசம் அருகே உள்ளது.
சேர்வலார் அணை - பாபநாசம் அருகே உள்ளது.
மணிமுத்தாறு அணை - பாபநாசம் அருகே உள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - பாபநாசம் அருகே உள்ளது.
மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் - பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.

குற்றாலத்துக்கு வருவது எப்படி:
சாலை மூலமாக:
சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
மதுரை: 160 கி.மீ.
திருநெல்வேலி: 59 கி.மீ.
தென்காசி: 5 கி.மீ.
செங்கோட்டை: 5 கி.மீ.
மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 190 கி.மீ.

தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகளாலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம். மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும் குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக:
குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லை, ஆனால் செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்தை அடையலாம்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர் வண்டிகள்..
பொதிகை எக்ஸ்பிரஸ்: செங்கோட்டை - சென்னை, சென்னை - செங்கோட்டை.
பயணிகள் வண்டி: செங்கோட்டை - மதுரை, மதுரை - செங்கோட்டை.
பயணிகள் வண்டி: செங்கோட்டை - திருநெல்வேலி, திருநெல்வேலி - செங்கோட்டை.
பயணிகள் வண்டி: செங்கோட்டை - கொல்லம், கொல்லம் - செங்கோட்டை.
சில நேரங்களில் சென்னை, ஈரோடு மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு வண்டிகள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன.

வான்வெளியிலிருந்து பாயும் நியூட்ரினோக்கள்.. 'பிடிக்க' மதுரைக்கு அருகே ஆராய்ச்சி மையம்!


மதுரை அருகே தேனியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.
ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நியூட்ரினோக்கள் நுழைந்து வெளியேறுகின்றன.
இந்தத் துகளை ஆய்வு செய்தால் சூரியன், விண்மீன்கள் உள்பட விண்வெளியின் பல ரகசியங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக ஒரு விண்மீன் இறக்கும்போது, முதலில் அது உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். அப்போது அதன் மையப் பகுதி பல லட்சம் மடங்கு விரிவடையும். அந்த நேரத்தில் நட்சத்திரத்தின் மையப் பகுதியில் அளவிட முடியாத அளவுக்கு மாபெரும் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தத்தில் இருந்து எந்த ஒரு பொருளும், ஒரு அணு கூட வெளியே 'எஸ்கேப்' ஆக முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மரணிக்கும் நட்சத்திரத்திலிருந்து கூட தப்பி வரும் ஒரே துணை அணுத் துகள் நியூட்ரினோ மட்டும்.
எனவே, நியூட்ரினோவைப் பற்றி கொஞ்சம் நன்றாக ஆராய்ந்தால் பல்வேறு ரகசியங்களுக்கு, நட்சத்திரம் ஏன் இறக்கிறது என்பதில் ஆரம்பித்து, விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆனால், இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' அவ்வளவு எளிதல்ல, மிக மிகக் கடினம். எந்தப் பொருளோடும் 'ரியாக்ட்' செய்யாத தன்மை கொண்ட நியூட்ரினோக்களை பரிசுத்தமான நீரில் தான் 'பிடிக்க' முடியும் என்பதால் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும். ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.
இந் நிலையில் இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. முதலில் நீலகிரி மலைப் பகுதியில் இதற்கான ஆய்வகத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அங்கு மழைப் பொழிவு அதிகம் என்பதால் மதுரைக்கு அருகே தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் அம்பரப்பர் கோவில் கரடு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மிகப் பழமையான கற்பாறைகள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் இந்த ஆய்வுக் கூடம் அமைக்க மிக ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்றதாக உள்ளது. எனவே இப்பகுதியை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.
பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையமும், மும்பை Tata Institute of Fundamental Research (TIFR), Saha Institute of Nuclear Physics (SINP), கொல்கத்தா Variable Energy Cyclotron Centre (VECC), சென்னை ஐஐடி இயற்பியல் பிரிவு உள்பட ஏகப்பட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளன.
சுமார் ரூ. 1,250 கோடி செலவில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இப்போதைக்கு இதற்கு India-based Neutrino Observatory என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்க National Centre for High Energy Physics என்ற ஒரு இயற்பியல் ஆராய்ச்சிப் பிரிவும் மதுரையில் அமைக்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 4,300 அடிக்கு ஆழத்தில் மாபெரும் சுரங்கம் அமைத்து அதில் 50,000 டன் எடை கொண்ட மாபெரும் காந்தங்களை பொறுத்தவுள்ளனர். இவை ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க ஜெனீவாவில் உள்ள CERN சுரங்க ஆராய்ச்சி மையத்தில் பொறுத்தப்பட்ட காந்தங்களை விட 4 மடங்கு அதிக சக்தியும், எடையும் கொண்டவை.
மேலும் தேனியில் அமையும் இந்த சுரங்கத்துக்குள் பொறுத்த 50,000 டன் இரும்பு பிளேட்களும் (soft iron plates) தேவைப்படும். இவற்றை மத்திய அரசின் Steel Authority of India எஃகு நிறுவனத்தின் பிலாய் தொழிற்சாலை தயாரித்து வழங்கவுள்ளது.
இந்த 50,000 டன் காந்தங்களைக் கொண்டு magnetized iron calorimeter (MIC) என்ற கருவியை உருவாக்கி நியூட்ரினோக்களைப் பிடித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காந்தங்கள் தான் உலகிலேயே மிகப் பெரிய காந்தங்களாக இருக்கும் என்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஜெனீவாவில் நடந்த 'ஹிக்ஸ் போஸான்' மாதிரியான ஒரு மாபெரும் ஆராய்ச்சி நம்ம 'மதுரைக்கு பக்கத்துல'
நடக்கவிருக்கிறது!




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 25 Sep 2012 - 12:40

மிகச் சிறந்த வரலாற்றுச் செய்திகளை பகிர்ந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... தொடருங்கள் பூவென் மகிழ்ச்சி

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Tue 25 Sep 2012 - 12:52

அருமையாக இருந்தது உங்களது கட்டூரை வாழ்த்துகள் அருமையிருக்கு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 25 Sep 2012 - 15:28

மிகச்சூப்பரான தகவல். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக